திருமணம் மற்றும் குழந்தைபேறு தள்ளி போடும் *இளைஞர்கள்

தற்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகும் ஐ.டி கம்பெனிகளின் ஆட்குறைப்பு மற்றும் சம்பளம் குறைப்பு காரணமாக புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுவதாக செய்தி வருகிறது. மிகவும் வேதனையான விஷயம், தவறா சரியா என்று கேட்டால், நேரடியாக மிக தவறான முடிவு என்றே சொல்லலாம்.

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைக்கும் இவர்கள் செய்யும் மற்ற ஒரு வேதனைக்குறிய விஷயம், கருக்கலைப்பு. கருக்கலைப்பு என்று எழுதும் போதே நெஞ்சு படப்படக்கிறது, உள்ளே இருப்பது ஒரு உயிர், வேண்டாம் என்று முடிவு செய்து க்கொள்ள எல்லாவித உரிமையும் இருந்தாலும், குழந்தைக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத போது பொருளாதார கஷ்டங்கள் கருதி, திட்டமிட்டு கருக்கலைப்பு செய்வது மிகவும் கொடுமையான விஷயமாக படுகிறது.

அடுத்து திருமணம், திருமணம் என்பது பொருளாதாரம் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். பணம் நமக்கு அத்தியாவசிய அன்றாட தேவை என்றாலும் வரும் வருமானத்திற்கு தகுந்தார் போன்று குடும்பம் நடத்த இயலும். திருமணம் சரியான வயதில் செய்வதற்கு சில முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது

1. நல்ல திடக்காத்திரமான குழந்தைகள்
2. பிரச்சனை இல்லாத மகப்பேறு
2. நம் வயதிற்கும் நம் குழந்தைவயதிற்கும் உள்ள வயது இடைவெளி. அதாவது குழந்தையை வளர்த்து, படிக்கவைத்து, அந்த குழந்தை வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வரும் வரையிலும் நம் ஆயுள் இருக்கவேண்டும்.
3. நம்மை நம்பி திருமணம் செய்து கொண்டவருக்கு (இரு பாலாரும்) கடைசிவரை துணையாக இருப்பது. இதற்கும் நம் வயது ரொம்பவும் முக்கியம், அதுவும் இப்போதைய வாழ்க்கை முறையில் எதையும் திடமாக சொல்லிவிட முடிவதில்லை.

இவை எல்லாம் யோசித்து தான் முன்னவர்கள் ஆண், பெண் திருமணவயதை நிர்ணயித்து இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் குறைந்துவிட்டது, வேலை நிரந்தரம் இல்லை என்ற காரணங்களை வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதையும், திருமணத்தை தள்ளி போடுவதை சரியான முடிவாக எடுத்துக்கொள்ளவே முடியாது.

தன்னம்பிக்கை இருக்கும் யாரும் இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள். இது தான் வாழ்க்கையின் முடிவு என்று யாரும் சொல்லிவிட முடியாது, எத்தனை கதவுகள் மூடப்பட்டாலும் கண்டிப்பாக ஒரு கதவு நமக்காக திறக்கும், அப்படி திறக்காவிட்டால், திறக்க வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்கு வேண்டுமல்லவா?

ஐ.டி வேலை மட்டும் தான் உங்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறதா? இதை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை... ?! :(

* குறிப்பு :- தலைப்பில் இளைஞர்கள் என்று சொல்லியிருந்தாலும், இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு பொருந்தும். :)

அணில் குட்டி அனிதா :- ம்ம்....வந்துட்டாங்கடா.. அறிவுரை அல்லி!! எல்லாரும் ஒன்னு செய்யுங்க...சம்பளம் வாங்கினாலும் வாங்காகாட்டியும், வேலை இருந்தாலும் இல்லாட்டியும் கல்யாணம் மட்டும் முதல்ல பண்ணிக்கோங்க, புள்ள குட்டி பெத்துக்கோங்க... அப்புறம் அம்மணி வீட்டு அட்ரஸ் கேட்டு, சைலன்ட்டா வந்து செட்டில் ஆயிடுங்க... ஹி ஹி.... உங்களையும் உங்க குடும்பத்தையும் அம்மணி பாத்துக்குவாங்க..!!

பீட்டர் தாத்ஸ் :- The real measure of your wealth is how much you'd be worth if you lost all your money.

தலைமுடி

தலைமுடி இதனால் பலருக்கு பல பிரச்சனைகள். குறிப்பாக சின்ன வயதில் முடிக்கொட்டி விடுபவர்கள் படும் பாடு இருக்கிறதே.. அவர்களை கேட்டால் தெரியும் இந்த தலைமுடி அவர்களுக்கு எத்தனை முக்கியம் என்று.

தலைமுடி அதிகமாக கொட்டியிருப்பவர்கள் ஞாபகமறதி அதிகம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. இது தவிர்த்து குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, சித்தப்பா, மாமா என்று யாருக்கும் இப்படி இருந்தால் அவர்கள் மேல் பழியை போட்டு உங்களால் தான் எனக்கு இப்படி இருக்கிறது பரம்பரை குறை இது என்று சொல்லிவிடலாம்.

நடிகர் சத்யராஜ் போல "நாங்க எல்லாம் தலைக்கு மேல் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் இல்லை, தலைக்கு உள் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் திரைபடங்களில் பாவம் விக்'ஐ நம்பி தான் தன் வாழ்க்கைக்கு தேவையானதை அவரும் சம்பாதிக்கிறார்.

என்னுடைய மூன்று வயது போட்டோவில் "பாப்" கட் தலை முடியோடு இருப்பேன். ரொம்ப அழகாக இருக்கும். ஆயாவிற்கு அது பிடிக்காது நன்றாக எண்ணெய் தேய்த்து முடியை எவ்வளவு வளர்க்க முடியுமோ அவ்வளவு வளர்த்து ஒரு காலக்கட்டத்தில் "இவமுடிய எவளால பின்ன முடியும். .பிடித்து சீவ முடியல, போடி போ நீயே பின்னிக்கோ" என்று எல்லோரும் விரட்டும் அளவிற்கு அடர்த்தியாக இருந்தது. ஆயா மட்டுமே என் தலையை தொடுவார்கள். அவர்களை விட்டால் நானே. எனக்கு குழந்தை பிறந்தபோது ஆஸ்பித்திரியில் இந்த தலைமுடியால் நான் பட்ட அவஸ்தை அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

குழந்தை பெற்ற உடம்பு சிரமம் கொடுக்கக்கூடாது, இந்த மேட்டர் எல்லாம் எனக்கு அப்போது தெரியாது ஆயா சொல்லி தர மறந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். எப்பவும் போல என் தலைமுடியை யாரும் பின்னிவிட முன்வாராததால், நானே அதை சீவி சிங்காரிக்க முற்பட்டு உடம்பு அலண்டு போக, ஜன்னி வந்தது தான் மிச்சம். தலைகுளித்தால் 2 நாட்களுக்கு உள்ளே ஈரம் இருக்கும், அது ஒரு அவஸ்தை. முடியை லூஸ் ஹேர் ஆக விடமுடியாது, விட்டால் போயிற்று, அச்சு அசல் பிசாசு போலவே இருக்கும்.

இந்த தலைமுடியின் நிஜமான பிரச்சனைக்கு வருகிறேன். இப்போதைய சூழ்நிலையில் உயர் பதவி செல்ல செல்ல ரொம்பவும் எலிகண்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயத்திலும் அவசியத்திலும் இருக்கிறோம். சில சமயங்களில் நம் வேலை சம்பந்தப்பட்டு நாம் பழகும் மனிதர்கள், கிளைன்ட்ஸ், பிஸினிஸ் விஷயமாக சந்திக்கும் உயர் அதிகாரிகள் எல்லோருமே முதலில் பார்ப்பது நம் தோற்றத்தை. அதில் முதல் இடம் தலைமுடி, நன்றாக எண்ணெய் தடவி வழித்து சீவி கொண்டு போகும் போதே. ஒரு மாதிரியாக பார்ப்பார்கள், அதற்கு பிறகு தான் நம்முடைய பேச்சு, நம் வேலை சம்பந்தப்பட்ட கோப்புகள், பிரசன்ட்டேஷன் எல்லாமே இதற்காகவே வெளியில் செல்லும் போது லூஸ் ஹேர் ஸ்டைலில் செல்ல வேண்டியுள்ளது.

எனக்கும் இந்த தலைமுடியை என் இஷ்டத்திற்கு வெட்டிக்கொள்ள ஆசை.. ஆனாலும் என்னவோ இன்னும் செய்யவில்லை. ஜிம்'ல் தோழி தென்றல் நான் செல்லும் நேரத்திற்கு வருவார். ஒரு நாள் அவரின் தலைமுடி காதுக்கு மேல் வரை ஏறி, கந்தரகோலமாக வெட்டி இருந்தது. காலையில் அவளை அப்படி பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி. தென்றல் உன் தலைமுடிக்கு என்ன ஆச்சி என்றேன். அதற்கு அவள், அவளின் பெயரை போலவே மென்மையாக சிரித்து.. கவி.. கூல்.. நேத்து ராத்திரி ஒரு 12 மணி இருக்கும் இந்த தலைமுடி எனக்கு வேண்டாம் என்று என் மனசு சொல்லிக்கிட்டே இருந்தது.. எழுந்து..நானே கட கட'ன்னு வெட்டிவிட்டேன்.. ஓவர் ..!! எனக்கு டென்ஷன் குறைஞ்சு போச்சி, நானே வெட்டியதால் இப்படி ஆகிபோச்சி.. We need this kind of changes in our day today life, so better you do dont think more.." இது மாதிரி செய்துடு அப்புறம் தலை எழுத்து பார்லர் போய் சரி பண்ணனும் ' என்றாள்.

எனக்கு ஆச்சரியம், சிரிப்பு எல்லாம் சேர அடக்க முடியாமல் அவளை பார்த்து சிரித்தேன், அவளும் என்னுடன் சேர்ந்து சிரித்தாள். இது தான் மாற்றம் என்பது, அவள் அதற்கு அப்புறமும் சொன்னது, எவ்வளவு நாள் என் முகத்தை இப்படி ஒரே மாதிரியாக பார்த்து கொண்டு இருப்பது.. இப்போது இந்த தலை அலங்காரத்தில், நான் முன்பை விடவும் அழகாக எனக்கு தெரிகிறேன், எனக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகம் வந்து இருக்கிறது, நீயும் செய், உனக்கும் வரும் என்றாள். ஆழ்ந்து யோசித்து பார்த்ததில் உண்மையாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன.

புது வீடு, புதிய உடைகள், புதிய வண்டி, புதிய நட்பு, புதிய வானம், புதிய மண் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மாற்றங்கள் அவசியம் தேவை அது எந்த ரூபத்தில் எப்படி இருந்தால் என்ன... ??? மாற்றங்கள் கண்டிப்பாக நமக்கு புதுவிதமான மனதிடத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கத்தான் செய்கின்றன. தலைமுடி'யும் இதில் அடங்கும்.

அணில் குட்டி அனிதா :- .............போச்சி போ?!! தலையில முடி இல்லாதவங்க எல்ல்லாம் இந்த பதிவை படிச்சி எரிச்சல் படணும்னே எழுதின மாதிரி இல்ல?!

பீட்டர் தாத்ஸ் :- Hair brings one's self-image into focus; it is vanity's proving ground. Hair is terribly personal, a tangle of mysterious prejudices. ~Shana Alexander

வெட்டியான்

வாழ்க்கை'யின் அர்த்தங்களை முழுமையாக தினந்தோரும் உணர்பவர் இந்த வெட்டியான் தான். எப்படிப்பட்டவருக்கும் கடைசியில் மிஞ்சுவது மண்தான். சில வாரங்களுக்கு முன் நடிகை அனுராதா (கவர்ச்சி நடிகை) யின் பேட்டியை காண நேர்ந்தது. 1980 களில் பல ஆண்களின் கண்களுக்கு விருந்தாக இருந்த கவர்ச்சி கன்னி. அப்போது எல்லாம் கவர்ச்சிக்காக தனியாக நடிகைகள் இருந்தார்கள். இப்போது.. :)))

மற்றொரு நடிகை, கண்களால் கவர்ச்சி சுனாமியை ஏற்படுத்தி ஆயிரக்கனக்கான ஆண்களை தன் வசப்படுத்திய சில்க் ஸ்மிதா பற்றிய ஒரு சில நினைவுகள். பொன்மேனி உருகுதே" பாட்டை ரசித்து பார்க்கும் அளவிற்கு எனக்கு அப்போது வயது இல்லை என்றாலுமே நான் ரசித்து பார்த்த ஒரு பாடல், இப்போது அந்த பாடலை திருப்பி பார்த்தால் அதில் கவர்ச்சி என்று எதுவுமே இல்லை.. கலை மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது. அப்படி ஒரு தெளிவான பார்வை இப்போது இருக்க காரணம் இப்போதைய நடிகைகளால் திணிக்கப்படும் தேவையற்ற கவர்ச்சி.

சரி விஷயத்திற்கு வருவோம், நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். நடிகை அனுராதா இவரை பற்றி கூறும் போது எத்தனை ஆயிரம் பேர் அவளின் உடலை பார்த்து ரசித்தார்கள், ஆனால் அந்த உடல் ஆஸ்பித்திரியில் ஆதரவற்று தனிசடலமாக ஈ'க்கள் மொய்க்க கிடந்தது. பார்க்கவே வேதனையாக இருந்தது, சகிக்காமல் விசிறி எடுத்து விசிறியவாறு இருந்தேன். என்றார்.

