சில பாடல்கள் சின்ன வயது தாக்கங்கள்.. கோயில்களிலும் வீடுகளிலும் அடிக்கடி கேட்கும் பாடலாக இருந்த பாடல்களில் ஒன்று இது..
பாலு சார் ரொம்ப நல்லா பாடியிருப்பாங்க.. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்...
என்னால் முடிந்த அளவு பாடியிருக்கேன்..
|
அணில் குட்டி அனிதா:- கவி ப்ளீஸ் கரக்ட் தெ சென்டென்ஸ்ஸு.. //என்னால் முடிந்த அளவு பாடியிருக்கேன்..// என்னால் முடிந்த அளவு கொலை செய்து இருக்கேன் னு சொல்லுங்க..
காலம் போன காலத்துல அம்மணிக்கு ரொம்பவே ஆசைவருது.. என்ன செய்ய.. :) நீங்களும் யாரும் கண்டுக்க மாட்டேங்கறீங்க.. கல்லை எடுத்தோமா அடிச்சோம்மா அம்மணிய பீஸிய ஒடச்சோம்மான்னு இருந்து இருந்தீங்கன்னா.. நமக்கு எல்லாம் இப்படி ஒரு பிரச்சனை வந்து இருக்கும்மா? :( ...
இதோடா!! இங்கபாருங்க...!! தாத்ஸ்' ஓட தத்துவத்தை.. முடியலப்பா...!! முடியல..!! அம்மணி தனியா கவனிச்சிட்டாங்களோ... ????
பீட்டர் தாத்ஸ் :- “You don't love someone for their looks, or their clothes, or for their fancy car, but because they sing a song only you can hear.”
59 - பார்வையிட்டவர்கள்:
கடவுளே!
இனி பதிவர்களை ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது!
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இன்னும் எனக்கு கஷ்டம் வரலை!
அப்படி ஏதாச்சும் வந்தா ஆடியோவை பிளே பண்னிக்கிறேன்!
//கடவுளே!
இனி பதிவர்களை ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது!//
பாட்டை கேக்காமயே ஒருத்தர் பின்னூட்டம் போட்டு இருக்காரு
இதை நான் ஒத்துக்க மாட்டேன்..!!
எஸ்.பி.பி பாவம்!
அருமையான பாட்டுங்க. இத நம்ம அப்துல்லா அண்ணன் பாடி கேட்டா.. ஆ..
இந்த பாட்டொட எம்.பி3 இருக்காங்க?
அப்படி ஏதாச்சும் வந்தா ஆடியோவை பிளே பண்னிக்கிறேன்!//
இதுக்காகவே இன்னும் நாலு பாட்டு பாடி பதிவு போடறேன்.. என் பாட்டை கேட்காத நீங்கள் இருந்தா என்ன.. இல்லைன்னா என்ன?!! :))
கார்க்கி இது எல்லாம் ரொம்ப ஓவர்.. அதான் நான் பாடி இருக்கேனே.. அதுவும் எம்.பி3 தாங்க.. :))
கூகிலில் தேடுங்க.. ஈசியா கிடைக்கும்...நேற்றைக்கு அதில் இருந்து தான் எடுத்தேன்.. ஆனா சேவ் செய்து வைக்கல..!!
//எஸ்.பி.பி பாவம்!//
ஆமாம் ரொம்பவே பாவம்..!! :))
//இதுக்காகவே இன்னும் நாலு பாட்டு பாடி பதிவு போடறேன்//
4 பாட்டையும் முழுசா கேக்கும் அளவுக்கு உயிரோட இருக்க மாட்டேன்!
கொலை செய்யும்போது கூட கொஞ்சம் கருணையும் இருக்கணும்!
நல்லாவேபாடி இருக்கீங்க.. நாங்கள்ளாம் தைரியசாலியாக்கும் பாட்டு கேட்டாச்சு.. :)
//இதுக்காகவே இன்னும் நாலு பாட்டு பாடி பதிவு போடறேன்//
4 பாட்டையும் முழுசா கேக்கும் அளவுக்கு உயிரோட இருக்க மாட்டேன்!
