நாத்தனார் ' இந்த போஸ்ட் வீட்டுல ரொம்ப முக்கியமான போஸ்ட். அதுவும் அண்ணனுக்கோ தம்பிக்கோ திருமணம் நடக்கும் போதே இவங்களோட முக்கியத்துவம் என்னன்னு தெரிஞ்சிடும். திருமணத்தன்று விளக்கு எடுத்து இவர்கள் முன்னால் நடக்க மாப்பிள்ளையும் பெண்ணும் பின்னால் மணப்பந்தலை சுற்றி வருவார்கள். அப்புறம் வீட்டிற்கு இந்த புது பெண் வந்தவுடன் இவர்கள் அந்த வீட்டிற்கு எத்தனை முக்கியமானவர்கள் என்று நிரூபிக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்வார்கள். மாமியார் மாமனார், கணவரின் சொந்தங்கள் அனைத்தும் அந்த புதுபெண் நாத்தனாரை எப்படி கவனிக்கவேண்டும் என்றும் சொல்லி தருவார்கள்....
மாமியார்கள் தான் வில்லிகள் என்றால் நாத்தனார்கள் பேக் கிரவுண்டு (back ground) வில்லிகள். நேரடியாக தொல்லை தரமுடியாவிட்டாலும் (பல வீடுகளில் திருமணம் ஆகி சென்றிருப்பார்கள்) மாமியாரை எவ்வளவு ஏற்றி விட முடியுமோ தொலைபேசி வழியாகவே ஏற்றி விட்டு பிரச்சனையை உண்டாக்குவார்கள். மாமியாருக்கு தெரியாத பாயிண்ட்ஸ் எல்லாம் இவர்கள் தான் சொல்லி தருவார்கள். இது தவிர்த்து தீபாவளி, பொங்கல், லொட்டு லொசுக்கு என்று எல்லா விஷேஷங்களுக்கும் இவர்களுக்கு பிறந்தவீட்டு சீர் செய்ய வேண்டும். பலகாரம், துணி மணி என்று காலம் முழுதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் போதும், என் அண்ணன் இவளை கல்யாணம் செய்து கொ(ல்)ள்கிறவரை எனக்கு எல்லாம் செய்தான், இவள் வந்த பிறகு எனக்கு எதையுமே செய்யவதில்லை என்று புலம்பி பிரச்சனையை உண்டாக்கிவிடுவார்கள்.
சரி நம்ம கதைக்கு வருவோம், எனக்கு ஒரு நாத்தனார், "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே..." என்னை பெண் பார்த்த அன்றைக்கு, என்னிடம் வந்து "உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, உன் நெற்றி ரொம்ப அழகாக இருக்குன்னு சொன்னாங்க" (சரி விடுங்க விடுங்க ஏதோ சொல்லிட்டாங்க...!) நான் ஒரு புன்முறுவலோடு நிறுத்திக்கொண்டேன். திருமணம் ஆனா பிறகும் இவர்களிடமிருந்து இருந்து ஒரு சத்தமும் இல்லை. ரொம்ப அன்பாக இருந்தார்கள். என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் திருமணத்திற்கு அடுத்த நாள் "நீ என்னை அண்ணி' ன்னு கூப்பிடுன்னு சொல்லிட்டாங்க.. .. போக போக இவங்க அன்பில நான் நனைய ஆரம்பிச்சி.. என் அன்பில அவங்க நனைய ஆரம்பிச்சி.. .நான் இல்லாமல் அவங்க இல்ல அவங்க இல்லாமல் நான் இல்லைன்னு ஒரு ஸ்டேஜ்’க்கு வந்துட்டோம். அது எப்படின்னு நீங்க எல்லாம் என்னை கேட்பீங்கன்னு தெரிஞ்சி தான் ஒரு உதாரணத்தோட இங்க வந்து இருக்கேன்..
மாமியார் வீட்டுக்கு செல்வது எப்போதோ ஒரு தரம், வீட்டு விஷேஷம், திருமணங்கள் இப்படி ஏதாவது இருந்தால் தான், இதில் நான் வேலை செய்கிறேன் என்று பாதி நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் தப்பித்துவிடுவேன் என்பது வேறு விஷயம். இப்படி போகும் போது எல்லாம், அங்கு நான் தேடுவது என் நாத்தனாரை தான்.. அன்பை பொழியன்னு நீங்க தப்பா நினைச்சுகாதீங்க, உட்கார அவங்களை விட்டா நல்ல இடம் கிடைக்காது.