இது தான் வாழ்க்கை, ஏனோ ஒரு சில தினங்கள் சில்க் ஸ்மிதாவின் நினைவிலேயே நான் இருந்தேன்.. மரணம் என்பது பலருக்கு பேசக்கூடாத சங்கடமான, அபசகுனமான ஒரு விஷயம் தான் என்றாலும் எல்லோருக்கும் நடக்கவிருக்கும் உண்மை தானே.

மரணத்தை பற்றி பேசுவதில் தவறொன்றுமில்லை. நமக்கு தெரிந்து நடக்கலாம்.. தெரியாமலும் நடக்கலாம். ஆனால் நடந்தே தீரும் என்பது எழுதப்பட்டது. வேறு எந்த விஷயத்தையையும் நம்மால் நடந்தே தீரும் என்று சொல்லிவிட முடியாது. மரணத்தை தவிரத்து.

சரி இப்போது என்ன அதற்கு என்று யோசிக்க ஆரம்பித்தவர்களுக்காக சொல்ல வருவது , உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை நாம் பெற வேண்டும். மண்ணுக்குள், தீயிக்குள் போகும் இந்த உடலின் உறுப்புகளை தயவு செய்து தானம் செய்யுங்கள், கண் தானம் பற்றி முன்னரே பதிவிட்டு இருக்கிறேன்.

கண்தானம் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருந்தாலும், உடல் உறுப்பு தானமும் அதை போலவே மிகவும் முக்கியமான ஒன்று. அதற்கு எடுத்துக்காட்டாக சமீபகாலமாக விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் உடல் உறுப்புகள் உடனனுக்குடன் மாற்றப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு சிலரின் உயிர்கள் காப்பற்றப்பட்டன. எத்தனை உன்னதமான ஒரு செயல் என்பது அந்த உயிர் பெற்றவர்களை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது.

உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம், மண்ணுக்கு போகும் உடலின் மேல் ஆசை எதையும் வைக்காமல் உடல் உறுப்பு தானம் செய்வோம்.

நம்ம தாரணிபிரியா உடல் உறுப்பு தானம் எப்படி செய்யலாம் என்ற தகவலை இந்த பதிவில் எழுதியிருக்காங்க.. நாங்கள் செய்துவிட்டோம்.. அப்ப நீங்க?? !!

நன்றி தாரணிபிரியா. :)))

அணில் குட்டி அனிதா:- ஓ செய்துடலாமே. .கவி'கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம். .சரியா.. கவிக்கிட்ட என்னவெல்லாம் எடுக்க முடியும்னு பாக்கலாம்...

Eyes - பகல்ல பசுமாடு தெரியாது இருந்தாலும் ஒகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..ஒன்னும் தெரியாததற்கு இதை வச்சி சமாளிக்கலாம்
Lungs -ஒகே
Liver - டபுல் ஒகே
Kidneys - ட்ரிபிள் ஒகே
Heart - :)) ஹா ஹா ஹா.. அது தேறாது.. அதை மட்டும் எடுத்தா கவி மாதிரி ஆயிடுவீங்க சோ வேண்டாம்.. எஸ்கியூசுடு....

இது தவிர...

Brain - ஹி ஹி..அது இருக்கவங்க கிட்ட தானே எடுக்கமுடியும்.. :)))
Hands & Legs : -இந்த ரெண்டு ஐடம் மட்டும் உயிரோடு இருக்கும் போதே அடிச்சி ஒடச்சி எடுக்கவேண்டியது... சோ.. நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.. எப்பன்னு சொல்லிட்டீங்கன்னா.. விடியோ கேம் மோட நான் ரெடி... :))))))

பீட்டர் தாத்ஸ் :-

1. We cannot live only for ourselves. A thousand fibers connect us with our fellow men.

2. Don't think of organ donations as giving up part of yourself to keep a total stranger alive. It's really a total stranger giving up almost all of themselves to keep part of you alive.

3. Don't take your organs to heaven with you. Heaven knows we need them here.

4. Be a blood and organ donor. All it costs is a little love.

இதோடா! சிபி'யிடம் காமெடி செய்ய முடியாதாமாம்!

கவிதா: சிபி வெயில் காலம் ஆக ஆக நீங்க ஒரு மாதிரி ஆகிட்டு வரீங்க
எங்களுக்கு எல்லாம் வித்தியாசம் தெரியுது உங்களுக்கு தெரியுதா?

நாமக்கல்: எனக்கு எதுவும் தெரியலையே
என்ன வித்தியாசம்?

கவிதா: கொஞ்சம் கழண்டு போன மாதிரி தெரியுது...

நாமக்கல்: !?

கவிதா : ஓவரா ஆக முன்ன சரி பண்ணிக்கோங்க..இல்லன்னா நாங்க எல்லாம் கழண்டு போயிடுவோம்

நாமக்கல்: எதை வெச்சி சொல்றீங்க?எங்கியாவது ஏடா கூடமா எழுதிட்டனா/
இல்லை நேத்து ரங்காகிட்டே சொன்ன கவுஜையை பார்த்துட்டீங்களா

கவிதா : எதுவும் வெளியில சொல்ற மாதிரியே இல்ல சிபி நீங்களே சரி பண்ணிக்கோங்க..

நாமக்கல்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சொன்னாதானே எங்க லூசாகியிருக்குன்னு பார்த்து டைட் பண்ணிக்க முடியும்

நாமக்கல்: ஆர் யூ சீரியஸ் ஆர் மேக்கிங் காமெடி?

கவிதா: நான் ஏன் காமெடி செய்ய போறேன்..எல்லாம் சீரியஸ் தான்

நாமக்கல்: அதானே பார்த்தேன் என்கிட்ட இந்த காமெடி பண்ணுற வேலையெல்லாம் வேண்டாம்

கவிதா: சே சே... உங்க கிட்ட நான் காமெடி செய்ய முடியுமா என்ன..நீங்க யாரு
அதுவும் இப்ப இருக்கிற நிலைமையில்... ஒன்னும் சொல்லிக்கறதுக்கு இல்ல..
கொஞ்சம் தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கலாம்

நாமக்கல்: யம்மா கொஞ்சம் புரியறா மாதிரித்தான் சொல்லுங்களேன்

கவிதா: ஓவரா போச்சின்னா..ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போலம்னு இருக்கேன்

நாமக்கல்: இப்பவே கண்ணைக் கட்டுதே பீ ஸ்பெசிபிக் ப்ளீஸ்

கவிதா: சொல்றமாதிரியா நீங்க செய்து இருக்கீங்க?

நாமக்கல்: அப்படி என்ன பண்ணிட்டேன் நானு நான் அப்பாவிங்க அல்லது என் பேர்ல யாராச்சும் போலி கெளம்பிட்டாங்களா?

கவிதா: உங்களப்பத்தி வர நீயூஸ் எல்லாம்ம் கேட்டா பயமா இல்ல இருக்கு

நாமக்கல்: !? மீ?

கவிதா: என்ன...போலியா இருக்குமோ..????! ஹய்யோ திருப்பியுமா? சிபி அப்பன்னா மேட்டர் பெரிய லெவல்ல செக் பண்ணனும், உங்களுக்கும் அதுக்கும் அப்ப சம்பந்தமே இல்லையா?

நாமக்கல்: தெளிவா சொல்லுங்க கொஞ்சம் பீதியை கெளப்பீட்டீங்க, நானும் செக் பண்ணணும்

கவிதா : இருங்க வரேன்.. மெயில fwd பண்றேன் wait!

நாமக்கல்: சரி

நாமக்கல்: மெயில்லயா எதாச்சும் பிளாக்கே இருக்கா?

கவிதா : மெயில் தான் ப்ளாக் எல்லாம் இருந்தா உங்களுக்கு இல்ல நியூஸ் முதல்ல வந்து இருக்கும்..

நாமக்கல்: ம்ம்

கவிதா: கொஞ்சம் இருங்கப்பா வந்து அனுப்பறேன். .

நாமக்கல்: என்ன ஆச்சோன்னு திகிலா இருக்கு

கவிதா: உங்களுக்கேவா? சிபி யா இப்படி பயப்படறது??

நாமக்கல்: பின்னே ஏடாகூடாம இருந்தா என்ன ஆகுறது நம்ம இமேஜ் என்ன?

கவிதா : வெயிடீஸ்ப்பா

நாமக்கல்: ஓகே

அணில் குட்டி அனிதா : ஓ அப்ப தள இன்னும் வெயிட்டிங்கா????? ம்ம்.. இதுக்கு தான் கவிக்கிட்ட ரொம்ப வச்சிக்காதீங்கன்னு சொல்றது யாராச்சும் கேட்டாதானே. .அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் எங்க தள' கிட்டயேவா????

பீட்டர் தாத்ஸ் :- Advice from your friends in like the weather, some of it is good, some of it is bad.”

அரசியல் சத்தியமாக எனக்கு புரியலைவில்லை..

ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும்...

எப்படி இந்த டாக்டர் மட்டும் இங்கேயிருந்து அங்கேயும், அங்கேயிருந்து இங்கேயும் தாவறாரு? இப்போதய நியூஸ் பா.ம.க, அதிமுக வுடன் இந்த தேர்ந்தலில் இணைகிறது. திமுக வை விட்டு டாக்டர் விலகிவிட்டார்.

வைகோ எப்படி அம்மாவோடு எப்பவும் ஒற்றுமையாக இருக்காரு? அவங்க எப்படி நடத்தினாலும் அங்கேயே இருக்காறே எப்படி?

விஜயகாந்த் எப்படி தனியாவே இன்னும் போட்டி போடறாரு? முதல்ல விஜயகாந்த் எப்படி அரசியல் தலைவர் ஆனாரு?

அதிமுக ஏன் காங்கரஸ் கூட்டணிக்கு முயற்சி செய்தது?

சரத்குமார் ன்னு ஒருத்தர் அவரு என்ன செய்யறாரு? என்ன செய்ய போறாரு?

மூன்றாவது அணி எப்பவும் தேர்தலின் பொழுது கூடுது..அப்புறம் காணபோயிடுது? அதுவும் அதில் இந்த முறை அம்மா'வை காணோம்? ஏன்?

இன்னும் இப்படி நிறைய இருக்குங்க.. தலைய சுத்துது...

ஆனாலும் டாக்டரை நினைச்சா எப்பவுமே ரொம்ப பெருமையா இருக்கும்... உண்மையான சுத்தமான அரசியல்வாதி இவராக மட்டும் தான் இருக்கமுடியும்.

அணில் குட்டி அனிதா :- கவி.. நமக்கு எதுக்கு அரசியல்...?!! உங்க தலைய தொறந்து வச்சாலும் உங்களுக்கு புரிய போறது இல்ல.. எதுக்கு தேவை இல்லாமல் இம்புட்டு கேள்வி?

பீட்டர் தாத்ஸ் :- Politics is the art of postponing decisions until they are no longer relevant.”

அது ஒரு வசந்த காலம்..

நேற்று மதியம் மொபைலில் அழைப்பு வந்தது, நம்பர் புதிது......

ஹல்லோ.....

ஹல்லோ நான் ஜே.கே.. பேசறேன்..

:))) ஹே என்னப்பா தீடீர்னு ஃபோன்? எப்படி இருக்கீங்க..? பூனே ல தானே இருக்கீங்க..?

:)) ஆமா..ஹப்பி எப்படி இருக்காரு. நவீன் எப்படி இருக்கான்..?!!

எல்லாரும் சூப்பர்.. ஹப்பி மும்பை வந்தவுடன் உங்களுக்கு ஃபோன் செய்து சொன்னேனேப்பா.. மறந்துட்டுடீங்களா? சரி என்ன கல்யாணமா.. எவ்வளோ நாள் கழிச்சி பேசறீங்க? :)))

அட ஆமா.. எப்படி ? முன்னவே தெரிஞ்சி கேக்கறீங்களா.. கணேஷ் சொன்னானா..

ம்ம் நீங்களாவது பூனே ல இருக்கீங்க பேசறது இல்ல.. தலைவர் இங்க இருந்துக்கிட்டே பேசறது இல்ல... அவரு எல்லாம் சொல்லல.. எல்லாம் மனசு சொல்லுது.. நீங்க ஹ்ல்லோ சொன்ன சந்தோஷத்துல தெரியுது... :)))

ஹா ஹா ஹா ஹஹா...

(ஜெ.கே எப்பவும் இப்படித்தான் வாய்விட்டு..ஹா ஹா ஹா.. வென்று சிரிப்பார்கள், குரல் ரொம்ப மேன்லியாக இருக்கும், பார்க்க கொஞ்சம் சியான் விக்ரம் மாதிரி இருப்பாங்க..)

சரி வெண்ணிலா எப்படி இருக்காங்க.. ?

யாரு வெண்ணிலா..?

ஓ சாரி பேரை மறந்துட்டேனா?

உதயா'வா? அவங்களுக்கு என்ன சூப்பரா இருக்காங்க..

ஒன்னும் ப்ராப்ஸ் இல்லயே ஜே.கே.. எல்லாம் ஓகே தானே.. என்ன 7 வருஷம் லவ் பண்ணி இருப்பீங்களா?

ஹா ஹா ஹா..... ஆமா ஆமா..7 வருஷம்...ம்ம்..எல்லாரோட சம்மதத்தோட தான்..

ம்ம்...நீங்க ஏழு வருஷம்,அதுல கண்டிப்பா இரண்டு வருஷம் நானும் உங்க கூட சேர்ந்து உதயா வை லவ் செய்து இருப்பேன் இல்ல.... :)) ஸ்ஸ்ஸ் போதும்டா சாமி பயந்து பயந்து பேசினது அந்த பொண்ணு மட்டுமா.. அவங்க அப்பா ஃபோன் எடுத்தாக்க இங்க எனக்கு உடம்பு நடுங்கும்..தெய்வம்ப்பா நீங்க..என்னைய பேச விட்டுட்டு நீங்க கூல் லா இருப்பீங்க........:)

ஹா ஹா ஹா ஹா... ஆமா.. நீங்க இல்லன்னா எங்க காதல் ஏது..? சரி கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடனும் நானே டிக்கட் புக் பண்ணிடறேன்.. தங்க எல்லாம் ஏற்பாடும் பண்ணிடறேன்.. நம்ம க்ரூப் எல்லாரும் வருவாங்க.. .

