பேச்சாற்றலில் புகழ்பெற்ற நம் முத்துலெட்சுமி தான் இன்றைக்கு நம்முடன் கஞ்சி குடிக்க வந்துள்ளார். அவரை நானும் அணிலும் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்கள் கேள்விகளை கேட்டு குடைந்து இருக்கிறார்கள், பார்க்கலாம் முத்து கேள்விகளுக்கு எப்படி குறைந்த வார்த்தைகளில் பதில் சொல்லுகிறார் என்று…:)
வாயை புடுங்கற ரவுண்டு :-
கவிதா:- வாங்க முத்து, எப்படி இருக்கீங்க..?! உங்கள் பதிவுகளை படித்த போது கவனித்தேன், பதிவெழுத வந்த மிக குறுகிய காலத்திலேயே நீங்கள் தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆகி இருக்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன? (இப்படி ஒரு கேள்வியை நாகை சிவாவிற்கு பிறகு உங்களிடம் மட்டுமே கேட்கிறேன்)
வீரமங்கை கவிதாவிற்கு வணக்கம். இருங்க கொஞ்சம் கஞ்சி குடிச்சிட்டுப்பேசறேன். எனக்கு கேப்பக்கஞ்சி ரொம்பப் பிடிக்கும். அதுவும் எங்கம்மா அதுல கோதுமை, பாதாம் இன்னுமெல்லாமோ போட்டு ஸ்பெஷலா அரைச்சுத் தருவாங்க.. க்க்குக்கும் . இந்த நட்சத்திர மேட்டர் பத்தி எனக்கே இப்பத்தான் தெரியும். இத்தனை குறைந்தகாலத்தில் யாரும் வரலையா என்ன? ஆனா எனக்கு என்னவோ லேட்டாத்தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதா உணர்வு.. J நான் அடிக்கடி சொல்லுவேன் நான் எழுத வந்தபோது நாகை சிவா நட்சத்திரமாகப்பார்த்தேன். எழுத ஆரம்பித்த உடனேயே எப்படா நம்மளை நட்சத்திரமாக்கூப்பிடுவாங்கன்னு இருந்தேன்.
தெகாஜி :- நீங்கள் வலைப்பதிவுகளுக்கு வந்ததின் மூலமா ஏதாவது நன்மைகள் அடைந்திருக்கிறதா உணரச் செய்ய முடிகிறதா? அப்படியெனில், அது போன்றவைகளில்னு கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா, ப்ளீஸ்?
முன் காலத்தில் பேனா நட்பு பேசப்பட்டது போலத்தான். முகம் தெரியாத ஆனால் மிக பலநாட்களாக பழகிய உணர்வை ஒவ்வொரு பதிவரிடமும் காண்கிறோம். நட்புகள் மிகப்பெரிய நன்மை. இதுதவிர நான் எத்தனையோ கற்றிருக்கிறேன். இணையத்தின் பயனை யாராலும் முற்றிலும் அனுபவிக்கமுடியாது. அது ஒரு கடல் போன்றது. அதில் சில துளிகளை எனக்கு புரியவைத்தது இந்த பதிவர் நட்புக்கள் தான். அதன் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் என் நண்பர்களுக்கும் நான் உதவ முடிகிறது. கற்றுக்கொள்வது என்பது தான் எனக்கு ஒரு போதை. அதற்கு பெருந்தீனி இங்கே இருக்கிறது.
சர்வேசன் புகைப்பட ப்போட்டி எனக்கே என்னுடைய புகைப்படக்கலை ஆர்வத்தைக்காட்டியது. அன்புடன் குழும காட்சிக்கவிதை போட்டி ஒரு புதிய முயற்சி. இன்றையபெற்றோர்களும் அவர்களின் குழந்தைவளர்ப்பும் பற்றி எழுதும்போதும் கற்றுக்கொள்கிறேன்.
தற்போது "நான் ஆதவன்" என்கிற பதிவரின் பதிவில் அனிமேசன்களைப் பார்த்து அவர் உதவியுடன் சில வரைதலை பழகிவருகிறேன்.
முன்பே சொன்னதுபோல என் கோப உணர்வை குறைக்கவும் உதவி இருக்கிறது... ஒவ்வொரு வரின் நியாயம் படிக்கும் போது பலவிசயங்கள் புரியவந்திருக்கிறது.
சிபி :- மாயவரத்துல பிறந்தீங்க, மத்த ஊரையெல்லாம் கூட சொந்த ஊர் போல பாவிக்கிறீங்களே எப்படி?
