"எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோம்" னு சங்கத்து சிங்கங்களோடு சேர்ந்து நானும் சொல்லிக்கிறேன்.. அது ஒரு கனாக்காலம்..  ஒரு முறை வவாச ' பற்றிய ஒரு எஸ்எம்எஸ் வந்தது. இரண்டு முன்று நாள் கழித்து ஆன்லைன் வந்த  தேவ்'விடம் சொன்னேன்... "அட எஸ்எம்எஸ் எல்லாமா வருது, உடனே எனக்கு அனுப்புங்க.. அம்புட்டு பெரிய ஆளுங்களாவா ஆகிட்டோம்" னு கேட்டாங்க.. தேடி தேடி பாத்தேன் மெஸேஜை காணல... :( அனுப்ப முடியலன்னு ஒரே வருத்தமா போச்சி...

வவாச வின் வளர்ச்சி??! சேவைகள்??!! பற்றி பேச நிறைய இருக்கு... ஒவ்வொரு சிங்கமும் ..ஒவ்வொரு தனித்துவம் கொண்டவங்க. எனக்கு தெரிந்த, அவர்களின் எழுத்தையும், நகைச்சுவையையும் படித்து படித்து சிரித்து மகழ்ந்தது... கைப்ஸ், ஜொள்ஸ், தேவ், சிவா, ராம், இளா. சிபி,வெட்டி, கப்பி, கேஆர்எஸ் & பொன்ஸ்...சான்ஸே இல்ல!!

இந்த கைப்ஸ் எப்படித்தான்  அப்படி எழுதறாரோ.?. அவருடைய எழுத்து நிறைய நேரம் எனக்கு புரிவதில்லை. அவரின் எல்லா எழுத்திலுமே ஒரு நகைச்சுவை கலந்து இருக்கும். சிரிக்காமல் இருக்கவே முடியாது. இவர் தான் சங்கத்தோட தலைவர். :))

ஒரு சிங்கத்துக்கு மட்டும் எப்பவும் நான் விசிறி'ன்னு சொல்லுவேன்.. அது ஜொள்ஸ் தான்.!!  யப்பாஆஆ என்னாமா ஜொள்ளு விடுவாரு.. அதுவும் அவரின் கல்யாணம் முடிந்து வந்து போட்டாரு பாருங்க ஒரு போஸ்ட் டு... அந்த கடவுளுக்கே அடுக்காது.. :))) அவ்வளவு ஜொள்ளு... ஜொள்ஸ்....எங்கப்பா போனீங்க நீங்க??!!!   இவரு மட்டும் இப்ப எழுதிக்கிட்டு இருந்தா. பெண்ணியவாதிகள் வினவுக்கிட்ட இவரை போஸ்டும்-ஜொள்ளுமா பிடிச்சி கொடுத்து இருப்பாங்க.. நிலைமை அப்படி இருக்கு!  :)  

ஆனா நாங்க எல்லாம் அவரோட ஜொள்ளு பதிவுகளை ரசிச்சோம், அவரோட சேர்ந்து ஜொள்ளு விட்டோம், வயிறு வலிக்க சிரிச்சோம், சந்தோஷமாக இருந்தோம். அப்ப எல்லாம் எங்களுக்குள்ள போட்டி, பொறாமை, " பிரபல" என்ற வார்த்தை இல்லை, நான் பெரியவன் நீ பெரியவன் போன்ற எண்ணமே இல்லை, பெண், ஆண் என்ற வித்தியாசம் எதுவும் இல்லை...  எல்லாம் கூடி கும்மாளம் போட்டோம், ஒருவரை பற்றி ஒருவரிடம் புகார் சொன்னது இல்ல... அசிங்கப்படுத்திக்கிட்டது இல்ல.. அப்படியே எதாவது நடந்திருந்தாலும் அது பொதுவெளியில் இல்லை. ரொம்பவே  சந்தோஷமான நாட்கள்..

அடுத்து கச்சேரி தேவ், இவருக்கிட்ட மைக் கொடுக்கற வரை எங்க இருக்காரு ன்னு தெரியாது, மைக் கைல கிடைச்சவுடனே பேச ஆரம்பிப்பாரு பாருங்க.. "டாட்" டே  கிடையாது..எல்லாம் "கமா" தான்..... நாந் ஸ்டாப் ஆக பேசிக்கிட்டே இருப்பாரு.. (யார்ப்பா அது ... அம்புட்டு வெட்டியான்னு கேக்கறது??)..

