சிம்புவின் சகலைன்னு சொன்னவுடனே மக்கா உங்க எல்லாருக்கும் யாருன்னு தெரிஞ்சி போயிருக்கும்..ஆனா கொஞ்ச நாளா அதுல கொஞ்சம் டவுட் வந்து இருக்கு... சிம்புவின் சகலையா.. .இல்ல சிம்புவின் மச்சனா'ன்னு தான் டவுட் அதிகமாயிடுத்து.. அதை கிளையர் பண்ணிக்கத்தான் இங்க கூப்பிட்டு அண்ணன் சிபிக்கு கஞ்சி ஊத்தறோம்

இதுல கவிதாக்கு நோ வேலை.. அதனால் வூட்டுக்கு அனுப்பியாச்சி.. ஒன்லி அண்ணன் சிபி வித் அழகி அணிலு' தான்.!!

அணிலு : சிபி அண்ணே... நயந்தாரா எப்படி இருக்காங்க.. ? ஹி ஹி..அவங்க நல்லா இருந்தா நீங்க நல்லா இருப்பீங்கனு ஒரு குருட்டு நம்பிக்கை :)
சிபி: இதில் குருட்டு நம்பிக்கை என்ன வேண்டிக்கிடக்கு! நல்லாவே (என்னை மாதிரி) கண்ணாடி போட்டுகிட்டு நம்பலாம்! நயன்நல்லா இருந்தா நான் நல்லா இருப்பேன்! நான் நல்லா இருந்தா அவங்களும் நல்லா இருப்பாங்க! வைஸ் வெர்ஸா! இதில் எந்த சந்தேகமும் இல்லை! (துடைப்பம் நல்லா இருக்குற வரை நான் நல்லா இருக்க மாட்டேன்னு எங்க வீட்டு அம்மணி சவுண்ட் விடுறாங்க. ஜஸ்ட் இக்னோர் இட்)

அணிலு:- சமீபத்தில் சந்தோஷு நீங்க நயனோட சகோதரன் என்று சொல்லி இருக்காரு.. அதனால இப்ப நீங்க சிம்புவுக்கு என்ன உறவு?

சிபி:- சந்தோஷ்க்கு கடந்த சில வருடங்களா மனநிலை சரியில்லை! கொஞ்சம் பாதி(முழு!?)க்கப் பட்டிருக்கிறார்! இல்லாட்டி பஸ்லே முன் சீட்டுப் பெண்மணியின் தலைலே பேன் பார்த்திருப்பாரா?அதுலேர்ந்து அவரோட தங்கச்சி நயனௌ மத்த எல்லாருகும் தங்கச்சின்னு உளறிகிட்டிருக்காரு! இது அடுத்தவர் பிரச்சினைகளை தன் பிரச்சினையா நினைக்க ஆரம்பிச்சதோட பின் (பேன்1?) விளைவு. பாவம்! நல்ல மனுஷன் சந்தோஷ்! பின் குறிப்பு, முன் குறிப்பு ன்னு மாத்தி மாத்தி போட்டு இப்போ எந்த குறிப்புன்னு தெரியாம தடுமாறிகிட்டு இருக்காரு! மே(பிபரவரி!?) காட் ப்ளஸ் ஹிம்!

அணிலு: கேள்விய சரியா புரிஞ்சிக்கோங்க.. சிம்புவுக்கும் உங்களுக்கும் என்ன உறவுன்னு கேக்கல... என்ன உறவு முறை ன்ன்னு கேக்கறேன்.
சிபி :- சிம்பு யாரு நடுவுலே! அவருக்கும் எனக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் கிடையாது! அவரு படத்தை நான் கலாய்ப்பேன்! நான் கலாய்க்க அவரு படம் எடுப்பாரு அம்புட்டுதேன்!

