நாய் நக்கும் பணக்காரர்கள்

காலையில் வேக வேகமாக எல்லா வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு, நடுவில் கணவர் (அ) மகனிடம் பிரச்சனை என்றால், அதற்காக அவர்கள் சத்தம் போட கூட நானும் சத்தம் போட்டு BP எல்லோருக்கும் எகிறிபோக வீட்டை விட்டு மூவரும் சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஸ்கூல், ஆபிஸ்’ க்கு வரும் வழியில்-

மூச்சை கொஞ்சம் நிதானமாக விடுவது, வண்டி சிக்னல்களில் நிற்கும் போது மட்டுமே. டென்ஷனை குறைக்க மூச்சை பெரிதாக இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்ய முயலுவேன். நம் சென்னை மாநகரில் வாகன புகைக்கு கேட்கவே வேண்டும், நாம் இழுக்காமலேயே உள்ளே போய்விடும். ஆனாலும் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வது சிக்னல்களில் மட்டுமே. அப்படியே நிற்கும் வினாடிகளில் அக்கம் பக்கம் நடப்பவையை ஒரு பார்வையிட்டால் குறைந்த டென்ஷன் மின்னல் வேகத்தில் தலைக்கு ஏறும்.

சக மனிதனை மனிதனாக மதிக்காமல், நாயை போல் நடத்தும் சிலர், காருக்குள் சொகுசாக உட்கார்ந்து கொண்டு, அவர்களின் வீட்டு நாயையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, சிக்னலில் நாம் சுற்றி பார்க்கும் நேரம் பார்த்து, அந்த நாய் அதன் எஜமானை நக்கி விளையாடும். நான் பார்க்கிறேன் என்பதற்காக வேண்டும் என்றே அப்படி செய்கிறதோ என்று கூட தோன்றியது. அப்படியே கண்ணை திருப்பி முன் சீட்டில் உள்ள டிரைவரை பார்த்தேன். குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி உட்கார்ந்து இருந்தார். சிலை கூட அசையும் ஆனால் இவர்.. எஜமான விசுவாசம், பயம் துளிக்கூட அசைவே இல்லை.

முன் சீட்டில் ஒரு மனிதன், இவரையும் , இவர் நாயையும் தினமும் உயிருடன் வீட்டிற்கு கொண்டுபோய் சேர்க்கிறார், அவரை இப்படி கொஞ்ச வேண்டாம் ஆனால் ஒரு மனிதாக மதிக்கலாம் அல்லவா?

சரி வீட்டிலாவது இந்த உயிர் காக்கும் டிரைவர்கள் சகஜமாக பேசவோ, அவர்களின் வீட்டுக்குள் செல்ல முடிகிறதா?.. நாய் இருக்க வேண்டிய இடத்தில், இவர்கள் நின்று அவரின் சாப்பாட்டையும் தேவைகளையும் நிறைவேற்றி க்கொள்ளவேண்டியுள்ளது. அதாவது பணக்காரர்கள் வீட்டில் அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் நடமாட ஒரு வரைமுறை வைத்து இருப்பார்கள். தோட்டத்து பக்கம் சென்றால் சமையல் காரர், இவர்களுக்கு சாப்பாடு கொடுப்பார். வெளியில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். கையை கட்டி, குனிந்து நின்று பேசுவார்கள். காருக்குள் படுத்து தூங்குவார்கள்.

ஆனால் பணக்காரர் வீட்டு நாய் என்னவோ அவர்களை நக்கும், ஒவ்வாத சாப்பாடு சாப்பிட்டு சில நேரம் வீட்டுக்குள்ளேயே கக்கும், இருந்தாலும் அதை கட்டி அனைத்து முத்தமிட்டு ரசிப்பார்கள். அதுவும் இவர்களை நக்கி தன் சந்தோஷத்தை வெளிக்காட்டும்.

பணக்கார நண்பர்களே எல்லாரும் ஓடி வந்து சண்டைக்கு நிற்காதீர்கள், நாய் எந்த பணக்காரை நக்குகிறதோ, எந்த பணக்காரர் அவர் வீட்டு வேலையாளை நாயை போல் நடத்துகிறாரோ..அவருக்கு மட்டுமே இந்த பதிவு பொருந்தும்.

அணில் குட்டி அனிதா:- அட கவி?.. என்னாது இது..அங்க தொட்டு இங்க தொட்டு அனிமல்ஸ் கிட்ட வந்துட்டீங்க.. மேனகா காந்திக்கு போன் பண்ணனுமா?.. அவங்க வீட்டு நாய் அவங்க ஏதோ செய்துட்டு போறாங்க.. உங்களுக்கு வேணுமான்னா நீங்களும் ஒரு நாய் வளர்த்துகோங்க.. அதை நக்க விடுங்க..அதை வுட்டுட்டு சும்மா அது அதுக்கும் டென்ஷன் ஆயிக்கிட்டு, ஹய்யோ..ஹய்யோ........... நீங்க திருந்த மாட்டீங்க.. .

அது சரி கடைசியில என்ன..ஏதோ டிஸ்கி வேற, இதே மாதிரி தானே இன்னொரு பதிவுக்கு கூட போட்டீங்க யாராவது மதிச்சாங்களா?.. உங்களை தான் யாருமே மதிக்கறது இல்லையே அப்புறம் எதுக்கு இந்த பில்டப்..சீன் எல்லாம்.. ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆஆஆஆ, உங்க இம்சை தாங்கலடா சாமி..........!!! எப்பத்தான் அடங்குவீங்களோ.. ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...!!


பீட்டர் தாத்ஸ் :- Keep your face to the sunshine and you cannot see the shadows.

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் - விடாதுகருப்பு

விடாது கருப்பு பற்றி புதிதாக அறிமுகம் செய்ய தேவையே இல்லை. கேப்பங்கஞ்சி குடிக்க அவரை அழைத்த போது, அதுக்கு என்ன கவிதா..வந்துட்டா போச்சு என்று உடனே வந்து விட்டார். சிங்கப்பூரில் வசிக்கும் இவரை, இவர் ப்ளாக்'கில் எழுதுவதற்கு சம்பந்தம் இல்லாமல் கேட்கவேண்டும் என்றே கேட்கப்பட்ட கேள்விகள், அவரும் ஆனந்தத்துடன் பதில் அளித்துள்ளார்..... இதோ.. தன் எழுத்து நடையை கேப்பங்கஞ்சி' க்காக விட்ட கருப்பு - சதீஷ்

வாயை புடுங்கும் ரவுண்டு :-

கவிதா:- வாங்க சதீஷ் எப்படி இருக்கீங்க? முதல் கேள்வி, உங்கள் "விடாது கருப்பு" பெயர் காரணம் என்ன?
கறுப்பு வண்ணம் துக்கத்துடன் சம்பந்தப்பட்டது. அதேபோல கறுப்பு பயமறியாது என்பார்கள். இருட்டு எப்போதுமே ஒருவித பயத்தை தரக்கூடியது. நான் ஒரு தொலைக்காட்சித் தொடரில் பார்த்த விடாதுகருப்பு என்ற திகில் கலந்த வார்த்தை எனக்குப் பிடித்து இருந்தது. சதா சர்வகாலமும் பிரம்மாவின் மூக்குச்சளியில் இருந்து பிறந்ததாக ஒரு கும்பல் ஆரம்பித்தபோது அவர்களை அடக்கி ஒடுக்க இந்தப் பெயர்தான் எனக்கு சரியாகப் பட்டது. எனவே இப்பெயரைத் தேர்ந்து எடுத்தேன். எனது நலம் விரும்பிகளுக்கும் அய்யாவின் சீடர்களுக்கும் பகுத்தறிவுக் கழகத்தாருக்கும் இப்பெயர் சரியானதாகவே பட்டது. எனவே இதே பெயரையே தொடர்ந்தேன்.

கவிதா:- சதீஷ், நீங்க பிறந்த இடம், அதன் வளமை, அழகு, பெருமை பற்றி சொல்லுங்கள்.
திருச்சிக்கு அருகில் உள்ள திருவெறும்பூர். திருச்சியை அடுத்த இருப்புப் பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன. இது ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,835 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவெறும்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவெறும்பூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்குலத்தோர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பெல் தொழிற்சாலை மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது.

இங்கு இருக்கும் எறும்பீஸ்வரர் கோவில் சரித்திர புகழ்பெற்றதாகும். இவரின் நினைவாக வைக்கப்பட்ட திரு எறும்பியூர் என்ற பெயரே மருவி திருவெறும்பூர் ஆனதாக ஆராய்ச்சியாளர் சொல்வர். எறும்பு பூஜித்த இடம் திருவெறும்பூர். காவிரி ஆறு அழகாக ஓடுகிறது இங்கே. அதனால் எப்போதும் பசுமை நிறைந்த அழகான ஊர். எங்கும் பச்சைப்பசேல் என்று வண்ண மயமாகக் காட்சி அளிக்கும்.

கவிதா:- இப்ப நீங்க இருக்கிற வாழ்கிற வாழ்க்கை, உங்களது பிறந்த ஊரின் வாழ்க்கை - இழந்தவை பெற்றவை என்ன?
முன்பு இருந்ததைவிட நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஜாதி என்ற குட்டையில் ஊறி மூளையை மழுங்கடித்து வெட்டியாகத் திரிந்த என் மூதாதையர் கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து என் சொந்த மூளையை சுயமாக உபயோகித்து பகுத்தறிவு கொண்டு சிந்தித்து இன்று புது மனிதனாக புது ரத்தத்துடன் வலம் வருகிறேன். இதுவே என் மகிழ்ச்சிக்குக் காரணம். சிங்கப்பூர் என்று மட்டும் இல்லை. நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் என் கொள்கைகளில் மாற்றம் இராது. அய்யாவின்மேல் நான் கொண்ட பாசத்தின் அளவு குறையாது. தூரத்தில் இருந்தால்தான் பாசம் அதிகமாகும் என்பார்கள். எனவே அய்யாமேல் கொண்ட அதிக பாசத்திற்கு இந்த புதிய நாடுதான் காரணம்.

தமிழ் இணையத்துக்கு வந்தபின் பலரின் பதிவுகளையும் படிக்கிறேன். அவற்றில் நல்லனவும் உண்டு. அல்லனவும் உண்டு. நிறைய படித்தபின் என் அறிவு இன்னும் விசாலமாகியது. நானும் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். எழுத எழுத எனக்குள் இருக்கும் எழுத்துக்கள் ஊற்றாக வெளிப்படுகின்றன. ஒருவேளை நான் எழுதாமலே இருந்திருந்தால் அவை முனை மழுங்கி மக்கிப் போயிருக்கலாம். எனவே இத்தருணத்தில் என்னை மென்மேலும் சீர்படுத்திய இணையத் தமிழுக்கும் பாராட்டித் தட்டிக் கொடுத்தவர்களுக்கும் ஆலோசனைகள் சொல்லி நேர்மைப்படுத்தியவர்களுக்கும் எனது நன்றியினை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். உள்ளூரிலேயே நான் இருந்து இருந்தால் என் எழுத்துக்கள் இவ்வளவு வீரியத்துடன் வந்திருக்ககது என்றே நினைக்கிறேன். காரணம் யாரிடத்தும் பயமில்லை. இந்த அளவுக்கு நேரம் அங்கே கிடைத்திருக்காது.

இழந்தவைகளில் முக்கியம் தாய்-தந்தை அருகில்லாமை. அந்த அன்பு, பாசத்திற்கு அருகில் இருப்பதுதான் எத்தனை சுகம்! அடுத்து சிறு வயது முதலே பளிங்கு, பம்பரம் விட்ட முட்டுச்சந்து நண்பர்கள். அப்புறம் காவிரியாற்றுக் குளியல், ஆக்ஸிஜன் அதிகமுள்ள மண்வாசனையுடன்கூடிய சுத்தமான காற்று, ஜன்னலோரத்து பேருந்து இருக்கை... பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் எங்களூர் தாவணிகள்.... ம்... இப்படி நிறைய ஜொள்ளிக் கொண்டே போகலாம்!

கவிதா:- என்னுடைய பதிவொன்றில் சொல்லியிருந்தீர்கள், கிராமத்து பெண்கள் குழந்தைக்கு பாலூட்டும் போதுகூட முந்தானை கொண்டு மறைக்காமல் அப்படியே கொடுப்பார்கள், அவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்களை கவனித்து கொள்வதில்லை என்று. இதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்.
உண்மைதான் சகோதரி. படிக்காத பெண்கள் என்று மட்டுமில்லை. நன்கு படித்த பெண்களே குழந்தை பிறந்தபின் சர்வ சாதாரணமாக முந்தானை கொண்டு மறைக்காமல் பால் கொடுத்ததை பார்த்து(தவறா நினைக்காதீங்க... எதேச்சையாக) இருக்கிறேன். உறவுமுறை மட்டுமில்லல, முறையில்லாதவர்களும்கூட மறைக்காமல் பால் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் பார்வையில் குழந்தை பிறந்தபின் யாருக்காக அழகைக் கூட்ட வேண்டும் என்ற நினைப்பாக இருக்கலாம். திருமணத்துக்கு முன்னர் தம்மை அழகு படுத்திக் கொள்வதும் நல்ல உடையை தேர்ந்தெடுத்து அணிவதும், உடலை மறைப்பதும் வரப்போகும் கணவனுக்காகவும் செய்கின்றனர். அதேபோல ஊரார் ஏதும் தவறாக சொல்லிவிடக் கூடாதே என்ற எண்ணத்தினாலும் தங்களின் உடலில் அதிக கவனம் செலுத்துகின்றனர் திருமணத்திற்கு முன்னர். திருமணத்திற்குப் பின்னர் யாருக்காக செய்ய வேண்டும்? ஊர் என்ன சொன்னால் எனக்கென்ன என்ற மனோபாவம். நம் காலம் முடிந்து விட்டது, பிறந்த பிள்ளைகளள சீராட்டி வளர்த்தாலே போதும், நமக்கேன் இனி அழகு என்று நினைக்கின்றனர்.

அதாவது தங்களுக்காக செலவு செய்யும் நேரம், பணம் போன்றவற்றை குழந்தைகளுக்காக செலவிடுகின்றனர் என்பதுதான் உண்மை. பாசம் அவர்களின் கண்களை மறைக்கிறது.

நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். கல்யாணம் முடிந்தால் எல்லாமே முடிந்து விடுவதில்லை. 21ல் கல்யாணம் முடிந்தால்கூட தோராயமாக இன்னும் 70 வருடம் வாழ இருக்கிறார் அப்பெண். எனவே வாழ்வின் இறுதிவரை அவர் உடலை பேணிக் காக்க வேண்டும். செலவு அதிகம் செய்யாவிட்டாலும் எளிய மருந்துகள், வாசனைத் திரவியங்கள், நல்ல சுத்தமான உடைகள் அணியலாம். கணவன் மட்டுமே காணும் உடலை பிறர் பார்க்க அனுமதித்தல் சரியல்ல.

ஒருகாலத்தில் இலை, தழைகளை இடுப்பில் மட்டும் சுற்றிக் கொண்டு அலைந்தனர் மக்கள். அன்றைக்கு இவ்வளவு கலாச்சார சீர்கேடுகள் இல்லை. பாலியல் வன்முறைகள் இல்லை. ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு. எனவே பெண்கள் தங்கள் உடலை மறைத்துத்தான் ஆகவேண்டும். நாகரீகம் என்ற பெயரில் பப், கரோக்கேக்களில் திருமணத்திற்கு முன்பே திறந்து போட்டு அலைகிறது சில இளைஞர் கும்பல். அவர்கள் கற்பினைப் பேணுபவர்கள் அல்லர். பட்டால்தான் புத்திவரும். நானே நேரடியாகக் கண்டு இருக்கிறேன். வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஆண்கள் ஓட்டம் பிடித்தபின் நினைத்து நினைத்து அழுவார்கள் இப்பெண்கள்.

நாகரீகம் என்பது என்ன? புதிய கலாச்சாரம் என்பது என்ன? திறந்து போட்டு அலைவதா? பெண்கள் சமுதாயம் சிந்திக்க வேண்டும். முள்ளில் சேலை பட்டடலும், சேலையில் முள் பட்டாலும் பாதிப்பென்னவோ சேலைக்குத்தான்! வெறிபிடித்த காமுகர்களை செருப்பால் அடித்து கூண்டில் ஏற்ற வேண்டிய பெண்களே அச்செயலுக்கு துணைபோவது வருத்தமாகத்தான் இருக்கிறது!