அந்த ஊரெல்லாம் சண்டைக்கும் வராது அது எப்படி நீ சொல்லலாம்ன்னு அந்த தைரியம் தான்..:) (ஊரைப்பற்றிய ) இதுக்கு ஒரு தனிபதிவே போட்டிருக்கேன் . என் மாமனாரைப்பற்றி எழுதி இருக்கிறேன். இன்னும் என் சொந்த ஊராக இந்தியாவில் இருக்கிற ஊர்களைத்தான் சொல்கிறேன் என்பதில் தான் வருத்தம் எனக்கு. யாதும் ஊரே யாவரும் கேளீர் .
சென்ஷி :- பதிவு எழுதனும்னு முடிவு செஞ்சப்புறம் எதுக்கு இப்படி ஒரு சமூக அக்கறை பதிவு?
ரொம்ப நல்லகேள்வி..இந்த பதிவை அடிக்கடி நீயே மீள்வாசிப்புக் கொண்டுவருவது பெருமைப்படவேண்டிய விசயம். எனக்கு வகைகள் மேகத்தில் செய்திவிமர்சனம் என்பதற்கு ஒன்றிரண்டாவது தேறினால் பரவாயில்லையே என்று நினைத்தபோது கிடைத்த பதிவு இது .
முல்லை : புத்தகங்கள் படிக்கும் ஆர்வமுண்டா, சமீபத்தில் (கடந்த மூன்று மாதங்களுக்குள்) படித்த புத்தகம் எது?
புத்தகங்கள் படிப்பது எக்கசக்கமான ஆர்வம் உண்டு. இப்போது இணையத்தில் படிப்பதால் குறைந்திருக்கிறது என்றாலும். தமிழ்சங்கத்துல இருந்து கணவர் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கத்தருவார்கள் . சமீபத்தில் படிச்சதுன்னா தென்கச்சியின் சுவையான தகவல்கள் 100 புத்தகம் சொல்லலாம். சிவசங்கரியின் நெருஞ்சிமுள்.. இப்ப படித்துக்கொண்டிருப்பது சத்தியஞானசபை பற்றிய புத்தகம். வள்ளலாரின் சபை பற்றிய விவரங்கள் இருக்கிறது.
கவிதா: மெளனம் என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? அதனை நீங்கள் ரசித்து இருக்கிறீர்களா?
ம் தெரியும் அதன் வலிமையைத் தாங்கும் சக்தி எனக்கு இருப்பதாக தெரியவில்லை. எங்கம்மா வாரம் ஒரு நாள் மௌனவிரதம் இருப்பார்கள். அவர்கள் மெடிட்டேசன் மற்றும் பல பயிற்சிகள் மேற்கொள்வதைப்போல இதுவும் ஒரு வித பயிற்சி தான் என்பார்கள். அன்று சக்தி சேமிக்கப்படுகிறது . நானும் பலநாட்களாக அப்படி இருக்க முயற்சித்தாலும் அதற்கு வாய்ப்பு அமையவில்லை.
பொதுவாக அன்றைய நாட்களில் ஜீன்ஸ் பட அம்மா மாதிரி உம் கொட்டுதலும் கூடாது. எழுதிக்காமித்தலும் கூடாது என்பார்கள். மௌனம் என்றால் மனமும் கூட மௌனமாக இருக்கவேண்டும்.
நான் ஏறக்குறைய மௌனம் தான் இருக்கிறேன். குழந்தைகள் கணவர் பள்ளிக்குப் போனபின் வீடு அமைதியாகத்தான் இருக்கும். நானென்ன தனியாகவா பேசிக்கமுடியும். வெறும் டைப்பிங்க் தான். ஆனால் அதன் மூலம் நான் பேசிவிடுவதால் அதை முழு மௌனமாகக் கொள்ள முடியாது. சும்மா இருப்பது மிக பெரிய தவம். அதனை செய்யுமளவுக்கு நான் பக்குவி ஆகலை.
