பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய தலையாய கடமை நம் காவல்துறையினருக்கு இருக்கு. அதை மறந்து, தன்னை மறந்து ஒருவர் விடாமல் என்னவோ பாக்கிஸ்த்தானோடு போர் செய்ய போவது போல் நம் வழக்கறிஞர்களை கூட்டம் கூட்டமாக ஓடி அடித்து நொறுக்கும் காட்சிகளை பார்க்க மனம் கொதிக்கிறது...

அடித்து நொறுக்குகிறார்கள் சரி, அது என்னங்க வளாகத்தில் நிற்கும் கார், இரண்டு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்குகிறார்கள் ? கார், காராக சென்று கண்ணாடியை லத்தியால், கல்லால், காலால் அடித்து நொறுக்குகிறார்கள், ஒரு வழக்கறிஞரை பத்து காவல்துறையினர் ஒன்றாக சேர்ந்து அடித்து நொறுக்குகிறார்கள், இதை எல்லாவற்றையும் விட ஒரு நல்ல காவலர், உயர்நீதிமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஒரு ஜன்னல் கண்ணாடியை வேகமாக ஓடி சென்று உடைத்துவிட்டு வெறியுடன் கத்துகிறார். ? புரியலைங்க.. !! அப்படி என்ன காழ்புணர்ச்சி.. தன்னையும் தான் செய்யும் காவல் வேலையையும் மறந்து இப்படி பொது சொத்தை காப்பாற்ற வேண்டிய இவர்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்களின் கட்டுப்பாட்டை இழந்து....

எங்க போயிக்கிட்டு இருக்கோம் நாம..... ?!! புரியலைங்க... தினம் தினம் ஒரு பிரச்சனை.... அதை தீர்க்க முனைவதற்குள் வேறு ஒன்று.. இதில் எதையுமே.. சகித்துக்கொள்ள கூடியதாக இல்லை..

எதையுமே எளிதிலோ, யாராலுமே விரைவிலோ தீர்க்கக்கூடியதாக தெரியவில்லை.. ... இந்த நிகழ்வு இதுவரை வரலாற்றில் காணாத காவல் துறையின் உச்சக்கட்ட அராஜக செயலாகவே படுகிறது.. :((((((((((((((((((

அணில்குட்டி அனிதா :- போலிசு மாமாங்க.. அடிக்கறத பாத்தே ஏன் ஒடம்ம்பு நடுக்கம் கொறையல.. ..இதுல இப்ப அம்மணிவேற சாமியாடுது. . நான் ஓரங்கட்றேன்ன்..!! :(

பீட்டர் தாத்ஸ் :- Policemen so cherish their status as keepers of the peace and protectors of the public that they have occasionally been known to beat to death those citizens or groups who question that status.