குழந்தை என்னவோ நியாயமான கேள்வி கேட்டு இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள், குட்டீஸ் (சிபி தாத்தா நீங்க இதுல இல்ல) எல்லோரும் என் பதிலையும் எதிர்பார்க்கிறார்கள். அதனால் என் ரவுண்டுக்குட்டிக்கு என் பதில்கள் இதோ...
1. y do u boring me with ur usual sambar, poriyal, karakozhambu..dont u know to prepare chicken role, chicken puff, etc?
அம்மா உனக்கு எத்தனையோ தரம் சொல்லிவிட்டேன்.. வேலைக்கு போறேன்..என்னால் முடிந்த அளவு செய்து தரேன்னு. அதுவும் இல்லாமல் சிக்கன் ரோல் எல்லாம் நீ நினைக்கும் அளவு இண்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட்' க்கு எனக்கு வரவில்லை.. நான் ஏதோ ஒன்று ரோல் ன்னு செய்து கொடுத்தா நீ பேசாமயா சாப்பிடற.. ..ஏன்டா செய்து தந்தோம்னு நினைக்கற அளவுக்கு என்னை ஓட்டற.....அவ்வ்வ்வ்வ்வ்வ்!!
2. y do u shout for silly reasons?
ம்ம்....முன் அளவுக்கு இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன். .ஆனா இப்பவும் நீ இப்படி நினைச்சா.. இன்னும் குறைச்சிக்க ட்ரை பண்றேன்..! :)
3. y do u hate ur son playing games?
நான் ஆபிஸ் விட்டு வந்தவுடனே நீ எங்க இருக்கேன்னு தான் பார்ப்பேன். உன்னுடன் உட்கார்ந்து பேசவேண்டும்னு ஆசையா இருக்கும். ஆனா நீ அந்த கேம்ஸ்'ஐ விட்டு வெளிய வரவே மாட்டே..அம்மா வந்தேனே இருக்கேனா இல்லையான்னு நீ பார்க்கறது கூட இல்ல. உன்னோட அட்டன்ஷனை என் பக்கம் திருப்ப என்ன என்னவோ வில்லித்தனம் செய்ய வேண்டியதாக இருக்கு.. என்னுடன் பேச ஒரு அரை மணி நேரம் நீ ஒதுக்கக்கூடாதா?
4. y do u wake up at 12 in the night and bug ur son?
மேலே சொன்ன அதே காரணம். 10.30 மணி வரை உனக்கு டைம் சொல்லி இருக்கு. .அதுக்கு மேல தினமும் உட்கார்ந்து இருக்க, உன்னை தூங்க வைக்க நான் அர்த்த ராத்திரியில் நடமாட மட்டும் இல்ல கத்த வேண்டி இருக்கு..என்ன செய்ய நீதான் என்னை அப்படி ஆக்கிட்ட.... :(
5. why dont u give enough pocket money to ur kid?
இப்போது கொடுப்பதே அதிகம் என்று நான் நினைக்கிறேன்.. இதையே சேர்த்து வைத்து உனக்கு தேவையானதை வாங்க பழகிக்கொண்டால் இன்னும் சந்தோஷப்படுவேன் :)
6. y do u insist that ur son should like the heroin that u like?
எனக்கு பிடிக்கும் உனக்கு பிடிக்குமான்னு தான் கேட்டு இருக்கேன். .சில சமயம் நீ பிடிக்கலைன்னு சொன்னா ஏன் பிடிக்காதுன்னு கேட்டு இருக்கேன்..ஆனா இன்ஸிஸ்ட் பண்ணமாதிரி தெரியல... ..
7. would u let ur son have a girlfriend in college?
உன்னிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கல, பரவாயில்லை. ஒன்று இல்லை நிறைய தோழிகள் வைத்துக்கொள்..ஆனால் உன் பர்ஸ் காலியாகாமல் அவர்கள் பர்ஸை காலி செய்ய பழகிக்கொள். உனக்கு பாக்கெட் மணி கொடுக்கறதே வேஸ்ட், இதுல அதுங்க எல்லாத்துக்கும் சேர்த்து என்னால் கொடுக்கமுடியாது. பெண்களுக்காக உன் பொன்னான நேரத்தை அதிகம் செலவழிக்காதே. .உன் அறிவுக்கும் ?!! அழகுக்கும் ?!! தானாக பெண்கள் உன் பின் வருவார்கள் (....ஸ்ஸ் இப்பத்திக்கு இது போதும்)
8. y u become so cunning villi when u complaint me to appa?
