Intuition - உள்ளுணர்வு - நடக்க போவதை அல்லது நடந்த விஷயத்தை பற்றிய ஊகம், இப்படி, இங்கே இது நடந்து இருக்கலாம்/நடக்கலாம் என்று நம் மனதும் அறிவும் ஒன்று சேர்ந்து நமக்கு அறிவுருத்துவது. எளிதான உதாரணம் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஜி "ராகவன்'ஸ் இன்ஸ்டின்ங்ட் " சொல்கிறது என்பார். அது படி நடந்துவிட்டால் நம்முடைய இன்ட்டியூஷன் சரி என்று நினைக்கலாம். அல்லது தவறாக நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது, எனக்கு இரண்டுமே நடந்து இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் சரியாக நடந்து இருப்பது எனக்கு என்னுடைய இன்ட்டியூஷன் மேல் ஒரு நம்பிக்கையும் உண்டு.
நேற்று இரவு என் கணவருடன் விஜயநகர் வரை வண்டியில் சென்ற போது மிக மோசமான அவரின் டிரைவிங் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவைத்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டாலும், இன்றைக்கு காலை ரவுண்டு குட்டியுடன் அவர் கிளம்பி போன சிறிது நேரத்திற்கு எல்லாம் என் மனதினுள் இருவருக்கும் விபத்து நடக்க போகிறது,அதற்கு இவரின் மோசமான டிரைவிங் ஒரு காரணமாக இருக்கும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் ஒரு பக்கம், யாரை பார்ப்பது, எப்படி இவர்களை கவனிப்பது போன்ற எண்ணங்கள் எழ அதற்கான விடைகளை தேடிக்கொண்டு இருந்தேன். எந்த நிலையில் வீடு வருவார்களோ..என்ற ஒரு வித பதட்டமும் பயமும் இருந்தது.
அவர்கள் சென்று 25 நிமிடங்களில் காலிங் பெல்.....சத்தம் கேட்டவுடன், நான் நினைத்தது நடந்துவிட்டதாகவே நினைத்து கதவை திறந்தேன். ஆமாம்...ரவுண்டுகுட்டி தான் ... வேளச்சேரி தாம்பரம் ரோடில், மடிப்பாக்கம் கூட்டு ரோடு தாண்டி சென்று கொண்டிருக்கும் போது ஒரு இரண்டு சக்கர வாகனம் இடையூறு செய்ய இருவரும் விழுந்து விபத்து ஏற்பட்டும் விட்டது. நல்ல அடி ரோடில் தேய்த்துக்கொண்டு விழுந்து இருக்கிறார்கள். சட்டை பேன்ட் இருவருக்குமே கிழிந்து, முட்டி கை, கால்களில் ரத்தக்காயத்தோடு தப்பித்து வந்து சேர்ந்து இருக்கிறார்கள். (மருத்தவமனைக்கு சென்று வந்தாகிவிட்டது, இருவரும் நலமே)
சில மாதங்களுக்கு முன் வெளி ஊரில் உள்ள நண்பர் ஒருவருக்காக பல மாதங்களாக வைத்திருந்த பரிசு பொருளை ஒரு நாள் தீடிரென்று எடுத்து கடையில் பேக் செய்ய கொடுத்தேன். அன்று காலையிலிருந்து எனக்கு என்னவோ அவர் சென்னையில் தான் இருப்பதாக என் மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் ஒருவேளை வந்து நின்றால், அப்போது அவசரமாக போய் அதை செய்து க்கொண்டு இருக்க முடியாது என்று நினைத்து கடையில் கொடுத்தேன். அன்று மாலை ஒரு 7 மணிக்கு மேல் தொலைபேசி அழைப்பு வரும் போதே அது அவர் தான் என்று எடுத்தேன், அவரே தான், சென்னையில் இருப்பதாக தகவல் சொன்னார்.
இப்படி பல சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனித்து வரும் போது இப்படி ப்பட்ட இன்ட்டியூஷன் களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து, யோசிப்பது வழக்கமாகிவிட்டது. இது சிலமுறை நெகட்டிவாகவும் நடந்து இருக்கிறது. அதாவது எனக்கு ஒன்று தோன்ற ..நடந்தது வேறு விதமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதற்காக செய்ததை சரி செய்ய முயற்சி செய்ததும் உண்டு.
