கண்களுக்கு
மிக அருகில்
நீ.....!!
விழுந்த மாத்திரத்தில்
பொங்கி எழுந்து
வந்ததையும்
சேர்வதையும்
பரவசத்துடன்
பகிர்ந்து கொள்கிறாயே...?.!!
* * * *



நீல வண்ணத்தில்
வெள்ளை தூரிகை
கொண்டு
நீ
வேக வேகமாய்
வரைந்த ஓவியம்
கண் சிமிட்டி
காணும் முன்
காணாமல் போனதே.. !
* * * *

தண்ணீரில்...
கணக்கிலடங்கா
குட்டி குட்டி
சட்டி வானங்கள்
புறப்பட்டு
பூத்துக்குளுங்கி
ஒலியும் ஓளியும் எழுப்பி
மின்னி...மின்னி
மறைகிறதே....!.
* * * *

நீ
விழுந்து எழுந்து
மீண்டும்
மூழ்கும் முன்
உன்
உச்சந்தலையில்
ஒர்
வைரக்கல்லின்
மின்னல் !!
* * * *


கண்கள் எட்டியவரை...
சின்ன சின்ன கோபுரங்கள்
அதிவேகமாய் முளைக்கின்றன..
அதேவேகத்தில்
குமிழ்களாய் குவிந்து
வட்டமிட்டு மூழ்குகின்றன... !!
* * * *

உன்
ஒவ்வொரு துளியும்
உற்சாகத்தின் உச்சமாய்
இருக்கிறதே..
உன்னைப்போய்
வானம் அழுகிறது
என்று வருணிக்கிறார்களே.?!!
அது ஏனோ?!!

* * * *
எத்துடன்
சேருகிறாயோ...
அதுவாகவே
மாறிவிடுகிறாயே..?!
உன்னையும்
பச்சோந்தி
என
அழைக்கலாமோ?
* * * *

மழைத்துளியாய்
இறங்கினாய்
குளோரினோடு
குளோரினாய்....
கலந்துவிட்டாயே...?!!!
எங்கே தேடுவேன்
உனை.. ??!!
* * * *

இருவிரல்குவித்துஉனை கிள்ளிஎடுத்து..தொடுத்துமாலையாக்கிஎன் மனமாள்பவனுக்குசூட்டுவிட நினைக்கிறேன்...!விரல் குவிக்கும் முன்காணாமல் போய்கண்ணாமூச்சிஆடுகிறாயே நீ..!!!
.