ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் #3

* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும் 

ரங்கோலி கோலங்கள் பெயின்ட் பிரஷ்ஷில் வரைந்தது.

எனக்காக குறிப்பு : என் பதிவுகளில் அதிகமாக தேடி பார்க்கப்படும் பதிவு "ரங்கோலி கோலங்கள்" அப்படின்னு ப்ளாகர் ஸ்டேடஸ் சொல்லுது. .அணில் குட்டி : அம்மணிக்கு பொழுது போகலப்போல...?!!

பீட்டர் தாத்ஸ் : Photography is an immediate reaction, drawing is a meditation.

ஏதேதோ சொல்கிறேன்....

 கண்ணெதிரில்
களையும்
என்
கனவுகள்.....
பகல் கனவுகளோ?!!
**************************
இரவின் கனவுகள்......, ?????!
காற்புள்ளியிட
அவசியமில்லை
அவையும்
முற்றுப்புள்ளி தான் !!


Image : Baby Kaavya - Thekkikattan's daughter. Thx. Dr.Prabhakar.
******************************
நிழலாக
தொடர்கிறேன்..
இருட்டில் சென்றுவிடாதே..

*****************************

மெளனத்தில்
மறைந்திருப்பது -
நம்பிக்கை மட்டுமல்ல
வெறுப்பும் கோபமும்
கூட...

******************************


நாய்'க்கும்
மனிதனுக்கும்
வித்தியாசம் உண்டு
புலர்ந்ததிலிருந்து
புணர்வது வரையில்...


************************************

அடங்காத உடல்பசிக்கு
அறிவை முன்னிருத்தும்
இலக்கியவாதிகள்
பிண அறையின் காவலர்களாக
இருந்திருக்கலாம்
விதவிதமான
பெண்ணின் உடல்கள் அங்குமுண்டு !!

அதைக்கூட அனுபவித்து
இலக்கியம் கலந்து
சுவைப்பட
கவிதையாக்குவர்....
கைதட்டி சிரித்து சிறப்பு
சேர்க்குமொருக் கூட்டம் !!!


*************************************
எங்கோ
இழையோடும் அன்பும்
நம்பிக்கையும்
துடிக்கவைக்கிறது
இதயத்தை....

***************************
காவியின் குறியீடு துறவல்ல..
வெற்றுடலும் துறவல்ல

ஆசைகளற்றது துறவு...

முடிவென்று நினைத்தே
துறவைத்தேடினால்

அதை அடையும் போது
இவ்வாழ்வெதற்கு?!

துறவும் முடிவல்ல...!!!

**********************

இறந்துவிட வேண்டுமென
நெஞ்சம் துடிக்கையில்-
என் இறப்பும் 
என் கையிலில்லை-
வாழ்க்கை !!
****************************************

Images : Thx Google

கதை கதையாம்....

"ப்ப்ப்பாஆ ஒரு கதை சொல்லுங்க. ..."

"என்னாது கதையா? (வர வர இவ இம்சை அளவுக்கு மீறிப்போகுதே??...) கதை சொல்ற வயசுல...கதைக்கேக்கற?"

"இந்த வயசுல இதை தான் செய்யனும்னு எதாச்சும் ரூல்ஸ் இருக்கா?"

"இல்ல...ஆனா..."

"ஆனா ஒனாவெல்லாம் இல்ல....சரி..உங்க வழிக்கே வரேன்.. சின்ன வயசுல குழந்தைங்க..எந்த கஷ்டமும் இல்லாம சந்தோஷமா ஓடியாடிக்கிட்டு இருப்பாங்க... நான் அப்படியெல்லாம் இல்ல.. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். என் வயசுக்கு மீறி அழுதிருக்கிறேன்.. இதுவேணும் அது வேணும்னு யாரையும் கேட்டதில்ல....ஏன் குறைந்தபட்ச ஆசை.. படிக்கனும். அதைக்கூட யாரும் கண்டுக்கல.. ..... என் படிப்பு முதற்கொண்டு எல்லாமே இப்ப வரைக்கும் செய்துட்டு வரேன்...இதுக்கெல்லாம் எங்கப்போச்சி உங்க ரூல்ஸ்? சின்னக் குழந்தையாச்சேன்ன்னு நிம்மதியாவா விட்டீங்க.?!"

