கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் முத்துலெட்சுமி-கயல்விழி

பேச்சாற்றலில் புகழ்பெற்ற நம் முத்துலெட்சுமி தான் இன்றைக்கு நம்முடன் கஞ்சி குடிக்க வந்துள்ளார். அவரை நானும் அணிலும் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்கள் கேள்விகளை கேட்டு குடைந்து இருக்கிறார்கள், பார்க்கலாம் முத்து கேள்விகளுக்கு எப்படி குறைந்த வார்த்தைகளில் பதில் சொல்லுகிறார் என்று…:)

வாயை புடுங்கற ரவுண்டு :-

கவிதா:- வாங்க முத்து, எப்படி இருக்கீங்க..?! உங்கள் பதிவுகளை படித்த போது கவனித்தேன், பதிவெழுத வந்த மிக குறுகிய காலத்திலேயே நீங்கள் தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆகி இருக்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன? (இப்படி ஒரு கேள்வியை நாகை சிவாவிற்கு பிறகு உங்களிடம் மட்டுமே கேட்கிறேன்)
வீரமங்கை கவிதாவிற்கு வணக்கம். இருங்க கொஞ்சம் கஞ்சி குடிச்சிட்டுப்பேசறேன். எனக்கு கேப்பக்கஞ்சி ரொம்பப் பிடிக்கும். அதுவும் எங்கம்மா அதுல கோதுமை, பாதாம் இன்னுமெல்லாமோ போட்டு ஸ்பெஷலா அரைச்சுத் தருவாங்க.. க்க்குக்கும் . இந்த நட்சத்திர மேட்டர் பத்தி எனக்கே இப்பத்தான் தெரியும். இத்தனை குறைந்தகாலத்தில் யாரும் வரலையா என்ன? ஆனா எனக்கு என்னவோ லேட்டாத்தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதா உணர்வு.. J நான் அடிக்கடி சொல்லுவேன் நான் எழுத வந்தபோது நாகை சிவா நட்சத்திரமாகப்பார்த்தேன். எழுத ஆரம்பித்த உடனேயே எப்படா நம்மளை நட்சத்திரமாக்கூப்பிடுவாங்கன்னு இருந்தேன்.

தெகாஜி :- நீங்கள் வலைப்பதிவுகளுக்கு வந்ததின் மூலமா ஏதாவது நன்மைகள் அடைந்திருக்கிறதா உணரச் செய்ய முடிகிறதா? அப்படியெனில், அது போன்றவைகளில்னு கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா, ப்ளீஸ்?
முன் காலத்தில் பேனா நட்பு பேசப்பட்டது போலத்தான். முகம் தெரியாத ஆனால் மிக பலநாட்களாக பழகிய உணர்வை ஒவ்வொரு பதிவரிடமும் காண்கிறோம். நட்புகள் மிகப்பெரிய நன்மை. இதுதவிர நான் எத்தனையோ கற்றிருக்கிறேன். இணையத்தின் பயனை யாராலும் முற்றிலும் அனுபவிக்கமுடியாது. அது ஒரு கடல் போன்றது. அதில் சில துளிகளை எனக்கு புரியவைத்தது இந்த பதிவர் நட்புக்கள் தான். அதன் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் என் நண்பர்களுக்கும் நான் உதவ முடிகிறது. கற்றுக்கொள்வது என்பது தான் எனக்கு ஒரு போதை. அதற்கு பெருந்தீனி இங்கே இருக்கிறது.

சர்வேசன் புகைப்பட ப்போட்டி எனக்கே என்னுடைய புகைப்படக்கலை ஆர்வத்தைக்காட்டியது. அன்புடன் குழும காட்சிக்கவிதை போட்டி ஒரு புதிய முயற்சி. இன்றையபெற்றோர்களும் அவர்களின் குழந்தைவளர்ப்பும் பற்றி எழுதும்போதும் கற்றுக்கொள்கிறேன்.

தற்போது "நான் ஆதவன்" என்கிற பதிவரின் பதிவில் அனிமேசன்களைப் பார்த்து அவர் உதவியுடன் சில வரைதலை பழகிவருகிறேன்.
முன்பே சொன்னதுபோல என் கோப உணர்வை குறைக்கவும் உதவி இருக்கிறது... ஒவ்வொரு வரின் நியாயம் படிக்கும் போது பலவிசயங்கள் புரியவந்திருக்கிறது.

சிபி :- மாயவரத்துல பிறந்தீங்க, மத்த ஊரையெல்லாம் கூட சொந்த ஊர் போல பாவிக்கிறீங்களே எப்படி?
அந்த ஊரெல்லாம் சண்டைக்கும் வராது அது எப்படி நீ சொல்லலாம்ன்னு அந்த தைரியம் தான்..:) (ஊரைப்பற்றிய ) இதுக்கு ஒரு தனிபதிவே போட்டிருக்கேன் . என் மாமனாரைப்பற்றி எழுதி இருக்கிறேன். இன்னும் என் சொந்த ஊராக இந்தியாவில் இருக்கிற ஊர்களைத்தான் சொல்கிறேன் என்பதில் தான் வருத்தம் எனக்கு. யாதும் ஊரே யாவரும் கேளீர் .

சென்ஷி :- பதிவு எழுதனும்னு முடிவு செஞ்சப்புறம் எதுக்கு இப்படி ஒரு சமூக அக்கறை பதிவு?
ரொம்ப நல்லகேள்வி..இந்த பதிவை அடிக்கடி நீயே மீள்வாசிப்புக் கொண்டுவருவது பெருமைப்படவேண்டிய விசயம். எனக்கு வகைகள் மேகத்தில் செய்திவிமர்சனம் என்பதற்கு ஒன்றிரண்டாவது தேறினால் பரவாயில்லையே என்று நினைத்தபோது கிடைத்த பதிவு இது .

முல்லை : புத்தகங்கள் படிக்கும் ஆர்வமுண்டா, சமீபத்தில் (கடந்த மூன்று மாதங்களுக்குள்) படித்த புத்தகம் எது?
புத்தகங்கள் படிப்பது எக்கசக்கமான ஆர்வம் உண்டு. இப்போது இணையத்தில் படிப்பதால் குறைந்திருக்கிறது என்றாலும். தமிழ்சங்கத்துல இருந்து கணவர் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கத்தருவார்கள் . சமீபத்தில் படிச்சதுன்னா தென்கச்சியின் சுவையான தகவல்கள் 100 புத்தகம் சொல்லலாம். சிவசங்கரியின் நெருஞ்சிமுள்.. இப்ப படித்துக்கொண்டிருப்பது சத்தியஞானசபை பற்றிய புத்தகம். வள்ளலாரின் சபை பற்றிய விவரங்கள் இருக்கிறது.

கவிதா: மெளனம் என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? அதனை நீங்கள் ரசித்து இருக்கிறீர்களா?
ம் தெரியும் அதன் வலிமையைத் தாங்கும் சக்தி எனக்கு இருப்பதாக தெரியவில்லை. எங்கம்மா வாரம் ஒரு நாள் மௌனவிரதம் இருப்பார்கள். அவர்கள் மெடிட்டேசன் மற்றும் பல பயிற்சிகள் மேற்கொள்வதைப்போல இதுவும் ஒரு வித பயிற்சி தான் என்பார்கள். அன்று சக்தி சேமிக்கப்படுகிறது . நானும் பலநாட்களாக அப்படி இருக்க முயற்சித்தாலும் அதற்கு வாய்ப்பு அமையவில்லை.

பொதுவாக அன்றைய நாட்களில் ஜீன்ஸ் பட அம்மா மாதிரி உம் கொட்டுதலும் கூடாது. எழுதிக்காமித்தலும் கூடாது என்பார்கள். மௌனம் என்றால் மனமும் கூட மௌனமாக இருக்கவேண்டும்.

நான் ஏறக்குறைய மௌனம் தான் இருக்கிறேன். குழந்தைகள் கணவர் பள்ளிக்குப் போனபின் வீடு அமைதியாகத்தான் இருக்கும். நானென்ன தனியாகவா பேசிக்கமுடியும். வெறும் டைப்பிங்க் தான். ஆனால் அதன் மூலம் நான் பேசிவிடுவதால் அதை முழு மௌனமாகக் கொள்ள முடியாது. சும்மா இருப்பது மிக பெரிய தவம். அதனை செய்யுமளவுக்கு நான் பக்குவி ஆகலை.

G3 : ப்ளாக் உலகமே உங்களை முத்து'அக்கான்னு கூப்பிடுதே.. நீங்க ஏன் உங்க ஞாபகமா ப்ளாக் உலக மக்களு்க்கு ஆளுக்கொரு முத்து கொடுக்க கூடாது? (உங்க அன்பு அளவுக்கு முத்து சைஸ் இருந்தா போதும், ஒரிஜினல் முத்து ஒன்லி அக்ஸப்டட்)
ஜி3 என் அன்பு அளவுக்குன்னு நீ சொல்லிட்டதால நீயே எனக்கு ஒரு சான்ஸ் குடுத்துட்ட.. அந்த அளவுக்கு ஒரிஜினல் முத்து எங்காவது உருவாகினால் அது செய்தியில் வந்தால் நான் எல்லாருக்கும் குடுக்க சம்மதமே.. ( ஹப்பாடா என் வீட்டுக்காரங்க பர்ஸ் தப்பிச்சுச்சு)

ஜியா : நீங்க ஏன் லட்சுமி, முத்துலட்சுமி, கயல்விழி முத்துலட்சுமின்னு ஒவ்வொரு அவதாரமா எடுத்துட்டு வர்றீங்க? இடைக்கால லட்சுமிகள், முத்துலட்சுமிகளிடமிருந்து தனித்து நிக்கனும்னு கயல்விழினு முன்னால போட்டுக்கிட்டீங்க. இன்னொரு கயல்விழி முத்துலட்சுமின்னு வேற யாராவது வந்தா, என்ன பேரு வச்சுக்குவீங்க? ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் மாதிரி, தில்லி, சாந்த்னி சவுக்னு அட்ரஸ அட்டாச் பண்ணிப்பீங்களா?
இனி பெயரை மாற்றமாட்டேன் என்று நினைக்கிறேன்..ஜி...:)

முல்லை:- பேச்சுப் போட்டிகளில்/விவாத/பட்டிமன்றங்களில் ஆர்வமுடன் பங்கேற்றதுண்டா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அல்லது அதையும் தாண்டி பொது மேடைகளில்? சுவையான நிகழ்வுகள்?
இல்லவே இல்லைப்பா... நான் போட்டிகளில் கலந்துகொண்டதே இல்லை.. இங்க வந்தப்பறம் தான் ஒரு முறை சிந்தாநதியின் விவாதப்போட்டியில் கலந்துகிட்டேன். மத்தபடி நான் என் குழுவில் பேசிக்கிட்டே இருப்பேன் அதாவது ஜாலியா அரட்டையா... அவ்வளவுதான் மேடை ஏறுரதுங்கறது என்னப் பொருத்தவரை பயங்கரமான விசயம். ஒரே ஒரு முறை ஒரு நாடகத்திற்கு பின்னிருந்து குரல் கொடுக்கவேண்டும். காட்சி பற்றிய விவரங்களுக்கு. அதற்கும் கூட நான் மேடையின் மறைவான இடத்தில் மைக்கை வைத்து தான் பேசினேன்.. :)

சென்ஷி :- புதிய பதிவர்களை எப்படி ஊக்குவிக்காலம்னு நீங்க நினைக்கறீங்க..?!
புதியபதிவர்களை எப்பவும் போல பின்னூட்டம் போட்டுத்தான் ... அதே சமயம் வித்தியாசமான முயற்சிகளைஅவங்க செய்கிற போது அவங்களைப்பற்றி நம் நண்பர்களுக்கும் சொல்லி படிக்கத் தூண்டுவது மேலும் நன்மை தரும். புதுபதிவர்களுக்கு தனிமடலிட்டு அந்த வித்தியாசமான முயற்சியை தொடரும்படி கேட்டுக்கொள்ளலாம்.. அவர்களின் தனித்திறமையை பாராட்டலாம்.. ஒவ்வொரு மனிதனுக்கும் ஊக்கம் என்பது தன்னுள்ளே இருந்து வருவதைவிட பாராட்டாக வருவது பலன் தரும்

ஜியா : எல்லாத்துக்கிட்டையும் கேள்வி கேக்குற கவிதா+அனிதா உங்க கைல மாட்டுனா, நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கனும்? என்ன கேப்பீங்க?? ;))
நாகேஷ் மாதிரி இல்லை எனக்கு கேள்வியே அதிகம் கேக்கத்தெரியாது. யாரவது வந்து என்னிடம் எங்க வீட்டுக்கு வாடகைக்கு ஆள் வேணும் தெரிஞ்சால் சொல்லுங்கன்னு சொல்லி இருப்பாங்க.. சரின்னுடுவேன். தவிர .. எத்தனை வாடகை .. என்ன லீஸ் எதிர்பார்க்கறீங்களான்னு அவங்களைக் கேட்டு தெரிஞ்சு வச்சிக்க எல்லாம் தெரியாது. ஒரு கேள்வியே கேக்கத்தெரியாத என்னை அதுவும் நறுக்குன்னு வேற .... நாலு கேள்வியா.. ?

சரி ஒன்னே ஒன்னு தான்... நீங்க அந்நியன் மாதிரி ஸ்பிலிட் பெர்சானலிட்டியா உண்மையில்??

ராப் : .சில ஆண்கள், ஒரு வரம்பையும் மீறி பெண்களை பொதுமைப்படுத்தி கீழ்த்தரமான நக்கலில் இறங்கறாங்களே அதப் பார்த்தா ஏதாவது தோனுமா உங்களுக்கு?
சில என்று நீயே சொல்லிவிட்டாய்.. தப்பித்துக்கொண்டாய் இல்லாவிட்டால் அதுக்கு ஒரு பெரிய கும்பலே ஓடிவந்திருப்பார்கள்.(பதிவுகளில் தானே கேட்டே) நிச்சயமாக காது மடல் சூடாகி கோவம் வரும். எழுந்து போய் தண்ணீர் குடிச்சிட்டு வந்து அடுத்த பதிவுக்கு போயிடுவேன். நாமும் பொதுமைப்படுத்தி பேசினால் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையே.. நம்மால் முடிந்தது அடுத்த ஜெனரேசனில் அப்படி எண்ணம் கொள்ளாமல் பிள்ளைகளை வளர்ப்பது தான்.

