வாங்கோ... வாங்கோ..முதல் பதிவு அதுவுமா..கவி பொங்கல் வச்சி போடப்போறாங்கன்னு யாராச்சும் ஓடியாந்து இருந்தா.. ஹி ஹி ஹி.. உங்களுக்கு எல்லாம் அல்வா தான்......

தமிழ்மணத்துல ஸ்டார் ஆன குஷியில.. அம்மணி சில உண்மைகளை மறைச்சி, ஓவரா சீன் போட்டு அவங்கள பெரிய ஆளா காட்டிக்க ஆசைப்பட்டாங்க..அது தெரிஞ்சும் நானு விடலாமா? ம்ம்ம் அதே...! விடப்பிடாது..ன்னு அவங்க வாயை பெரிய துணியால அடச்சி, கைய, கால கட்டிப்போட்டுட்டு... அந்த உண்மைய உங்கக்கிட்ட சொல்லிட்டு, முதல் பதிவையும் நானே எழுதிடலாம்னு அவசர அவசரமா ஓடியாந்தேன்......

ஆமா மக்கா.. ஆமா.. !!. இந்த ஸ்டார் பதிவ ஆரம்பிச்சி வைக்கப்போறது... "உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய பாரதிராஜா.." ச்சே.ச்சே.....ஒரு ஃப்ளோல வந்துடுத்து..,,அப்படியே குடு குடுன்னு பின்னாடி ஓடி போயி.. பாரதிராஜா வை அழிச்சிட்டு... "அணில் குட்டி அனிதா.. " ன்னு மாத்திக்கோங்க...ரெடி ஆல் ?!! நவ் ஸ்டார் தி மீயூஜிக்......

இப்ப நாம.. மேல தலைப்பிலிருந்து ஆரம்பிக்கலாம்... ஏன் பொங்கலு...? .இது கூட நான் சொல்லனுமா.. இம்புட்டு வருஷமா பார்வைகள் பதிவை படிக்கறீங்க, அம்மணிய பத்தி உங்களுக்கு தெரியாத மேட்டரா..???. ஆன்ன்னா.. ஊன்னா. கொஞ்சம் கூட கூச்சப்படாம ஓவரா சவுண்டு விட்டு, பொங்கி பொங்கலாகி சீன் போடறதை தன் முழு நேர தொழிலா வச்சி இந்த ப்ளாக்'ஐ நடத்தறதால, இந்த தலைப்பு அவங்களுக்கு ரெம்ப ரெம்ப சூட் ஆகும்னு வச்சேன்... கூடவே...கட்டை எதுக்குன்னா..அவங்க முதல் முதல்ல பொங்கனப்பவே .. யாராச்சும் ஒருத்தர், கட்டையால அவங்க தல மேல ஒன்னு போட்டு.. ஓடிப் போன்னு சொல்லி இருந்தீங்கன்னா.. இந்த நிலைம எனக்கும் உங்களுக்கும் வந்து இருக்குமா??? ம்ம்ம் விதி யார விட்டுச்சி...

இத நினைச்சி நினைச்சி..... இன்னொரு தரம் ..இத நினைச்சி நினைச்சி.. அப்பாளிக்கா  நாம எல்லாருமா சேர்ந்து ஒக்காந்து கோரஸ்ஸா ஒப்பாரி வைக்கலாம்.. .ok.. டீல்....! ஆனாலும் நீங்க எல்லாம் ரெம்ப பாவம் இல்லையா... ஒப்பாரி முடிஞ்சவுடனே.. போனா போகுதுன்னு.. சுந்தர்ஜி வூட்டுக்காரம்மா ஆடின "பொங்கலு" பாட்டை இலவசமா போட்டு காட்டறேன், பாத்துட்டு போங்க... சரியா...

இப்ப மேட்டருக்கு வரலாம்.. . 2006 ல ஒரு வெட்டி ஆபிசர் ப்ளாக் எழுதறதை பாத்து, அம்மணி பொறாமையில் எப்பவும் போல பொங்கி, உடனே அவசர அவசரமா எழுத ஆரம்பிச்சாங்க.... அப்பத்தான் கதையில் ஒரு டுவிஸ்டு.. அந்த டுவிஸ்டுக்கு பேரு பாலபாரதி.. இவரும் அப்ப செம வெட்டி, யார் ப்ளாக் எழுத வந்தாலும் ஓடியாந்து உதவி பண்றது தான் அண்ணனுக்கு முழு நேர வேல, அம்மணிய தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டதும் அண்ணன் பாலபாரதியின் கைங்கரியம் தான். (நல்லா கவனிங்க....யாராவது அம்மணி மேல கான்டா இருந்தா டார்கட் செய்ய வேண்டிய முதல் ஆள் அவரு தான்.. ), சரி சேர்த்துவிட்டதோட அவரு வேல முடிஞ்சி போச்சி..ஆனா அம்மணி விட்டாங்களா? விடலையே.....