"ஏன்டி உங்கவீட்டுல கேக்கற கேள்வி எல்லாம் என்ன கேக்கற?."

"ரூல்ஸ் யார் பேசறாங்களோ அவங்கக்கிட்ட தான் பேசமுடியும். .எனக்கு இப்ப கதை சொல்லுங்க...!! .அதுவும் "ஒரு ஊர்ல" ன்னு ஆரம்பிக்கற கதை தான் வேணும்..அப்பதான் தூங்குவேன்...."

"ம்ம்.......... .."

(என்ன செய்யலாம்னு யோசிக்கிறார் போல..விடுவேனா....?!  விடாம நச்சரிக்க....... ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரு)

***************

"ஒரு ஊர்ல ஒரு நாய் இருந்திச்சாம்...."

(அவ்வ்....நாய்ன்னு என்னைத்தான் சொல்றாரோ?) ம்ம்ம்...

"அந்த நாய்க்கு ஒருத்தர்..தினம் ஒரு பிஸ்கட் போடுவாராம்.."

ம்ம்ம்...

"இப்படி தினம் பிஸ்கட் போட்டுக்கிட்டு வந்தாரா... தீடீர்னு ஒரு நாள் பிஸ்கட் போடலையாம்...."

ம்ம்ம்...(ஸ்ப்பா நானில்ல)

"அந்த நாய்... ரொம்ப நேரம் பிஸ்கட்டுக்காக வெயிட் பண்ணிப்பாத்துட்டு.. பிஸ்கட்டை காணமேன்னு,,...அவர் கிட்டப்போய்..அவரைப்பாக்குதாம் கைய பாக்குதாம்.. கைய பாக்குதாம்..அவரைப்பாக்குதாம்..
.."

ம்ம்ம்...

"பிஸ்கட் கையில காணோம்னு......அந்த நாய்க்கு கோவம் வந்துடுச்சி... அவரோட கைய எகிறி லபக்'னு கடிச்சி வச்சிடுச்சாம்.."

"அய்யயோஓஒ..அப்புறம்..?"

"இதனால் தெரியவர நீதி என்ன..?"

"நாய்க்கு பிஸ்கட் போடக்கூடாது..! இதானே....?!! "

"இல்லடி..... எதையும் தொடர்ச்சியாக நல்லவிசயமாக இருந்தாலும் செய்யக்கூடாது.. அதனால என்னாச்சி? செய்தவருக்குத்தானே பிரச்சனை? இது பிஸ்கட் போட்ட ஆளுக்கு!!"

ம்ம்ம்..

"தொடர்ந்து நமக்கு ஒரு விசயம் கிடைக்குதுங்கறதுக்காக...அதுவே நிரந்தரம்னு நினைச்சிடக்கூடாது. . எப்ப எது கிடைக்குதோ அதை பயன்படுத்திக்கனும், கிடைக்காதப்ப அதுக்காக கோபமோ வருத்தமோ பட்டு அடுத்தவங்கள கடுச்சி வைக்கக்கூடாது.. .. எதுவுமே உலகத்தில் நிரந்தரம் இல்லை.... இது நாய்க்கு!!"

"அட... நல்லா இருக்கே...!! சூப்பார்ப்பா... சூப்பரா இருக்கு கதை..!!  உங்களுக்கு இந்த கதையை...யார் சொன்னா??"

"கிர்ர்ர்ர்ர்ர்ர்.. உன் இம்சை தாங்கமுடியாம..இப்ப யோசிச்சி சொன்னேன்...ஆனாலும் உன் அளவு உப்புப்பொறாத சின்ன விசயத்தைக்கூட "நேரேட்டிவா"  என்னால சொல்லமுடியாது.. நீ தான் அதுல ஜீனியஸ்..."

"ஹி ஹி....ரொம்ப அனுபவிக்கறீங்க போலவே? "

"இல்லையா பின்ன..இரு சின்ன விசயத்தை நீ எப்படி பில்டப் செய்வன்னு சொல்றேன். கேளூ..".

ம்ம்ம்...சொல்லுங்க ..


************************************************


"ப்ப்பாஆ... நான் ஒரு விசயம் சொல்லனும் இங்க வாங்களேன்.. "

"என்னடி..சொல்லு.."

