தரமணியில் ஐடி கம்பெனிகள் அதிகமாக இருக்கும் கட்டிடம் ஒன்று இருக்கிறது. அதற்கு ஒரு வாரம் முன்பு நம் மத்திய அமைச்சர் டி.ர்.பாலு வந்திருப்பார் போல் இருக்கிறது. போஸ்டரில் அவர் பெயரை பார்க்கமுடிந்தது. வேறு யார் யார் வந்தார்கள் போனார்கள் என்பது தெரியவில்லை.
ஒரு 7, 8 மாதங்களாக அலுவலகத்திற்கு தரமணி வழியாக சென்று வருகிறேன். நீக்கப்படாத தெரு முழுக்க பரவிக்கிடக்கும் குப்பை, சாக்கடை தண்ணீர் நிரம்பி வழிந்து தெருவில் குட்டையாக தினமும் பார்க்க முடிந்தது, பெரிய பெரிய ஒயர்கள் அறுந்து விழுந்து நடுரோடிலேயே அகற்றப்படாமல் கிடந்தது, நானுமே அதன் மேல் வண்டியை ஓட்டி சென்றுக்கொண்டு தான் இருந்தேன். வேறு வழியும் இல்லை, நின்று தனிஆளாக அதை எடுத்து போடும் அளவிற்கு அந்த ஒயர்கள் இல்லை, தெரு ஓர கம்பத்திலிருந்து அறுந்து விழுந்து சுருள் சுருளாக மிக நீளமான, தடிமனான ஒயர்கள்.
மத்திய அமைச்சர் வருகிறார் என்றவுடனே, ஒரே நாளில், ஒரு நாள் என்று கூட சொல்ல முடியாது சில மணி நேரங்களில் அந்த தெரு படு சுத்தமாக மாற்றப்பட்டது மட்டுமல்ல. நடுவே அலங்காரத்திற்காக திடீரென்று நிஜமான செடிகள் நடப்பட்டு இருந்தன. அட!! சில மணி நேரங்களில் இவர்களால் செய்ய முடிந்த வேலையை மாதக்கணக்காக (நான் மாதக்கணக்காக தான் பார்க்கிறேன்), செய்யாமல் இருக்கிறார்களே?!. அதில் ஆச்சரியமான விஷயம் ரோடுகளில் நடுபகுதியில் திடீரென்று முளைத்த செடிகள் !! ?!!
இதை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது எல்லாம், ஏன் நம் அமைச்சர்கள் எல்லாம் காலை, மாலை இரண்டு வேலையும் சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் ஏதோ ஒரு டீ கடையில் டீ குடிக்க சென்று வரக்கூடாது.? வீட்டில் குடிக்கும் டீ' ஐ கடையில் சென்று குடிக்கலாமே. அமைச்சர் டீ குடிக்க வருகிறார், என்று அந்த ஏரியா முழுதும் அன்றே சுத்தம் செய்து விடுவார்கள். அமைச்சர்களும் பொதுமக்களை சந்தித்த மாதிரி இருக்கும், டீ'யும் குடித்த மாதிரி இருக்கும்.
தமிழக அரசாங்கம் கூட பள்ளியில் ஆசிரியர்களுக்கு டைம் டேபிள் போட்டு கொடுப்பது போன்று இந்த அமைச்சர் காலையில் இந்த ஏரியா டீ கடை, மாலையில் இந்த ஏரியா டீ கடைக்கு டீ குடிக்க போக வேண்டும் என்று திட்டம் போட்டு கொடுத்துவிட்டால் நன்றாக இருக்கும்.
இப்படி எல்லாம் திட்டம் போட்டு தான் நாம் நம்மை சுற்றி இருக்கும் இடத்தையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க இயலும் என்ற நிலைமைக்கு வந்து விட்டதாக தோன்றுகிறது.
