மரம்
காடுகள்
மலைகள்
குகைகள்
தேடிப்போகிறான்
மனிதன் அவனை துறந்து...
ஏனோ
இது
பிடித்திருக்கிறது...
பளு
தாங்காமல்
உடைந்து போகுமோ ???????
கேள்விகள்
தொக்கி நிற்கும் வரை
தேடல்களும்
முடிவதில்லை.........
துறவுகளும்
நிகழ்வதில்லை.........
.
தேடல்கள் நிற்பதில்லை......
Posted by : கவிதா | Kavitha
on 16:20
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
11 - பார்வையிட்டவர்கள்:
நன்றாக உள்ளது. புரிந்துகொள்வது மட்டும் கடினம். வாழ்த்துக்கள் தொடருங்கள்.
நிற்பதில்லையா
அங்கே நிக்குதே
ஓஹ்! அது கரடியா
தேடல்களும்
முடிவதில்லை.........
துறவுகளும்
நிகழ்வதில்லை.........\\
அருமை
துறவுகள் நிகழ்ந்ததேயில்லை ...
@ பாலாஜி.. வாங்க.. புரியலையா? அப்படின்னா நான் நல்லா எழுதறேன் ன்னு நினைச்சிக்கிறேன். :)
@ ஜம்ஸ் - அவ்வ்வ்வ்... ஆமா..அது பாண்டா
//துறவுகள் நிகழ்ந்ததேயில்லை ...//
அட நிசமாவா? துறவுகள் இல்லையா? அப்ப எல்லாம் மாயையா?
மிகவும் வித்தியாசமான கவிதை. பளு தாங்காமல் உடைந்து போகாமலிருக்கும் வரை, எப்போது உடையுமோ எனும் கேள்வி எழுமெனில் அது அவநம்பிக்கையைக் குறிக்கும், ஆனால் உடையவும் வாய்ப்புண்டு என எண்ணிக்கொண்டு தத்தம் பணிகளைச் செய்யும்போது அது நிதர்சனத்தைச் சுட்டிக்காட்டும்.
எந்த ஒரு கேள்வியையும் நிதர்சனத்துடன் சிந்திக்கும் பொருட்டு தேடல்கள் அவசியமில்லை, துறவுகள் அவசியமில்லை, உறவுகளும் அவசியமில்லை.
//மிகவும் வித்தியாசமான கவிதை. //
நன்றி இராதாகிருஷ்ணன்.
//பளு தாங்காமல் உடைந்து போகாமலிருக்கும் வரை, எப்போது உடையுமோ எனும் கேள்வி எழுமெனில் அது அவநம்பிக்கையைக் குறிக்கும்,//
இப்படி யோசிக்க காரணம்.. நம்பிக்கையோடு முன்யோசினை எதுவுமின்றி ஏறி நின்ற பிறகு உடைந்து போனால், அதன் விளைவுகள் என்னவென்று அந்த நொடியில் யோசிக்க முடியாது, அதற்கான சந்தர்ப்பம் அப்போது நமக்கு கிடைக்கவும் கிடைக்காது.
எந்த ஒரு வேலையை செய்ய போகும் முன் சாதக பாதங்களை முன்கூட்டியே யோசித்துவிட்டால், நம் புத்தி அதை எதிர் கொள்ள தயாராகிவிடும்.
//ஆனால் உடையவும் வாய்ப்புண்டு என எண்ணிக்கொண்டு தத்தம் பணிகளைச் செய்யும்போது அது நிதர்சனத்தைச் சுட்டிக்காட்டும்.//
அப்படியே தொடர இயலாது, அதற்கான முன்னேற்பாட்டோடு தொடர நம்மை நாம் தயார் செய்து கொள்ளலாம். :)
//எந்த ஒரு கேள்வியையும் நிதர்சனத்துடன் சிந்திக்கும் பொருட்டு தேடல்கள் அவசியமில்லை, துறவுகள் அவசியமில்லை, உறவுகளும் அவசியமில்லை.//
ம்ம்ம்ம்... இது எனக்கு இப்ப கொஞ்சம் புரியல.. புரிஞ்சிக்க முயற்சி செய்யறேன்.. புரியலைன்னா கேட்கிறேன்.. :)
அட நிசமாவா? துறவுகள் இல்லையா? அப்ப எல்லாம் மாயையா?\\
ஓமம்!
\\கேள்விகள்
தொக்கி நிற்கும் வரை
தேடல்களும்
முடிவதில்லை.........
துறவுகளும்
நிகழ்வதில்லை.........\\\
உண்மை ;)
எதையும் முன்யோசனை செய்து கொண்டு செயல்புரிவதும், வருமுன் காத்துக்கொள்ள வேண்டும் என இருப்பதும் மிகவும் பயன் அளிக்கும், ஆனால் இன்றைய கால வேக சூழ்நிலைகளில் பல விசயங்கள் முன்யோசனைக்கு வழி ஏதும் வைக்காமல் நடக்க வாய்ப்பளிக்கின்றன. அப்போது சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு நமது எண்ணங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போலவே நேர்மறை விசயங்களையும், எதிர்மறை விசயங்களையும் ஒன்றாகவேப் பாவிக்க வேண்டும் என்றே சொல்கிறார்கள். நம்பிக்கை என்பது இருக்கலாம் ஆனால் அளவு கடந்த நம்பிக்கை ஆபத்து எனவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
எத்தனை பேர் முன் யோசனையுடன் நடந்து கொள்கிறோம் என நமக்கு நாமேக் கேட்டுக்கொண்டால் 'அட முன்னமே தெரிஞ்சிருந்தா அப்படி செஞ்சிருப்பேனே' என்றுதான் பல நேரங்களில் நாம் சொல்லியிருப்போம். ஆனால் அதுபோல நடந்து வேறு விதமான முடிவு வருமெனில் எப்படி சொல்வோம்?!
ஒன்றைச் செய்தால் இது மட்டுமே நடக்கும் என பல விசயங்களில் முடிவு செய்ய இயலாது அதனால் எந்த ஒரு விசயம் நடந்தாலும், நடந்த உடனே உடனடியாக சிந்தனை செய்து அந்த நேரத்தில் பதட்டம் கொள்ளாமல் சிந்தனை செய்யும் மூளையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும், அதனால் தான் அனுபவ அறிவு மிகவும் அவசியம் என்று சொன்னார்கள். உங்கள் கவிதை அதை மிகவும் அழகாக வலியுறுத்துகிறது.
நான் முதல் பின்னூட்டத்தில் எழுதிய கடைசி வரிகளுக்கு அர்த்தம் புரிந்திருக்கும் என்றே கருதுகிறேன்.
மிக்க நன்றி கவிதா.
டு இன்டு,டு இன்டு,டு இன்டு, டுட்டுடு.
இப்படி எழுதறதை நீ விட்டுடு.
:)))))))))))
@ இராதாகிருஷ்ணன்.. நன்றி - மிக தெளிவான விளக்கம்.. நான் ரொம்ப குட்டியாக சொல்லிட்டேனோ கவிதையில.. :)
@ choco - ம்ம் நன்றி..
@ துபாய் ராஜா - த்ரீ இண்டு த்ரீ இண்டு திட்டிட்டு... - விட மட்டும் சொல்லாதே...!! :)
Post a Comment