இந்த பதிவை தொடங்கும் முன் "பதிவர்களின் இரு முகங்கள்" என்று தான் தலைப்பு இட்டு இருந்தேன்.. ஆனால் முன்னரே இப்படி வைத்த தலைப்புகளினால், உள் எழுதப்பட்டிருக்கும் கருத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் தலைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்வினை பதிவுகள் வந்துவிட்டன. அதனால் தலைப்பை மாற்றி/திருத்தி பொதுவாக மனிதனின் மறுபக்கம் என்று வைத்து இருக்கிறேன்..
மனோபாலா' என்று ஒரு இயக்குனர், இப்போது காமெடி கதாபாத்திரங்களில் நிறைய நடிக்கிறார். அவருடைய குடும்பத்தினர் அவரை பற்றி சொல்லும் போது "வீட்டில் மிகவும் கெடுபிடியான ஆள், எளிதில் பேசவைக்க முடியாது சிரிக்க வைக்கமுடியாது, எப்போதும் சீரியஸாக இருப்பார்." என்றனர். மதுபாலா வீட்டில் இப்படி இருப்பார் என்பது யூகிக்கமுடியாதது உண்மையல்லவா?. அது அவரின் மற்றொரு முகம்..
என்னுடைய 8-10 வகுப்பு வரை தமிழ் பாடம் எடுத்த ஆசிரியை மிகவும் கடுமையாக எங்களை நடத்துவார். அவரிடம் அடிவாங்கி நொந்து போனவர்கள் ஏராளம். அடிவாங்க பயந்தே பலர் அவர் வரும் வகுப்பு நாட்களில் விடுப்பு எடுப்பார்கள். அவருக்கு அப்போது ஒரு 40-45 வயது இருக்கும் ஆனால் குழந்தை இல்லை. இந்த மாணவிகள் அவருக்கு இருந்த இந்த குறையை சொல்லி திட்டுவார்கள். இப்படி நம்மை எல்லாம் கொடுமை படுத்துவதால் தான் கடவுள் அவருக்கு குழந்தை கொடுக்கவில்லை என்பார்கள். நான் மட்டுமே "யேய் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் டீச்சர் ரொம்ப நல்லவங்க.. அவங்க வீட்டுக்கு போய் பாருங்க.. அவங்க எவ்வளவு நல்லா அன்பா பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாது.. அவங்களை சரியா புரிந்து க்கொள்ளாமல் இப்படி பேசாதீர்கள்" என்பேன். ஆமாண்டீ நீ எல்லா டீச்சருக்கும் செல்லப்பிள்ள நீ அப்படித்தான் சொல்லுவ.. நீ அடி வாங்கிப்பாரு அப்ப த்தெரியும் என்பார்கள். நாம ஒழங்கா இருந்தா ஏன் அடிக்கிடைக்கும்? அதை யாரும் யோசித்து பேசவதில்லை. கண்டிப்பாக தமிழ் ஆசிரியை தேவையில்லாமல் யாரையும் அடிப்பதில்லை. எங்களின் வீட்டுக்கு அருகில் தான் அவர்கள் வீடு, பள்ளி விட்டு செல்லும் போது அவருடன் செல்லுவேன், வழியில் பேசவே மாட்டார், வேகமான நடை, நானும் பின்னால் ஓடுவேன். ஒரு முறை எதற்கோ வீட்டுக்கு அழைத்து இருந்தார், சென்று தயக்கத்தோடு வெளியில் நின்றிருந்தேன், அட.. ஏன் புள்ள வெளியில நிக்கற வா வா... என்றவர், நான் உள்ளே சென்றதும் என்னை அனைத்து உச்சி முகர்ந்தார். என்னால் நம்பவே முடியவில்லை.. அதுவும் அவர் பள்ளியில் சிரித்து பார்த்ததே இல்லை ஆனால் திறந்த வாயை மூடாமல் சிரித்தபடியே இருந்தார். இப்படியும் இரண்டு இடத்தில் வேறு வேறாக ஒரு மனிதனால் இருக்கமுடியுமா என்று யோசிக்க வைத்த முதல் ஆசிரியை அவர்கள்தான்.
அந்த வயதிலேயே ஆரம்பித்துவிட்டது மனிதர்களை பற்றிய என்னுடைய அலசல். யாரையும் இவர் இப்படித்தான் என்று எதைவைத்தும் முடிவுக்கட்ட கூடாது. அவரவருக்கு அப்படி இருக்க ஒரு சொந்த காரணம் இருக்கிறது.. இருக்கிறார்கள்.