"அதெல்லாம் இல்ல...இங்க வந்து உக்காந்து என்னையே கவனிங்க.. அப்பத்தான் சொல்லுவேன்.."

(எப்படியும் விடமாட்டா...) "ம்ம்ம்...சொல்லு.."

"இன்னைக்கு மதியம் என்னத்தெரியுமா நடந்துச்சி..?"

(எதாச்சும் மொக்கை விசயமா இருக்கும்..என்னா பில்டப் கொடுக்கறாப்பாரு,...எந்த ரியாக்ஷனும் இல்லாமல்) "என்ன நடந்துச்சி?"

"நான் தூங்கிட்டே இருந்தேனா..?"

.........

"அப்ப யாரோ கதவை தட்ற சத்தம் கேட்டுச்சி..".

.............

"நல்ல தூக்கம்..திரும்பவும் ..டக் டக் டக்..ன்னு சத்தம்... என்னால கண்ணைத்திறக்கவே முடியல...நல்ல தூக்கத்துல தூக்கம் கலைஞ்சதால..... ஹார்ட் பீட் அதிகமாயி....ஹார்ட் படார் படார்னு அடிக்குது... அது அப்படி அடிச்சா உங்களுக்குத்தான் தெரியுமே.. செம வலி... வலி தாங்காம கண்ணைத்திறந்து ..............................
...... யப்ப்ப்பாஆஆஆஆ..."
 

"என்னடி? "
 

"நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் உங்கக்கிட்ட எந்த ரியாக்ஷனும் இல்ல...இதெல்லாம் ஒத்துக்க முடியாது... "உம்.."கொட்டுங்க..."

(கடுப்பாக... உன் தலையில் தான்டி கொட்டனும்) "உம்ம்ம் சொல்லு.."

"ம்ம்ம்ம்..அது!! ...........ஹான்....கண்ணைத்தி
றந்து கடிகாரத்தைப்பார்த்தேனா... மணி 3.40.. இந்த நேரத்தில் யார்னு... மெதுவா எழுந்து..பாதி திறந்தக்கண்ணோட.. அதே அவசர அவசரமா அடிக்கற ஹார்ட் பீட்டோட போனேனா.."

"உம்ம்ம்ம்ம்ம்ம்ம்..."

"துப்பட்டாவை மறந்துட்டேன்..."

"உம்ம்ம்ம்ம்ம்"

"திரும்ப ரூம்க்கு வந்து துப்பட்டா எடுத்துப்போட்டுட்டு போயி.... திறந்தா..."

"உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......."

"கதவுல செயின் மாட்டியிருந்திருக்கிறேன்.....
திறக்கவரல...செயின்ல மாட்டி கதவு நின்றுச்சி..."

"உம்ம்...."

"செயினை அவிழ்க்காம சந்து வழியா வெளியில் பார்த்தா...."

"உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......"

"அங்க யாருமே இல்ல..."

"அப்புறம் தள்ளி நிக்கறாங்களோ என்னவோன்னு செயினை கழட்டிட்டு... கதவை திறந்துப்பார்த்தா...."

"உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

"அப்பவும் யாருமே இல்ல..."

"சரின்னு வெளியில் போயி எட்டிப்பார்த்துட்டு வந்தேன்...அங்க......"

"அங்கவும் யாருமே இல்ல... ஏண்டி...  "கதவு தட்டற சத்தம் கேட்டிச்சி, திறந்து பார்த்தா யாருமே இல்ல" இந்த ஒரு லைன் விசயத்தை எவ்ளோ  பில்டப் கொடுத்து சொல்லியிருக்கப் பாத்தியா..?!

"அட..ஆமாம்.. அதை ஒரு லைன்ல கூட சொல்லலாமில்ல... ஆனா அப்படி சொன்னா... எனக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போயிடுமேப்பா........"

...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

********************************************

அணில்குட்டி : எத்தனைமுறை தான் அந்தப்பாவப்பட்ட மனுஷனுக்காக பாவப்பட்டு உச்ச்'.. கொட்றது... ஹய்யோ பாவம்..பழனி ஆண்டவர்..!!

பீட்டர் தாத்ஸ் : Psychology keeps trying to vindicate human nature. History keeps undermining the effort.

Image : Thx google