ராயல் ராம் : - பேசமா இருக்கிறது? அமைதியா இருக்கிறது? சும்மா இருக்கிறது? சத்தம் போடாமே இருக்கிறது? தொணதொணக்காமே இருக்கிறது? இப்பிடியெல்லாம் யாராவது சொல்லிருக்காங்களா? அப்பிடின்னா என்னான்னு அர்த்தம் தெரியுமா??
அதெல்லாம் எங்க வாத்தியாருங்க டீச்சருங்க சொல்லி இருக்காங்க.. ஒரே ஒரு ப்ரண்ட் மட்டும் உன் வாயடைக்கறமாதிரி ஒருத்தன் புருசனா வரனும்டின்னு சொல்லி இருக்கா... ஆனா அவங்க ஆபீஸ் வேலையா எதாச்சும் இருக்கறப்ப மட்டும் தான் ... சொல்வாங்க.. கொஞ்ச நேரம் பேசாம இருன்னு..

சிபி : மொக்கை எதிர்ப்பு நிலைல இருந்த நீங்க எப்ப மொக்கை ஆதரவு நிலைக்கு வந்தீங்க? ஏன்?
மொக்கை எதிர்ப்பு நிலையில் இருந்ததாக நினைவில்லை சிபி. என் பதிவில் நீங்க டீ குடித்து நடத்திய பின்னூட்டக் கும்மியை நிறுத்த சொன்னதால் சொல்கிறீர்கள் போல. அதற்கு பதில் போட்டு மாளவில்லை என்பதால் சொன்னது அது . நான் மற்றவர்கள் பதிவில் போய் கும்மிப்பின்னூட்டங்கள் போடுவதில் மறுப்பேதும் இல்லை.

மங்கை:- வட இந்தியாவில் உள்ள மக்களின் கண்ணோட்டத்திற்கும், தென் இந்தியாவில் உள்ள மக்களின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்கிறீர்களா?
நான் கவனித்தவரை இங்கே குழந்தைகளை மிகத் தன்னம்பிக்கையோடு வளர்கிறார்கள். அவர்களும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் செய்கிறார்கள். நகரங்களில் எல்லாமே ஒரு வித எட்டி நின்று புன்னகைத்து சுதந்திரமாக இருக்கவிடும் பண்பு இருக்கிறதோ என்னவோ.. நான் வளர்ந்த சிறு ஊருக்கு இந்த மெட்ரோ நகரம் மிக வித்தியாசமானது தான்.

ஜியா : கூட சில நண்பர்கள் இருந்தாலே எங்களால எழுத முடியறதில்ல... ஆனா, வீட்ல குட்டீஸ வச்சிக்கிட்டே, சிறு முயற்சி, புகைப்படம்னு தொடர்ந்து கலந்துக்கட்டி அடிக்கறீங்களே? (இப்பவும் அப்படித்தானே எழுதிட்டு இருக்கீங்க? ஏன்னா, நான் பதிவு பக்கம் வந்து லைட்டா ஒரு ஆறு மாசம் ஆகுது:)) அது எப்படி முடியுது?
சிலசமயம் குழந்தைகளின் குறும்புகள் ரசிக்கும்படியே இருக்கும். சிலசமயம் கோவம் வந்து நான் அதை கொட்டினால் அவர்களுக்கு அது சங்கடமாகி போகும்.. இங்கே எழுத உட்கார்ந்தால் அல்லது படிக்க உட்கார்ந்தால் வேறு உலகத்தில் நுழைந்ததுபோலாகி அவை கூலாகிவிடும். இதனால் நன்மைதானே.

கவிதா: ஒரு பெண் தன் கணவர், குழந்தைகளின் விருப்பத்திற்கும், விருப்பத்தை கேட்டும் நடந்து கொளவ்து பெண் அடிமைத்தனம் அல்லது அந்த பெண் அவர்களை சார்ந்து இருக்கிறாள் என்று சொல்லிவிட முடியுமா?
இருபக்கமும் கேட்டு கலந்தாலோசித்து நடக்கும் பட்சத்தில் அது ஒரு அழகான விசயம். பெண் மட்டும் கேட்டு நடந்துகொள்கிறாள் என்றால் அவளோட அன்பும் , அட்ஜஸ்ட் செய்து போகிற தன்மையும் தெரியவருகிறது. ஆனால் அப்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று கட்டளை இருந்தால் அங்கே பெண் அடிமைத்தனம் இருக்கின்றதோ என்று தோன்றுகிறது..

ரவுண்டு கட்டி கேட்ட கேள்விகள்

கவிதா : உங்கள் தாத்தாவிடம் நீங்களும் நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயம்?
விடாத கடவுள் சாதனை..... எல்லோரிடத்திலும் கனிவு

ராப் : .என்னைய பார்த்தா அடுத்த நிமிஷம் என்ன கேப்பீங்க?
என் கையால செய்த பிரியாணிய சாப்பிடறயா இல்லன்னா
வரியா சரவணாலயோ ஆனந்தபவன்லயோ போய் சாப்பிட்டுட்டுவரலாம்ன்னு
நீ என்ன சொல்வே "குட் ஐடியாக்கா.." அப்படின்னு ரைட்..?

ராயல் ராம் : தலைநகரின் தலை சிறந்த தமிழ் பேச்சாளர்'னு சொல்லி சிலை வைக்கிறப்போ அதுவும் பேசிட்டு இருக்கிறமாதிரி தான் வைக்கனுமா???
நிச்சயமா வைக்கமாட்டாங்க அதனால் இப்படி ஒரு சந்தேகம் வரவே வேண்டாம்.. இந்த பேச்சாளர் பட்டமே நண்பர்கள் சும்மா போட்டுவிட்ட பட்டம் தானே..

கவிதா:- சிறந்த பதிவர்கள் –எழுத்தில், மொக்கையில், நகைசுவையில்-
மொக்கைக்கு – சென்ஷி , ராப், நகைச்சுவைக்கு - அபிஅப்பா, குசும்பன், சின்னப்பையன், எழுத்துக்கு - பாலைத்திணை காயத்ரி, செல்வநாயகி
குறிப்பு: யாரும் தவறாக நினைக்கவேண்டாம். எனக்கு சட்டென்று நினைவுக்குவந்தவர்கள் இவர்க்ள் தான்

சிபி :- நேர்ல பார்க்காத வரை ரொம்ப புத்திசாலி/சாமார்த்தியசாலின்னு எல்லாரையும் நம்ப வைக்கிறீங்களே எப்படி?
செண்ட்ரல் ரயில்வெஸ்டேஷனுக்கு வர முன்னாடியே இந்த குசும்பன் சிபி ஜி3 குழுவினர் ப்ளானோடதான் வந்தாங்க.. மூவரும் மாத்தி மாத்தி பேசி என்னை முழிக்கவிட்டாங்க. அப்ப கண்டுபிடிச்ச உண்மைதான் நான் சாமர்த்தியசாலி இல்லைன்னு அதை இங்க விளம்பரம் செய்துட்டாங்க... :) புத்திசாலின்னு எப்பவுமே நான் சொல்லிக்கிட்டதே இல்லை. என்னோடது வெறும் சிறுமுயற்சி என்கிற தன்னடக்கத்தை சிலர் தப்பா புரிஞ்சுகிட்டாங்களோ என்னவோ.. ?

ராப் : அதெப்படி எப்பவும் எல்லாத்தையும் கூலாவே எடுத்துக்கறீங்க?
அனுபவம் தான். பொதுவா நான் எப்போதுமே சட்டென்று கோபப்பட்டு எதிராடுவது தான் வழக்கம். இப்போது மிகக்குறைந்திருக்கிறது. கோபத்தால் எனக்கே பூமாராங் மாதிரி திரும்ப அடிபட்டு ... இப்ப கூலா இருக்க பழகிவருகிறேன்.

G3 - மூச்சு விடாம பேசறீங்களே.எப்போதிலிருந்து இப்படி?
சின்னவயசிலேர்ந்தே இப்படித்தான். சாப்பாடு கூட வேண்டாம் தண்ணீர்( H 2 O) குடிச்சே பேசுவாளே என்று எனக்கு புகழ் உண்டு.

கவிதா:- உங்களின் பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது.
குப்பையை எங்கே போட்டீர்கள்?

மங்கை: - பெண் சுதந்திரம் என்று எதை சொல்லுவீர்கள்?
தளையாக எதையும் உணராமல் பெண் காரியங்களை இயல்பாக செய்வது தான். எதை செய்தாலும் யாராவது பெண் என்பதால் மட்டும் அந்த செயலை செய்ய தடை விதித்தால் அங்கே தான் ப்ரச்சனை வருகிறது.

ராயல் ராம் : Delhi Non-stop FM இப்பிடின்னு யாராவது பட்டபேரு வைச்சிருக்காங்களா???
அதான் இப்ப வச்சிட்டீங்களே!

முத்துலெட்சுமி'யின் தத்துவம் : நல்லதொரு மாற்றத்தினைக்கான மாற்றத்தின் முதல்படியா நீங்களே இருங்கள்... மகாத்மா காந்தி

பப்புவும் நானும்..

அறிமுக காட்சிகள்:-
பப்பு 3 வயது 3 மாதங்கள் முதலில் முத்துலெட்சுமி, முல்லையை சந்தித்தபோது அவளை பார்த்தது. பேசவே இல்லை சில குழந்தைகள் அப்படித்தான் இருக்கும் என்று நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முத்துலெட்சுமி கொஞ்சம் பேசவைக்க முயற்சி செய்தார்கள், அவள் வாயை திறக்கவேயில்லை... ஆனால் திரும்ப வீட்டுக்கு செல்லும் போது அவள் நார்மலாக கேஷவுலாக இருப்பதாக எனக்குப்பட்டது, ஒரு வித இறுக்கத்துடன் இருந்தவள் சற்றே ரிலாக்ஸ் ஆனது போல் உணர்ந்தேன்..அதனால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் உன்னுடன் சொப்பு விளையாட வருகிறேன் என்றேன்.. அவளும் உடனே என்னை அழைத்தாள், நான் பிறகு வருகிறேன் என்று அவளின் பிஞ்சு கைகளை ஆசையுடன் பிடுத்து சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

நேற்று தான் நேரம் கிடைத்தது... எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடங்கள் தான் பப்புவின் வீடு.. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. அங்கு சென்றவுடன் ஆயாவிடம் நான் பப்புவின் ஃபிரண்டு என்று சொல்ல. ".ஓ நீதான் அந்த ஃபிரண்டா? பப்பு கூட அவள் ஃபிரண்டு வராங்கன்னுத்தான் சொன்னாள் " என்றார்கள்.."ஆஹா.. நம்மை விட ஸ்பீடா இருக்காளா பப்பு' அவளை முந்த விடக்கூடாது என்று முடிவெடுத்து விளையாட ஆரம்பித்தோம்.

ஏன் என்ற கேள்வி...
நான் தான் கேள்வியின் நாயகி என்றாள் பப்பு எனக்கு அக்கா'வாக இருந்தாள்..அவள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாவிட்டாலும் பக்கத்துவீட்டு ஆன்ட்டி சரியா பதில் சொன்னார்கள். எந்த கேள்வி கேட்கும் போதும் அதில் ஒரு தயக்கமோ...இல்லை சந்தேகமோ இல்லை.. பட், பட்டென்று வந்தன..

1. ஏன் நீங்க அன்னைக்கு வரேன்ன்னு வரலை? ம்ம்???!!
2. ஏன் நீங்க பொட்டு வச்சி இருக்கீங்க..? (அந்த பொட்டை எடுத்து போட்டு விட்டு பக்கத்து வீட்டு ஆன்ட்டி நெற்றியில் இருந்த பொட்டை வைத்து, வேறு ஒரு பொட்டையும் உள்ளெ இருந்து எடுத்து வந்து வைத்துவிட்டாள்)
3. ஏன் நீங்க இந்த கம்மல் போட்டு இருக்கீங்க?
4. காலில் உள்ள மெட்டியை காட்டி ஏன் இதை போட்டு இருக்கீங்க..?
5. ஏன் நீங்க தொப்பி போட்டு இருக்கீங்க..?
6. ஏன் நீங்க கண்ணாடி போட்டு இருக்கீங்க?
7. ஏன் நீங்க வண்டியில வந்தீங்க.. ?
8. ஏன் நீங்க நடந்து வரலை?
9. ஏன் நீங்க பேசறீங்க உங்களை பேசவேணாம்னு எத்தனை வாட்டி சொல்றேன்..!! பேசாதீங்கன்னா பேசாதீங்க.. !! (பக்கத்து வீட்டு ஆன்ட்டி'யிடம் பேச ஆரம்பித்தாலே அவளுக்கு பிடிக்கவில்லை அவளிடம் மட்டுமே பேசவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள், மீறி பேசினாள் இப்படி திட்டு மட்டும் இல்லை நல்ல அடியும் கிடைத்தது)

கதையும் கற்பனையும்..
பப்புத்தான் எனக்கு அக்கான்னு சொல்லிட்டேனே.. கதைக்கும், கற்பனைக்குமா பஞ்சம் ?! நான் எதிர்பாராதது எல்லாம் நடந்தது. திடீரென்று "ஹய்யோ அங்க பாருங்க பாம்பு பாக்குது ..." நெஜமவா...எங்க எங்க...?" (பக்கத்து வீட்டு ஆன்ட்டி கண்டுக்காம பேசாமல் இருந்தார்கள், என்ன இவங்க இப்படி இருக்காங்களேன்னு நினைப்பதற்குள்) "பேசுது பாருங்க.. " (ஆஹா... எனக்கேவா.. !! ) பப்பு..எங்கம்மா இருக்கு?!! காட்டு.. வாங்க காட்டறேன்னு.. கூட்டுட்டு போயி ரோடில் இருந்த காரை காட்டி அங்க பாருங்க.. அந்த் கார் மேல பாம்பு இருக்கு.. பாருங்க என்னை வா வா' ன்னு கூப்பிடுது.... (அடட்டா... முடியலியே.. நிஜமாவே நம்மை மிஞ்சிடுவா போல இருக்கே..!!)