பதிவர்கள் பக்கம் வருகிறேன், அதிகம் பார்ப்பது ஒருவர் எழுத்தை க்கொண்டு அவரை கணிப்பது. இது நான் பார்த்தவரையில் எல்லோரும் செய்கிறார்கள். என்னை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம், என் எழுத்தை வைத்து நான் கருப்பாக குண்டாக குள்ளமாக இருப்பேன். .என்று நினைத்து நான் அப்படி இல்லாமல் இருப்பதை பார்த்து என்னை கேட்டவர்கள் உண்டு. எப்படி என் தோற்றத்தை என் எழுத்தை கொண்டு நிர்ண்யிக்கிறார்கள்? ஒருவர் மட்டும் ஏன் நீங்கள் அப்படி யாரையும் யூகிக்க மாட்டீர்களா? என்றார். சத்தியமாக இல்லை. ஏன் அவரின் குணத்தை க்கூட யூகிப்பதில்லை, பதிவரை தனிப்பட்ட முறையில் தெரிந்தால் ஒழிய அவரை பற்றிய சொந்த அலசல் கண்டிப்பாக நான் செய்வதில்லை.
எழுதுவதை வைத்து இவர் இப்படித்தான் என்று ஊகிப்பது எப்படி சரியாகும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பதிவர் போலி. அவரை நமக்கு தெரிந்த அளவு அவரின் குடும்பத்தினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் ஒருவர் இருக்கிறார், அவர் வீட்டில் ஒரு முகம், வெளியில் வந்தால் நண்பர்களிடம் ஒரு முகம், தோழிகளிடம் ஒரு முகம், காதலியிடம் ஒரு முகம், பெண் தோழிகளிடம் ஒரு முகம், இதை தவிர்த்து இரவில் ரகசியமாக பேசும் பெண்களிடம் தனி முகம், இவை எல்லாவற்றையும் விட சூப்பர் அவர் எழுத்தின் அசத்தலான பொதுநல முகம். அந்த சுயநலவாதியின் ஒவ்வொரு எழுத்திலும் பொது நலம் கும்மி அடிக்கும், ஆனால் உண்மையில்...????????? கேள்விகுறிகள் மட்டுமே பதில். இந்த அத்தனை முகங்களும் தெரிந்த பிறகு அந்த சுயநலவாதி'யின் எழுத்தை கூட்டி பெருக்கி குப்பைக்குள் போட வேண்டியதாக இருக்கிறது. ஆக, எழுதுவதை வைத்து பெண்ணியவாதி, ஆணாதிக்கவாதி, இந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர், பார்ப்பனர்'களுக்கு எதிரானவர் அல்லது ஜால்ரா அடிப்பவர் இப்படி போய் கொண்டே இருக்கும்.
இப்படி எழுதுவது ஒன்றாகவும், நடந்து கொள்வது ஒன்றாகவும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், மாறாக எழுதுவது இல்லாவிட்டாலும் நன்றாக நடந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். இல்லை இரண்டும் இருக்கலாம். சில பதிவர்களை நேரில் பார்ப்பதற்கு முன் அவரை பற்றிய ஒரு நல்ல மதிப்பு இருக்கும், பதிவரை பார்த்த பிறகு அவர் பேச்சு நடத்தை இவற்றை பார்த்தபின் அவரை பற்றிய நம் மதிப்பு பூச்சியமாக மாறக்கூடும். மாறாக இன்னும் அதிகமாகவும் கூடும்.
ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை. அவர்களின் உள்ளிருப்பது தான் எழுத்தாக வருகிறது என்றால் நான் மேல சொன்ன ஒரு சுயநல பதிவரை எந்த விதத்தில் சேர்த்துக்கொள்வது. தயவு செய்து எழுத்தைக்கொண்டு ஒருவரின் குணத்தையும், செயலையும், உணர்வையும், அவரின் தோற்றத்தையும் முடிவு செய்யாமல் இருப்போமே...
அணில்குட்டி அனிதா :- ஆமா கவி இப்படி எல்லாம் சொன்னத வச்சி அவங்க ரொம்ப அழகா இருப்பாங்கன்னு மட்டும் நீங்க நெனச்சிடாதீங்க...
பீட்டர் தாத்ஸ் :- “The being without an opinion is so painful to human nature that most people will leap to a hasty opinion rather than undergo it.”
மனிதனின் மறுபக்கம்..
Posted by : கவிதா | Kavitha
on 12:51
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
51 - பார்வையிட்டவர்கள்:
எல்லோருக்கும் இருக்கும்தானே ...
