=>நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவகார்த்திகேயன் திருமண நிகழ்வு விஜய் டிவி யில் பார்க்க நேர்ந்தது. ராஜேஷ் வைத்தியா'வின் வீணை கச்சேரி.. ?!! :)) மட்டுமல்லாது, மதுரையை சேர்ந்த முக்கிய வியாபார பிரமுகர் தாலியை எடுத்துக்கொடுக்க, திருமணம் நடந்திருக்கிறது. எனக்கு உடனே என்னுடைய புரட்சி கல்யாண பதிவு நினைவில் வந்து தொலைத்தது... ஏன்.ன்னா.... சிவகார்த்திகேயன் திருமணத்தை எதில் வகைப்படுத்தலாம் னு :)).

=>அயோத்தி தீர்ப்பு - 'Injustice - Howcome a fiction Hero's birth place confirmed by the two judges" . தொடர்ந்து சிவன் & குடும்பம், பெருமாள் & குடும்பம், அம்மன் & குடும்பம் ஆகியோரின் பிறப்பு சான்றிதழ்களும் இனி வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கடவுள் நம்பிக்கை, கடவுள் இருக்கிறாரா? இல்லையா? தொடர்ந்து நாம் பின்பற்றும் சம்பரதாய வழிபாடுங்களும் நம்பிக்கையும் பற்றி தனியாகத்தான் எழுதவேண்டும்.

=>கமென்வெல்த் விளையாட்டுகள் - வளர்ச்சி அடையாத நாடு என்று சொல்லப்படும் ஆப்பிரிக்க நாட்டில் உலக கால்பந்து ஆட்டம் முறையாக திட்டமிடப்பட்டு, அருமையாக நடந்தேறியது. ஆனால் இங்கே.??? டெல்லியில் காமன்வெல்த் நிகழ்ச்சிகளை டிவி யில் பார்க்கும் போது, ஏதாவது இடிந்து விழுந்து, யாருக்கும் எதுவும் நேர்ந்து விடுமோ என்ற பயம் உள்ளுக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது. :( அப்படி ஒரு மனநிலையில் பார்க்கமுடியாமல் வேறு சேனல் க்கு மாற்ற வேண்டிய கட்டாயம். பட்ஜெட் 7000 கோடிக்கும் மேலாமே?!

=>லதா மங்கேஷ்கர் அவர்களின் 81 ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 28 கொண்டாடப் பட்டது, பல ஆண்டுகள் அதிக ரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு, எந்த சிகிச்சையும் பலன் அளிக்காமல் இருந்த வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு, லதாஜி யின் பாடல்களை கேட்க பரிந்துரைக்கப்பட்டு, நல்ல பலன் கிடைத்திருக்கிறது. மருத்துவர்கள் ஆச்சரியமடைந்து, அவருக்கு தொடர்ந்து லதாஜி யின் பாடல்களை மட்டுமே கேட்கும் படி பரிந்துரைத்துள்ளனர் .

=>எத்தனை யுகம் ஆனாலும் நம் டிடி தொலைக்காட்சி மட்டும் தன்னுடைய நிகழ்ச்சிகளின் தரத்தை மாற்றவே மாற்றாதா? வயதான நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், நிகழ்ச்சி இயக்குனர்களும், வயதை மனதில் கொண்டு, திரைக்கு பின்னால் இருந்து நிகழ்ச்சிகளை நடத்தலாம். யோசிப்பார்களா? இன்னமும் 1980 ல் பார்த்த மாதிரியே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள். சில நிகழ்ச்சிகள் ரொம்பவே நன்றாக இருந்தாலும் அதனை வழங்கும் விதம்..... முடியலை... சாகப்போற பாட்டீஸ் தான் இன்னமும் சமையல் செய்கிறார்கள், தவறில்லை, ஆனால் குரல் தளர்ந்துவிட்டதால், என்ன சொல்லுகிறார்கள் என்பது சுத்தமாக புரியவில்லை.

=> எந்திரன் படம் தயாரிப்பு பற்றிய தொகுப்பு இனி ஒவ்வொரு ஞாயிறும் 7-9 சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இனி தொழில்நுட்ப சம்பந்தமாக ஒளிபரப்பினால் பார்க்கலாம். ரசிகர்களின் ஆர்பாட்டத்தையும், தனிமனித புகழ்ச்சியையும் ஒளிபரப்பினால் 2 மணி நேரம் வேறு வேலை கண்டிப்பாக செய்யலாம். இதுவரை படத்தொகுப்புகளை பார்க்கும் போது, ரஜினிஜி அரசியலுக்கு வரலாமே என்ற எண்ணம் தோன்றுவதை மறுப்பதற்கு இல்லை. (எந்திரனை பத்தி எழுதாட்டி சாமிகுத்தம் ஆகிடும்)

=>கைலாசம் மானசரோவர் யாத்திரை போகனும் னு ஆசை, இப்ப வந்த ஆசை இல்ல, சின்ன வயசிலிருந்தே இருக்கு. உன்னால் முடியாததை மட்டுமே எப்போதும் ஆசைப்படறியே எப்படி? என்று என் புள்ள கேக்கறான். அழைத்து செல்வதாக கணவர் சொல்லி இருக்கிறார். கைலாஷ் ல சிவன் சிவத்தி இருப்பதாக என் தாத்தா சொல்லி இருக்கிறார், போறதே போறோம் அவங்களையும் பார்த்து ஒரு "ஹாய்" சொல்லிவிட்டு, வெட்டியாக ஏன் குளிர்ல நடுங்கிக்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க.. வந்து வேலை செய்ங்க, நாட்டு நடப்பை எல்லாம் கொஞ்சம் கவனிங்க.. எங்களால முடிஞ்சத போட்டுத்தரோம்னு"ன்னு சொல்லனும். அயோத்தி தீர்ப்பினால் இந்த ஆசை அதிகமாகிவிட்டது.