சும்மா.. மெத்து மெத்துன்னு, கும்முன்னு, வீட்டு சோபா செட் எல்லாம் கெட்டுச்சி போங்க..! அவ்ளோ சூப்பரா உருண்டையா ரொம்ப ஸாப்ட்டா வேற இருப்பாங்க..கீழ படத்துல இருக்கிற சோபா மாதிரியே...இருப்பாங்க..ஹி ஹி..:)
அதனால அவங்க மடியில் உட்கார்ந்துகிட்டா நல்லா செளகரியமாக இருக்கும், நல்லா ரெஸ்ட் எடுத்த மாதிரியும் இருக்கும். அப்படியே அவங்களை கொஞ்சிக்கலாம். அவங்களும் நான் போய் மடியில் உட்கார்ந்தபிறகும் கண்டுக்கவே மாட்டாங்க வாம்மா’ன்னு கூப்பிட்டு உட்கார வச்சிக்குவாங்க.
"இதுல டென்ஷன் ஆகறது என் கணவர் தான்.. “ஏண்டி உனக்கு அறிவில்ல (அது இருந்து இருந்தா நான் அவரை கல்யாணமே செய்து இருக்க மாட்டேங்கறது வேற விஷயம்) “அவ மேல போயி உக்காரரியே, அவ தாங்க மாட்டாடி.. (பாசமலர்களாம்.. யப்பா என்னா பாசம் என்னா பாசம்!!).. ஏந்திரிடி தனியா தள்ளி உட்காரு“ என்பார்.. நான் கண்டுக்கவே மாட்டேன்.. என்னைக்கு அவர் பேசறத நாம கண்டுக்கிட்டோம்.. இப்ப கண்டுக்கறத்துக்கு! அவங்களும் “விடு...சின்ன பொண்ணு(சரி சரி நீங்க எல்லாம் கூல்’லா இருங்க..) உட்கார்ந்துட்டு போகட்டுமே எனக்கு ஒன்னும் வெயிட்டா இல்லன்னு “ சொல்லுவாங்க.. சரி அவங்கத்தான் சப்போர்டு’ன்னு நினைக்காதீங்க.. உடனே என்னோட மூத்தார் (கணவரின் அண்ணன்), “ஏண்டா சின்னபுள்ளைய (சரி சரி நீங்க எல்லாம் அகையின் கூல்ல்...ஒகே!) எப்ப பார்த்தலும் திட்டிக்கிட்டு இருக்கே” ன்னு ஆரம்பிச்சி.. அது அப்படியே.. ஓரகத்திங்க எல்லார் கிட்டயும் (4 பேரு) ஒரு ரவுண்டு வந்து.. அவங்க பெத்துவச்ச புள்ளைங்க (9 பேரு) கிட்ட எல்லாம் ஒரு ரவுண்டு வந்து.. “தொத்தா உட்காருட்டுமே சித்தப்பா ..அத்தை இருக்க சைஸ்’க்கு இன்னும் இரண்டு பேரு அவங்க மேல உட்காரலாம்” ன்னு சொல்ற வரைக்கும் தொடரும்
ஸ்ஸ்ப்பா.. என் வீட்டுக்காரருக்கு பேச்சு வருமா..? எப்படி வரும்? வராதே.. அண்ணன்கள், அண்ணிங்க, பிள்ளைகள் என்று மிக பெரிய அளவில நமக்கு சப்போர்டு இருக்கும் போது.. வாயா திறக்கமாட்டார். ஆனா. .எனக்கு மட்டும் தெரியும் வீட்டுக்கு வந்த பிறகு.. சங்கு ஊதுவாருன்னு.. சரி அதை அப்புறமா டீல் பண்ணிக்கலாம்..இப்பவே எதுக்கு நினைச்சு டென்ஷன் ஆகனும்..!! நமக்கு இப்ப தேவை ஜம்’ன்னு மெத்து மெத்துன்னு உட்கார ஒரு இடம்.. உட்காந்தோமா.....உருண்டோமான்னு..... இல்லாம கண்டதை யோசிச்சிக்கிட்டு......