\\பதிவர்கள் பக்கம் வருகிறேன், அதிகம் பார்ப்பது ஒருவர் எழுத்தை க்கொண்டு அவரை கணிப்பது. இது நான் பார்த்தவரையில் எல்லோரும் செய்கிறார்கள்\\
சரியா சொன்னீங்க
\\அந்த வயதிலேயே ஆரம்பித்துவிட்டது மனிதர்களை பற்றிய என்னுடைய அலசல். யாரையும் இவர் இப்படித்தான் என்று எதைவைத்தும் முடிவுக்கட்ட கூடாது. அவரவருக்கு அப்படி இருக்க ஒரு சொந்த காரணம் இருக்கிறது.. இருக்கிறார்கள்.\\
மிகச்சரி
கடைசி வரி எங்கேயோ படித்த அல்லது கேட்ட மாதிரி இருக்கு
\\ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை\\
இது நிறைய நடக்குது பதிவுலகுத்துல ...
\\அணில்குட்டி அனிதா :- ஆமா கவி இப்படி எல்லாம் சொன்னத வச்சி அவங்க ரொம்ப அழகா இருப்பாங்கன்னு மட்டும் நீங்க நெனச்சிடாதீங்க... \\
இங்க உள்ள மேட்டருக்கும் இதுக்கும் இன்னா சம்பந்தம் அணிலு ...
முகம் தெரியாதவர்கள் எப்படி இருந்தால் என்னா
ஏற்கனவே ‘அழகு’ பற்றி பதிவ ‘அக்கா’வே போட்டிருக்காங்க அணிலு
அருமையான பதிவு...
கவி.. கலக்கிட்ட போ....
//எழுதுவதை வைத்து இவர் இப்படித்தான் என்று ஊகிப்பது எப்படி சரியாகும்.//
அதானே?
//எழுதுவதை வைத்து பெண்ணியவாதி, ஆணாதிக்கவாதி, இந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர், பார்ப்பனர்'களுக்கு எதிரானவர் அல்லது ஜால்ரா அடிப்பவர் இப்படி போய் கொண்டே இருக்கும்.//
இந்த வரிகள் இல்லையென்றால் இந்த பதிவு முழுமையடைந்திருக்காது என்பது என்னுடைய கருத்து.ஆணித்தரமான கருத்துகள்.
பதிவுலகிற்கு புதியவன் என்பதால் இது போன்ற அறிவுரைகளும் எச்சரிக்கைகளும்
எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஊகிக்க முடிகிறது.
ஆரம்பத்தில் இது போன்று,எழுத்துக்களை வைத்து தீர்ப்பு எழுதும் ஜட்ஜ்களால் நானும் பாதிக்கப்பட்டதென்னவோ உண்மை தான்.
அவர் மதுபாலா இல்லை மனோபாலா என்று நினைக்கிறேன்.
//இப்படியும் இரண்டு இடத்தில் வேறு வேறாக ஒரு மனிதனால் இருக்கமுடியுமா என்று யோசிக்க வைத்த முதல் ஆசிரியை அவர்கள்தான்.//
பொதுவாக ஆசிரியர்கள் இப்படிதான் இருப்பார்கள்! கிளாசில் ஒரு மாதிரி(கண்டிப்புடன்!!), வெளியில் ஒரு மாதிரி! டூர் எல்லாம் செல்லும்போது இந்த மாறுதல் நன்றாகவேத் தெரியும்! எங்க டீச்சரால் இப்படி இருக்க முடியுமா என்று நினைக்க வைப்பதுபோல்!
நான் அப்படி இல்லா அப்பா
:)))))))))))))))))))))))))))))))))))))))))
//கடைசி வரி எங்கேயோ படித்த அல்லது கேட்ட மாதிரி இருக்கு//
ஜமால் மண்டபத்தில் யாரும் சொல்லிதரவில்லை நானே எழுதினேன்.. :(
//அருமையான பதிவு...
கவி.. கலக்கிட்ட போ....//
என்னத்த?!
அலசி காயப்போடறீங்களாக்கும்.. :)
@ அ.மு.செய்யது
நன்றி !! என்ன செய்யறது சொல்லறத சொல்றோம். ஆனாலும் நம்மை இப்படித்தான் ன்னு முத்திரை குத்தீஈஈ உயிரை வாங்கறாங்களே.. !! :(
------------------
@ மண் குதிரை
ஆமாங்க..அது மனோபாலா.. மாற்றிவிட்டேன், நன்றி
-----------------
@ முல்லை
//எங்க டீச்சரால் இப்படி இருக்க முடியுமா என்று நினைக்க வைப்பதுபோல்!//
நீங்களும் நினைத்து இருக்கீங்களா ? :) :)
------------------
@திகழ்மிளிர்..