கவிதா:- பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு தனி பதிவு போட்டீர்கள். எனக்கு ஒரு பெண்ணாக உடன் பாடில்லை. அதில் நிறைய Practical பிரச்சனைகள் உள்ளன.
மன்னிக்கவும். நான் எல்லாப் பெண்களையும் அர்ச்சகராக ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. இறைவனைச் சேவிக்க அர்ச்சகராக ஆசைப்படும் பெண்களுக்கு அவர்கள் அவ்வாறு ஆவதில் தடையேதும் இல்லை என்று சொன்னேன். ஒரு ஆண் அர்ச்சகராக ஆகும்போது, ஒரூ பெண் ஏன் ஆகக் கூடாது என்பதற்கான பதிலாகவே எழுதினேன்.

1. கடவுளை தரிசனம் செய்ய வருபவர்களின் கவனம் அந்த பெண்ணின் மீது போகும்.
ஒரு ஆண் அர்ச்சகராக இருக்கும்போது அவரை எந்த பெண்ணின் பார்வையும் அவர்மேல் போகவில்லை என்று நினைக்கிறீர்களா? வெறும் பார்வைதானே.. போனால் போகட்டுமே! நன்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு அவர் அர்ச்சகம் செய்வதில் தவறில்லை. ஆண் அர்ச்சகர்போல அரைகுறை ஆடையுடன் அர்ச்சகம் செய்தால் ஆண்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.

பேருந்தில், சாலையில், அலுவகலத்தில், விமானத்தில் பெண்களை எப்படிப் பார்க்கிறார்களோ அதேபோலத்தான் கோவிலிலும் ஆண்கள் பார்ப்பார்கள். இறைவனைத் தொழவந்த அவர்களின் மனது அலைபாயாமல் இருக்க அப்பெண்கள் உடையை கவனமாக உடுத்தினாலே போதும். இப்போது கும்பிட வரும் சில பெண்களின் உடைகள்தான் அவ்வளவு உசிதமாக எனக்குப் படவில்லை. சிலர் தொப்புளைக் காட்டிக்கொண்டு வருகின்றனர். சிலர் கால்சராய்(அரைக்கால் சட்டை) அணிந்து வருகின்றனர். நான் பட்ட அனுபவங்களை தனியொரு பதிவாகத்தான் போட வேண்டும்.

என்னுடன் கூடப்படித்த பெண் எல்லா வெள்ளிக் கிழமையும் தவறாமல் கோவிலுக்குச் செல்வார். ஒருநாள் அவளிடம் தனிமையில் கேட்டேன்,

"ஏண்டி பக்தி முத்திப் போச்சா?" (அவள் எனக்கு ரொம்ப நெருக்கம். ஆனால் காதலி இல்லை.)

"அட நீ வேறடா... மந்த்ரம் ஓத புதுசா சிவப்பா அழகா ஒரு சின்னப் பயன் வந்திருக்கான்... அது மட்டுமில்லாம என்னையும் சைட் அடிக்க நாலு பசங்க வறானுங்க. எனக்கே ரொம்ப பெருமையா இருக்கு. அதான்... மற்றபடி பத்தியும் இல்ல... வாசனையும் இல்ல!" என்றாள்.

"நீ தேறவே மாட்டேடி!" என்று செல்லமாக தட்டினேன் அவளை.

மேற்கண்ட சம்பாஷணையில் என்ன புரிந்து கொண்டீர்கள்? ஆண் அர்ச்சகரையும் சைட் அடிக்க பெண் கூட்டம் வருகிறது. கோவிலுக்கு பக்திக்காக மட்டுமே சில பெண்கள் செல்லவில்லை.

எனவே கவனம் சிதறுவது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும்தான். எனவே பெண் அர்ச்சகர் ஆவதற்கு தாங்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.

2.அடுத்து பெண்களுக்கு மனதளவில் நிறைய தடுமாற்றங்கள் உண்டு, ஒருமித்த சிந்தனை இருக்காது. அந்த தடுமாற்றங்களை எல்லாம் கட்டுப்படுத்தி அடுத்தவர்கள் நலனுக்காக பூசை செய்ய முடியுமா என்று தெரியவில்லை.
ஆண்களை விட மனதை இன்னும் அதிகமாக அடக்கி ஆளத் தெரிந்தவர்கள் பெண்கள். இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். காதலில் ஆகட்டும் காமத்திலாகட்டும், கோபத்தில் ஆகட்டும்... ஆண்கள்தான் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காது எளிதில் உணர்ச்சி வசப்படுகின்றனர். பெண்களுக்கும் ஆசாபாசங்கள் உணர்ச்சிகள் இருக்கின்றன. ஆனாள் அவள் கட்டுப்படுத்தத் தெரிந்தவள். எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவள் அல்ல. நன்கு சிந்தித்து பிரகு முடிவு எடுப்பாள். அவள் இந்த ஊருக்கு பயந்தவள். சமுதாயத்துக்கு பயந்தவள். எனவே பெண்கள் மனதளவில் தடுமாறுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது ஏற்புடியதாக இல்லை.

குடும்பத்தில் ஆண்களின் பங்களிப்பைவிட பெண்களின் பங்களிப்பு மிக அதிகம். எனவே ஒரு பெண்ணானவள் அர்ச்சகர் தொழிலுக்குச் செல்வதால் குடும்பப் பணிகள் பாதிக்கலாம். ஆனாலும் மற்ற பணிகளுக்குச் செல்லும் பெண்களின் வீடுகளின் என்னவெல்லாம் பாதிப்பாகிறதோ அப்படியே இங்கும் ஆகும். பெரிதாக ஒன்றும் ஆகாது.

3.கருவறை தவிர, மற்ற வேலைகள் பெண்கள் செய்யலாம் என்றே தோன்றுகிறது. இதில் உங்களின் கருத்து?
இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று சொல்கிறார்கள். எனவே கருவறை என்ன, சுற்றுப் பிரகாரம்தான் என்ன? அர்ச்சகர் தொழில் செய்வது என்று ஒரு பெண் முடிவு செய்து விட்டால் அவள் தாராளமாக எல்லாப் பக்கமும் சுற்றிச் சுழன்று வரட்டுமே! அவளின் உரிமையில் தயவு செய்து நாம் தலையிட வேண்டாமே!

இதனையும் இங்கே சுட்டி படித்துப் பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்!

அணில் :- சதீஷ் அண்ணே.. வாங்க.. என்னைய மாதிரி உங்க ப்ளாக் ல ஒரு பூனக்குட்டி கருப்பா வச்சி இருக்கீங்க..நானும் பாக்கறேன். நீங்க, கவிதா, பொன்ஸ் அக்கா, நாகை சிவா அண்ணே..இப்படி நிறைய பேரு எங்களை எல்லாம் புடிச்சிக்கிட்டு வந்து துணைக்கு வச்சிக்கறீங்களே.. நல்லா இருக்கா உங்களுக்கு?
இஸ்ரேலுக்கும் பாப்பானுக்கும் எப்படி சொந்தம் வந்ததோ அதேபோல கருப்புக்கும் பூனைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. சிகப்பு ரோஜாக்கள் படம் பாருங்கள். திகில் காட்சியில் கருப்பாக ஒரு பூனை ரத்தம் குடிப்பது போன்று எடுத்திருப்பார் பாரதிராஜா! எனவே பகுத்தறிவு பேசும் என்னைப் பார்த்தால் பார்ப்பனர்களுக்கு பயம்வர வேண்டும் என்பதற்காக துணையாக வந்தார் கருப்புப் பூனையார்!

அதுசரி, மெய்யாலுமே ராமர் உங்க முதுகில் மூன்று விரலால் தடவினாரா? அது ஏன் மூன்று விரல், ஏதும் வேண்டுதலா? மூன்று விரலால் தடவும்போது மற்ற விரல்களை மடக்கிக் கொண்டாரா?

கவிதா:- உங்களின் எழுத்தில் மாற்றம் செய்து எழுதவேண்டும் என்று காட்டாயமாக்க பட்டால் எதைப்பற்றி எழுத ஆவல்.
நகைச்சுவை!

அணில்:- நீங்க சிரிக்கவே மாட்டிங்களா.. எனக்காக சிரிப்பா ஒரு பதிவு போடுங்களேன்.
இதிலேயே சிரிப்பாக எழுதலாம். ஆனால் பதிவு பெரிதாகிவிடும். எனவே உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் என் பதிவில்.

கவிதா:- திராவடர்கள் இடையே ஒற்றுமை இல்லை- ஆமாம் /இல்லை - உங்களின் பதிலுக்கு உங்களின் விளக்கம்?
திராவிடர்கள் இடையே இன்றைக்கு ஒற்றுமை இல்லை என்பதுதான் உண்மை. எவனெல்லாம் சாதி வேண்டும் என்று நினைக்கிறானோ அவனெல்லாம் பார்ப்பனர்களை ஆதரிக்கிறான். குறிப்பாக தேவர், ஆசாரி மற்ற பூணூல் போட்ட மேல்வர்க்கம். இவர்களுக்கெல்லாம் ஏன் ஜாதி வேண்டும்? தலித்துகளை அடக்கி ஆள வேண்டும். தீண்டாமை பேணப்பட வேண்டும். ஜாதியை வைத்து குளிர்காய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை ஏவலாளிகளாக வைத்துக் கொண்டு வேலை வாங்க வேண்டும். மற்றவர்களை அடக்கி ஆளுதலை பெருமையாக நினைக்கின்றனர் இந்த இழிபிறவிகள். வடக்கே இருந்து தென்னாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்த பட்டுநூல்காரன் கூட இன்றைக்கு சாதி வேண்டுமென்கிறான். பூனூல் போட்டு நாலு மந்திரங்களளக் கற்றபின் இன்றைக்கு நானும் உயர்சாதி என்கிறான்!

சுய ஆதாயத்துக்காக சில திராவிடர்களும் சாதி தேவை என்கின்றனர். திராவிடர்களிடத்தில் முழுமையான ஒற்றுமை இல்லை!

அணில்:- சதீஸ் அண்ணாச்சி, பெரியார் தாத்தா சொன்னதுல உங்களுக்கு பிடிச்சத எங்களுக்கு சொல்லுங்கள்.
“நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். " நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."

கவிதா:- தமிழை தவிர இந்திய மொழி எதிலும் இத்தனை அதிகமான ஆபாசமான வார்த்தைகள் இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் அகமதாபாத் நகரில் வசிக்க நேரிட்ட போது, அங்கு சில ஆபாசமான வார்த்தைகளை அந்த வேற்று மொழிக்காரர்கள் என்னிடம் சொல்லி "இந்த வார்த்தை ஆபாசமானது தானே" என்று கேட்டார்கள், நான் வெட்கி தலல குனிந்து நின்றேன். இப்போது தமிழ்மணம் வந்த பிறகு அதை மீண்டும் உணர்கிறேன். தமிழனின் ஆபாசம் உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதாக எனக்கு தோன்றுகிறது -உங்களின் விளக்கம்.
எல்லா மொழிகளிலுமே ஆபாசமான வார்த்தைகள் இருக்கின்றன. தாங்கள் தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பதால் இந்த ஆபாச வார்த்ததகளைக் கண்டு மனம் வெம்பி இருக்கிறீர்கள். அதனால்தான் இப்படி நினைக்கிறீர்கள். இல்லை தோழர் டூண்டு அவர்களின் எழுத்துகளைப் படித்து கோபம் கொண்டீர்களா?(சிரிப்பு...)

நான் இங்கு வந்த புதிதில் வேலை வாங்கும் கங்காணி(மன்று)களைப் பார்த்து தமிழர்கள் சிரித்துக் கொண்டே "சரிடா xxxத்தா !" என்பார்கள். மேலதிகாரியைத் திட்டிய திருப்தி தமிழனுக்கு. அந்த சீனருக்கோ பணியாள் சிரித்துக் கொண்டே தன் சொல்லைத் தட்டாமல் கேட்கிறானே என்ற சந்தோஷம். முழு அர்த்தம் தெரிய வரும்போது அந்த சீனருக்கும் கோபம் வந்திருக்கலாம். அதேபோல தமிழனைப் பார்த்து சீனர்களும் "கன்னினாவே சீவாய்!" என்பார்கள். இதற்கு அர்த்தம்... எதிராளியின் அம்மாவை..xxxxx. என்பதாகும். மலாய் மொழியில் அதனை "புக்கி மா லூ" என்பார்கள்.

எல்லா மொழிகளிலுமே கெட்ட வார்த்தைகள் நிறைய இருக்கின்றன. தமிழில் புழக்கத்தில் புதிது புதிதாக நிறைய வார்த்தைகள் கண்டு பிடிக்கிறார்கள். உதாரணமாக xxxxx, xxxxx, xxxxx... நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன. சொல்லகராதியே வந்துவிடும் போலத் தெரிகிறது!

நம் தமிழ் மொழியில் உள்ள நிறைய கெட்ட வார்த்தைகளை மட்டும் தாங்கள் படிக்க, பார்க்க, கேட்க நேரிட்டதால் தாங்கள் வெட்கித் தலை குனிந்து இருக்கிறீர்கள்.

கவிதா:- நிறைய ப்ளாக் நண்பர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு பக்கம் பக்கமாக நமக்கு நம் நாட்டிற்கு உபதேசத்தை அள்ளி வழங்குகிறார்கள் , உங்களையும் சேர்த்து. இதை ப்பற்றி உங்களின் கருத்து.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

இப்படிச் சொன்னவன் நம்ம அய்யன் வள்ளுவன். பிறருக்கு புத்திமதி சொல்லுமுன் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்படி வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தியடிகள்.

நாட்டு நன்மைக்காக ஆலோசனைகள், புத்திமதிகள் சொல்வதில் தவறு இல்லை. ஆனால் நாமும் நாட்டு முன்னேற்றத்திற்காக ஏதாவது ஒரு வழியில் பாடுபட வேண்டும். உதாரணமாக கல்வி, பொருளாதாரம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெறும் வாய் வார்த்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருத்தல் சரியில்லை. நான் என்னாலான பல நற்பணிகளை செய்து கொண்டுதான் வருகிறேன். தங்களை நேரில் சந்திக்கும்போது அவற்றைப் பற்றி விரிவாக விளக்க ஆசைப்படுகிறேன்.

கவிதா:- ஒரு பெண்ணும் ஆணும் சமம் என்று என்னால் ஒரு போதும் ஏற்று க்கொள்ள முடியாது. சில விஷயங்களில் பெண் பெண்ணாக மட்டுமே தான் இருக்க முடியும். ராக்கெட் 'டில் பறக்கிறார்கள், ஆணுக்கு நிகராக எல்லா வேலையும் செய்யாதாலும் கூட ஆணுக்கு சற்று குறைந்தவளே பெண் –உங்கள் கருத்து.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்று மார் தட்டினான் எங்கள் பாரதி. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் இன்றைக்கு பல பெண்கள் உலகையே கலக்கி வருகிறார்கள். குழந்தை பிறப்பைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணும் சமம்தானே. பெண்களுக்கு இருக்கும் சங்கோஜ புத்திததன் பல வேளைகளில் அவர்களின் முன்னேற்றத்தினை சீர் கெடுக்கிறது என்பேன். வெட்கப்படாமல் எல்லா தொழில்களையும் அவர்கள் செய்ய முன்வர வேண்டும். இப்போது பலர் ஆணுக்கு இணையாக எல்லாத் தொழில்களிலும் முன்னேறி வருகின்றனர். உதாரணமாக ராக்கெட், விமானம், மெக்கானிக், நடத்துனர், ஓட்டுனர், அலுவலகம்... இப்படிப் பல.

உடலுறுதியில் ஆணைவிட பெண் சற்று குறைவானவள் என்பது மட்டுமே உண்மை. ஒருசில பெண்கள் வேண்டுமானால் விதி விலக்காக இருக்கலாம். மற்றபடி ஆணுக்குப் பெண் சமம்தான். பெண்ணை ஆண் தனக்குச் சமமாக உரிமைகள் கொடுத்து நடத்துவதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

நீங்கள் பிறந்த ஊருக்காக, மக்களுக்காக நீங்கள் ஏதாவது செய்யதுண்டா? செய்ய நினைக்கிறீர்களா? ஊருக்காக தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தின் மூலமும் நிறைய செய்தி இருக்கிறேன். நாட்டு மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் நிறைய செய்து கொண்டுதான் வருகிறேன். இன்னும் செய்வேன். செய்ததை சொல்லிக் காட்டக் கூடாது என்பார்கள். எனவே அவற்றை வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லல. தனிப்பட்ட முறறயில் சந்திக்கும்போது விரிவாகப் பேசுவோமே.

