கவி : நவீன் என் நீயூ ஃபிரண்டு பாருடா வா...வா.. இங்க.... (பப்புவும் நானும் இருக்கும் போட்டோவை அவனுக்கு காட்டுகிறேன்)
நவீன் : ..............................
கவி : ஏன்ன்டா... மெனக்கேட்டு உன்னை கூப்பிட்டு என் நியூ ஃபிரண்டை காட்டினேன் ஒன்னுமே சொல்லாம போற.... பொறாமை புடிச்சவனே.. !!
நவீன் :.... ம்ம்ம்ம் .. அவக்கூட இன்னும் கொஞ்ச நாள் ல உன்னை விட வளந்துடுவாம்மா............!!!!
கவி :........... :((((((
******************************
கவி : (ராத்திரி தூங்க வரும் நவீனை பாத்து )- எனக்கு ஒரு கேள்விடா...
நவீன்... : (நிறைய மொக்கை கேள்விகளை கேட்டு கேட்டு பழக்கமாகி நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பதாலும் வேண்டானாலும் விடாமல் நான் கேட்டே தீருவேன் என்பதாலும் பதில் ஏதும் சொல்லாமல் என் கேள்வி யை மிக கடுப்பாக எதிர் பார்த்துக்கொண்டே படுக்கையை விரித்துக்கொண்டு இருந்தான்...)
கவி : எனக்கு ஒரு பெரிய டவுட்டுடா... இந்த எறும்பு எல்லாம் நைட் ல தூங்குமா? தூங்காதா?...
நவீன் : (இவ்வளவு கேவலமான கேள்விய எதிர்பார்க்காத அவன்... வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்)...ஏம்ம்மா ..ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்.?? ஏன் இப்பூடீஈஈ.?
கவி : டூ யூ திங்க் மை குவஸ்ஸின் ஈஸ் நாட் வேலிட்..........?
நவீன்..: ம்ம்ம்மா.. ராத்திரி மணி 12.20 ஆகுது, இப்படி கேள்வி கேக்கறீயே உனக்கு மனசாட்சியே இல்லையா? என்னை விட்டுடு நான் தூங்கனும்..!!
கவி : :(((((
******************************
கவி : இங்க பாருடா..... வெளி நாடு எல்லாம் போனா அதுவும் பர்டிக்குலரா அமெரிக்கா போனா... அமெரிக்காக்காரிய தயவு செய்து லவ் பண்ணி தொலச்சிடாதடா..........
நவீன் : :)))))))) ஹி ஹி..ஏன் ஒன்ன்னால அந்த அளவு பீட்டர்ல பேச முடியாதுன்னு பயப்படறீயா...
கவி: :((((((((((((((((
******************************
கவி : நவீன் ப்ளிஸ்.... எனக்கு wma to mp3 conversion tool எது நல்லதுன்னு கொஞ்சம் ரெஃபர் செய்யேன்..
நவீன் : ஏன் உன்னோட இன்டர்நேஷனல் வெட்டி ப்ளாகர்ஸ் நிறைய பேர் இருப்பாங்களே அவங்களை கேளூ.... நீங்க எல்லாம் இன்டர்நேஷனல் அறிவாளிகளாச்சே....!! ...
கவி : (ஏன் இப்புடி.. ஒரு வேளை என்னைக்காச்சும் ப்ளாகர் எல்லாத்துக்கும் சேத்து வச்சி சப்போர்ட்டி இருப்பேனோ...இவ்வளவு கடுப்பா இருக்கான்...).... ஏண்டா.. உன்னால முடியலன்னா முடியாதுன்னு சொல்லு அதுக்கு எதுக்குடா.. ப்ளாகர்ஸ் எல்லாரையும் திட்டற..
நவீன் : பின்ன நீ வெட்டியா செய்யற வேலைக்கு ஏன் என் உயிரை வாங்கற...!!