எப்படிப்பா?????? :)
//என் எழுத்தை வைத்து நான் கருப்பாக குண்டாக குள்ளமாக இருப்பேன். .என்று நினைத்து நான் அப்படி இல்லாமல் இருப்பதை பார்த்து என்னை கேட்டவர்கள் உண்டு.//
உங்கள் உயரம், தோல் நிறம் பற்றியெல்லாம் நான் ஊகித்திருக்கவில்லை. ஆனால் உடல் பருமன் குறித்து ஊகித்திருக்கிறேன் நானும்! ஏன்னா, ஜிம் போவது பற்றிய அல்லது அதுகுறித்த ஒரு விழிப்புணர்வு பதிவை உங்கள் வலையில் படித்த நினைவு..அதில் உங்கள் உடல் பருமன் பற்றியும் எழுதியிருந்ததாக நினைக்கிறேன்! அதுவும் வேறு அணிலும் எங்கள் கற்பனாசக்திக்குத் தீனி போடுகிறதா..அதான்! பொதுவாக ஏதாவது படிக்கும்போது அதைக் குறித்து கற்பனை செய்வது.. அல்லது..we tend to associate or relate things with what we read! அப்படிக் கற்பனை செய்வது தவறு என்று சொல்லிவிட முடியாது! மேலும், படிக்கும்போது அப்படி கற்பனை செய்யாமல் படிக்க வேண்டுமென்பது என்னால் இயலாத காரியம்..ஒரு கதையேயானாலும் கூட!
//அலசி காயப்போடறீங்களாக்கும்.. :)//
தேவையே இல்லாமல் நம்மை அலசறாங்களேப்பா அதான். .நாமும் அலசுவோம்னு..! :)
//கற்பனை செய்வது தவறு என்று சொல்லிவிட முடியாது! மேலும், படிக்கும்போது அப்படி கற்பனை செய்யாமல் படிக்க வேண்டுமென்பது என்னால் இயலாத காரியம்..ஒரு கதையேயானாலும் கூட!
//
தவறு இல்லவே இல்லை முல்லை.. என்னை நல்லவிதமாக நீங்கள் கற்பனை செய்துவதற்கும், மாறாக என் எழுத்தின் மூலம் வேறுவிதமாக நீங்கள் என்னை கற்பனை செய்து வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது..
மேலும் இப்படி கற்பனை செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் எழுதுபவர் இப்படித்தான் என்று முடிவெடுத்து தாழ்த்தியும், தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவதும், வசைப்பாடுவதும் மனதுக்கு தீராத வருத்தத்தை தருகிறது.
குறிப்பாக நாம் அப்படி இல்லாத பட்சத்தில்....
ஹாய் கவி,
உங்க பதிவு படிச்சேன்.
யாரோ ஒருவர், மற்றொருவருடைய எழுத்தை படித்து அவரை பற்றி தவறாக புரிந்து கொண்டு குற்றம் சாட்டியதற்காக நீங்க இந்த பதிவை போட்டிருந்தா இந்த மெயில் இதுக்கு மேல படிக்காம நீங்க டெலீட் பண்ணிக்கலாம்.
இல்லை பொதுவாவே ஒரு எழுத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவதை நீங்க தப்புன்னு சொல்றீங்க அப்படினா என்னோட கருத்துகளை இங்க சொல்லிக்க ஆசைப்படறேன்.
ஒரு சின்ன சந்தேகம். ஒருவருடைய எழுத்துக்களை படிக்கும் போது அவர்களைப் பற்றி எந்தவித அபிப்ராயமுமே இல்லாம இருக்க முடியுமா? அவர்கள் இப்படித்தான்னு உட்கார்ந்து யோசிச்சு முடிவு பண்ணாட்டியும் உங்களையும் மீறி உங்களுக்குள்ள ஒரு எண்ணம் உருவாகாதா??? அப்படி எந்த வித பாதிப்பையுமே அந்த எழுத்து ஏற்படுத்தலைனா அந்த எழுத்து அங்க தோல்வியடைந்ததுன்னு தானே அர்த்தம்.
உங்களுடைய வாதத்துல எந்த வித அபிப்ராய பேதமும் இல்லாம நான் ஒரு விஷயத்தை ஒத்துக்கறேன். எழுத்தை வைத்து உருவத்தை முடிவு செய்ய முடியாது. அல்லது கூடாது தான். ஆனால் அவர்கள் உணர்வை குணத்தை பற்றி நமக்குள் ஒரு எண்ணம் உருவாவதை நிச்சயம் தவிர்க்க இயலாது.
நீங்க சொன்ன உதாரணத்துலயே... உங்கள் ஆசிரியை பற்றி நீங்கள் கூறிய விஷயத்தில், உங்கள் ஆசிரியையை மற்றவர்கள் திட்டினார்கள் என்றீர்கள்.
//நீ அடி வாங்கிப்பாரு அப்பத்தெரியும் என்பார்கள். நாம ஒழங்கா இருந்தா ஏன் அடிக்கிடைக்கும்? அதை யாரும் யோசித்து பேசவதில்லை.//
இங்க நீங்களே தெளிவா சொல்லிட்டீங்க. அவங்க அடி வாங்கின அந்த கோவத்துல தான் அந்த ஆசிரியைய அப்படி பேசினார்களே தவிர அவர்கள் ஆசிரியையை பற்றி முழுவதும் தெரிந்து பேசவில்லை.