சிங்கப்பூர் மக்களிடம் நீங்கள்/நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.

தமிழர்:- வானொலி, தொலைக்காட்சியில், பள்ளிகளில் தூய்மையான தமிழ்.

மலாய் மக்கள்:- ஒற்றுமை

சீனர்கள்:- உழைப்பு, உழைப்பு, உழைப்பு. பணக்காரர்கள் கூட தள்ளாத வயதிலும் 90 வயசு பாட்டிகளும் தாத்தாக்களும் கூட உழைக்கிறார்கள்.

உங்கள் எழுத்தின் மூலம் நீங்கள் இதுவரை சாதித்தது./சாதிக்க நினைப்பது?

பகுத்தறிவு, பகுத்தறிவு, பகுத்தறிவு.

நிறைய அனானி பின்னூட்டங்கள் உங்களுக்கு வருகின்றன. அதற்கு காரணம் என்ன?.
பெயர் வெளித்தெரிய வேண்டாமென்று நினைப்பதால்!

பார்ப்பனர்களால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக சிலர் அனானியாக உலவுகின்றனர். சொன்னால் சிரிப்பீர்கள். என்னை இதுவரை ஐந்து அனானிகள் சந்தித்து இருக்கின்றனர். அவர்களுக்கு வலைப்பது இல்லை. இன்னும் சில வலைப்பதிவர்களே அனானியாகவும் மறுமொழிகின்றனர். பார்ப்பனர் பால் அச்சம்தான் பிரதான காரணம். பார்ப்பனர் நேரடியாக மோதினால்கூட பரவாயில்லை. ஆனால் முரளி மனோஹர் என்ற பெயரில் டோண்டு மோதியதைப் போல மோதினால் பாவம் இவர்களும் என்னதான் செய்வார்கள்?

ஆச்சாரங்களை அவிழ்த்து விட்டு அம்மணமாக வா பெண்ணே 'ன்னு எழுதி இருக்கீங்க.- உங்களின் துணை ஆச்சாரனமான பெண்ணாக அமைந்து விட்டால் அம்மணமாக்க முயற்சி செய்வீர்களாக, இல்லை உடையுடன் உலாவரட்டும் என்று விட்டுவிடுவீர்களா? வர்ணம் போதித்த வேதம், மனு போன்ற பழைய புருடா புராணங்களை உதறிவிட்டு சிறந்த சிந்தனை உள்ள பெண்ணாக வரவேண்டும். ஒருவேளை அவள் ஆச்சாரங்களோடும் மடி கலாச்சாரத்தோடும் வந்தால் அவளை என் வழிக்கு மாற்றுவேன்.

பெரியார் புகழை பரப்ப, எழுதுவதை தவிர என்ன செய்கீறீர்கள்?
கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். நிறைய படிக்கிறேன். பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்கிறேன்.

பிடித்த ப்ளாக் எழுத்துக்கள் எவை?

எனது வலைப்பதிவின் வலப்பக்கத்தில் முன்பு இருந்ததே. அடைப்பலகை சீர் செய்ததும் உங்களுக்கு காணக் கிடைக்கும்.

உங்கள் வீட்டில் உங்களின் எழுத்தினை பற்றிய விமர்சனம்.

உருப்படாத பய.

பெண் பதிவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பவை

தைரியமாகச் சொல்லுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். துணிந்து செல்லுங்கள். யாருக்கும் எதற்காகவும் பயப்படாதீர்கள். கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள். வீனர்களை புறத்தே ஒதுக்கித் தள்ளுங்கள்.

உங்களுடைய சுடர் பதிவு மற்றவற்றை விட வித்தியாசமாக இருந்தது. பின்னூட்டங்களும் சேர்த்து. இப்படி மாற்றங்களை உங்கள் பதிவில் நீங்கள் விரும்புகிறீர்களா?

அனைவரும் அதனைத்தான் விரும்புகிறார்கள். மாற்றம் என்பது மனிதத்தத்துவம். இந்த உலகில் மாற்றம் இல்லாதது எதுவும் இல்லை. எனவே மாற நினைக்கிறேன். விரைவில் புதிய கருப்பினை எதிர் பாருங்களேன்.

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் - உஷாஜி

உஷாஜி’க்கு புதிதாக அறிமுகம் தேவை இல்லை எனலாம்..இணையத்தில் பல வருடங்களாக இருப்பவர், என்னை போன்ற புதியவர்களை ஊக்கம் கொடுத்து பாராட்டி எழுதவைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் பத்திரிக்கை துறைக்கும் புதிதல்ல, நான் இவரை முதல் முதலில் தெரிந்து கொண்டது அவள் விகடன் வாசகியாக. இவரின் கட்டுரை ஒன்றை படித்துவிட்டு, இவர் பெயரை ப்ளாகரில் பார்த்து இருக்கிறோமே..என்று அதற்கு பிறகு இவரின் ‘நுனிப்புல்’ சென்று படித்து வருகிறேன்..இன்று நம்மிடையே..உஷாஜி..

வாயை புடுங்கற ரவுண்டு:-

கவிதா:- உஷாஜி, சொந்தநாடு திரும்புவதை எப்படி உணருகிறீர்கள்?
மகள் கல்லூரி படிப்புக்கு இந்தியா சென்றவுடன், வெளிநாட்டு வாழ்க்கை போதும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் வலுத்துக் கொண்டு வந்தது. மகன் பத்தாவது தேர்வு முடிந்ததும் நானும் அவனும் ஊருக்கு திரும்புவது என்பது முன்பே எடுத்த முடிவு. இதில் இன்ப அதிர்ச்சியாய் என் கணவருக்கு வேலை தேடி வந்துள்ளது. ஓரளவு நாடோடி வாழ்க்கை பழகிவிட்டதால், மாற்றத்தை விரும்பி ஏற்கிறோம். அதே சமயம், கொஞ்சம் சுக வாழ்க்கை வாழ்ந்து பழகிவிட்டதால், லேசான கலவரமும் அவ்வப்பொழுது வருகிறது.

கவிதா:- எல்லா பத்திரிக்கைகளிலும் அநேகமாக எழுதி இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் எழுத்தில் உங்களுக்காக தனிப்பட்ட ஒரு நடையை வைத்து இருக்கிறீர்களா?.
ஓரளவு அனைத்து இணைய இதழ்களில் எழுதியிருக்கிறேனே தவிர, அச்சு இதழ்களில் அதிகம் இல்லை.
முதலில் நான் நல்ல வாசகி, பிறகே எழுத்தாளினி. வேகமான, தொய்வில்லாத நடையும், மெல்லிய நகைச்சுவையும், யதார்த்தமான எளிமையான எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும். அதை என் எழுத்திலும் கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறேன்.

கவிதா:- அரபு நாடுகளில் பெண்களின் கட்டுபாடு பற்றி, எதற்கு அப்படி என்று அறிந்து கொண்டது உண்டா?
உள்ளூர் அரபி பெண்களுடன் பழகும் வாய்ப்பு வந்ததில்லை. ஆனால் பிற நாட்டு அரபி பெண்கள் (இஸ்லாமிய) சிலருடன் நட்பு உண்டு. பெண்களுக்கு தரப்படும் கல்வி சுயசிந்தனையை வளர்க்கும் என்பதை அவர்களுடன் பேசும்போது நன்கு தெரியும்.. விரைவில் விவரமாய் எழுத உத்தேசித்துள்ளேன்.

கவிதா:- உங்கள் எழுத்தில் நீங்கள் கொண்டுவர நினைக்கும் சில விஷயங்கள்?
மனிதர்கள் அனைவருமே சுவாரசியமானவர்கள், விதவிதமான கேரக்டர்கள். அதை கதைகளில் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

அணில்:- உஷா அக்கா, அது என்னா சின்ன புள்ள மாதிரி ஸ்டாம்பு கலக்ஷ்னஸ் எல்லாம் செய்யறீங்க..? (கவி வேஸ்ட்..இதுமாதிரி எல்லாம் செய்யறது இல்ல..வாய் கிழிய பேச சொல்லுங்க நல்லாஆஆஆ பேசுவாங்க..)
அட அனி என் செல்லம் நீயாவது கேட்டியே!. சுதந்திரத்துக்கு முந்திய திருவாங்கூர், மைசூர் சமஸ்தான ஸ்டாம்புகள் எல்லாம் வெச்சிருக்கேன். மிக பழைய, அபூர்வமானது பல இருக்கின்றன. அப்படியே நாணயங்களும். இதைப் பற்றியும் எழுதணும். புகைப்படத்துடன்.

கவிதா:- இணையத்தில் “பெண்கள் புலம்புகிறார்கள்” உங்கள் கருத்து.
இணையத்தில் மட்டுமா ? இந்த பழக்கம் பல பெண்களுக்கு இருக்கு. நான் சொல்ல விரும்புவது ஒன்றேதான். புலம்பிக் கொண்டு இருந்தால் கேலியும் நக்கலும் அதிகம்தான் ஆகும். உன்னுடைய உரிமை, அது யாரையும் பாதிக்காது என்றால் அதை செயல் படுத்த யாரிடமும் கேட்டுக் கொண்டு இருக்காதே என்பதுதான்.

கவிதா:- என்னுடைய நண்பர் ஒருவர் “Don’t write like a typical house wife” என்று சொல்லுவார். பொதுவாக பெண்கள் அப்படி எழுதுவதாக அவரின் கருத்து. House wife என்றால் ஒரு இளக்காரம்/நக்கல் இருக்கிறது.
இது பெண்களூக்கான பத்திரிக்கை தேவையா என்ற தலைப்பில் இதுல எழுதியிருப்பதும், உங்க கேள்வியை ஒட்டித்தான். இது ஆண்கள் மட்டுமே மேதாவிகள் என்று நினைத்துக்கொள்ளுபவர்களில் வழக்கமான நக்கல் இது. பெண்கள் எழுதத்தொடங்கியப்பொழுது, (ஹவுஸ் ஓய்ப்புகள்) அவர்களுக்கு தெரிந்ததை எழுதினார்கள். வீட்டினுள் இருக்கும் பிரச்சனைகள் அப்படிதானே வெளி உலகிற்கு தெரிய வந்தன! எழுத்து என்பது அவரவர் ரசனையும், புரிதலும் பொறுத்து அமைகிறது. இதில் நக்கல் செய்ய என்ன இருக்கு? அது சரி, நான் எழுதுவது எப்படி இருக்கு ?

கவிதா:- திருமணம் நிச்சயம் செய்யும் போதே தனிக்குடித்தினம் பேசும் பெண்கள் பற்றியும் சொல்லுங்கள்.
நீங்க வேற, பையன்களே தனிக்குடித்தனம் போக திட்டம் போடுதுங்க. கேட்டால், நானும் வேலைக்குப் போகிறேன், அவளும் போறா. உங்களுக்கு எங்களோட இருந்தா சரிப்பட்டு வராது என்கிறார்கள்.

அணில்:- அக்கா “கிழவி” கதையின் மூலம் சொல்லவந்த கருத்தை கவிதா மாதிரி ஆளுங்களுக்கு சொல்லுங்க
அனி, வயது அதிகம் ஆக, ஆக குழந்தைப் போல மாறிவிடுகிறார்கள். ஆனால் உண்மையான குழந்தையின் நடத்தைகளை ரசித்து ஏற்றுக் கொள்ளும் நாம், பெரியவர்களிடம் எரிச்சலையே காட்டுகிறோம். வயதானப்பிறகு பல கிழ, கிழவிகளிடம் காண்பது அதீத சுயநலம்.

கவிதா:- “ஆணுக்கும் உண்டு sexual harassment” - உங்கள் பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. ஆண்களுக்கு உண்டு என்றாலும், அவர்கள் எளிதாக வெளிவரமுடியும், நேரடி பிரச்சனை இல்லை, மனவலி குறைவு, உடல் ரீதியான பாதிப்பு குறைவு என்று நினைக்கிறேன் -இது பற்றி உங்கள் கருத்து.
பெண்களுக்கு ஏற்படும் தாக்குதலைவிட ஆண்களுக்கு குறைவுதான். ஆனால் இருக்கு. சிறுவயதில் ஏற்படும் தாக்குதல் பாதிப்பு பின்னால் அவன் மண வாழ்க்கையே பாதிக்கப்படலாம் இல்லையா? பெண், தன் சோகத்தை முன்னபின்ன பழக்கம் இல்லாத ரயிலில் கூட பயணிக்கும் பெண்ணிடம் கூட பகிர்ந்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்கள் அப்படி செய்வதில்லை.

மூன்று வாரத்திற்கு முன்பு, இங்குள்ள கல்ப் நியூஸ் செய்தித்தாளில் ஒரு விசித்திர செய்தி. ஐரோப்பிய நாடு ஒன்றில், பதினைந்து வயது சிறுவன், தன் வகுப்பு மாணவனுடன் படிக்க அவன் வீட்டுக்குப் போயிருக்கிறான். இரவு வரவேற்பரை சோபாவில், படுத்திருந்தவனிடம், தோழனின் தாயே...... என்ன சொல்ல? அவன் படிப்பில், நடத்தையில் பல மாற்றங்களை பெற்றோர் கண்டுப்பிடித்து, கவுன்சிலிங் போய் கொண்டு இருக்கிறார்களாம். போலீஸ் கேஸ் ஆகி, வழக்கு நீதிமன்றம் வந்துள்ளது.

நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், பெண்ணின் வேதனைகள் ஆணுக்கு என்றும் புரியாது. அதுப் போலத்தான் ஆண் பிரச்சனைகளையும் பெண்கள் புரிந்துக் கொள்ள முயல வேண்டும். நம்மைப் போல அவர்கள் வெளியே புலம்புவது இல்லை. ஆனால் புகைப்பது, குடி போன்ற பழக்கங்கள் தன் பிரச்சனையை மறக்கவே என்றுத் தோன்றுகிறது.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம், ஆண் பெண் வித்தியாசம் காட்டாமல் வளர்த்தால், பையன்களும் தங்கள் பிரச்சனைகளை, கவலைகளை நம்மிடம் பகிர்ந்துக் கொள்வார்கள். அவர்களுக்கு புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பெண்கள் வெளிப்படையாய் புலம்பியோ, அழுதோ தீர்த்துக் கொள்வதால் ஹார்ட் அட்டாக் அதிகம் வருவதில்லை போல.

கவிதா:- பொதுவாக பெண்களுக்கு பொதுஅறிவு குறைவு, அதை அதிகமாக்கி கொள்ளவும் அவர்கள் சிரத்தை எடுப்பதில்லை. -காரணம்
மேலே கேட்ட ஹவுஸ் ஓய்ப் எழுத்து கேள்வியின் தொடர்ச்சியாய் இதைக் கருதலாம். எங்கள் வீட்டில் அத்தைகளும், பாட்டியும், அம்மாவும் உலக விஷயங்கள் அனைத்தையும் அலசுவார்கள். சிறுமியாய் வாயைப் பார்த்துக் கொண்டு இருந்தது நன்கு நினைவில் இருக்கு.. பிறகு எனக்கு வாய்த்த சிநேகிதகள், தெரிந்த பெண்கள், உறவுகளில் பலரும் நகை, புடைவை, சீரியல் என்று மட்டும் இல்லாமல் பொது விஷயங்கள் பேசுவார்கள். ஏன் ஆண்களில் விஜய் படம், ரஜினியின் புது நாயகி, லோக்கல் அரசியல் என்று உப்பு பெறாத விஷயங்களை மணிக்கணக்கில் பேசுபவர்கள் இல்லையா? ஆனால் இன்று பதிவுலகில் எழுதும் பெண்களில் 99% சதவீத பேர்கள் எல்லா விஷயங்களை எழுதுவதைப் பார்க்க, பார்க்க மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

1. பெண் பதிவர்கள் ஆண் பெயர்களில் எழுத ஆரம்பித்து விட்டால் நிறைய பிரச்சனைகள் இருக்காது - உங்கள் கருத்து
அதுக்கெல்லாம் எந்த பெண்ணும் பயந்தா மாதிரி தெரியவில்லையே J)

2. உங்களின் நுனிப்புல்’ லில் உங்களுக்கு மிகவும் பிடித்த சில
பல முறை நான் கவனித்தது, நான் எழுதியதை விட, எனக்கு வரும் பின்னுட்டங்கள் மிக சுவாரசியமாய் இருக்கும்.