=>மணற்கேணி இந்த ஆண்டு போட்டி அறிவித்து விட்டார்கள். "எனக்குத்தான் எனக்குத்தான்..சிங்கப்பூர் ஓசி பயணம் எனக்குத்தான்" ன்னு நாகேஷ் மாதிரி கத்த தோணது.. இராத்திரி பகலா உட்கார்ந்து இல்லாத அறிவை பயன்படுத்தி, எப்படியாச்சும் நல்லா எழுதி.. ஓசியில சிங்கப்பூர் சுத்தி பார்க்கனும். காசு கொடுத்து சுத்திப்பார்த்துவிட்டு வந்த நண்பனை கிண்டல் செய்யனும்.. (இது வரைக்கும் யாரும் மண்டபத்தில் எழுதி தரல, இனியும் எழுதி வாங்க மாட்டேன் னு சத்தியம் செய்யறேன்)

=>ஒரு பெண் குழந்தை தத்து எடுக்கனும் னு ஆவல், வீட்டில் நிராகரிக்கப்பட்டது, ஆசையை விட்டாச்சு. சமீபத்தில் ஒரு பெண் குழந்தை கண்ணிலேயே நிற்கிறாள், குழந்தையின் எதிர்காலம் குறித்து தூரத்தில் இருந்து பார்த்து ரொம்பவே வருத்தப்பட மட்டுமே முடிகிறது, இப்போது கொடுத்தால் கூட லட்டு மாதிரி வாங்கிக்குவேன். வளர்த்துக்குவேன், நல்லா படிக்கவைப்பேன், கல்யாணம் செய்து கொடுப்பேன்.

=>நீச்சல் சேர்ந்து 2 மாதம் வரை, மூச்செடுத்து தொடர்ந்து நீச்சல் அடிக்க வராததால் 6 அடி ஆழக்குளத்தில் இறங்கவே பயந்தேன். உடன் பயின்ற தோழிகள் கட்டாயப்படுத்தி, செத்துபோகாமல் பார்த்துக்கொள்வதாக சொல்லியதால், இறங்கினேன். ஆகஸ்டு மாதத்தில் தான் 50 மீ முழுவதுமாக சென்றேன். நவீன் 8 வயதில் நீச்சல் பழகி, பல வருடங்கள் கழித்து, இந்த செப்டம்பர் மாதம் தான் திரும்பவும் சேர்ந்தான். சேர்ந்த 20 நாளில், நேற்று 50 மீ முதன்முறையாக முழுவதும் சென்று வந்தான், என் காதில் புகை.. அத்தோடு ஒரு ஐஸ் க்ரீம் வாங்கி தந்து இன்னும் புகைந்தேன். :(. அத்தனை வேகமாக அவனுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளரை 'கொலைகாரி" என்று தினமும் திட்டுகிறான். அந்த கொலைகாரி- வேறுயாருமல்ல அவனை பெத்த தாயே. :((

=>2 மணி நேரத்தில் கார் ஓட்ட கற்று கொண்டு "ஆன் ரோட்" ல் ஓட்டினால் 10000 ரூ கிடைக்கும். இதற்கு என நண்பர் ஒருவரிடம் பெட் கட்டி உள்ளேன். முடியும் என்பதால் கட்டியது. இந்த பெட்'டினால் டிரைவிங் ஸ்கூலிலும் சேர முடியவில்லை. நல்ல வாத்தியார் கிடைக்காமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது, 10000 ரூபாயும் தான்.இப்படி பொதுவில் எழுதி வச்சிட்டா நாள பின்ன அவரு என்னை ஏமாத்த முடியாதில்ல.. (நாங்க எல்லாம் உஷாரூஊஊ)

=>வேளச்சேரியில் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், சென்னைசில்க்ஸ் போன்றவை மட்டுமே இன்னும் வரவில்லை. சங்கீதா, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், (விலை எக்கசக்கம்), ஹோண்டா சர்வீஸ் சென்டர், எல்.ஜி. ஷோ ரூம் எல்லாம் புதிதாக வந்துள்ளது. வண்டி சர்வீஸ் விட அடையார் வரை சென்று வந்தது,பெரிய வேலையாக இருந்தது. இப்போது நடந்து செல்லும் தூரத்தில்.. ஜாலி.:))

அணில் குட்டி அனிதா : பிச்சிப்போட்ட தோசை மாதிரி ஒரு போஸ்ட் டு... ...எனக்கு பிடிக்கல....!

பீட்டர் தாத்ஸ் : Mistakes are painful when they happen, but years later a collection of mistakes is what is called experience.”