//அதுவும் அவர் பள்ளியில் சிரித்து பார்த்ததே இல்லை ஆனால் திறந்த வாயை மூடாமல் சிரித்தபடியே இருந்தார். இப்படியும் இரண்டு இடத்தில் வேறு வேறாக ஒரு மனிதனால் இருக்கமுடியுமா//
எல்லோரும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சரி. நீங்க சொல்ற வழிக்கே வருவோம். அவங்க அப்படி எப்பவுமே சிரிச்சு பேசி பாத்த மக்கள் திடீர்னு அவங்கள பள்ளிக்கூடத்துல கோவப்படறத பாத்தா அப்போ இதே மாதிரி யோசிக்கமாட்டாங்களா? நாம தான் இவங்களை நல்லவங்கன்னு தப்பா நினைச்சிட்டோமோன்னு? அதுக்கு வாய்ப்பிருக்கா இல்லையா?
//சில பதிவர்களை நேரில் பார்ப்பதற்கு முன் அவரை பற்றிய ஒரு நல்ல மதிப்பு இருக்கும், பதிவரை பார்த்த பிறகு அவர் பேச்சு நடத்தை இவற்றை பார்த்தபின் அவரை பற்றிய நம் மதிப்பு பூச்சியமாக மாறக்கூடும். மாறாக இன்னும் அதிகமாகவும் கூடும்.//
இது தான் ப்ராக்டிகாலிட்டி. ஒவ்வொரு நிகழ்விலும் அவர்களை பற்றிய கருத்து மாறலாம், கூடலாம், குறையலாமே தவிர, அவரைப் பற்றி எந்தவித அபிப்ராயமுமே இல்லாம் ப்ளாங்க் மைண்டோட இருக்கனும் சொன்னா அது நடைமுறைக்கு சாத்தியமான்னு தெரியலை.
சரி. உதாரணத்துக்கு நம்ம விஷயத்துக்கே வருவோம். நீங்க என்கிட்ட முதன்முதல்ல ஆர்கட்ல பேச ஆரம்பிச்சப்போ என்னை பத்தி எந்த வித கருத்துமே இல்லாமலா பேச ஆரம்பிச்சீங்க? அப்படி அபிப்ப்ராயமே இல்லைனா நீங்க என்கிட்ட பேசியே இருக்க மாட்டீங்க. இது தான் உண்மை. நிச்சயமா உங்களுக்கு நான் பதில் போட்டதுக்கும் காரணம் உங்களைப் பத்தி எனக்குள்ள ஒரு அபிப்ராயம் இருந்ததால தான். உங்க எழுத்துக்கள் சிலதை படிச்சிருக்கேன். உங்களை பத்தி முழுசா தெரியாட்டியும் Somehow somewhere எனக்குள்ள ஒரு opinion இருந்துது. இவங்க கிட்ட பேசலாம்னு எனக்கு நம்பிக்கை குடுத்தது அந்த opinion தான். I accept சில சமயம் மக்களை நாம தவறா ஜட்ஜ் பண்ணலாம். ஆனா அதுக்கு ஜட்ஜ் பண்ணவே கூடாதுன்னு சொல்றது சரின்னு எனக்கு படலை.
உங்க பதிவை படிச்சதும் தோனினது. அதை மெயில் பண்ணேன்
காயூ..நன்றி :)
முல்லை கொடுத்த பதில் தான் உங்களுக்கும்...
நிச்சயமாக கற்பனை செய்துக்கலாம்.. அது சம்பந்தபட்டவரை புண்படுத்தாதவரை. :)
//இது தான் ப்ராக்டிகாலிட்டி. ஒவ்வொரு நிகழ்விலும் அவர்களை பற்றிய கருத்து மாறலாம், கூடலாம், குறையலாமே தவிர, அவரைப் பற்றி எந்தவித அபிப்ராயமுமே இல்லாம் ப்ளாங்க் மைண்டோட இருக்கனும் சொன்னா அது நடைமுறைக்கு சாத்தியமான்னு தெரியலை.