அப்புறம் சொல்லவே வேணாம்..சிபி.. தனி ட்ராக் காமெடி.. எவ்வளவு சீரியசா.. மூக்குல ட்யூப் விட்டுக்கிட்டு நீங்க பேசினாலும்..  அதை காமெடியாக்கி.. நம்மை "ஞே" ன்னு முழிக்க வைச்சிடுவாரு..... நயன்தாரா அப்படீன்னு சொன்னா போதும் பிரபுதேவா வை தள்ளிவிட்டுட்டு வந்து நிப்பாரு.. :), சிம்புக்கிட்டவே இதற்காக நிறைய தரம் அடி வாங்கி இருக்காரு, எப்ப பிரபுதேவா கிட்ட வாங்கபோறார்ன்னு நாங்க எல்லாம் வெயிட்டிங்கு.. !! :)

ம்ம்ம்..இவிங்களுக்கு நடுவுல ராயல் ராம் பத்தி சொல்லனும்னா, எல்லாரையும் எப்பவும் நானே கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கேன்னு, கடுப்பாகி, முதல் முறையா என்னை கேள்வி கேட்டு, அவர் பதிவில் போட்ட நல்லவரு. .வல்லவரு.. :) , ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர்.

அப்புறம் வெட்டிபயல், இவரோட கதைகள் மட்டும் படிச்சி இருக்கேன்.. சுவாரஸ்யமாக யதார்த்தமா கொண்டு போவாரு... அதற்கு மேல் வெட்டியை பற்றி எனக்கு தெரியல..கேள்வி கேட்டுத்தான் தெரிஞ்சிக்கனும்.

அடுத்து சிவா(புலி)... சமுதாயம் சார்ந்த ஆர்வமும் அதையொட்டிய எழுத்தும் நிறைய இருக்கு.. கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தார்ன்னா எதிர்காலத்தில் நம்மை எல்லாம் ஆளக்கூடிய அரசியல் தலைவராக வர சான்ஸ் இருக்கு... சூப்பரா சமைப்பாரு (நான் சாப்பிட்டது இல்ல அதான் சொல்றேன்), கடைசியா இவருக்கு கவிதை ரொம்ப நல்லா எழுத வரும்!! (கடவுளே இதுக்காக மட்டும் என்னை மன்னிச்சிடு

இளா ..வவாச சங்கத்தில் தனியா ஒரு சிங்கம் சுத்திக்கிட்டு இருக்குன்னா அது..இந்த சிங்கம் தான். slumdog millionaire படத்தில் நடித்த குழந்தைகளின் உண்மையான வறுமை நிலைமை பற்றிய இவருடைய  ஒரு பதிவு என்னால் மறக்க முடியாததுஇதை லிங்க் கொடுக்க போன போது அவர் ப்ளாகில் பாடிய பாடலையும்..:)

கப்பி ..:))  .இவரை பார்த்தால், உடனே யாராக இருந்தாலும்நமிதா வாழ்கஅப்படீன்னு சொல்லனும்..:), சங்கத்தின் ஏடிம், தன் சம்பளத்தில் தனக்காக 25% உம், 78% நமிதா க்காகவும் சேர்த்துவைத்துக்கொண்டு இருக்கிறார். அந்த இடிக்கிற 3% ஓவர் டைம்ல வரது..:)

கேஆர்எஸ் - இவர் ஒரு முருக பக்தர். சாமியார் னு பரவலா சொல்லிக்கிறாங்க. தனிப்பட்ட முறையில் அதிகம் தெரியாது. அதனால் சாய்ஸ்சில் விட்டு விடுகிறேன்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்,  எங்களின் அன்பு தலைவி, ஆருயிர் தோழி, லட்சிய லட்சுமி, புரட்சி பம்மல்,சே..செம்மல், தங்க தாரகை யானையக்கா பொன்ஸ்.!! இவங்களை பத்தி சொல்லனுமா என்ன?

கொசுறு : இப்ப புதிதாக இரண்டு பேர் சேர்ந்து இருக்காங்களாம், பதில் வந்தபிறகு நோட் பண்ணது.. அந்த கொசுறுகள்- அபிஅப்பா & விஜிராம் (இதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்திச்சி... ம்ம்ம்ம்...!!  இனி சங்கத்தோட நிலைமை.. அய்யோ பாவம்..!! )