ஆமா அப்ப எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது இல்ல ஜே.கே ?.. நல்லா என்ஜாய் பண்ணோம் இப்ப பிச்சிப்போட்ட மாதிரி எங்க எங்கயோ இருக்கோம்...

ஜனா பேசறானா.. ?

ஹா ஹா.. எங்க ..அவரு ரொம்ப பிசி... ஒய்ஃப் னா வேற பயம்..:) சோ பாவம் னு விட்டுடறது..

ஹா ஹா ஹா.. ஓ ஒய்ஃப் னா பயம்மா... இது தெரியாதே எனக்கு... :ஹா ஹா..ஹா ஹா...

மொட்ட மோகன் அமெரிக்கா தானா.. கல்யாணம் ஆயிடுத்தா ஜே.கே.? Nift ஐ தாண்டுபோது எல்லாம் எனக்கு மொட்ட மோகன் ஞாபகம் தான் வரும்.. கருமமே கண்ணா பொண்ணுங்களை சைட் அடிச்சிக்கிட்டு நிப்பாங்களே..?!! :))

ஹா ஹா ஹா ஹா.. கல்யாணம் ஆகல லாஸ்ட் வீக் பேசினேன்.. இதே மாதிரி தான் அப்ப நடந்தது.. நம்ம எல்லாரையும் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.. ரொம்ப நல்லா இருந்தது.. நெஜமா ஸ்வீட் டேஸ்......

பிரகாஷ்? .உங்களுக்கு தெரியும் இல்ல நானும் அவனும் அப்பவே பேசறது இல்ல.. செம சண்டை, கணேஷ் எதிர்ல வச்சி நல்லா திட்டிவிட்டுட்டேன். .ரொம்ப பொஸஸிவ் வா இருக்க ஆரம்பிச்சான்.. செமத்தியா வாங்கிக்கட்டினான்.. அதுக்கு அப்புறம் பேசறது இல்ல.. ஆனா கணேஷ் அவனை பத்தி அப்டேட் செய்வாங்க....

ஹா ஹா. .நீங்க வேற நீங்க வேலைய விட்டு போன பிறகு அவன் ரொமபவே மாறிட்டான்.. ரொம்ப இன்டர்ன்ல் பாலிடிக்ஸ்.. தாங்கமுடியல எங்களால.. அவன் கூட எனக்கும் கான்டாக்ட் சுத்தமா இல்ல.. இன்ஃபி ல இருக்கான்னு தெரியும். ஆமா உங்களுக்கு ஆக்ஸிடட் ஆச்சே கால் நல்லா நடக்க வருதா... இப்ப வண்டி எப்படி ஓட்டறீங்க.. சீபீட் குறைஞ்சு இருக்கா.. ?


ஸ்பீட் எல்லாம் குறையுமா? என்னை போய் இப்படி கேள்வி கேட்கறீங்களே...ஜே.கே அதான் நீங்க, ஜனா, கணேஷ், சாவித்திரி வந்து பாத்துட்டு போனீங்களே.. அதுக்கு அப்புறம் இன்னொரு ஆக்ஸிடன்ட் கூட நடந்துடுத்து.. :)) தெரியுமா? ஆனா பழசு பெரிய ஆக்ஸிடன்ட் டா இருந்தாலும் வெளியில சொல்லிக்கிற மாதிரி இல்ல.. இந்த ஆக்ஸிடன்ட் ஆனது தான் ரொம்ப பெருமையா இருக்கு?

????? இது வேறையா ஆக்சிடண்டல என்னங்க பெருமை.. ? :(

பின்ன.. மவுண்டு ரோடு ல இல்ல ஆச்சி..ஆக்ஸிடன்ட் ஆனாலும் அண்ணாசாலை யில் ஆகனும்.. ஆஹா.. என்னா ஒரு மன திருப்தி தெரியுமா..? அந்த ஆக்ஸிடன்ட் க்கு அப்புறம் மவுண்ட் ரோடே எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி.. எவ்வள்வு டிராபிக், எவ்வளவு வண்டிகளுக்கு நடுவுள, நட்ட நடு ரோடுல சும்மா கும்முன்னு படுத்து எழுந்து வரது சும்மாவா? I enjoyed.. பா...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.. முடியலைங்க.. ஏங்க..?

ஜெ.கே நாம எல்லாரும் இப்படி சிரிச்சி பேசி எவ்வளவு நாள் ஆச்சி... அப்ப எல்லாம் தினம் தினம் இப்படி சிரிச்சி கும்மாளம் அடிப்போம்..

ம்ம்..ஆமாம்.. நம்ம செட் கண்டிப்பா கல்யாணதுக்கு வருவாங்க..நீங்க கண்டிப்பா வந்ததுடனும்.. மறக்க எல்லாம் சான்ஸ் இல்ல.. நான் கல்யாணம் முடியறவரை ஃபோன் போட்டு உங்களுக்கு நினைவு படுத்திக்கிட்டே இருப்பேன்.. விடமாட்டேன்..

ம்ம்..கணேஷ் எதுக்கு இருக்காரு..அவர் கிட்ட சொல்லி வச்சிடறேன். .அவர் போகும் போது என்னையும் கூட்டுட்டு போகட்டும் ஜனா பத்தி எனக்கு தெரியாது.. :) வந்தால் பாத்துக்கலாம்.

சரி...ஆபிஸ் கிளம்பனும்.. டேக் கேர்.. பை..பை

யூ டூ.. உதயா'க்கு என்னோட ஹக்ஸ்... பை பை..!!

***********************

அந்த அலுவலகத்தில் நான் நுழைந்த போது மேல் சொல்லிய நண்பர் முதற்கொண்டு அங்கிருந்த அத்தனை இளைஞர்களும் என்னை கடுகடுவென பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. நான் non-tech, அவங்க 8 பேரும் tech அதில் ஒரே ஒரு பெண், ஆனா அந்த பெண்ணிற்கும் இந்த 8 இளைஞர்களுக்கும் ட்ர்ம்ஸ் சரி இல்லை. அந்த பெண் வந்து தான் என்னை உள்ளே அழைத்து சென்றாள். கண்ணாடியால் ஆனா அறை. உள்ளேயிருந்து நாங்கள் அவர்களையும், வெளியிருந்து அவர்கள் எங்களையும் பார்க்கமுடியும். அறிமுகமே இல்லை இந்த பெண் வெளியில் இருந்த ஒருவர் ஒருவராக கண்ணாலேயே அடையாளம் சொல்லி சொன்னாள் அதில் அவளுக்கு முதல் எதிரி மொட்ட மோகன் தான். :)

"எல்லாமே திமிரு பிடிச்சதுங்க. .பொண்ணுங்கன்னா அதுங்களுக்கு இளக்காரம்.. மட்டமா நினைக்கற கேசுங்க.. .நம்மாளையும் அதுங்கள மாதிரி இருக்கமுடியும்னு நான் ப்ரூவ் பண்றேன் இல்ல அதான் என்னை கண்டா அதுங்களுக்கு பிடிக்காது ..இப்ப எனக்கு துணையா நீங்க வேற வந்துட்டீங்க இல்ல.. அதான் அப்படி பார்க்கறானுங்க.. "

"...ம்ம்..."

ஜனா தான் முதலில் உள்ளே வந்தார். அவராகவே ஹல்லோ கவிதா வாங்க.. ஹெட் ஆபிஸ் ல சொன்னாங்க நீங்க இனிமே இங்கத்தான் இருப்பீங்கன்னு... வாங்களேன் .எல்லாருக்கும் இன்ரோ கொடுக்கிறென்....

இப்படியாக ஆரம்பித்த எங்கள் நட்பு.. ஒரு காலக்கட்டத்தில் இணைபிரியாத நண்பர்களாக்கி விட்டது. அதில் சில மறக்கமுடியாத நிகழ்வுகள்

பசங்க சாப்பிட ஆந்திரா மீல்ஸ் வாங்கிட்டு வருவாங்க என்னோட லஞ்ச் எப்போதும் ஜே.கே இல்ல வேறு யாராவது சாப்பிடுவாங்க.. எனக்கு ஆந்திரா மீல்ஸ் தான் கிடைக்கும்.. அதில் என்ன ஹைலைட் என்றால், எர்த் ஸ்டேஷன் என்பதால் அங்கு தேவையான தட்டுகள் எல்லாம் இருக்காது அதனால், மீல்ஸ் பாக்கெட் டை அப்படியே திறந்து வைத்து 5 பேர் ஒரே இலையில் சாப்பிடுவோம். சாதம் ஒதுக்கி ஒதுக்கி தேவையானதை போட்டு சாப்பிடுவோம். . அதில் அவர்கள் நிறைய சாப்பிடட்டும் என்று நான் குறைவாக எடுப்பேன்.. அதையே ஒவ்வொருவரும் செய்வோம்.. சாதம் குறையாமல் அப்படியே இருக்கும். .கடைசியாக சண்டை போட்டு நீ சாப்பிடு, நான் சாப்பிடறேன் ல வந்து .பிறகு ஓருவழியாக சாப்பிட்டு முடிப்போம்.

என்னை 8 பேரும் கவனிப்பாங்க பாருங்க.. தாங்க முடியாது.. 10 நிமிடம் லேட்டா ஆபிஸ் வந்தா பயப்படுவாங்க. . எல்லோரும் வண்டியல எங்கேயாவது வெளியில் போகலாம் என்றால் வேண்டாம் கவி போற ஸ்பீடுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்க வேண்டாம் நாம் வேன் அரேன்ஜ் செய்து போலாம் என்பார்கள். கொஞ்சம் சத்தமாக பேசினால்..ஜனா வும் ஜே.கே வும் முதலில் வந்து நிற்பார்கள். .நாங்க பார்க்கிறோம். நீங்க ஏன்.. சத்தம் போடறீங்க நாங்க பாத்துக்கறோம்.. கூல் என்பார்கள்.

இது இல்லாமல் அனைவரும் நவீனுக்கு ரொம்ப க்ளோஸா இருந்தார்கள். மொட்ட மோகன் படிப்பு விஷயமாக எப்பவும் நவீனுடன் பேசுவாங்க. .பாசம்னா அது ஜனா தான். .நவீன் ஜனா ன்னு சொன்னா போதும் அப்படியே உருகிடுவான்...

மாலையில் ஷெட்டில் காக் விளையாடுவோம்.. ஜனா மட்டும் வந்து "கவிதா போதும் குதிச்சது. .கிளம்புங்க, ..ஜே.கே அவங்க தான் குதிக்கறாங்கன்னா அவங்கள பத்தி தெரியும் இல்ல, நீயும் விளையாடிட்டு இருக்க....போதும்.. பேட்டை கொடுங்க நான் அவன் கூட விளையாடிக்கிறேன்.. என்பார். ஜே.கே..வும் ஆமா ஆமா இன்னைக்கு இது போதும் நீங்க கிளம்புங்க என்பார். எனக்கு சிரிப்பு தாங்காது.... சரி விளையாடல..ன்னு வந்துடுவேன்.

எதற்குமே ஏன் னு அவர்கள் யாரையுமே கேட்டது இல்ல. எங்களுக்குள் (பிரகாஷ் தவிர்த்து)இதுவரை சண்டையோ மன வேறுபாடோ வந்தது இல்லை.. 8 பேர் ல யார் எதை செய்ய வேண்டாம் னு சொன்னாலும் செய்ய மாட்டேன். .விட்டுடுவேன். அவங்க பாத்துக்குவாங்க என்ற் நம்பிக்கை.. எனக்கு எப்பவும் அவங்க நல்லது தான் செய்வார்கள் என்ற நம்பிக்கையும்.

அவர்களில் ஒருவராக நான் இருந்தது இப்போது நினைத்தாலும் மறக்கமுடியாத ஒரு வசந்த காலம் தான்.. :))

அணில் குட்டி அனிதா:-.. ஓரு ஃபோனுக்காஆஆ ?????

பீட்டர் தாத்ஸ் : “Many people will walk in and out of your life, but only true friends will leave footprints in your heart”

மொத்தத்தில் நீ அழகு !மெளனமே

உன்
மெளனம் தானே அழகு

உன் முடிவில்லாத
பேச்சு

புரிதல் இல்லாத
கோவங்கள்

எளிதாக எறியப்படும்
வார்த்தைகள்

தாமரை இலை நீராக
தள்ளிவிடுகிறதே!!

உன் மெளனங்கள்
உடையும் போது

நானும் சேர்ந்து
உடைந்து போகிறேன்..

உடைந்தாலும்
மகிழ்கிறேன்

உன் மெளனங்கள்
முடிக்காததை

உன் வார்த்தைகள்
முடிக்கின்றன.......


முடிக்காத உன்
மெளனமும் அழகு !

முடிகின்ற உன்
வார்த்தைகளும் அழகு !

மொத்தத்தில் நீ அழகு !


அணில் குட்டி அனிதா :- ஓ கவுஜ கவுஜ கவுஜ..... கவுஜ கவிதா கவுஜ எழுதிட்டாங்க...ஆமா எதுக்கு இப்ப கவுஜ...?!!

பீட்டர் தாத்ஸ் :- The miracle of friendship can be spoken without words... hearing unspoken needs, recognizing secret dreams, understanding the silent things that only true friend know.