//
நல்ல முதிர்ச்சி வேண்டும்.. இருந்தால் முடியும்.. :) தவறாக ஒருவரை பற்றி நினைப்பதை விட அவரை பற்றி எதுவுமே நினைக்காமல் இருப்பது நலம்ப்பா!! :)
//சரி. உதாரணத்துக்கு நம்ம விஷயத்துக்கே வருவோம். நீங்க என்கிட்ட முதன்முதல்ல ஆர்கட்ல பேச ஆரம்பிச்சப்போ என்னை பத்தி எந்த வித கருத்துமே இல்லாமலா பேச ஆரம்பிச்சீங்க? அப்படி அபிப்ப்ராயமே இல்லைனா நீங்க என்கிட்ட பேசியே இருக்க மாட்டீங்க//
காயூ அபிப்பிராயம் இல்லாமல் தான் பேச ஆரம்பிச்சேன்.. நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது. சிபியின் தங்கை என்ற ஒரு காரணம் தான் இருந்தது. வேறு இல்லை. என்னுடைய தேவை ஒன்று.. அது என்னவென்று உங்களுக்கு தெரியும்.. அதற்காக மட்டுமே உங்களை தொடர்பு கொள்ள நினைத்தேன்..
சரியான அலசல்
ஒருவரின் எழுத்தை வைத்து அவரை யூகிப்பது என்பது கொஞ்சம் அசாதாரணமனான விஷயம் தான்.
ஆனால் இந்த கற்பனா சக்தி இருக்கிறதே, அது எதையும் தப்ப விடாது.
இது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து வருகிறது.
ஏன் சினிமா பாடல்கள் கூட இதிலிருந்து தப்பியதில்லை.
பி.பி. சீனிவாஸ் பாடினால் அது ஜெமினிக்கானது என்று யூகித்து, கடைசியில் அது எம்.ஜி.ஆருக்காய் இருந்தது. ஒத்துப்போவது கொஞ்சம் கடினமாகவும் இருந்தது.
இதுபோல நிறைய.
ஆனால் பதிவுலகத்துக்கு வந்தபின் நான் அறிந்த புரிந்த ஒன்று.
\\ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை\\
நாம ஒழங்கா இருந்தா ஏன் அடிக்கிடைக்கும்? அதை யாரும் யோசித்து பேசவதில்லை
ஆமாங்க,
:)-
என்னடா வம்புச்சண்டையை ரெண்டு மூணு மாசமா இன்னும் இழுக்காம இருக்கீங்களேன்னு பார்த்தேன்!
ஹிஹி! போரடிக்கும் இல்லையா?
(அப்பாடா! கொளுத்திப் போட்டாச்சு)
//ந்த வயதிலேயே ஆரம்பித்துவிட்டது மனிதர்களை பற்றிய என்னுடைய அலசல்//
துவைத்தல், காயவைத்தல் எல்லாம் எப்போ இருந்து ஆரம்பித்தன?
//பதிவர்கள் பக்கம் வருகிறேன், அதிகம் பார்ப்பது ஒருவர் எழுத்தை க்கொண்டு அவரை கணிப்பது. இது நான் பார்த்தவரையில் எல்லோரும் செய்கிறார்கள்//
ஆமா! அப்படியே கணிச்சிட்டாலும்!
//ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை//
ரெடி ஜூட்!
//ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை//
ரைட்டேய்!
பதிவுக்கான காரணம் புரிந்தது!
@ அமித்தும்மா
நன்றி.. :)
-------------
@ சிபி
//துவைத்தல், காயவைத்தல் எல்லாம் எப்போ இருந்து ஆரம்பித்தன?//
இனிமே த்தான் ஆரம்பிக்கனும் உங்கக்கிட்ட இருந்து எப்படி வசதி.. :)
//ரைட்டேய்!
பதிவுக்கான காரணம் புரிந்தது!//
ஸ்ஸ் ஒரு பெரிய வேலை மிச்சம்... புரிஞ்சி போச்சா?? :) ரொம்ப நன்றி..
//ஆமா! அப்படியே கணிச்சிட்டாலும்!//
:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை எல்லாம் போட தெரியாது ?! நானும் சண்டை போட தெரியதவங்க க்கிட்ட போடறதில்லை.. :)
//:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை எல்லாம் போட தெரியாது ?!//
சண்டை போடத் தெரியுதோ இலையொ! மான் கராத்தே நல்லா தெரியும்!
சண்டைன்னு வந்துட்டா அதைப் பயன்படுத்தி எதிராளியை அப்படியே நிலைகுலைய வெச்சிடுவேன்!
////ஆமா! அப்படியே கணிச்சிட்டாலும்!//
:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை எல்லாம் போட தெரியாது ?! நானும் சண்டை போட தெரியதவங்க க்கிட்ட போடறதில்லை.. :)//
May I come in ?? :)))))
இந்த பதிவுக்கு என்னத்த சொல்லுறது.
ஒரு எழுத்தை வைத்து அடுத்தவர்களை கணிக்க கூடாது என்பதை நான் ஒற்றுக் கொள்கிறேன். ஆனால் அவரவர் எண்ணங்களை ஒற்றி எழுத்து இருக்கும். எண்ணங்கள் படி அனைவரும் வாழ்வது இல்லை.