******************************
கவி : நாங்க எல்லாம் சில்ட்ரன்ஸ் பார்க் போறோமே...
நவீன் : யாரு எல்லாம்?
கவி: நானும் என்னோட ப்ளாகர் பிரண்ட்ஸ்'சும்
நவீன் : ஹி ஹி... ஆல் வெட்டிஸ்' போறோம்னு சொல்லேன்.. ரொம்ப டீஸன்ட்டா ப்ளாகர்ஸ் னு சொல்றே.......
கவி : :((((((((((((((((((((((((((
******************************
கவி : நவீன் இன்னும் கொஞ்சம் வளந்துடுடா... இன்னும் ஒரு 2 இன்ச் ஹைட் போதும்.. ...
நவீன் : ம்மா .. நீயும் அப்பாவும் ரொம்ப ஹைட் ன்னு நினைப்பா? உங்க கூட பாக்கும் போது, இவ்வளவு ஹைட் டா நான் வளந்ததே பெரிய விஷயம் இது போதும், அமைதியா இரு..!!
கவி: ப்ளீஸ் டா ரொம்ப இல்ல...இன்னும் 2 இன்ச் போதும்....அதுக்கு தான் இன்னும் உனக்கு நான் காம்ப்ளான் எல்லாம் கொடுக்கறேன்...!!
நவீன் : ஓ..என்னை டீ, காப்பி குடிக்கக்கூடாதுன்னு இம்சை பண்றதுக்கு பின்னால இப்படி ஒரு சதி இருக்கா...? ஏன் என்னை எக்ஸிபிஷன் ல கொண்டு போயீ நிக்க வைச்சி சம்பாதிக்க போறியா?
கவி: :(((((((((((((((
******************************
கவி : நவீன் குட்டி உனக்கு என்ன டிபன் வேனும்டீ ?!
நவீன் : என்ன முடியூதோ செய்யிமா..
கவி: இல்ல நீ கேளு நீ என்ன கேக்கறயோ செய்து தரேன்...
நவீன்; சரி உன்னால என்ன செய்து தரமுடியும் மெனு சொல்லு?
கவி :ம்ம்ம்ம்ம்ம்... இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, சப்பாத்தி, இடியாப்பம்.. பிரட் ஆம்லெட், பிரட் ப்ரென்ச் ப்ரை... நீர் உருண்டை, நூடுல்ஸ், இதை எல்லாம் செய்யமுடியும்..ஆனா ஐ வான்ட் யூ டூ பிரிஃபர் ஒன்லி சம்பா கோதுமை கஞ்சி......
நவீன் : அதானே..அதுக்கு தான் முன்னமே உன்னால என்ன முடியுமோ செய்து தான் னு சொன்னேன்.. உன்னை பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே... கிளம்பு கிளம்பு ....ஏரியாவை காலிப்பன்ணு...!!
கவி: :((((((((((((
*************************************************
கவி : டேய் ஜிம் ல "வரலா" (வரலட்சுமி) உன்னை "எருமைமாடு " ன்னு சொன்னாடா... எல்லாரும் சிரிச்சாங்கடா.... :)))) ஹி ஹி .....
நவீன் : நீயெல்லாம் ஒரு தாயா? பெத்த புள்ளைய 'எருமைமாடு' ன்னு சொல்லி இருக்காங்க.... கொஞ்சம் கூட ரோஷப்படாம அவங்க கூட சேந்து நீயூம் சிரிச்சது இல்லாம என்கிட்ட வேற வந்து சொல்ற.. உனக்கு வெக்காமா இல்ல..?