மாதக்கணக்காக அகற்றப்படாத குப்பை மேடுகள், ஆண்டுகளாக சுத்தம் செய்யாத பொது கழிப்பிடங்கள், அல்லது பொது கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட இடங்கள், பொங்கி பொங்கி வழியும் கழிவுநீர் கால்வாய்கள் என்று சென்னை நகரம் மிகவும் மோசமாகி வருகிறது. ஊருக்கு சென்றுவிட்டு திரும்பும் போது தாம்பரம் பேருந்து நிலையத்தை பார்க்க நேர்ந்தது. கிழக்கு தாம்பரத்தில் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 10-15 கடைகள் நெடுக ஒன்றும் பாதியுமாக உடைக்கப்பட்ட நிலையில், பொது கழிப்பிடமாக ஆக்கப்பட்டு இருக்கிறது. அத்தனை பேருந்துகளும் இந்த துர்நாற்றம் வீசும் கடைகளின் மிகஅருகாமையில் தான் வரிசையாக நிற்கின்றன. இந்த கடைகள் ஏன் இடிக்கப்பட்ட நிலையில் உள்ளது, ஏன் பொது கழிப்பிடமாக மாறியது, இது எப்போது சுத்தம் செய்யப்படும் என்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. குழந்தைகள், வயதானவர்கள் என்று எல்லோரும் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு அவலம்.
இப்படி இருக்கும் இடத்தில் நடு நடுவே சந்தில் சிறிய பெட்டி கடையில் வியாபாரம் நடந்தவாறு இருக்கிறது. அந்த பெட்டிக்கடைகள் ஏதாவது ஒன்றுக்கு நம் அமைச்சர் யாராவது டீ குடிக்கவோ, பேப்பர் படிக்கவோ வந்தால், இந்த இடம் கூட சில மணி நேரத்தில் சுத்தமாகி விடும் அல்லவா?
ஆனால் இப்படிப்பட்ட இடங்களை நாசப்படுத்தும் பொதுமக்களை என்ன செய்வது? தன் அன்றாட வேலையை சரிவர இல்லை சுத்தமாகவே செய்யாமல் இருக்கும் துப்புறவு தொழிலாளியை என்ன செய்வது?
அணில் குட்டி அனிதா: கவி.. வேகமாக போயி நீங்களே க்ளீன் பண்ணிட்டு வந்து இருக்கலாமே... ? செய்தீங்களா... ?? அம்மணிக்கு இப்படி பக்கம் பக்கமாக எழுத தெரியும்.....நல்லா வாய் கிழிய பேச தெரியும்....வேற ?!! மக்கா உங்க எல்லாருக்கும் அம்மணிய நல்லாவே கும்ம தெரியும்..... எப்பவும் போல கும்மாம நல்லா நாலு சாத்து சாத்திட்டு போங்க..!! ஒகே !!
பீட்டர் தாத்ஸ் : Keep your own house and its surroundings pure and clean. This hygiene will keep you healthy and benefit your worldly life.”
மத்திய மாநில அமைச்சர்களே டீ குடிக்க வாங்களேன் !!
Posted by : கவிதா | Kavitha
on 05:58
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
25 - பார்வையிட்டவர்கள்:
முதல்ல அவங்கவங்க தொகுதிக்கு ஒழுங்கா போறாங்களான்னு பாக்கலாம்..........
\\மத்திய அமைச்சர் வருகிறார் என்றவுடனே, ஒரே நாளில், ஒரு நாள் என்று கூட சொல்ல முடியாது சில மணி நேரங்களில் அந்த தெரு படு சுத்தமாக மாற்றப்பட்டது\\
இதுதான் மேட்டரா ...
\\பீட்டர் தாத்ஸ்\\
அருமை.
தேவை.
சூப்பர் ஐடியாங்க...