"அட..ஆமா இல்ல அங்க பாம்பு இருக்கு..ஏ பாம்பு பப்பு கிட்ட வாராதே! போ..போ.."என்று சொல்லிவிட்டு வந்த சிறிது நேரத்தில்... "ஹேஏ...சிங்கம் பாருங்க சிங்கம்........." நான் இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தேன்.."எங்கம்மா சிங்கம் ?" என்றவுடன் கையை பிடித்து என்னை கதவருகில் அழைத்து சென்று கீழே குனிய வைத்து ..இதோ உங்க உட்கார்ந்து இருக்கு பாருங்க.". என்றாள், " அட ஆமா சிங்கம்...?" ஏ சிங்கம் ஏன் இங்க வந்து உட்கார்ந்து இருக்க..? போ போ.. பப்பு தனியா இருக்கும் போது இப்படியெல்லாம் வரக்கூடாது போயிடு.. " பப்புவும்.. கூடவே.. ஆமா போ...போ.. வராதே போ.....:" ..என்றாள்..

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த அவங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி'க்கு கொஞ்சம் தரும சங்கடமாக இருந்தது.. "பப்பு ஆன்ட்டி'க்கு உடம்பு சரியில்லை அவங்கள தொந்தரவு செய்யாமல் விளையாடு " என்றார்கள். கீழ்தளத்தில் ஆட்டம் முடிந்து மேல் தளம் செல்ல ஆயத்தமானோம். .பப்பு உடனே. "என்னோட பூனையை காட்டறேன் வாங்க" என்றாள்.. என் கையை பிடித்து இழுத்து சென்றவள் படி அருகில் சென்றவுடன். .சந்தேகத்துடன்.. "ஆமா நீங்க படி ஏறுவீங்களா? .. (உடம்பு சரியில்லைன்னு சொன்னதால் கேட்கிறாள் போல என்று நினைத்து).. இன்னும் அந்த அளவு வயசு ஆகலை.. ஏறுவேன்மா.. " வா போகலாம் என்றேன்..

பக்கத்து வீட்டு ஆன்ட்டி CD ஐ போட, பாட்டுடன் எல்லா விலங்குகளும் இருக்கும் படம் வந்தது.. அதை ஊஞ்சலில் ஆடிய படியே பார்த்தோம். என் கவனம் முழுதும் அந்த படத்தை விட்டு அப்படி இப்படி போகாமல் பப்பு கவனமாக பார்த்துக்கொண்டாள். என்னை அந்த பிஞ்சு கரங்களால் இழுத்து இழுத்து அணைத்தவாரே பார்த்தாள்...நடு நடுவே படத்தை பற்றி சொல்லியவாறே இருந்தாள்..

பாட்டும் கூத்தும்
அடுத்து ஆரம்பித்தது பாட்டு செக்ஷன், ரைம்ஸ் சொல்லி குதித்தாள்... சொப்பு விளையாட ஆரம்பித்தோம் ரொம்ப நேரம் விளையாடவில்லை. .பாத்ரூம் போகவும் நான் வேண்டும் என்றாள்... நானும் சென்றேன்.. பக்கத்து வீட்டு ஆன்ட்டி'க்கு தான் ரொம்பவும் தர்மசங்கடமாக ஆகிவிட்டது... பிறகு இருவரும் சாக்லெட் சாப்பிட்டோம்.. அவள் வரைந்த படங்களை பார்த்து மெய் மறந்தோம்... என் மேலும், அந்த ஆன்ட்டி மேலும் ஏறி ஏறி குதித்தாள்... அவளை தூக்கி கொள்ள வேண்டும் என்றாள் அதற்கு பிறகு வெளியில் விளையாட செல்லும் வரை தூக்கிக்கொண்டு தான் இருந்தேன்... :)

தோட்டத்தில் இரண்டு ரோஜாக்கள்
வேற யாரு நானும் பப்புவும் தான்... வெளியில் சிறிது நேரம், கையை கிராசாக வைத்து நீட்டி என்னையும் அதே போல் செய்ய சொல்லி இருவரும் சுற்றி சுற்றி விளையாடினோம்.. என்னையும் குதிக்க சொன்னாள்.. உடம்பு சரியில்லைம்மா என்று எஸ் ஆனேன்.. . அங்கேயும் இங்கேயும் இழுத்துக்கொண்டு சுற்றினாள் "இதான் உங்க ஆபிஸ். உங்களை விட்டுட்டு போறேன். .சத்தம் இல்லாம பேசாம இருக்கனும் வேனும்னா விளையாடிக்கோங்க" என்றாள்.. "சரிங்க அப்படியே செய்யறேன்." போய் விட்டு திரும்பவும் வந்தாள் "சரி ..டைம் ஆச்சி வாங்க.. போலாம் ஆபிஸ் விட்டாச்சி" என்றாள் "சரி போவோம்" என்று இருவரும் வந்தோம்.

பக்கத்து வீட்டு ஆன்ட்டி காப்பி கொடுத்தார்கள்... குடித்தேன் ..நேரம் ஆகிவிட்டது என்று கிளம்பினேன்...

பிரியா விடை :-
போகவே கூடாது என்று அடம் பிடித்தவளை எப்படியோ சமாதானம் செய்து 31 ந்தேதி திரும்பியும் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினோம்.. பாதி தூரம் அவளும் பக்கத்து வீட்டு ஆன்ட்டி'யும் வந்தனர்.. கடைசிவரை எனக்கு டா டா சொல்லவே இல்லை... உர்' என்று கோபமாக பார்த்தவாறே இருந்தாள்.. சரி நேரம் ஆகிவிட்டது அவளையும் ரொம்ப ஃபீல் செய்ய வைக்கக்கூடாது என்று கிளம்பிவிட்டேன்..

பின் குறிப்பு:- ம்ம்ம்...உங்களுக்கு எல்லாம் அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி யாருன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்குமே.. அது வேற யாருமில்லை.. நம்ம முல்லை தான்.. என் மேல் பப்பு அதிகபாசம் வந்து.. "இனிமே இவங்க தான் என் அம்மா.." என்று சொல்ல, முல்லை அவளை "அப்பன்னா நான் யாரு?" என்ற கேட்க..." ம்ம்.."நீயா..நீயா.. (நான் காதுக்குள் பக்கத்து வீட்டு ஆன்ட்டி என்று சொல்ல) "ஆமா நீ..பக்கத்து வீட்டு ஆன்ட்டி 'என்று சொன்னதோடு மட்டும் இல்லாமல்... முல்லையை கையை பிடித்து இழுத்து "முதல்ல நீ பக்கத்து வீட்டுக்கு போ " என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

சரி முல்லை என்னை அடித்து விரட்டுவதற்குள் வந்துவிட வேண்டும் என்று வந்துவிட்டேன்.. :))

அணில் குட்டி அனிதா:- போனதுக்கு என்ன செய்யமுடியுமோ செய்துட்டு வந்துட்டீங்க போல.. ஒரு மணி நேரம் இருந்ததற்கே. .அம்மாவை ஆன்ட்டி'னு சொல்ல வச்சிட்டீங்கன்னா. .உங்களை எல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் இருக்க விட்டா... யப்பா வீடு என்ன ஊரே தாங்காதும்மா... மக்கா திருப்ப திருப்ப சொல்றேன்.. சாக்கறதை.. :(.. அம்மணி ய ஒரு டிஸ்ட்டன்ஸ் ல வைங்க.. !!

பீட்டர் தாத்ஸ்:- Education of children, especially girls, is the cornerstone to national progress,

இவர்களும் குழந்தைகளே...

வேளச்சேரி அடையார் பேக்கரி, கேக் வாங்க சென்றேன்.. வாங்கிவிட்டு கூல் டிரிக் ஒன்று வாங்கி, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்த நேரம் ஒரு பகட்டு குடும்பம் வந்தது. ஒரு அம்மா, ஒத்த வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உடன் வந்தனர்.

அதில் அந்த அம்மாவின் நடை உடை'யிலிருந்து நல்ல வசதி என்று தெரிந்தது. குழந்தைகளில் இரண்டு அந்த அம்மாவின் குழந்தைகள் என்பதும் அவர்களின் முக சாயலிலிருந்தும், உடைகளிலிருந்தும் தெரிந்தது. ஒரு பெண் குழந்தை மட்டும் ஒரு சாதாரண நைட்டியின் மேல் ஒரு துப்பட்டா போட்டு இருந்தது. அந்த குழந்தைக்கு ஒரு 10 வயது இருக்கலாம். அந்த குழந்தை அந்த வீட்டில் வேலை செய்கிறாள் என்பது அவள் உடையை பார்த்ததும் தெரிந்தது.

இந்த அம்மா அந்த இரண்டு குழந்தைகளிடம் மட்டும் என்ன வேண்டும் என்ற கேட்க..அவர்கள் இருவரும் யோசித்து, எல்லாவற்றையும் பார்த்து.. கேக், சிக்கன் ஃப்வ் என்று ஆர்டர் செய்ய, இந்த அம்மாவும் அவர்களுக்கும் சிக்கன் ஃபவ் ஒன்று ஆர்டர் செய்துவிட்டு.. இந்த குழந்தைக்கு மட்டும் ஒரு சின்ன மாசா பாட்டிலை வாங்கி கையில் கொடுத்தார்.

அந்த குழந்தையும் அதை கையில் வாங்கி குடிக்க ஆரம்பித்தது.. ஆனால் அந்த குழந்தையின் கண்கள் இந்த இரண்டு குழந்தைகள் வைத்து இருந்த அந்த கேக்'கின் மேல் தான் இருந்தது. அதையும் அந்த குழந்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தனக்கு கொடுக்கப்பட்ட மாசா'வை குடித்தது..

என்ன கொடுமை இது.. ஒரே வயது ஒத்த குழந்தைகள், ஒரே மாதிரியான ஆசைகள், விளையாட்டுத்தனம், சிந்தனை , செயல்கள் எல்லாமே இருக்கும். வேலை செய்யும் குழந்தை என்பதால் அதை இப்படித்தான் நடத்தப்படவேண்டுமா? ..அப்படி நடத்துபவர்கள் அந்த குழந்தையை இப்படி பொது இடங்களுக்கு இப்படிப்பட்ட உடையுடன் அழைத்து வராமலேயே இருக்கலாமே..?!

இந்த குழந்தைகள் மனதளவில் எத்தனை வேதனைப்படுவார்கள், அவர்களின் ஏழ்மையினால் ஏற்பட்ட இயலாமை அவர்களின் மனதில் ஏற்படும் சிறு வயது சின்ன சின்ன ஏமாற்றங்கள், ஏக்கங்கள் அவர்களது வாழ்க்கையில் எப்படிப்பட்ட எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளில் என்ன பாகுபாடு?!! மனிதர்களிலேயே பாகுபாடு கூடாது. .இதில் குழந்தைகளில்..?!!

எனக்குமே இப்படி நடந்து இருக்கிறது என்னுடைய திருமணத்தின் போது. எதற்குமே உதவாத, என்னை விட வயதில் பல மடங்கு அதிகமான ஒரு நபரை என் சொந்தங்கள் எனக்கு பார்த்த போது, என் பெரிய அண்ணன் என் அத்தையிடம் " ஏன் அத்தை உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்ப்பீர்களா? ஏன் இப்படி மனசாட்சியே இல்லாமல் நடந்துக்கொள்கிறீர்கள் ?" என்று கேட்டார். அதற்கு அத்தை மிகவும் பொறுமையாக நிதானமாக "கண்டிப்பாக என் பெண்ணிற்கு அப்படி ஒரு மாப்பிள்ளையை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, காரணம் நான் இருக்கிறேன், மாமா இருக்கிறார், அதற்கு மேல் என் பெண்ணிற்கு 100 என்ன 150 பவுன் நகை போடுவேன்( இது நடந்தது 90 களில்) , உன் தங்கைக்கு உன்னால் அவ்வளவு செய்ய முடியுமா? , உன்னால் முடியாது! அதனால் யாருக்கும் பாரமில்லாமல் அந்த பெண்ணை கேட்பவர்களுக்கு கட்டிக்கொடு.. வீடு வீடாக விட்டு வைக்காதே.. வயது பெண்ணை எவ்வளவு நாள் நாங்கள் பார்த்துக்கொள்வது ?" என்றார். இந்த பேச்சு நடக்கும் போது நானும் அங்கு இருந்தேன்.. இன்னமும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத வார்த்தைகள் இவை. பசுமரத்து ஆணிபோன்று பதிந்து போன வார்த்தைகள் இவை.

உண்மையை தான் அவர் சொன்னார், அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை என்றாலுமே, ஏழையாக இருந்தாலும் ஓரளவுக்கு பார்த்தாவது ஒரு மாப்பிள்ளைக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற மிக சாதாரண நல்ல எண்ணம் இல்லாதது கூட பரவாயில்லை, சொந்த அண்ணன் பெற்ற குலவிளக்கு , அந்த அண்ணன் தான் இவர்களுக்கு எல்லாம் தன் பணத்தில் திருமணம் செய்துவைத்தார், அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் எதுவுமே சேர்த்து வைத்து கொள்ளாமல் .. :).... சரி சொன்னார்கள் இதை எங்கள் இருவரின் மனம் நோகாமல் சொல்லி இருக்கலாம்.. வடுக்களாக பதிந்து இருக்காது... :(

ம்ம்..இப்படிப்பட்ட மனிதர்கள் தான் கொடுக்கிறார்கள் மன உறுதியையும், போராடக்கூடிய எண்ணத்தையும். வாழ்க்கையின் தோல்விகள் எல்லாவற்றையும் வெற்றியாக்க வைராக்கியத்தையும். இப்படிப்பட்ட வார்த்தைகள் எனக்கு இன்னமும் பயன்படுகிறது. :) :):) அவர்களும் அவர்கள் குடும்பமும் நன்றாக எப்போதும் இருக்க வேண்டும் என்னுடைய இந்த வடுங்களின் ரணங்கள் அவர்களை எதுவும் செய்து விடக்கூடாது கடவுளே என்று நான் பல சமயங்களில் நினைப்பதும் உண்டு.