அம்மாவை எளிதாக ஏமாற்றுகிறாய், அப்பா என்ற வார்த்தை வந்தால் தான் கொஞ்சம் பயம் இருக்கிறது.. என்ன செய்வது என்னால் முடியாததை அப்பாவை கொண்டு சாதிக்கிறேன்.
9. y dont u let ur son eat fast food daily?
இல்லை.. அதன் விளைவுகள் என்னைவிட உனக்கு நன்றாக தெரியும். எப்போதாவது பரவாயில்லை என்றும் கண்டிப்பாக இல்லை.. நீ இப்பவும் பிடிவாதம் பிடித்தால் நானும் தினமும் சாப்பிடுகிறேன்... உனக்கு சரி என்றால் இருவரும் சேர்ந்தே சாப்பிடுவோம். எப்படி வசதி !! :)
10. y dont u stop treating me like a new born baby?
ம்ம்.... நீ இப்ப இல்ல எப்பவும் எனக்கு குழந்தைதான்.. என்ன உனக்காக வெளியிடங்களில் எல்லோர் எதிரிலும் வேண்டுமானால் கொஞ்சாமல் இருக்கிறேன்.. போதுமா ?!! :)
அணில்குட்டி அனிதா:- ரெண்டும் வீட்டுகுள்ள பேசறத விட்டுட்டு இப்படி பதிவு போட்டு பேசுக்குதுங்க. .என்னத்த சொல்றது.. காலம் கெட்டு போச்சி....!
பீட்டர்தாத்ஸ் : A mother understands what a child does not say.
ரவுண்டு குட்டிக்கு என் பதில்கள் பத்து..!
Posted by : கவிதா | Kavitha
on 11:36
Labels:
அப்பாவிற்காக
Subscribe to:
Post Comments (Atom)
54 - பார்வையிட்டவர்கள்:
//அணில்குட்டி அனிதா:- ரெண்டும் வீட்டுகுள்ள பேசறத விட்டுட்டு இப்படி பதிவு போட்டு பேசுக்குதுங்க. .என்னத்த சொல்றது.. காலம் கெட்டு போச்சி....!//
அக்காங்க்!
//(சிபி தாத்தா நீங்க இதுல இல்ல)//
பாட்டி சொல்லைத் தட்டாதேன்னு சொல்லித் தந்திருக்காங்க!
சோ நோ அப்பீல்!
//அம்மா உனக்கு எத்தனையோ தரம் சொல்லிவிட்டேன்.. வேலைக்கு போறேன்..என்னால் முடிந்த அளவு செய்து தரேன்னு. //
விடுமுறை நாட்களில் நிதானமா கத்துகிட்டு டிரை பண்ணலாமே!
உங்க பையனையே ரெசிப்பி தேடிப் பிடிச்சி கொண்டு வரச் சொல்லி, அவனையும் கூட வெச்சிகிட்டு டிரை பண்ணி சமைச்சி கொடுங்க!
அதுக்கப்புறம் ஏன் இப்படி சொல்லுறார்!
(அதுக்கு இப்ப இருக்குற சமையலையே பெட்டர்னு சொல்லி பேசாம சாப்பிடுவார் பாருங்க)
// y do u shout for silly reasons?//
இது பதிவுலகத்துலே இருக்குறவங்களேஎ தெரிஞ்சி இருக்கு! உங்க பையனும் கேட்டதுல ஆச்சரியம் இல்லை!
:))
அக்காங்க்!..//
சிபி ஆரம்பிச்சிட்டீங்களா? :))))))
//.முன் அளவுக்கு இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன்.//
நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன்! ஆனா நம்ப முடியவில்லை இன்னும்!
//பாட்டி சொல்லைத் தட்டாதேன்னு சொல்லித் தந்திருக்காங்க!
சோ நோ அப்பீல்!
