அதிகமாக ஆங்கிலபடங்கள் பார்க்க 90 களில் ஆரம்பித்தது. ஆங்கில படங்களில் கடைசியாக பார்த்த Terminator Salvation 2009 வரை என்ன இல்லை? நம்மை விட அதிக அளவு சென்டிமென்ட்'ஸ், காதல், குடும்பம், குழந்தைகள், பாடல்கள், அழுகை, சிரிப்பு, பிரிவு, நடனம் என்று எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் விட வியக்கவைக்கும் டெக்னாலிஜி! பல வருடங்கள் முன்னோக்கி எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் அவர்களின் சிந்தனையும் செயலும் ஆச்சரியப்பட வைக்கிறது. நாம் இன்னும் பின்னோக்கி சென்று 70-80 கதைகளை தேடிபிடித்து எடுத்து அதை 100% வெற்றி பெறவும் செய்கிறோம். டெர்மினேடர் சீரியல் படங்களில் எல்லாம் இயந்திர மனிதனுக்கு க்கூட இதயம் இருக்கிறது போன்று அமைக்கப்பட்ட காட்சிகள் தமிழ் சினிமாக்களின் சென்ட்டிமெண்டுகளை எல்லாம் வீழ்த்திவிடுகின்றன.
தலைப்புக்கு வருவோம், காதல், முத்தம், அணைப்பு, கட்டில் காட்சிகளும் ஆங்கில படங்களில் மிகைப்படுத்தப்படாமல், அதாவது கதையோடு ஒன்றி தேவையான இடத்தில், அதுவும் நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. ஆனால் தமிழ் படங்களில்? அடடா... குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க முடியாதவாறு நம்மை நெளிய வைக்கின்றன. முத்தம் கொடுப்பதை நேராக காட்டமாட்டார்கள், (இதில் கமல்ஜி விதிவிலக்கு) முன்னே இரண்டு பூக்கள் கேமாராவிற்கு முன் வந்து நிற்கும், இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து நம்மவர்கள் தங்களின் கிரியேட்டிவிட்டியை காட்டுவார்கள். ஆனால் அத்தோடு விடுவதில்லை, அந்த பெண்ணின் கண்ணில் ஆரம்பித்து, உதடு, கழுத்து, மார்பு, இடுப்பு, தொப்புள் என்று கேமராவின் கண்கள் மட்டும் அல்ல அனைவரின் கண்களும் ஒன்றொன்றாக சென்றுக்கொண்டே இருக்கும். இது தேவையா? இத்தனை முக்கியத்துவம் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணின் உடலுக்கு கொடுத்து தமிழ் படங்களில் காட்டுவதை என்று நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.
சின்ன வயதிலிருந்து, இந்த பெண்ணியம் பேசும் பேச்சாளிகளிடம் இதை பற்றி கேட்கவேண்டும் என்று நினைத்ததுண்டு, ஆ..ஊ வென்றால் பெண்களுக்கு எதிராக அது நடந்து விட்டது இது நடந்து விட்டது என்று கூப்பாடு போடும் பெண்கள், நடக்க தூண்டுதலாக நடை உடையுடனும், இப்படி கவர்ச்சியாகவும் உடம்பை காட்டி மிகவும் அசிங்கமாக நடிக்கும் பெண்களுக்கும் எதிராக என்றாவது குரல் கொடுத்தார்களா? ஒரு முறை குஷ்புவை எதிர்த்து குரல் கொடுத்தார்கள், அந்த அம்மா திருமணத்திற்கு முன்னும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள் என்று துடைப்பம் செருப்பு எல்லாம் காட்டினார்கள்.
பல வீடுகளில், குறிப்பாக பல இளைஞர்களின் அறைகளில் இப்படி அரை குறை ஆடையுடன் கூடிய நடிகையின் படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. அவர்களுக்கு தன் ஆசைகளை தீர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட படங்கள் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்களை பார்க்கும் போது இது இல்லாவிட்டால் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்ததுண்டு.
மிகவும் விரசமான தாபத்தை ஆசைகளை தூண்டி விடக்கூடிய கட்டில் காட்சிகள் தமிழ் படங்களில் காட்டபடுகின்றன. உலக நாயகனின் பல படங்களை இதற்கு உதராணமாக சொல்லலாம். அவை தேவையில்லை, திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. தேவர்மகன், ரேவதி-கமல்ஜி, நாயகன் - சரண்யா- கமல்ஜி, ரோஜா - அரவிந்த்சாமி-மதுபாலா, பாம்பே - அரவிந்த்சாமி மனிஷா கொய்ராலா
பயணங்கள் முடிவதில்லை மோகன்- பூர்ணிமா ஜெயராம், வெள்ளை ரோஜா, சுரேஷ்-ராதா, அலைகள் ஓய்வதில்லை, கார்த்திக்-ராதா.. எம்.ஜி. ஆர் -லதா, மஞ்சுலா, etc இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை எல்லாமே அந்த இயக்குனரின் எண்ண ஓட்டத்தை, ஆர்வத்தை, விருப்பத்தை காட்டுகிறது என்றே வைத்துக்கொள்ளலாம். வேட்டையாடு விளையாடு படத்தில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வருவார்கள். நேராக மாடிக்கு போவார்கள் உடனே முதலிரவு.. அட அட அட..?!! தமிழ் சினிமாக்களில் என்ன ஒரு முக்கியத்துவம், அவசரம் அந்த முதலிரவு காட்சிகளுக்கு மட்டும்.? ஒரு திருமணத்தில் இது மட்டும் தான் ஹை லைட் செய்து காட்டவேண்டிய விஷயமா? இதை விடவும் எத்தனையோ முக்கியமான நமக்கு தேவையான சடங்குங்கள் இருக்கின்றனவே.. ஒரு வேளை நாம் அதை தான் இயக்குனர்களி்மிருந்து எதிர்பார்க்கிறோமா? அதனால் கொடுக்கிறோம் என்று அவர்கள் சொல்லுவார்களோ?