3. உங்களின் கதைகளில் நீங்கள் ரசித்தவை
அதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்
உங்களுக்காக சில, படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
http://nunippul.blogspot.com/2006/06/blog-post_27.html - குஸ்கா - என் மனதில் முதலில் தோன்றியது
http://nunippul.blogspot.com/2006/06/25-50-75-00-25.html- ..25, ..50,..75,..00,..25- தேன்கூடு போட்டியில் 2வது பரிசு வென்றக்கதை
http://nunippul.blogspot.com/2006/07/blog-post_06.html - ஆன்மா சாந்தியடையுமா?
http://nunippul.blogspot.com/2005/11/blog-post_18.html - கரோமாவில் துளசிக் கல்யாணம் அப்புசாமி.காமில் வந்தது
http://nunippul.blogspot.com/2005/12/blog-post_07.html - நடேசன் சார்
http://nunippul.blogspot.com/2005/12/blog-post_11.html - குஞ்சாமணி - கணையாழியில் வெளியானது
http://nunippul.blogspot.com/2005/12/blog-post_17.html - பிள்ளை நிலா
http://nunippul.blogspot.com/2006/01/2006.html - வெற்றி- கணையாழியில் வெளியானது

4. உங்களின் குழந்தைக்கு உங்களிடம் பிடித்த விஷயம் என்ன?
இருவருககும் அம்மா எதையும் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தோழி. அதனால் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள், பிறர் முன்னிலையில் கஷ்டப்பட்டு “அம்மா!”

5. “தனிநபர் தாக்குதல்” - உங்கள் கருத்து
ஒன்று ஆபாச தாக்குதல். இது எனக்கு மட்டுமல்லாமல், ஓரளவு எல்லா பதிவாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சி இப்பொழுது இல்லை. அத்தகைய கமெண்டுக்களை பார்க்காமலேயே குப்பையில் போக செய்தாகிவிட்டது. அடுத்து பதிவுகளில் என்னைப் பற்றி எழுதுவது.. என்ன விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சில சமயம் என்ன ஏது என்று நேராக கேட்டுவிடுவேன். ஆனால் அலட்சியப்படுத்துதலே சரியான வழி.
என் எழுத்துக்களை விமர்சிக்கும் உரிமை அனைத்து வாசகர்களுக்கும் உண்டு. எதிர்வினைகளுக்கு நான் பயந்தால் டயரியில் எழுதி வைத்துக் கொண்டு நானே படித்துக் கொள்ள வேண்டும். பொதுவில் போட்டுவிட்டு, கமெண்ட் பாக்சையும் வைத்துவிட்டு, இதற்கு பயந்தால் முடியும? மட்டுறுத்தலும், அனானிமஸ் கமெண்ட்டையும் எடுத்தது ஆபாசம் மட்டுமல்லாது வேண்டாத பிரச்சனைகளையும் சிலர் உருவாக்கினர். பல முறை (கொஞ்சம் யோசனையுடன்) தவறாய் நினைக்க மாட்டார்கள் என்பவர்களுக்கு மட்டும் என் கருத்தை கமெண்ட்டாய் போட்டிருக்கிறேன். சொல்ல வரும் கருத்து தவறில்லை என்றால் அனானிமஸ் கமெண்ட்டோ அல்லது வேறு வேறு புது புது பெயர்களில் (எழுது பெயர் அல்ல) பதிவுப் போடுவது போன்றவை எல்லாம் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத செயல். அனைத்து பிரச்சனைகளும் இதனால்தான்.

6. உங்களை ஏதாவது தமிழ்மண குழுவில் இணைய சொல்லி கூப்பிட்டால் எதில் சேருவீர்கள்.
ஆஹா, அது எப்படி இந்த கேள்வி எனக்கு மட்டும் எக்ஸ்குளூசீவா வருது? ஆரம்பத்தில் இருந்தே, கணிணி பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாததால், இணையம் எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது. இந்த புரிப்படாத மாயாஉலகத்தில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பதே நல்லது என்று மூன்று வருடத்திற்கு முன்பே எடுத்த முடிவு இன்றுவரையில் கடைப்பிடிக்கிறேன்.

7. உங்கள் கதையின் முதல் விமர்சகர் யார்?
நானேதான்.

8. அடிக்கடி நடக்கும் தமிழ்மணத்தில் நடக்கும் பிரச்சனையும், உடனே போடப்படும் பதிவுகள் பற்றியும்
நான் தவிர்த்துவிடுவேன். அப்படிப் போட்டாலும் வித்தியாசமாய், கொஞ்சம் நையாண்டி இருக்கும். உதாரணமாய் தர்ம அடிப் போடுவது எப்படி என்ற பதிவு.

9. இணையம் உங்கள் பார்வையில்
எழுத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பக்கட்டத்தில் இணைய நட்புகளின் வெளிப்படையான கருத்துக்கள் என்னை சீர்திருக்கக்கொள்ள மிக உபயோகமாய் இருந்தது.. தனிப்பட்ட முறையில் மிகவும் தேர்தெடுத்த இணைய நட்புகள், கொஞ்சம் என் வயதை ஒத்த சிநேகிகளுடன் சொந்தக்கதை பேச மெயில் பரிவர்த்தனை மட்டுமே!. அதுவும் மிக, மிக அபூர்வமாய். சாட்டிங் செய்வதில்லை என்பதும் இன்றுவரைக் கடைப்பிடிக்கும் விரதம். கணிணி சம்மந்தமாய் பிரச்சனை என்றாலும் கேட்டவுடன் கைக் கொடுக்கும் நட்புகளும் உண்டு. ஆபாச பின்னுட்ட பிரச்சனையால் அவதிப்பட்டப் பொழுது, தானே முன் வந்து எப்படி எதிர்க்கொள்வது என்று சொல்லிக் கொடுத்த நல்லுள்ளங்கள் நிறைந்த இடம் இது. ஆக மொத்தம் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”

10. உங்கள் குடும்பத்தினர் உங்களின் எழுத்துக்கு துணையாக இருக்கிறார்களா?. அவர்களால் தடை ஏதும் உள்ளதா?
என் கணவர் செய்யும் மிகப் பெரிய உபகாரம் நான் எழுதியது எதையும் படிக்க மாட்டார். ஆனால் ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லிவிடுவேன். எழுதுவதும், எழுதாமல் இருப்பதும் உன்னுடைய விருப்பம், யாராவது ஏதாவது சொன்னார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தாதே என்பார். என் மாமனாரும், என் அப்பாவின் தங்கை- என் அத்தை மட்டுமே விசாரிப்பார்கள், தேடிப்பிடித்துப் படிப்பார்கள்.

சில சொந்தங்கள், நட்புகளிடம் அறிவுரைகள் வந்தன. யாரையும் இப்படி எழுது, ஏன் இந்த மேட்டர் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பது அபத்தம். என்ன எழுத வேண்டும் என்பது எழுதுபவர்களின் விருப்பம். அவரவர் ரசனைக்கு ஏற்றாற்போல தேடி படித்துக் கொள்ள வேண்டியதுதான்..

செலக்டீவ் அம்னீஷியா உஷா சொன்ன தத்துவம்- Happiness is nothing more than good heath and a bad memory


யார் இந்த கெஜானனன்?

பதிவுக்கு வந்து பல மாதங்கள் கழித்து நண்பர்கள் கிடைத்து, அவர்கள் என்னுடைய கணவர் பெயர் கெஜானனன் என்று தவறாக புரிந்து கொண்டது அறிந்தேன். முடிந்தமட்டும் என்னிடம் கேட்பவர்களுக்கு சொல்லிவிடுகிறேன்.. இருந்தாலும் திருமணமான ஒரு பெண்ணுக்கு பின்னால் இருப்பது கணவரின் பெயராகத்தான் இருக்கும் என்று நினைக்கும் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது..

கெஜானனன் - என்னுடைய தந்தையார் பெயர். Photobucket - Video and Image Hosting

திருமணத்திற்கு முன், எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட உடன் என் கணவரிடன் நான் முதலில் கேட்டது , என் அப்பா என்னுடன் இல்லை அவரின் பெயராவது என்னுடன் இருக்கட்டும், அப்பாவின் பெயரை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை உங்களின் அனுமதி வேண்டும் என்பதே....!!

அவரும் என் ஆசைக்கு மதிப்பளித்து என் அப்பா பெயருடனே என்னை உலவவிட்டு விட்டார்.

ப்ளாக் நண்பர்கள் இதுவரை எப்படி நினைத்தீர்களோ தெரியாது.. இனிமேலாவது கெஜானனன் யாரென்று தெரிந்துக்கொள்ளுங்கள்..

அணில் குட்டி அனிதா:- பேருக்கு ஒரு போஸ்ட்.. கவி ஓவரா தெரியல...?

பீட்டர் தாத்ஸ்:- A positive attitude is a person’s passport to a better tomorrow.

உடல் மொழியின் ரகசியம்

உடல் மொழி என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானது. வீடு, அலுவலகம் எங்கே இருந்தாலும், நாம் பேசும் மொழியை விட நம் உடல் பேசுவதில் தான் அதிக பாதிப்புகள் இருக்கின்றன்.

நோய்யுற்று இருக்கும் ஒருவனை சென்று பார்க்கும் டாக்டர் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போதே அவனுக்கு நோய் அவனை விட்டு போய் விடும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அந்த டாக்டரின் பேச்சு, மருந்து போன்றவற்றை விட அவரின் புன்னகை தரும் அன்பு பாதி மேல் வியாதியை குறைத்து விடும். சேவை தொழில்’லில் இருப்பவர்களின் உடல் மொழி எப்போதும் அடுத்தவருக்கு நம்பிக்கையை தருமாறு இருக்கவேண்டும்.

சிலருடைய புற அழகை பார்க்கும் போதே ஒரு சிலர் முகத்தை சுளித்து “அவரின் புற அழகை பற்றிய விமர்சினத்தை பார்வையிலேயே வெளிப்படுத்துவார்கள். அது அவரை எப்படி மனதளவில் பாதிக்கும் என்று கொஞ்சம் கூட நினைக்காமல் தன்னுடைய மன விகாரத்தை முக பாவத்தின் மூலம் காட்டி அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவார்கள்.

எங்களுடைய அலுவலகத்தில் உடல் ஊனமுற்ற ஒருவர் வேலை பார்த்தார், அவரின் முகத்திலும் சிறு பாதிப்பு இருக்கும். ஒரு முறை என்னை பார்க்க வந்த, நம் ப்ளாக் நண்பர் ஒருவருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தேன். இவரை பார்த்து இவர் மனம் புண்படுபடி உடல் மொழியில் காண்பித்து விடுவாரோ என்று எனக்கு மனதுக்குள் ஒரு படப்படப்பு. ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக அந்த ப்ளாக் நண்பர் என் அலுவலக நண்பரை சிரித்த முகத்தோடு பார்த்து பேசி அனுப்பி வைத்தார். அதற்காக ப்ளாக் நண்பருக்கு என்னுடய நன்றியையும் அப்போதே தெரிவித்து கொண்டேன்.

உடல் மொழி என்பது அடுத்தவரை பாதிக்க கூடிய வகையில் நாம் அனுமதிக்க கூடாது, நம்மை மீறி நம் உடல் உறுப்புகள் பேசாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். நம் முளை இடும் கட்டளைக்கு தகுந்தார் போன்று தான் நம் அசைவுகளும் இருக்கின்றன. நம் மூளைக்கு நாம் நல்ல எண்ணங்களை கொண்டு சென்றாலே அது தன் வேலையை ஒழுங்காக செய்யும்.

எங்கள் வீட்டில் உடல் மொழிக்கு அதிக முக்கியத்துவம் தருவதுண்டு, அதாவது நான் எப்படி நடக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், பேசும் போது என் உடல் அசைவுகள் எப்படி இருக்க வேண்டும், பொது இடங்களில் எப்படி நிற்க வேண்டும், உட்கார வேண்டும், வீட்டில் கூட உட்காரும் போது எப்படி உட்கார வேண்டும் என்று என்னுடைய ஆயா சொல்லி கொடுப்பார்கள். சரியாக இல்லையென்றால் நான் திருத்தி க்கொள்ளும் வரை என்னை பழக்கினார்கள் எனலாம். பெண் குழந்தை என்பதால் உடல் மொழியை மிக கவனமாக சொல்லிக்கொடுத்து வளர்த்தார்கள். வாய் திறக்காமல் கண்ணால் பேசியே பாதி வேலையை வாங்குவார்கள். இந்த பழக்கவழக்கங்கள் எனக்கு இப்பொது அலுவலகத்திலலும், வெளி இடங்களிலும் நிறைய நல்ல பலனை தருகிறது எனலாம்.

ஒருவர் பேசும் போதே அவரின் உடல் அசைவகளின் மூலம் அவரின் பாதி குணத்தை அறிய முடியும். சில விஷயங்கள் இந்த உடல் மொழியில் எனக்கு ஆச்சிரியத்தை தரும். என் கணவருக்கு இரண்டு கையையும் ஆட்டி ஆட்டி பேசும் பழக்கம். நான் பலமுறை, இந்த பழக்கத்தை மாற்ற சொல்லி சொல்லுவேன். ஆனால் அவரால் முடிவதில்லை. ஒரு முறை அவர் மிக ஆர்வமாக பேசி கொண்டு இருக்கும் போது அவரிடம் பேசிய படியே சென்று அவரின் இரு கைகளையும் சேர்த்து பிடித்து கொண்டேன். அவருக்கு உடனே பேச்சே நின்று போனது. இங்கு என் கணவர் பேசுவதே அவர் கைகளை கொண்டு என்று ஆகிவிட்டது அல்லவா?. கையை ஆட்டாமல் அவரால் பேசமுடியவில்லை என்பது தெரிகிறது. உடல் மொழி ஒருவரை எப்படி பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எப்போதுமே உயர் அதிகாரி என்றால் அவர் மேல் எப்போதும் நமக்கு ஒரு குறை இருக்கும். உயர் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் பேசி அதை சரி செய்து கொள்ள வேண்டும், இங்கு உடல் மொழி மற்றும் communication ரொம்ப முக்கியம். ஒருவர் நம்மீது நல்ல எண்ணத்தில் இல்லை என்பதை அவரின் உடல் மொழியின் மூலம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதை கொண்டு அவரிடம் பேசி அவரின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும்.

எங்களுடைய அலுவலகத்தில், என்னுடைய குரூப்’பில் உள்ள நண்பர்கள் நான் அலுவலகத்தில் நுழைவதை பார்த்தவுடன், பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை அப்படியே விட்டு விட்டு அவரவர் வேலையை சீரியசாக பார்க்க ஆரம்பித்தனர். அதில் நான் கவனித்தது, ஒருவர் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே மற்றவருக்கு நான் வருவதை சொன்னார், மற்றொருவர் என் வருகையை அவரின் தோலை அழுத்தி புரியவைத்தார். இதிலிருந்து அவர்கள் என்னை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பதை புரிந்து கொண்டேன், மேலும் அவர்களில் ஒருவர் என்மீது கோபமாக இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டேன்.

ஒரு அரைமணி நேரம் கழித்து, office chat மூலம், கோபமாக இருந்தவரிடம்,”என்ன பிரச்சனை, என்னால் முடியும் என்றால் தீர்த்து வைக்கிறேன்“ என்றேன். அதற்கு அவர் ஒன்றும் இல்லையே” என்றார். நான் விடவில்லை “இல்லை நான் கவனித்தேன், என்னுடயை ஏதோ ஒரு செயல் உங்களை பாதித்திருக்கிறது, என்னவென்று சொன்னால் நான் மாற்றிக்கொள்கிறேன் “ என்று சொன்னேன். அவ்வளவு தான் அவரின் நாற்காலியை என்னிடம் எடுத்து வந்து போட்டு உட்கார்த்து கேட்ட முதல் கேள்வி “எதுக்கு எங்கள பத்தி போட்டு குடுத்தீங்க?” எனக்கு சிரிப்பு தாங்கமுடியாமல் சிரித்து விட்டேன். அவர் போட்டு கொடுத்தது என்பது அவர்களை பற்றி நான் என் உயர் அதிகாரிக்கு கொடுத்த “Report”. நான் இவர்களுக்கு சாதகமாக ஒரு “Report”. ஐ தான் கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அதை அவருக்கு மட்டும் அல்ல மற்றவர்களையும் வரவைத்து நிதானமாக புரியவைத்தேன்.. “அட இது தான் மேட்டரா? என்று அவர்களும் சிரித்த முகத்தோடு, என் மேல் இருந்த கோபத்தை அன்றே விட்டு விட்டு வேலையை செய்ய ஆரம்பித்தனர்.