//
ம்ம் என்னை நீங்க பாட்டி ன்னு சொன்னா எல்லாம் நான் கவலையே படமாட்டேன்ன். .ஆனா உங்களை தாத்தா;ன்னு சொல்ல வச்சிட்டேன் அங்க அங்க தான் நீங்க கவனிக்கனும்! :)
//மேலே சொன்ன அதே காரணம். 10.30 மணி வரை உனக்கு டைம் சொல்லி இருக்கு. .அதுக்கு மேல தினமும் உட்கார்ந்து இருக்க, உன்னை தூங்க வைக்க நான் அர்த்த ராத்திரியில் நடமாட மட்டும் இல்ல கத்த வேண்டி இருக்கு..என்ன செய்ய நீதான் என்னை அப்படி ஆக்கிட்ட.... :(//
அவரை எழுப்பிட்டு 12 மணிக்கு நீங்க ஆன்லைன்ல இருக்கீங்களே :P
//உன்னோட அட்டன்ஷனை என் பக்கம் திருப்ப என்ன என்னவோ வில்லித்தனம் செய்ய வேண்டியதாக இருக்கு.. என்னுடன் பேச ஒரு அரை மணி நேரம் நீ ஒதுக்கக்கூடாதா?//
உங்க பையனுக்கு பிடிச்ச டாபிக்கா பேசிப்பாருங்க! அப்பத்தான் ஆர்வம் காட்டுவான்!
ஆபீஸ் முடிஞ்சி வந்தவுடன் இன்னிக்கு என்னென்ன சப்ஜெக்ட், என்னென்ன படிச்சே, ஹோம்வொர்க் எல்லாம் செய்தாச்சான்னெல்லாம் கேட்டுகிட்டிருந்தா இப்படித்தான்!
அம்மாகிட்டே பேசுறதுக்கு பதிலா சீரியல் பார்க்கலாம்னு பசங்க கெளம்பிடுவாங்க!
அதுக்கப்புறம் ஏன் இப்படி சொல்லுறார்!
(அதுக்கு இப்ப இருக்குற சமையலையே பெட்டர்னு சொல்லி பேசாம சாப்பிடுவார் பாருங்க)//
சிபி....குட் ஐடியா...!! ட்ரை பண்றேன்...
//சிபி ஆரம்பிச்சிட்டீங்களா//
ஆமாம்! ஆரம்பிச்சிட்டேன்!
//A mother understands what a child does not say//
அப்போ சொல்றதை??? ;)
//ம்ம் என்னை நீங்க பாட்டி ன்னு சொன்னா எல்லாம் நான் கவலையே படமாட்டேன்ன். .ஆனா உங்களை தாத்தா;ன்னு சொல்ல வச்சிட்டேன் அங்க அங்க தான் நீங்க கவனிக்கனும்! :)//
அதாவது எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை கான்செப்ட்!
ஹிஹி!
ஒரு தாத்தாவுக்கே நீங்க பாட்டின்னா? மத்தவங்களுக்கெல்லாம்...
இது பதிவுலகத்துலே இருக்குறவங்களேஎ தெரிஞ்சி இருக்கு! உங்க பையனும் கேட்டதுல ஆச்சரியம் இல்லை!
:))
//
அவன் கேள்வி கேட்கும் போதே இதை யாராவது சொல்லுவீங்கன்னு எதிர் பார்த்தேன்.. ஸ்ஸ் அப்பாட தப்பிச்சோம்னு நினைச்சா? ஆரம்பிச்சிட்டீங்களா?
:))
அனானி/அதர் ஆப்ஷன் இல்லாம வெச்சிருக்கீங்க!
இதிலிருந்தே உங்க அடக்குமுறை எந்த அளவுக்குன்னு தெரியுது!
பசங்க ஏன் கேள்வி கேக்க மாட்டாங்க!
//ஸ்ஸ் அப்பாட தப்பிச்சோம்னு நினைச்சா? ஆரம்பிச்சிட்டீங்களா?
//
விட்டுடுவமா என்ன?
//உன்னை தூங்க வைக்க நான் அர்த்த ராத்திரியில் நடமாட மட்டும் இல்ல கத்த வேண்டி இருக்கு..என்ன செய்ய நீதான் என்னை அப்படி ஆக்கிட்ட....//
தூக்கம் வந்தா தானா தூங்கிடப் போறாரு!
பையன் தூங்கின பிறகு உங்களுக்கு சிஸ்டம் வேணும்னு சொல்லுங்க!
அதான் நேர்மை!
உங்க பையனுக்கு பிடிச்ச டாபிக்கா பேசிப்பாருங்க! அப்பத்தான் ஆர்வம் காட்டுவான்!
