தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்
http://iruppu.blogspot.com/2009/07/blog-post_13.html
இராவணன் எழுதிய இந்த கவிதை படித்த போது எனக்கு தோன்றிய சில வரிகள்...... நன்றி இராவணன்.
***************************************
தூசிகள்
படர்ந்த
வெற்றுத்திண்ணையில்
உன் பெயர்
எழுதி...
ரசித்தேன்..!!!
**********************
வாகனங்கள்
கடந்தபின்
தூசிகளை
சுத்தம்
செய்துவிட்டேன்....
**********************
அடுத்த
வாகனம்
எப்போது வருமென
காத்திருக்கிறேன்.........
தூசிகள்
திரும்பவும்
படருமே....!!
***********************
வாகனங்கள்
கடந்து செல்லாமல்
இருக்காது
தூசிகள்
படராமலும்
இருக்காது...
வெற்றுத்திண்ணையாய்
இருப்பது
என் தவறோ.......??!!
****************************
உங்களுக்கு தோன்றுவதையும் சொல்லிவிட்டு செல்லுங்கள்... :)
வெற்றுத்திண்ணை......
Posted by : கவிதா | Kavitha
on 20:22
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
15 - பார்வையிட்டவர்கள்:
அருமை
நிற்கும் கார்கண்ணாடியில் யாரோ எழுதிய உன் பெயர்
பக்கத்தில் எழுதிபோகிறேன் என் பெயரை
அணில் - வீட்டை சுத்தம் பண்றதே இல்லைனு இதுலருந்தே தெரியுது. :)
இராவணனை இதுக்கு மேல கலாய்க்க முடியாது ;))))))
வாகனங்கள் போலவே
வேகமா கடந்தாய் நீயும்
எண்ணங்கள் அழிக்க இயலாத
தூசியாய் ...
கதிர்-ஈரோடு.. முதல் முறையாக வந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...
நன்றி :)
நேசமித்திரன் : :) வாகனத்தையும், தூசியையும் மையப்படுத்தி எழுதி இருக்கீங்க...நல்லா இருக்குங்க.. :) நன்றி
வெயிலான் - :))) ம்ம்......... வீட்டுக்கு ஒருநாள் வாங்களேன்.. சென்னை தானே நீங்கள் ?!!
Choco - ஏன் இந்த முடிஞ்சிவிடற வேலை? :))))))
ஜம்ஸ் : செம செம செம சூப்பர.. இதுக்காக உங்களுக்கு ஒரு மஞ்சள் ரோஜா என் சார்பாக நீங்களே வாங்கி பரிசாக வைத்துக்கொள்ளுங்கள்.. :))
தூசியாவது கிடைத்தது, இங்கே காசு கொடுக்காமல்!!
தூசி அடைந்த கார்கண்ணாடி இதுப்போல் நிறைய படிக்கும் ஞாபகம்
அழகா சொல்லிட்டீங்க
இராவணன் மேல எதாவது கோபம் இருந்தா பேசித் தீர்த்திருக்கலாமே, ஏன் இந்த கொலவெறி!!!
தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சுத்தம் செய்ய
எத்தனையோ வழி!!
உன் நினைவுகள்
படர்ந்த
என் மனதை
சுத்தம் செய்ய
என்ன வழி ??
----------------
தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சுத்தம் செய்ய
எத்தனையோ வழி!!
உன் நினைவுகள்
படர்ந்த
என் மனதை
சுத்தம் செய்தேன்
என்ன வலி !!
--------------------
இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்.
"வெற்றுத்திண்ணை”
திண்ணையில் உட்கார ஆட்களும் இல்லை,அப்படி இருந்தாலும் அவர்களுக்கு
பேச நேரம் இல்லை. அதனால் தூசி படிந்து உள்ளன திண்ணையில்.
@ ஷ்ஃபிக்ஸ் - நன்றி :) நல்லா இருக்குங்க.. :)
@ அபுஅஃப்ஸர் - நன்றி :) கார் கண்ணாடியில் எழுதியவை நிறைய பார்த்து இருக்கிறேன்.
@ ராஜ் - கோவம் இருந்தால் தான் எழுதனுமா? :)) கவிதை பிடித்ததால் எழுதினேன்.
@ துபாய் ராஜா : எக்ஸலன்ட் !! ரொம்ப நல்லா இருக்கு... ம்ம்.. தனி திறமை வேணும் போலவே.. :)
நன்றி..
@ கோமதி அரசு - வாங்க முதல் முறையாக வந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன். :)) ம்ம்.. நல்லா இருக்குங்க உங்க சிந்தனை.. நன்றி... :))
எவ்வளவு அழகான கவிதைகளும் நீட்சிகளும்...
வாழ்க கவிதா.
@ ராஜாராம் - வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :)
kavithaikal arumai ananl ravanan kavithain porul vera ungaludaudu vera. ravanan kadalai kurikkavillai.
Post a Comment