அவன் யாரோ?

என்
பிடிவாதம்
அகங்காரம் , ஆசைகள் ,ஆவேசங்கள்
அணில் குட்டி
அன்பு
காதல், காமம், கவிதை
விருப்பு, வெருப்பு
அழுகை, ஆத்திரம்

என் குழந்தை
கணவர்
அவரின் வீடு
சுற்றம், சமையல், சொந்தம்
நட்பு

பார்வையற்றவனின் பார்வை
நாய் நக்கும் பணக்காரர்கள்
பெண்டாட்டி முந்தானையில் ஆண்கள்
புருஷனின் சுண்டுவிரல் அசைவில் பெண்கள்
வேஷமிட்டு திரியும் மனிதர்கள்
மழைக்காக ஒதுங்கும் பசுமாடு
பழைய சோற்றோடு விடியலை தொடங்கும் தெருவோரத்து மக்கள்
இடித்துப்போட்டு மூடப்படாத சாக்கடை
இதயம் இல்லாதவர்களால் இல்லங்களில் வசிக்கும் முதியோர்கள்
ஆடையில்லா குழந்தைகள்
கயிற்றில் ஆடி பிழைக்கும் அன்றாடம் காய்ச்சிகள்
படப்படத்த பட்டாம்பூச்சி..
அடுத்தவீட்டு பெண்கள்
கோலங்கள், ஓவியங்கள், புகைபடங்கள்
என்றோ விளையாடிய விளையாட்டு
அரசியல்?! !! அறிவியல்
எனக்கு தெரிந்த ஆன்மீகம்
என்னுடைய திமிர்
அம்மா இல்லாத பெண் குழந்தை
ஆண் என்ற மிருகம்
அதற்கான எதிர்வினை பதிவுகள்
முட்டாள் என விளித்த முகம் தெரியாத பெண்
விளிக்கவைத்த மிக அன்பான ஆண்
தேவையில்லா நட்பு
பாடல்களால் கொன்ற பதிவுகள்
பப்புவின் பாசம்
பீட்டரின் விசிறிகள்
கண்ணீருடன் காகிதம் நனைய எழுதிய கவிதைகள்
தேவையற்ற விவாதம்
கேப்பங்கஞ்சி வித் கவிதா
ஜார்ஜ் மரணம்

அணைத்தையும் தாண்டி

முகம் தெரியாத
குழந்தைக்கு கிடைத்த படிப்பு !!
முதியோர் சிலருக்கு கிடைத்த உணவு !!

அத்தனையும்

சீ....
நீயும்.....
உன் எழுத்தும் .........
என
எண்ணங்களையும்,
எழுத்தையும்
என்னையும்
முடக்கிவிட்டான்
ஒருவன் !!

அவன் யாரோ????!! :)

அணில் குட்டி அனிதா : காலங்ககாத்தல... ... என்னாதிது..?!! வெய்ய காலம் தான் சரி.. புரியுது.. அதுக்குன்னு இப்படியா.... ....? அச்சு அசலா ஒரு தீவிரவாதி வெளியில வந்தாப்ப்லியே இருக்கு எனக்கு...... மக்கா டோட் யூ ஃபீல் த சேம்..?! யாராச்சும் திருப்பி அம்மணிய தூக்கி உள்ள வைங்கய்யா முடியல..... !!

யூ நோ ஷீ ஸ்டார்ட்டட் திஸ் அட் 5.30 இயர்லி மார்னிங்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... . .இப்ப நானு..குளோஸ் த டோர்... !

ம்ம்கூம்......பீட்டரு இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. தத்துவத்த நல்லாஆஆ... ப்ப்புழி........

பீட்டர் தாத்ஸ் : If you would not be forgotten as soon as you are dead, either write things worth reading or do things worth writing. Benjamin Franklin -

மெளன அஞ்சலி !!

ஜார்ஜ்

உங்களின் மரணம்
அதிர்ச்சி இல்லை
ஆழ்ந்த மெளனம்
என்னை சூழ்வதை உணர்கிறேன்
இதயத்தை இறுக்கி பிடித்து
வாழ்க்கை யின் தொலைவை தெளிவுப்படுத்துகிறது..

சென்றவாரத்தில்
உங்களுடன்
சிரித்து பேசியவை
இன்று
நினைவுகளாக...............

அந்த சிரிப்போடும் அன்போடும்
மனைவியையும்
மகனையும்
பற்றி பேசியது
இன்று
நினைவுகளாக....................

அண்ணாசாலை விபத்தில்
ஆஸ்பித்திரியில்
என்னுடன் இருந்து
என்னை கவனித்தது
பொறுமையாக
சிரிப்புடனே
என்னை
சகித்துக்கொண்டவை
நினைவுகளாக ...............

வேலை வேண்டும்
என்று
அனுப்பிய
அத்தனை பேருக்கும்
வேலை
வாங்கிக்கொடுத்தது
நினைவுகளாக.............

யாருக்கு
உதவி வேண்டும்
என்றாலும்
"ஏன் இத்தனை கவலை? ஏன் இத்தனை ரெக்குவஸ்ட்?
நான் செய்கிறேன் "
என்று
முடித்துக்கொடுக்கும்
உங்களின் குணம்
நினைவுகளாக.................


இதற்காகவாவது
அந்த
கடவுள்
உங்களுக்கு
நல்ல ஆயுளை கொடுத்திருக்கலாமே..?!!
இறந்துபோகின்ற வயதில்லையே
இது தான் வாழ்க்கையா?

இனியுமாவது
உங்கள் உயிரான
குழந்தைக்கும்
மனைவிக்கும்
அந்த கடவுள்
இரக்கம் காட்டட்டும்...!!

அப்பாவை
இழந்த
இன்னொரு குழந்தை
இங்கே..
என் கண் முன்னே..

கடவுளே..!!