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தனித்துவம் இருந்தாலும், சிங்கங்களுக்கு எந்த நேரத்திலும் இருந்த ஒரே ஒற்றுமை.. " சிரிக்க வைப்பது" இதை பாரபட்சமின்றி செய்துக்கிட்டு இருந்தாங்கஎங்களை எல்லாம் சிரிப்பா சிரிக்க வைத்த சிங்கங்கள் இப்ப எங்க போனாங்க ன்னு தான் தெரியல??!!!!..எத்தனை ஒற்றுமையாக கூடி கும்மாளம் இட்ட கூட்டம் சிறகு முளைச்சி தன் வேலை தன் வீடு தன் குழந்தைகள் ன்னு பிரிஞ்சி போயிட்டாங்க... எப்பவாவது முகத்தை காட்டறாங்க..ஆனா வவாச வில் இல்லாமல் அவங்க வீட்டில் இருந்துக்கிட்டு "ஹாய் பாஸ்" ன்னு கை காட்டறாங்க. அவங்களை எல்லாம் திருப்பி ஒரு முறையாவது ஒன்றாக அழைத்து, முன்னமாதிரி பேசி, சிரித்து, கலாய்த்து சந்தோஷமாக இருக்க ஆசைப்பட்டு கேப்பங்கஞ்சியை காய்ச்சி வச்சிக்கிட்டு , சிங்கங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட்டிங்கு...... ஆஹா வந்துட்டாங்க.............

கஞ்சிய ஊத்தி ஊத்தி ஊத்தி...கேட்ட கேள்விகள் :- 

கவிதா : வவாச - இந்த ஐடியா யாருக்கு வந்தது? இதனை இன்னாரோடு எல்லாம் சேர்ந்து செய்யலாம்னு நினைத்து ஆரம்பித்தது யார்?
சிங்கங்கள்: இதுக்கு ஐடியா எல்லாம் குடுக்கிறாங்களா? நீங்க வேற. வாடா மச்சான், கைப்புள்ளன்னு ஒருத்தன் பதிவு ஆரம்பிச்சிருக்கான், தனித் தனியா அவனை  கலாய்ச்சது போதும், சேர்ந்து கலாய்க்லாம்னு கலாய்க்க ஆரம்பிச்சவங்க தேவ்,  பொன்ஸ், சிபி, ஜொள்ளுப்பாண்டி, கர்த்திக் ஜெயந்த், இளா. பிற்பாடு  வெட்டிப்பய, ராம், கப்பி, புலி, கடைசியா சாமியார் KRS. இந்த மாசத்துல ரெண்டு பேர் சேர்ந்தவங்க அபி அப்பாவும், விஜிராமும். முதல் பதிவு பாருங்க http://vavaasangam.blogspot.com/2006/04/test.html.  பதிவு போட்டதிலேர்ந்து வவாசவுக்கு அருமையான ஏறுமுகம் தாங்க.

அணில் : எல்லாம் சரி.. ஆல் யங்கஸ்டர்ஸ் இருக்கும் போது நடுவுல ஒரு ஓல்ட் மேன் எப்படி வந்தாரு.?. அட அதாங்க.. நம்ம சிபி அண்ணாச்சிய சொன்னேன்... அவர எப்படி ஒரு சிங்கமா உங்க கூட சேத்துக்கிட்டீங்க?
சிங்கங்கள் : அணிலு...சிபி ஓல்ட்மேன் அப்படின்னு நீ சொல்றதை நாங்க கண்டிக்கிறோம். அவருக்கு அப்படியென்ன வயசாகிருச்சுன்னு ஓல்ட் மாங்க். அய்யோ ஓல்ட் மேன்  அப்படின்னு சொல்ற.? நீ அதை எப்படிச் சொல்லலாம்? நாங்கதான் சொல்லுவோம்.  ( பதிலேஇல்லாம தப்பிச்சோம் பாத்தீயா?  இதுதான் சிபி ஸ்டைல். அதான்  சிபி வவாசவுல மூத்த உறுப்பினர்)

சிபி : Actually அணிலு... முதல்ல எனக்கு பதிலா டோண்டு’ வைத்தான் சேர்த்துக்கறதா இருந்தது, சமீபத்தில் தான் பிறந்தவர் என்பதால, அவருக்கு பதிலா எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தாங்க.. என்னா ஒரு வில்லத்தனமான கேள்வி....ம்ம்ம்..?!!!