தலைப்புக்கு வருகிறேன். ! .குழந்தைகள் குழந்தைகள் தான் .... வசதி இல்லாதவர்களாக இருக்கட்டும், வேலை செய்பவர்களாக இருக்கட்டும், தாய் தகப்பன் இல்லாதவர்களாக இருக்கட்டும், நொண்டி முடமாக இருக்கட்டும்.. ..குழந்தைகள் குழந்தைகள் தான். .அவர்களின் மனம் நோகும் படி பாரபட்சமாக நடந்துக்கொள்ளாதீர்கள்... வடுக்களை உண்டாக்காதீர்கள்..

அணில் குட்டி அனிதா:- ஓ.. அப்ப ஏதோ ஒரு அப்பாவி தப்பிட்டாருன்னு சொல்லுங்க... .. கவி கிட்ட மாட்டி இருந்தஆஆஆ? வயசானவர்னு வேற சொல்றீங்க. .அய்யோ பாவம் அவர் கதி........ :( செம லக்கி அவரு, தலைக்கு வந்தது தலைப்பாயோடு போயிடுச்சி'அவருக்கு...... !! :)

பீட்டர் தாத்ஸ்:- Children need love, especially when they do not deserve it. ~Harold Hulbert

கவிதா'ஆஆ..... மைண்டு யுவர் டங்கு..!!

இந்த பதிவு ரொம்ப முக்கியமானது...அனைவருக்கும் நன்றி கூறும் விஷயம்.!! அதான் சஞ்ஜய்'யோட டயலாக்'ஐ நான் திருட வேண்டியதாக போச்சி..!! நன்றி சஞ்ஜய்!! தலைப்புக்கு தான்..!! :))

கேப்பங்கஞ்சி பதிவு ஒன்றில் முதியோர் இல்லம் ஒன்றிற்கு உதவி கேட்டுருந்தேன். ஒருவர் இரண்டு பேரை தவிர யாரும் கண்டுக்கொள்ளவில்லை.. அதனால், எப்படியும் உங்கள் அனைவரின் உயிரையும் வாங்காமல் விடக்கூடாது என்று முடிவு செய்து "அம்மா தாயே கவிதா'க்கு உதவி செய்யுங்கள்" என்று தனிப்பட்ட முறையில் நண்பர்கள் அனைவருக்கும் ஈமெயில் அனுப்பி இருந்தேன்.

அன்பு உள்ளங்கள் கொண்ட ப்ளாக் நண்பர்கள் உதவி செய்து இருக்கிறார்கள், எனக்கு தெரிந்தே 10-15 பேர் இருக்கும். வெளி நாடுகளிலிருந்து சிரமம் பாராமல் பணம் அனுப்பி உள்ளனர். இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய ஒன்று உதவி செய்தவர்கள் யாருமே அவர்கள் பெயரை வெளியிடுவதை விரும்பவில்லை.

உதவி செய்த அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கத்தையும் மனம் உவந்த நன்றியை'யும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். உதவி செய்த அன்பர்கள் மட்டும் இல்லை மற்றவர்களுக்கும் என்னால் ஏதாவது செய்யமுடியும் என்று நினைத்தால் கண்டிப்பாக செய்கிறேன்... ஏதாவது உதவி என்னால் செய்யமுடியும் என்று யாராவது நினைத்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இங்கே... நயன் நாயகன் சிபிக்கு மட்டும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. மேலே சொன்னதை வைத்து.."நீங்கள் தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்" என்ற உதவியை மட்டும் கேட்கக்கூடாது. அதை தவிர்த்து என்ன உதவி கேட்டாலும் செய்து தருகிறேன்.. :))

மேலும் இந்த விஷயத்தை பெரியதாக்கி மதக்கலவரத்தை திரைமறைவில் தூண்ட நினைத்த ரவி'யை நான் யாழினி சார்பாக மிக மிக அன்பாக கண்டித்துக்கொள்ளுகிறேன். யாழினி மட்டும் நடுவே வரவில்லை என்றால் ரவி'யின் கதி அதோ'கதி ஆகியிருக்கும், தமிழ்மணத்தில் பெரிய கலவரமே வெடித்திருக்கும் என்பதையும் சபையில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

மீண்டும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி'கள்.... நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும்.. கல்வி, செல்வம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று !!! "வாழ்க வளமுடன்" !!!

அணில் குட்டி அனிதா:- ஆனா சொல்லிட்டேன் கவி' ரேஞ்சுக்கு யாராலையும் பில்டப்' கொடுத்து எழுத முடியாது...... மக்கா நான் சொல்லறது சரிதானே.. என்னம்மா வார்த்தைய போட்டு விளையாடறாங்கப்பா.. மக்கா கவுந்துடாதீங்க.. உஷார்.. இப்படி பேசி பேசி வூட்டுக்கு ஏதாவது வசூல் பண்ணிடபோறாங்க.. ஜாக்கறதை இருக்கனும் நீங்க எல்லாம் ஓகே... !!

பீட்டர் தாத்ஸ்:- The smallest act of kindness is worth more than the grandest intention. ~Oscar Wilde

கலைஞரின் கைஅசைப்பு....

தொலைக்காட்சிகளில் பார்க்கின்ற போதே கலைஞரின் தள்ளாமை தெரிகிறது.. இந்த வயதிலும் யாருக்கும் இல்லாத நல்ல நினைவாற்றல், எப்போதுமே குறையாத நகைச்சுவை உணர்வு, அவரின் கோபாலபுரம் வீட்டிற்கு மிக அருகில் (என்) அம்மாவின் வீடு. அதனால் அங்கு போகும் போது எல்லாம் அவரின் பேச்சு வருவது இயற்கை. சின்னவயதில் அவரை பார்க்க விடியலிலேயே காத்திருப்பேன். ஒரு விஐபி வீட்டிற்கு பக்கத்தில் இருப்பதால் ஏற்படும் குறைந்த பட்ச ஆர்வம் இது.

பொங்கல் விடுமுறை, பெரியம்மாவைப் பார்க்கச் சென்றோம், வாகனங்கள் முன்பு போல் எளிதாக வீட்டு வாசலில் விடமுடிவதில்லை. கருப்புப் பூனைப் படை கையில் ஏந்திய துப்பாக்கியுடன் எப்போதும் காவல். இவர்கள் இருந்தாலே ஐயா வீட்டிலிருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.

பெரியம்மாவைப் பார்த்துவிட்டு கிளம்பி வெளியில் வரும்போது ஐயா புறப்பட்டு வெளியில் வர தயாராகிவிட்டது தெரிந்தது. எங்களுக்கும் வாகனம் எடுத்து செல்ல அனுமதி இல்லை. நாங்களும் ஐயாவைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்று நின்றுருந்தோம்.

எப்படியும் அவர் எங்களை பார்ப்பார் என்று மனதுக்குள் என்னவோ ஒரு நம்பிக்கை. பெரியம்மாவிடம் அவரின் கண்பார்வையைப் பற்றி விசாரித்தேன்... நன்றாகதான் இருக்கிறார், நடப்பதற்கு தான் சிரமப்படுகிறார் என்றார்கள். இதை விசாரித்தது கூட அவர் எங்களை அங்கிருந்து பார்ப்பாரா என்று எண்ணத்தில் தான்...

நடுவே பெரியப்பா அவரின் நகைச்சுவை உணர்வு பற்றி சொல்லிக்கொண்டே வந்தார். என் அண்ணன் 80களில் அமெரிக்கா சென்று செட்டில் ஆனவர், வரும்போது எல்லாம் ஐயாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கச் செல்வார். அப்போது ஒரு முறை , "ஏம்பா உன் தலையும், என் தலையை போல் ஆகிவிட்டதே... ?!!.. என்றாராம். இப்படி இன்னும் நிறைய அவரை பற்றி பெரியப்பா சொல்லியவாறே இருக்க நாங்களும் கேட்டுக்கொண்டே அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

எனக்கு தெரிந்து அவரின் கார் ரோடில் தான் நிறகும் , வெளியில் வந்து தான் வண்டியில் ஏறுவார்கள், ஆனால் இப்போது எல்லாம் அவரால் நடக்க முடியாததால் இடது புறம் இருக்கும் கேட் வழியாக அவரின் கார் வீட்டு வாசலிலேயே நின்றிருந்தது. பாதுகாப்புக்காக வெளியில் நின்றிருந்த எல்லா கார்களும் இப்போது ஸ்டார்ட் செய்யப்பட்டன. இரண்டு இளம் வயது செகரட்டரிகள் முதலில் வெளியில் வந்தார்கள், (பெரியப்பா தான் அவர்கள் யார் என்பதை சொன்னார்) அவர்களை பார்த்து எல்லா போலிஸ்காரர்களும் சலியூட் அடித்தனர்.. இது என்ன வேடிக்கை ஏன் அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று என் கணவரை நோண்டினேன்.. "அவர்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சும்மா இல்லை. உங்க ஆபிஸ் செகரட்டரின்னு நெனச்சியா? சும்மா வாயை மூடிக்கிட்டு பேசாமல் பாரு " என்றார்.

ம்ம்....ஐயா வந்துவிட்டார் ஆனால் நடந்து வரவில்லை..வீல் சேர் படி வரை வந்தது. மெதுவாக எழுந்து , பாதுகாவலர்களின் கைகளை பிடித்து மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கினார்.. முதல் படியில் கால் வைக்கும் போதே எங்களை பார்த்துவிட்டார் போல....

நாங்கள் எதிர்பார்க்காத தருவாயில் அங்கிருந்து எங்களை பார்த்து "கை அசைத்தார்..." ஹய்யோ!! நான் எதிர்பார்க்கவேயில்லை..!!! எங்களை கண்டிப்பாக பார்ப்பார் என்று யூகித்தேனே தவிர, கை அசைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை..... நாங்கள் மூவர் மட்டுமே. .எங்களுக்காக மட்டுமே "கை அசைத்தார் , " ஹய்யோ !! எனக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை .! :))) பெரியப்பாவும், என் கணவரும் உடனே கைக் கூப்பி வணக்கம் சொன்னார்கள்.. அவர்களை பார்த்தபிறகு தான் எனக்கு கையே மேலே வந்தது. .சந்தோஷத்தில் மரியாதையை மறந்து அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.. பிறகு நானும் வணக்கம் சொன்னேன்...

பொங்கல் அதுவுமாக ஐயாவின் ஆசிர்வாதம் கிடைத்த மகிழ்ச்சி... :)))

அணில் குட்டி அனிதா: ஆமா எதுக்கு இப்ப இந்த போஸ்டு,? தேவையா இது ? ஏன் கவி, சப்ப மேட்டர் க்கு எல்லாம் பெரிய பில்டப் கொடுத்து ஓவரா எழுதறீங்க.. என்னவோ நல்லா இல்ல சொல்லிட்டேன்...

பீட்டர் தாத்ஸ் : Sir, I wish to understand the true principles of the Government. I wish them carried out. I ask nothing more.

மும்பை'யை சுத்தி பார்க்க போனேன், ஜுஹூ பீச்சில் வீடு கட்ட போனேன்..

அணில் குட்டி அனிதா:- டிரியாங்க.. டிரியன் டிரியன் டிரியாங்...... ம்ம் பாடுங்க பாடுங்க... அம்மணி விட்டா நடு ரோட்டுல கூட வீடு கட்டுவாங்க... !! தெரியாதா...?! கவி என்னவோ அமெரிக்கா போயிட்டு வந்த ரேஞ்சுக்கு மும்பை போயிட்டு வந்ததை அளக்க போறாங்கன்னு தலைப்பை பாத்தா தெரியுது... ம்ம்ம்... லெட்'ஸ் ஸீ....

கவிதா :- மும்பை - இப்போது தான் முதல் முறையாக செல்கிறேன். ரொம்பவும் பிடித்து போனது. நிறைய நல்ல விஷ்யங்கள், கண்டிப்பாக நாம்.. (தமிழர்கள்) கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்களை கவனிக்க நேர்ந்தது.

1. நகரம் மிக சுத்தமாக இருந்தது. துப்பறவு தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை மிக சரியாக செய்து கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது. சென்னையை போன்று சாக்கடை, குப்பை மேடுகள் என் கண்ணில் படவில்லை.

2. பிச்சைக்காரர்களை பார்க்கவில்லை.

3. மக்களிடம் ஒரு வேகம், சுறுசுறுப்பு தெரிந்தது. நம்மிடம் இல்லாத ஒரு வேகம் அவர்களிடம் இருப்பதாக தெரிந்தது.

4. அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே பார்க்க முடிந்தது. கட்டிடங்கள் எல்லாமே குறைந்த பட்சம் 15-25 அடுக்குகள் வரை இருக்கின்றன்.. சின்ன அடுக்குமாடி கட்டிடங்கள் இருந்தாலும் உயர உயரமாக அன்னாந்து பார்த்து கழுத்து வலி வந்தது.

5. எல்லா வீடுகளிலும் நகராட்சி அனுப்பும் தண்ணீர் மட்டுமே, தனியாக தண்ணீருக்காக யாரும் போர் போட்டுக்கொள்ள அனுமதி இல்லை.

6. நகரத்தின் குறிப்பிட்ட பிஸியான இடங்களில் ஆட்டோ செல்ல அனுமதி இல்லை, இது போக்குவரத்து நெரிசலை குறைக்க போட்ட சட்டம். டாக்ஸி மட்டுமே ஓடுகிறது.

7. பெண்கள் மிகவும் அழகாக இருந்தனர். அதிகபட்சமாக எல்லோருக்கும் லேசாக தொப்பை இருந்தது..... இந்தியர்கள் தானா என்று நினைக்கும் அளவிற்கு அப்படி ஒரு வெள்ளை நிறமே வெள்ளை நிறமே.. !!

8. குடியிருப்புகள் இருக்கும் பகுதியிலேயே ஒவ்வொரு தெரு முனையிலும் பீர் கடை இருந்தது. அதுவும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல், குடிகாரர்களின் சண்டை, கூச்சல், அட்டகாசம் என்று எதுவுமே இல்லாமல், எந்த நேரமும் கூட்டமும் இல்லாமல் இருந்தது. ஆச்சரியமாக இருந்தது. நம் தெரு முக்கில் மளிகை கடை பக்கத்தில் ஒரு பீர் கடை இருந்தால் எப்படியோ அப்ப்டி....

