நான் எழுதிய பதிவுகளில் என்னை ஆட்கொண்ட பதிவு இது. மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக… அப்போது மட்டும் இல்லை இப்போதும் இன்றும் என்றும் அறிவா மனதா என்ற என் கேள்விக்கு அர்த்தம் தேட முனையும் போது எல்லாம் இந்த பதிவை நான் எடுத்துப்படிப்பது உண்டு.

குறிப்பாக அதில் உள்ள பின்னூட்டங்கள் எனக்கு கொஞ்சம் தெளிவை தந்தாலும் அதிலிருந்தும் ஆயிரமாயிரம் கேள்விகள் ஏழாமல் இருப்பதில்லை. எதையுமே யோசிக்காமல் எப்படி ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக இவர்கள் செய்கிறார்கள்/பேசுகிறார்கள்/நடந்துக்கொள்கிறார்கள் என்பது எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி. நானுமே அப்படி சில சமயங்களில் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது வேண்டாத மனதுயரம் கவ்வுகிறது. அது வேண்டாதது என்றாலுமே ஏன்? என்ற கேள்வி எழுந்துவிடாமல் இருப்பது இல்லை. அதற்கான விடையை ஆராய்ந்து பிடிக்கும் முன் என்னை நானே பிடிக்கமுடியாமல் போய் விடுமோ என்று தோன்றும்.

அந்த பின்னூட்டங்களில் நாகை சிவா, மற்றும் எஸ்.கே சார் அவர்களின் பின்னூட்டங்களில் மிகவும் அழுத்தமாக உள்ளம் சொல்லுவதை கொண்டு நடந்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அறிவு சரியாக செய்கிறதா? இல்லை உள்ளம் சரியாக செய்கிறதா? உள்ளம் கேட்பதை மட்டும் கேட்டு நடந்து க்கொண்டால் பல விஷயங்களில் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று தோன்றும். ஆனால் எல்லாவற்றிற்கும் அறிவுடன் உட்கார்ந்து பேசும் போது, மிஞ்சுவது சந்தோஷம் இல்லை, ஒரு மயான அமைதி அல்லது எல்லாமே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற தள்ளிவைப்பு அல்லது என்னை விட பிறரின் செய்கைகளுக்கு முதலிடம் என்று அறிவால் நான் படும் பிரச்சனை அதிகம்.

உள்ளம் பல நேரங்களில், பல இடங்களில் என்னை ஆட்டிப்படைத்தாலும், அறிவு என்னை ஆக்கரமிப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. எங்கே சென்று முடியுமோ இந்த அசைபோடல்...

அணில்குட்டி அனிதா:- ம்க்க்கும்..!! இதுல வேற சந்தேகமா?.. பைத்தியக்கார ஆஸ்பித்திரியில தான் போயி முடிய போகுது... நான் அப்படி கொஞ்சம் தள்ளியே நிக்கறன் தாயி...எங்கனாலும் தனியா போயிக்கோங்க....

மக்க யாரும் இன்னைக்கு இந்த பக்கம் வராம இருந்தா அவங்களுக்கு நல்லது... :(

பீட்டர் தாத்ஸ் :-
1. “My mind tells me to give up, but my heart won't let me.
2. Whatever you hold in your mind will tend to occur in your life. If you continue to believe as you have always believed, you will continue to act as you have always acted. If you continue to act as you have always acted, you will continue to get what you have always gotten. If you want different results in your life or your work, all you have to do is change your mind.
3. “Great minds discuss ideas; Average minds discuss events; Small minds discuss people