தூரத்தில்
ஒரு அட்டைப்பெட்டி
உள்ளே
எனக்குப்பிடித்த பரிசுப்பொருட்கள்.. !!
ஒவ்வொன்றாய்...
வெளியே வருகிறது

ஆச்சரியம்..!
ஆனந்தம்..!

வெளிவந்தவை
என் கைக்கு வருமுன்
காணாமல் போகிறது-

பெட்டியின் அருகில் சென்று-
எட்டிப்பார்க்கிறேன்....

காலி..!!!

அமைதியாய்
பெட்டியின்
மேல் பக்க அட்டையை
ஒவ்வொன்றாய்
மூடுகிறேன் -

தூரமாய் செல்கிறேன் -
பெட்டியை என்ன செய்வது?!

*************

நேற்றிரவு வந்தக்கனவு.. எழுந்தபோது சுத்தமாக நினைவில்லை. சமையல் செய்யும்போது..இரவு ஏதோ ஒரு கனவு வந்ததே.. ரொம்ப நல்லாயிருந்ததே..சிரிச்சேனே... ?! ன்னு மண்டையை துருவி துளாவி ..இதோ...  ஒருவழியாய் நினைவுக்கு கொண்டுவந்து எழுதிவிட்டேன்....

கனவுகளில் கூட...
தொலைந்து போகவில்லை..பீட்டர் தாத்ஸ் : I dream my life and My Life becomes my dream

அணில் குட்டி : பீட்டரு.. அம்மணிக்கு மவுத் பீஸ் ஆகிட்டாரு போல ?!