உ.தா. பதிவில் நகைச்சுவையான எழுதுவதில் பலர் பலே கில்லாடி. உண்மையில் அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது எழுத்தில் வரும். ஆனால் நேரில் பார்த்தால் சரியான சிடுமூஞ்சி (or) reserved ஆளா இருக்கலாம்.
என்ன நகைச்சுவை எழுத்தாளாராக இருந்தாலும் ஒரு சிடுமூஞ்சியுடன் நட்பாக இருக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள்.
ரொம்ப இழுக்க வேணாம், ஒரே ஒரு மேட்டரு தான்
Opinion is like an xxxhole, everyone has its own.
கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துகளை நம் கருத்துகளுடன் எதிர்கொள்ளுவோம்.
//கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துகளை நம் கருத்துகளுடன் எதிர்கொள்ளுவோம்.//
இது சூப்பர்!
//கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துகளை நம் கருத்துகளுடன் எதிர்கொள்ளுவோம்.//
சிவா எப்படி சிவா? இப்படி எல்லாம்.. . நான் இவ்வளவு கஷ்ட பட்டு எழுதி இருக்கவே வேண்டாம் போல.... :)
முல்லை சொன்னதை ரீப்பீட்டுக்கிறேன்..!! :) இது சூப்பர்!! :)
//அவரவர் எண்ணங்களை ஒற்றி எழுத்து இருக்கும். எண்ணங்கள் படி அனைவரும் வாழ்வது இல்லை. //
சிவா, எண்ணங்களின் படி எழுத்து இருக்கலாம் அதுவே பொது விஷயங்களை பேசும் போது அப்படி எழுத முடியும் என்று தோன்றவில்லை, நடைமுறையில் நடக்கும் விஷயத்தை எழுதும் போது அந்த விஷயத்தை அவர் எப்படி பார்க்கிறார் என்று எழுதுவார், அவரின் புரிதல் அவர் அப்படி பார்க்க காரணமாக இருக்கலாம். அந்த புரிந்தல் சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் இல்லையா?
அப்படி இருக்க.. ஒருவரை இப்படித்தான் நீ என்று சொல்லுவது எப்படி சரியாகும். தான் எழுதியதை சில மாதங்கள் கழித்து படிக்கும் போது அது அவருக்கே தவறாகவோ.. இல்லை இன்னும் சரியாகவோ எழுதி இருக்கலாம் என்று தோன்றலாம். அப்படி இருக்கு.. எழுத்தையும் எண்ணங்களையும் கொண்டு மனிதனின் முழு குணத்தையும் நாம் கணித்துவிட முடியாது.
அதுவும் "இப்படித்தான்" என்று கணிக்க முடியாது. "இப்படியும் இருக்கலாம்" என்று ஊகிக்கலாம் அவ்வளவே...
:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை எல்லாம் போட தெரியாது ?! நானும் சண்டை போட தெரியதவங்க க்கிட்ட போடறதில்லை.. :)//
May I come in ?? :)))))//
அட !! இங்கபாருடா. .புலிக்கு ஆசைய...?! யோசிச்சி என்ட்ரி கொடுக்கனும் !! :)
//சண்டை போடத் தெரியுதோ இலையொ! மான் கராத்தே நல்லா தெரியும்!
சண்டைன்னு வந்துட்டா அதைப் பயன்படுத்தி எதிராளியை அப்படியே நிலைகுலைய வெச்சிடுவேன்!//
:) இந்த மான் கராத்தே அப்படின்னு சொன்னாவே எனக்கு சிரிப்பு தாங்க முடியறது இல்ல.. :))
ஏன் சிபி.. உங்க காமெடிக்கு ஒரு அளவில்லையா.. சண்டையின்னா... சீரியஸா போடனும் இப்படி சிரிக்கவைக்கப்பிடாது.. :))
//என்ன நகைச்சுவை எழுத்தாளாராக இருந்தாலும் ஒரு சிடுமூஞ்சியுடன் நட்பாக இருக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள்.
//
நட்பா???? சிடு மூஞ்சியுடன் காலம் காலமாக குடும்பம் நடத்துபவர்கள் எல்லாம் இருக்காங்க தெரியாதா.. உதாரணம் வேணும்னா?????
//நட்பா???? சிடு மூஞ்சியுடன் காலம் காலமாக குடும்பம் நடத்துபவர்கள் எல்லாம் இருக்காங்க தெரியாதா.. உதாரணம் வேணும்னா?????//
கவிதா எவ்ளோ சிடுமூஞ்சியா இருந்தாலும் அவங்களோட ரங்கமணி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு இருக்கலையா?