நாத்தனார் உறவு என்பது எப்பவும் எல்லாருக்குமே இப்படி இருந்துவிட்டால் பிரச்சனை ஏன் வருகிறது. நிறைய வீடுகளில் நாத்தனார் அண்ணிகளை குறை சொல்லுவதும், திட்டுவதும், இவர்களும் திருப்பி திட்டுவதும் பிரச்சனையே கதி என்று இருப்பார்கள். எனக்கு அருமையான நாத்தனார் கிடைத்திருக்கிறார்கள். அவங்க எப்பவுமே “செம கூல்” ன்னு சொல்லலாம்."கொஞ்சநாள் வாழபோறோம் எல்லாரும் சந்தோஷமாக இருந்துட்டு போகனும்னு சொல்லுவாங்க.. எதுக்கு சண்டை.. ஒருவருக்கு ஒருவர் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டுன்னு" ரொம்ப தெளிவா லெக்சர் கொடுப்பாங்க அவங்க இப்படி தத்துவம் எல்லாம் பேசி முடித்ததும், நான் சொல்லுவேன் "இப்படி எதையும் கண்டுக்காம இருந்து இருந்து தான் உருண்டையாக இருக்கீங்க நாங்க எல்லாம் நினைவு தெரிஞ்சி நடந்து வரோம்.. ஆனா, நீங்க மட்டும் உருண்டு உருண்டு வரீங்கன்னு... “. “அடப்போம்மா..நீ வேற, ரொம்ப தான் என்னை புகழறன்னு" வெட்கப்பட்டு (நிஜமாகவே) சிரிப்பாங்க
அட! என் வீட்டுகாரருக்கு இப்படி ஒரு தங்கச்சியா?!!!! ன்னு நினைப்பேன்.. கண்டிப்பா கூல்’லா இருக்க இவங்ககிட்ட தான் கத்துக்கணும்..
அணில் குட்டி அனிதா:-மக்கா மீட்டங் கீட்டிங்னு அம்மணிய யாரும் கூப்பிடாதீங்க..அங்க வந்து யாராவது இப்படி கும்முனு இருந்தா பாத்து உட்காந்தாலும் உட்காந்துடுவாங்க... யாரு என்னான்னு எல்லாம் பாக்க மாட்டாங்க...உஷார்..உஷார்.. அவ்வளவு தான் சொல்ல முடியும்..!! இவிங்களுக்கு இன்னும் மரப்பாச்சி பொம்மை போல இருக்கோம்னு நெனப்பு.. கடவுளேஅம்மணி’க்கு புத்திகொடு..
பீட்டர் தாத்ஸ்:- Man is a knot into which relationships are tied.
நாத்தனார்......
Posted by : கவிதா | Kavitha
on 15:04
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
28 - பார்வையிட்டவர்கள்:
என்னைக்காவது ஒரு நாள் உங்க நாத்தனாருக்கு உங்க மடியிலே உட்காரணும்ன்னு ஆசை வரணும்!!! பொறவு சங்கு தான்...
//பீட்டர் தாத்ஸ்:- Man is a knot into which relationships are tied.//
O i c :))
//KVR said...
என்னைக்காவது ஒரு நாள் உங்க நாத்தனாருக்கு உங்க மடியிலே உட்காரணும்ன்னு ஆசை வரணும்!!! பொறவு சங்கு தான்...
//
Haa..haa..haa :))
ithukku peruthan kola veringarathu
குடுத்து வச்சவங்க. எனக்கு நாத்தனாரே கிடையாது.
நாத்தநாரை கொல்ல இப்படி ஒரு வழியோ!! அபிஅம்மா இந்த பதிவை படிக்காம இருக்கனும் ஆண்டவா:-))
KVR said...
என்னைக்காவது ஒரு நாள் உங்க நாத்தனாருக்கு உங்க மடியிலே உட்காரணும்ன்னு ஆசை வரணும்!!! பொறவு சங்கு தான்...//
//KVR said...
என்னைக்காவது ஒரு நாள் உங்க நாத்தனாருக்கு உங்க மடியிலே உட்காரணும்ன்னு ஆசை வரணும்!!! பொறவு சங்கு தான்...