கதையின் ஓட்டத்தோடு வருகின்ற முத்தக்காட்சிகள், கட்டில் காட்சிகள் அவசியமே என்றாலும் அதை மிகவும் விரசமாக காட்டாமல், தேவை (படத்திற்கும், நமக்கும்) என்ற அளவில் காட்டினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. Sylvester Stallone - இவரின் ஒரு படத்தில் (பெயர் நினைவில்லை) இவரும் , படத்தின் கதாநாயகியும் நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் காட்டப்படும், அசிங்கமாகவோ, கவர்ச்சியாகவோ, விரசமாகவோ முகத்தை சுளிக்கும் படியாகவோ இருக்காது. காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும், கேமரா ஆங்கி்லும் அப்படி இருக்கும். ஏன் மிக சிறந்த படமான டைட்டானிக் படத்தில் வரும் முத்த காட்சிகளும், கட்டில் காட்சிகளும் நம்மை முகம் சுளிக்க வைத்தனவா? ரசிக்கமுடிந்ததல்லவா? அந்த படத்திலும் நிர்வாணமாக ஒரு பெண்ணை காட்டி இருக்கிறார்கள் தானே?
தமிழ் படங்களில் தவிர்க்க வேண்டிய கட்டில் காட்சிகளை வரவேற்றும், தேவையான மற்றவற்றில் கவனம் செலுத்தவும், உலக தரத்திற்கும் முன்னோக்கிய சிந்தனையோடும் படங்கள் எடுக்க மாட்டார்களா என்று எதிர்ப்பார்க்கும், கட்டில் காட்சிகளையும், படங்களில் சம்பந்தமே இல்லாமல் முதல் இரவு காட்சிகளின் அவசரத்தையும் வெறுக்கும் ஒரு ரசிகைன்னு வைத்துக்கொள்ளலாம்.
அணில் குட்டி அனிதா : ...............கவி ஆர் யூ..ஓகே?????? ஏதும் பிரச்சனையா? என்க்கிட்ட கூட சொல்லவே இல்ல?
பீட்டர் தாத்ஸ் : Life without sex might be safer but it would be unbearably dull. It is the sex instinct which makes women seem beautiful, which they are once in a blue moon, and men seem wise and brave, which they never are at all. Throttle it, denaturalize it, take it away, and human existence would be reduced to the prosaic, laborious, boresome, imbecile level of life in an anthill. ~Henry Louis Mencken
கட்டில் காட்சிகள்
Posted by : கவிதா | Kavitha
on 12:07
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
44 - பார்வையிட்டவர்கள்:
நோ கமெண்ட்ஸ்!!!
அட பார்றா!! நான் தான் பர்ஸ்ட்...
நான் ஆதவன் - வாங்க. .கமெண்ட்ஸ் கொடுக்காத மாதிரி எழுதிட்டேனா? அவ்வ்வ் :(
\\தமிழ் படங்களில் தவிர்க்க வேண்டிய கட்டில் காட்சிகளை வரவேற்றும், தேவையான மற்றவற்றில் கவனம் செலுத்தவும், உலக தரத்திற்கும் முன்னோக்கிய சிந்தனையோடும் படங்கள் எடுக்க மாட்டார்களா என்று எதிர்ப்பார்க்கும், கட்டில் காட்சிகளையும், படங்களில் சம்பந்தமே இல்லாமல் முதல் இரவு காட்சிகளின் அவசரத்தையும் வெறுக்கும் ஒரு ரசிகைன்னு வைத்துக்கொள்ளலாம்.\\
ரைட்டு....நல்ல விஷயம் தான்...;)
ஆனால் நீங்கள் உதராணமாக கொடுத்திருக்கும் (எனக்கு தெரிந்த) கலைஞானி படங்கள் எல்லாம் நீங்கள் அச்சப்படும் அளவுக்கு எல்லாம் விரசமான தாபத்தை ஆசைகளை தூண்ட கூடியது இல்லைன்னு என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.
\\வேட்டையாடு விளையாடு படத்தில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வருவார்கள். நேராக மாடிக்கு போவார்கள் உடனே முதலிரவு.\\
வேட்டையாடு விளையாடு படத்தை நல்ல மீண்டும் ஒருமுறை பாருங்கள்....ராகவனோட மனைவி பற்றி பகுதியே ரொம்ப கம்மி...அவுங்க ரெண்டு பேரும் வாழ்ந்த அந்த (சில மாதங்கள்ன்னு சொல்லு வாரு ஒரு சீன்ல) வாழ்க்கையை ஒரே பாடலில் காட்சி படுத்த வேண்டிய சூழ்நிலை அதுக்கு அப்படி தான் செய்ய முடியும்.
நீங்கள் உதராணம் கொடுத்திருக்கும் வகைகளில் தன்னோட வயதை விட மிக மிக குறையந்த வயதுடைய பெண்ணுடன் டூயட் பாடும் நாயகர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அதுவும் சதராணமான டூயட் கூட இல்ல அந்த நாயகிக்கு எந்த அளவுக்கு குறைந்த ஆடை கொடுத்த முடியுமே அந்த அளவுக்கு கொடுத்து அவரோட சேர்ந்து இணைந்து ஆடும் படங்களும் நீங்கள் சொல்லும் அதே விரசமான தாபத்தை ஆசைகளை தூண்டுவிடும்.