//ஏன் சிபி.. உங்க காமெடிக்கு ஒரு அளவில்லையா.. சண்டையின்னா... சீரியஸா போடனும் இப்படி சிரிக்கவைக்கப்பிடாது.. :))//
இதெல்லாம் ஒரு வார் டெக்னிக்கு! அப்பதான் சண்டை போட வந்தவன் கூட சிரிச்சிகிட்டே துப்பிட்டு கெளம்பிடுவான்!
\\கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துகளை நம் கருத்துகளுடன் எதிர்கொள்ளுவோம்.\\\
வழிமொழிக்கிறேன் ;)
//நட்பா???? சிடு மூஞ்சியுடன் காலம் காலமாக குடும்பம் நடத்துபவர்கள் எல்லாம் இருக்காங்க தெரியாதா.. உதாரணம் வேணும்னா?????//
கவிதா எவ்ளோ சிடுமூஞ்சியா இருந்தாலும் அவங்களோட ரங்கமணி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு இருக்கலையா?//
என்னை இதுவரைக்கும் யாருமே சிடுமூஞ்சி'ன்னு சொன்னதே இல்ல. .நீங்க சொல்லிட்டீங்க இல்ல.. அதுவும் இப்படி ஒரு பதிவு போட்ட பிறகு கூட யோசிக்கமா சொல்லிட்டீங்க..இல்ல... !! பாத்துக்கறேன்..
அவ்வ்வ்வ்வ் என்னோட ரங்கமணி க்கூட என்னை சொன்னதில்லை... அழுவாச்சியா வருது..:(
//இதெல்லாம் ஒரு வார் டெக்னிக்கு! அப்பதான் சண்டை போட வந்தவன் கூட சிரிச்சிகிட்டே துப்பிட்டு கெளம்பிடுவான்!//
எப்படி.".நாய்சேகர்.." மாதிரி.. "துப்பிட்டு போயிக்கிட்டே இரு" ன்னு சொல்லுவாரே அது மாதிரியா?
சரி எனக்கு என்ன... "xxxxx xx xxx xx ....." (துப்பிட்டேன்...)
அவ்வ்வ்வ்வ் என்னோட ரங்கமணி க்கூட என்னை சொன்னதில்லை... அழுவாச்சியா வருது..:(//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்வ்
இன்னும் அழுவாச்சி நிக்கல..
சிபி எப்படி நீங்க என்னை சிடுமூஞ்சி ன்னு சொல்லலாம்.. ஆஅங்க்க்க்க்க்..!! :((((((
இதை நினைச்சு நினைச்சு.....
இன்னைக்கு பூரா
இதை நினைச்சு நினைச்சு....
அவ்வ்வ்வ்வ்வ்வ்............
நானும் அழப்போறேன்..
என்னைபோய் சிடுமூஞ்சின்னு சொல்லிட்டீங்களே.......அங்க்க்க்க்....:(
காலங்காத்தால என்னை அழவச்சிட்டீங்க இல்ல.. சிபி.. ..:( உங்களை பார்த்தா நான் இனிமே சிரிக்கவே மாட்டேன்.. (அதுவும் எனக்கு வராதே அவ்வ்வ்வ்வ்)
//என்னை இதுவரைக்கும் யாருமே சிடுமூஞ்சி'ன்னு சொன்னதே இல்ல. .நீங்க சொல்லிட்டீங்க இல்ல.. அதுவும் இப்படி ஒரு பதிவு போட்ட பிறகு கூட யோசிக்கமா சொல்லிட்டீங்க..இல்ல... !! பாத்துக்கறேன்..
அவ்வ்வ்வ்வ் என்னோட ரங்கமணி க்கூட என்னை சொன்னதில்லை... அழுவாச்சியா வருது..:(//
என்ன பண்ணுறதுங்க! உண்மைகள் சுடத்தான் செய்யும்! கசக்கத்தான் செய்யும்! இப்படி ஒரு பதிவு போட்டுட்டீங்க என்பதற்காக நீங்க சிடுமூஞ்சி இல்லைன்னு ஆயிடுமா! அதான் பதிவைப் பார்த்தெல்லாம் முடிவு செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே!
அதனால மறுக்காம ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது!
அதைவிட்டுட்டு அழுறதெல்லாம் வேஸ்ட்!
:)
//இன்னைக்கு பூரா //
ஒண்ணும் அவசம் இல்லை!
டேக் யுவர் ஓன் டைம்!
நல்லா அழுது முடிச்சிட்டு அப்புறமா வாங்க! அடுத்த போஸ்ட்லே கும்முறேன்!
:)
வாழ்த்துக்கள்!
யூத் ஃபுல் விகடனில் உங்க பதிவு இடம்பெற்றிருக்கிறது!
50 அடிச்சிட்டனே!
நல்ல பதிவு.
நம்மில் பெரும்பாலனவர்கள் பல்வேறு முகமூடிகளுடன்தான் அலைகிறோம்.
Post a Comment