இதை pre defined assumption, perception என்று கூட சொல்லலாமா? அப்படித்தான் என்னை சுற்றி உள்ளவர்கள் சொல்லுவார்கள். முன் முடிவுகளோடு ஒரு காரியத்தை நெருங்குவது. அது தவறு என்று எனக்கு நெருங்கியவர்களால் பலமுறை அறிவுறுத்தப்பட்டு இருக்கிறேன். பலருக்கு பிடிப்பதில்லை அல்லது புரிவதில்லை. என்னை நன்கு புரிந்தவர்கள் நான் இப்படி செய்வதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.. இது லூசு இப்படித்தான் என்று ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
முன் முடிவுகளோடு நெருங்குகிறேன் என்பதை விடவும், நினைப்பவை நடப்பதால் ஏற்படும் ஒரு வித கலக்கம், நடந்த பிறகு யோசிக்கும் அளவு எனக்கு பொறுமையின்மை, என்னுடைய உடன் பிறந்த வேகம் எல்லாம் ஒன்று சேர்ந்து முன் யோசனை, திட்டமிடல் செய்ய ஆரம்பித்து விடுகிறது. அதை கட்டுப்படுத்தி அமைதியாக்க நான் கற்ற பாடம் தியானம். ஆனால் தொடர்ந்து இதை செய்ய முடிவதில்லை.
ம்ஹூம் அதனால் இப்படி இன்ட்டியூஷன் இம்சைகள் தொடரத்தான் செய்கின்றன...
அணில் குட்டி அனிதா :... ம்ம்ம்....... இந்த அம்மணிக்கிட்ட வேல செய்ய முடியாது..விட்டுட்டு போனத்தான் சரிவரும்..!! அட .சொல்ல மறந்துட்டேனே... வூட்டுல ரவுண்டும், ரவுண்டோட அப்பா வும் இன்னைக்கு செம சில்லறை...பொறுக்கிட்டு வந்தாங்க.. பாக்கனுமே..!! ஹி ஹி... .. :)) காலையில ரெம்பத்தான் டிப்பு டாப் ஆ போனாங்க... வரும் போது.. ஹி ஹி..... பேன்டு சட்டை எல்லாம் கிழிஞ்சி.... அவ்வ்வ்வ்வ் !! அதே ஏன் கேக்கறீங்க...பாத்து ரசிக்கனும்... இப்படி படிச்சிட்டு ரசிக்கக்கூடாது .. :))), இன்னுன்னு சொல்லிக்கிறேன்.. இனி ரவுண்டு அப்பாவிற்கு ரவுண்டு தான் ட்ரைவர்... நோ செல்ஃப் டிரைவிங் ன்ன உத்தரவு போட்டாச்சூ....... !! :))))))
பீட்டர் தாத்ஸ் : - Intuition comes very close to clairvoyance; it appears to be the extrasensory perception of reality
.
இன்ட்டியூஷன் -(Intuition) இம்சைகள் !
Posted by : கவிதா | Kavitha
on 14:24
Subscribe to:
Post Comments (Atom)
19 - பார்வையிட்டவர்கள்:
இந்த அப்பாக்களே இப்படி தான் போல. எங்க அப்ஸ் இப்படி தான் ஒரு டுபாக்கூர் ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு புல்லட்டுக்கே ஃபிலிம் காட்டுவாங்க. இப்போ காலில் அடிப்பட்டு ஸ்கூட்டரே ஓட்ட முடியாத நிலைமை. ஆனால், பார்க்கிறப்போ பாவமா இருக்கு.
இந்த உள்ளுணர்வு பல நேரங்கள்ல எனக்கும் ஏற்படுறது உண்டு.
சொல்ல மறந்துட்டேனே, அணில்குட்டி ரவுஸு தாங்க முடியல. வீட்டுல ரெண்டு பேரு அடிப்பட்டு வந்து நின்னா இப்படியா குத்தாட்டம் போடுறது.
வீட்டுக்காரரை வண்டி ஓட்டும்போது மிதமான வேகத்தில் கவனமாக ஓட்டச்சொல்லுங்கள்.நம்ம ஒழுங்கா போனாலும் எதிர்த்தாப்புல வர்றவன் எப்படி வருவான்னு சொல்லமுடியாது.