அப்பாவின் கையேடு

இளைஞர்கள் அத்தனை பேரும் இந்த கை ஏட்டு பதிவினை கவனிக்க வேண்டுகிறேன். 1954 ல் என் அப்பா இளைஞராக இருக்கும் போது அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மாதம் இரு முறை இந்த கையேட்டினை எழுதி வெளியிட்டு வந்துள்ளார். பொழுதை கழிக்க காலத்திற்கு ஏற்றார்போன்று எத்தனையோ வழிகள் இருந்தாலும், அப்பா தன் நேரத்தை எப்போதுமே நல்ல விதமாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எங்களின் வீட்டு தீ விபத்தில் எல்லாமே எரிந்துவிட, இந்த ஒரு புத்தகத்தை மட்டும் எப்படியோ என் அத்தை மகளிடம் இருப்பதாக கேள்விப்பட்டு வாங்கி பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கெஜா - என்பதை அப்பா அப்போது எல்லாம் கெசா என்றே எழுதி வந்திருக்கிறார். இந்த புத்தகம் முழுதுமே அப்பாவின் கையெழுத்தில் வெளிவந்தது, அவரே வரைந்த படங்கள்... கதைகள்..எல்லாவற்றிலும் PK (P.Kesananan, இதை பிறகு P.Gajananan என்று மாற்றிவிட்டார்) குறிப்பாக எல்லிச்சத்திரம் என்ற ஒரு டாக்குமென்டரி எனக்கு ரொம்பவும் பிடித்தது.. அதை பதிவிட முயற்சி செய்கிறேன்.. இதோ என் அப்பாவின் கையேடு....அணில் குட்டி அனிதா :- கவி ஏன் இப்படி இருக்காங்கன்னு தெள்ள தெளிவா தெரிஞ்சி போச்சி.....குடும்பமே ஒரு மாதிரி குடும்பந்தான் போல.......!!

பீட்டர் தாத்ஸ் :- OLD is GOLD.

நான் அவரோடு வாழவா?

பேதை பெண்... யாரோ ஒரு ரேடியோ ஜாக்கியிடன் தன் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய கேட்கிறாள். இந்த ரேடியோ ஜாக்கி ஒன்றும் குறிப்பிட்ட துறை சார்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றி இரவு பாட்டு கேட்டுக்கொண்டு படுத்திருந்தேன்.. பாட்டுக்கு நடுநடுவே தொலைப்பேசியில் அழைத்து நம் பிரச்சனைகளை சொன்னால் அந்த ரேடியோ ஜாக்கி அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை சொல்லுவார். அப்படி கேட்கும் 10 தொலைபேசி கால்களில் 9 தொலைபேசி கால்கள் கண்டிப்பாக காதல் பிரச்சனைகளை பற்றி இருக்கும்... இவர்களும் நல்லவிதமான தீர்வுகளை சொல்லித்தருவார்கள். :) அப்படி அழைக்கும் காதலர்கள் அத்தனை பேரும் ஊடல், கூடல், மாடல் பற்றி பேசுவார்களே அன்றி நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய சிலர் நம் வீட்டில் இருக்கிறார்களே அக்கறையோடும் பாசத்தோடும் அவர்களை பற்றியும் சற்றே நினைப்போம் என்று நினைப்பாரில்லை.

இப்படி கேட்டு கொண்டு இருக்கும் போது ஒரு பெண், தன் கணவர் டவுரி அதிகம் கேட்டு தன்னை வீட்டை விட்டு துறத்திவிட்டார் என்றும் தான் இப்போது அம்மா வீட்டில் இருப்பதாகவும், அதற்கு அவர் முழு காரணம் இல்லையென்றாலும் மாமியார், நாத்தனார் சொல்லுவதை கேட்டு த்தான் அப்படி நடந்துக்கொள்கிறார்.. என்று சொல்லிவிட்டு கடைசியாக அந்த பெண் கேட்ட கேள்வி "நான் அவரோடு வாழவா?"

பேதை பெண்ணே!! இது உன் வாழ்க்கை, உன் கணவருடன் வாழ்ந்தவள் நீ, உன் மாமியார், நாத்தானார் பற்றி உனக்கு தான் தெரியும், அதை எல்லாம் விட அம்மா வீட்டு சுழ்நிலை, உன் படிப்பு, உன்னால் சுயமாக தனியாக இருக்க முடியுமா? இல்லை வேறு வாழ்க்கைக்கு நீ தயாரா? உன் பொருளாதார நிலைமை, இதை எல்லாவற்றையும் விட உன் கணவர் மேலும் உன் குடும்பத்தின் மேலும் நீ வைத்திருக்கும் அன்பு... என்று இதை எல்லாமே யோசித்து நிச்சயம் செய்ய வேண்டியது நீ.. !!

யாரோ ஒரு மூன்றாம் மனிதரிடம் ஒரு நிமிடத்தில் முடிவு செய்ய வேண்டிய விஷயமா இது?! கேட்கும் கேள்வி பைத்தியக்காரத்தனமாக இல்லையா? துறை சார்ந்தவர் என்றாலும் அலோசனை மட்டும் கேட்கலாம் ஆனால் முடிவு நம்முடையதாக மட்டுமே இருக்கவேண்டும்.

நீ அவரோடு சேர்ந்து வாழவேண்டும் என்று நினைத்துவிட்டால் போதும் நீ வாழ்ந்து விடுவாய், அல்லது வேண்டாம் என்று நீ முடிவு செய்தால் அவர் உன்னை இழந்துவிடுவார் என்பது கூட உனக்கு தெரியாதா? உன் வாழ்க்கையின் முடிவை அடுத்தவர் நிர்ணயம் செய்வதா? கணவன் மனைவிக்குள் மூன்றாவது ஒரு ஆள் நுழைந்து விட்டாளே அங்கு பிரச்சனை தான். எத்தனை பெரிய பிரச்சனை வந்தாலும் இது நம் வாழ்க்கை நாம் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். சொல்லுபவர்களுக்கு என்ன அவர்கள் பாட்டுக்கும் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் அது பாஸிட்டிவாக இருந்தாலும் நெகட்டிவாக இருந்தாலும் அனுபவித்து நாமே.

அதனால் யாருமே தன் வாழ்க்கையை தானே முடிவு செய்தல் நலம். உடனடியாக முடிவு எடுக்கும் நிலையில் நம் மனமும், சூழ்நிலையும் இல்லை என்றால் சிறிது காலம் கிடப்பில் போட்டு சிந்திக்கும் திறன் வந்த பிறகு முடிவு செய்யலாம்.. ஆனால் எக்காரணம் கொண்டும் மற்றவர் சொல்லுவதை கேட்டு நம் வாழ்க்கையை நாம் முடிவு செய்ய க்கூடாது.

அணில் குட்டி அனிதா:- கவிக்கு ஆர்.ஜே'ஸ் கண்டாலே பொறாமை.. வேற ஒன்னுமே இதுல மேட்டர் இல்ல.. ...சர்ரி என்னக்கு பசிக்குது சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா.. கூல்..லா... வெயிலுக்கு இளநீர், ஜூஸ்'ஸூ.. ஏதாச்சும்... எனி படி ஸ்பான்ஸரிங்...?!

பிட்டர் தாத்ஸ் :- Like the elephant, we are unconscious of our own strength. When it comes to understanding the power we have to make a difference in our own lives, we might as well be asleep. If you want to make your dreams come true, wake up. Wake up to your own strength. Wake up to the role you play in your own destiny. Wake up to the power you have to choose what you think, do, and say.

சாட்டை அடி


வரும்
போகும்
ஆனால்
இதுவரை
நின்றதே இல்லை

அடிக்கும் போது
எல்லாம்
சொல்லமுடியாத
வேதனையும்
வலியும்
இருக்கும்
ஆனால்
விடவும்
முடியாது

அதன்
உருவமும்
பெயரும் மட்டும்
மாறும்

ஆனால்
மாறாதது
அதன்
ஒவ்வொரு
சுயநல அடியும்..... !!

மெளனம்

அடர்ந்த இருட்டில்
அடிமனதில் ஓலமிட்டு
ஓவென்று
கத்தும் அந்த சத்தம்
மெளனம்..!!

கண்களை திறந்து
நல்ல வெளிச்சத்தில்
சத்தத்தை நிறுத்த முயன்று
அது சுனாமியாக
பெருக்கெடுக்க
இன்னமும்
மெளனம்..!!

இறைவா
இதுதான்
மெளனமா?!!

அமைதியாக ஆழ்ந்து
அற்பமனிதர்களின் சிந்தனை
அறவே அழித்து
ஆற்றல் அத்தனையும்
ஒருங்கினணத்து
ஒற்றையாக உணர்ந்த

அந்த வினாடி துளிகள் -

வெண்மை படர்ந்த
வானத்திற்கு அடியில்
வெண்ணிற ஆடையிலே
எடையே இல்லாத
உடலுடன்
மலையின் உச்சியில்
அமர்ந்திருக்க...
முகத்தை வருடி
மேகம் கூட்டம் செல்ல
மேகத்தை தழுவிய காற்று
சில்லென்று என்னையும் தழுவ...

ஆராவாராம் இல்லாத
மெல்லிய தென்றல்
பூக்கள் வாசம் அத்தனையையும்
என் மூச்சருகே
கொண்டுவந்து சேர்க்க..

அவ்வாசத்தில் மயங்கி
நானும்
நித்திரை செல்ல
கொஞ்சம் கொஞ்சமாக
தழுவுகிறது

மெளனம்.....!!

நிச்சயமாக
இது தான்
இறைவா
மெளனம்...!!

மரவள்ளி கிழங்கில் பலவித உணவுகள்

பத்மா'ச் கிட்சன் அப்டேட் செய்து மாதங்கள் ஆகுது. எழுதனும்னு நினைத்து வேறு பதிவுகள் போட்டுக்கொண்டே வர இதை சுத்தமாக மறந்தேவிட்டேன்.

மரவள்ளி கிழங்கு - Tapioca

இதில் iron, potassium, manganese and copper சத்துகள் உள்ளன. கொழுப்பு குறைவு, உருளைக்கிழங்கை போன்றே இருந்தாலும், இதில் அதைவிட கலோரி குறைவாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு. சதைபிடிக்க வேண்டும் என்று விரும்புவோர் இதை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

சில எளிதான செய்முறைகள்.

மரவள்ளி கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி ஆவியில் வேகவைத்து எடுத்து, தோலை உறித்துவிட்டு, வெல்லம் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம், இது பள்ளியிலிருந்து வந்தவுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மாலை வேளையில் சாப்பிட சிறந்த உணவு.

மரவள்ளிகிழங்கு அடை :-

பச்சரசி - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 5
மரவள்ளி கிழங்கு மீடியம் சைஸ் - 1
உப்பு -தேவைக்கேற்ப
சோம்பு - சிறிது
லவங்கம் - 2
வெங்காயம் - 1
தேங்காய் - பொடியாக நறுக்கியது ஒரு கரண்டி
கருவேப்பிலை
கொத்தமல்லி இலை
எண்ணெய் -தேவைக்கேற்ப

செய்முறை ;- மரவள்ளி கிழங்கை தோல் சீவி, கேரட் துருவலில் வைத்து சீவிக்கொள்ளவும். ஊறவைத்த பச்சரசி, மிளகாய், சோம்பு, லவங்கம் எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு, பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். மாவு அடை ஊற்றும் பதத்திற்கு இருக்கவேண்டும். தோசைக்கல் வைத்து எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து அதையும் இந்த மாவுடன் சேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கலக்கி அடைகளாக இடவும்.மரவள்ளி கிழங்கு வடை :-

கடலைபருப்பு - 1.5 கப்
மரவள்ளி கிழங்கு சிறியது
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - சிறிது
லவங்கம் - 2
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
கருவேப்பிலை
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.


மரவள்ளி கிழங்கு பக்கோடா :-

கடலை மாவு- அரை கப்
பச்சரிசி மாவு - ஒரு பிடி
நெய் - 2 ஸ்பூன்
துருவிய மரவள்ளி கிழங்கு - 1/4 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சைமிளகாய்- 2 - பொடியாக நறுக்கியது
லவங்கம் - 2, சோம்பு -சிறிது, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறிய துண்டு - இவையெல்லாம் அரைத்து கொள்ள வேண்டும்.
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை, கொத்தமல்லி தழை -பொடியாக நறுக்கியது.

செய்முறை :- எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீர் விடாமல் நன்றாக கலந்துக்கொள்ளவும், நன்கு கலந்த பிறகு லேசாக தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்திற்கு பிசையவும். எண்ணெய் காயவைத்து ஒரு பிடி கையில் எடுத்து, எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக பிசைந்து பிசைந்து நிறைய பெரிய துண்டுகள் விழாதது மாதிரி விடவும். பொன்னிறமானவுடன் எடுத்து பரிமாறவும்.

அணில் குட்டி அனிதா :- பத்மா'ன்னு ஒருத்தங்க இருந்தாங்க அவங்க ஆட்டம் பல பேரால் பல சமயம் தாங்க முடியாமல் இருந்திச்சி.. இப்ப அவங்க பேத்தி ஜூனியர் பத்மா' வா ஆகி நம்ம உயிரை வாங்கறாங்க... .. எப்ப போட்டோவுக்கு மாலைய மாட்ட போறாங்களோ.. ?? பின்ன என்னங்க..இப்படி இவங்க சொல்ற சமையல செய்து சாப்பிட்டா.. நமக்கு சீக்கிரம் சங்கு தானே..அப்புறம் ஆட்டோமேட்டிக்கா மாலைத்தானே..!!