கவிதா : வவாச வின் இனிமையான இளமை நினைவுகள் பற்றி :-
சிங்கங்கள் : இனிமையான நினைவுகள் எக்கச்சக்கம். எங்களுக்குன்னு ஒரு குழுமம் இருக்கு.  சந்தைக்கடை பாத்திருக்கீங்களா? பர்மா பஜார்? ரெங்கநாதர் தெரு? அட இதில எதுவுமே இல்லீன்னா பாராளமன்றம். அப்படித்தான் இருக்கும் குழுமம். ஒரே   சத்தமா இருக்கும். குழுமத்தில அருவா மட்டும் இருந்தா வெட்டு பட்டிருப்போம்.  அப்படி எல்லாம் சண்டை நடக்கும். அதுலயும் தேவ், கைப்ஸ், இளா, வெட்டின்னு  சத்தம் ஜாஸ்தியா இருக்கும். சிபிதான் வழக்கம்போல நடுவால பூந்து நாட்டாமை பண்ணுவாரு. கடைசியில எல்லாரும் ஒன்னு சேர்ந்துப்பாங்க. கடைசியா வந்த சிபிக்கு மட்டும் டேமேஜ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். ஒரு தெரு முழுசா சொந்தக்காரங்க இருந்தா எப்படி இருக்கும்? அப்படி இருந்தது சிங்கங்கள்  உறவு

இதுல அனு*2, காயத்திரி*2, இம்சை அரசி அப்படின்னு லேடிஸ் விங் வர பபாசங்கம் வந்திச்சு.http://papaasangam.blogspot.com/. இந்தப் பாசமலர் குரூப் நல்லா இருந்துச்சு. சில உணர்வுகளை மட்டும்தாங்க சொல்ல முடியும். வயசான பின்னாடி நீங்க படிச்ச பள்ளிக்கூடத்துக்கு போனா என்ன உணர்வு வருமோ அதான். இதுக்கும் நாங்க எல்லாரும் ஒன்னா சந்திச்சதே இல்லே. ஆனா ரத்தப் பந்தங்கள். இது எல்லாம் வெளியுலகத்துக்கு தெரியாது. வவாசவுல எங்களுக்குள்ள கலாய்ச்சிக்கிறதும், அடுத்தவங்களை வாருவதும்தான் தெரியும்.

கவிதா: ரொம்ப நல்லா போயிக்கிட்டு இருந்த வவாச.. வில் ஏன் இப்படி ஒரு தொய்வு? வவாச என்ற ஒரு சங்கம் இருப்பதே இப்போதுஇருக்கும் புது ப்ளாகர்கள் யாருக்கும் தெரியாமல் போகும் அளவு சங்கத்தை கண்டுக்கொள்ளாமல் இருக்க காரணம் என்ன?
சிங்கங்கள் :- இது எல்லாப் பதிவர்களுக்கு வருவதுதான். அதுவும் நகைச்சுவை ரொம்ப கஷ்டம். எங்களுக்குள் பதிவுமேலேயே ஒருசலிப்பு வந்த போது வவாச மட்டும்  எங்கே இருந்து வரும். அது என்ன கஷ்ட காலமோ. அந்த தொய்வு நேரத்துல தான்  எல்லாருக்கும் வேலை மாற்றல், கல்யாணம். அப்படின்னு தனிப்பட்ட  பிரச்சினைகளும் சங்கத்தை மீட்க முடியாம போயிருச்சு. அதே சமயம் அட்லாஸ்  வச்சு சமாளிக்கலாம்னா நகைச்சுவையா எழுத ஆளே இல்லாத காலகட்டம் வேற.  அப்படியே விட்டாச்சு. எவ்ளோ நாளைக்குத்தான் நடிக்கிறது?

நடிப்பை தொடர முடியாத இந்த நிலையில்................

சிங்கங்களின் உருமல் தொடருகிறது அடுத்த பதிவில்.................

அணிலு : அப்படியே இங்க http://annakannan-photos.blogspot.com/2007/08/blog-post_10.html போயிட்டு, சிங்கங்கள் சீன் போட்டதையும் பார்த்துட்டு வாங்க..  என்னா சீன்.. ஒரு சிங்கம் தொப்பை காட்டுது, ஒன்னு முதுகு காட்டுது, பிரபுதேவாவின் சகல அவருக்கு மட்டும் தான் சிரிக்க தெரியும் சிரிச்சிக்காட்டறாரு, இன்னொரு சிங்கம் எங்க அதை போட்டோ எடுக்காம வுட்டுருவாங்களோன்னு கேமராக்குள்ள வந்து தலைய காட்டுது... ஸ்ஸ்ஸ்... சீன் போடறதுன்னா இது தான்... இதை மையமா வச்சி சிங்கங்களை நானும் கேள்வி கேட்டு இருக்கேன்....மறக்காம அடுத்த பார்ட் க்கு வந்துடுங்க.. ஒக்கே... !! 
.