;)
Choco, ம்ம்..நானும் நினைத்தேன் கலைஞானி யின் படங்கள் உதாரணங்கள் கொடுக்கிறோமே... :)) காட்சிகள் அவசியம் என்றாலும் இன்னும் குறைத்து இருக்கலாம் என்ற ஒரு எண்ணம்.
//வேட்டையாடு விளையாடு படத்தை நல்ல மீண்டும் ஒருமுறை பாருங்கள்....ராகவனோட மனைவி பற்றி பகுதியே ரொம்ப கம்மி...அவுங்க ரெண்டு பேரும் வாழ்ந்த அந்த (சில மாதங்கள்ன்னு சொல்லு வாரு ஒரு சீன்ல) வாழ்க்கையை ஒரே பாடலில் காட்சி படுத்த வேண்டிய சூழ்நிலை அதுக்கு அப்படி தான் செய்ய முடியும்.//
ஆமாம் குறைவு தான்.. இருப்பினும், உள்ளே நுழைந்தவுடன் கட்டிலுக்கு புதுமணத்தம்பதிகள் செல்வதில்லை... :) இது யதார்த்தம். நேரம் காலம் இருக்கிறது.
இது தான் முதல் என்று காட்டியிருக்கவேண்டியதில்லை.... ஒரு ஆதங்கம்.. காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கலாம்.. :(
நன்றி கோபி..இந்த பின்னூட்டத்திற்காக உங்களுக்கு தனி ட்ரீட்.. முதல் முறையாக இவ்வளவு பெரிய பின்னூட்டம்.. போட்டு இருக்கீங்க.. நன்றி மீண்டும்.... :)))))
இப்படியெல்லாம் ஆண்கள் தலைப்பு வச்சா ...
எத்தனை எதிர் பதிவுகள் போடுறாங்கப்பா
தன்னோட வயதை விட மிக மிக குறையந்த வயதுடைய பெண்ணுடன் டூயட் பாடும் நாயகர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்\\
அதுவும் six bag உடம்ப வச்சிகிட்டு
//இப்படியெல்லாம் ஆண்கள் தலைப்பு வச்சா ...//
தலைப்பு வைத்தால்????? :)))
//எத்தனை எதிர் பதிவுகள் போடுறாங்கப்பா//
பொறாமை படப்பிடாது... பார்வைகளின் வரலாறு தெரியுமில்லையா? நிறைய எதிர்பதிவுகள் கேவலமாக என்னை திட்டி, நக்கல் அடித்து, மனம் மிகவும் வேதனைப்படும் படியாம வார்த்தைகள் உபயோகித்தும் பதிவு போட்டு இருக்கிறார்கள். இதில் பெண்களும் அடக்கம். :))))
நமக்கு புதிதல்லவே...
அப்படி பதிவில் எழுதி திட்டி சந்தோஷப்படுப்படுவர்கள் ஒரு புறம், முதுகுக்கு பின் அவர்களை ஊக்குவிப்பவர்கள் மற்றொரு புறம்..
வாழ்க வளமுடன்...!!
சரி நான் புலம்பல்ஸ் ஆரம்பிக்கிறேன் னு நினைக்கிறேன்.. :)))) நிறுத்திக்கிறேன்...
///காதல், முத்தம், அணைப்பு, கட்டில் காட்சிகளும் ஆங்கில படங்களில் மிகைப்படுத்தப்படாமல், அதாவது கதையோடு ஒன்றி தேவையான இடத்தில், அதுவும் நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன.///
எப்படி சித்தரிக்கப்படுகின்றன..?
மிகைப்படுத்தப்படாமலா..?
காதல் காட்சிகளும், உடல் உறவு காட்சிகளும் ஆங்கிலத் திரைப்படங்களில் பச்சையாகச் சொல்லப் போனால் அப்பட்டம். ஒளிவு, மறைவல்ல..
நம் ஊரில் அதை வெளிப்படையாக அப்படி காட்ட முடியாது..
அதனால்தான் குறைந்தபட்சம் ஆடை குறைப்பினால் எழும் சிற்றின்பத்தைத் தூண்டிவிடும் அளவுக்கு இயக்குநர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.
இதற்காக ஆங்கிலத் திரைப்படங்களை போலவே நாமும் வைக்க முடியுமா என்ன..?
ஆபாசத்திற்கும், கலை உணர்விற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. எங்கே வேற்றுமை என்பதும் புரியவில்லை.
எது ஆபாசம்..? எது கவர்ச்சி என்பதிலேயே தமிழ் சினிமா உலகத்தில் பெரும் பட்டிமன்றமே நடந்து வருகிறது..
ஒருவருக்கொருவர் எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டு அதன்படி போய்க் கொண்டிருக்கிறார்கள்.
உங்களது பார்வையில் உலக நாயகனின் நேரடி முத்தக் காட்சிகள் ஆபாசமாத் தெரிகிறது எனில் அதற்கு முதல் காரணம் உடன் நடிக்கும் நடிகையர் நமது ஆஸ்தான உடையில் புடவையில் இருப்பதால் இருக்கலாம்..
நீங்களே சில்வஸ்டர் ஸ்டெலோன், ஷரன் ஸ்டோனுடன் தி ஸ்பெஷலிஸ்ட் திரைப்படத்தில் குளியலறையில் உருகிய காட்சியை அருமை என்கிறீர்கள். அதுபோல் கலை உணர்வுடன் எடுக்க நம்மவர்கள் தயார்தான்.. ஆனால் முடியுமா..?