பீட்டர் தாத்ஸ் :- “Good painting is like good cooking: it can be tasted, but not explained”

யாவரும் நலம் - இரண்டாவது பாகம்

அந்த மொபைல்'ஐ ராகவன் புதிதாக அன்று தான் வாங்கியிருந்தான். Bakiya 13B மாடல். புதிதாக பாக்கி'யா கம்பெனி தொடங்கி இன்றொடு ஒருவருடம் முடிந்திருந்தது, அதை ஒட்டி நிறைய டிஸ்கவுண்டு, புதிய மொபைல் போன்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. ராகவனுக்கு Bakiya 13B மாடல் ரொம்பவும் பிடித்து இருந்தது. அழகான எல்லா வசதிகளையும் உடைய மாடல், சிகப்பும் கருப்பும் கலந்த நிறம்..விலைதான் கொஞ்சம் கூடுதல் இருந்தாலும் சமாளித்து விடலாம் என்று வாங்கிவிட்டான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், வாங்கிய புதிய மொபைல் சிணுங்கியது. ஆஹா முதல் கால்...ஆர்வமுடன் எடுத்தான், "Dr.Bala" என்று காட்டியது. யாரிது..? இப்படி யாரையுமே நமக்கு தெரியாதே..? இப்படி ஒரு பெயரில் நாம் எந்த நம்பரையும் சேவ் செய்து வைக்கவில்லையே என்று யோசித்தவாறே .... கால் அட்டன்ட் செய்தான்.

"ஹல்லோ..."

"ஹல்லோ ராகவன்.. ஹவ் ஆர் யூ? "

"ஹல்லோ...மே ஐ நோ ஹூ ஈஸ் திஸ்....?"

"திஸ் ஈஸ் டாக்டர் பாலா... உங்களுக்கு தெரிந்தவர் தான்...."

"இதுவரையில் எனக்கு டாக்டர் பாலா என்று யாரையும் தெரியாதே.."

"தெரியாவிட்டால் என்ன.. ராகவன்.... இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள் .."

"சரி என்ன விஷயமாக ஃபோன் செய்தீர்கள்....."

"இன்னைக்கு உன் வீட்டில் ஒருவர் சாகப்போகிறார்..சீக்கிரம் போய் காப்பாற்று.... .. "

".....வாட்?!!! ..............என்ன?.. என்ன சொல்றீங்க..." அதிர்ந்தான் ராகவன்...லேசாக வியர்க்க ஆரம்பித்தது....

" ராகவன் உங்க வீட்டில் ஒருவர் இன்றைக்கு சாகப்போகிறார்... காப்பாற்று...."

"....ஹல்லோ யார் நீங்க என் வீட்டில் சாகபோறாங்களா? ஏன்? யாரு சாகப்போறா? என் வீட்டில் நடக்க போற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்..?..ஹல்லோ ஹல்லோ..ஹல்லோ.........."

"ஹஹ்ஹ்ஹா....ஹஹ.ஹா......எனக்கு எப்படி தெரியுமா...ஹஹ்ஹாஆ...ஹஹ்ஹா..."

எதிரிமுனையில் கால் துண்டிக்கப்படுகிறது.....

ராகவனுக்கு ஒரே குழப்பம்... திக் திக் திக்..என்று நெஞ்சு அடித்துக்கொள்ள....யாராவது ராங் நம்பராக இருக்குமோ.. இல்லை ஏப்ரல் ஃபூல் மாதிரி யாரவது நம்ம ஆளுங்களே விளையாடறாங்களா? ......?!

சரி நம்பர் என்னவென்று பார்க்கலாம்..என்று வந்திருந்த கால்'களில் டாக்டர் பாலா என்ற பெயரை எடுத்து "வியூ கால் நம்பர்" செலக்ட் செய்து பார்த்தான்....

அங்கே....................

.............................

..............................

..............................

.............................

............................

டேய்.......!! வெண்ணெய்!! கேன கிறுக்கா.!!.நான் ஆவி..டா எனக்கு ஏதுடா நம்பர் ????

"................................"


அணில் குட்டி அனிதா:- ம்ம்.......சரிதான்.... இன்னுமா இங்க நிக்கறீங்க.. கவி உங்களை எல்லாரையும் தான்...கேன''ன்னு சொன்னாங்கன்னு இப்பவும் உங்களுக்கு புரியலைன்னா.... நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல்ல....

பீட்டர் தாத்ஸ் :- The past is a ghost, the future a dream, and all we ever have is now.”

சிபி தம்பதியினருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்

திருமதி. சிபி & திரு. சிபி - க்கு 8 ஆம் ஆண்டு திருமணநாள் நல்வாழ்த்துகள்!!கவிதை எழுதணும்னு நினைச்சி ஆரம்பிச்சா.. சிபி எப்பவும் என்னை கலாய்ச்சிகிட்டே இருக்கறதால எனக்கு கன்னா பின்னா'ன்னு கவிதை வருது... சரி திருமணநாள் அதுவுமாக அவரை எதுக்கு இன்னும் நோக அடிக்கனும்னு கவிதை எழுதவில்லை.. .அதை உங்க கிட்ட விட்டுடறேன்... வரவங்க எல்லாம் ஒரு கவிதை சொல்லிட்டு போவீங்களாம்..:)

இருந்தாலும் இரண்டு வரி....

கூல் = சிபி
சிபி = மிஸஸ் சிபி

பீட்டர் தாத்ஸ் :“Two souls with but a single thought, two hearts that beat as one.”

அணில் குட்டி அனிதா:- அவசர அவசரமா வாழ்த்து சொல்றேன்னு என் பாசமலர் அண்ணாச்சிக்கு என்னைய வாழ்த்து சொல்ல விடமா பண்ண கவி'ய நான் தனியா கவனிச்சிக்கிறேன்.. அவங்க கவிதை எழுதலன்னா என்னா உங்களுக்கு நான் எழுதறேன்..

சிபி' ஐ நினைச்சாவே வருது சிரிப்பு
அவரோட பதிவு எல்லாம் எப்பவுமே ஒரே களிப்பு

நூற்றுக்கணக்கா நீ வச்சியிருக்க பளாகர் கணக்கு
அதனால சுத்துது த(ள)ல எனக்கு

பதிவுலகில் நீ ஒரு கலாய்த்தல் டெரரரு
ஆனா வீட்டுக்குள்ள ....?????.. நீ எப்பவும் பதுங்குற அட்ட ஃபிகரு..

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.. கேட்டுக்கோ....

கும்மியும் நீயும் போல
நீயும் வூட்டுக்காரம்மாவும் எப்பவும் இருக்கனும்னு
வாழ்த்திட்டு

எஸ்' ஆகிக்கிறேன்..!!

4D திரைபடங்கள்

மை டியர் குட்டிச்சாத்தான் என்ற 3D திரைப்படம் பார்த்திருப்போம். அதில் கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாம் நம் அருகில் நடப்பது போன்று இருக்கும். கண்ணாடியை கழட்டி விட்டும் நான் பார்ப்பேன். திரையில் எதுவுமே தெளிவாக தெரியாது. :)

இப்போது 4D திரைப்படங்கள் அவற்றையும் மிஞ்சி physical Effects உடன் திரைபடம் பார்க்கும் போது அந்த படத்தின் நிகழ்வுகளுடன் நாமும் இருப்பதை போன்ற ஒரு உணர்வை கொடுக்கின்றன. குறிப்பாக தண்ணீருக்குள் சென்றால் நாமும் உள்ளே செல்வது போல, காற்று அடித்தால் நம் காதருகே காற்றை உணர்வது, கத்தியால் குத்தினால் நம்மை குத்தி நம்மிடமிருந்து ரத்தம் தெறிப்பது போன்ற உணர்வுகளை கொடுக்கின்றன. நம் உடனே நடப்பதால் உற்சாகத்திற்கு அளவில்லை. வேகமாக தண்ணீரில் மீன் களுக்கு நடுவில் நாமும் நீந்துவது, பெரிய சுறா மீன் நம்மை விழுங்க வரும்போது அதனிடமிருந்து கடைசி நொடியில் தப்பித்து ஓடுவது அது பின்னால் துறுத்தவது எல்லாமே நாமே செய்வது போல் உள்ளது. தியேட்டரை விட்டு எழுந்தவுடன் எங்கிருந்து தண்ணீர் வந்தது, எங்கிருந்து காற்று வந்தது.. எப்படி நாம் அமர்ந்திருக்கும் நாற்காலி அசைந்தது.. என்று பார்த்து தெரிந்து கொண்டாலும் இந்த விடியோ மிக தெளிவாக எப்படி அந்த திரை அரங்குகளின் அமைப்பு இருக்கிறது என்று செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது..

4D திரை அரங்குகளின் நாற்காலிகளின் அமைப்பும், செய்முறையும்4D திரை அரங்கு சென்னையில் ஸ்பென்ஸர்ஸ்'சில் இருக்கிறது. மும்பை சென்ற போது அங்கேயும் ஒரு திரைபடம் பார்த்தோம்.. நல்ல த்ரிலிங்.. :) குழந்தைகள் மட்டும் இல்லை நாமும் கண்டு களிக்கலாம்..

அணில் குட்டி அனிதா: ரொம்ப தெளிவா எழுதி இருக்காங்க... ஆனா.. அம்மணி கத்தின கத்துல.. கூட உக்காந்து இருக்கவங்க எல்லாம் சினிமாவை பார்க்காமல் அம்மணி சவுண்ட குறைக்க சொல்லி அவங்க சவுண்டு விட ஆரம்பிச்சிட்டாங்க.. அம்மணிய விட சவுண்டு விடறவங்க நிறைய பேரு இருக்காங்க....:))))))

பீட்டர் தாத்ஸ் :-“Animation offers a medium of story telling and visual entertainment which can bring pleasure and information to people of all ages everywhere in the world.”

அரை பாவாடை (Half Skirt)

நீ பெண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள். எதையுமே என் இஷ்டத்திற்கு செய்ததாக நினைவில்லை. ஆயாவிற்கு நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டு விடமாட்டார்கள், திட்டி திட்டி திட்டி, அடித்தும் கூட மாற்றுவார்கள். சத்தம் போட்டு சிரிக்கவே கூடாது.. அதுவும் தாத்தா அப்பா இருக்கும் போது சத்தமே வரக்கூடாது. பூமி அதிராமல் மெதுவாக நடக்கவேண்டும், பூமாதேவிக்கு வலிக்கும் ?! என்பார்கள். உட்காருவது பாதங்களில் இரு பக்கங்களில் வடுக்கள் வரவே கூடாது. (கீழே உட்காரும் போது தேய்ந்து தேய்ந்து கருமை நிறம் படரும்).

இதை எல்லாம் விட கொடுமை, அதிகாலை 4 மணிக்கு "பாப்பா" என்று ஒன்று அல்லது இரண்டு முறை என் தலை அருகே வந்து மெதுவாக அழைப்பார்கள், எழுந்துவிட வேண்டும். அதுவும் சத்தமே வரக்கூடாது அண்ணன்கள், அப்பா எழுந்து விடக்கூடாதாம். இரண்டு முறைக்கு மேல் கூப்பிட்டும் நான் எழவில்லை என்றால், தட்டி எழுப்பி சத்தம் வராமல் இருக்க ஒரு விரலை வாயின் மேல் வைத்து காட்டி...என்னை வெளியில் அழைத்து சென்று அதிகாலையிலே அர்ச்சனை கிடைக்கும் அதுவும் பெண் எப்படி இருக்கவேண்டும் என்ற அறிவுரை வழங்கப்படும்.. "ஆமா நீ ஏன் இப்படி ராத்திரியில நீயும் ஏன்ச்சி என்னையும் எழுப்பி உயிரை வாங்கற..என்ன தூங்க விடேன்.." என்று சொல்லுவேன்.. ஆனா ஆயா ஏன் என்னை எழுப்புகிறார்கள் என்பதற்கு திரும்பவும் ஒரு லக்சர் கொடுப்பார்கள்.. அவங்க லக்சரை கேட்பதற்கு பதில் 4 மணி என்ன 2 மணிக்கு கூட எழுந்து வேலை செய்யலாம் என்று தோன்றும்.

உடைக்கு வருகிறேன். அரைப்பாவாடை என்பது முழுங்காலுக்கு கீழ் இருக்கும் படி அளவு வைத்து தைப்பார்கள். "ஆயா எல்லாரும் அழகா முட்டி வரை போட்டு இருக்காங்க எனக்கு மட்டும் முக்கா பாவாடை தைத்து தரீங்க.. எனக்கு பிடிக்கலை " என்பேன்." "முட்டிக்கு கீழ் தான் பாவாடை போட வேண்டும். ஆசிரியர் கிட்ட வேணும்னா நான் வந்து பேசறேன்..அடம் பிடிக்காத இதை பழகிக்கோ..." என்பார்கள். ஆனா எனக்கு ஸ்கர்ட் முட்டிக்கு மேல் போட்டுக்கொள்ள ரொம்ப ஆசையாக இருக்கும். போடுபவர்களை பார்க்க பார்க்க பொறாமையாக இருக்கும்.

