நாம் எல்லோருமே முதல் பெயர் என்றால் நம் இனிஷியல் என்னவோ அது தான் முதல் பெயர் என்று சொல்லுவோம். நம்மை பொறுத்தவரை அப்படித்தான் காலம் காலமாக பழகி வருகிறோம். அப்பா பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக வைத்து, பின்பு நம் பெயரை எழுதுகிறோம். குறிப்பாக இது பாஸ்போர்ட் எடுக்கும் போது ஏகத்துக்கு சொதப்பிவிடும்.

நம் பிள்ளைகளின் பெயராவது உலகத் தரத்திற்கு (international Standard) எழுதப்பழகிக்கொண்டால் பிரச்சனை இருக்காது. என் பெயரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

G. Kavitha - Gajananan Kavitha

இதில்
(First Name) முதல் பெயர் விரிவாக்கம் என்றால் நாம் உடனே "G-Gajananan" எழுதிவிடுவோம்.

(Last Name) கடைசி பெயர் என்றால் - அதில் என்னுடைய பெயர் வரும் - Kavitha

ஆனால் உலகத்தரப்படி இது தவறு.

முதல் பெயர் என்பது என்னுடைய பெயர் - Kavitha
கடைசி பெயர் தான் என்னுடைய அப்பாவின் பெயர் - Gajananan

மேலும் சில உதாரணங்கள் :-

Karthik Patel
Sanjay Parikh
Raj kumar Singh
Srinu Mallesh Rao
Ramakrishna Reddu
Narayana Pagadala
Unni Menon
Narayanaswamy Iyar
jennifer Kooper
Karthikeyan Ramasamy
Meenakshi Selvakumar

kavitha Gajananan

இதில் போல்ட் செய்து இருக்கும் பெயர்கள் எல்லாமே கடைசி பெயர்கள் தான் அப்பா பெயராக இருந்தாலும் சரி, குடும்பம், வீடு , சாதி பெயராக இருந்தாலும் சரி நம் பெயர் எப்பவும் முன்னால் இருக்கும்படி கொடுப்பது நல்லது. பள்ளியில் பெயர் கொடுக்கும் போது கூட நம்முடைய பெயரை முதல் பெயராகவும், அப்பாவின் பெயரை, அல்லது குடும்பம் , சாதியின் பெயரை கடைசி பெயராகவும் கொடுத்து விடுவது நல்லது.

தமிழ்நாட்டில் அப்பாவின் பெயரையும், ஆந்திரா'வில் சாதி பெயரையும், கேரளாவில் குடும்பத்து அல்லது வீட்டின் பெயரையும் , வட இந்தியாவில் பெரும் பாலும் குடும்பத்து/சாதி பெயரையும் கடைசி பெயராக கொடுக்கிறார்கள்.

பாஸ்போர்டு'க்கு எழுதி கொடுக்கும் போதும் இப்படி கொடுப்பது நல்லது. இல்லை என்றால் வெளிநாடு செல்லும் போது பாஸ்போர்ட்'ன் பெயரை வைத்து நம்மை அழைத்தால் அது பெரும் பாலும் நம் அப்பாவின் பெயராகவே இருக்கும். :). அதுவும் பெண்களாக இருந்தால் தரும சங்கடமாக இருக்கும்.

இங்கேயுமே இன்சியூரண்ஸ், வங்கி என்று நாம் எங்கு இப்படி பெயர் கொடுத்து இருந்தாலும், அவரக்ள் அனுப்பும் கடிதம் நம் அப்பா பெயரை கொண்டுத்தான் வரும்.

அலுவலகத்திலும் முதல் பெயரை கொண்டுத்தான் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் முதல்பெயரை நம் பெயராக நினைத்து ஈமெயில் முகவரி கிரியேட் செய்து விடுவார்கள். gajananank@xxxxxxxx.com என்ற ஈமெயில் முகவரிக்கும் kavithag@xxxxxxx.com இதற்கு வித்தியாசம் உள்ளது அல்லவா.?

என்னுடைய பெயரை முதல் பெய்ராக கொடுக்கும் போது தான் எனக்கு kavithag@xxxxxxx.com என்ற முகவரி கிடைக்கும்.

பெயர் கொடுக்கும் போதே உலகத்தரத்தை யோசித்து நம் பெயரை முதல் பெயராக கொடுங்கள். உங்களை அப்பாவின் பெயர் கொண்டு யாரும் அழைக்க மாட்டார்கள்.

அணில்குட்டி அனிதா :- கவி எனக்கு முதல் பெயர் என்ன கடைசி பெயர் என்ன? மக்கா நீங்க யாரும் கவிக்கு ஐடியா தரப்பிடாது.. ஓவரா ஒரு போஸ்ட் போட்டு விளக்கி இருக்காங்க இல்ல.. என் பெயரை இவிங்க தான் வச்சாங்க. .எப்படி வச்சாங்க.. லோக்கலாவா? இண்ட்ர் நேஷ்னலா வான்னு இப்ப...இப்ப..எனக்கு தெரிஞ்சாகனும்.. சொல்லிட்டேன்.. ..!!

பீட்டர் தாத்ஸ் :- Name pronounced is the recognition of the individual to whom it belongs. He who can pronounce my name aright.