கொலை செய்யும்போது கூட கொஞ்சம் கருணையும் இருக்கணும்!//
ஹா ஹா.. :)) அந்த பயம் எப்பவும் இருக்கனும்!!
நல்லாவேபாடி இருக்கீங்க.. நாங்கள்ளாம் தைரியசாலியாக்கும் பாட்டு கேட்டாச்சு.. :)//
நன்றி முத்து.. நீங்க எல்லாம் தைரியசாலிங்கன்னு தெரிஞ்சு தானே பதிவே போடறேன்.. இல்லன்னா.. என்னால யாருக்கும் எதுவும் ஆச்சுன்னு பேரு வரக்கூடாது இல்லையா ?!! :))
யாருமே பாட்டை கேட்டுட்டு கமெண்ட் போட்ட மாதிரி தெரியலையே!!
நல்லா பாடியிருக்கீங்க கவிதா...(இன்னும் ரெண்டு கவிதை..ப்ளீஸ்!!)
நிஜமாவே பொறுமையா இனிமையா பாடியிருக்கீங்க..வாழ்த்துகள்!!
//4 பாட்டையும் முழுசா கேக்கும் அளவுக்கு உயிரோட இருக்க மாட்டேன்!
கொலை செய்யும்போது கூட கொஞ்சம் கருணையும் இருக்கணும்!//
"தல"ய கொல பண்ற முயற்சிதான் இந்த பதிவா?
அவ்வ்வ்வ்வ்...பாவம் அவரு..
//நல்லா பாடியிருக்கீங்க கவிதா...//
முல்லை அப்பன்னா இது முன்னாடி எழுதின கவிதைக்கு இல்லையா???
//(இன்னும் ரெண்டு கவிதை..ப்ளீஸ்!!)//
இன்னும் இரண்டா..?!! :)))
"தல"ய கொல பண்ற முயற்சிதான் இந்த பதிவா?
அவ்வ்வ்வ்வ்...பாவம் அவரு..//
ரங்கன்..முதல்ல அவரு தள'யா இல்ல தல'யா ன்னு சொல்லுங்க..
எனக்கு தெரிந்து தல' ன்னா அது பாலா'த்தான்.. :)
இவங்கல்லாம் சொல்றதை பார்த்த கொஞ்சம் யோசனையா தான் இருக்கு.ஆனாலும் கவிதாவுக்காக ஆடியோவை ப்ளே பண்ணிட்டேன்.(என் பி.சி ல தான் வாய்ஸ் divise ரிப்பேர் ஆச்சே ?!) சத்தமே வரலை கவிதா!
:):):)
இவங்கல்லாம் சொல்றதை பார்த்த கொஞ்சம் யோசனையா தான் இருக்கு.ஆனாலும் கவிதாவுக்காக ஆடியோவை ப்ளே பண்ணிட்டேன்.(என் பி.சி ல தான் வாய்ஸ் divise ரிப்பேர் ஆச்சே ?!) சத்தமே வரலை கவிதா!//
விடமாட்டேன்.. உங்க மொபைல் நம்பரை மெயில அனுப்புங்க..ஆடியோ பைல்லா அனுப்பி வைக்கிறேன்.. :) கேட்டுத்தான் தீரணும்.. நீங்க.. :)))
//இதுக்காகவே இன்னும் நாலு பாட்டு பாடி பதிவு போடறேன்.. என் பாட்டை கேட்காத நீங்கள் இருந்தா என்ன.. இல்லைன்னா என்ன?!! :))//
கவிதா..அதுல ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுக்க நாங்க ரெடி! *நாங்க = நானும் பப்புவும்!!
“You don't hit someone for their looks, or their clothes, or for their fancy car, but because they sing a song only you cant hear.”