இங்கு அவர்கள் என்னிடம் எதுவுமே சொல்லாவிட்டாலும் அவர்களின் உடல் மொழியை கொண்டு பிரச்சனையை தீர்க்க வேண்டிய நிலை என்னுடையது. இதனால் என்ன பலனென்றால், அவர்களுக்கு இப்போது நான் எந்த வேலை கொடுத்தாலும் எந்த எதிர்ப்புமின்றி, நேரத்திற்கு செய்து கொடுப்பார்கள். ஒருவேலை, பிரச்ச்னை தீர்க்க படாமல் இருந்திருந்தால், அவர்களின் ஒத்துழைப்பு எனக்கு இருக்காது, இதனால் வேலை தடைபடும், மேலிடத்திலிருந்து வரும் கேள்விகளுக்கு நான் பொறுப்பாக வேண்டும், எல்லாவற்றிக்கும் மேல் வேலையெல்லாவற்றையும் நானே செய்ய வேண்டி இருக்கும்.

உடல் மொழியின் புரிதல் மிக அவசியம். உடல் மொழியில் படிக்க நிறைய உண்டு, கற்றுக்கொள்ளவும் நிறைய உண்டு. அது தவறாக, மற்றவரை பாதிக்கும் வகையில் இருப்பின், நாம் நம்மை கவனித்து கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

அணில் குட்டி அனிதா:- ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்கட..அம்மணி அறிவுரைய..!! ஆனா அவங்க friend சொல்றது சரிதாங்க.. சரியான.."கருத்து கந்தசாமி' யா இருப்பாங்க போல.. எப்ப பார்த்தாலும் எதாவது உபதேசம் பண்ணிக்கிட்டு.. இவிங்கள திருத்த முடியாதுப்பா... சரி தாதஸ்..நீ உன் உபதேசத்தை ஆரம்பி-

பீட்டர் தாதஸ் :- You cant have rosy thoughts about the future when your mind is full of blues about the past.

மருமகளை பழிவாங்கிய மாமியார்

அணில்குட்டி அனிதா:- வாங்க வாங்க.. சூப்பர் மேட்டர்..!! பொங்கல் வந்தப்ப அம்மணி இந்த கதைய என்கிட்ட சொன்னாங்க.. கேக்கும் போதே இப்படி எல்லாம் கவியை பழித்தீர்த்துக்க முடியாமான்னு.. எனக்கு உச்சி குளிர்ந்து ரொம்ப சந்தோஷமா இருந்தது.. வாழ்க கவி மாமியார்!! உங்களுக்காக அம்மணிக்கு தெரியாம மேட்டரை லீக் அவுட் பண்றேன்.. நீங்களும் படிச்சி என்ஜாய் பண்ணுங்க..!!

அம்மணிக்கு கல்யாணம் முடிஞ்சு முதல் தலை பொங்கல், அவங்க மாமியார் வூட்டல புது நெல் குத்தி அரசி எடுத்து தான் பொங்க வைப்பாங்கலாம்.. அம்மணி வூட்டல அப்படி இல்ல.. புது அரசி பொங்கல் தான்.. என்ன பண்றது மாமியார் வூட்டுக்கு போயாச்சி இனி அவங்க சொல்றது தானே செய்யனும்... புது நெல் மட்டும் இல்ல, பொங்கல் வைக்க புது பானை, மற்ற காய்கள் செய்ய புது சட்டிகள் என்று எல்லாமே புதுசு தான்..

பொங்கலுக்கு மொதநாள், அம்மணியோட மாமியார் நெல்லை கொண்டாந்து அம்மணிக்கிட்ட குடுத்து “இந்தாம்மா..இத குத்தி அரிசி எடு..” ன்னு போய்ட்டாங்க.. உதவிக்கு வந்த ஓரகத்தியை.. “புதுபொண்ணு தான் செய்யனும் நீ இங்குட்டு வான்னு” கூட்டிக்கிட்டு போய்ட்டாங்க.. புதுசு சரி..அது என்ன நெல்லு குத்த கூட புது பொண்ணா.?. புள்ளைக்கு கல்யாணம் பண்ணாம இருந்தா எந்த புது பொண்ணை கூட்டி வந்து நெல்லு குத்தவைப்பாங்க.?! ஓவாராத்தான் இருக்கு புதுசு இங்க..ன்னு..கவி மனசுல நெனச்சிக்கிட்டு... உலக்கைய எடுத்துக்கிட்டு வந்து.. ட்ரை பண்ண ஆரம்பிச்சாங்க..

இங்க ஒரு ப்ளாஷ் பேக்.. அம்மணிக்கு ஒரு 13-14 வயசு இருக்கும்போது சம்பா கோதுமை தோல் எடுக்க அவங்க ஆயா உலக்கை கொடுத்து குத்த சொன்னாங்க.. அம்மணி குத்தன குத்துல.. உரல் உடையற நிலைமைக்கு போய்டுத்து.. அங்க வந்தாரு ஹீரோ அவங்க அத்தை பையன், அம்மணி நெல் குத்தறத பாக்க சகிக்காம.. அவங்க ஆயா உள்ள போன சமயம்..”.குடு நான் குத்தறேன்” ன்னு கேட்டதுதான்.. இது தான் சான்ஸ்னு “ரொம்ப தாக்ஸ் மாமா “ன்னு ஒரு வழிச்சல் சிரிப்போட.. கிழவி வந்தா கேவலமா திட்டுவாங்களேன்னு ஏரியாவை விட்டே காலி செய்துட்டாங்க..

வெளியில வந்த அவங்க ஆயா.. “வயசு ஆம்பல புள்ள! காலேஜ் படிக்கற புள்ளய கோதுமை குத்த விட்டுட்டு எங்க போய் தொலைஞ்சா இந்த வாயாடின்னு?!”.. கேக்க.. நம்ம ஹீரோ.. “ஆயா..விடுங்க..அந்த பொண்ணுக்கு உலக்கை புடிச்சி குத்த தெரியல கொஞ்சம் தானே நான் செய்து தரேன்னு.”.சொல்ல..கிழவி ஒருவழியா வாய மூடிச்சி..

நம்ம அம்மணிக்கு உலக்கை புடிச்சி குத்தவே தெரியாது, ஏமாத்தியே வளர்ந்துட்டாங்க.. இங்க மாமியார் என்னடான்னா.. இவ்வோளோ நெல்லை கொடுத்து அரசி எடுன்னா..எங்க..?!! அம்மணி மெதுவா.. கொஞ்சம் நெல்லை போட்டு பொறுமையா உரல் மேல படாம, நெல்லை குறிவைத்து குத்த ஆரம்பித்தார்கள். அப்பத்தான் எங்க இருந்து சேர்ந்தது ஒரு கூட்டம்னு தெரியல.. புது பொண்ணு நெல்லு குத்துற அழகை பார்க்க ஒரு கூட்டம் கூடியது.. கூட்டத்திலிருந்து ஒரு குரல், “அம்மாடி பார்த்து.. கைக்கு வலிச்சா கூட பரவாயில்ல.. உரலுக்கு வலிக்க போதுன்னு சொல்ல..” கவிக்கு.. காதுல பொக வந்தது.. இருந்தாலும் கூட்டத்தை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சி வச்சாங்க.

ஆஹா..நாம எஸ்கேப் ஆக வழி இல்லாம இப்படி ரவுண்டு கட்டி கிண்டல் பண்றாங்களே............நம்ம கழுத்துல தாலி கட்டின மவராசன் வந்து காப்பாத்த மாட்டாருன்னு..ஒரு லுக் விட.. எங்க.. அவரும் கூட்டத்தோட கூட்டமா நின்னு, “அவ எல்லாத்தையும் சீக்கிரம் கத்துக்குவா..ரொம்ப ஸ்பீட்.....ஸ்டார்டிங் டிரபுல் தான்..(கவியை புகழ்ந்து தள்ளராறாம்.!!) சரியாயிடும் “ என்று சொல்லி எஸ்கேப் ஆக.. கைப்பூ மாதிரி - ஆஹா இன்னைக்கு எல்லாரும் ஒரு முடிவுலத்தான் இருக்காங்களான்னு.. முடிந்தவரை கவனமா..நெல்லை குத்த ஆரம்பிச்சாங்க..

அப்ப ஆஜாரானாங்க அவங்க மாமியாரு, ஏண்டி செண்பகம், மாத்து உலக்க போடக்கூடாது ..என்று சொல்லவும்.. கவிக்கு ஒரு பெருமூச்சு.. நம்ம மாமியார் எவ்வளவு நல்லவங்க.. எனக்கு முடியலைன்னு யாரையோ வர சொல்லறாங்கன்னு சந்தோஷத்தோட குத்தறத நிறுத்த..

கூட்டத்தில இருந்து இன்னொரு ஒரு கிழம் (செண்பகம்) வந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு பீல்டுல குதிச்சிது. "வாடியம்மா..!! மாத்து உலக்க போடலாம்..?!! " கவிக்கு ஒன்னும் புரியல.. மாத்து உலக்க போடலாமா? "மாத்து உலக்கைன்னா?.. " ஆத்தா உன் மருமகளுக்கு மாத்து உலக்கைன்னா என்னான்னு தெரியாதாமா?.. சொல்லிவிட்டு சிரிக்க..கூட்டமும் கூட சேர்ந்து சிரித்தது..

கவிக்கு அசிங்கமா போச்சி..கவி மூஞ்சிய பாக்க சகிக்கல.. என்ன இந்த கிழம் இப்படி நம்மல நக்கல் பண்ணுது ஒரு வழி பண்ணனும்னு முடிவு பண்ணி.. “சரி சொல்லி தாங்க நான் போடறேன்” ன்னு சொல்லி கேக்க.. கிழவியும் அது ஒரு குத்து குத்திவிட்டு, இப்ப நீ குத்து.. இப்படி மாத்தி மாத்தி குத்தறதுதான் மாத்து உலக்கன்னு சொல்லி ...”ரெடி ஸ்டார்ட் “சொல்ல.. அம்மணிக்கு இங்க அள்ளு உட்டு போச்சி.. ஆஹா..நாம பொறுமையா குத்தினாவே சரியா வராது.. இதுல கிழவி ஜெட் ஸ்பீட்’க்கு குத்துது.. இதுல எங்க..நாம..என்று திரு திருவென்று விழிக்க.. மாமியாரு நடுவுல..புகுந்து.. ஆகட்டுமா..சீக்கிரம்..நிறைய நெல்லு இருக்கு பாரு.. இப்படியே நின்னா எப்ப வேல நடக்கறது..

ம்ம்.ஹம்..ஆஹா........ஆயா இப்படி ஒரு நெல் குத்தற வூட்டுல என்னைய கல்யாணம் பண்ணி குடுத்திட்டியே..ன்னு..மனசுக்குள் புலம்பிக்கொண்டே.. மனசை தளரவிடாமல்..கிழவியின் வேகதிற்கு தகுந்தாற்போன்று வேக வேகமாய் மாத்து உலக்கை போட்டு... அசத்த ஆரம்பிச்சாங்க கவிதா. பொங்கலுக்கு என்னவோ சூப்பர் அரசி ரெடி.. ஆனா அம்மணி நிலைமை தான் மோசமா போச்சி. அடுத்த 2 நாளு கைய தூக்க முடியாம..டாக்டர் கிட்ட போய் பெட் ரெஸ்ட் எடுக்கனும் ன்னு சொல்ற ரேன்ஞ்க்கு போய்ட்டாங்க.. அவங்க ஆயா ஒரு பக்கம். ."எப்படி வளத்த புள்ளைய இப்படி மாத்து உலக்க போட வச்சியிருக்கா பாரு அவ மாமியாரு.. காலம் பூரா நெல் குத்திறவங்களுக்கு கூட மாத்து உலக்க போடறது அவ்வளவு கஷ்டம்.. சின்ன புள்ள இந்த புள்ளைய இப்படி நெல் குத்த வச்சி படுத்த படுக்கை ஆக்கிட்டாங்களே’ன்னு புலம்புத்தள்ளிடாங்க..

ம்ம்..அம்மணிய எப்படி சூப்பரா அவங்க மாமியார் கவனிச்சி இருக்காங்க பாருங்க..அம்மணிக்கு வாய் எல்லாம் நம்ம கிட்ட தான்.. மாமியாரு..வூட்டுகாரர்ன்னு சொன்னா போதும்.. நடுங்கிடுவாங்க நடுங்கி.. J

பீட்டர் தாத்ஸ் :- The person who is not hungry says that the coconut has a hard shell.

சுற்றி சுற்றி வரும் சுடர் விளக்கு.......

நம்ம ராம் பாருங்க ரொம்ப தீவரிமா யோசிச்சி. என்னையும், அணிலையும் சிக்கவச்சியிருக்காரு.. சரி..சுடர் தானே ஏற்றி வச்சா போகுதுன்னு கிளம்பியாச்சி..

ராம் ஆனா சின்ன குறை.. அணில நீங்க ஒரு கேள்வி கூட கேக்கலன்னு கோச்சிக்கிட்டு உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு உட்கார்ந்து இருக்கு...நீங்களே சமாதானம் செய்துக்கோங்க..அதுக்கிட்ட நான் ரொம்ப வச்சிகறது இல்ல.. டூ மச்சா பேசும்.. அப்புறம் நான் டென்ஷன் ஆவேன்..தேவையா??

1) இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. குறளுக்கு அர்த்தம் தெரியுமாக்கா?
ம்ம்.. தெரியாமையா?.. என்னவோ உள்குத்து இருக்கு இருந்தாலும் பரவாயில்லை.. சொல்லறேன். நல்ல பழம் இருக்கும் போது காயை யாராவது சாப்பிடுவார்களா?. நல்ல வார்த்தைகள் இருக்கும் போது கடினமான வார்த்தைகள் யாராவது பேசுவார்களா?..

ராம் ஆனா....எல்லாருக்கும் நல்ல கனிந்த பழம் வாழ்க்கையில் கிடைக்கறது இல்லை அப்படிங்கறது உண்மை. அது கிடைக்காதவர்கள் மட்டுமே அதை உணர்வார்கள். கிடைத்தவர்கள் கிடைக்காதவர்களை பார்த்து எப்போதும் ஏன்..இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று மிக எளிதாக கேட்டுவைப்பார்கள்..

2) அணிலு அணிலுன்னு சொல்லுறீங்களே... அது உங்க மல்டிப்பிள் பர்சனாலிட்டியிலே ஒன்னா?
நிறைய நண்பர்களுக்கு அந்த சந்தேகம் இன்னுமும் இருக்கு.. சில விஷயங்கள் சஸ்பென்ஸ் ' ஆ இருந்தாத்தான் நல்லா/சுவையா இருக்கும்.. அணில் யாருன்னு தெரியாம இருக்கட்டுமே...

3) இப்போ இருக்கிற வட்டத்தை தாண்டி நீங்க ரசிக்கிற விஷயங்கள் என்னென்ன?
கணக்கில் அடங்காதவை.. வானம் அளவுன்னு சொல்லலாம்.. அதற்காக நான் புலம்புவதில்லை... இன்னமும் நிறைய காலங்கள் இருக்கிறது நான் ரசிக்க என காத்திருக்கிறேன்.

4) இன்னவரைக்கும் நீங்க நினைச்சு நினைச்சு சிரிக்கிற சம்பவம் என்ன? (அதை படிச்சா எங்களுக்கும் சிரிப்பு வரணும்)
ம்ம் இருக்கு, என்னுடைய சித்தப்பா பையன் கழுதையை பார்த்ததே இல்லை. நாங்கள் ஒரு முறை டூர் போன போது, கன்னியாகுமரியில் எல்லோரும் ரூம்மில் ரெடியாகி கொண்டிருக்க நானும் அவனும் கிளம்பி வெளியில் வந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கழுதையை பார்த்தான். அவனுக்கு ஒரு 7-8 வயது இருக்கும். கழுதையை பார்த்ததே இல்லை என்பதால் மிக ஆச்சிரியப்பட்டு ஆர்வத்தோடு, அதன் அருகில் சென்று சுற்றி சற்றி பார்த்தான்.. அது பின்புறம் இருந்து உதைக்கும் என்பதும் அவனுக்கு தெரியாது. இவனும் அது பின்னால் நின்று அதன் அழகை ரசிக்க, இவனின் இம்சை தாங்க முடியாமல் கழுதை கோபம் வந்து..பின்னாலிருந்து உதைக்க ஆரம்பித்தது.. .உதை வாங்கி அழுது கொண்டே... அக்கா இது என்ன பின்னாடி இருந்து உதைக்குது...? என்று. என்னிடம் கேட்க, எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவன் கழுதையிடம் உதை வாங்கியதை எல்லோரிடமும் சொல்லிவிட, டூர் முழுதும் அவனை எல்லோரும் அதை வைத்தே கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கி விட்டடர்கள்.