//
Haa..haa..haa :))
ithukku peruthan kola veringarathu//
கேவிஆர் & சென்ஷி நல்ல வேளை என் நாத்தனார் நெட் பக்கமே வர மாட்டாங்க...இதை படிச்சி அவங்களுக்கு ஐடியா வர வரைக்கும் நான் தப்பிச்சேன்.. :)))))
நாத்தநாரை கொல்ல இப்படி ஒரு வழியோ!! அபிஅம்மா இந்த பதிவை படிக்காம இருக்கனும் ஆண்டவா:-))//
ஆசை ஆசையா செய்யறதை தப்பு தப்பா அர்த்தம் செய்துக்க கூடாது..!! :)
ஆனாலும் நீங்க சொன்ன பாயின்டு அபிஅம்மா'வின் வெயிட்டை பொறுத்தது...!!
குடுத்து வச்சவங்க. எனக்கு நாத்தனாரே கிடையாது.//
சின்ன அம்மணி ரியலி.. குடுத்து வைத்து இருக்கிறேன்..!!
கல்லூரி காலத்தில இப்படி எல்லாம் செண்டியா (Centi) யாராவது பொழிஞ்சா, " நெஞ்ச நக்கிட்டீங்க..." அப்ப்டீன்னு சொல்றது வழக்கம்...
அவுங்களுக்கு இமெயில் இருந்தா இதை அனுப்பிட மறக்கவேண்டாம்...
கல்லூரி காலத்தில இப்படி எல்லாம் செண்டியா (Centi) யாராவது பொழிஞ்சா, " நெஞ்ச நக்கிட்டீங்க..." அப்ப்டீன்னு சொல்றது வழக்கம்..//
ஏன் இப்பவும் தான் சொல்லிக்கிறாங்க.. அதுவும் ப்ளாக்ல நிறையவே ..:)
//அவுங்களுக்கு இமெயில் இருந்தா இதை அனுப்பிட மறக்கவேண்டாம்...//
ம்ஹூம்..அவங்களுக்கு இமெயில் எல்லாம் இல்லை.. நானே நேராக சொல்றேன்..:)
ஹ்ம் என் நாத்தானார் பேச்சை நம்பித்த்த்த்த்தான் இந்த குடும்பத்துலயே தலையே நீட்டினேன்.. :)) அவளும் அப்படித்தான் இருப்பா ... கள்ளமில்லா மனசு..
//அதனால அவங்க மடியில் உட்கார்ந்துகிட்டா நல்லா செளகரியமாக இருக்கும்//
இதெல்லாம் நடந்தது சுமார் எத்தனை வருடங்களுக்கு முன்னால்??
ஹ்ம் என் நாத்தானார் பேச்சை நம்பித்த்த்த்த்தான் இந்த குடும்பத்துலயே தலையே நீட்டினேன்.. :)) அவளும் அப்படித்தான் இருப்பா ... கள்ளமில்லா மனசு..//
முத்து அப்பன்னா..உடம்பு இன்னும் அம்மா வீட்டுலத்தான் இருக்கா? :))
சரி ஜோக்ஸ் அபார்ட்..!! ம்ம்..நிறைய சமயம் புகுந்த வீட்டில் நமக்கு கிடைக்கும் பாசமும் நேசமும் கூட ரொம்ப சந்தோஷப்படுத்தும்.. எனக்கு என் வீட்டைவிட (இப்போது) அவங்க வீட்டுல ரொம்ப பாசம் கிடைக்கிறது்.. :)
//அதனால அவங்க மடியில் உட்கார்ந்துகிட்டா நல்லா செளகரியமாக இருக்கும்//
இதெல்லாம் நடந்தது சுமார் எத்தனை வருடங்களுக்கு முன்னால்??//
இப்படி எல்லாம் சபையில வைத்து கேள்வி கேட்கபிடாது. .மெயில் அனுப்பி இருந்தா தெளிவாக சொல்லியிருப்பேன்..இல்லையா? சரி இருந்தாலும் உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்..
கல்யாணம் ஆகும் போது நானும் அவங்களும் 1:3 ஆக இருந்தோம்..இப்ப 3:6 ஆக இருக்கிறோம்.. :) சந்தோஷமா..?!!
அந்த விதத்தில்.. எப்பவும் என்னை விட அதிகமாக குண்டாகி கொண்டே போவதால்.. இப்போது மட்டும் இல்லை எப்போதும் அவங்க எனக்கு நிரந்தர சீட் தான்..:)
"அவங்க மடியில் உட்கார்ந்துகிட்டா நல்லா செளகரியமாக இருக்கும், நல்லா ரெஸ்ட் எடுத்த மாதிரியும் இருக்கும். அப்படியே அவங்களை கொஞ்சிக்கலாம். அவங்களும் நான் போய் மடியில் உட்கார்ந்தபிறகும் கண்டுக்கவே மாட்டாங்க வாம்மா’ன்னு கூப்பிட்டு உட்கார வச்சிக்குவாங்க."