ராப்.. சூப்பர் சூப்பர் ன்னு ஒரு கமெண்டு வந்துதா.. நான் நினைத்தேன் என்னோடா பாட்டை கேட்டுத்தான் நீங்க போட்டு இருக்கீங்கன்னு.....!!
:( அவ்.....அது முந்தின போஸ்டுக்கா.. ஏன்ப்பாஆ?!!
சும்மா சொல்லக்கூடாது...
கேட்டதும் அம்மாவின் தாலாட்டுதான் நினைவுக்கு வந்தது....
கவி... செம குரல் உனக்கு...
இன்னும் நிறைய வேணும்...
அவரு "தள"யா? "தல"யா?ன்னு அவருக்கே தெரியாது...
கிகிகி...
தல மன்னிப்பாராக...
“You don't hit someone for their looks, or their clothes, or for their fancy car, but because they sing a song only you cant hear.”//
இது வேறையா..!! ராப்'பூ சென்ஷி இல்லாத குறைய தீர்த்து வைக்கறீங்களா??
சும்மா ஜாலிக்காக சொன்னேன், ஆனா நெஜமாவே நல்லா பாடிருக்கீங்க:):):) வாழ்த்துக்கள்:):):)
me the 25th:):):)
சும்மா ஜாலிக்காக சொன்னேன், ஆனா நெஜமாவே நல்லா பாடிருக்கீங்க:):):) வாழ்த்துக்கள்:):):)//
நிலைம மோசமாக போச்சி ..:)) இப்படி கேட்டு கேட்டு வாங்க வேண்டியதாக இருக்கு... :)) நன்றி ராப்..!!
//சும்மா சொல்லக்கூடாது...
கேட்டதும் அம்மாவின் தாலாட்டுதான் நினைவுக்கு வந்தது....//
நன்றி..
//கவி... செம குரல் உனக்கு...
இன்னும் நிறைய வேணும்...//
ரங்கன், வாங்கற கல்லடி எல்லாம் அந்த பக்கமா திருப்பி அனுப்பறேன் ஒகே யா?!!
கவி...
இதொட எட்டாவது தடவ கேட்டாச்சு..
இப்பொவும் கேட்டுட்டுதான் இருக்கேன்..
கல்லடி என்ன எந்த இடியா இருந்தாலும் அனுப்பு..
பிரிச்சு மேஞ்சுடுரேன்...
உன் பாட்ட குறை சொல்பவர்கள் "செவிட்டு பசங்க" ..
அய்யோ....
அபிராமி அபிராமி..
இது பத்தாவது தடவ....கேக்கறேன்.
இனிமே இந்த ரங்கன் உன் குரலுக்கு அடிமை...
சிறு வயது முதல், மிகவும் பிடித்த பாடல் இது.
அட நீங்க பாடியிருக்கீங்களா
வீட்ல போய் கேட்போம்
எதுக்கும் மாத்திரை வாங்கிட்டு போகனும்.
யார நம்மாட்டினாலும்
அணில நம்புறேன் ...
இனிமை.
இன்னும் கொஞ்சம் கணீர்னு பாடியிருக்கணும். கிணத்துக்குள்ள இருந்து பாடறமாதிரி இருக்கு. ஒரு வேளை என் ஸ்பீக்கர்ல எதும் பிரச்சனையா??
@சிபி
எனக்கு ஒன்னும் ஆகலை இது எதும் அபூர்வ சக்தியோ!?!?
kavitha, super voice ! இன்னும் நிறைய பாடுங்க.
ம- சிவா... , மணிகண்டன்,
போங்கப்பா நான் நம்பமாட்டேன்.. பின்னாடி ஒரு கும்மி நடக்குது எனக்கு தெரிஞ்சி போச்சி அணிலு சொல்லிச்சு..
எல்லாரும் ஈ.என்.டி''க்கு கும்பளா போறதா ப்ளான் செய்து இருக்கீங்க தானே?!! :((((((((
மோசமெல்லாம் இல்ல கவிதா. நல்லாத்தான் இருக்கு.