இந்தக் குளியலறைக் காட்சிக்கு உலக நாயகனின் காட்சிகள் எவ்வளவோ பரவாயில்லைதான். இதனை குடும்பத்தோடு பிள்ளைகளோடு பார்த்துவிடலாம். ஆங்கிலப் படங்களை பார்க்க முடியுமா..?
ஆமா.. என்னாச்சு கவிதாவுக்கு..? நல்லாத்தான இருந்தாங்க..!!! திடீர்ன்னு ஒரு கெட்ட புரட்சி..!
ம்.. ம்.. நடத்துங்க.. நடத்துங்க..
உங்களுடைய ரசிகர் மாநக்கல் சிபியின் எதிர்ப்பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..
முதுகுக்கு பின் அவர்களை ஊக்குவிப்பவர்கள் மற்றொரு புறம்..\\
இது மேட்டரு
சரியா புடிச்சிட்டீங்க ...
சமீப காலமா நானும் சிலரை அடையாளம் கண்டுள்ளேன் அதிர்ச்சியாகத்தான் இருந்தது ...
///பொறாமை படப்பிடாது... பார்வைகளின் வரலாறு தெரியுமில்லையா? நிறைய எதிர்பதிவுகள் கேவலமாக என்னை திட்டி, நக்கல் அடித்து, மனம் மிகவும் வேதனைப்படும் படியாம வார்த்தைகள் உபயோகித்தும் பதிவு போட்டு இருக்கிறார்கள். இதில் பெண்களும் அடக்கம். :))))
நமக்கு புதிதல்லவே...
அப்படி பதிவில் எழுதி திட்டி சந்தோஷப்படுப்படுவர்கள் ஒரு புறம், முதுகுக்கு பின் அவர்களை ஊக்குவிப்பவர்கள் மற்றொரு புறம்..
வாழ்க வளமுடன்...!!///
இதென்ன கதை..? புதுசா இருக்கு..?
கவிதா மேல பொறாமைப்பட என்ன இருக்கு..?
ஒண்ணும் புரியல..!!!
இது தொடர் பின்னூட்டங்களை படிப்பதற்காக..!
வாங்க முருகா...:)) நல்லா இருக்கு உங்க பின்னூட்டம்..
//காதல் காட்சிகளும், உடல் உறவு காட்சிகளும் ஆங்கிலத் திரைப்படங்களில் பச்சையாகச் சொல்லப் போனால் அப்பட்டம். ஒளிவு, மறைவல்ல..
//
அது அவர்களின் கலாச்சாரம், சொல்ல வந்தது அதையே அவர்கள் கதையோட்டத்தை ஒட்டி, தேவைக்கு தருகிறார்கள். சாப்பாடு தூக்கம் அழுகை சிரிப்பு போன்று இதுவும் வெளிப்படையான ஒன்று என வைத்துக்கொள்ளலாம்.
நமக்கு அப்படி அல்லவே.. அதனால் இப்படிப்பட்ட காட்சிகளை நாம் திணிக்கின்றோம் என்கிறேன்.
//எது ஆபாசம்..? எது கவர்ச்சி என்பதிலேயே தமிழ் சினிமா உலகத்தில் பெரும் பட்டிமன்றமே நடந்து வருகிறது..
ஒருவருக்கொருவர் எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டு அதன்படி போய்க் கொண்டிருக்கிறார்கள்.//
ம்ம்..உண்மைதான்..
//நீங்களே சில்வஸ்டர் ஸ்டெலோன், ஷரன் ஸ்டோனுடன் தி ஸ்பெஷலிஸ்ட் திரைப்படத்தில் குளியலறையில் உருகிய காட்சியை அருமை என்கிறீர்கள். அதுபோல் கலை உணர்வுடன் எடுக்க நம்மவர்கள் தயார்தான்.. ஆனால் முடியுமா..?//
அந்த திரைப்படமா? முருகா அருமை என்பதை விட அது எடுத்த விதத்தை பாருங்கள், அவர்கள் இதைவிட அதை மோசமாக எடுத்திருக்க முடியும் அல்லவா? எடுக்கவில்லையே.. பார்க்க தகுந்தார் போன்று தானே எடுத்து இருக்கிறார்கள்...
//உங்களது பார்வையில் உலக நாயகனின் நேரடி முத்தக் காட்சிகள் ஆபாசமாத் தெரிகிறது எனில் அதற்கு முதல் காரணம் உடன் நடிக்கும் நடிகையர் நமது ஆஸ்தான உடையில் புடவையில் இருப்பதால் இருக்கலாம்..//
இல்லை அவரின் படங்களை அதிகம் ரசிப்பவள் நா்ன்.... சத்யா என்ற படத்தில் கலைஞானி யின் முத்த காட்சிகள் அழகாக இருக்கும், மகாநதி..யும்... அதில் வந்த விமர்சனங்களுக்கு அவர் சொல்லியிருப்பது "எனக்கே தெரியாமல் அந்த பெண்ணிற்கு (சுகன்யா) நான் முத்தமிட்டு இருக்கலாம் என்றார்." :)))))) இப்படி பல படங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் நான் குறிப்பிடவில்லை.
நிஜமாகவே சில படங்களை குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியவில்லை...
//ஆமா.. என்னாச்சு கவிதாவுக்கு..? நல்லாத்தான இருந்தாங்க..!!! திடீர்ன்னு ஒரு கெட்ட புரட்சி..!//
கெட்ட புரட்சியா??????