வாலிபால் குழுவில் இருக்கும் போது விக்கரவாண்டி'க்கு ஒரு முறை அழைத்து சென்றார்கள், குட்டி ஸ்கர்ட் போட்டால் தான் தடுக்காமல் விளையாட முடியும், ஆனால் என்னிடம் இல்லை, தோழி ஒருத்தியிடம் கேட்டு நீலக்கலர் குட்டி ஸ்கர்ட் வாங்கி வைத்துக்கொண்டேன். குறிப்பாக இந்த குட்டி ஸ்கர்ட் போடுகிறேன் என்று தெரிந்தால் விளையாடவே அனுப்ப மாட்டார்கள். வயது வந்த பெண்ணை வெளியூர் அனுப்ப எல்லாம் வழியே இல்லை. வீட்டில் யாருக்கும் தெரியாது. தாத்தா'விற்கும் அப்பாவிற்கும் நான் வாலிபால் ஆடுவது தெரிந்தாலும் இப்படி ஸ்கர்ட் போட்டு ஆடுகிறேன் என்று தெரியவே தெரியாது. வெளியூர் என்றால் விடமாட்டார்கள். ஆயாவிடம் மட்டும் ப்ர்மிஷன் வாங்கிவிட்டேன்..அப்பாவிற்கும், தாத்தாவிற்கு தெரியாமல் ஆயா பார்த்துக்கொள்வார்கள். எப்படியும் இரவு்க்குள் திரும்பி வந்துவிடலாம்.

வாங்கி வைத்திருந்த ஸ்கர்ட் விக்கரவாண்டியில் நாங்கள் தங்க அனுமதித்த பள்ளியில் சென்று மாற்றினேன். எனக்கு ரொம்பவும் பிடித்துபோனது. "எவ்வளவு அழகாக இருக்கு ஏன் போட விடுவதில்லை..ஒரே ஆதங்கம் எனக்கு" விளையாட்டில் இருந்த கவனத்தை விட அந்த நீல நிற ஸ்கர்ட் மீது அதிக கவனம் இருந்தது. தோழிகள் அனைவரிடமும் போய்"ஏய் ஸ்கர்ட் நல்லா இருக்கா" என்று கேட்டு அசடு வழிந்தது இப்பவும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

அவர்கள் வீட்டில் எல்லாம் எங்கள் வீட்டை போல் கட்டுப்பாடு இல்லை. அதனால் நான் இப்படி கேட்பதை அல்ப விஷயமாக பார்த்தார்கள். எனக்குமே அது தெரிந்திருந்தாலும் ஆர்வ கோளாரு என்ன செய்வது :) சின்ன பிள்ளைதானே.. :)

ஆனால் இந்த கொடுமை எல்லாம் இப்பவும் தொடருகிறது. நான் என்ன உடை போட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை என் கணவர் கூட பரவாயில்லை என்று சொல்லுவேன் என் மகன் முடிவு செய்கிறான். என் இஷ்டம் போல இருக்க நேரம் ஆகாது ஆனால் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கிறது என்று நான் உணர்வதை விட, என்னை சுற்றி இருப்பவர்கள் பார்த்து எபப்டி இருக்கிறேன் எது எனக்கு அழகாக இருக்கிறது என்று சொல்லும் போது அப்படி விட்டுவிடத்தான் நினைக்கிறேன். அடம் அதிகம் பிடிப்பதில்லை என்றாலும் "என்னை பேண்ட் போட விடுவதில்லை, Full skirt போட விடுவதில்லை, தலை முடியை வெட்ட விடுவதில்லை, இந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை.. " என்று சொல்லி சொல்லிக்காட்டி கொண்டே இருக்கிறேன்.

அணில் குட்டி அனிதா:- என்னாது.. .அம்மணிக்கு சுதந்திரம் இல்லையா? என்ன கொடுமை மக்களா இது?! இதை பெரிய அளவுல நாம எல்லாருமே சேர்ந்து எடுத்துக்கிட்டு போயி அவங்க புள்ளக்கிட்ட சொல்லி இந்த ப்ளாக் எழுதறதையும் அப்படியே நிறுத்த சொல்லிட்டா.. நாம எல்லாரும் பர்மெனன்ட்டா நிம்மதியா இருக்கலாம்.. என்ன நான் சொல்றது.. ஓகே வா... மீட்டிங் புள்ளையோட வச்சிடலாமா?

பிட்டர் தாத்ஸ் :- All women's dresses, in every age and country, are merely variations on the eternal struggle between the admitted desire to dress and the un-admitted desire to undress

மகளிர் தினம் எப்படி போயிற்று?!!

காலையில் எழுந்தவுடன் மொபைல்'ஐ ஆர்வமுடன் எடுத்து மெஸேஜ் ஏதாவது வந்து இருக்கிறதா என்று பார்த்தேன்.. வேற ஒன்றும் இல்லை "மகளிர் தின" வாழ்த்துக்களுக்குத்தான்.

ஒன்றும் இல்லை. எழுந்து வெளியில் வந்தால், ஹாலில் எப்போதும் போல் நியூஸ் பேப்பர் கையுமாக என்னுடைய வீட்டுக்காரர். சரி அவர் விஷ் பண்ணுவார் என்று எதிர்பார்த்தேன். கண்டுக்கொள்ளவே இல்லை.

பல் விலக்கிவிட்டு திரும்பவும் வந்து அவர் முன்னே நின்றேன்... ம்ஹீம் ஒன்றும் கிடைக்கவில்லை. சரி நாமே சொல்லி நாமே வாழ்த்துக்களை வாங்கிக்கொள்ளலாம் என்று..

"ப்பா இன்னைக்கு விமன்'ஸ் டே"

பேப்பரை விட்டு கண்ணை எடுக்காமலேயே "..ம்ம்..இப்ப அதுக்கு என்ன?.."

"................."

திரும்பவும்..கொஞ்சம் சவுண்டாக.."ப்பா இன்னைக்கு விமன்'ஸ் டே' ன்னு சொல்றேன் இல்ல.."

"அதான் காது கேட்டுச்சே.. அதுக்கு என்ன இப்ப...."..

வெட்கம் மானம் எல்லாம் பார்த்தால் சரி வராது.. "எனக்கு நீங்க விஷ் பண்ணனும்.."

மெதுவாக பேப்பரைவிட்டு என்னை பார்த்தார்... "உனக்கு எதுக்கு விஷ் பண்ணனும்.."

"....விஷ் பண்ணுங்கன்னு கேட்ட பிறகும் ஏன்?.. ன்னு கேட்கறீங்க"..

"ஆமாண்டி அது எல்லாம் விமஸ்"க்கு டீ.." நீ ஏன் விஷ் பண்ண கேக்கற..."


".............."....... ஹாஆன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...... விமன்ஸ் டே அதுவுமா என்னை காலங்காத்தால அழவச்சிட்டீங்க இல்லை......"

"சரி சரி ரொம்ப அழுவாத... ஹாப்பி வுமன்ஸ் டே.."

*****************

மெஸேஜ் ஒன்று வந்தது.. ஆஹா நிஜமாகவே நாம கேட்காம நம்மை யாரோ விஷ் பண்றாங்க..பாக்கலாம் என்று எடுத்து வாசிக்க...

"Happy Women's Day.......!! ... What special this women are going to do?!! on this day?"

இப்படி ஒரு வாழ்த்தை நான் கேட்டேனா?... அனுப்பியது வேறு யாருமில்லை அலுவலக நண்பர்.

***************

இருப்பினும் நான் கேட்காமல் என்னை நினைவில் வைத்து சிங்கபூரிலிருந்து ஒரு ப்ளாகரும்... இங்கிருந்து ஒரு ப்ளாகரும் வாழ்த்து அனுப்பி வைத்து இருந்தார்கள்.

இன்று சிபியின் வாழ்த்து கிடைத்தது. சிபி அனுப்பிய வாழ்த்து "அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் "

சும்மா இருக்க முடியுமா.. என்ன சிபி "அனைவருக்கும்" னு போட்டு அனுப்பி இருக்கீங்க.. மகளிர் தினம் மகளிர்' க்கு மட்டும் தானே என்று கேட்க...

"ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும்போது வாழ்த்துக்கள் மகளிர்க்கு மட்டுமா வேண்டும்?" இது சிபி'யின் பதில்...

இப்படித்தான் தாங்க.. மகளிர் தினமும் அதன் வாழ்த்துகளும் போச்சி.."

அணில்குட்டி அனிதா:- ம்ம்.. இதுக்கு தான் அவங்களே வாழ்த்தட்டும் னு பேசாம இருக்கனும்..கேட்டு பல்பூ வாங்கறது கவிக்கு என்ன புதுசா..?!

பீட்டர் தாத்ஸ் :- Woman is the companion of man, gifted with equal mental capacity. -GANDHI

அடுத்த தமிழக முதல்வர் ரெடி ஆயிட்டார்..

அணில் குட்டி அனிதா: - எத்தனையோ பேர் தமிழக முதல்வர் ஆகனும்னு போட்டி போட்டு காத்துக்கொண்டு இருக்க.. இவரு மிக குறைந்த காலத்தில் அந்த இடத்திற்கு வருவதற்கான சில இல்லை பல சாத்தியக்கூறுகள் உள்ளன..

அவர் யாருன்னு நானே தான் உங்களுக்கு சொல்லனுமா? நீங்க எல்லாம் தமிழ்நாட்டுல தானே இருக்கிங்க.. நீங்க எல்லாம் தமிழங்க தானே.. அப்புறம் என்ன ரொம்ப ஈசியா கண்டுப்பிடிச்சிடிலாம்...

அவரை நீங்க கண்டுபிடிச்சி சரியா யாருன்னு சொல்லிட்டீங்கன்னா....:) ஹி ஹி... பெருசா ஒன்னும் இல்ல... அவங்க ஒய்ஃப் கையால... ஹி ஹி... ஹி ஹி... கையால என்னங்க.. அவங்களே உங்களுக்கு எல்லாம் ஒரு டான்ஸ் ஆடி காட்டுவாங்க.... ஹி ஹி..

பீட்டர் தாத்ஸ் :- If a politician isn't doing it to his wife , then he's doing it to his country

வேலையை விட்டு தூக்க முக்கிய காரணங்கள்

மனித வளத்தில் நூற்று க்கனக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் போது உள்ள சந்தோஷமும் பெறும் வாழ்த்துக்களும், ஒரே ஒருவரை வேலை விட்டு எடுக்கும் போது எதிராக மாறிப்போகும்.

சிலர் நேருக்கு நேராக சாபம் கொடுப்பார்கள், சிலர் பின்னே சென்று சாபம் கொடுப்பார்கள், சிலர் குடும்ப பிரச்சனைகளை சொல்லி அழுவார்கள், கெஞ்சுவார்கள். சிலர் மிரட்டுவார்கள். இவர்களின் எல்லா வித மனநிலையையும் பொறுத்து போகவும் அதற்கு தகுந்தார் போன்றோ(அ)அதற்கு ஆட்கொள்ள படாமலோ முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக அதிக அளவு சென்டிமென்ட்' எல்லாம் பார்க்க கூடிய சூழ்நிலைகள் வருவதில்லை. பெண்ணாக இருப்பதால், எதிராளி இதை அதிகம் எதிர்ப்பார்ப்பதும் உண்டு. அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களின் கோபமும், ஏமாற்றமும் அதிகமாவதை நான் உணர்ந்திருக்கிறேன். அலுவல் ரீதியாக உதவி செய்யமுடியாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு என்னால் முடிந்ததை அலுவலகத்துக்கு வெளியில் செய்ய முயற்சிப்பது உண்டு.

என்னுடைய அனுபவத்தில் எந்த வித உச்சக்கட்ட மனநிலைக்கும் தள்ளப்படாமல் வேலையை விட்டு சிலரை தூக்கியே ஆகவேண்டும் என்ற நிலைமை வந்து, அவர்களை வேலையை விட்டு தூக்கி இருக்கிறோம். என்னுடைய சிபாரிசின் காராணமாக வேலை இழந்தவர்களும் உண்டு. இதை நினைக்கவும் செய்யவும் எனக்கே மிகவும் கடினமாக /வேதனையாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எந்த காழ்புணர்ச்சியும் இல்லாமல் கம்பெனி நலம் கருதி இப்படிப்பட்ட தீர்க்கமான முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளது. மிகவும் கண்டிப்புடன், இரக்கம் என்பதே இல்லாமல் பேசும்படியாக இருக்கும். ஆனால் அவர்களிடம் அப்படி பேசக்கூடிய சூழ்நிலையை அவர்கள் தான் ஏற்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் எப்போதுமே உணர்ந்ததில்லை.

சில முக்கிய காரணங்களாக எடுத்துக்கொள்வது :-

1. Discipline
2. Violation of safety rules or office rules
3. Performance - General inefficiency (quality, quantity,
accuracy)
4. Carelessness / Negligence
5. Discourtesy towards fellow colleagues
6. Discourtesy towards client/guests
7. Frequent late attendance
8. Irresponsible
9. Insubordination / Disobedience
10. Irregular attendance
11. Quarrelsome
12. Smoking in restricted area
13. Clocking another staff attendance/
altering the attendance Register

இதில் எல்லா காரணங்களுக்குமே முதலில் மெமோ கொடுத்தோ, கவுன்சிலிங் செய்தோ அவர்களுக்கு திருந்திக்கொள்ளா ஒன்று அல்ல 3, 4 முறை வாய்ப்பு கொடுக்கத்தான் செய்கிறோம். ஆனால் தொடர்ந்து உதாசினப்படுத்தி வந்தால் அவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டியுள்ளது. பெறும்பாலும் முதல் விஷயமாக Discipline காரணம் ஆகிறது. இதில் ஒன்றிலேயே 4- 13 ஆம் பாயிண்டு வரை அடங்கிவிடும். மிக மோசமாக நடந்து கொள்ளும் சிலரை பார்த்து இருக்கிறேன்.

சொந்த வேலைக்காக இணையத்தையும், கணினியையும் உபயோகிப்பது, அலுவலகத்தின் முக்கிய கோப்புகளை எடுத்து செல்வது, பணக்கையாடல், அலுவலக முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லி காசாக்குவது அல்லது தன் சொந்த வேலைக்கு பயன்படுத்துவது என்று தவறுகளை சுட்டிக்காட்டி கொண்டே போகலாம்.

