தெம்புடன்......! (தூங்குவோம்) - என்ற புதிய பகுதி ஆரம்பிச்சி, தெம்புடன் தூங்கிகொண்டே நிறைய பேசலாம்னு இருக்கேன்.!!. அம்மணியோட "கேப்பங்கஞ்சி" எனக்கு போர் அடிக்குதுங்க! அம்மணிய இந்த புது கான்செப்ட் வச்சி அடக்கி வச்ச மாதிரியும் இருக்கும் இல்ல? !! அதனால, நானு தனியா ஆரம்பிச்சிட்டேனுங்க .. எல்லாருடைய ஆதரவும் எனக்கு இருக்கும்னு நினைக்கிறேன்... சரி எப்படி நான் பேச போறேன்னு கேட்டீங்கன்னா?..

ம்ம்..!! கொர்ர்ர்ர்ர்

ஹாங்... !! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வெல்.. !! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

எக்ஸ்லென்ட்!! கொர்ர்ர்ர்ர்ர்ர்

ஆங் அப்,..(புறம் ) கொர்ர்ர்ர்ர்ர்ர்.

நடுவுல பேசிக்கிட்டு இருக்கும் போதே நான் கொஞ்சம் வாய தொறந்துகிட்டு தூங்குவேன் .. யாரும் கண்டுக்காம ..பேசவந்தவங்க பேசினத மட்டும் நீங்க வாயதொறந்துக்கிட்டு படிக்கனும் .. சரி இதுல என்க்கிட்ட முதல்ல மாட்டியவரு, நம்ம "புராண்டற புலி" தாங்க.

சரி நம்ம தெம்புடன்......!(தூங்குவோம்) முதல் இன்டர்வியூவை ஆரம்பிப்போம்..

(*** இதுல பிராக்கிட்ல வரது எல்லாம் நீங்க fill பண்ணி படிச்சிக்கனும் நானு..பாதி பாதித்தான் பேசுவேன் நீங்க முழுசா நான் என்ன சொல்ல வந்தேன்னு தெரிஞ்சிக்கனும் சரியா ?! )

அணில்:- வாங்க பலி .. சாரி புலி.. அண்ணே !! How a(re) (u)?

என்னை பலி கொடுக்கனும் என்று முடிவு பண்ணிட்டு வந்த மாதிரி இருக்கே, அணிலு... நீ நம்ம பக்கம் தானே , இப்படி எல்லாம் பேச மாட்டியே. எங்கயோ சூது நடந்து இருக்க. உசாரா இருக்க வேண்டியது தான். ஆங்.. என்ன கேட்ட., சு(ம் )மா ரா இருக்கேன் சொன்னா வெட்டி சண்டைக்கு வருவான் , சூப்பராவும் இல்ல அதுனால சு(ம்)மாராவும் இல்லாம சூப்பராவும் இல்லாம "ஏதோ " கவிதா மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்தில் நல்லா இருக்கேன் .

அணில்:- ம்ம்..good..........சொல்லுங்க .................................(கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

இவ்வளவு நேரம் சொன்னதை நீ அப்ப கேட்கலையா? ஆப்பை ஆப் பாயில் ஆக்கி சாப்பிட்டும் நமக்கே இந்த அணில் தண்ணீ காட்டுதே, ஒய் , நல்லா இருக்கேன், நல்லா இருக்கேன், நல்லாவே இருக்கேன்... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அணில்:- உங்க ஸ்கூல் 'ல உங்க பேபி லவ்' பத்தி........................( கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

லவ்வா.....?? அந்த கொடுப்பினை எல்லாம் நமக்கு ஏது அணிலு .... அதும் இல்லாம நாம் எல்லாம் ஒன்றில் அவ்வளவு சீக்கிரம் கமிட் ஆவுற ஆளு கிடையாது. வாழ்க்கை பயணத்தில் போய் கிட்டே இருக்கும் போது பிக்கப் ஆகுறதை பிக்கப் பண்ணி போய்க்கிட்டே இருக்குற ஆளு.... பிக்கப் ஆனது ட்ராப் ஆனாலும் வருத்துப்படுற ஆளும் கிடையாது. ஒன்றை இழப்பது மற்றொன்றை பெறுவதற்காக தான் என்ற வாழ்க்கையின் தத்துவத்தை உண்ர்ந்தவன் நான். சோ, நோ பேபி லவ், பப்பி லவ்....