ரொம்ப தேவைப்பட்டால் மட்டும் வண்டியை உபயோகபடுத்தவும். குழந்தையை வண்டியில் அழைத்து செல்லுவதை கூடுமானவரை தடுக்கவும்.
அணில்குட்டியை கொஞ்சம் அடக்கி வைக்கவும்.வீட்டில் விபத்து நடந்த நேரத்தில் இப்படியெல்லாம் குதூகலிக்க கூடாது.
இந்தமாதிரி உள்ளுணர்வு தோன்றும் போது உதாசினப்படுத்தாதீர்கள்.
நண்பர் வருவார் என உள்ளுணர்வு கூறியபோது பரிசுபொருள் தயார் செய்த நீங்கள் வண்டியில் சென்றதையும் தடுத்திருக்கவேண்டும்.
எனக்கும் பலமுறை வண்டியிலிருந்து
விழுந்த அனுபவம் இருக்கிறது.
ராஸா - கீறாரா
நானும் ஏதோ இன்ஸ்ட்டியூஷன் என்று நினைத்து போட்டனன் ...
நான் எழுதிய கதையில் கூட கதாநாயகனுக்கு இப்படி ஒரு உள்ளுணர்வு வருவது போல் எழுதியிருந்தேன் ...
Vootla rendu peru adi pattu vandha avangala gavanikkama appavum ukkandhu kelvi kekkara ungala ennanu soldradhu??? Nijamavae avanga rendu perum romba paavam :)
@ ராஜ் -ம்ம்.. மும்பை பழகிவிட்ட நிலையில் தலைவருக்கு சென்னை டிராஃபிக் நிலமை மறந்துப்போச்சி... !! :) அதான் இப்ப பிரச்சனை..
@ துபாய் ராஜா :- நீங்க வேற நல்லாத்தான் வண்டி ஓட்டுவாரு.. என்னவோ.. யாருமே ரோட்டில் வராதமாதிரி ஓட்டறாரு. .அதான்.. இப்படி.. :(
@ ஜம்ஸ் உங்க கதையை படிக்கிறேன்.. :)
//Vootla rendu peru adi pattu vandha avangala gavanikkama appavum ukkandhu kelvi kekkara ungala ennanu soldradhu??? //
கேள்வி கேட்டேனா.? என்ன கேள்வி கேட்டேன்...?? இருங்க இன்னொரு தரம் பதிவை படிச்சிட்டு வரேன்... வெயிட்டு...!! ...........
ஓய் எங்க கேள்வி கேட்டு இருக்கேன்.. கேட்கவே இல்லையே.. :)))ஆனா செமத்தியா திட்டினேன்...
அவங்களை கவனிக்காமல் இருப்பேனா.. அவ்வளவு எல்லாம் கெட்ட புள்ள இல்லங்க நானு..
//Nijamavae avanga rendu perum romba paavam :)//
ம்ம்..இது என்னவோ உண்மை.. என்னை சுத்தி இருக்கவங்க எல்லாருமே பாவங்க. .என்னைத்தவிர.. :(((
அணிலை பத்தி சொல்லாமல் விட்டுட்டேனே..!!
அணிலு என்னைக்கு ஆட்டம் போடாமல் இருந்து இருக்கு.... கஷ்டம் வரும் போது சிரிக்கனும் னு சொல்லி இருக்க்காங்களாம்..!! :)))) அதான் அது அடிக்கடி ஆட்டம்..போடும்..!!
அழகிய தமிழ் மகள் நீரோ? ஹாஹா..
\\ G3 said...
Vootla rendu peru adi pattu vandha avangala gavanikkama appavum ukkandhu kelvi kekkara ungala ennanu soldradhu??? Nijamavae avanga rendu perum romba paavam :)
\\
ரீப்பிட்டுக்கிறேன்....
@யக்கா..கிர்fர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
நீங்கள் சிக்மண்ட் ஃபிராய்டு வைப் படித்தால் இதுகுறித்து மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்.... :)
//அழகிய தமிழ் மகள் நீரோ? ஹாஹா..//
அம்மணி தமிழ்மாங்கனி ஏன் இந்த கொலவெறி.... அவ்வ்வ்வ்வ்..!! முடியலப்ப்பா.... எப்பவாச்சும் வரீங்க வந்தாலும் இப்படியா????????? :)))))))))))
chocho... நானும் காயூ க்கு போட்ட அதே பதிலை ரீப்பீட்டுக்கிறேன்..! :)
ஆமா எதுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்..?!!