ஹஹ்ஹா..கவிதா..சுத்தம் போடறது மட்டும் இல்லாம ஓவர் நைட்-ல ரோடு போடறதை விட்டுட்டீங்களே..அமைச்சர் கடக்கற அந்த ரோடு மட்டும் குழிகள் எதுவும் இல்லாம..ஒட்டுப் போட்டுடுவங்க!! ஹ்ம்ம்ம்..பீட்டர் தாத்ஸ் கரெக்டா சொல்லியிருக்கார்!! :-)
முதல்ல அவங்கவங்க தொகுதிக்கு ஒழுங்கா போறாங்களான்னு பாக்கலாம்..........//
நீங்க வேற அத்திரி...தொகுதிக்கு அவங்க போன.. பந்தல், தோரணம், போஸ்டர் னு ஏகப்பட்ட செலவு செய்யனும் அதுக்கு தான் சிம்பிலாக டீ குடிக்க வாங்க ' ன்னு சொன்னேன்..
அதுக்கும் நம்ம ஆளுங்க போஸ்டர் அடிச்சு ஒட்டுவாங்கப்பா.. சொல்லமுடியாது தான்..!! :)
\\மத்திய அமைச்சர் வருகிறார் என்றவுடனே, ஒரே நாளில், ஒரு நாள் என்று கூட சொல்ல முடியாது சில மணி நேரங்களில் அந்த தெரு படு சுத்தமாக மாற்றப்பட்டது\\
இதுதான் மேட்டரா ...//
அதே அதே !! :)
-------------------------
அ.மு.செய்யது said...
சூப்பர் ஐடியாங்க...//
வாங்க அ.மு.செ !! (தமிழ்நாட்டு கட்சி பேரு மாதிரியே இல்ல? :) !! )
ஆமாங்க இப்படி எல்லாம் ஐடியா கொடுக்க வேண்டிய நிலைமைக்கு நாம தள்ளப்பட்டுட்டோம்..! :(
ஹஹ்ஹா..கவிதா..சுத்தம் போடறது மட்டும் இல்லாம ஓவர் நைட்-ல ரோடு போடறதை விட்டுட்டீங்களே..அமைச்சர் கடக்கற அந்த ரோடு மட்டும் குழிகள் எதுவும் இல்லாம..ஒட்டுப் போட்டுடுவங்க!! ஹ்ம்ம்ம்..பீட்டர் தாத்ஸ் கரெக்டா சொல்லியிருக்கார்!! :-)//
முல்லை ஓவர் நைட் ஓகேப்பா..!! இது சில மணி நேரங்களில், ரோடையும் சேர்த்து தான் போட்டு விட்டாங்க. .நான் தான் சொல்ல மறந்துட்டேன்.. :), வேலை செய்தவர்கள் அந்த ரோடில் மட்டும் சுமார் 25-30 பேர் இருப்பார்கள்.
In our good old country , there was a time when accoutnability was with the sanitation workers, then the municipal councillors took over the accountability.
Soon it was in the minds of MLAs who were conscentious and tried their best. They too gave up.. Then the ministers of the State were having some moral authority and accountability. They too gave up and got away with it.
Are all these people manning such important jobs of maintaining the cities comforatble with the filth and decay? Are the ward councellors, MLAs and Minsiters fo the area are proud of their constituency?
Now it seems only a Central Miister can get upset if the roads are not clean enough.
If a Central Minster gets upset, it matters to sanitation authorities?
So the system is meant only for the sensibilites of Ministers and President?
What farce.. In our city we look forward to the President's visit. when she came, our roads were cleared, potholes filled up, and beggars vanished. We are sending delgations to her to make frequent visits (to drink tea) :-)
இதில் துப்புரவு பணியாளர்களை மட்டுமே குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை. மொத்த மாநகராட்சியின் Hierarchyயுமே இப்படி தான் இருக்கிறது. அதே போல, அமைச்சருக்கும் அந்தச் சாலைகள் அன்று தான் ஒட்டுப்போடப்பட்டு இருக்கிறது என்று தெரியும், ஆனால் அவர்களும் கண்டுகொள்வது இல்லை.