ஆபீஸ் முடிஞ்சி வந்தவுடன் இன்னிக்கு என்னென்ன சப்ஜெக்ட், என்னென்ன படிச்சே, ஹோம்வொர்க் எல்லாம் செய்தாச்சான்னெல்லாம் கேட்டுகிட்டிருந்தா இப்படித்தான்!
அம்மாகிட்டே பேசுறதுக்கு பதிலா சீரியல் பார்க்கலாம்னு பசங்க கெளம்பிடுவாங்க!//
சிபி.. நான் படிப்பை பற்றி பேசவே மாட்டேன்.. :) அவனே திட்டுவான் புள்ளைக்கு என்ன பரிட்சை'ன்னு கூட தெரியாமே இருக்கியேன்னு.. :)
ரொம்ப பொதுவான விஷயம் குறிப்பாக காலேஜ்'ஜில் நடந்த விஷயங்கள், நண்பர்கள் தோழிகள் பற்றி எல்லாம் பேசுவோம்.. ... :) என் அலுவலக விஷயங்களும் பேசுவோம்.. புது சினிமா விமர்சனம் அவனிடம் தான் கேட்பேன்.. ஆனா இப்பத்தான் பேசவே மாட்டறான்.. !! :(
//இப்போது கொடுப்பதே அதிகம் என்று நான் நினைக்கிறேன்.. இதையே சேர்த்து வைத்து உனக்கு தேவையானதை வாங்க பழகிக்கொண்டால் இன்னும் சந்தோஷப்படுவேன்//
அவருக்கு எவ்ளோ தேவை, குறைந்த பட்சம் என்ன அதிக பட்சம் என்னன்னு நீங்க எப்படிங்க முடிவு செய்யுறீங்க?
கொடுக்குற பணம் பத்துதா ன்னு ஒரு நாளாச்சும் கேட்டிருக்கீங்களா?
வயசுப் பசங்களுக்கு எவ்ளோ செலவு இருக்கும்!
உங்க செலவுகளை குறைச்சி சேமிச்சி பையனுக்கு தேவையானதை வாங்கி கொடுக்கப் பாருங்க!
//ஒன்று இல்லை நிறைய தோழிகள் வைத்துக்கொள்.//
ஹலோ, friend வேற girlfriend வேற. நிறைய girlfriend வச்சிக்கிட்டா, உங்க புள்ளைய அந்த girlfriendகளே பிரிச்சி மேய்ஞ்சிடுவாங்க :-)
//எனக்கு பிடிக்கும் உனக்கு பிடிக்குமான்னு தான் கேட்டு இருக்கேன். //
முதல்ல உனக்கு யாரை பிடிக்கும்னு கேட்டுட்டு அப்புறமா உங்க ரசனையைச் சொல்லணும்!
அம்மா ஃபீல் பண்ணுவாங்களேன்னு கூட உங்க ரசனையோட தன் ரசனையும் ஒத்துப் போகுற மாதிரி பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பத்தந்தை ஏன் உண்டாக்குறீங்க?
//A mother understands what a child does not say//
அப்போ சொல்றதை??? ;)//
காயூ..இப்படி போட்டு வாங்கினா எப்படி?!!
:))) பேசறதை எல்லாம் புரிஞ்சிக்க மாட்டோம்ப்பா .:)
/.சில சமயம் நீ பிடிக்கலைன்னு சொன்னா ஏன் பிடிக்காதுன்னு கேட்டு இருக்கேன்//
பிடிக்கறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்! பிடிக்காததுக்கு ஒரு காரணமும் சொல்ல முடியாது! (லவ் டுடே)
இப்படியெல்லாம் எசகு பிசகா கேட்டா யாருக்குத்தான் கோவம் வராது!
அவரை எழுப்பிட்டு 12 மணிக்கு நீங்க ஆன்லைன்ல இருக்கீங்களே :P//
ஹ ஹா உண்மை!! சில சமயம் அவனை எழுப்பற சாக்கில் உட்கார்ந்துடுவேன்.. ஆனா கண்டிப்பா ரொம்ப நேரம் இருக்காது. .அவன் என்னை திருப்பி திட்டுவான்..!! அதனால் எழுந்துவிடுவேன்.. :)
//ஆனால் உன் பர்ஸ் காலியாகாமல் அவர்கள் பர்ஸை காலி செய்ய பழகிக்கொள்.//
சூப்பர் அட்வைஸ்!