ஒகே..... (கொஞ்சம் காத கொண்டா, ஏய் அணில் உனக்கு கொஞ்சமாச்சும் ஏதும் இருக்கா, இப்படி சபையில் வச்சு கேட்டா எப்படி... அப்பால தனியா வா வகுப்புக்கு ஒன்னு இருக்கு சொல்லுறேன். அதுல பேபினு யாரும் இல்ல, புரியுதா.... அ....., சா....., நி.... இப்படினு பலது இருக்கு..... இது எல்லம் ஸ்கூல் மட்டும் ஒகே )

அணில்:- எக்ஸ்லென்ட்....... !! ம்ம்.........உங்க அம்மாக்கிட்ட நீங்க ரொம்ப............ பேசி ........... அடம்பிடிச்ச ஒரு ...day..... ஞாபகம் இருக்கா உங்க...(ளுக்கு).............. (கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

சரி போன பதிலுக்கு நீ எதுக்கு எக்ஸ்லென்ட்....... !! சொன்ன?? சரி வுடு..என்னவோ ஒரு மாதிரியாத்தான் பேசற இன்னைக்கு.. ஒன்னியும் புரியல..

என் அம்மாக்கிட்ட பெரிசா நான் ஏதும் அடம் பிடித்து சாதித்தாக ஞாபகம் இல்லை. நான் கேட்பதை பெரும்பாலும் மறுத்தது இல்லை. அவர்கள் மறுத்த எதையும் நான் அடம் பிடித்து சாதித்தது இல்லை. நாம் மறுக்குற மாதிரி எந்த விசயத்தையும் கேட்க மாட்டோம்ல.... எல்லாமே சின்ன சின்ன விசயமாக தான் இருக்கும், அப்பாக்கிட்ட ரெகமண்டு பண்ணற வேலை தான் பல தடவை நடக்கும்.
ரொம்ப பேசியது நிறைய இருக்கு. வெகுளியாக இன்னும் எவ்வளவு நாள் தான் இருப்பிங்க, சொந்தங்களை பற்றி, பிறர்காக வாழுவதை சற்றே மறந்து நமக்காக நமக்காகவே மட்டும் வாழ முயலுங்கள் என நிறைய பேசி இருக்கேன்.

அணில்:- வவாச - ல நீங்க என்ன செய் ..(யறீங்க?) (கொர்ர்ர்ர்ர்ர்)

இதுல எந்த உள்குத்தும் இல்லல , இல்ல நீ வேற இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்க, அதுனால
* ஒரு வருத்தப்படாத வாலிபன் வ.வா.ச வில் இருப்பது தான் அவனுக்கும்(எனக்கு) அழகு, அந்த சங்கத்துக்கும் அழகு.

** தெரியலயே அணிலு தெரியலயே..... (இத யாரு மாதிரி படிக்கனும் என்று நான் சொல்லி மற்றவர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை, அவங்களே அவர மாதிரி படிச்சுப்பாங்க)

*** வ.வா.ச.வில் இருந்த ஐவரும், சிவா வா, வா, வ.வா.ச.விற்கு, ஐவருடன் சேர்ந்து ஆற்வர் ஆகலாம் என்றார்கள்.... வயதிலும் அனுபவத்திலும் மூத்த அந்த நல்லோர்கள் வார்த்தைக்கு தலைவணங்கி, நானும் போய் ஜோதியில் ஐக்கியம் ஆயிட்டேன்.

அணில் :- (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முழூசா தூங்கவிடாம.. பாதி..பரங்கிமலை ஜோதி’ ன்னு!! )

(என்னது பரங்கிமலை ஜோதியா, ஏய் அணில் உன் வயதுக்கு கேட்குற கேள்வியா இது, கவிதா வுக்கு தெரிஞ்சா உன்னை மிதிச்சே ஒட விடுவாங்க சொல்லிட்டேன்). திருவண்ணாமலை ஜோதி போல பிரகாசமாக எரியும் நகைச்சுவை ஜோதியில் கலந்து நான் ஜெகஜோதியாக ஜொலித்து கொண்டு இருக்கேன் சங்கத்தில்.

அணில்:- ஹான்.........வெல்...! so....you mean that “Jothi” Excellent !! Excellent !! அப்பு .....றம் நீங்க ரொம்ப சமத்து பிள்ளையாமே அப்படியா.. ? இல்ல.. அம்மாக்கிட்ட பேசும்போது சொன்( னாங்க)..... (கொர்ர்ர்ர்ர்ர்)

அம்மாக்கிட்ட மட்டும் தான் கேட்டீயா, அண்ணன், பன்னிக்குட்டி ராமசாமி, டாக்டர் ஐயா, சின்னய்யா, தோட்டவெட்டி, மூதறிஞர் தமிழன காவலர், தளபதி, அஞ்சாநெஞ்சன், பாசப்புயல், தோழர் சிறுத்தை இவங்ககிட்ட எல்லாம் கேட்கலையா ? கேளு அவங்களும் அதை தான் சொல்வார்கள். நான் அம்புட்டு சமத்து. அது போகட்டும் அது ஏன் அம்மாவை மட்டும் இங்கன குறிப்பிடுற , ஏற்கனவே எனக்கு இருக்கு ற முத்திரைகள் பத்தாதா, இன்னுமா.... தாங்குவேனா சொல்லு, எதையும் தாங்கும் நல்லவன் நீ நினைச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாத..... இதை இத்தோட விட்டுட்டூ.....