எதுவும் இதில் கெட்டதாக சொன்னதாக எனக்கு தெரியல... :)) ஐயா சாமிங்களா தமிழ் படங்களில் விரச காட்சிகளை குறைச்சுக்கோங்க.. கதையை ஒட்டி தேவையான அளவு மட்டும் கொடுங்க. அப்படின்னு தானே சொல்லி இருக்கேன்.. :))
//இதென்ன கதை..? புதுசா இருக்கு..?
கவிதா மேல பொறாமைப்பட என்ன இருக்கு..?//
முருகா உங்களுக்கு தெரியாதா.. நான் என்ன எழுதினாலும் யாராச்சும் ஒருத்தர் எதிர் பதிவு போட ரெடியாக இருப்பாங்க.. அதனால் அவருக்கு ச்சும்மா சொன்னேன்.. பொறாமை படப்பிடாதுன்னு.. :)))
//இது தொடர் பின்னூட்டங்களை படிப்பதற்காக..!//
ம்ம் சரி.. தொடருங்கள்...
///அது அவர்களின் கலாச்சாரம், சொல்ல வந்தது அதையே அவர்கள் கதையோட்டத்தை ஒட்டி, தேவைக்கு தருகிறார்கள். சாப்பாடு தூக்கம் அழுகை சிரிப்பு போன்று இதுவும் வெளிப்படையான ஒன்று என வைத்துக்கொள்ளலாம்.
நமக்கு அப்படி அல்லவே.. அதனால் இப்படிப்பட்ட காட்சிகளை நாம் திணிக்கின்றோம் என்கிறேன்.///
கவிதா..
தாங்கள் தமிழ் சினிமாக்கள் மீதிருக்கும் கோபத்தில் புரியாமல் பேசுகிறீர்கள்..
அந்த நாட்டு கலாச்சாரம் என்றில்லை.. உலகத்தில் இருக்கும் அனைத்து நாட்டு மனிதர்களிடையே இருக்கும் ஒரு குணம்தான் செக்ஸ்..
அவர்களுடைய திரைப்படத்தில் அதனை அந்த அளவுக்கு காட்டலாம் என்று விதிமுறை இருக்கிறது.. காட்டுகிறார்கள்.
நம் நாட்டில் அனுமதி இல்லை. முத்தம் மட்டுமே உண்டு.. அல்லது ஆடை மறைப்புகளை வைத்துக் கொண்டு உடல் உறவு செய்வதைப் போல் முக பாவனையோடு முடித்துக் கொள்ளலாம்..
இந்த இரண்டிற்குமே ஒரே நோக்கம்தான்..
அந்த இடத்தில், அந்த ஜோடியினர் உடல் உறவு கொள்கின்றனர் என்பதை பார்வையாளனுக்கு காட்ட வேண்டும் என்பதுதான்.
அதை இந்த அளவுக்கு வெளிப்படையாக காட்ட வேண்டுமா என்பதில்தான் உங்களுக்கு மனச்சிக்கல்..
அவர்களும் அதனை வலுக்கட்டாயமாகத் திணிப்பதைப் போல்தான் காட்டுகிறார்கள்.
சில ஆங்கிலத் திரைப்படங்களில் முத்தமிட்டுக் கொண்டு படுக்கையில் விழுவதோடு நிறுத்திக் கொள்வார்கள் பார்த்திருக்கிறார்களா..?
அதேபோலத்தான் தமிழிலும் சில திரைப்படங்களில் நியாயமாக லேசான முத்தத்தைக் கொடுத்துவிட்டு அடுத்த ஷாட்டுக்குத் தாவிவிடுவார்கள். அப்போது அது உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது..
உதாரணம் செம்பருத்தி திரைப்படத்தில் பிரசாந்த் ரோஜாவின் உதட்டில் கொடுக்கும் முத்தம்..
ஆனால் கமல் மகாநதியில் நடந்து கொண்டது அவருடைய பாணியில்.. அது அந்தக் கதைக்கு சரி..
இதிலும் ஆபாசமோ, அருவருப்போ இல்லை என்றே சொல்வேன்.
அருவருப்பு என்றால் விஜய்யின் ஒரு திரைப்படத்தில் மூன்று கவர்ச்சி நாயகிகள் நடுவீட்டில் அவருடன் நடனம் ஆடுவார்கள் பாருங்கள் அது..
இன்னொன்று ஏதோ ஒரு திரைப்படத்தில் குளித்துக் கொண்டிருக்கும் sreevidhya-வின் முதுகை விஜய் சுரண்டுவதைப் போல் வைததிருந்த காட்சிகள்..
இவைகளை அடையாளமாகச் சொல்லலாம்..
மொத்தத்தில் திணிக்கப்படுவது இங்கும் நடக்கிறது.. ஹாலிவுட்டிலும் நடக்கிறது..
நீங்கள் காட்டிய உதாரணக் காட்சியும் மோசமானதுதான்.. அதனை எப்படி நீங்கள் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டீர்கள் என்பதில் எனக்கு மிகப் பெரும் ஆச்சரியம்..!
முருகா
பின்னூட்டம் ஒவ்வொன்றும் பதிவு மாதிரி போட்டால் என்ன செய்ய. .படித்து முடிப்பதற்குள் நான் என்ன எழுதினேன் என்று எனக்கு மறந்து போகுது...
//அந்த நாட்டு கலாச்சாரம் என்றில்லை.. உலகத்தில் இருக்கும் அனைத்து நாட்டு மனிதர்களிடையே இருக்கும் ஒரு குணம்தான் செக்ஸ்..//
திரைபடங்களை விட்டு வேறு இடத்திற்கு இது நகர்கிறது இருந்தாலும் சொல்கிறேன்.