ஒரு பாட்டு பாடின, பாட்டுப் போட்டில தலை காட்டின யாரையாவது கூப்ட்டு சுதி, சங்கதி பத்தியெல்லாம் கேட்டு எலிமினேஷனா.. அடுத்த ரவுண்டுக்குப் போயாச்சான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.
அடுத்த ரவுண்டுக்கு பாட்டுக்கு இப்பவே ப்ராக்டீஸ் ஆரம்பிங்க. சொல்லி விடுங்க. வந்து கைதட்டறோம்!
அச்சச்சோ நிஜமாவே அருமை இதை அணில் பொடகழுத்துமேல அடிச்சி சத்தியம் பண்றேன்.
ரங்காஆஆஆஆஆ!!!.. நான் சந்தரமுகி யா மாறத்துக்கு முன்ன.. என் முன்னாடி வந்து நின்னுடுங்க!!..
ஆப்லைன்ல ஒன்னு..
ஆன் லைன்ல ஒன்னா??
எனக்கு தெரியும் நீங்க ஈ.என்.டி க்கிட்ட போன மேட்டரு... வாடி வா.. கையில கிடைச்சா கைமாத்தான்..!! :)
யப்பா....கடவுள் இருக்காரு !! ;))
இங்க உங்க பாட்டு கேட்க முடியவில்லை ;(
இந்தப் பாடலை விரும்பிக் கெட்ட நேயர்(நோயர்கள்!?)கள் தவறாமல்
கீழ்க்கண்ட பதிவிற்கு வருகை புரியுமாறு கேட்டுக் கொல்லப் படுகிறார்கள்!
http://scientifictamil.blogspot.com/2009/02/blog-post_10.html
யப்பா....கடவுள் இருக்காரு !! ;))
இங்க உங்க பாட்டு கேட்க முடியவில்லை ;(//
கோபி....நீங்களுமா??? :))
:)
கவி...
75வது தடவ கேட்கிறேன்...
விரைவில் சென்சுரி....
ஹாஹாஹா....
நன்றி...
கவி...
75வது தடவ கேட்கிறேன்...
விரைவில் சென்சுரி....
ஹாஹாஹா....
நன்றி...//
லூசாப்பா நீங்க..?!!
அவ்வ்வ்வ்வ்....
:(
எவளோ கொடுமையான சத்தமும் என் காதை ஒண்ணும் பண்ணாதுன்னு சொன்ன கேக்க மாட்டேங்கறாங்க கவி..
அதான் நிரூபிச்சுட்டு இருக்கேன்...
இது தப்பா?..
அவ்வ்வ்வ்வ்....
:(
எவளோ கொடுமையான சத்தமும் என் காதை ஒண்ணும் பண்ணாதுன்னு சொன்ன கேக்க மாட்டேங்கறாங்க கவி..
அதான் நிரூபிச்சுட்டு இருக்கேன்...
இது தப்பா?..//
தப்பே இல்ல.ரங்கன்....என்னை கலாய்க்கிறேன்னு நீங்க லூசா ஆயிடக்கூடாது இல்லையா?!! :))
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
கார்க்கி :- பிச்சை பாத்திரம் பாட்டுக்கு ஒரு பதிவு போட்டீங்க ! அது மாதிரி இந்த பாட்டுக்கு ஒரு பதிவு எழுதலாம் தான !
நல்ல முயற்ச்சி.
வாய்ஸ் மாடுலேஷன் ஏற்ற இறக்கங்களை பேலன்ஸ் செய்து பாடியிருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்கும்..
மற்ற படி மொக்கை மக்கள்ஸ் சும்மா கலாய்த்திருக்கிறார்கள் போல...
50 யாரும் இன்னும் போடலையா
அல்லது இன்னும் பப்ளிஷ் ஆகலையா.