ஒரு பெண்ணாக இருப்பதால் மனிதவளத்தில் நிறைய ஆதாயம் இருக்கிறது, ஊழியர்கள் சட்டென்று கோபம் கொண்டு பேசமாட்டார்கள், கம்பெனியின் மீது கோபம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அதை எங்களிடம் காட்ட மாட்டார்கள், பிரச்சனை தரவேண்டும் என்று நினைத்தாலும், எங்களுக்காக போனால் போகட்டும் என்று விட்டுவிடுவார்கள். பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தால் அதன் ஆரம்பம் மனிதவளமாகவும் அதில் இருக்கும் ஊழியரையும் தான் முதலில் பிரச்சனைக்கு உள்ளாக்கும், அதனால் வேண்டாம் என்று நினைப்பார்கள். இவை எல்லாவற்றிக்குமே "பெண்" என்ற ஒரே ஒரு காரணம் தான். அதே சமயம் சில டிஸ்அட்வான்டேஜ்' களும் உண்டு. பெண்தானே.. என்று மிரட்டி பார்க்கும் ஊழியர்களும் உண்டு. :). அவர்களையும் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற திறமையையும்,அறிவையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம் மூலமே தெரிந்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இவை எல்லாம் கண்டிப்பாக ஏட்டு பாடம் இல்லை அனுபவப்பாடம் மட்டுமே கற்றுத்தரும்.

மனிதவளத்தில் முடிவுசெய்து வேலையை விட்டு எடுக்கும் ஆட்கள் மிக குறைவே, மற்ற பிரிவுகளில் இருந்தும், உயர் அதிகாரிகளிடம் இருந்து வரும் உத்தரவுகளின் பேரிலும் தான் மனிதவளத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைசியாக எழுத்தின் மூலம் உத்தரவு மனிதவளத்தின் வழியாக எங்களின் கையெழுத்தை எடுத்து செல்வதால், ஊழியர்களின் கோபத்திற்கும், ஆதங்கத்திற்கும் இறுதியில் நாங்களே பொறுப்பாளிகளாக இருக்க வேண்டியுள்ளது.

இந்த பதிவு 1000 கணக்கில் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் கம்பெனிகள் சொல்லும் காரணங்களுக்காக எழுதியது இல்லை. பொதுவாக ஊழியர்கள் செய்யும் தவறுகளால் எப்படி அவர்கள் வேலையை இழக்கிறார்கள் என்பதை சொல்ல எழுதியது.

அணில் குட்டி அனிதா: சரி...ரைட்டு!! (டாக்ஸு சாக்லேட்டு அண்ணன் கோபி'க்கு) எனக்கு தூக்கம் வருது !! நான் கெளம்பறேன்.... நீங்களும் தூங்குங்க.. கீழ அம்மணி ரெடியா சோபா போட்டு வச்சி இருக்காங்க பாருங்க..போங்க.. நிம்மதியா தூங்கிட்டு கிளம்புங்க..

பீட்டர் தாத்ஸ் :- The human mind is our fundamental resource.

பாகிஸ்தானின் ரத்தம் சொட்டும் விகார முகம்

தன் தீவரவாத வெறி ஆட்டத்தை பாக்' தன் மண்ணிலேயே நிரூபித்துவிட்டது. இனியும் எப்போதும் போல பாக்'குடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்குமா? இந்தியாவிற்கு எதிரான திவரவாதத்தை தான் பார்த்துக்கொண்டு எல்லோரும் சும்மா இருந்தார்கள்.. இன்னமும் அப்படியே இருப்பார்களா?

பேச்சுவார்த்தைகளில் திருந்தும் மனமும் குணமுமா அவர்களிடம் இருக்கிறது.. ?!! பேச்சுவார்த்தைக்கு என்று எப்போதுமே ஒரு மரியாதை இருக்கிறது. பேசுபவர்களுக்கும் சரி..கேட்பவர்களுக்கும் சரி.. ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் புரியாதவர்கள் அவர்கள். இன்னும் இதையேதான் உலக நாடுகள் நம்பிக்கொண்டு இருக்குமா? இந்தியாவையும் சேர்த்து...?!!

எல்லா நாடுகளின் கவனத்தையும் அவர்களாகவே மிக நன்றாக எங்களின் விகார முகத்தை பாருங்கள் என்று எடுத்துக்காட்டி விட்டார்கள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் உலக நாடுகளுக்கும் கிடைக்குமா?

இன்னமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் அவர்களின் விகார முகம் கோழைத்தனமானது என்பதை புரியவைக்க இதை ஒரு நல்ல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அணில் குட்டி அனிதா:- அம்மனி எப்ப என்னவா இருப்பாங்கன்னு.. எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியல.. உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...

பீட்டர் தாத்ஸ் :- We will continue to fight the scourge of terrorism against humanity and reject the culture of extremism and violence in any form or shape, from whatever source or place, regardless of justifications or motives, being fully aware of their dangers as a plague that threatens the peace and stability of the whole world.”

ரயில் பயணங்களில்...

இரவு 8.00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம் போகும் ரயிலில் புக் செய்து இருந்தான் ஆனந்த், கூடவே சுமதியும். இருவரும் விடுமுறைக்கு அங்கே செல்ல திட்டமிட்டு கிளம்பியிருந்தார்கள்.

3 ஆம் வகுப்பு ஏசி கோச்சில் சீட் பார்த்து அமர்ந்து இருவரும் லேசாக மூச்சு விட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் நிறைய ஆரம்பித்தனர். இவர்களுக்கு எதிரே 2 ஆண்களும் ஒரு பெண்ணும் இவருக்கு பக்கத்தில் ஒரு ஆணும் வந்து அமர்ந்தனர். எதிரில் வந்து அமர்ந்த 2 ஆண்களில் ஒருவர் இளைஞர் 30 வயதுக்குள் இருக்கும், சுமதி அவரை பார்த்தவுடன், பார்வையை நிறுத்தினாள்... வசீகரிக்கும் முகம், கூடவே ஒட்டிக்கொண்டு இருக்கும் சிரிப்பு, லேசான கன்னதுக்கு குழி......சுருள் முடி...

அவள் பார்ப்பதை உணர்ந்த அந்த இளைஞன் இவளை பார்த்தான்... ..சுமதி சட்டென்று கண்களை வேறு பக்கம் திருப்பிகொண்டாள்...

ஆனாலும் அவளால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. அவன் அவளை கவனிக்கின்றானா என்று பார்த்துவிட்டு மீண்டும் அவனையே கவனிக்க ஆரம்பித்தாள்.

அவன் எழுந்து வெளியில் செல்ல... ஆனந்தின் காதோரம் சென்று அந்த இளைஞன் அமர்ந்திருந்த இடத்தைக்காட்டி ரகசியமாக என்னவோ சொன்னாள்.

ஆனந்த்.."ம்ம்..நானும் வந்தவுடன் பார்த்தேன்..., .சரி உனக்கு டிரிங்ஸ் எதுவும் வாங்கிட்டு வரனுமா? " போயிட்டு வந்துடறேன் இரு... என்று பேச்சை மாற்றிவிட்டு சட்டென்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

திரும்பவும் அந்த இளைஞன் வந்து இவள் எதிரில் அமர, சுமதியும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவனை பார்க்க திரும்பினாள். அவன் பார்க்காத போது அவனையும்... அவன் இவளை கவனித்தாள் வேறு பக்கம் பார்த்தவாரும் இருந்தாள்.

இளைஞனுக்கு லேசாக உள்ளுக்குள் பூரிப்பு, ஏன் இவள் இப்படி நம்மை விழிங்கிவிடுவது போல் பார்க்கிறாள். ரொம்பவும் பிடித்துவிட்டதோ..?!!

இவனும் அவள் எப்போது அடுத்து தன் பக்கம் கண்களை திருப்புவாள் என்று காத்திருந்தான். அவள் இவனை பார்த்தவுடன்...காத்திருந்தவனாக லேசாக சிரித்தான்....

சுமதியும் சிரித்தாள்.....அவனுடன் மெதுவாக பேச ஆரம்பித்தாள்..... எர்ணாகுளமா?

ம்ம்....ஆமா நீங்க..?!

ஆமாம் நாங்களும்....

கூட யாரு..?!

என்னோட ஹஸ்பண்ட்... .:)

"..............ஓ...ஒகே..!!"

ஆனந்த் வந்துவிட்டான்.. இளைஞன் அவனையும் பார்த்து சிரித்தான். ஆனந்த் சின்ன புன்முறவலோடு நிறுத்திக்கொண்டு , சுமதியிடம் வாங்கிவந்த வீக்லி மேகசினையும், தண்ணீர் பாட்டலையும் கொடுத்தான்... .."இந்தா....படி.. வாட்டரை அந்த கார்னர்ல வை.."

சுமதி மேகசினை திறந்து வைத்துக்கொண்டாளும், அவளால் அதில் கவனத்தை செலுத்த முடியவில்லை. .அவ்வப்போது வருவோர் போவோரை பார்ப்பது போன்று எதிரில் இருப்பவன் மேல் கண்கள் செலுத்தியவாறே இருந்தாள்...

* * * * * **

எல்லோரும் படுக்க தயாரானார்கள். சுமதி கீழ் இருக்கையில் படுத்தாள், ஆனந்த் நடு இருக்கையில் படுத்தான்.

இரவு 12 -1 மணியிருக்கும், எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க.. இளைஞன் சத்தமில்லாமல் எழுந்து, சுமதி படித்திருக்கும் இருக்கைக்கு அருகில் வந்து அவளில் பாதங்களை வருடினான்...

சுமதி.. யாரோ தொடுவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தாள்.. அவளில் கால்களுக்கு மிக அருகில் அந்த இளைஞன் நின்றிருந்தான். அவள் எழுந்துவிட்டதை உணர்ந்து... "வா..என்று செய்கை செய்தான்.

சுமதி'க்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன செய்கிறான் இவன்?..

இளைஞன் திரும்பவும் அவளை பார்த்து "வா...." என்று செய்கை செய்தான்..

சுமதிக்கு பயம் கவ்வியது..நெஞ்சு படப்படத்தது....விடுக்கென்று எழுந்து லைட்'ஐ போட்டாள். அதை எதிர்பார்க்காத இளைஞன்.. வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தான்.

சுமதி எழுந்து ஆனந்தை எழுப்பினாள். ஆனந்த்.....தூக்க கலக்கதோடு.."என்னம்மா.. .." என்றான்.

சுமதி கண்கள் கலங்க..பயத்துடன் அந்த இளைஞன் தன் கால்களை தொட்டு எழுப்பி வா என்று அழைக்கிறான் என்றாள். ஆனந்த்..வேகமாக கீழே குதித்தான்.

"சரி..பயப்படாதே நான் பார்த்துக்குறேன்.. நீ படு..."

அந்த இளைஞன் சென்ற திசையில் இவனும் சென்றான்... இளைஞன் ஒருவித நடுக்கத்தோடு என்ன நடக்குமோ என்று ரயில் கதவோரம் வெளிபக்கம் பார்த்து நின்றிருக்க... ஆனந்த் அவன் பின்னால் சென்று மெதுவாக தோலை தொட்டான்...

உடம்பும் மனதும்... நடுங்க...திரும்பினான் இளைஞன்....

ஆனந்த்...புன்னகையோடு ..."கூல்..... .சுமதி உங்களை பார்த்துக்கிட்டே வந்ததால தவறா நினைச்சிக்கிட்டீங்க போல இருக்கு....ஆக்சுவிலி.. அவளோட அண்ணன் உங்கள் போலவே இருப்பார்.. ஆனா அவர் இப்ப உயிரோட இல்ல, ஒரு ரோட் ஆக்ஸிடன்ட்ல இறந்து போயிட்டார்.. அதான் அவளுக்கு உங்களை பார்த்ததும் அவளின் அண்ணன் ஞாபகம் வந்து போச்சி... என்கிட்ட சென்னையில நீங்க வந்து உட்கார்ந்தவுடனேவே சொன்னாள்.. அண்ணனை போலவே இருக்காருன்னு.. அதான் உங்களை வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கிட்டே வந்தா.. தவறா நினைக்காதீங்க... "

".........................ஐ அம் சாரி.......ஐ அம் ரியலி சாரி..சார்...."

ஏண்டி திருந்தவே மாட்டியா நீ?!!

அணில்குட்டி அனிதா:- அம்மணி எவ்வளவு சொன்னாலும் கேட்கற சாதியில்லை'ன்னு ஊரு உலகத்துக்கு தெரியும். அப்படின்னா வீட்டுல இருக்கவங்க கதிய கொஞ்சம் யோசிச்சி பாருங்க.. அய்யோ பாவம் கவிதா வூட்டுக்காரர், அம்மணிய கட்டிக்கிட்டு அவரு படற பாடு இருக்குதே. .அந்த ஆண்டவனுக்கும் பொறுக்காது... அவரு படற பாட்டை பாருங்க தெரியும்....:(

இதுல பிராக்கிட் ல இருக்கறது எல்லாம் அம்மணி மனசுல நினைக்கிறது....

மிஸ்டர் கவி:- ஏண்டி நீ திருந்தவே மாட்டியே..??

கவி: ................................ (என்னா இப்ப தப்பு பண்ணாங்க திருந்த? )

மிஸ்டர் கவி : நீ தப்பு பண்ணா மட்டும் சைல்ன்ட்டா இருப்பியே வாய தொறக்க மாட்டியே....

கவி: ........................... ... (நாங்க எல்லாம் பேச ஆரம்பிச்சா நீங்க பேசமுடியாது இல்ல அதான்........சான்ஸ் கொடுக்கிறோம் பேசுங்க.....)

மிஸ்டர் கவி: ஏண்டி உன்கிட்ட தாண்டி பேசறேன்.. திருந்தவே மாட்டியா?