ஏங்க கேர்ள்பிரண்ட்னாலே பர்ஸை காலி செய்ய வைக்கிறதுதானா? அப்படி அநாவசியமா உருவகப் படுத்தி வெச்சிருக்கீங்க!
உங்க பையனை நல்ல கவிஞனா மாத்தலாம்! தனித்திறமைகளை வெளையே கொண்டு வரும் முயற்சிகளை எடுப்பதே அவங்கதான்!
நீங்க ஏன் அந்த கோணத்துல பார்க்குறதே இல்லை!
நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன்! ஆனா நம்ப முடியவில்லை இன்னும்!//
ம்ம்.. அது !! :) அந்த மாதிரி ஒருவித பயத்தோட இருக்கனும்.. அப்பத்தான் எனக்கு நல்லது. .அவ்வ்வ்வ்வ் !! :(
//. உனக்கு பாக்கெட் மணி கொடுக்கறதே வேஸ்ட்//
இதை எப்படி நீங்க முடிவு செய்யலாம்!
இது முழுக்க முழுக்க ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு!
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!
//பையன் தூங்கின பிறகு உங்களுக்கு சிஸ்டம் வேணும்னு சொல்லுங்க!
அதான் நேர்மை!//
சிபி நீங்க வேற.. வீட்டுல இருக்கற புள்ளைக்கு பயப்படறது என்னவோ கொஞ்சம். .அமெரிக்காவில் உட்கார்ந்து இருக்கறவங்களுக்கு ரொம்ப பயப்படவேண்டியதா இருக்கு.
உடம்பு சரியில்லாம தூக்கம் வரலைன்னா ஒரு நாள் அர்த்த ராத்திரியில ஆன்லைன் வந்தா கவிதா என்ன இந்த நேரத்தில் போயி தூங்குக்கன்னு சொல்ற என் நண்பர்களுக்கு தான் எனக்கு ரொம்ப பயம்...
அவங்களுக்காகவே நான் ஆன்லைன் வரது இல்லை. .நன்றி ஜீ.. தெகாஜி, பொன்ஸ், :)
//இதுல அதுங்க எல்லாத்துக்கும் சேர்த்து என்னால் கொடுக்கமுடியாது.//
இது அக்கிரமத்தின் உச்சகட்டம்!
கேர்பிரண்ட்ஸ்களை அனுமதிக்கிற மாதிரி அனுமதிச்சிட்டு பொருளாதாரத் தடை விதிப்பது எவ்விதத்தில் நியாயம்!
பாக்கெட்லே பைசா இல்லைன்னா கேர்ள்பிரண்ஸ்கிட்டே குளோசப் தன்னம்பிக்கையோட எப்படி சிரிச்சி பேச முடியும்?
ஹலோ, friend வேற girlfriend வேற. நிறைய girlfriend வச்சிக்கிட்டா, உங்க புள்ளைய அந்த girlfriendகளே பிரிச்சி மேய்ஞ்சிடுவாங்க :-)
//
நான் தான் கேர்ல்'லை முழுங்கிட்டு பிரண்டுனு போடறேன் இல்ல நடுவுல வந்து என்ன விளக்கம்.. விளங்கின மாதிரித்தான். .
//பெண்களுக்காக உன் பொன்னான நேரத்தை அதிகம் செலவழிக்காதே.//
பொத்தாம் பொதுவாக இப்படி சொல்றது சரியில்லே!
காலெஜ் போற நெரம், வீட்டில் இருக்கும் நேரம் தவிர ஏதோ கொஞ்ச நேரம்.
அது உங்களுக்கு அதிகமா தெரியுதா?
//அம்மாவை எளிதாக ஏமாற்றுகிறாய், அப்பா என்ற வார்த்தை வந்தால் தான் கொஞ்சம் பயம் இருக்கிறது.. என்ன செய்வது என்னால் முடியாததை அப்பாவை கொண்டு சாதிக்கிறேன்.//
அன்பால எதையும் சாதிக்க முடியும் னு உங்களுக்குத் தெரியவே தெரியாதா?