அணில்:- சரி..வெய்ட் .. நான் கொஞ்சம் தூங்கிட்டு திருப்பி வரேன் .இப்ப ஒரு குட்டி பிரேஏஏக்.!! (கொர்ர்ர்ர்ர்ர்)

என்னது கொஞ்சம் தூங்கிட்டு திருப்பி வறியா? இப்பவே எனக்கு மண்டபத்துல தனியா வர்காந்து புலம்புற மாதிரி தான் இருக்கு, இன்னமுமா.... வேணாம் அணிலு வேணாம்.... ஏதோ சொல்லிக்கிட்டு திரிஞ்சவனை இப்படி கண்டமெனிக்கு புலம்ப விடாதே, ஏதா இருந்தாலும் சீக்கிரம் கேட்டுட்டு என்னைய ஆள விடு.....

அணில்:- ஹான்..புலி ..அண்ணே.. ஏன் உங்க பேரு புலி'ன்னு இருக்கு.. ரசம்' ன உங்களுக்கு ரொம்ப புடிக்குமா.....?? (ஜோக்.. ப்பா சிரிங்க..ஹ ஹா ஹா..!!!!)

என்ன ஒரு தைரியம்..... புளியையும் புலியையும் ஒன்றுப்படுத்தி பார்ப்பதற்கு ..... சோழப் பரம்பரைக்கே ஏற்பட்ட அவமானம். நம் வலையுலகில் இருக்கும் சோழ குடி வழி வந்தவர்கள் கேட்டால் உன் கதி அதோ கதி தான்.

ஏய், மதி கெட்ட அணிலே, சொல்கிறேன் கேள்
சோழனின்
கொடி புலி,

இமயத்தில்
பறந்த கொடி புலி

வங்காளத்தின்
பெருமை புலி
இந்தியாவின்
கர்வம் புலி

வீரத்திற்கு
புலி

தீரத்திற்கு
புலி

பதுக்குவது
புலி

பாய்வது
புலி

மொத்ததில்
இது யாருக்கும் அஞ்சாத பாயும் புலி.

உஸ்ஸ்ஸ்
, அப்ப்பா....ஒரு சோடா சொல்லு......!!!

அணில்:- கொர்ர்ர்ர்ர்ர்..........

ஏலேய் , இம்புட்டு சத்ததுக்கும் நடுவில் தூக்குற.... நிறைய அரசியல் மீட்டிங் / கச்சேரி கலந்து இருப்பீயோ..... ஹெய்ய்ய்ய்ய்ய்

அணில்:- ஹோ..அயம் சாரி ..புலி அண்ணே are you still here? Well, I mean..நீங்க இங்க தான் இருக்கீ...(ங்களா?) கொர்ர்ர்ர்ர்ர்..........

தப்பு! இன்னமுமா இங்க இருக்கீங்கனு கேளு அணிலு.... உன்னையும் ஒரு விலங்கினமா மதிச்சு இம்புட்டு தூரம் வந்தா என்னை அசிங்கப்படுத்துனும் என்று முடிவு பண்ணி அதை செஞ்சும்புட்ட... திருப்தி தானே!

உன்னை விலைப்பேசி என் டோட்டல் இமெஜை டேமேஜ் பண்ணியவன்/ள் மட்டும் என்க்கிட்ட மாட்டினா பிராண்டி வச்சுடுவேன் சொல்லிட்டேன். உன்னைய பிராண்டின என் சோழ பரம்பரைக்கு இழுக்கு ஏற்ப்பட்டு விடும், வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஏற்பட்டு விட கூடாது என்ற காரணத்துக்காக உன்னை விடுறேன். ஒடிப் போயிடு.... வேணாம் நானே கிளம்புறேன்.

அணில்:- ஹ்யோ..!! அண்ணே.. இருங்க அண்ணே........... இன்னும் நிறைய கேக்......(கனும்..!!..) கொர்ர்ர்ர்ர்ர்..........