நாம் மூடி மூடி வைப்பதால் நம்மிடையே அதிகம் உள்ளது. உலக அளவில் ஆசிய மக்களிடம் அதிகமாக உள்ளது எனலாம். இதை நான் சொல்லவில்லை முருகா சர்வே சொல்லுகிறது. காரணம் நம் கலாச்சாரமும் அதன் கற்பித்தலுமே.
//அதை இந்த அளவுக்கு வெளிப்படையாக காட்ட வேண்டுமா என்பதில்தான் உங்களுக்கு மனச்சிக்கல்..//
இல்லை வெளிப்படையாக காட்டுவதில் எனக்கு சிக்கல் ஒன்றும் இல்லை, அதிகபடியாக காட்டுவதில் சிக்கல். அதாவது குறிப்பிட்டது போல பெண்களை அதிக அளவில் கவர்ச்சியாக காட்ட நினைப்பது, உடலின் பாகங்களுக்கு தனி ்தனியாக க்ளோஸ்ப் ஷாட்ஸ் வைப்பது, போன்றவை அவசியமா என்பது கேள்வி.
ரொம்பவும் அசிங்கமான அசைவுகள், காட்சி அமைப்புகள் இல்லாமல் அழகாகவே சொல்ல முடியும் இல்லையா?
எதை அசிங்கம் என்று கேட்காதீர்கள் , அது நீங்கள் சொன்னபடி பட்டிமன்றம் நடத்தித்தான் தீர்வு காணவேண்டும்
என்னை பொறுத்தவரை, குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் படமாக தமிழ் படங்கள் இருந்தால் நல்லது, அதற்கு நாம் அப்படி வளர்க்கப்படுகிறோம்.
ஆங்கிலப்படம் பார்க்கலாம், அதனுடைய இம்பேக்ட் நம் குழந்தைகளுக்கு சட்டென்று வராது, ஏனென்றால் அதை அவர்களின் காலசாரமாக த்தான் பார்க்கிறார்கள். நம் படங்களின் தாக்கம் தான் அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
அவ்வ்வ்வ்வ் உங்களோட சேர்ந்து உங்களை போலவே பின்னூட்டம் போடறனே முருகா.. ?! :)
//அருவருப்பு என்றால் விஜய்யின் ஒரு திரைப்படத்தில் மூன்று கவர்ச்சி நாயகிகள் நடுவீட்டில் அவருடன் நடனம் ஆடுவார்கள் பாருங்கள் அது..
இன்னொன்று ஏதோ ஒரு திரைப்படத்தில் குளித்துக் கொண்டிருக்கும் sreevidhya-வின் முதுகை விஜய் சுரண்டுவதைப் போல் வைததிருந்த காட்சிகள்..//
ம்ம்ம்.... விஜய், சிம்பு வை எல்லாம் உதாரணம் எடுத்துக்கொள்ள வேண்டுமா முருகா?
80 காலகட்ட கதைக்களனில் படமெடுப்பது தவறில்லை, ஆனால் 80களில் இருந்த பாணியையே இன்றும் பிடித்துக்கொண்டு இருப்பது தவறு.
விரசமில்லாமல், கதாநாயகியை உடலைக் காட்டி விற்பனையைக் கூட்ட நினைக்காத படங்களும் சமீபகாலங்களில் வந்து வெற்றியும் பெறுகின்றன. காலம் மாறும், நம் தமிழ் சினிமாவும்.
தமிழ்ப்பட காட்சிகளின் விஷயத்தில் நமது சென்ஸார் போர்டையும் சொல்லி ஆக வேண்டும். கலைநயத்தோடு எடுக்கும் சில காட்சிகளை விரசம் என்று வெட்டிவிடும் அவர்கள், மழையில் கதாநாயகனும் நாயகியும் கட்டிப் புரளுவதை அப்படியே விட்டுவிடுகிறார்கள். அவர்கள் மாறாத வரையில் நாயகர்கள் காற்றை புணரும் நடனங்களை (நன்றி: கமலஹாசன்) தொடர வேண்டிவரும்.
//நீங்கள் காட்டிய உதாரணக் காட்சியும் மோசமானதுதான்.. அதனை எப்படி நீங்கள் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டீர்கள் என்பதில் எனக்கு மிகப் பெரும் ஆச்சரியம்..!//
ம்ம்..எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்தது, திரும்பவும் பார்த்தால் தெரியும்..நிஜமாக மோசமானதாக இருந்ததா என.. :)). என் நினைவில் அப்போது அதை நான் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு தான் பார்த்தேன் எனலாம், அதற்கு காரணம் ஆங்கிலப்படங்களை ஆங்கில படங்களாக பார்ப்பதால் மட்டுமே. எனக்கென்னவோ தனி தனியாக எதையும் க்ளோஸ்ப்பில் காட்டியதாக நினைவில்லை.
தமிழ் படங்களை அப்படி பார்க்கமுடியாது இல்லையா.. சில நமக்கு நம் கலாசாரத்திற்கு உடன் படவுதில்லை இல்லையா?
//அவர்கள் மாறாத வரையில் நாயகர்கள் காற்றை புணரும் நடனங்களை (நன்றி: கமலஹாசன்) தொடர வேண்டிவரும்.//
ராஜ், புரியல...