9. சினிமா அரங்குகளில் பால் அபிஷேகம் இல்லை, நாங்கள் சென்ற அன்று தான் கஜினி படம் அங்கு ரிலீஸ் ஆகியிருந்தது. போஸ்டர் கூட பெரிதாக இல்லை. அதிக பட்ச உயரம் 5 X 7 அல்லது 6 X 8 அளவில் தான் போஸ்டர்கள் இருந்தன. நகரத்தின் மைய பகுதிகளில் எங்கும் கட் அவுட்டுகளை அதிகமாக பார்க்கமுடியவில்லை.

10. கடற்கரை இல்லாத கடல், அலையே இல்லாத கடல், இது கடல் தானா என்று சந்தேகம் வர வைத்த கடல். ஜுஹூ பீச்சில் மட்டும் கொஞ்சம் கடற்கரை இருந்தது.

11. நம் உணவுகள் எல்லாம் கிடைக்காவிட்டாலும் தோசை, இட்லி கிடைத்தன...

12. பெரிய பெரிய ஷாப்பிங்மால்... கண்களுக்கு விருந்து.

13. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு தாஜ் ஹோட்டல் அமைதியாக இருந்தது. பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருந்தது. சிஸ்டி ஸ்டேஷனில் இறந்தவர்கள், அடிப்பட்டவர்கள் விட்டு சென்ற உடமைகளை நடு கூடத்தில் குவித்து வைத்து ஒரு துணி போட்டு மூடி வைத்துள்ளனர். பார்த்து போது மனதில் ஒரு வித அழுத்தமும் வேதனையும் வந்தது. அங்கேயும் பாதுகாப்பு அதிகமாக இருந்தது.

14. ரயில் வழி போக்குவரத்து மிக துரிதமானதாக இருந்தது. 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் , கூட்டம் அலைமோதுகிறது, நிறைய தமிழர்களை பார்க்க நேர்ந்தது, என் திரு முகத்தை பார்த்தே நான் தமிழ் என்று தெரிந்தாலும், நானே புன்னகைத்தாலும் அவர்கள் திரும்பி புன்னகைக்கவில்லை :( கொஞ்சம் வருத்தப்பட்டேன். .ஏன் மக்கள் இப்படி அந்நியமாக இருக்கிறார்கள் ?!!

15. நல்ல க்ளைமேட் என் குழந்தை அங்கே மிகவும் அழகாக தெரிந்தான்...... :)))))))) அவனுடைய முகம் மிகவும் தெளிவாக இருந்தது...... அதற்கு அந்த க்ளைமேட் தான் காரணம் என்று புரிந்தது.

16. போர்ட் மிகவும் பிஸியாக இருந்தது. அங்கேயும் நிறைய பாதுகாப்பு.

17. அம்பானியின் 25 அடுக்குமாடி கட்டிடம் பார்த்தேன்...அதில் மூன்று அடுக்குகள் நீச்சல் குளம் மட்டுமே இருக்கிறது என்று அழைத்து சென்றவன் சொன்னான்... போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த அடுக்குமாடியில் உச்சியில் எலிபேட் இருக்கிறது.. அவர்கள் தரைவழி பயணம் செய்ய தேவையில்லை என்றும் சொன்னான்.

18. மும்பை லக்ஷ்மி கோயில், பிள்ளையார் கோயில் பார்த்தோம்.

19, பீச்சில் குல்பி ஐஸ்; க்கு ஆசைப்பட்டு வாங்கி சாப்பிட சகிக்காமல் கடலில் தூக்கிபோட்டோம்.

20. போக்குவரத்து காவலர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு தான். அவர்கள் அதை ஏந்தி போக்குவரத்தை சரிப்பார்ப்பது கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருந்தது.

21. எல்லா லோகல் பத்திரிக்கைகளிலும் இன்னும் தீவிரவாத தாக்குதல் பற்றியும் மும்பைவாசிகளின் பாதுக்காப்பு பற்றியும் செய்திகள் பார்க்க முடிந்தது. தாக்குதலில் இறந்தபோனவர்கள் பற்றிய செய்திகளும் நிறைய இருந்தன். அதில் மூன்று நண்பர்கள் பற்றிய செய்தி ஒன்று படித்தேன். சிஎஸ்டி ஸ்டேஷனில் வெடி சத்தம் கேட்டு எல்லோரும் கீழே படுத்துவிட்டு இருக்கின்றனர், யார் சத்தம் போடுகிறார்களோ, எழுந்து ஓடுகிறார்களோ, அசைகிறார்களோ அவர்கள் சுடப்பட்டார்கள், அதுவும் பலத்த சிரிப்போடு அவன் சுட்டு இருக்கிறான். இந்த நண்பர்கள் மூவரும் கீழே படுத்துவிட்டனர். எல்லாம் முடிந்து அமைதியாக ஆனவுடன் ஒரு நண்பர் மட்டும் போய்விட்டானா என்று தலையை சற்றே தூக்கி இருக்கிறார்.. சரியா நெற்றிபோட்டில் சுட்டு சாகடத்துவிட்டான் அந்த தீவிரவாதி. தப்பித்தபிறகு கடைசி நேரத்தில் உயிரிழந்த பரிதாபம் இது.

22. அடுத்த லோகல் பத்திரிக்கை ஹாட் நியூஸ் நம்ம அசின்.. அமிர் அசின், சல்மான்கான் அசின், அசின் நட்பால் சல்மான்கான் காதல் முறிவு, காதலி அவரின் பிறந்தநாளில் மிஸ்ஸிங்... அசின் மும்பையில் ஃப்ளாட் வாங்கிவிட்டார். அவர் சிரிக்கிறார், அழுகிறார், நடக்கிறார் என்று ஒரே அசின் செய்திகள்..

23. கேட் வே ஃஆப் இந்தியா விற்குள் நுழைய பாதுகாப்பு கருதி அனுமதி இல்லை.

24. சைக்கிள்கள், இரண்டு சக்கர வாகனங்கள் நிறைய பார்க்கமுடியவில்லை. ரயில் பயணம் எளிது என்பது இதற்கான சாத்தியகூறுகள்.

25, ஹை வேஸ் ரொம்ப பிஸியாக இருந்தன. கார்கள் உஸ் உஸ் என்று படு வேகமாக கடந்து சென்றன. அதிகமாக கார்களை பார்க்க நேர்ந்தது.

26. சாதாரண குடியிருப்பு சாலைகள் நல்ல அகலமாக இருந்தன. அதுவும் நவி மும்பை நல்ல பிளான் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

27. பங்கு சந்தை கட்டிடத்தை பார்த்தோம். டிவி யில் செய்திகளில் பங்கு சந்தை பற்றி சொல்லும் போது ஒரு கட்டிடத்தை காட்டுவார்களே அதே தான்.

28.வியாபாரம் அதிகமாக நடக்கும் இடமாக தெரிந்தது. அதனால் வசதியானவர்கள் அதிகமாக இருந்தனர். இதற்கு வியாபாரம் முக்கிய காரணமாக இருக்கவேண்டும்.

29. லாஸ்ட் பட் லீஸ்ட் எலிபேன்ட்டா கேவ், கடலிலிருந்து 3 கிமி படகில் உள்ளே சென்றால் இருக்கும் தீவு இது. பார்க்கவேண்டிய இடம். மகாபலிபுரம் பார்த்தவர்களுக்கு இந்த சிற்பர்கள் ஒன்றும் பெரிதல்ல என்றாலும் பார்க்கலாம். குகைகள் சில இருந்தன. மலை உச்சியில் நம் இரண்டு பீரங்கிகள் இருந்தன. அவ்வளவு பெரிய பீரங்கிகளை அதுவும் அது செய்ற்படும் இடத்திலிருந்து நான் பார்த்தது இல்லை. பூமிக்கு அடியில் அதற்கு தேவையான கட்டிடிங்கள், சின்ன சின்ன அறைகள், கும்மிருட்டாங்க இருந்ததால் பார்க்க முடியவில்லை.

மும்பை சுற்றிப்பார்க்க நிறைய இடம் இல்லை... எலிபேன்ட்டா கேவ், தாஜ் ஹோட்டல், கேட் வே ஆப் இந்தியா, மியூசியம், பீச் (மதில் சுவர் கட்டிய) பார்க்க இருக்கின்றன.. .பாதுகாப்பு மட்டும் இருந்தால் கண்டிப்பாக இந்தியாவில் செட்டில் ஆக கூடிய நல்ல அழகான சுறுசுறுப்பான நகரம்.

பீட்டர் தாத்ஸ் :- “There is no one who became rich because he broke a holiday, no one became fat because he broke a fast.

வெட்கமாய் இல்லை இப்படி ஓட்டு கேட்க??

தமிழ்மணத்தில் 2008 பதிவுகள் போட்டி நடக்கிறது. .தெரிந்த விஷயம். அதிக ஓட்டுக்கள் பெறுபவர் வெற்றிபெறுவார்... தெரிந்த விஷயம்..

தன் எழுத்து ஆற்றலினால், நல்ல எண்ணங்களினால் , நோக்கினால் எழுதப்பட்ட எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. நேர்மையாக எல்லா பதிவுகளையும் முடிந்த வரை படித்து அல்லவா ஓட்டு இட்டு ஒருவரை வெற்றி பெற செய்யவேண்டும்?..

ஒருத்தர் எனக்கு பின்னூட்டம் போட்டு இருக்கிறார்..

அவர் யாருரென்று எனக்கு தெரியாது. இது வரை என் பதிவுகளின் நான் அவரை பார்த்தது இல்லை. பின்னூட்டம் போடகிறவர்களை எல்லாம் தெரிந்து வைத்து க்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரி. ஆனால் இது வரை என் பதிவு பக்கமே வராதவர் இப்போது வந்து இரண்டு வார்த்தை என் பதிவை பற்றி எழுதிவிட்டு, எனக்கு ஓட்டு போடுங்கள் என்று

ஒரு அரை பக்கத்திற்கு ஒவ்வொரு பிரிவின் கீழ் அவரே தேர்தெடுத்த பதிவுகளை தனித்தனியாக சுட்டி உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்.

என்ன சுயநலம் ? எத்தனை சாமர்த்தியம்...?!! இப்படி கேவலமாக ஓட்டு கேட்க வேண்டுமா? சரி கேட்டாரே.. தனி மடல் அனுப்பி கேட்டு இருக்கலாம், கண்டிப்பாக கோபம் வந்து இருக்காது... சரி இமெயில் கிடைக்கவில்லை என்றால் பின்னூட்டத்தில் //Not for Publish// என்று எழுதி இருக்கலாம்.. எதுவும் இல்லாமல் என்னுடைய ப்ளாக்'ஐ அவரின் ஓட்டு வேட்டை நடத்தவும், விளம்பர இடமாகவும் பயன்படுத்திக்கொள்ள நல்ல யுத்தியை முயற்சி செய்து இருக்கிறார். !! சின்ன சின்ன விஷயத்தில் கூட நம்மால் நேர்மையாக நடந்து கொள்ள முடியவில்லை.?. இப்படி எல்லாம் ஓட்டு வாங்கி வெற்றி பெற வேண்டுமா?

இப்படி எத்தனை பேருக்கு அவர் செய்து இருக்கிறாரோ தெரியவில்லை...

தமிழ் மணத்தில் வெற்றி பெறுபவர் இப்படிப்பட்ட ஓட்டுகளினால் தான் என்றால்.. நினைத்து பார்க்கவே வேதனையாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக நல்ல படைப்புகள் பின்னால் தள்ளப்படும். இப்படி ஓட்டு கேட்டு தன் பதிவுகளை முன் நிறுத்த தெரியாத பலர் காணாமல் போவார்கள். இப்படி கேவலமாக கொஞ்சமும் நாகரீகமும், நேர்மையும் இல்லாமல் ஓட்டுகள் வாங்கும் படைப்புகள் முதலில் நிற்கும்...

எனக்கு பிடிக்காத பட்சத்தில் கண்டிப்பாக அந்த பின்னூட்டத்தை ரிஜெக்ட் செய்ய எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது இப்படி பதிவு போட வேண்டிய அவசியமில்லை தான். ஆனால் மேலே சொன்ன படி அவர் என் பதிவுக்காக 2 வரிகள் எழுதாமல், நேரடியாக ஓட்டு கேட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் நானும் படித்து பார்த்து பிடித்து இருந்தால் பதிவை ஓட்டில் சேர்த்து இருப்பேன், இல்லையேல் விட்டு இருப்பேன்..ஆனால், தன்னை மிகவும் சாமர்த்திய சாலியாக நினைத்து பார்வைகள் படிக்க வருபவர்கள் அத்தனை பேரும் அவரின் பின்னூட்டத்தை பார்த்து ஓட்டு போடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள என் பதிவினை பயன்படுத்திக்கொள்ள நினைத்து போடப்பட்ட பின்னூட்டம் என்பதால் இதை எழுத வேண்டியதாகிவிட்டது. என் பதிவை பற்றி ஒரு வரி எழுதியதால் மட்டுமே அவரின் பின்னூட்டத்தை நான் வெளியிடுவேன் என்று நினைத்திருந்தால்.. :)))) அப்படி ஒரு பின்னூட்டமே எனக்கு தேவையில்லை.!! :)))

அவரின் பெயரை குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.. காரணம் அதனால் திரும்பவும் அவருடைய பதிவுகள் என்னால் விளம்பரப்படுத்தபடும்.

இப்படி கேவலமாக ஓட்டு கேட்பதை விட தோற்று போகலாமே?!!

அணில் குட்டி அனிதா:- அம்மணிய அமைதியா இருக்க விடமாட்டாறாங்கப்பா நம்ம மக்கள்.. என்ன ரெம்ப நாளா பொங்கலையே ன்னு பார்த்தேன்.. பொங்கிட்டாங்க... ஸ்ஸ்..இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு...!! கவி ஈஸ் நார்மல் நவ்வூ!! :))

பீட்டர் தாத்ஸ்:He is very good. He doesn't have the best leaping ability but, you know, he has the smartness to know where to put his body, to position to get a rebound.

கொஞ்சம் விளையாடலாம் வாங்க...!!