@ ஊர்சுற்றி.... ம்ம் சரி படிக்கிறேன்.. :)
இருவரும் நலமாக வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொல்லும் இந்த உள்ளுணர்வு மிகவும் அசாத்தியமானது. மூளையானது பல விசயங்களை ஒரே விநாடியில் வேக வேகமாக பரீசிலனை செய்யும், அதில் ஒரு சில விசயங்களில் மனம் உட்காரும்போது அந்த எண்ணம் திரும்பத் திரும்ப வரும்.
நீங்கள் சொன்னது போல பலரும் உள்ளுணர்வினைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். இது குறித்து நம்பிக்கைக் கொள்ளும்போது 'அச்சமும், சந்தோசமும்' சேர்ந்தே வரும், இது மனதளவில் பாதிப்பை ஒருவருக்கு ஏற்படுத்தக் கூடும். மேலும் இதனால் நடக்காத ஒன்றையும் நடக்கவிருப்பதாக மனம் கணக்குப் போட்டுக்கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளையும், மன அழுத்தத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும். நேர்மறையான விசயங்களைத் தவிர, எதிர்மறையான விசயங்களுக்கே மனம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த உள்ளுணர்வினால் வரும் பாதிப்பு சற்று அதிகமே.
இதே உள்ளுணர்வு பற்றி நுனிப்புல் பாகம் 1 நாவலில் எழுதியிருக்கிறேன். ''சில விசயங்கள் பேசும்போது இப்படித்தான் இருக்கும் என நமது மனது தானாகவே ஒரு எண்ணம் கொண்டு வந்துவிடும். அது நடந்துவிட்டால் நாம் அப்பவே நினைச்சம் பாரு என சொல்லலாம், இல்லையெனில் இது எப்படி அப்படியெல்லாம் நடக்கும் என சொல்லிகொள்ளலாம். ஒன்று இது இல்லையெனில் அது.''
இப்படித்தான் 'அருள்வாக்கு' எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சிலருடைய எண்ணமும், சொல்லும் நீங்கள் சொல்வது போல அப்படியே நடந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. உள்ளுணர்வினை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்வில் முன்னேறலாம்.
மிக்க நன்றி கவிதா.
Intuition is naturual, but நினைக்கிரத நல்லதா நினைப்போமே? ஆனால் இதையே practise பன்னாதீங்க please.
//இப்படித்தான் 'அருள்வாக்கு' எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.//
ஹி ஹி.. அப்பன்னா.. நானும் ஆரம்பிக்கலாம்னு சொல்லுங்க.. :)
// ஆனால் சிலருடைய எண்ணமும், சொல்லும் நீங்கள் சொல்வது போல அப்படியே நடந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. உள்ளுணர்வினை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்வில் முன்னேறலாம்.//
முயற்சி செய்யலாம்.. அதன் படி முழுமையாக நடந்துவிட முடியுமா என்பதும் கேள்வி குறி தான்..
நன்றி இராதா கிருஷ்ணன்.. :)
ஷஃபிக்ஸ் - ஏன் இப்படி.. பெயரை பிக்ஸ் செய்துட்டீங்க.. ?!! யாரும் பிச்சிடக்கூடாதுன்னா?
//ntuition is naturual, but நினைக்கிரத நல்லதா நினைப்போமே? ஆனால் இதையே practise பன்னாதீங்க please.//
நானாக எதையும் இப்படித்தான் ன்னு யோசிக்கறது இல்லைங்க.. அதுவே தோன்றும்.. தோன்றுவதை அப்படியே விட்டுவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி என்னவென்று நோண்டுவது மட்டுமே என் வேலை.. :)
இப்படி செய்யலாம்.. அப்படி நோண்டும் போது நெகடிவ்வாக தெரிந்தால் விட்டுவிடலாம் மேற்கொண்டு யோசிக்காமல். .சரியா... டீல்!! :)
now i'm able to understand your previous post .
(மனதின் ஆவேசங்கள்...மெளனப்புலம்பல்களாக…-2)
vivek
Post a Comment