அணிலு:- வீட்டிலு கட்ட(அ)வுட் நயன்'னோட நீங்க நிக்கற போட்டோ வச்சி இருக்கீங்களாமெ..அதுல கூட நிறைய சானியும், முட்டையும் அதுவும் குறிப்பா உங்க மூஞ்சியில அடிச்சி இருக்காங்களாமே.. இதை பத்தி.... ?
சிபி:- சாணி முட்டை அளவுக்கெல்லாம் இன்னும் நான் அரசியல் செல்வாக்கு அடைந்துவிடவில்லை! கொஞ்சம் கவுரவமா வீட்டுக்கார அம்மணி வைக்குற சூடு, கரண்டித் தாக்குதல்கள் இந்த மாதிரி செல்லமா அஹிம்சைக் கண்டிப்புகள் மட்டுமே!சாம்பிளுக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பி அனுப்பறேன் பாரு


அணிலு:- தனியா ஒரு நயன் சைட் ஆரம்பிச்சி ஜொள்ளு வுடறீங்களே... இது உங்களுக்கு தேவையா?
சிபி:- தேவைதான்! ரஜினி ரசிகர்கள் ரஜினிக்காக வெப் சைட் வெச்சிருக்காங்க. டாக்டர் விஜய் ரசிகர்கள் அவருக்காக வெச்சிருக்காங்க! உன் ஃபேவரைட் குஷ்பு மேடத்துக்காக கோயிலே கட்டினாங்க! நான் ஏன் நயனுக்காக தனியா சைட் வெச்சிருக்கக் கூடாது!

அணிலு :- அந்த கட்ட(அ)வுட் போட்டோவில உங்க தங்கச்சி மாதிரியே நயன் அழகா இருக்கீங்காளே அதை பத்தி நாலு வார்த்தை... :)

சிபி:- 1. நயன் 2.ஈஸ் 3.ஆல்வேஸ் 4.அழகு. (ஹிஹி என்னைப் போலவே!)

அணிலு:- எப்படி உங்க தங்கமணி உங்களை வீட்டுக்குள்ள சேர்க்கிறாங்க...?
சிபி:- வாசல் வழியாத்தான்! நான் வீட்டுக் போயி காலிங்க் பெல் அடிப்பேன்! அவங்க வந்து கேட்டைத் திறந்து விடுவாங்க!நாய் வெளியே வந்து துரத்துற மாதிரி பாவ்லா காட்டும்! நான் அப்போ வீட்டுக்குள்ளே எண்ட்ரி ஆகிடுவேன்!
தங்க்ஸ் ஊருக்குப் போற நேரம் பிரியாணியெல்லாம் வாங்கி கொடுத்து நாயை நம்ம சைட் பழக்கப் படுத்தி வெச்சிருக்கேன்!

அணிலு:- நயன் பெயரை வச்சி நீங்க அரசியல்'ல நொழன்சி பெரிய ஆளா ஆகலாம்னு உங்களுக்கு ஏதாச்சும் ஐடியா இருக்கா? அதனால தான் நயனுக்கு ஒரு சைட்ட்ட்ட்ட்ட்டாஆ?
சிபி:- அரசியலெல்லாம் நமக்கு அலர்ஜி! அப்படியெ அவங்களை வெச்சி ஓட்டுக்கேக்க போனாலும் நம்ம இளைய தளபதி வந்து டேன்ஸ் ஆடி மாத்தி பிரச்சாரம் செய்ய வெச்சிடுவாரு!

அணிலு :- நீங்க சிம்புக்கூட நடுத்தெருவில கட்டி புரண்டு சண்டை போட்டீங்களே அதை பத்தி விவரமா சொல்லுங்க.. இது இந்த காதலர் தினத்தில் எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. சிபி :அது பார்லே நடந்த ஊறுகாய்த் தகராறு! யார் போதைக்கு யார் ஊறுகாய் என்ற விஷயத்துலே ரெண்டு பேர்க்கும் கருத்து மாறுபாடு ஏற்பட்டு 'குடி'மக்கள் நாகரீகம் கருதி நடுத் தெருவுக்கு வந்து சண்டை போட்டுகிட்டோம்! அவ்வளவுதான். (ஊருக்குள்ளே மானம் போயி வெளியில தலை காட்ட முடியலைன்னு எங்க விட்டுலே முனகுவாங்க.. லீவ் இட்)

அணிலு:- நயனுக்கு சரியான ஹீரோ யாருன்னு சொல்லுங்க.. (நீங்கன்னு சொல்லி கல்லடி வாங்கப்பிடாது)

சிபி:-நீங்கன்னு எப்படிங்க சொல்ல முடியும்! அணில் குட்டியைப்போயி ஹீரோன்னு சொல்லுவேனா! நாமக்கல் சிபி' தான் எப்பவுமே பர்ஃபெக்ட் மேட்ச்! (ஹிஹி.. எங்க வீட்டுலேர்ந்து கால் வருது.. ஜஸ்ட் இக்னோர் இட்)

அணிலு:- நயனுக்கு என்ன டிரஸ் சூப்பரா இருக்கும்...?