1. இந்த படத்தில் எத்தனை முகங்கள் உள்ளன..?!!
2. இந்த படத்தில் எத்தனை ஓநாய்'கள் உள்ளன..?
3. இந்த படத்தில் எத்தனை விலங்குங்கள், பறவைகள் இருக்கின்றன?
4. எத்தனை விலங்குகள், என்ன என்ன விலங்குகள் இந்த படத்தில்-


அணில் குட்டி அனிதா:-
இதை சரியா சொல்றவங்களுக்கு அண்ணன் சிபி அவர்கள் கையால் அவர்கள் சொந்த செலவில் பரிசு உண்டு.. என்ன பரிசு என்பதை அவர் வந்து அறிவிப்பார்... தளபதி எல்லாரும் வெயிடீஸ்.........ப்ளீஸ் வந்து எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்

பீட்டர் தாத்ஸ் : "Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work." -Thomas Edison, American Inventor.

ராமா ராமா குஷ்பூ ஏம்மா ஏம்மா?

திருமதி குஷ்பூ சுந்தர் சி அவர்களுக்கு....

நாங்கள் எல்லாம் என்ன பாவம் செய்தோம்? குஷ்பூ அம்மா..!! தாயே..!! எவ்வளவு தான் நாங்கள் பொறுப்போம்..?!! சரி..சரி.....நான் ஒத்துக்கறேன்..எங்க புள்ளைங்க உங்க தீவிர ரசிகர்களாக மாறி ஒரு காலத்தில் உங்களுக்காக ஒரு கோவில் கட்டினாங்க....அதை நீங்க இன்னமும் போய் பார்த்ததில்லை என்பது நீங்கள் அளித்த பேட்டி மூலம் நாங்கள் அறிவோம். உங்க ரசிகர்கள் முட்டாள்கள் தான்.. ஆனா தொடர்ந்து நாங்க எல்லாருமே முட்டாள்களாகவே இருக்கனும்னு நீங்க முடிவு செய்யலாமா?

எந்த பெண்ணிடம் இல்லாத ஒன்று
அது ஏதோ...
அது ஏதோ
உன்னிடம் இருக்கிறது...
அதை அறியாமல் விடமாட்டேன்..

அப்படின்னு உங்களுக்கு பாட்டு எல்லாம் எழுதினாங்க..ஆனா..நீங்க என்ன அறிந்து கொள்வது ..என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிளாமராக நடித்துவிட்டீர்கள்... இன்னுமா? உங்களுக்கு என்ன இன்னமும் வருஷம் 16 என்ற படத்தில் வந்தது போலவே நினைச்சுக்கறீங்களா? தயவு செய்து உங்களை நீங்கள் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.. வர வர உங்களின் உடை அலங்காரம், தலை அலங்காரம் முக அலங்காரம், முதுகு அலங்காரம்னு பார்க்க முடியலைங்க.. இப்போது எல்லாம் வீட்டு வரவேற்பறை தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வருகின்றன். குடும்பத்தோடு பார்க்கிறோம். எவ்வளவு தான் நாங்களும் பொறுத்து பொறுத்து பார்க்கறது... ?!

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில வருகிறீர்கள்.. நீங்க திரும்பி நின்றாலே பக்குன்னு நெஞ்சை அடைக்குது...!! ஏன்னா பின்னாடி சுத்தமா துணியே இல்லை.. சரி தையல்காரன் மறந்துவிட்டானா? என்று பார்த்தால் எல்லா நிகழ்ச்சிகளிலும் நீங்கள் திரும்பாமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை மனம் உறுக வேண்டிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு நல்ல நிகழ்ச்சி சரி குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்காலம் என்றால் உங்கள் ஆடை குறைப்பு அருவருப்பை மட்டும் இல்லை வயிற்றை பிசைகிறது...

நீங்கள் 80 கிலோ வெயிட் இருந்த போது ஆடினீங்க தெரியுமா? "ஒத்த ரூபா தாரேன்.." ன்னு என்று ஒரு பாட்டு, அது சூப்பர் சூப்பர் ஹிட் ஆச்சி... அப்ப கூட நாங்க எல்லாம் உங்க நடனத்தை ரசித்தோம்.. நிஜமாக குண்டாக இருந்தாலும் நல்லாத்தான் இருந்தீங்க.. ஆனா வர வர நீங்க போடற் ஆட்டம் எங்களால தாங்க முடியல.. தயவு செய்து புரிஞ்சிக்கோங்க...

ஏங்க நாங்க என்னங்க பாவம் செய்தோம்... பொங்கல் அதுவுமா..வீட்டில் நிம்மதியாக டிவி பார்த்துகொண்டு இருக்கலாம் என்று நினைத்து உட்கார்ந்தால்... அட கடவுளே.. வில்லு படத்தில் "ராமா ராமா..ராமன் கிட்ட வில்ல கேட்டான்..பாட்டுல.. ஏங்க.. ஏங்க....?? இப்படி.. என்னால் இதுக்கு மேல பேச முடியலைங்க..........ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க.. அழுகை அழுகையா வருது... தயவுசெய்து எங்களை எல்லாம் விட்டுடுங்க.. உங்களுக்கு குடும்ப செலவுக்கு பணம் வேணும்னா.... அம்மா தாயே ன்னு ஒரு போஸ்டு போட்டு நான் மாசம் மாசம் பணம் உங்க வீட்டுக்கு அனுப்பிடறேன்.. ஆனா எங்களை இப்படி ஆட்டம் போட்டு சாக அடிச்சிடாதீங்க....

நீங்கள் போடும் ஆட்டத்தை தீவிரமாக எதிர்ப்பது மட்டும் இல்லாமல் சினிமாவில் ஆட்டம் மட்டுமாவது இனி போடுவதில்லை என்று எங்களுக்காக உங்கள் குழந்தைகளின் மீது சத்தியம் செய்து கொடுங்கள் என்று கேட்டு கொள்ளவது மட்டும் இல்லாமல்-

உங்க ஆட்டத்தை வில்லு பட பாட்டில் பார்த்து கை கால் விழுந்து, வாய் ஒரு பக்கமாக இழுத்து கொண்டு இன்றைக்கோ நாளைக்கோ என்று இழுத்துக்கொண்டு இருக்கும் என் அணில் குட்டியின் சார்பாக .......

எங்களின் நலம் காக்க வேண்டி

கவிதா... :(((

அணில் குட்டி அனிதா :- .....பவி... குஷ்ழ்....வேண்ட்,,,,,ஆம்.... நா...டி.வி...பாக்கல... சுஷ்..வேனா...மாஅ.ஆ... குழ்.....ஜாக்கெ... போ..ட... சொல் லு... குஷ்...வேன்......டா...சொல்லி...

பீட்டர் தாத்ஸ் :- “Is she fat? Her favorite food is Money”

நாத்தனார்......

நாத்தனார் ' இந்த போஸ்ட் வீட்டுல ரொம்ப முக்கியமான போஸ்ட். அதுவும் அண்ணனுக்கோ தம்பிக்கோ திருமணம் நடக்கும் போதே இவங்களோட முக்கியத்துவம் என்னன்னு தெரிஞ்சிடும். திருமணத்தன்று விளக்கு எடுத்து இவர்கள் முன்னால் நடக்க மாப்பிள்ளையும் பெண்ணும் பின்னால் மணப்பந்தலை சுற்றி வருவார்கள். அப்புறம் வீட்டிற்கு இந்த புது பெண் வந்தவுடன் இவர்கள் அந்த வீட்டிற்கு எத்தனை முக்கியமானவர்கள் என்று நிரூபிக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்வார்கள். மாமியார் மாமனார், கணவரின் சொந்தங்கள் அனைத்தும் அந்த புதுபெண் நாத்தனாரை எப்படி கவனிக்கவேண்டும் என்றும் சொல்லி தருவார்கள்....

மாமியார்கள் தான் வில்லிகள் என்றால் நாத்தனார்கள் பேக் கிரவுண்டு (back ground) வில்லிகள். நேரடியாக தொல்லை தரமுடியாவிட்டாலும் (பல வீடுகளில் திருமணம் ஆகி சென்றிருப்பார்கள்) மாமியாரை எவ்வளவு ஏற்றி விட முடியுமோ தொலைபேசி வழியாகவே ஏற்றி விட்டு பிரச்சனையை உண்டாக்குவார்கள். மாமியாருக்கு தெரியாத பாயிண்ட்ஸ் எல்லாம் இவர்கள் தான் சொல்லி தருவார்கள். இது தவிர்த்து தீபாவளி, பொங்கல், லொட்டு லொசுக்கு என்று எல்லா விஷேஷங்களுக்கும் இவர்களுக்கு பிறந்தவீட்டு சீர் செய்ய வேண்டும். பலகாரம், துணி மணி என்று காலம் முழுதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் போதும், என் அண்ணன் இவளை கல்யாணம் செய்து கொ(ல்)ள்கிறவரை எனக்கு எல்லாம் செய்தான், இவள் வந்த பிறகு எனக்கு எதையுமே செய்யவதில்லை என்று புலம்பி பிரச்சனையை உண்டாக்கிவிடுவார்கள்.

சரி நம்ம கதைக்கு வருவோம், எனக்கு ஒரு நாத்தனார், "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே..." என்னை பெண் பார்த்த அன்றைக்கு, என்னிடம் வந்து "உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, உன் நெற்றி ரொம்ப அழகாக இருக்குன்னு சொன்னாங்க" (சரி விடுங்க விடுங்க ஏதோ சொல்லிட்டாங்க...!) நான் ஒரு புன்முறுவலோடு நிறுத்திக்கொண்டேன். திருமணம் ஆனா பிறகும் இவர்களிடமிருந்து இருந்து ஒரு சத்தமும் இல்லை. ரொம்ப அன்பாக இருந்தார்கள். என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் திருமணத்திற்கு அடுத்த நாள் "நீ என்னை அண்ணி' ன்னு கூப்பிடுன்னு சொல்லிட்டாங்க.. .. போக போக இவங்க அன்பில நான் நனைய ஆரம்பிச்சி.. என் அன்பில அவங்க நனைய ஆரம்பிச்சி.. .நான் இல்லாமல் அவங்க இல்ல அவங்க இல்லாமல் நான் இல்லைன்னு ஒரு ஸ்டேஜ்’க்கு வந்துட்டோம். அது எப்படின்னு நீங்க எல்லாம் என்னை கேட்பீங்கன்னு தெரிஞ்சி தான் ஒரு உதாரணத்தோட இங்க வந்து இருக்கேன்..

மாமியார் வீட்டுக்கு செல்வது எப்போதோ ஒரு தரம், வீட்டு விஷேஷம், திருமணங்கள் இப்படி ஏதாவது இருந்தால் தான், இதில் நான் வேலை செய்கிறேன் என்று பாதி நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் தப்பித்துவிடுவேன் என்பது வேறு விஷயம். இப்படி போகும் போது எல்லாம், அங்கு நான் தேடுவது என் நாத்தனாரை தான்.. அன்பை பொழியன்னு நீங்க தப்பா நினைச்சுகாதீங்க, உட்கார அவங்களை விட்டா நல்ல இடம் கிடைக்காது.

சும்மா.. மெத்து மெத்துன்னு, கும்முன்னு, வீட்டு சோபா செட் எல்லாம் கெட்டுச்சி போங்க..! அவ்ளோ சூப்பரா உருண்டையா ரொம்ப ஸாப்ட்டா வேற இருப்பாங்க..கீழ படத்துல இருக்கிற சோபா மாதிரியே...இருப்பாங்க..ஹி ஹி..:)


அதனால அவங்க மடியில் உட்கார்ந்துகிட்டா நல்லா செளகரியமாக இருக்கும், நல்லா ரெஸ்ட் எடுத்த மாதிரியும் இருக்கும். அப்படியே அவங்களை கொஞ்சிக்கலாம். அவங்களும் நான் போய் மடியில் உட்கார்ந்தபிறகும் கண்டுக்கவே மாட்டாங்க வாம்மா’ன்னு கூப்பிட்டு உட்கார வச்சிக்குவாங்க.

"இதுல டென்ஷன் ஆகறது என் கணவர் தான்.. “ஏண்டி உனக்கு அறிவில்ல (அது இருந்து இருந்தா நான் அவரை கல்யாணமே செய்து இருக்க மாட்டேங்கறது வேற விஷயம்) “அவ மேல போயி உக்காரரியே, அவ தாங்க மாட்டாடி.. (பாசமலர்களாம்.. யப்பா என்னா பாசம் என்னா பாசம்!!).. ஏந்திரிடி தனியா தள்ளி உட்காரு“ என்பார்.. நான் கண்டுக்கவே மாட்டேன்.. என்னைக்கு அவர் பேசறத நாம கண்டுக்கிட்டோம்.. இப்ப கண்டுக்கறத்துக்கு! அவங்களும் “விடு...சின்ன பொண்ணு(சரி சரி நீங்க எல்லாம் கூல்’லா இருங்க..) உட்கார்ந்துட்டு போகட்டுமே எனக்கு ஒன்னும் வெயிட்டா இல்லன்னு “ சொல்லுவாங்க.. சரி அவங்கத்தான் சப்போர்டு’ன்னு நினைக்காதீங்க.. உடனே என்னோட மூத்தார் (கணவரின் அண்ணன்), “ஏண்டா சின்னபுள்ளைய (சரி சரி நீங்க எல்லாம் அகையின் கூல்ல்...ஒகே!) எப்ப பார்த்தலும் திட்டிக்கிட்டு இருக்கே” ன்னு ஆரம்பிச்சி.. அது அப்படியே.. ஓரகத்திங்க எல்லார் கிட்டயும் (4 பேரு) ஒரு ரவுண்டு வந்து.. அவங்க பெத்துவச்ச புள்ளைங்க (9 பேரு) கிட்ட எல்லாம் ஒரு ரவுண்டு வந்து.. “தொத்தா உட்காருட்டுமே சித்தப்பா ..அத்தை இருக்க சைஸ்’க்கு இன்னும் இரண்டு பேரு அவங்க மேல உட்காரலாம்” ன்னு சொல்ற வரைக்கும் தொடரும்

ஸ்ஸ்ப்பா.. என் வீட்டுக்காரருக்கு பேச்சு வருமா..? எப்படி வரும்? வராதே.. அண்ணன்கள், அண்ணிங்க, பிள்ளைகள் என்று மிக பெரிய அளவில நமக்கு சப்போர்டு இருக்கும் போது.. வாயா திறக்கமாட்டார். ஆனா. .எனக்கு மட்டும் தெரியும் வீட்டுக்கு வந்த பிறகு.. சங்கு ஊதுவாருன்னு.. சரி அதை அப்புறமா டீல் பண்ணிக்கலாம்..இப்பவே எதுக்கு நினைச்சு டென்ஷன் ஆகனும்..!! நமக்கு இப்ப தேவை ஜம்’ன்னு மெத்து மெத்துன்னு உட்கார ஒரு இடம்.. உட்காந்தோமா.....உருண்டோமான்னு..... இல்லாம கண்டதை யோசிச்சிக்கிட்டு......