இதில் பொதுமக்கள் தான் பெரிய குற்றவாளிகள். அந்தச் சாலையில் பயணிப்பவர் நீங்கள், உங்களை விட்டுவிடுவோம், ஆனால் அதே தெருவில் வசிப்பவர்களை என்ன சொல்வது!! அந்த வயர்களை ஒதுக்கிப் போட அவர்களுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்? ஒரே தெருவில் வசிக்கும் 5 பேர் சேர்ந்து அதனை ஓரத்தில் ஒதுக்கிப் போட முடியாதா? முடியும், ஆனால் செய்ய மறுக்கிறோம். தன் வீட்டு வாசலில் ஓடும் சாக்கடையை கண்டுகொள்ளாமல் தான் கடந்துசெல்லும்போது மட்டும் மூக்கைப் பொத்திக்கொண்டு தாண்டிச் செல்பவன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அதே சாக்கடையினால் நோய் பரவுகிறது என்பதை நினைக்க மறக்கிறான்/மறுக்கிறான். இவர்களெல்லாம் சொ.செ.சூ.வ கேஸ்கள்.
In our good old country , there was a time when accoutnability was with the sanitation workers, then the municipal councillors took over the accountability.
Soon it was in the minds of MLAs who were conscentious and tried their best. They too gave up.. Then the ministers of the State were having some moral authority and accountability. They too gave up and got away with it.
Are all these people manning such important jobs of maintaining the cities comforatble with the filth and decay? Are the ward councellors, MLAs and Minsiters fo the area are proud of their constituency?//
வெற்றிமகள் வாங்க !! நல்ல தெளிவான பின்னூட்டம்..
மேலே சொன்ன அத்தனை பேரும் அவரவர் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக 8 மணி நேரம் வேண்டாம், ஒரு 4 மணி நேரம் வேலை செய்யட்டும்.. அது போதும். அது துப்புறவு தொழிலாளியாக இருக்கட்டும், எம்.எல்.ஏ, நகராச்சி கவுன்சிலர்கள், நம் அமைச்சர்களாக இருக்கட்டும்..
யாருமே அவர்கள் வேலையை செய்வதில்லை ஆனால் சம்பாதிக்க மட்டுமே என்ன என்ன முடியுமோ செய்கிறார்கள்.
பற்றா குறைக்கு நம் மக்கள், கொஞ்சமும் குறைந்த பட்ச கூட பொறுப்பு இருப்பதில்லை கண்ட இடத்தில் கண்டதை போடுவது, என கடுமையான சட்டம் 100 ரூ அபராதம் என்று எல்லாம் சொன்னார்கள் ஆனால் அது வந்தபிறகு தான் குப்பை மேடுகளும் அதிகமாகிவிட்டன.. :(
What farce.. In our city we look forward to the President's visit. when she came, our roads were cleared, potholes filled up, and beggars vanished. We are sending delgations to her to make frequent visits (to drink tea) :-)//
ஓ அவங்க இன்னும் பிரசிடண்டா தான் இருக்காங்களா? இப்படி யாராவது அவங்க இருக்காங்கன்னு நினைவு படுத்தின்னாத்தான் உண்டு... :)