தேங்காயில இருந்து எண்ணெய் எடுப்பாங்க - பார்த்து இருக்கிறேன்...எள் -இதுலேயும் எடுப்பாங்க...ஆனா கேழ்வரகுல எடுப்பாங்களா! யாரு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்....
\"நாத்தனார்......"\\
என்னா விள்ளத்தனம் ...
அக்கோவ்
இவ்வளவு நல்லவங்களா நீங்க ...
நல்ல நாத்தனார்
நல்ல மெத்தை
கலுக்கற கவிதா ...
\\
அந்த விதத்தில்.. எப்பவும் என்னை விட அதிகமாக குண்டாகி கொண்டே போவதால்.. இப்போது மட்டும் இல்லை எப்போதும் அவங்க எனக்கு நிரந்தர சீட் தான்..:)\\
சரிதான்.
இப்ப நீங்க யாருக்கு சீட்டா இருக்கீங்க ...
//அந்த விதத்தில்.. எப்பவும் என்னை விட அதிகமாக குண்டாகி கொண்டே போவதால்.. இப்போது மட்டும் இல்லை எப்போதும் அவங்க எனக்கு நிரந்தர சீட் தான்..:)
//
ஆண்டவா காப்பாத்த!
//தேங்காயில இருந்து எண்ணெய் எடுப்பாங்க - பார்த்து இருக்கிறேன்...எள் -இதுலேயும் எடுப்பாங்க...ஆனா கேழ்வரகுல எடுப்பாங்களா! யாரு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்....//
சிங்கு, எனக்கு புரியறமாதிரி ஏதாச்சும் எழுதுங்கப்பா.. ஒன்னும் புரியல.. :(
--------------------------------
\"நாத்தனார்......"\\
என்னா விள்ளத்தனம் ...//
ஹா ஹா ஹா..ஹா... (கையை பிசைந்துகிட்டு நம்பியார் மாதிரி ) அழகா சிரிக்கிறேனா? ஜமால்?!! :))
-----------------------------------
நட்புடன் ஜமால் said...
அக்கோவ்
இவ்வளவு நல்லவங்களா நீங்க ...
நல்ல நாத்தனார்
நல்ல மெத்தை
கலுக்கற கவிதா ...//
ம்ம் நிறைய பேரு என்னை நீங்க "ரொம்ப நல்லவங்க........." ன்னு சொல்லுவாங்க....:) ஏன்னா எவ்வளவு அவங்க அடிச்சாலும், அசிங்கபட்டாலும், திருப்பி அவங்களை பார்த்து சிரிப்பேன்..//
--------------------------------
நட்புடன் ஜமால் said...
\\
அந்த விதத்தில்.. எப்பவும் என்னை விட அதிகமாக குண்டாகி கொண்டே போவதால்.. இப்போது மட்டும் இல்லை எப்போதும் அவங்க எனக்கு நிரந்தர சீட் தான்..:)\\
சரிதான்.
இப்ப நீங்க யாருக்கு சீட்டா இருக்கீங்க ...//
என் புள்ள..தான் ஓவர்.. .:) சில சமயம் கண்ணீர் விட்டு கதறி ஏன்ச்சி தொலைடா'ன்னு அழுவேன்..:)) கண்ணீரை பாத்தாத்தான்.. கொஞ்சமாக மனசு வந்து எழுந்திருப்பான்....