இன்னொரு சம்பவம், என்னுடைய மாமா ஒருவர், இருட்டில் அவசரத்திற்கு ஒதுங்க.. இருட்டில் படுத்து கொண்டிருந்த மாடு எழுந்து இவரை உதைத்து விட்டு ஒட ஆரம்பிக்க இவருக்கு கோபம் வந்து அதை அடிக்க துரத்தினார். ஆத்திரத்தோடு இவர் ஓட , அது ஒட.....ஒரு கட்டத்தில் அவர் கட்டியிருந்த லுங்கி கழண்டு விழ.. உள்ளே அவர் ஒன்றுமே போடவில்லை என்பதை உணராமல் அதை அடிக்கும் வெறியுடன் ஓட..இவருக்கு பின்னால் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஓடி அவர் மானத்தை காப்பாற்ற வேண்டியாதாகி விட்டது.

லுங்கி அவிழ்ந்து விழவது கூடதெரியாமல் ஓடிய மாமாவை நினைத்தால்.. ஹைய்யோ .ஹைய்யோ..

இந்த 2 நிகழ்ச்சிகளை எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பை அடக்க முடியாது.


5) ஒரு கற்பனை:- டயம் மிஷின் கிடைச்சு அதிலே நீங்க பின்னோக்கி போகலாமின்னு சொன்னா எந்த வயசை தேர்த்தெடுப்பீங்க?
சில சமயங்களில் என் அப்பா என்னிடம் திரும்ப வந்துவிட்டது போல் கனவுவரும், அப்படி அவர் வந்தால் என் குழந்தை அவரிடம் வளர வேண்டும் என்று அதிகம் நினைத்ததுண்டு....அதனால் எனக்கு குழந்தை பிறந்ததிலிருந்து - நேற்றுவரை பின்னோக்கி செல்ல ஆசைப்படுகிறேன்...

Photobucket - Video and Image Hosting
நம்மை கேட்டவருக்கு நாம பதில் சொல்லியாச்சி, இப்ப நாம யாரை சுடர் ஏற்ற சொல்லலாம்னு அணிலும் நானும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணோம்.அதான் வாரா வாரம் ஒருத்தர கேப்பங்கஞ்சி குடிக்க வைக்கரோமே அதே மாதிரி சுடர் ஏற்ற வைத்து விட்டால் போகுது என்று.. பட்டென்று நமக்கு மாட்டியவர் மா.சிவகுமார் அவர்கள். இவரிடம் சுடர் ஏற்ற வர சொல்லி கேட்க நினைப்பவை

1. எப்படி உங்களால், எழுத்து, வியாபாரம், நண்பர்கள், பிற பொது பணிகள், வெளி ஊர் பயனம் என்று எல்லாவற்றையும் ஒருவித நிதானத்துடன், தடையில்லாமல் செய்ய முடிகிறது?.

2. உங்களிடம் அதிகம் கவனித்தது, உங்களின் perfection. அதற்கு காரணம் என்ன என்று எதை சொல்வீர்கள். உங்களின் கல்விமுறை, வளர்ப்பு முறை, இல்லை உங்களை நீங்களே தயார் செய்து கொண்டீர்களா?

3. உங்களின் எல்லா பதிப்புகளுமே..மிக சிறந்தவை, பயனுள்ளவை என சொல்ல கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆனால் அதிகமாக யாரையும் சென்று அடையவில்லை என்பது எங்களுடைய கனிப்பு. பயனுள்ள பதிவுகளை படிப்பவர்களை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.

4. ராகவன் சார் - பதிவுகளுக்கு பின்னூட்டமே இல்லை அதனால் போலி ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார் மற்றும் அவரை குறை கூறி வரும் பலர் போலி பெயர்களில், போலி பதிவுகள், பின்னூட்டங்கள் போடுகிறார்கள்- இது பற்றி உங்கள் கருத்து.

5. எப்போதும் சீரியசாக இருக்கும் உங்களை, நகைசுவை பதிவு ஒன்று போட சொன்னால் போடுவீர்களா?.. போடுவேன் .என்றால் எப்போது?. இல்லை என்றால் ஏன்?

அணில் குட்டி அனிதா:- இதை கேக்க யாருமே இல்லையா? கவிதாக்கிட்ட நான் இருக்கேன் தான் பேரு ஆனா என்னைய யாருமே கண்டுகறது இல்ல.. ராமு அண்ணாச்சி பாக்கும் போது மட்டும் என்ன அணிலு எப்படிக்கீறன்னு? ன்னு கேக்கறீங்க ஆனா.. பாருங்க என்னைய ஒதுக்கி வச்சிட்டு அம்மணிய மட்டும் கேள்வி கேட்டு இருக்கீங்க.. நல்லா இல்ல சொல்லீட்டேன்.. எங்க தல..கைப்புள்ள இருந்து இருந்தா இப்படி ஒரு நிலைம எனக்கு வந்து இருக்குமா?.. ம்ம்..ப்ளாகர்க்கு வந்ததவிட..ஒரு பைலட் ஆவோ..இல்ல..ஒரு பிரைம்மினிஸ்டராவோ ஆகி இருக்கலாம்.. ஆகயத்துல பறந்தும்/ சோனியா மேடம் சொல்லறத கேட்டாவாது சந்தோஷமா இருந்து இருப்பேன்.. இங்க வந்து அசிங்கப்பட்டு போய் கிடக்கேன்.. ம்ம்..எங்க. இனிமே தொடர் உண்ணாவிரதம் இருந்தாவது என்னோட பலத்தை காட்டப்போறேன்..... (ஆனா இது கவி வீட்டுல மட்டும் தான்.. உங்கவீட்டுக்கு வந்தா ஒரு வாய் சோறு போடுங்க சாமியோவ்!!!)..

பீட்டர் தாதஸ் :- No problem can withstand the power of sustained creative thought.

கேப்பங்கஞ்சி with ப்ளாக் நண்பர்களுடன் - சந்தோஷ்

புது முயற்சியாக இன்றைய கேப்பங்கஞ்சி'யில் எங்களுடன், நம் பிளாக் நண்பர்களும் சேர்ந்து ஒருத்தரை உண்டு இல்லை என்று ஆக்கியிருக்கிறோம். அவர் வேறு யாருமில்லை..எல்லா விதமான படைப்புளையும் தன்னுடைய நகைசுவை பாணியில் மிக எளிமையான தமிழ் நடையில் தந்து கொண்டிருக்கும் ஒரு “easy going” personality". எதற்கும் டென்ஷன் ஆகாமல்..நக்கலாக பேசி நம்மை டென்ஷன் ஆக்கிவிடும் நல்லவர்.. பார்போம் எங்கள் கேள்வியால் அவர் டென்ஷன் ஆகிறாரா இல்லை அவர் பதிலால் நம்மை டென்ஷன் ஆக்குகிறாரா.. இதோ..நம்மிடையே..இன்று.. “சந்தோஷத்துடன் சந்தோஷ்

கார்த்திக்ஜெயன்த்:- ஏன் பிளாக்கை துவக்கினீர்கள்? எழுதுவதில் முழுமை அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? எப்போதாவது எழுத்திற்க்காக வருத்தப்பட்டதுண்டா?
பொதுவா பெரிய பெரிய பதிவர்கள் மாதிரி தமிழ் தொண்டு ஆற்ற வேண்டும் அப்படின்னு எல்லாம் கண்டிப்பா நான் பதிவை துவங்கவில்லை. இங்க வந்த பிறகு என்னுடைய தனிமையை போக்கிக்கொள்ள பதிவுகள் பெரிதும் உதவி இருக்கின்றன. மேலும் எனக்கு புதுசு புதுசா ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் தொடர்ந்து ஒரே வேலையை செய்து கொண்டு இருந்தால் bore அடித்து விடும். பதிவு எழுத ஆரம்பித்தால் படிக்க வேண்டும் ஏதாவது விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் புதுசு புதுசா ஏதாவது கற்றுக்கொள்ளலாம் அப்படிங்கிற ஆசை தான். இதுவரையில் நான் பதிவு எழுதியதற்கு வருந்தியது இல்லை ரொம்ப மகிழ்ச்சி தான் அடைந்து இருக்கிறேன். நிறைய நண்பர்கள் பல்வேறு வகையான மேன்மையான சிந்தனனகளை உடைய நண்பர்கள் கிடைச்சி இருக்காங்க இதுக்கு எல்லாம் ரொம்ப குடுத்து வெச்சி இருக்கணும் யாராவது வருத்தப்படுவாங்களா என்ன?

மதுரா:-.. சந்தோஷ் உங்க பக்கம் வர்ற எல்லாரையும் சந்தோஷமா அனுப்புறீங்களே இந்த ஜாலியான பேச்சு யாருக்கிட்ட கத்துக்கிட்டீங்க?
பொதுவா எங்க அப்பா வழி வந்த எல்லாருக்கும் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு அதிகம். சீரியசா இருந்து என்னத்த சாதிக்கபோகிறோம்.. நாம சந்தோஷமா இருந்து, அடுத்தவங்களையும் சந்தோஷமா வச்சிக்கனும் அப்படீங்கறது தான் நம்ம பாலிசிங்க.. நம்ம நகைசுவை உணர்வு அதுக்கு கொஞ்சம் உதவி செய்துங்க.. அவ்வளவுதான்..!!!

ராம் :- எப்பிடி உங்களுக்கு மட்டும் தோணுது... நீயூஸ் பேப்பர் சைட்லே போயிபடிச்சிட்டு அதை பரபரப்பு தலைப்பை போட்டு பதிவே ஒப்பேத்துறது.
என்ன பண்றது ராம் பெருமையா எழுதறதுன்னு வந்துட்டேன். சொந்தமா சரக்கு எதுவும் இல்ல இது மாதிரி எதாவது ஒப்பேத்துனா தான் உண்டு. பதிவு எழுதுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்னாடி பதிவு அப்படின்னா என்னான்னு தெரிந்து கொள்ள இந்த பக்கம் போனேன் அவங்க சொன்னாங்க பதிவுன்னா சில சமயம் நிகழ்வுகளின் மீது உங்களது கருத்துக்களை பதிவதுன்னு சொல்லி இருந்தாங்க சரி நக்கல் அடிக்கறது தான் நமக்கு நல்லா வருமே அப்படின்னு மெய்டேன் பண்ணிட்டு வரேன் :))

நாகை சிவா:-.இந்தியாவில் MNC வேலை பார்த்துக் கொண்டு அயல்நாட்டில் வேலை செய்பவர்களை ஏதோ தேச துரோகி போல் விமர்சிப்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?
சொல்லுறவங்க என்ன செய்தாலும் அதில் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பாங்க Just Ignore them.

கவிதா:- இளைஞர்களின் "அமெரிக்க" கனவு தேவையானதா?
இன்றைய இளைஞர்களின் அமெரிக்க கனவு நேற்றைய இளைஞசர்களின் கனவுகளில் இருந்து வேறு பட்டது. இப்ப எல்லாம் பெரும்பான்மையானோர் அங்க போயி நிறைய கத்துகிட்டு வந்து அதை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்று தான் இருக்கிறார்கள். மேலும் "Return to India" தான் இப்பொழுது இங்க பெரிய Buzz word. நிறைய பேர் அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள், செயல் படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் http://www.nriol.com/returntoindia/index.asp அவர்களுக்கு உதவ இது போன்ற தளங்கள் கூட வந்து விட்டன.

ஜொள்ஸ்:-. சந்தோஷ் கதறக் கதற கடலை வறுப்பீங்களாமே அப்படியா ?
பாண்டியன்னே வாலிப வயசுல இது எல்லாம் சகஜம் கண்டுகப்படாது. கடலை போடுவேன் ஆனா எதிர் முனையில் இருக்குறவங்க கதறுவாங்களான்னு தெரியலை. இதுல நம்ம பாலிஸியே "கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே" அப்படிங்கிற கீதையின் வரிகள் தான் (இதுக்கு மட்டும் சரியா பயன்படுத்திகிங்கடா கீதையை.)

தேவ்::-. சந்தோஷ், திருமணம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? அமெரிக்காப் பொண்ணுங்க இந்தியப் பசங்களை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணா ஒத்து வருமா? ஓங்க கருத்து..
அது ஒரு இனிமையான சுமை இருவருக்குமிடையே புரிதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும் வரை. எல்லா மனிதர்களுக்கு உண்மையான உள் மனது ஒண்ணு தான். அவன் அமெரிக்காகாரனாக இருந்தாலும் சரி பாகிஸ்தான்காரனாக இருந்தாலும் சரி. எனவே புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால் போதும் உலகத்துல யார் கூடயும் வாழ்க்கை நடத்தலாம்.

கைப்புள்ள :- அமெரிக்காவில கடந்த சில வருஷமா இருக்கீங்க. இது வரை அங்கே உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம்/நிகழ்வுன்னு எதாவது இருக்கா?
நிறைய இருந்தாலும் இதை மறக்கவே முடியாது. வந்த புதுசுல நாங்க பஸ்ல ஆபீசுக்கு போவோம். அதுல எங்களோட(எங்க பஸ்ல) ஒரு பொண்ணு தினமும் வரும். செம பிகர் ஹி ஹி... அதை பாக்கவே உலகமே அழிஞ்சாலும் 8 மணி பஸ்ஸை புடிச்சிடுவோம் :)).. முதலில் ஒண்ணுமே நடக்கலை கொஞ்ச நாள் கழிச்சி அவங்க சிரிக்க நாங்க சிரிக்க சரி நடப்பது நடக்கட்டும் அப்படின்னு ஒரு நாள் துணிந்து பேசினோம் அந்த அம்மா எங்களை பாத்து என்ன புள்ளங்களா இங்க புதுசா பள்ளிகூடம் எதுனாச்சும் தொறந்து இருக்காங்களா என்ன தினமும் போயிட்டு வரீங்கன்னு கேட்டாங்க? என்னது பள்ளிக்கூடமா நாங்களா? அன்னிக்கு நிறுத்தினோம் பஸ்ல போறதை.

மதுரா:-.விவாசாயத்தில் இரண்டாவது பசுமை புரட்சி பத்தி ஒரு நல்ல பதிவு போட்டீங்க. ஆனா முடிவா என்ன பண்ணனும் விவசாயிகளுக்குன்னு சொல்றீங்கன்னு தெரியலையே. சொல்றீங்களா?
இது வந்து ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தி. எனக்கு அவ்வுளவு விவசாய அறிவு எல்லாம் கிடையாது. என்னுடைய இந்த பதிவின் நோக்கமே இதை படிச்சி பிறகாவது விலை கொஞ்சம் அதிகம் ஆனாலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்படும் பொருள்களை மக்கள் ஊக்குவிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு தான். ஆனா நீங்க சொன்ன மாதிரி இன்னும் சிலரும் இதே கருத்தை சொல்லி இருக்காங்க. அதுல என்னோட கருத்து என்னானா பசுமை புரட்சி அப்படி இப்படின்னு சரியான முறையில் ஆராயாமல் ஏறகனவே விவசாய நிலங்களை நாசம் செய்தாகி விட்டது. அதன் தாக்கம் வெளி வந்து கொண்டு இருக்கும் பொழுதே இரண்டாம் பசுமை புரட்சிக்கான ஆயத்தங்களை அரசு எடுத்த்க்கொண்டு இருப்பது வருந்தத்தக்கது. ஏற்கனவே இயற்கை தாயை பல்வேறு வகையில் நாம் நாசம் செய்து விட்டோம் இப்பொழுதாவது உணர்ந்து அதற்கான பிராயத்தங்களை செய்ய வேண்டும் இல்லையா? இங்க அமெரிக்காவில் மக்கள் அதை உணர ஆரம்பித்து விட்டனர். இயற்கையான முறையில் பயிர் செய்யப்படும் மூலப்பொருட்களையும், எந்த வகையான செயற்கை மருந்துகள் அளிக்கப்பட்டு வளர்க்கப்படாத மிருகங்களின் மாமிசங்களை கொண்டு தயாரிக்கும் Chipotle போன்ற உணவகங்கள் பெருகி வருகின்றன மக்களின் ஆதரவும் அவர்களுக்கு கணிசமான அளவு இருக்கிறது. நம்ம ஊரிலும் இது மாதிரி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவுக்கு ஆதரவு பெருக வேண்டும். இயற்கையை காப்பாற்ற இது ஒன்றே வழி. அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை நமக்கு நாமே திட்டம் தான் இதுக்கு உதவும்.