அம்மா ஃபீல் பண்ணுவாங்களேன்னு கூட உங்க ரசனையோட தன் ரசனையும் ஒத்துப் போகுற மாதிரி பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பத்தந்தை ஏன் உண்டாக்குறீங்க?//
சிபி அவனுக்கு யாரை பிடிக்கும்னு என்னக்க்கு நல்லா தெரியும்.. :)
அதை அவன் சொல்லவே வேண்டாம்.. சினிமா இருவரும் ஒன்றாக பார்க்கும் போது சாதாரணமாக சொல்லுவே. .ஹே குட்டி எனக்கு இவளை பிடிக்கும் உனக்கு பிடிக்குமான்னு.. உடனே கேவலமா என்னை திட்டி வாயை மூட சொல்லுவான்.. :)
அதை தான் இப்படி கேட்டு இருக்கான்.:) அவனுக்கு நான் அம்மாவா இருக்கறதை விட தோழியாத்தான் இருக்கேன்.. :)
எனக்கு பதில் சொல்றியா..
நவீனுக்கா?
ஏன்னா நவீன் கேட்ட எல்லா கேள்வியும் நானும் சிபியோட அக்காகிட்ட கேட்டேன்..
அவங்களுக்கு பதிலா.. நீயே சொல்லிட்ட.
தாங்க்ஸு...
உங்க பையனை நல்ல கவிஞனா மாத்தலாம்! தனித்திறமைகளை வெளையே கொண்டு வரும் முயற்சிகளை எடுப்பதே அவங்கதான்!
நீங்க ஏன் அந்த கோணத்துல பார்க்குறதே இல்லை!//
உற்சாகபடுத்தலாம் ஆனா அதை சொன்னாலும் கட்டாய படுத்தறோம்னு ஆயிடும்.. அதனால் அவனுக்கு பிடித்ததை செய்ய முழு சுதந்திரம் கொடுத்து இருக்கு.. :)
\\would u let ur son have a girlfriend in college?
உன்னிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கல, பரவாயில்லை. ஒன்று இல்லை நிறைய தோழிகள் வைத்துக்கொள்..ஆனால் உன் பர்ஸ் காலியாகாமல் அவர்கள் பர்ஸை காலி செய்ய பழகிக்கொள். உனக்கு பாக்கெட் மணி கொடுக்கறதே வேஸ்ட், இதுல அதுங்க எல்லாத்துக்கும் சேர்த்து என்னால் கொடுக்கமுடியாது. பெண்களுக்காக உன் பொன்னான நேரத்தை அதிகம் செலவழிக்காதே. .உன் அறிவுக்கும் ?!! அழகுக்கும் ?!! தானாக பெண்கள் உன் பின் வருவார்கள் (....ஸ்ஸ் இப்பத்திக்கு இது போதும்)\\
அக்கா வாழ்க ...
\\y dont u stop treating me like a new born baby?
ம்ம்.... நீ இப்ப இல்ல எப்பவும் எனக்கு குழந்தைதான்.. என்ன உனக்காக வெளியிடங்களில் எல்லோர் எதிரிலும் வேண்டுமானால் கொஞ்சாமல் இருக்கிறேன்.. போதுமா ?!! :)
\\
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(from round kutty)
\\ரெண்டும் வீட்டுகுள்ள பேசறத விட்டுட்டு இப்படி பதிவு போட்டு பேசுக்குதுங்க. .என்னத்த சொல்றது.. காலம் கெட்டு போச்சி....!\\
பலதும் தெரியுதே அணிலுக்கு ...
//நான் தான் கேர்ல்'லை முழுங்கிட்டு பிரண்டுனு போடறேன் இல்ல//
இந்த அம்மாக்களே இப்படி தான்....
//அணில் குட்டி அனிதா:- ரெண்டும் வீட்டுகுள்ள பேசறத விட்டுட்டு இப்படி பதிவு போட்டு பேசுக்குதுங்க. என்னத்த சொல்றது. காலம் கெட்டு போச்சி!//
மறுக்க முடியாத உண்மை அனிதாக் குட்டி..
நீயாச்சும் சண்டை போடாம இருக்கியா அக்காகூட..?
சூப்பர்...பையன் அடக்கி வச்சிருந்த ஆதங்கத்தையெல்லாம் சான்ஸ் கிடைச்ச உடனே கொட்டிட்டான் போல...