கவி : அட..ஆமா இல்ல... நான் உன்னை பெத்த தாய் ஆச்சே...நான் மறப்பேனா.. அதனால் தான் அவக்கிட்ட சொன்னேன்... "வேணாம் வரலா' நீ எருமைமாடு னு மட்டும் தான் திட்டுவ.... .ஆனா என் புள்ள கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவான்.. அசிங்கம்மா உன்னை திட்டிடுவான்.." ன்னு சொன்னேன் டா.. அதுக்கு அவ.... "ஓ அசிங்கமா வேற திட்டுவானா... அவன் மூஞ்சியில நான் காரி....த்த்தூஊஊஊன்னு துப்பனேன்னு சொல்லுங்க.... இப்படி ஒரு நல்ல தங்கமான அம்மாவுக்கு இவ்வளவு கேவலமான புள்ளையா ன்னு நான் கேட்டேன்னு சொல்லுங்க ன்னு" சொன்னா டா...................
நவீன் :......ம்ம்மா.... இது மட்டும் என்னமோ அவங்க என்னை திட்டினமாதிரி தெரியலையே......... :(((
கவி : :))))))))))) ஹி ஹி......ஹி ஹி....
*************************************************
அணில் குட்டி அனிதா : ............ அம்மணி இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எவ்வளவு அடிப்பட்டாலும்...மாற போறது இல்ல.... இது தேறாத கேஸூ...... :(((
பீட்டர் தாத்ஸ் : “For a mother the project of raising a boy is the most fulfilling project she can hope for. She can watch him, as a child, play the games she was not allowed to play; she can invest in him her ideas, aspirations, ambitions, and values -- or whatever she has left of them; she can watch her son, who came from her flesh and whose life was sustained by her work and devotion, embody her in the world. So while the project of raising a boy is fraught with ambivalence and leads inevitably to bitterness, it is the only project that allows a woman to be -- to be through her son, to live through her son.”
நவீன் vs கவிதா
Posted by : கவிதா | Kavitha
on 08:39
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
28 - பார்வையிட்டவர்கள்:
//கவி : எனக்கு ஒரு பெரிய டவுட்டுடா... இந்த எறும்பு எல்லாம் நைட் ல தூங்குமா? தூங்காதா?...
//
நவீனை ஏன் கொலை காரனாக்க முயற்சி செய்யுறீங்க?
//நவீனை ஏன் கொலை காரனாக்க முயற்சி செய்யுறீங்க?//
:)))))))))) கேள்வி கேக்கறது ஒரு தப்பா..?
////நவீனை ஏன் கொலை காரனாக்க முயற்சி செய்யுறீங்க?//
:)))))))))) கேள்வி கேக்கறது ஒரு தப்பா..?//
தப்பே இல்லை! ஆனா கொலை செய்யத் தூண்டுற அளவுக்கு கேள்வி கேட்பது தப்பு!
:-)))))))))
உங்ககூட சேர்ந்ததாலே எங்களுக்கு கெட்ட பேரு!! ஸ்ஸ்...ப்ப்பா...!!
//
நவீன் : ஓ..என்னை டீ, காப்பி குடிக்கக்கூடாதுன்னு இம்சை பண்றதுக்கு பின்னால இப்படி ஒரு சதி இருக்கா...? ஏன் என்னை எக்ஸிபிஷன் ல கொண்டு போயீ நிக்க வைச்சி சம்பாதிக்க போறியா?//
:-)))
//:-)))))))))
உங்ககூட சேர்ந்ததாலே எங்களுக்கு கெட்ட பேரு!! ஸ்ஸ்...ப்ப்பா...!!//
முல்லை ய ஒன்னும் எப்பவும் சொல்ல மாட்டான் ....நீங்க அவனை தல ன்னு சொல்லுவீங்கன்னு சொல்லி இருக்கேனா...
சோ.... அந்த பயம் இருக்கட்டும் னு பில்டப் கொடுத்துட்டு.. எப்பவும் உங்களை ஒன்னுமே சொல்லமாட்டான்.. சோ நீங்க கெட்ட பேரு லிஸ்ட் ல இல்ல.. மத்தவங்க எல்லாரும் இருக்காங்க.... ஹி ஹி... அதே தலைய மெயின் டெயின் செய்துக்கோங்க... :))
அந்த வெட்டி ஆஃபீசர்ஸ் லிஸ்ட் யாராருன்னு ஒரு லிஸ்ட் போடுங்களேன்?