ராம் :- சர்வேசன் வாக்கெடுப்பிலே 2வது இடத்திலே கெலிக்க எத்தனை கள்ள ஒட்டு போட்டிங்க.... :)
அய்யோ போடும் பொழுது கணக்கு எடுக்க மறந்துட்டேனே. அடுத்த தபா ஒழுங்கா கணக்கு எடுத்து சொல்றேன் தலை :)..

அணில் :- நீங்க எழுதி என்னத்த சாதிக்க போறீங்க?
அணிலு ரொம்ப கேள்வி கேக்குற தனியா மாட்டுன கைமா தான்டி நீ இன்னிக்கு. அந்த மாதிரி பெரிய பெரிய நோக்கம் எல்லாம் எதுவும் இல்லிங்கோ. எதோ என்னால நாலு பேர் சிரிச்சிகிட்டு இருந்தா போதும் அதுவே சாதனைன்னு நினைக்கிறேன்.

துர்கா:- இந்திய அரசியல் பற்றி உங்களின் பொதுவான கருத்து. உங்களின் எதிர்பார்ப்பு அல்லது மாற்றம் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இந்திய அரசியல் மட்டும் இல்ல பொதுவா உலகத்துல ஜனநாயகமே கேலிக்கூத்து ஆகிக்கொண்டு வருகிறது. மக்கள் தான் தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள் என்கிற நிலைமை மாறி ரவுடிகள், தீவிரவாதிகள், வெளிநாட்டு கம்பெனிகள், வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தான் இப்பொழுது பெரும்பான்மையான நாடுகளின் தலைவர்களை தீர்மானம் செய்கின்றன. ஒரு சில சமயங்களில் மன்னர் ஆட்சிக்கும் இப்பொழுது இருக்கும் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை மன்னர் ஆட்சியிலாவது மன்னரிடம் மட்டும் பயம் இருக்கும், ஆனால் இப்பொழுது கட்சி உறுப்பினர் ஆட்டை வைத்து இருக்கும் நாய்கள் எல்லாம் மக்களை பார்த்து குரைக்கின்றன. :(( போகிற போக்கை பார்த்தால் மன்னர் ஆட்சியே எவ்வுளவோ மேல் என்று தோன்றுகிறது.

நாகை சிவா:-.வாகனங்கள் மேல் உங்களுக்கும் தனிப்பட்ட பிரியம் உண்டு என்று எண்ணுகின்றேன். அதை பற்றி சற்று கூறலாமே?
அமாம் எனக்கு Bikes மேல ரொம்ப craze அதுவும் எனக்கு புடிச்ச விஷயமே வேகம் தான். அது பைக் ஆனாலும் சரி கார் ஆனாலும் சரி வேகமா போகணும். இங்க போலீஸ் எல்லாம் ரொம்ப மோசம் புலி 60 speed limit இருக்குற இடத்துல 90ல தான் போறேன் அதுக்கே டிக்கெட் குடுக்குறாங்க. நம்ம வாங்குற 5, 10 டாலருக்கு டிக்கெட் கட்டியே தாங்கலை இப்பதான் கொஞ்சம் அடங்கி இருக்கேன் :))..

ஜொள்ஸ்:-. உங்களைப் பத்தி ஏதாச்சும் கிசு கிசு ?
கிசு கிசு எல்லாம் பெரிய பெரிய ஆளுங்களை பத்தி வருவது நான் எல்லாம் almost nothing in this world :)) அதனால் என்ன பத்தி அது மாதிரி எதுவும் இல்ல :)).

கைப்புள்ள:- உங்க வாழ்க்கையில் செய்யனும்/சாதிக்கனும்னு நெனச்சி வச்சிருக்கற விஷயங்கள்.
சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும் அப்படிங்கறது தான் என்னோட கனவுகளில் ஒன்று. இன்னும் சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை அந்த பாதையில் போக.

தேவ்::-உங்க பதிவுலக வாழ்க்கையில் உங்களை மிகவும் பாதித்த பதிவர் யார்? அதுக்கு என்னக் காரணம்? (அதாவ்து உங்களுக்கு ரொம்பவும் கடுப்பேத்துன பதிவர்ன்னு வச்சுக்கங்களேன்.)
கடுப்பேத்துனவங்க அப்படின்னு எல்லாம் யாரும் இல்ல. டோண்டு சார் முதல்கொண்டு அனைவரிடமும் கருத்து பரிமாற்றமே தவிர வேற எதுவும் இல்லை. ஆனா தனிப்பட்ட முறையில் ஒரு பெண் பதிவர் என் பின்னால், என்னைப்பற்றி தவறாக பேசி என்னை மிகவும் காயப்படுத்தி விட்டார். இதுல ஒரு கொடுமை என்னான்னா அவரை நான் சந்தித்தது கூட கிடையாது. ஒரு 5 - 10 முறை கூகுலி உரையாடி இருப்பேன், கடித பரிமாற்றம் நடந்து இருக்கிறது அவ்வுளவு தான். என்னையும் என்னுடைய வளர்ப்பையும் பற்றி தவறாக பதிவுலக மக்களிடம் பேசிவிட்டார் அந்த பெண்ணுரிமைவாதி. இதுல என்ன கொடுமை அப்படின்னா இப்பொழுது பேசினால் கூட என்மீது ரொம்ப அக்கரை உள்ளது போல நடிப்பார் என்ன உலமடா இது? அதுல இருந்து பெண் பதிவர்கள் அப்படின்னாலே கொஞ்சம் அலர்ஜி.

கார்த்திக்ஜெயன்த்:- சிறிது காலமாக நீங்க: அமெரிக்காவில் இருந்துவருகிறீர்கள், உங்களின் தனிப்பட்ட & தொழில் சம்பந்தமான அனுபவத்தை சொல்லுங்கள்-
தொழில் முறையில் எனக்கு இந்த பயணம் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்து உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் ஏராளமாக கற்றுக்கொண்டு இருக்கிறேன். தொழில் முறையில் நான் படித்து வியந்த Technologyயில் எல்லாம் ரொம்ப சாதாரணமா இருக்கு. என்னுள் இந்த பயணம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவை பற்றியும் அதன் கலாச்சாரம் பற்றியும் நான் கொண்டு இருந்த பலவகையான எண்ணங்கள் தவறு என்று இதில் தெரிந்து கொண்டேன்.

தேவ்::- உங்கள் பதிவுக்கு இருக்கும் பெண் ரசிகைகளை எப்படி சமாளிக்கிறீங்க?
நான் எல்லாம் நீயூஸ் பேப்பரை கட் பண்ணி பேஸ்ட் செய்ற டிக்கெட்டு. நம்ம பக்கம் மக்கள் தெரியாம வந்தாத்தான் உண்டு ரசிகைங்க அப்படின்னு எல்லாம் காமெடி பண்ணிகிட்டு.

துர்கா:- "பெண்கள் உடைகள் ஆண்களை கவர உடுத்துகிறார்கள் " என்பதை பற்றி உங்கள் கருத்து.
பெண்கள் மட்டுமில்லிங்க பொதுவா மக்கள் உடை உடுத்துவதே To attract the opposite sex இதை பிரபல மனோதத்துவ நிபுணர்களே உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஜொள்ஸ்:-. எப்படீங்க புத்துல இருந்து கெளபுற மாதிரி அப்பப்போ உங்களுக்கு சமுதாயக்கோபம் கெளம்புது ? என்னா மேட்டரு?
பொதுவாவே எனக்கு கொஞ்சம் கோவம் அதிகம்.. அதிலும் கொஞ்சம் சமூக அக்கரை உண்டு. குட்டியூண்டு அளவு நேர்மையா நடந்து கொள்ள முயற்சி செய்வேன்(இதுக்கு காரணமும் என்னோட நண்பர்கள் தான் முக்கியமா என்னோட மிக நெருங்கிய நண்பன் திருமால் அப்படின்னு ஒருத்தன். என்னோட நண்பர்கள் பெரும்பான்மையானோர் பற்றி இங்க சொல்லி இருக்கேன். என்னோட வாழ்கை நல்ல பாதையில் போயிக்கொண்டு இருக்கிறது அப்படின்னா என்னோட குடும்பத்துக்கு அடுத்த படியா இவங்களுக்கு அதுல மிகப்பெரிய பங்கு உண்டு.) .. எதிர்வகையா நடக்கும் பொழுது கொஞ்சம் கோவம் வருது வேற எதுவும் இல்ல.

மதுரா:-.ஒரு ஆப்ப்ள் ஐஃபோன் ஐநூறு டாலர். ஒரு பித்தளை குத்துவிளக்கு நூறு டாலர். அப்படின்னா ஒரு அப்பிள் ஐஃபோன் ஓனர், எத்தனை குத்துவிளக்குக்கு ஓனர் ஆகலாம்? (பரிசு: கரெக்டா பதில் சொன்னா நிறைய பேர் வீடு புகுந்து அடிப்பாங்க! :) ...)
ஒரு ஆப்பிள் ஜபோன் ஓனரு ஒரு குத்துவிளக்கோட இருந்தா தான் வெளங்க முடியும் இல்லாட்டி ஆப்பிள்விக்க தான் போக வேண்டி இருக்கும்.

தேவ்::- அமெரிக்காப் போய் வீட்டுக்குத் தெரியாம நீங்க செஞ்ச சின்ன பெரிய தப்பு என்ன?
டிஸ்கோவுக்கு போயிருக்கேன் அதை சொன்னது இல்லை.

கவிதா:-நாம் அமெரிக்கர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஒரு விஷயம்.
அருமையான வாழ்க்கை முறை அவர்களுடையது. குடும்பம் மற்றும் Personal life தான் முக்கியம் அதற்கு பிறகு தான் அலுவல். ரொம்ப planned life அவர்களுடையது எதையும் நிதானமாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள்.

நாகை சிவா:-.சந்தோஷ் பலர் உங்களை வீடு புகுந்து அடிச்சி இருக்காங்க, அது எல்லாருக்கும் தெரிந்த செய்தி தான். நீங்க தெரிந்தோ தெரியாமலோ யாரு வீட்டுக்கும் போய் அடி வாங்கி இருக்கீங்களா? அப்படி இருந்தால் அதை பற்றி சொல்லுங்களேன்?
நான் எனக்கு பிடித்து இருந்தால் மட்டுமே பின்னுட்டம் இடுவேன். ஏடாகூடமா அவ்வுளவா பின்னுட்டம் எதுவும் போட்டது இல்ல. நான் எல்லாம் சாதா பதிவர் புலி கொஞ்சம் பிரபலமான ஆளா இருந்தா இது நடந்து இருக்கும் எனக்கு இதுவரைக்கும் அது மாதிரி எதுவும் நடந்தது இல்ல.

துர்கா:- தமிழ்மணம் அரசியல் பற்றி உங்கள் கருத்து? நல்ல ப்ளாக் பதிப்புகளுக்கு,என்ன சாத்தியக்கூறுகள் நீங்கள் சொல்ல நினைக்கிறீர்கள்?
அரசியல் எல்லாம் ஓ.கே, அதுல இருக்குற ஆட்கள் சாதாரண மக்களை இம்சை பண்ணாம எப்படியே அடிச்சிகிட்டு சாவுக யாரு என்ன கேக்க போறாங்க. நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இல்லையே தவிர மக்கள் தேடிப்போயி படிக்கிறாங்க. இதுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் அப்படின்னா குமரன், மா.சிவகுமார், பாஸ்டன் பாலா, இட்லிவடை, ஊசி போன்றவர்களின் பதிவுகளை சொல்லாம். உண்மையான திறமையை எப்பவுமே மறைக்க முடியாது.

கைப்புள்ள:- ஒரு சினிமா நடிகர்/நடிகையிடம் கேக்கற மாதிரியான கேள்வி : நீங்க சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆகலைன்னா என்ன வேலைக்குப் போயிருப்பீங்க?
என்னோட dream job வந்து Genetic Engineer ஆக வேண்டும் என்பது தான். +2 ல ஆடிய ஆட்டத்தால் காலேஜ் சீட் கிடைக்கிறதே பெரிய குதிரை கொம்பா போச்சி. அந்த வேலையும் அப்படியே போச்சி. மத்தபடி Software Engineer ஆகவில்லை அப்படின்னா மாடு தான் மேச்சிகிட்டு இருந்து இருப்பேன் :))..

கவிதா:- உங்களின் மற்ற ப்ளாக்ஸ் பயாஸ்கோப், sqlspy பற்றி சொல்லுங்க
பயஸ்கோப் சும்மா படம் காட்டுவதற்கு. SQLSpy என்னோட ஆங்கில பதிவு SQL Server பற்றி எனக்கு இருக்குற கொஞ்சம் நஞ்ச அறிவை எழுதி வெச்சிகலாம் பின்னாடி மறந்தா இங்க வந்து படிச்சிகலாம் அப்படின்னு எழுத ஆரம்பித்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அதில நிறைய எழுதணும்.

கார்த்திக்ஜெயன்த்:- கடைசியாக, நீங்கள் இங்கேயே தங்கவிட வேண்டும் என்று நினனக்கிறீர்களா? அல்லது திரும்பி நல்லதை நோக்கி செல்ல நினைக்கிறீர்களா?. உங்கள் கருத்தென்ன?
கண்டிப்பாக நமக்கு இந்த ஊர் ஒத்துவராது. என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தாங்க. என்னங்க ஒரு காரும் கார்பெட் போட்ட வீடும் கிடைச்சிட்டா போதுமா? எங்க ஊரில் நான் தான் முதல் தர குடிமகன் அடிச்சாலும் புடிச்சாலும் நம்ம சொல்றதை அங்க மதிப்பாங்க. இங்க ஒரு பையன் நம்மளை மதிக்க மாட்டான். என்ன தான் ஜல்லி அடிச்சாலும் இங்க நம்ம மூன்றாம் தர குடிமக்கள் தான் வெள்ளைக்காரன் அளவுக்கு மரியாதை நமக்கு கிடைக்காது இங்க.


சந்தோஷ் சொல்லிய தத்துவம் :-Failure Means Delay Not Defeat

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் - தேவ்

இன்றைக்கு நம்ம கேப்பங்கஞ்சி ய குடிக்க வந்து இருப்பவர், வ.வா.சங்கத்தின் முக்கிய உறுப்பினர், சங்கத்தை தொடங்கிய முதல் சிங்கம் “தேவ்” அவர்கள்.
தேவின் படைப்புகள் கவிதை, கதை, கலாய்த்தல் என்று பல பரிமாணங்கள் இருந்தாலும், அவரின் கதைகள் முதல் இடத்தை பிடிக்கும், மிக யதார்த்தமாக அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை யார் மனதும் புண்படாதவாறு சொல்லுவதில் வல்லவர். இதோ தேவ் நம்முடன்..

வாயை புடுங்கற ரவுண்டு:-

கவிதா:- வாங்க தேவ், எப்படி இருக்கீங்க?. உங்களின் ப்ளாக் ஆர்வம் எப்படி வந்தது..?
நல்லா இருக்கேங்க. தலைவர் தாங்க காரணம்.. ரஜினி ரசிகர்கள் யாகூ குழுமம் மூலம் பதிவுலகத்தை எட்டிப்பார்த்து.. தட்டு தடுமாறி நுழைஞ்சு.. தமிங்கலத்துல்ல தள்ளிகிட்டு இருந்தவனை நம்ம நண்பரும் எழுத்தாளருமான ரஜினி ராம்கி தட்டிக் கொடுக்க தலைக்கேறி.. இப்போ தட்டு தட்டுன்னு பதிவுகளைத் தட்டிகிட்டு இருக்கேன்.. ஆங்.. ஆர்வம்ன்னு நீங்க சொல்லுறீங்க.. நான் இன்னும் ஆர்வக் கோளாறுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்கேன்.