// y do u shout for silly reasons?//
நாங்க கூட இந்த கேள்விய கேக்கலாம்..
இதை போய் உங்க பையன் கிட்ட கேட்டு பாருங்க.. என்னப்பா அம்மா உன் கேள்விக்கு பதில் சொல்லி இருக்காங்களே, நீ என்ன சொல்லுறனு...
"புத்தி சொல்லுறாங்களாம்"
//எனக்கு பதில் சொல்றியா..
நவீனுக்கா?
ஏன்னா நவீன் கேட்ட எல்லா கேள்வியும் நானும் சிபியோட அக்காகிட்ட கேட்டேன்..
அவங்களுக்கு பதிலா.. நீயே சொல்லிட்ட.
தாங்க்ஸு...
//
உனக்கு தான் சொல்றேன் !!! நவீன் தான் வீட்டில் இருக்கானே நேரா சொல்லிக்குவேன்.. :)
நீயாச்சும் சண்டை போடாம இருக்கியா அக்காகூட..?
//
உண்மை தமிழன்...அணிலு சண்டை போடாது ஆனா எவ்வளவு ஓட்ட முடியுமோ அவ்வளவு ஓட்டும் ! :)
//நான் தான் கேர்ல்'லை முழுங்கிட்டு பிரண்டுனு போடறேன் இல்ல//
இந்த அம்மாக்களே இப்படி தான்..../
:) ராஜா என்ன செய்யறது அம்மா'ன்ன அப்படித்தான்.. :)
// y do u shout for silly reasons?//
நாங்க கூட இந்த கேள்விய கேக்கலாம்..
//
ஆமா ஆதவன் நீங்க கூட கேட்கலாம்.. :)) தெரிஞ்ச விசயம் தானே.. :)
//இதை போய் உங்க பையன் கிட்ட கேட்டு பாருங்க.. என்னப்பா அம்மா உன் கேள்விக்கு பதில் சொல்லி இருக்காங்களே, நீ என்ன சொல்லுறனு...
"புத்தி சொல்லுறாங்களாம்"
//
:) ஹாஹா..:)) சிவா ஏன்.. ?!! :)
பலதும் தெரியுதே அணிலுக்கு ...
//
ஜமால் அணிலு பெரிய ஆளு.. :)
//இது அக்கிரமத்தின் உச்சகட்டம்! //
ஏன் சிபி கொளுத்தி போடறீங்க.. :) ஞாயற்றுகிழமை ஆபிஸ் வந்ததே தப்பு..வந்து என்னை டார்கட் பண்ணது அதைவிட தப்பு :)!! தங்கமணி வரட்டும் நான் கொளுத்தி போடறேன்... :))
//கேர்பிரண்ட்ஸ்களை அனுமதிக்கிற மாதிரி அனுமதிச்சிட்டு பொருளாதாரத் தடை விதிப்பது எவ்விதத்தில் நியாயம்!
பாக்கெட்லே பைசா இல்லைன்னா கேர்ள்பிரண்ஸ்கிட்டே குளோசப் தன்னம்பிக்கையோட எப்படி சிரிச்சி பேச முடியும்?
//
ஹலோ அவன் பேரு சிபி இல்ல.. கவிதாவோட புள்ள.. !! நவீன்.. !! :)))))
(அவன் சாதாரணமாக சிரிச்சாவே போதும்...இந்த பக்கம் 5 பெண்கள், அந்த பக்கம் 5 பெண்கள் வந்து நிற்பார்கள் இதை எல்லாம் வெளியில்ல சொன்னா நீங்க பொறாமை படுவீங்க.. !! )
//ஹலோ அவன் பேரு சிபி இல்ல.//
ஹிஹி! எங்க வீட்டு தங்க்ஸ் கிட்டே கேட்டுப் பாருங்க!
எங்கியாச்சும் வெளியே கெளம்புறப்போ கொஞ்சம் பவுடர் அடிச்சா கூட போதும்! அவங்களுக்கு எவ்வளவு பதட்டம் கூடுதுன்னு பார்த்தீங்கன்னாலே தெரியும்!
\\பீட்டர்தாத்ஸ் : A mother understands what a child does not say.\\
ரைட்டு...;)
அம்மான்னா கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டே இருக்கானும்..புள்ளைன்னா அம்மாவை இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கானும்...;))
மீ த 50!
:)
:)))))
Post a Comment