கவி: ..............(புதுசா ஏதாச்சும் பிரச்சனையா..? யார் கிட்டயும் சண்டை போட்ட மாதிரியே தெரியல..யாருக்கும் ரீசண்டா எந்த ஹெல்பும் செய்த மாதிரியும் தெரியில.. ஏன் அநாவசியமா நம்மள திருந்த சொல்றாரு இவரு....)புள்ள இருக்க பக்கமா திரும்பி.. கண்ணாலேயே "என்னடா மேட்டர்?"..

புள்ள :- :)))))))))))))) மாட்டினியா.... எவ்வளவு மாட்டினாலும் நீ திருந்தமாட்ட. .அனுபவி.....

மிஸ்டர் கவி :- பாரு அவன் கூட திட்டறான்...ஏண்டி எப்படிடி ஒன்னுமே தெரியாத மாதிரியே உட்கார்ந்து இருக்க...

கவி :- ..................... (அடடா மேட்டரை சொல்லாம இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா எப்படி..கொஞ்சமாச்சம் எதிராளி கஷ்டம் தெரியுதா பாத்தியா இவருக்கு..... )

மிஸ்டர் கவி : ஏண்டி உனக்கு எப்பத்தான் மெச்சூரிட்டி வரும்?

கவி: .................... (எனக்கு வந்துட்டா.. நீங்க இப்படி கேள்வி கேட்க முடியாது இல்ல அதான்.......அவ்வ்வ்வ்வ்வ் மேட்டர சொல்லுங்கப்பா..... )

மிஸ்டர் கவி :- நீயே இப்படி இருந்தா நம்ம பையனுக்கு யாரு சொல்லிதருவா?

கவி:
...................... (உங்களுக்கு இப்படி பேச வாய்ப்பு கொடுக்கறது பெரிய விஷயம்.. அதை பயன்படுத்தி நீங்க எவ்வளவு பேசறீங்க.. அவனுக்கும் அப்படி நானு வாய்ப்பு கொடுப்பேன்..)

கவி அவர் பேச பேச... டிவி'ஐ ஆன் பண்ணி காமெடி டைம் பார்க்க... அதில் கைப்பு (வடிவேலு) வை எல்லாரும் சேர்ந்து அடித்து நொறுக்க..

மிஸ்டர் கவி :- ஏண்டி நான் பாட்டுக்கும் இங்க கத்திக்கிட்டு இருக்கேன்... நீ என்ன அங்க டீவி ய பாத்து இளிக்கற....

கவி :--...............:) ஹ் அஹஹா.. ஹ....ப்பா. இங்க கொஞ்சம் பாருங்களேன்.... இவனோட எப்பவும் இதே காமேடிப்பா... எவ்வளவு அடிவாங்கினாலும் திருந்தாம திருப்பி திருப்பி அடிவாங்கறான்...எத்தன வாட்டி பார்த்தாலும் சிரிப்பு சிரிப்பா வருது..........இங்க பாருங்களேன்.... ஹா ஹா...:)

மிஸ்டர் கவி..: அடச்சீ... தூஉ.... . உன்கிட்ட பேசறதே வேஸ்டுடி..

கவி:(இத தானே ரொம்ப நேரமா நாங்க சொல்றோம்...அப்புறம் எதுக்கு தேவ இல்லாம பேசிக்கிட்டு..... ஏதோ பேச சான்ஸ் கிடைச்சா போதுமே.....)ஓ நீங்க சீரியஸா இருக்கீங்க இல்ல...சாரி......எஸ்..ப்பா.. சொல்லுங்க.. வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம்..?

மிஸ்டர் கவி
: ம்ம்...வெங்காயம்.. !!

கவி:............... ஹான்..!! நான் வாங்க சொல்லவே இல்லையே....

மிஸ்டர் கவி: ஏண்டி அறிவில்ல ஒனக்கு ஊர் ல யார் எப்படி போனா உனக்கு என்ன...? ஏண்டி ஓவரா போயி உதவி பண்றேன்னு பிரசன்னைய வீட்டு வரைக்கும் கொண்டு வர...

கவி:- .............. (ஓ இன்னும் மேட்டர் முடியலையா... என்ன பிரச்சனை..ஒரே மர்மமாவே இருக்கே....)

மிஸ்டர் கவி: ஒன்னத்தாண்டி கேக்கறேன்...

கவி...: ................. (அடாடா மேட்டர் என்னான்னு தெரியாம என்னத்த பேச...யார் போட்டு கொடுத்து இருப்பா....?! இவருக்கு ஒன்னும் தெரியாம இல்ல மெயின்டெயின் பன்ணிக்கிட்டு இருக்கோம்..ஏன் இப்படி..?!! )

மிஸ்டர் கவி :- எப்படியும் நீ திருந்த போறது இல்ல செய்யறதுக்கு முன்ன சொல்லிட்டு செய்யேண்டி.. ஏண்டி எல்லாத்தையும் மறச்சிட்டு கடைசி நிமிஷம் உயிர வாங்கற..

கவி :- ஹல்லோ ஹோல்ட்.. ஹோல்ட்... என்ன சொல்லனும்.. இப்ப நீங்க என்னை சொல்லிட்டா திட்டறீங்க.? நான் பொறுமையா கேட்டுக்கல.. நான் மட்டும் ஏன் சொல்லிட்டு செய்யனும்?? (எஸ் கவி !! குட் கொஸ்ஸின்.. எப்படி கவி இப்படி எல்லாம்?!! )

மிஸ்டர் கவி :- டேய் இவ க்கூட என்னால முடியலடா.... ஏண்டா இவ இப்படி இருக்கா?

கவி :- (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா எப்படியோ மேட்டரை புள்ள பக்கம் திருப்பியாச்சி இனிமே அவன் பாத்துக்குவான்... )

புள்ள :- ம்மா......... ஏன்ம்மா...?!! .....?!!!

ஜி3, முல்லை, கவிதா மூவரின் சந்திப்பும் பயண அனுபவங்களும்..

அணில் குட்டி அனிதா:- ரொம்ப நாளா ப்ளான் போட்டு மூன்று தேவிகளும் (மூதேவி'கள்) வெளியில கிளம்ப ரெடி ஆனாங்க.... உங்க எல்லாருக்கும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகனும், கவி இருக்காங்களே.. யாராவது ஒருத்தர் கிட்ட ஏதாவது லூஸூ மாதிரி பேசி பல்பு வாங்கலன்னா அவங்களுக்கு தூக்கம் வராது.. அதான் என் கிட்ட எப்பவும் வாங்கறாங்க ஆனாலும் பத்தல... அடிக்கடி.. நம்ம அக்கா'ங்க G3, முல்ஸ்' கிட்ட உங்க வீட்டு எங்க வீட்டு பல்பு இல்ல.. வெளியில சொல்ல முடியாத அளவு வாங்கி இருக்காங்க...ஆனாலும் அதை வெளியில காட்டிக்காம... அவங்களோட ஒரு மன தைரியத்தோட கிளம்பிட்டாங்க...

ஆனா நம்ம இரண்டு அக்காங்க பேருமே ஜெண்டில் உமன்'ங்க... அவங்களா வந்து கவிய ஓட்டறதே இல்ல.. இவிங்களா போயி போயி.. மாட்டிக்கறது. .சொந்த செலவில் சூனியம் வச்சிக்கறதுனுன் சொன்னா அது கவி'க்கு மட்டும் தான் பொறுந்தும்.

சரி இவிங்க டிரிப்' க்கு வருவோம்... பஸ்'ல கிளம்பலாம்னு முடிவு பண்ணி, மூதேவி;களும் பஸ் ஸ்டாண்ட்'ல மீட் பண்ணாங்க... G3 பஸ்'ஸை பார்த்தவுடன் உட்கார இடம் பிடிக்க ஓடிட்டாங்க.. நின்னுக்கிட்டு போன பாட்டு கேக்க முடியாதாம். அதனால் ஒரே ஓட்டமா ஓடி ஏறிட்டாங்க.. ஆனா கவி'க்கும் முல்லை'க்கும் இடம் கிடைக்கல... சரி.. நின்னுக்கிட்டு போலாம்னு ஏறிட்டாங்க.. G3 எங்கன்னு தேடிக்கிட்டே நின்னுக்கிட்டு இருக்கும் போது.. ஓவர் கூட்டம், மக்கள் எல்லாம் சேர்ந்து ரொம்ப நசுக்க ஆரம்பிச்சவுடனே... முல்ஸ்'சும் கவி'யும் பஸ்'ஸை விட்டு இறங்கிட்டாங்க...

கவி, முல்ஸ்'சிடம் G3 ஐ பஸ்ஸில் ல கண்டுப்பிடிச்சி நீங்க கீழ இறக்குங்க..நான் வேற பஸ்ல இடம் பிடிக்கிறேன்'ன்னு கிளம்பினாங்க...

அதுக்குள்ள இங்க..G3 உட்கார்ந்து இருந்த பஸ் டிக்கட் போட ஓரங்கட்ட... பொறுமை இழந்த பல மக்கள் அந்த பஸ்ஸில் இருந்து இறங்க ஆரம்பித்தார்கள்.

கவி வேக வேகமா ஓடி போயி பின் கதவு வழியாக கிளம்பிக்கிட்டு இருந்த ஒரு பஸ்'ல ஏறி மூணு பேரு இருக்கிற சீட்டை பிடிச்சி உட்கார்ந்து பெருமூச்சி விட்டுக்கிட்டே... முன்னாடி பார்த்தா யாருமே பஸ்; ல இல்ல.. ஆஹா என்ன இது பஸ்'ல யாருமே இல்லன்னு கண்டக்டர் ரை கேட்கலாம்னு நினைக்கும் போது, கண்டக்டர் வந்தாரு.. "ஏம்மா.. ஷெட்'குள்ள போற வண்டியா பாத்து ஏறி சீட் பிடிக்கற.. எறங்கி தொல.." என்று கத்த...

"ஹி..ஹி..தெரியாம ஏறிட்டேன்.." ன்னு சொல்லி கவி ...முல்ஸ்'ஐ யும், G3 யையும் தேட...

அவங்க இரண்டு பேரும் இவங்கள தேடினாங்களேன்னு சந்தேகமா இருந்தது.. கவி பஸ் ஸ்டாண்டு பூராவும் ஓடி ஓடி பார்க்க.. மக்களை காணோம்.. "ஆஹா...இரண்டு பேரும் நம்மை விட்டுட்டு போயிட்டாங்களா? " என்று யோசிக்கும் போதே.. டிக்கட்'க்கு போட்ட பஸ்'நிற்பதை பார்த்த கவி.. வேகமாக அதில் ஏறி இவிங்க இரண்டு பேரும் இருக்காங்களான்னு பாத்தாங்க.....

அட...இரண்டு பேரும் உள்ளத்தான் இருக்காங்க...

இவிங்கள பார்த்ததும்.. முல்ஸ்'சும், G3 யும் சிரிச்ச சிரிப்பு இருக்கே...அதை எல்லாம் சொல்ல முடியாது.. பாத்து ரசிக்கனும்.. :)

முல்ஸ் சிரிப்பை அடக்க முடியாமல்....."கவி எங்க கவி..அவ்வளவு அவசரமா எங்க போனீங்க.." :)

G3 சிரிக்காமல் ரொம்ப சீரியஸாக...."கவி பஸ்'ல இடம் பிடிக்க போனாங்கப்பா.."

கவி...".................."

முல்ஸ்.."கவி.. பஸ் ஸ்டாண்டை நல்லா சுத்தி பாத்தீங்களா?...

G3.."சே சே இல்லப்பா அவங்க இன்னும் அந்த ஷெட்'குள்ள போகவே இல்ல..."

கவி.."...................."

முல்ஸ்.."அந்த பஸ்'ல இடம் இல்லையா கவி? .."

G3.."அட என்ன முல்லை.. இடம் இல்லாமல் தானே ஓடியாந்தாங்க....:) "

கவி "...ஏன்ப்பா இதுல தானே இருக்கீங்க என்னை கூப்பிடலாம் இல்ல..."

முல்ஸ்.."நீங்க தான் பஸ் ஸ்டாண்டை சுத்தி பாக்க ரொம்ப ஆசை பட்டு ஓடி ஓடி வந்தீங்க.. சரி எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னு விட்டுட்டோம்...:) "

"டிங்..டாங்க்.."

கவி... "என்னப்பா பஸ் ல காலிங் பெல் எல்லாம் வச்சி இருக்காங்க..?" எதுக்கு இப்ப காலிங் பெல் அடிக்கறாங்க.."

G3."கவி அந்த சவுண்டு..பஸ் ல இருந்து இல்ல.. உங்க மொபைல்'ல இருந்து வருது..

கவி..".ஓ...ஹி ஹி.............." வேக வேகமாக எடுத்து மெஸேஜை பார்க்க....

"குட் மார்னிங்...ஹாவ் ய நைஸ் டே..!! யாரோ மார்னிங் விஷ் அனுப்பி இருந்தார்கள்...

பட்டென்று தூக்கம் கலைந்து ஏழுந்து உட்கார்ந்த கவிதா'க்கு முகத்தில் ஈ 'ஆடவில்லை.. அப்ப இது எல்லாம் கனவா????? மக்கள் கனவுல வந்தாலும் விட மாட்டாங்க போல....அட கடவுளே... புள்ளைங்க கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்யனும்.. அப்பத்தான் இப்படி கனவு எல்லாம் நமக்கு வராது... :(

பீட்டர் தாத்ஸ் :- Life is full of beauty. Notice it. Notice the bumble bee, the small child, and the smiling faces. Smell the rain, and feel the wind. Live your life to the fullest potential, and fight for your dreams.”