//அந்த விதத்தில்.. எப்பவும் என்னை விட அதிகமாக குண்டாகி கொண்டே போவதால்.. இப்போது மட்டும் இல்லை எப்போதும் அவங்க எனக்கு நிரந்தர சீட் தான்..:)
//
ஆண்டவா காப்பாத்த!/
ஒருத்தங்க மேல பொறாமை படலாம்.. வேண்டாம்னு சொல்லல.. அதுக்குன்னு இப்படியா..?!! டூ மச் ஆ இருக்கே... :))
ம்ம்ம்...நோட் பண்ணிக்கிட்டேன் ;)))
@சென்ஷி
மாப்பி சீக்கிரம் ஒரு குண்டு பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்து அக்கா மேல உட்கார வச்சிடு ;)
ம்ம்ம்...நோட் பண்ணிக்கிட்டேன் ;)))
@சென்ஷி
மாப்பி சீக்கிரம் ஒரு குண்டு பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்து அக்கா மேல உட்கார வச்சிடு ;)//
ஹா ஹா..:)) கோபி தண்ணி( தம்பி பொண்டாட்டி தண்ணி) என் மேல உட்கார்ந்தா பரவாயில்லை.. சென்ஷீ மேல உட்கார்ந்துட்டா?.. அப்புறம்..சங்குதாண்டீஈஈஈஈ... :))
எதுக்கு நீங்க சென்ஷி வாழ்க்கையில இப்ப்ப்ப்ப்ப்படி விளையாடறீங்க.? ஏன் இந்த கொலவெறி..?! ம்ம்? :)
## கோபிநாத் said...
ம்ம்ம்...நோட் பண்ணிக்கிட்டேன் ;)))
@சென்ஷி
மாப்பி சீக்கிரம் ஒரு குண்டு பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்து அக்கா மேல உட்கார வச்சிடு ;)
##
எலேய் கோபி! என்னா கொல்ல வரே! சாரி என்னா சொல்ல வரே?
மாமியார்கள் தான் வில்லிகள் என்றால் நாத்தனார்கள் பேக் கிரவுண்டு (back ground) வில்லிகள். நேரடியாக தொல்லை தரமுடியாவிட்டாலும் (பல வீடுகளில் திருமணம் ஆகி சென்றிருப்பார்கள்) மாமியாரை எவ்வளவு ஏற்றி விட முடியுமோ தொலைபேசி வழியாகவே ஏற்றி விட்டு பிரச்சனையை உண்டாக்குவார்கள்.
////
ஆஹா
நல்ல நகைச்சுவை உணர்வு
பாவம் உங்க நாத்தனார்
//(அது இருந்து இருந்தா நான் அவரை கல்யாணமே செய்து இருக்க மாட்டேங்கறது வேற விஷயம்)//
பாயிண்ட் டு பி நோட்டட்!!!
பல பேர் மனசை புட்டு புட்டு வச்சுட்டீங்க!!
//கொஞ்சநாள் வாழபோறோம் எல்லாரும் சந்தோஷமாக இருந்துட்டு போகனும்னு சொல்லுவாங்க.. எதுக்கு சண்டை.. ஒருவருக்கு ஒருவர் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டுன்னு" ரொம்ப தெளிவா லெக்சர் கொடுப்பாங்க//
எல்லோருக்குமே பொருத்தமானது.
அருமையான நாத்தனார் வாய்த்திருக்கிறார்கள் உங்களுக்கு.
ரெண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்க.
//ஆஹா
நல்ல நகைச்சுவை உணர்வு
பாவம் உங்க நாத்தனார்//
நன்றி பிரபு..
-------------------------------------
//(அது இருந்து இருந்தா நான் அவரை கல்யாணமே செய்து இருக்க மாட்டேங்கறது வேற விஷயம்)//
பாயிண்ட் டு பி நோட்டட்!!!
பல பேர் மனசை புட்டு புட்டு வச்சுட்டீங்க!!//
ம்ஹும் உண்மைய சொல்லிடனும் இல்லையா? :)
என்னங்க இப்படி பேரு வச்சிக்கிட்டீங்க.. எது சொன்னாலும் நானா-நீ ன்னு திருப்பி கேட்கும் போல இருக்கு..:))
------------------------------------
நானானி said...
//கொஞ்சநாள் வாழபோறோம் எல்லாரும் சந்தோஷமாக இருந்துட்டு போகனும்னு சொல்லுவாங்க.. எதுக்கு சண்டை.. ஒருவருக்கு ஒருவர் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டுன்னு" ரொம்ப தெளிவா லெக்சர் கொடுப்பாங்க//
எல்லோருக்குமே பொருத்தமானது.
அருமையான நாத்தனார் வாய்த்திருக்கிறார்கள் உங்களுக்கு.
ரெண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்க.//
ம்ம் சரிங்க.. ரொம்ப நன்றி...இத்தனை வருஷம் சண்டை போட்டுக்கல இனிமேவா போட்டுக்க போறோம்... :)
Post a Comment