நாத்தனார் உறவு என்பது எப்பவும் எல்லாருக்குமே இப்படி இருந்துவிட்டால் பிரச்சனை ஏன் வருகிறது. நிறைய வீடுகளில் நாத்தனார் அண்ணிகளை குறை சொல்லுவதும், திட்டுவதும், இவர்களும் திருப்பி திட்டுவதும் பிரச்சனையே கதி என்று இருப்பார்கள். எனக்கு அருமையான நாத்தனார் கிடைத்திருக்கிறார்கள். அவங்க எப்பவுமே “செம கூல்” ன்னு சொல்லலாம்."கொஞ்சநாள் வாழபோறோம் எல்லாரும் சந்தோஷமாக இருந்துட்டு போகனும்னு சொல்லுவாங்க.. எதுக்கு சண்டை.. ஒருவருக்கு ஒருவர் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டுன்னு" ரொம்ப தெளிவா லெக்சர் கொடுப்பாங்க அவங்க இப்படி தத்துவம் எல்லாம் பேசி முடித்ததும், நான் சொல்லுவேன் "இப்படி எதையும் கண்டுக்காம இருந்து இருந்து தான் உருண்டையாக இருக்கீங்க நாங்க எல்லாம் நினைவு தெரிஞ்சி நடந்து வரோம்.. ஆனா, நீங்க மட்டும் உருண்டு உருண்டு வரீங்கன்னு... “. “அடப்போம்மா..நீ வேற, ரொம்ப தான் என்னை புகழறன்னு" வெட்கப்பட்டு (நிஜமாகவே) சிரிப்பாங்க

அட! என் வீட்டுகாரருக்கு இப்படி ஒரு தங்கச்சியா?!!!! ன்னு நினைப்பேன்.. கண்டிப்பா கூல்’லா இருக்க இவங்ககிட்ட தான் கத்துக்கணும்..

அணில் குட்டி அனிதா:-மக்கா மீட்டங் கீட்டிங்னு அம்மணிய யாரும் கூப்பிடாதீங்க..அங்க வந்து யாராவது இப்படி கும்முனு இருந்தா பாத்து உட்காந்தாலும் உட்காந்துடுவாங்க... யாரு என்னான்னு எல்லாம் பாக்க மாட்டாங்க...உஷார்..உஷார்.. அவ்வளவு தான் சொல்ல முடியும்..!! இவிங்களுக்கு இன்னும் மரப்பாச்சி பொம்மை போல இருக்கோம்னு நெனப்பு.. கடவுளேஅம்மணி’க்கு புத்திகொடு..

பீட்டர் தாத்ஸ்:- Man is a knot into which relationships are tied.

முத்துலெட்சுமி-கயல்விழி' க்கு பேச்சு வரவில்லை...

முத்துலெட்சுமி மிக அற்புதமான பதிவர், ரொம்ப நல்லா எழுதுவாங்க. . தேவையான இடங்களில் அவரின் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். பதிவிலும் சரி, மின் அஞ்சலிலும் சரி தமிழ் அற்புதமாக தாண்டவமாடும். ஜி டாக்கிலும் அவர் டைப் செய்ய ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக டைப் செய்வார் அவ்வளவு வேகம். ஆனால் அப்படிப்பட்ட பதிவரால் பேச இயலாது என்பதை அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது...

அதை அவரை சந்திக்கும் வரையில் என்னிடம் சொல்லாமல் மறைத்த

சென்ஷி
கோபி
மங்கை அக்கா..

இவர்கள் மூவரும் இப்படி என்னை பழிவாங்கிவிட்டனர் என்பதனை நினைக்கும் போது , கோபம் தலைக்கு ஏறுகிறது. முத்துலெட்சுமியை பற்றி கொஞ்சமாக சொல்லியிருந்தால் கூட நான் அவரை சந்திக்க சென்ற போது தயாராக சென்றிருப்பேன். .ஆனால் ஆனால்................. இவ்வளவு பெரிய உண்மையை என்னிடம் இருந்து மறைத்த இந்த மூன்று பதிவருக்கும் எப்போதும் மன்னிப்பு இல்லை..... :((((((((((

அணில் குட்டி அனிதா:- ஹா ஹா..ஹா.. ஹா...ஹா...... அய்யோ..அய்யோ..!! பாவம் கவிதா. .முத்து அக்காவை பார்த்துட்டு வந்ததிலிருந்து காதோரமா லேசா ரத்தம் வர ஆரம்பிச்சது. .அது ரொம்ப அதிகமாகிபோக...டாக்டர் கிட்ட போய் மருந்து போட்டு காதை இப்ப சுத்தமா மூடி பேண்டேஜ் போட்டு இருக்காங்க... :) :)

கவி... !! டொக் டொக்..டொக்... !! மை ஐ கம் இன்...!! மைக் டெஸ்ட் 1, 2, 3.. கவி......காது கேக்குதா??? அட கடவுளே காது மேல தட்டினா கூட காது கேக்கலியா...?!! முத்து அக்கா.. எப்படிக்கா இப்படி எல்லாம்.. ம்ம்..அவங்க திரும்ப டெல்லி போவும் போது யாராவது அவங்களை மீட் பண்ண போறீங்கன்னா.. ஜாக்கறதை. .கவி நிலமை உங்களுக்கும் வராம தேவையான பாதுகாப்போட போகனும் சரியா..... இல்லன்னா... கவி.. ! டொக் டொக்..டொக். !!

பீட்டர் தாத்ஸ் : When women are supposed to be quiet, a talkative woman is a woman who talks at all

விமானத்தின் டர்புலன்ஸ்......

விமானத்தில் பயணிக்கும் போது நிறைய கேள்விகள் எழும்புகின்றன. சில கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டு கூகுலில் கிடைத்தவை... .... எல்லோருக்குமே விமானத்தில் பயணம் செய்யும் போது முதலில் விமானம் எப்படி பறக்கிறது, என்ற கேள்வி எழுமென்று நினைக்கிறேன். மேற்கொண்டு படிக்கும் முன் இந்த பதிவை படித்து விமானம் எப்படி பறக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

என் தலையை உருட்டிய கேள்விகளில் ஒன்று.... எப்போதும் இல்லாவிட்டாலும் தீடிரென்று ஒரு சில நிமிடங்களுக்கு தொடர்ந்து அதிர்வுகள் ஏற்படுகிறது. ஏன்? மேடு பள்ளமான ஒரு ரோடில் காரில் செல்லும் போது ஏற்படும் அதிர்வு, அதுவும் விமானம் பறக்கும் போது எப்படி இது வருகிறது ? தரையில் சக்கரங்கள் படுவதில்லை அப்புறம் எப்படி இந்த அதிர்வை உணரமுடிகிறது.....?!!

இது டர்புலன்ஸ் என்ற நிகழ்வால் ஏற்படுகிறது. மேலுள்ள பதிவிலேயே பின்னூட்டத்தில் Turbulance என்றால் என்ன, அது எப்படி ஏற்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது. மேலும் தெளிவாக விபரம் அறிய http://en.wikipedia.org/wiki/Turbulence.

என் தலையை வெடிக்க வைத்த விஷயம் இந்த அதிர்வுகள். என்னை போல யாருக்கும் தலை வெடிக்க கூடாது என்று இந்த பதிவு.. :))

அணில் குட்டி அனிதா:- ????? ஹ்ம்........... இந்த தலைவெடி எவ்வளவோ பரவாயில்லை.. ஏன் கொஞ்ச நேரம் ப்ளேனை அப்படியே ஸ்கை'யில நிறுத்தி எல்லாரையும் ஒரு ரவுண்டு விங்ஸ் வழியாக நடக்கவச்சி ஸ்கை'ய சுத்தி பாக்க விட மாட்டாறங்கன்னு அம்மணி அங்க பண்ண அமக்களத்துல .... இனிமே அம்மணிக்கு ப்ளேன் ட்ரேவல் பர்மெனென்ட்டா கட்'னு வீட்டுல முடிவுபண்ணது தான் க்ளைமாக்ஸ்....... :)))


பீட்டர் தாத்ஸ்:- The Wright brothers flew right through the smoke screen of impossibility.

முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !

அணில் குட்டி அனிதா:- அம்மணி தமிழை எவ்வளவு கொல்லுவாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. கவிதை எழுதறேன்னு அதுல பாதிக்கு மேல தப்பு. .சரி பாவம்னு எல்லாரும் அதையே படிச்சிட்டு சும்மா போகாம..அம்மணி வருத்த படுவாங்களேன்னு பாராட்டு மழை வேற. .எல்லாம் நேரம்.. என்னத்த சொல்ல.. .சரி.. மேட்டருக்கு வரேன்..

தமிழே சரியா தெரியாத அம்மணி பீட்டருல பல நேரம் பலரை கொன்னு குவிச்சி இருக்காங்க. .அதனால வீட்டுல இவிங்க புள்ள .. நீ வீட்டுல பீட்டர் ல பேசப்படாதுன்னு இ.பி.கோ. நவீன் செக்ஷ்ன் 021 ன்னு போட்டு, வீட்டுல இருக்கும் போது ஆங்கிலமா அப்படின்னா ன்னு கேப்பாங்க....

இப்படி பெற்ற புகழ்பெற்றவங்களை மும்பை சிட்டியில.. ஆ.ன்ன்னூ..ஜொள்ளூ வரது க்கூட தெரியாம வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தது இல்லாம நடு நடுவுல "முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !"
"முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !" ன்னு ஓவர் சீன் வேற....

லஸி'ன்னா அம்மணிக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் நார்த் பக்கம் போனா நாக்கு தொங்கும். வேற எதுக்கும் இல்ல இந்த 'லஸி' க்கு தான்... வூட்டுக்கார நொய் பண்ணி கடைக்கு போய் குடிச்சாங்க.. குடிச்சிட்டு.. "சூப்பர் அச்சா ஹேய்" தாங்ஸ் ஹெய்" ன்னு அந்த கடைக்காரனை பார்த்து சொல்லிட்டு ..ஹி ஹி..ன்னு ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு வந்தாங்க..

திரும்ப அடுத்தநாள் இன்னொரு லஸி கடைய பாத்து.. "ப்பாஅ.ஆ... லஸி.."னாங்க.. சரி நாக்கு ரொம்ப த்தான் வெளியில தொங்குதேன்னு வூட்டுக்காரரும் கூட்டுட்டு போயி வாங்கித்தந்தாரு...

சாப்பிட்டாங்களே சும்மா வந்தாங்களாஆ?..

"ப்பா.. இந்த லஸி நேத்திக்கு சாப்பிட்டது மாதிரி திக்கா இல்ல தண்ணியா இருக்கு.. அந்த கடக்காரன் கிட்ட சண்டை போடலாம் வாங்க.. " ன்னு சொன்னாங்க..

"ஏன்டி இங்கயுமா? சரி....உனக்கு த்தான் நல்லா ஹிந்தி தெரியும்னு பீத்திக்கற இல்ல நீயே போய் கேளூ..."

அந்த பக்கமா புள்ள இவிங்கள நக்கலா பாத்து சிரிச்சான்..(ஏன்னா அவரு கேவி யில படிச்சவரு.. ஹிந்தியில தினமும் பேசி படுத்து தூங்கறவரு.. பின்ன ஒன்னுமே தெரியாம அச்சா மாலும் அச்சா மாலும் ன்னு சொன்னா.. நக்கலா சிரிக்காம என்ன செய்வாங்களாம்... )

"டேய் என்ன ஓவர் நக்கலா சிரிக்கற...ஒன்ன மாதிரி நான் ஒன்னும் கேவி ஸ்டூடண்ட் இல்ல ஆனாலும் உனக்கே நான் தான் ஹிந்தி சொல்லி கொடுத்தேன். அதை மறக்காதே..."

"ம்ம்..அப்புறம்...." ன்னு இன்னும் சிரிச்சிட்டு.... "ஓவரா பேசறத நிறுத்திட்டு கிளம்பு, அவன் கிட்ட ஏதாவது பேசி வந்த இடத்தில அடி வாங்கி அசிங்கபடாத சரியா...... வா வா..." ன்னு புள்ள அம்மாவை காப்பாத்த பாத்தான்..

ஆனா எங்க... அம்மணி அடங்காம.. முதல்ல ஒத்திகை பார்த்தாங்க...

"ப்பா.. நான் சொல்றது சரியா செக் பண்ணுங்க ஓகே... ன்னு வூட்டுக்காருக்கிட்ட

"அந்த துக்கான் மே லஸி அச்சா கெட்டி ஹே....."

"க்கியூ ஆப் க்கா துக்கான் மே லஸி தோடா தண்ணி ஹூ"

அப்பாவும் புள்ளையும் அங்கேயே விழுந்து விழுந்து சிரிக்க.... அம்மணி மூஞ்சிய பாக்கனுமே.. !!

"க்க்யூ மேரா ஹிந்தி அச்சா நஹி ஆத்தா ஹேய்..!!? ஒய் யூ போத் ஆர் ஹஸ்தா ஹே?!! அப்பன்னா துக்கான் காரன் கூட னோ பயிட் ஃபார் தஹி...ஹே..... ?"

"அடச்ச்சே வந்துத்தொலடி.....!! உன் கூட எங்க போனாலும் இதே பிரச்சனையா போச்சி..., சரி மனசுல கைவச்சி சொல்லு சென்னையில இப்படி ஒரு லஸி 'ய நீ வாழ்க்கையில குடிச்சி இருக்கியா?... என்னவோ அங்க கட்டி கட்டியா குடுச்சி பழகினவ மாதிரி ஓவரா சீன் போடற.. "

"2 ஸ்பூன் தயிரை ஒரு டம்ளர் லஸி ஆக்கி கொடுப்பானுங்க அதையும் சூப்பரன்னு குடிக்கற உனக்கு இது எல்லாம் ரொம்ப ஓவரா தெரியல.....வா..வா......" ன்னு வூட்டுக்காரு அம்மணி கைய புடிச்சி இழுக்க...