(எல்லாம் வரிசையா வாங்க, இன்னிக்கு குமுறலாம்)
முல்லை, சீனு, ஜம்ஸ், ராஜா இவங்கள தவிர எல்லாரும் இருக்காங்க...
G3 எப்ப மாட்டுவானங்கன்னு காத்துக்கிட்டு இருக்கான்.... :)))))
ஆமா நீங்க எல்லாம் சேர்ந்து என் புள்ளைய என்ன செய்ய போறீங்க? எதுன்னாலும் சொல்லிட்டு செய்ங்க... அவன் என்னை மாதிரி நல்லவன் இல்ல,உங்களுக்கு எல்லாம் ஏதாச்சும் ஆச்சின்னா ? என்ன செய்யறது??? :((((((
ஆஹா~! நல்லா ...
வந்தா
என்னைய நல்லவன்னு சொல்லிட்டாங்களே ...
//ஆமா நீங்க எல்லாம் சேர்ந்து என் புள்ளைய என்ன செய்ய போறீங்க? எதுன்னாலும் சொல்லிட்டு செய்ங்க... அவன் என்னை மாதிரி நல்லவன் இல்ல,உங்களுக்கு எல்லாம் ஏதாச்சும் ஆச்சின்னா ? என்ன செய்யறது??? :((((((//
அவனையும் எங்க மொக்கை பிளாகர்ஸ் குரூப்ல சேர்த்துக்குவோம்!
//அவனையும் எங்க மொக்கை பிளாகர்ஸ் குரூப்ல சேர்த்துக்குவோம்!//
ஓஓஓஓ.... சரி.. .. அவனை பாராட்டி சீராட்டி நிறைய வேண்டாம், ஒரு 3 போஸ்ட் போடுங்க. .சிபி வாழ்க ன்னு உங்க பின்னாடியே சுத்துவான்.. :))))) மொக்கையில சேர்ந்துக்குவான்.. :)
யாரோ இந்த வருஷத்து கோட்டா அதிகமாயிடுச்சு! இனிமே அடுத்த வருஷம்தான் எழுதுவேன்னு சொல்லிட்டு போனாங்க!
;)
//யாரோ இந்த வருஷத்து கோட்டா அதிகமாயிடுச்சு! இனிமே அடுத்த வருஷம்தான் எழுதுவேன்னு சொல்லிட்டு போனாங்க!//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னை எழுத வைக்கறது யாரு???? :))
உங்க ப்ளாக் படிச்சது குத்தமாங்க? நான் வெட்டியா இருக்கேன்னு ஞாபகப்படுத்திட்டீங்களே....ச்சே
ஏன் எங்களை திட்ட இப்படி ஒரு நாடகம் ;( அவ்வ்வ்வ்வ்
\\நவீன் :.... ம்ம்ம்ம் .. அவக்கூட இன்னும் கொஞ்ச நாள் ல உன்னை விட வளந்துடுவாம்மா............!!!!
\\
இந்த சின்ன வயசுலையும் எம்புட்டு பெரிய ஞானம் பாருங்க ;)
அருமை!
ஓ! உங்க குழந்தை பேரும் நவீனா?
ஜீவன் - நன்றி
நான் ஆதவன் - ஓ..அப்ப நவீன் உண்மையத்தான் சொல்லி இருக்கான்னா? :)))
//ஏன் எங்களை திட்ட இப்படி ஒரு நாடகம் ;( அவ்வ்வ்வ்வ்//
ம்ம்ம்ம்... உங்க அக்காவை அப்ப நீனு நம்பல... அக்கா புள்ளைய நம்பர.. ம்ம்.. எல்லாம் நேரம்........ வருவ இல்ல கண்ணு, புள்ளக்கிட்டு பேசு.. அது எம்புட்டு நல்ல புள்ளன்னு தெரியும்.. :))
//இந்த சின்ன வயசுலையும் எம்புட்டு பெரிய ஞானம் பாருங்க ;)//
ஞானம் இருக்கான்னு தெரியாது... என்னைவிடவும்.. மனிதர்களை, உறவுகளை , நண்பர்களையும் புரிந்தவனாக இருக்கிறான்.