கவிதா:- வ.வா.சங்கம் தொடங்கியவர் நீங்கள், சங்கம் பற்றி நிறைய கிசு, கிசு வருகிறதே..அதைப்பற்றி -
சங்கம் பக்கத்துல்ல சிரிக்க... சிரிக்க மட்டுமேன்னு ஒரு கேப்ஷன் போட்டிருப்பாங்க... ஒரு வேளை அதனாலத் தான் இவ்வளவு கிசுகிசு வருதோ...

கவிதா:- ஷில்பா செட்டி வெளிச்சத்தில் இருப்பதால் அவரின் இனவெறி தாக்குதல் பற்றி பெரிதாக பேசப்பட்டு, செய்தவரை வேலையை விட்டே அந்த நாடு தூக்கியது. ஆனால் அன்றாடம் அதை போன்று நம்மவர்கள் நிறைய தாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அதற்கு நம் அரசாங்கம், அல்லது அயல் நாட்டு அரசாங்கம் எந்த விதமான பாதுகாப்பு தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப சிம்பிள்ங்க.. நாமும் வெளிச்சத்துக்கு வரணும்.. அப்படி வந்துட்டோம்ன்னு வைங்க ஷில்பா ஷெட்டிக்கு சவுண்ட் விட்ட எல்லா அரசியல்வாதியும் நமக்கும் சவுண்ட் விடுவாய்ஙக்.. புஷ் பொங்குவார்.. மன்மோகன் மிரள்வாரு.. பிளேயர் பிளிறுவார்.. ஓ.கே வா

கவிதா:- ஐடி கம்பெனி களின் கலாசார மாற்றம் நல்ல விஷயமா? ஆரோக்கியமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
இது சும்மா ஒரு மாயைங்க... பாவம்ங்க பொட்டி தட்டுற எங்கப் பாடு.. காலையிலே உக்காந்தா ( ஆபிஸ்ல்லங்க) சாயங்காலம் வரைக்கும் தட்டி முழிக்காமா உத்துப் பாத்துகிட்டே ( மானிட்டரைங்க) இருக்க ஒரு உத்ய்யோகம்ங்க...காந்தி தாத்தா ஊருக்குப் போங்கடான்னு சொன்னா அம்புட்டு வெள்ளைக் கார பயல்வளோடு இன்னிக்கு வியாவாரம் பாக்க வேண்டிய நிலை.. இதுன்னால அவன் கிட்ட இருக்க ஒண்ணு ரெண்டு குணம் நமக்கு ஓட்டத் தானே செய்யும்.. அப்படி இருக்க ஒண்ணு ரெண்டு விசயத்தையும் பொட்டி தட்டுற பொழப்பை வெளியே இருந்து பாக்குறவங்க பெருசா ஊதி விட்டு கலாச்சார மாற்றம் அப்படின்னு இப்படின்னும் சொல்லி விடுறாங்க.. மத்தப் படி மாற்றம் எல்லாம் பெரிசா இல்லங்க... இதுவும் நாலு பேத்துக்கு சோறு போடுற ஒரு பொழப்பு அவ்வளவு தாங்க

கவிதா - பின்னூட்டங்கள் பெருவது ஒரு வியாபார நோக்கோடு இருக்கவேண்டும், யாருக்கு அவரின் பொருளை விற்க சாமர்த்தியம் இருக்கிறதோ அவர்கள் சாதிக்கிறார்கள் - இது சரியா ? உங்களின் தனிப்பட்ட கருத்தும் இதுவே என்றால் விளக்குங்கள்.
பின்னூட்டத்தில்லே நாட்டம் இல்லாதவங்க யாரும் பதிவு போட மாட்டாங்க.. பின்னூட்டம் போடுறதும் கலை.. அதை வாங்குறதும் கலை..கலையை ஆராதிக்க ரசிக்க ஒரு கூட்டம் இருக்கு.. நான் எல்லாம் அப்பப்போ ஆஜர் சொல்லிட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போற கூட்டம்ங்க..

அணில்:- வாங்க தேவ் அண்ணாச்சி , இன்னைக்கு கவிக்கிட்ட மாட்டினது நீங்களா?.. சரி.. இங்க தமிழ்மணத்துல இருக்கிற 90% பேரு ஐடி கம்பெனிக்காரங்களா இருக்கீங்க போல?.. உங்களுக்கு வேல வெட்டியே இல்லையா?.. சும்மா ப்ளாக் எழுத தான் சம்பளம் குடுக்கறாங்களா?
ஆமா அணிலு பிளாக் எழுத சம்பளம் ... பின்னூட்டம் போட போனஸ்... போனஸை விட்டுட்டீயே அணிலு..டிவியிலே கிரிக்கெட் மேட்ச் போட்டாலும் மெகா சிரியல் போட்டலும் சன் மியூசிக்க்ல்ல உன்னிய மாதிரி சின்னப்புள்ளக பாட்டுப் போட்டாலும் ஒவ்வொரு அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தரம் பிரேக்ன்னு சொல்லுவாய்ங்க கேட்டு இருக்கீயா.. அது மாதிரி நாங்களும் பொட்டி தட்டுற் கேப்ல்ல பிளாக்ன்னு சொல்லுறோம் அவ்வளவு தான்.. அதைப் போய் பெருசாக் கேட்டுகிட்டு

கவிதா:- இளைஞர்களின் வெளிநாட்டு கனவு பற்றி
உள்நாட்டுச்செலவுக்கு வழி காட்ட விழி தரும் தீர்வு வெளி நாட்டுக் கனவு...

அணில்:- எப்ப பார்த்தாலும் யாரையாவது கலாய்ச்சிக்கிட்டே இருக்கீங்களே?.. உங்களை யாரும் அது மாதிரி கலாய்ச்சி இருக்காங்களா?.. அது யாருன்னு எனக்கு மட்டும் சொல்லுங்க.
பதில் சொல்லலாம் லிஸ்ட் கொஞ்சம் நீளம்...இந்தா ஒரு சிக்கன் சூப் மட்டன் சூப்.. ஒரு ஹார்லிக்ஸ்.. ஒரு போர்ன்விட்டா.. ஒரு பாதாம் பால் .. இப்படி எல்லாம் கொடுக்காம கேப்பக் கஞ்சி ஊத்துறோம் வாங்கன்னு கூப்பிட்டு உக்கார வச்சுகிட்டு இன்னும் அந்தக் கேப்பக் கஞ்சிய என் கண்ல்ல காட்டமா இப்போ நிங்க என்னக் கலாய்க்கலியா... பொது வாழ்க்கையிலே இதெல்லாம் சாதரண்ம்ன்னு எங்க பன்னிக்குட்டி ராமசாமி எப்பவோச் சொல்லிட்டார்.

அணில்:- அண்ணாச்சி சங்கத்து சிங்கங்கள் பற்றி ஒரு 4 வார்த்தை சொல்லிட்டு அடுத்த ரவுண்டுக்கு நடைய கட்டுங்க..
இதயம் ஆளும் இனிய நண்பர்கள் -
நாலு வார்த்தை தானே கரெக்ட்டாச் சொல்லிட்டேனா..

கவிதா:- தேன்கூட்டில், கதை தேர்வில், நீங்கள் ஏதாவது மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
தேன் கூடுப் போட்டிகளை நான் கவனிக்கறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சே..

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு :-

1. ப்ளாக்கரில் உங்களுக்கு பிடித்த கலாய்த்தல் மன்னன்'/ மன்னி' கள்
கோழிப் பண்ணை ஊர்காரர் இதுக்குன்னு தனியாப் பதிவே வச்சிருக்காரே...
ஜம்போன்னு சொன்னா இவங்க ஞாபகம் வரணும்... ஒருத்தரை கலாய்க்க தனி சங்கமே ஆரம்பிச்சு உதறுனவ்ங்க...இப்போ இவங்களைக் கலாய்க்க புதுசா சங்கம் ஆரம்பம் ஆயிருக்காம்.. ஆக மொத்தம் இந்த கலாய்த்தல் தங்கம்மாவை சங்கம் விடாது போலிருக்கு..

2. உங்களின் சிறந்த பதிவுகள் என்று நீங்கள் நினைப்பது
சிறந்த அப்படின்னு சொல்ல முடியாது.. எனக்குப் பிடிச்சப் பதிவுகள்ன்னு வேணும்ன்னா சொல்லிக்கலாம்
1 கவி 23:நான் நடந்து வந்த காதல் வீதி
2 நட்பு எனப் படுவது யாதெனின்..
3 கவி 15: ரகசியம்

3. உங்களின் சிறந்த கதைகள்
இனிமேத் தாங்க எழுதணும் அப்படின்னுச் சொல்லித் தப்பிச்சுக்கலாம்ன்னு பாக்குறேன்..
கதை 10:கதிரேசன் கதை - பகுதி 1
கதை 12:என்கவுண்டர்/ENCOUNTER
இது நான் எழுதி எனக்குப் பிடித்தக் கதைகள்

4. நீங்கள் ஒரு பெண் பெயரில் எழுதுவதாக கிசு கிசு உள்ளதே ? அது பற்றி
ஒரு பொண்ணு பெயரில் தானா? ச்சே அவ்வளவு தானா.. இன்னும் நல்லா விசாரிங்க... நிறைய கிச்சு கிச்சு கிடைக்கும்ங்க...

5. இப்படியே எவ்வளவு நாளைக்கு கதை' விட போறீங்க
கதைகளை விட முடியாத வரை கதையை விட்டுக் கொண்டு தான் இருப்பேன்..

6. சங்கத்து சிங்கங்கள் பதிவுகளில் உங்களை கவர்ந்தவை
சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்... - கைப்புள்ள
மீண்டும் அரியாசனத்தில்...! - சிபி
ராயலோ ராயல் - இளா
VAVASA - வரலாறு - பாகம்-3 - ஜொள்ளு பாண்டி
சங்கம் ஸ்போர்ட்ஸ் SANGAM SPORTS - வெட்டிபயல்
கன்னிப்பதிவு (புது வ.வா) - ராம்
செயற்குழு கூட்டம்! - நாகைசிவா

7. உங்களின் ஆங்கில ப்ளாக் பற்றி
ஆரம்பித்தேன்... யாருக்கும் சொல்லாமல் மூடி விட்டேன்..

8. உங்களின் பார்வையில் - பெண் பதிவர்கள்
எண்ணிக்கையில் குறைவு... இன்னும் நிறைய பேர் வரணும்.. அதிலும் நகைச்சுவையாய் எழுதுபவர்கள் இன்னும் பெருக வேண்டும்....

9. தலைவரின் தீவர ரசிகரான நீங்கள் - அவர் வழியில் மக்களுக்கு சொல்ல விரும்புவது
"உங்களுக்குன்னு ஒரு வழி வச்சுக்குங்க"... தலைவரும் அதை தான் சொல்லுறார்.

10. வவாச - மூலம் நீங்கள் சாதித்தது, சாதிக்க நினைப்பது
சங்கம் மூலம் எனக்கு கிடைத்தது அழகிய ஒரு நட்பு பூங்கா.. அதில் கிடைத்தது எண்ணிலடாங்க பூமணம் கமழும் நட்பின் இனிய நினைவுகள்..
சாதிக்க நினைச்சு ஆரம்பிக்கலியே சங்கம்.. சிரிக்க சிரிக்க மட்டுமே தோற்றுவிக்கப்பட்டது சங்கம்.. அது தொடர்ந்தாப் போதும்ங்க...

தேவ் சொன்ன தத்துவம் :- Believe in the god who believes in you

என் முதல் சம்பளம் ரூ.11.60

படிக்கும் போது வகுப்பில் முதல் அல்லது இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்கும் நான், அதிகம் ஆசைப்பட்டது நிறைய படிக்கவேண்டும் என்பதே. ஏதோ ஒரு தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்து ரேன்க் கீழே போய்விட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வீட்டில் உள்ள அத்தனை பேரையும் காரணம் அவர்கள் தான் குறை சொல்லி அமர்களம் செய்துவிடுவது வாடிக்கை.

படிப்பிற்கு பொறாமை வேண்டும் என்பார்கள் எனக்கு கொஞ்சம் அதிகமே. அதிகமாக மதிப்பெண் யாராவது எடுத்துவிட்டால் அவர்கள் எனக்கு விரோதிதான்.. சிறுபிள்ளை தனமான இந்த எண்ணம் இன்னமும் என்னை விட்டு போகவில்லை என்பது நினைத்தால் எனக்கே சில சமயம் அசிங்கமாக இருக்கும். ஆனால் அவர்களால் முடிகிறது என்னால் ஏன் முடியவில்லை என்று முட்டி மோதி படித்து முந்திவிடுவது என்று முடிவுடன் இருப்பேன்.

என்னுடைய அப்பா இறக்கும் போது எனக்கு 14-15 வயது, என்னை டாக்டர்க்கு படிக்க வைக்க வேண்டும் என்று இன்ஸ்ட்டுருமென்ட் பாக்ஸ் எல்லாம் வாங்கி வைத்து இருந்தார். ஆனால் அவரின் இறப்பு என் படிப்பை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லல.

என் அப்பாவின் அம்மாவும் அப்பாவுமே என்னை தொடர்ந்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். 10ஆவது முடித்தவுடன் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். நானும் ஆயாவிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்து நல்ல மாப்பிள்ளை வரும் வரை என்னை படிக்க வையுங்கள் என்று கேட்டேன். அவர்களுக்கு நான் பாரமாக இருக்கிறேன் என்று மட்டும் எனக்கு தெரிந்தது. என் அண்ணகளை அவர்கள் பாரமாக நினைக்கவில்லை. ஆண் குழந்தைகள் எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என்பார்களே அன்றி என்னை பற்றிய கவலை அவர்களின் வயதான காலக்கட்டதில் வாட்டி எடுத்ததை நான் உணர்ந்தேன். ஆனாலும் திருமணத்தில் எனக்கு இஷ்டம் இல்லல.

மிகவும் அடம் பிடித்ததால், சித்தப்பா வீட்டிற்க்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். ஆனால் படிப்பு தொடரும் இடைவேளையில், என்னை வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லி உறவினர்கள் கட்டாயப்படுத்தியதில், நான் பத்தாவது முடித்தவுடன், ஒரு துணி தைக்கும் கம்பெனியில் தையல் வேலைக்கு சேர்ந்தேன்.

என் வயது உடைய என்னை கட்டாயப்படுத்திய அந்த உறவினர்களின் குழந்தைகள், மகள், தங்கைகள் என்று எல்லோருமே படித்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிக்காமல், கட்டாயத்திற்காக நான் அங்கு வேலைக்கு சென்றாலும் என் மனம் முழுக்க படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்றே 24 மணி நேரம் முழங்கியது. ஒரு வாரம் சென்றேன். என்னால் அதற்கு மேல் அங்கு வேலை செய்ய முடியவில்லை, காரணம் படிக்க வேண்டும் என்ற என் விருப்பம் மண்ணோடு புதைந்து போய்விடுமோ என்ற பயம் தான்.

அந்த ஒரு வாரத்திக்கு நான் வாங்கிய என் முதல் சம்பளம் ரூ.11.60. அப்போது மாத சம்பளம் எனக்கு என்னவாக இருந்து இருக்கும் என்று பாருங்கள்.  இப்போது ஐந்து இலக்க எண்ணில் சம்பளம் வாங்கினாலும், இந்த முதல் சம்பளத்தை மறக்கமுடிவதில்லை..மறக்கவும் விரும்பவில்லை.

அணில் குட்டி அனிதா:- கவிதா என்ன சொல்லவறீங்க.. சின்ன வயசுலேயே தையல் நல்லா தைக்க வரும் ன்னு சொல்றீங்களா?.. உங்களை விட மோசமா, படிக்க வழி இல்லாதவங்கள யோசிச்சி, வாய கப்புன்னு மூடுங்க.. ஓவரா சவுண்டு விட்டுக்கிட்டு!! அவனவன் சாப்பட்டிற்கு வழியில்லாமல் கஷ்ட படறான்.. நீங்க என்னடான்னா.....சின்ன விஷயத்தை ஓவரா பில்டப் குடுக்கறீங்க.. எப்படியோ.. யாரோ படிக்க வச்சாங்க இல்ல.. அப்புறம் என்ன?.. தாத்ஸ்..நீங்க வாங்க.....தத்துவத்த சொல்லுங்க..

பீட்டர் தாத்ஸ் :- It takes courage to push yourself to places that you have never been before.... To test your limits... To break through barriers.