"அம்மணி இருங்கப்பா களாஸை கொடுத்துட்டு வரேன்.." ன்னு விடாம கடைக்குபோய்..

"ஆப்கோ துக்கான் மே....லர்ஸி அச்சா ஹே.. பட்..தோடா தண்ணி ஹே..மேக் ஸ்யூர் நெக்ஸ்ட் டைம் யூ பிரேபேர் குட் திக் ஒன் ஒகே..நோ தண்ணீ.. ஐ மீன் நோ பானி...மிக்ஸிங்.....ஓகே.....!! ' ன்னு சொல்லிட்டு வர ........

அவன் திரு திருவென்று முழிக்க... வெளியில் வந்து...

"ப்பா..துக்கான்வாலா க்கு ஹிந்தி மாலும் நஹிஹே...ஓ பாகல் ஹே " ன்னு சொல்ல...

"ம்ம்......நீ பாகல்ல்லா அவன் பாகல்லா......" னு சொல்லிட்டு அப்பாவும் புள்ளையும் இவிங்கள ரோடுன்னு கூட பார்க்காம தொறத்த..... ..

ஓடமுடியாம ஒடம்ப தூக்கிக்கிட்டு ஓடி ................இரண்டு பேர் கிட்ட இருந்தும் ஜஸ்ட் தப்பிச்சிட்டாங்க..........

பீட்டர் தாத்ஸ் :
Language is the most imperfect and expensive means yet discovered for communicating thought. ~William James

பெண்ணின் நிர்வாணம் அழகு...........!!

பெண்
ஒரு கவிதை

அது
காட்டாற்றை பிரிந்த
சிற்றருவியின் அமைதி-
தென்றலைத்
தழுவிய மென்மை-
பனித்துளி
தொட்டுவிட்ட குளிர்ச்சி-
ஆண்டுகளாக ரசித்தாலும்
சோர்ந்து போகாத நிலவின் வெளிச்சம்-
மென்மையாக ஊதி
எழுப்பும் குழலின் நாதம்-
இலைகளின் மேல்
குடியிருக்கும் நீர்த்திவலை
மலர்திருந்திருக்கும்
வண்ண பூக்கள்-
கொலுக்களில் அழகாக
அமர்ந்திருக்கும் பொம்மைகள்-
மெல்லிய சுடர் விட்டு
எரியும் விளக்கு-
கண்களை மென்மையாக மூடி
உணரும் உங்களின் நாடி துடிப்பு-
இரவுகளை
சொர்க்கமாக்கும் தேவதை-

இந்தக் கவிதைகள்

போராளிகளாக மாறிவிட்டன
உங்கள் கைகளிலும் சிக்கிவிட்டன
கற்பழித்தும் வீட்டீர்கள்
கொன்றும் குவித்துவிட்டீர்கள்

நாற்றமெடுத்த
ஈ மொய்க்கும்
நிர்வாண பிணங்களாக
மாற்றிவிட்டீர்கள்

நிர்வாண பிணங்களை
இழுத்து இழுத்து ????
வளைத்து வளைத்து ?????
படம் எடுக்கிறீர்கள்

எடுங்கள்... (காரணம் சொல்லியாகிவிட்டது)
அதனால் எடுங்கள்...

ஆனால்
அங்கேயும் சொல்கிறான்
ஒருவன்
எல்லாம் வடிவான பெண்கள் என்று -

பெண்ணின் நிர்வாணம்...
பிணங்களில் கூட வடிவா......?

[இராணுவம் 1: டேய் பெடியா
இராணுவம் 2: என்ன
இராணுவம் 5 (அ) 7: எல்லாம் பெண்கள்
இராணுவம் 6: வடிவாக (அழகான).]

இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் என்று தான் 'இவன்' சொல்லியிருந்தார். இதயத்திற்கு என்னத்தான் ஆகிவிடபோகிறது, என்னத்தான் அந்தப் படத்தில் இருக்கிறது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு..இன்னமும் இதயத்துடிப்பு அடங்காத நிலையில் எழுதியது.... இதயம் பலகீனமானவர்கள் மட்டும் இல்லை யாருமே இப்படிப்பட்ட வீடியோக்களை பார்க்கக் கூடாது. பெண் பிணங்களின் ஒட்டியிருக்கும் ஆடையை இழுத்துவிடக்கூடவா இராணுவ வீரர்களுக்கு???!! தோன்றவில்லை... பிணங்களின் வடிவை ரசிப்பவர்கள் எப்படி இதை செய்வார்கள்.
ரசிக்கட்டும்.......

தனித்துவம் சரியா தவறா?

அது ஒரு மழைக்காலம். ஒரு காலை வேலையில், நன்கு பலத்த மழைபெய்து முடிந்து வானம் கலைத்து போய் அமைதியாகி இருந்தது. ஆறுபோல தெருவெங்கும் தண்ணீர் ஓடியது, திண்ணை மறைத்து ஓடியது. குட்டிக்கவிதாவிற்கு படகு விட ஆசை வந்தது.. அதற்குள்ளே அவளை போன்ற குட்டிகள் பேப்பர் படகுகளை விட ஆரம்பித்துவிட்டனர்.

வேகவேகமாக நோட்டுபுத்தகத்தை எடுத்து, பக்கம் பக்கமாக கிழித்துக்கொண்டு இருந்தாள் குட்டி கவிதா. அப்பா வந்து பார்த்தார்..

"பாப்பா என்ன செய்யறே..??"

"அப்பா, ரோட்ல நிறைய தண்ணீ போது..நம்ம பெண்ணையாறு போல இருக்கு, நான் போட் விடனும்.. இப்பவே பக்கத்து வீட்டு கெளரி(சங்கர்) விடறான்..ப்பா, நான் போட் செய்ய போறேன்..ப்பா.."

"சரி நோட்டை கிழிக்காதே நான் செய்து தரேன்.. கொஞ்சம் இரு..."

அப்பா சென்று தென்னை மரத்து பாளை ஒன்றை எடுத்து வந்து இருபுறமும் கொஞ்சம் சீவி, என்னை தென்னங்குச்சியை கொண்டு வர சொல்லி, அதை தேவையான நீளம் அளந்து ஒடித்து, ஆயாவிடம் ஒரு வெள்ளை துணி வாங்கி, அதை தென்னங்குச்சிகளுக்கு தகுந்தார் போன்று வெட்டி, ஊசி நூலை எடுத்துவர சொல்லி தென்னங்குச்சியுடனும் துணியை சேர்த்து தைத்தார். பின் அதனை படகு(பாளை)டன் சேர்த்து தைத்தார். அழகான நிஜ படகு தயாரானது....

"இந்தா..எல்லார் மாதிரியும் நீயும் பேப்பர் படகு விடனுமா?? எதையும் செய்யறதுக்கு முன்னே முட்டாள் பாப்பா யோசி... :))))))" என் தலையில் கொட்டி அந்த படகை என் கையில் கொடுத்துவிட்டு சிரித்து கொண்டே சென்று நான் விடும் அழகை பார்க்க மாடியின் முகப்புக்கு சென்றார்...

படகு ரெடி , என்னால் நம்பவே முடியவேவில்லை..என் கையில் நிஜ படகு.. அச்சு அசலை போன்றே குட்டியான படகு... 10 நிமிடங்களில் தயார் செய்து கொடுத்த அப்பா மட்டுமே எனக்கு எப்பவும் ஹீரோ.... எதையும் வித்தியாசமாக தனித்துவமாக செய்ய வைத்தது.. என் அப்பா... அப்படி ஒரு மிக சிறந்த அறிவாளியை, அதனால் தான் என்ற கர்வம் இல்லாத ஒரு அசாதாரண மனிதரை என் அப்பாவாக நான் பெற்றது ...... .......... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை...

இப்படி நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு.. ஒரு முறை ஆற்று திருநாளுக்கு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்ற போது என் திருமணத்தை ஆற்றில் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்கு அவர் சொன்ன காரணங்கள்,

1. எத்தனை ஆயிரம் பேர் திருமணத்திற்கு வந்தாலும் இடம் கொள்ளும். யாரும் நிற்க வேண்டியது இல்லை.
2. தேவைப்படுபவர்கள் அடிக்கடிபோய் ஆற்று தண்ணீரில் குளித்துவிட்டு வரலாம். இயற்கையை ரசிக்கலாம். கட்டுப்பாடு இல்லை.
3. கட்டு சாதங்களாக மெனு வைத்து, எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எல்லோரும் சாப்பிடலாம். அதற்கும் கட்டுபாடு இல்லை..
4. களைப்பு தீர ஆற்றில் படுத்து ரெஸ்ட் எடுத்துவிட்டு கிளம்பலாம்.

... ஆனால் என் திருமணத்திற்கு அவர் உயிருடன் இல்லை என்பது என் நெஞ்சை வதைக்கும் ஒரு விஷயம்...... இப்படி ஒருவரை சின்ன வயதில் நான் இழந்தது என் துர்பாக்கியம். அவர் மீண்டும் என்னிடம் வந்துவிடமாட்டாறா என்று நான் ஏங்கும் நாட்கள் இன்னமும் என்னின் பைத்தியக்காரதனமான நினைவுகளும் அதில் மட்டுமே வரும் நிஜங்களும்...

சரி தலைப்புக்கு வருவோம்.....அப்பா அளவிற்கு கண்டிப்பாக நான் புத்திசாலி இல்லை. என் உடம்பில் ஓடுவது என் அப்பாவின் ரத்தம்...அவரின் அனுகுமுறை எனக்கு எல்லா விஷயங்களிலும் இருக்கிறது என்பது இயற்கை. ஆனால் இதற்காக என்னை நான் வேண்டுமென்றே தயார் படித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் உடம்புடன் ரத்ததுடன் கலந்துள்ளது...

சாதாரணமாக ஒரு பேப்பர் படகை அன்று நான் விட்டு இருக்க முடியும்.. பத்தோடு பதினொன்றாக... என்னுடைய படகும் சென்றிருக்கும்...ஆனால் அப்பா விடவில்லை அதற்காக சிரமம் எடுத்து, நேரம் எடுத்து எனக்காக அவர் செய்து கொடுத்தது அந்த தெருவில் அன்று அப்படி ஒரு படகு விட்டது நான் மட்டுமே என்ற பெருமை இப்பவும் எனக்கு இருக்கிறது..அப்பாவும் மாடியில் இருந்து என் சந்தோஷத்தை பார்த்து புன்முறவலோடு மகளை பார்த்து ரசித்தார். இப்படி பல விஷயங்களில் அப்பாவாலும் ஆயாவாலும் தனித்துவத்துடன் நான் இருந்திருந்திருக்கேன். அவர்கள் சொல்லி சொல்லி எல்லா விஷயங்களை ரொம்பவும் யோசித்து நேர்த்தியாக மட்டும் இல்லாமல் தனித்துவத்துடன் வித்தியாசமாக செய்ய முயற்சிக்க கற்றுக்கொண்டேன்...

அப்பா சொன்ன படி முட்டாள் பாப்பா வாக இல்லாமல்..... எந்த ஒரு காரியத்தை செய்யறதுக்கும் முன்னரும் கொஞ்சமாக யோசிக்கிறேன்.. சமயோசித புத்தியை வளர்க்க முயற்சிக்கிறேன்.., எப்படி இதை வித்தியாசமாக செய்ய முடியும்னு யோசிக்கிறேன்.. அதற்காக சில விஷயங்கள் எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் விட்டு கொடுப்பதில்லை என்ற பிடிவாதம் வர ஆரம்பித்து, பிடிவாதங்களே என்னுடைய வித்தியாசமான சில முயற்சிகளுக்கு காரணமாக மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. அப்படி ஒன்றும் அதிக வித்தியாசங்களோடு பின்னால் வாலோடும், தலையில் கொம்போடும் அலையவில்லை என்பது மட்டும் உண்மையே.

தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் எனக்கு ஏற்படும் பிரச்சனைகள் நிறைய...

1. மிக எளிதாக எந்த விஷயமும் நடந்துவிடுவதில்லை.
2. மனதிற்கும் உடம்பிற்கும் பல நேரங்களில் மிகவும் சிரமாக இருக்கும்
3. எதற்கும் அதிக கவனம் தேவை ப்படும்
4. வேலை நேரம் அதிகமாக இருக்கும்
5. தேவையான பொருட்களோ, சம்பந்தப்பட்டவை கிடைப்பது கஷ்டமாக இருக்கும். தேடி அலைய வேண்டி இருக்கும்.
6. சாதாரணமாக செய்தால் மனம் எளிதில் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மனம் அதில் சந்தோஷப்படுவதில்லை, நிறைவு ஏற்படுவதில்லை.
7. மிக சாதாரண பொருட்களையும் உபயோகப்படுத்த முடியுமா என்று யோசித்து எதை பார்த்தாலும் எப்போதும் ஒரு யோசனை இருக்கும்
8. எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு அதுவே பழக்கமாகி விட்டது.

நிறைய பாராட்டுகள் கிடைத்தாலும், நிறைய பேருக்கு இந்த தனித்துவம் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துவாக நான் உணர்ந்திருக்கிறேன்..சிலர் நேரடியாக சொல்லியும் இருக்கிறார்கள். என்ன நீ சாதிக்கனும்னு நினைக்கிற? வித்தியாசமாக இருக்கிறது சரி ஆனாலும் எல்லாவற்றிலும் வித்தியாசம் அவசியமா? தேவையா.? சாதாரணமாக செய்ய வேண்டிய வேலையை ஏன் இவ்வளவு சிரமம் எடுக்கறன்னு கேட்பவர்கள் நிறைய.. என் கணவரே சொல்லுவார்...ஏண்டி மண்டைய ஒடச்சிக்கறன்னு... ....

தவறா சரியா ? தெரியவில்லை...... நீங்க சொல்லுங்களேன்...

அணில் குட்டி அனிதா:- ஆரம்பிச்சாச்சி நீயூ இயர் அதுவுமா.. இவிங்களும் குழம்பி, அடுத்தவங்களையும் கொழப்பறதுல மன்னி... நான் வரல இந்த விளையாட்டுக்கு... நீங்க கவிக்கு சொல்லுங்க.. சரியா..தவறா....?!!

பீட்டர் தாத்ஸ் :- The greatness of art is not to find what is common but what is unique”