வீட்ல நெட்டு படுத்துது.
அவசியம் பாட்ட கேட்டுட்டு கமெண்ட் போடுவேன் அதுவரைக்கும் வேற பதிவு போடக்கூடாது ஆமா ...
முழுதாய் கேட்டுவிட்டேன்.
இப்போ இரண்டாம் முறையா ஓடிக்கிட்டு இருக்கு.
அப்படியே
4+3 = 7 வயது குழந்தை பாடுவது போல் இருக்கு.
நல்ல குரல் நல்ல பாடல்.
முழுதாய் கேட்டுவிட்டேன்.
இப்போ இரண்டாம் முறையா ஓடிக்கிட்டு இருக்கு.
அப்படியே
4+3 = 7 வயது குழந்தை பாடுவது போல் இருக்கு.
நல்ல குரல் நல்ல பாடல்.//
ஜமால் அது என்ன 4 + 3 =7 ?? :)) நேரா 7 ன்னு சொல்லலாம் இல்ல..:) அதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கா?
ஆனா நீங்க இவ்வளவு சின்ன வயசை முதல் முதல்லா சொல்லியிருக்கீங்க..
ஒரு முறை என்னுடைய கதை ஒன்று தேன் துளி' யில் (டிவி நிகழ்ச்சி) வந்தது, அதை நானே படிக்க வேண்டும் என்று ஆசையுடன் தயாரிப்பாளரை கேட்டேன்.. அவர் சொன்னது.."பேபி வாய்ஸ், 8 வயது மாதிரி இருக்குன்னு" :)) டேரேக்டா ரிஜக்ட் செய்துட்டாரு :((((
அதுக்கும் குறைவாக சொன்னதால் :) நீங்க தான் இப்பத்திக்கு லேட்டஸ்ட்..
நல்ல முயற்ச்சி.
வாய்ஸ் மாடுலேஷன் ஏற்ற இறக்கங்களை பேலன்ஸ் செய்து பாடியிருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்கும்..
மற்ற படி மொக்கை மக்கள்ஸ் சும்மா கலாய்த்திருக்கிறார்கள் போல...//
கும்க்கி நன்றிங்க..
நம்ம மக்கள் எப்பவும் அப்படித்தானே :)
அருமை அருமை.....உங்க குரல் மிக அருமை...அதுவும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு.....அவ்ளோ எளிதா நான் வேற யாரும் படுறது முழுசா கேக்க மாட்டேன்..உங்க குரல் என்னை பொறுமையா கேக்க வச்சதுக்கு காரணம் நீங்க அவ்ளோ அழகா பாடிருக்குறது.....நிறைய இந்த மாதிரி பதிவு போடுங்க...
நல்ல தாங்க இருக்கு!! ;)
கவிதா, இப்பத்தான் பாட்டைக் கேட்டேன்.. நல்லா இருந்திச்சி.. நல்ல பொறுமையாப் பாடியிருக்கிங்க..
5 வயசு குழந்தை குரல் உங்களுக்கு.. !!
சீமாச்சு..
நிலவும் அம்மாவும், ரொம்ப நன்றிங்க.. என் குரலுக்காக பொறுமையாக கேட்டதற்கு..ஆமா எதுவும் கலாய்க்கலியே நீங்க? :)
-----------------------------
இத்யாதி நன்றிங்க.. :)
------------------------------
கவிதா, இப்பத்தான் பாட்டைக் கேட்டேன்.. நல்லா இருந்திச்சி.. நல்ல பொறுமையாப் பாடியிருக்கிங்க..
5 வயசு குழந்தை குரல் உங்களுக்கு.. !!
சீமாச்சு..//
சீமாச்சு..:( ஏங்க..விட்ட எல்லாரும் பிறந்த குழந்தைன்னு சொல்லுவீங்க போல... :) முடியலங்க.. !! :)
நல்ல குரல்! நல்லா பாடி இருக்கீங்க!
Post a Comment