என்னமோ தன்னை ஒரு எழுத்தாளர் திலகம் னு அவங்களே நினைச்சிக்கிட்டு எழுத ஆரம்பிச்சாங்க.. நடுவுல நிறைய பேர் தமிழ்மண ஸ்டார் ஆனாங்க. அப்ப எல்லாம் சும்மா இருந்த இவங்க... சூடான்ல இருக்க நம்ம புலி, ஸ்டார் ஆனதும்...பொறுக்கல.... அம்மணிக்கு வயிறு பகபகன்னு எரிய ஆரம்பிச்சது. ... "எப்படி நீங்க ஸ்டார் ஆனிங்க.."ன்னு நைய நைய ன்னு அவரை புடுங்க ஆரம்பிச்சாங்க.. .அவரு எவ்ளோ சொல்லி பாத்தாரு..முடியல...ஒரு ஸ்டேஜ்ல "என்னங்க உங்களுக்கு பிரச்சனை...??. நான் வேணும்னா யார் கிட்டவாவது சொல்லி உங்களை ஸ்டார் ஆக்கறேன், என்னை வுட்ருங்கோன்னு" ஓட ஆரம்பிச்சவரு தான் .... இன்னும் நிக்கல....

இந்த தமிழ்மணக்காரங்களுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னவோ.. தெரியல... வேற யாரோன்னு நினைச்சி இவிங்கள கூப்பிட்டுட்டாங்க போல இருக்கு. மெயில பாத்தவுடனே அம்மணி எப்பவும் போல ஓவரா குதிச்சாங்க..!! ஆனா பாருங்க.. சூடான் புலியோட ஞாபகம் வந்துடுத்து.. ஆஹா.. அந்த மனுஷனை உண்டு இல்லைன்னு ஆக்கினோமே, எங்க நாம ஸ்டார் ஆனா..அவரு இதே கேள்விய திருப்பி கேக்கபோறார்ன்னு... பயந்து போயி, நேரா தமிழ்மணத்துக்கு பெரிய _________ ஆட்டுமா மெயில் அனுப்பினாங்க... "என்னை நீங்கள் ஸ்டார் ஆக தேர்ந்தெடுக்க காரணம் என்னவோ? " அப்படின்னு.. .

அவங்க..உடனே... " ஹாங்....உன்னை எல்லாம் மதிச்சி கூப்பிட்டதே பெரிய விஷயம் ரீசன் வேணுமா ரீசன்.. ..நிக்காத, ஓடிப்போயிடு'ன்னு " ரிப்ளை போட்டுட்டாங்க..

இதை எதிர்பாக்காத அம்மணி...'ஷாக்' ஆகிட்டாங்க.. கையும் ஓடல காலும் ஓடல.. .ஒரு வேள கேள்வி கேட்டு இருக்கப்பிடாதோன்னு ரொம்ப லேட்டா...ஃபீல் பண்ண ஆரம்பிச்சி...யாருக்கும் தெரியாம ஓடி போய் டமால் ன்னு அவங்க கால்'ல விழுந்து.. 'டாடீஈஈ......, மம்மீஈஈஈ........ தெரியாம கேள்வி கேட்டுட்டேன்... தயவுசெய்து மன்னிச்சி , என்னை எழுத வுடுங்க.. இனிமே இப்படி எல்லாம் நடு நடுவுல கேள்வி கேக்கவே மாட்டேன் ன்னு ஒரே அழுவாச்சி.... "

அப்புறம் அவங்களும் பாவம் பாத்து, அந்த கரடி ஞாபகம் இருக்கா..ம்ம்ம்.. ம்ம்ம் அதே தான்!! அது எப்படி புலிக்கேசி மூஞ்சி மேலேயே துப்பிச்சோ..அது மாதிரி துப்பிட்டு... "எழுதித்தொல" ன்னு அம்மணி கையில இந்த ஒரு வாரத்தை கொடுத்து இருக்காங்க... ..இதான் நடந்த மேட்டரு..........

"ஹய்யோ.....யம்மா.... யப்பா....... திமிரிக்கிட்டு அம்மணி என்னை பாத்து பாய வராங்க... மக்காஆஆ....இதுக்கு மேல..இங்க நின்னா.. அவங்க பொங்கறதுல வெந்துபோற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்.. சோஒ........ மேல இருக்கற விஷயத்தை மனசுல வச்சி. மறக்காம. இனிமே நீங்க தான் அம்மணிய நல்லா வாழ்த்திட்டு போவனும் சரியா...!!! . .. நானு வரேன்... சீயூ... சீயூ சீயூ.....பாட்டு பாக்க மறந்துடாதீங்க.... அம்மணி வாயில இருக்கிற துணிய யாராச்சும் எடுத்துவுடுங்க..செத்து கித்து...தொலைக்க போறாங்க.....பீட்டர் தாத்ஸ் : “To be a star, you must shine your own light, follow your own path, and don't worry about the darkness, for that is when the stars shine brightest”

அணிலு : பீட்டரு .. ஏன் இப்புடி??..முடியல ராசா முடியல... அவ்வ்வ்வ்..!! 
.