//விரசமில்லாமல், கதாநாயகியை உடலைக் காட்டி விற்பனையைக் கூட்ட நினைக்காத படங்களும் சமீபகாலங்களில் வந்து வெற்றியும் பெறுகின்றன.//
ம்ம்... எடுத்துக்கொண்டது அப்படி இல்லாதவற்றை மட்டுமே ராஜ்.. :))
கவிதா, ஒரு தடவை ஒரு பேட்டியிலே கமல் அப்படி சொல்லி இருந்தார். நாயகர்கள் இடுப்பை முன்னாடியும் பின்னாடியும் அசைச்சு ஆடும் கோமாளி ஆட்டத்தை :-). சினிமாவில் இருந்துகொண்டே இப்படி ஒரு விமர்சனத்தை வைக்க கமலால் தான் முடியும்.
இதற்காக சாருவும் கமலை பாராட்டி ஒரு கட்டுரை எழுதியதாக நினைவு.
வலிந்து திணிக்கப்பட்ட கட்டில் காட்சியால் படம் ஓடும் என்பது தவறான கருத்து என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது..
சமகால உதாரணம் சொல்லனும்னா, பசங்க படத்துக்கும் நாடோடிகள் படத்துக்கும் கிடைக்கும் ஆதரவு, முத்திரை படத்துக்கு கிடைக்கலையே.
பெரும்பாலான மக்களால் தவிர்க்கப்படுவதால்தானே இப்படி ஆகுது ? நாமும் முத்திரைகளை தவிர்ப்பதன் மூலமாக நமது முத்திரையை பதிப்போம்...
நெளியற மாதிரியான படங்களை நம் வீட்டுக்கே அனுப்பும் தொலைக்காட்சி சேனல்கள் இருக்கும்வரை இந்த தொந்தரவு போவாது.
அதனால் சுட்டி டிவிக்கும் டிஸ்கவரிக்கும் ஆதரவளித்தல் நலம்.
சிந்திக்க வேண்டிய நல்ல கருத்துகள். உங்கள் எழுத்து நடை தேர்ந்த எழுத்தாளரின் நடை போன்று நேர்த்தியாய் உள்ளது. சிறப்பான பதிவு.
Ponmalar
//சிந்திக்க வேண்டிய நல்ல கருத்துகள். உங்கள் எழுத்து நடை தேர்ந்த எழுத்தாளரின் நடை போன்று நேர்த்தியாய் உள்ளது. சிறப்பான பதிவு.//
நன்றி.. தேர்ந்த எழுத்தாளரா.. அப்படி எல்லாம் இல்லைங்க.. இன்னும் தேறனும்.. :))
பொன்மலர் உங்கபெயர் என் வகுப்பு தோழியை நினைவு படுத்துகிறது... என்னுடன் வகுப்பில் பொன்மலர் னு ஒரு தோழி படித்தாள்.. அவள் முகம் கூட நினைவு வந்துவிட்டது.. :)) இது உங்களின் பெயர் தானா?
நல்ல பெயர், பொன்வண்டு ன்னு ஒரு சோப்பு இருந்தது. .இப்ப இருக்கிறதான்னு தெரியல.. அதுவும் நினைவுக்கு வருது. :))
நன்றிங்க...
//நெளியற மாதிரியான படங்களை நம் வீட்டுக்கே அனுப்பும் தொலைக்காட்சி சேனல்கள் இருக்கும்வரை இந்த தொந்தரவு போவாது.//
வாங்க ரவி...ம்ம் உண்மை..தான்..
//அதனால் சுட்டி டிவிக்கும் டிஸ்கவரிக்கும் ஆதரவளித்தல் நலம்.//
:))) இன்னும் நிறைய இருக்கே...
//அவை தேவையில்லை, திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது.//
வியாபார திரைப்படம் எடுப்பவர்களுக்கு அவற்றை சந்தைப்படுத்த, இம்மாதிரியான காட்சிகள் அவசியம் எனப்படலாம். அவற்றை விரும்பாத நம் போன்றோரை விட, அவற்றிற்கென வரும் ரசிகர்களே அதிகம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அம்மாதிரியான காட்சிகள் திரையில்தான் திணிக்கப்பட்டதே தவிர, நம்மீது அல்ல. நமக்கும் options உண்டு, நாம் விரும்பாத காட்சிகள் இல்லை என்பதை உறதி செய்த பின்னர் திரையில் படம் பார்க்க செல்ல வேண்டும். கட்டாயம் பார்த்தாக வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்படவில்லையே.
அருமை கவிதா.. உண்மையான எண்ணங்களின் வெளிப்பாடு
i liked your post , we never learned anything to express dignifiedly, ellmayay vulgar a than express panna theriyum , ennatha solla ..
vivek
பீர் - நீங்கள் சொல்வது தவறு. தமிழ்நாட்டில் இந்த காட்சிகளை பார்க்காமல் தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் இம்மாதிரியான காட்சிகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேச எனக்கு போதிய அறிவோ / அனுபவமோ இல்லை.
நம்மாளுங்க எப்பவுமே இப்படித்தான்.. இங்கிலீஷ் காரன் காட்டினா அது ரசனை.. நம்ம ஆளு காட்டினா.. அது ஆபாசம்.. இது போன்ற ஹிப்போக்ரஸிகளை விட்டொழித்தாலே நல்லது நடக்கும்
which makes women seem beautiful, which they are once in a blue moon, and men seem wise and brave, which they never are at all\\
அப்பிடியா! ...
ஒரு காலத்தில் அசிங்கமாக தோன்றியது, இப்போது நாம் அதனை சிறிது சிறிதாக ஆதரிக்கத்தொடங்கி விட்டோம், அது காலத்தின் கட்டாயமோ? நல்ல பதிவு, ஆனால் அவிங்க திருந்துவாங்கிளா?