இதில் பொதுமக்கள் தான் பெரிய குற்றவாளிகள். அந்தச் சாலையில் பயணிப்பவர் நீங்கள், உங்களை விட்டுவிடுவோம், ஆனால் அதே தெருவில் வசிப்பவர்களை என்ன சொல்வது!! அந்த வயர்களை ஒதுக்கிப் போட அவர்களுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்? ஒரே தெருவில் வசிக்கும் 5 பேர் சேர்ந்து அதனை ஓரத்தில் ஒதுக்கிப் போட முடியாதா? முடியும், ஆனால் செய்ய மறுக்கிறோம். தன் வீட்டு வாசலில் ஓடும் சாக்கடையை கண்டுகொள்ளாமல் தான் கடந்துசெல்லும்போது மட்டும் மூக்கைப் பொத்திக்கொண்டு தாண்டிச் செல்பவன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அதே சாக்கடையினால் நோய் பரவுகிறது என்பதை நினைக்க மறக்கிறான்/மறுக்கிறான். இவர்களெல்லாம் சொ.செ.சூ.வ கேஸ்கள்.//
ராஜா, நீங்க நினைக்கற மாதிரி தன் வீட்டு அருகில் நடக்கும் விஷயத்தை சரி செய்வது கூட அவ்வளவு சுலபம் இல்லை. நான் எங்களது குடியிருப்பில் இப்படித்தான் கண்ட இடத்தில் குப்பை கொட்டினால் சொல்லி பார்த்தேன்... கத்தி பார்த்தேன்..திட்டி பார்த்தேன்.. குப்பை போடும் இடத்தில் செருப்பை கட்டி பார்த்தேன்.. ஒன்றும் நடக்கவில்லை என் எதிரில் செய்யாவிட்டாலும் வேண்டுமென்றே நான் அலுவலகம் வந்த பிறகு ரோடில் குப்பையை கொண்டு வந்து போடுவார்கள்.
அதனால் என்ன செய்தேன் தெரியுமா? நீங்க எல்லாம் எளிதாக குப்பையை ரோடில் போட்டு விடுகிறீர்கள், ஆனால் நகராட்சியில் குப்பையை யாரும் அள்ளுவது இல்லை.. உங்கள் வீட்டில் தான் சிறு குழந்தைகள் உள்ளனர், போன வாரம் அந்த இடத்தில் ஒரு பாம்பை பார்த்தேன்.. இது இந்த குப்பைக்குள் தான் போனது.. உங்கள் குழந்தைகளும் வெளியில் சென்று விளையாடுகிறார்கள், கொஞ்சம் தயவு செய்து உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுகள் என்றேன்.
அவ்வளவு தான் அடுத்தநாள் என்ன் ஆச்சரியம் அவர்களே ஆள் வைத்து எல்லாவற்றையும் அகற்றி இன்று வரை அவர்களும் மற்றவர்களும் அங்கே குப்பை போடாமால் பார்த்துக்கொள்கிறார்கள்..
சில சமயம் இப்படி எல்லாம் திட்டம் தீட்டி நம் மக்களை சரி செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கான நேரம், சந்திப்பு, பேச்சு வார்த்தை என்று எவ்வளவோ இருக்கிறது ராஜா நிஜமாக எளிதல்ல..
அவரவரே திருந்த வேண்டும். :)
// சூப்பர் ஐடியாங்க...//
வாங்க அ.மு.செ !! (தமிழ்நாட்டு கட்சி பேரு மாதிரியே இல்ல? :) !! ) //
ஏன் இந்த கொலவெறிங்க...
ஏற்கெனவே ஒருத்தர் மு.செ வ 'முனா செனா'னு கூப்பிட்டு ராம்சேனா ரேஞ்சுக்கு எடுத்துட்டு போயிட்டாரு..அதுலர்ந்து
எங்கவீட்டுக்கு எங்க பிங்க் ஜட்டி வந்துருமோனு ஒரு வாரமா தூங்கலங்க..
//அவரவரே திருந்த வேண்டும். :)//
அவரவரை தான் நானும் திருந்த வேண்டும் என்று சொல்கிறேன். மாநகராட்சி பணியாளர்கள் அவர்களது பணியினை சரிவர செய்வதில்லை என்று தெரிந்திருந்தும் நாங்கள் சாலையோரத்தில் தான் குப்பையைப் போடுவோம் என்று வீம்பாகச் செய்பவர்களை தான் நான் குற்றவாளிகள் என்கிறேன்.