அத்திவெட்டி ஜோதிபாரதி - உங்க பேரு ?????? அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னங்க இது பேரு ஒரு கொலைவெறி யோட இருக்கு? ஊர் பேரா? சரி.. நம்ம ப்ளாகருங்க எப்பத்தான் இந்த ஊர் பேரை கூட வச்சிக்கிட்டு சுத்துவதை நிறுத்த போறாங்களோ தெரியல.. :((
//ஓ! உங்க குழந்தை பேரும் நவீனா?//
ஆமா என் குழந்தை பேரு நவீன். :)
:))))
/அணில் குட்டி அனிதா : ............ அம்மணி இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எவ்வளவு அடிப்பட்டாலும்...மாற போறது இல்ல.... இது தேறாத கேஸூ...... :(((/
ஹா...ஹா...ஹா..
நீங்க என்ன தான் விழுந்து விழுந்து எழுதினாலும் அணில் குட்டி சொல்லுறது தாங்க சூப்பர். உங்க பதிவுக்கு வந்ததும் முதலில் கடைசில அணில் குட்டி என்ன சொல்லி இருக்குன்னா தான் படிப்பேன்னா பார்த்துக்குங்க:))))
//நவீன் : ஏன் உன்னோட இன்டர்நேஷனல் வெட்டி ப்ளாகர்ஸ் நிறைய பேர் இருப்பாங்களே அவங்களை கேளூ.... நீங்க எல்லாம் இன்டர்நேஷனல் அறிவாளிகளாச்சே....!! ...//
இதை படிச்சிட்டு சரி நம்மையும் சேர்த்து தான் சொல்லி இருப்பாருன்னு நினைச்சா
//கவிதா | Kavitha said...
முல்லை, சீனு, ஜம்ஸ், ராஜா இவங்கள தவிர எல்லாரும் இருக்காங்க...//
இப்படி சொல்லிட்டிங்களே!! நவீன் வாழ்க வாழ்க. பி.ப.நா.சி’ஐ வெட்டீஸ் லிஸ்டில் சேர்த்த நவீன் மேலும் மேலும் வாழ்க வாழ்க
இப்படி அடிக்கடி தட்ட ஆளில்லை என்றால் உங்க கொட்டமும் ஓவராத்தான் போயிடும். :))
நல்ல கலக்ஷன்ஸ்!!
//நாமக்கல் சிபி said...
யாரோ இந்த வருஷத்து கோட்டா அதிகமாயிடுச்சு! இனிமே அடுத்த வருஷம்தான் எழுதுவேன்னு சொல்லிட்டு போனாங்க!//
ரிவைன்டு ரிப்பிட்டே!!
@ நிஜமா நல்லவன் - நீங்க ஒருத்தர் தான் பாக்கி, நீங்களும் அணிலுக்கு விசிறி ஆயிட்டீங்களா.. இப்படித்தான் மக்களை அணில் ஏதோ ஒரு வார்த்தை 2 வார்த்தை பேசினாலும் அதை ஓவரா சப்போர்ட்டி அது எப்பவுமே டூ மச் சா பேச ஆரம்பிச்சிடுத்து
@ ராஜ் - உங்களை அவனுக்கு தெரியும், அது ஒரு காரணம்.. :)
@ஷஃபிக்ஸ் - நன்றி :) எப்பவும் சிபி தான் நான் எழுத போறேன்னு சொன்னா சந்தோஷப்படுவாரு.. இப்ப நீங்களுமா? ம்ம்ம்... சரி... :)
Post a Comment