//திரையில்தான் திணிக்கப்பட்டதே தவிர, நம்மீது அல்ல. நமக்கும் options உண்டு, நாம் விரும்பாத காட்சிகள் இல்லை என்பதை உறதி செய்த பின்னர் திரையில் படம் பார்க்க செல்ல வேண்டும். கட்டாயம் பார்த்தாக வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்படவில்லையே.//
வாங்க பீர், திணிக்கப்படவில்லை தான் இப்படிப்பட்ட காட்சிகள் இல்லை என்பதை எப்படி உறுதி செய்து க்கொள்வது, எனக்கு பிடிக்கவில்லை என்பது மற்றவர்களுக்கு பிடித்து இருக்கலாம், அல்லது நெளியும்படியாக இல்லை என்று நினைக்கலாம், அதனால் மற்றவர்களின் ரிவியூ வைத்து எல்லாம் உறுதி செய்ய முடியும் என்று தோன்றவில்லை.
சாதாரணமாக, குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடியதாக இருப்பின் நலம். அதுவும் இன்றைய காலக்கட்டதில் வரவேற்பு அறைக்கு நாம் கேட்டாலும் கேட்கா விட்டாலும் வரத்தான் செய்கின்றன... இல்லையா..?!
பார்த்துவிட்டு குற்றம் சொல்வதாக நினைக்கவேண்டும், கொஞ்சம் நாகரீகமாக எடுக்கலாமே என்பது ஆதாங்கமே..
நன்றி திவ்யா செந்தமிழ் செல்வன்.. :) பெயர் நல்லா இருக்குங்க.. :)
@ விவேக். .நன்றி :)
@ மணிகண்டன் - விளைவுகள் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டீங்க.. நல்லது :)
@ உழவன் - நன்றிங்க.. :)
//நம்மாளுங்க எப்பவுமே இப்படித்தான்.. இங்கிலீஷ் காரன் காட்டினா அது ரசனை.. நம்ம ஆளு காட்டினா.. அது ஆபாசம்.. இது போன்ற ஹிப்போக்ரஸிகளை விட்டொழித்தாலே நல்லது நடக்கும்//
அவ்வ்வ்.. என்னைத்தான் விட்டொழிக்க சொல்றீங்களா?
ஆங்கில படங்களில் காட்டினால் அது அவனுடைய கலாச்சாரம் நம் படங்களில் காட்டினால்?? என்னங்க.. அவங்களும் நாமும் ஒன்றாங்க?!
@ஜம்ஸ் - ம்ம் அப்படித்தான் !! :))
@ஷஃ'பிக்ஸ் - நாம் முதல்ல திருந்தலாம் அப்புறம் அவங்க தானேவே திருந்திடுவாங்க.. பாஸ் !! :)
//@ஷஃ'பிக்ஸ் - நாம் முதல்ல திருந்தலாம் அப்புறம் அவங்க தானேவே திருந்திடுவாங்க.. பாஸ் !! :)//
நீங்க சொல்றது எனக்கு புரியவே இல்லை..ஹீ..ஹீ
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
//கொஞ்சம் நாகரீகமாக எடுக்கலாமே என்பது ஆதாங்கமே.. //
கவிதா, உங்களது பார்வையில் அநாகரீகமாக இருப்பது, மற்றவர்களுக்கு நாகரீகமாகவே படலாம். இங்கேயே பல நாகரிக எதிர் பார்வைகளை பார்க்க முடிகிறது.
//அதனால் மற்றவர்களின் ரிவியூ வைத்து எல்லாம் உறுதி செய்ய முடியும் என்று தோன்றவில்லை. //
கட்டாயம் இந்தத் திரைப்படம் பார்த்தாக வேண்டும் என்று நீங்களாகவே முடிவெடுத்துவிட்டால், (உங்கள் பார்வையில்) அநாகரீக காட்சிகள் இல்லை என்பதை உறுதி செய்வதும் உங்கள் மீதே பொறுப்பாகிறது.
சைவ / அசைவ உணவகங்கள் இருந்தாலும், விருப்ப உணவகத்திற்குச் செல்வது போலத்தான் இதுவும்.
//இன்றைய காலக்கட்டதில் வரவேற்பு அறைக்கு நாம் கேட்டாலும் கேட்கா விட்டாலும் வரத்தான் செய்கின்றன... இல்லையா..?! //
இதிலும் நமக்கு options இருக்கிறது... இல்லையா?
// பார்வைகளின் வரலாறு தெரியுமில்லையா? நிறைய எதிர்பதிவுகள் கேவலமாக என்னை திட்டி, நக்கல் அடித்து, மனம் மிகவும் வேதனைப்படும் படியாம வார்த்தைகள் உபயோகித்தும் பதிவு போட்டு இருக்கிறார்கள். இதில் பெண்களும் அடக்கம். // எதிர்பதிவர்களின் விம் விமரிசனம் சரியானதுதான்.உங்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், இது போன்ற பதிவுகள் தவிர்க்கலாம்.
நன்றி பீர்.. :)
//எதிர்பதிவர்களின் விம் விமரிசனம் சரியானதுதான்.உங்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், இது போன்ற பதிவுகள் தவிர்க்கலாம்.//
சந்திரா .. ஏதாவது தவறாக எழுதி இருக்கேனா? தவிர்க்க..? சுட்டிக்காட்டுங்க..சரி செய்துக்குறேன். தவிர்க்கவும் முயற்சி செய்கிறேன் ...நன்றிங்க :)
//சுட்டிக்காட்டுங்க..சரி செய்துக்குறேன். தவிர்க்கவும் முயற்சி செய்கிறேன் //
மிக்க நன்றி கவிதா மேடம்,
உங்கள் அடுத்த பதிவை படித்த பின் சொல்கிறேன்.
Post a Comment