\\அவரவரே திருந்த வேண்டும். :)\\
இந்த வசனத்தை தான் அமைச்சர்களும் நமக்கு சொல்றாங்களோ என்னாவே!! ;)
\\அவரவரே திருந்த வேண்டும். :)\\
இந்த வசனத்தை தான் அமைச்சர்களும் நமக்கு சொல்றாங்களோ என்னாவே!! ;)//
கோபி உங்களை மாதிரி ஒரு நாலு பேரு இருந்தால் போதும்..இல்ல இல்ல நீங்க ஒருத்தர் போதும்..நாம நல்லா இருப்போம்..
நேத்து எங்க வீட்டுக்கிட்டக்கூட ரோட்டை கழுவிட்டிருந்தாங்க.. அமைச்சர் வரார்னுன்னு.. :))
//இரண்டு வேலையும் சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் ஏதோ ஒரு டீ கடையில் டீ குடிக்க சென்று வரக்கூடாது.?//
கண்டிப்பா சொல்லனும்ங்க....இப்ப எல்லாம் டீ கடையில நல்ல டீயே கிடைக்கிறதில்லங்க. அப்பவாச்சும் நமக்கு நல்ல டீ கிடைக்கும்
நீங்க ஏன் பேசாம உங்க வீட்டுக்கு டீ குடிக்க கூப்பிட்டுருக்கலாம்.(அணிலு பேசாம எப்படி கூப்பிடுறதுன்னு மொக்க ஜோக்கல்லாம் அடிக்க கூடாது)
Thanks..
I have tired keeping ur small lane neat, We live in a colony, and our house on a dead end. It was a beautiful place, with shady trees planted by us when colony was formed, with a ( lucky) open space full of babul trees , lots of birds and bee hives. We had a liked minded neighbour too who is careful about keeping our place clean. But we also have another neighbour who is mainly interested in distributing his refuse on the road ,and has tenents who follow him. The dump their refuse in the nala! and refuse to engage our refuse collector.!(only 40 bucks a month).
I am doing " munnabhai" gandhigiri, but it gets tiresome.. I am still trying. but what to do if you have a drunkard/obstinate guy as a neighbour?
// ஒரே தெருவில் வசிக்கும் 5 பேர் சேர்ந்து அதனை ஓரத்தில் ஒதுக்கிப் போட முடியாதா? முடியும், ஆனால் செய்ய மறுக்கிறோம். தன் வீட்டு வாசலில் ஓடும் சாக்கடையை கண்டுகொள்ளாமல் தான் கடந்துசெல்லும்போது மட்டும் மூக்கைப் பொத்திக்கொண்டு தாண்டிச் செல்பவன் தனக்கும் தன்னைச்//
this is the problem. These people will not listen to the colony welfare society. But perform big poojas and distribute prasadams wiht the nala flowing around them!.
நேத்து எங்க வீட்டுக்கிட்டக்கூட ரோட்டை கழுவிட்டிருந்தாங்க.. அமைச்சர் வரார்னுன்னு.. :))//
முத்து, கழுவி விட்டாங்களா? :) சூப்பர்!! :)
நீங்க ஏன் பேசாம உங்க வீட்டுக்கு டீ குடிக்க கூப்பிட்டுருக்கலாம்.(அணிலு பேசாம எப்படி கூப்பிடுறதுன்னு மொக்க ஜோக்கல்லாம் அடிக்க கூடாது)//
ஆதவன், எங்கள் வீட்டை சுற்றி நாங்களே சுத்தமாக பார்த்துக்கொள்கிறோம்.. இவங்க எதுக்கு தேவை இல்லாமல் அதான் கூப்பிடல.. :)
//I am doing " munnabhai" gandhigiri, but it gets tiresome.. I am still trying. but what to do if you have a drunkard/obstinate guy as a neighbour?//
Vetrimagal, plz use the tip which I used ..refer my comment to Raja.. :)
Post a Comment