சிபி:- சேலை/தாவணி தான் எப்பவுமே அழகு! ஜீன்ஸ் டிஷர்ட், அப்புறம் யாரடி நீ மோகினி படத்துல வர மாதிரி சுரிதார்ஸ்…இப்படி எந்த டிரஸ்ஸுமே அவங்க போடுறதால அழகா மாறிடும்! எக்ஸெப்ஷனு பார்த்தீன்னா பில்லா படத்துலே போட்டுகிட்டிருந்த டிரஸ் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை!

அணிலு :- நயன் உங்களை பாத்து அண்ணா' ன்னு கூப்பிட்டா அந்த நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிமிடங்களா இருக்கும் ?!

சிபி:- புதுசா ஒண்னும் இருக்காது! நானும் அவா மாதிரியே பேசப் பழகிக்குவேன்! அத்தான்னு சொன்னாலும் ஓகே, ஏண்ணான்னு கூப்பிட்டாலும் ஓக்கே!

அணிலு :- சிம்புவும் நயனும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக்கிட்ட ஒரு புகைப்படம் தெரு தெருவா ஒட்டி இருந்தாங்களே? அதை பத்தி உங்களின் தாழ்மையான கருத்து என்ன?

சிபி:- பழையன மறப்போம்! புதியன நினைப்போம்! ரோட்டுல போறப்போ காக்கா எச்சம் போட்டா என்ன பண்ணுவோம்! ஜஸ்ட் காயிதத்தை எடுத்து துடைச்சி போட்டுட்டு போயிட்டே இருப்போம் அல்லவா! அந்த மாதிரிதான்!

அணிலு:- சிம்புவுக்கு போட்டியா நீங்களும் ஒரு படத்தை டிரேக்ட் செய்து, பாடி, டான்ஸ் ஆடினா ..நயன் உங்க பின்னாடி வருவாங்க இல்லையா? எனி ஐடியா யூ ஹாவ் ஆன் திஸ்?

சிபி:- நாட் எ பெஸ்ட் ஐடியா! இந்த மாதிரியெல்லாம் செஞ்ச்சா நயன் என் பின்னாடி வராங்களொ இல்லையோ ஒட்டு மொத்த தமிழகமும் என் பின்னாடி வரக் கூடும்! இனிமே இந்த கொலைவெறித் தாக்குதல் செய்வியா செய்வியான்னு என்னை விரட்டிகிட்டு!

அணிலு :- நயன் உங்க கனவுல வந்தா என்ன பாட்டு பாடுவாங்க..?

சிபி:- "கொஞ்ச நேரம் கொஞ்ச நேர, கொஞ்சிப் பேசக் கூடாதா…""ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்… , கண்ணுக்குள்ளே காந்தம் வைத்தகட்டழகுக் காதலனே!" , நல்ல நேரம் நீ வந்தது இந்த நேரம் இனிதானது, அதென்ன அடுத்தவங்க எழுதுன பாட்டெல்லாம் பாடுறது! எங்க டூயட்டை நானே எழுதுவேன்!

அணிலு :- நீங்க சிம்புவுக்கு மச்சான்னா சகலையா கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே?

சிபி:- எனக்கும் சிம்ம்புவுக்கும் எதுவும் இல்லைன்னு முதலிலேயே சொல்லிட்டேன் பாரு..

நயன் நாயகன், சிம்புவின் சகலை சிபி'யின் தத்துவம் :- தப் வே மே ரோட்டி பக்கீத்தோ கச்சினா சம்ஜோபாஜி லடுக்கி கடீத்தோ அப்னீ பீவி ன சம்ஜோ