G3 : ப்ளாக் உலகமே உங்களை முத்து'அக்கான்னு கூப்பிடுதே.. நீங்க ஏன் உங்க ஞாபகமா ப்ளாக் உலக மக்களு்க்கு ஆளுக்கொரு முத்து கொடுக்க கூடாது? (உங்க அன்பு அளவுக்கு முத்து சைஸ் இருந்தா போதும், ஒரிஜினல் முத்து ஒன்லி அக்ஸப்டட்)
ஜி3 என் அன்பு அளவுக்குன்னு நீ சொல்லிட்டதால நீயே எனக்கு ஒரு சான்ஸ் குடுத்துட்ட.. அந்த அளவுக்கு ஒரிஜினல் முத்து எங்காவது உருவாகினால் அது செய்தியில் வந்தால் நான் எல்லாருக்கும் குடுக்க சம்மதமே.. ( ஹப்பாடா என் வீட்டுக்காரங்க பர்ஸ் தப்பிச்சுச்சு)
ஜியா : நீங்க ஏன் லட்சுமி, முத்துலட்சுமி, கயல்விழி முத்துலட்சுமின்னு ஒவ்வொரு அவதாரமா எடுத்துட்டு வர்றீங்க? இடைக்கால லட்சுமிகள், முத்துலட்சுமிகளிடமிருந்து தனித்து நிக்கனும்னு கயல்விழினு முன்னால போட்டுக்கிட்டீங்க. இன்னொரு கயல்விழி முத்துலட்சுமின்னு வேற யாராவது வந்தா, என்ன பேரு வச்சுக்குவீங்க? ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் மாதிரி, தில்லி, சாந்த்னி சவுக்னு அட்ரஸ அட்டாச் பண்ணிப்பீங்களா?
இனி பெயரை மாற்றமாட்டேன் என்று நினைக்கிறேன்..ஜி...:)
முல்லை:- பேச்சுப் போட்டிகளில்/விவாத/பட்டிமன்றங்களில் ஆர்வமுடன் பங்கேற்றதுண்டா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அல்லது அதையும் தாண்டி பொது மேடைகளில்? சுவையான நிகழ்வுகள்?
இல்லவே இல்லைப்பா... நான் போட்டிகளில் கலந்துகொண்டதே இல்லை.. இங்க வந்தப்பறம் தான் ஒரு முறை சிந்தாநதியின் விவாதப்போட்டியில் கலந்துகிட்டேன். மத்தபடி நான் என் குழுவில் பேசிக்கிட்டே இருப்பேன் அதாவது ஜாலியா அரட்டையா... அவ்வளவுதான் மேடை ஏறுரதுங்கறது என்னப் பொருத்தவரை பயங்கரமான விசயம். ஒரே ஒரு முறை ஒரு நாடகத்திற்கு பின்னிருந்து குரல் கொடுக்கவேண்டும். காட்சி பற்றிய விவரங்களுக்கு. அதற்கும் கூட நான் மேடையின் மறைவான இடத்தில் மைக்கை வைத்து தான் பேசினேன்.. :)
சென்ஷி :- புதிய பதிவர்களை எப்படி ஊக்குவிக்காலம்னு நீங்க நினைக்கறீங்க..?!
புதியபதிவர்களை எப்பவும் போல பின்னூட்டம் போட்டுத்தான் ... அதே சமயம் வித்தியாசமான முயற்சிகளைஅவங்க செய்கிற போது அவங்களைப்பற்றி நம் நண்பர்களுக்கும் சொல்லி படிக்கத் தூண்டுவது மேலும் நன்மை தரும். புதுபதிவர்களுக்கு தனிமடலிட்டு அந்த வித்தியாசமான முயற்சியை தொடரும்படி கேட்டுக்கொள்ளலாம்.. அவர்களின் தனித்திறமையை பாராட்டலாம்.. ஒவ்வொரு மனிதனுக்கும் ஊக்கம் என்பது தன்னுள்ளே இருந்து வருவதைவிட பாராட்டாக வருவது பலன் தரும்
ஜியா : எல்லாத்துக்கிட்டையும் கேள்வி கேக்குற கவிதா+அனிதா உங்க கைல மாட்டுனா, நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கனும்? என்ன கேப்பீங்க?? ;))
நாகேஷ் மாதிரி இல்லை எனக்கு கேள்வியே அதிகம் கேக்கத்தெரியாது. யாரவது வந்து என்னிடம் எங்க வீட்டுக்கு வாடகைக்கு ஆள் வேணும் தெரிஞ்சால் சொல்லுங்கன்னு சொல்லி இருப்பாங்க.. சரின்னுடுவேன். தவிர .. எத்தனை வாடகை .. என்ன லீஸ் எதிர்பார்க்கறீங்களான்னு அவங்களைக் கேட்டு தெரிஞ்சு வச்சிக்க எல்லாம் தெரியாது. ஒரு கேள்வியே கேக்கத்தெரியாத என்னை அதுவும் நறுக்குன்னு வேற .... நாலு கேள்வியா.. ?
சரி ஒன்னே ஒன்னு தான்... நீங்க அந்நியன் மாதிரி ஸ்பிலிட் பெர்சானலிட்டியா உண்மையில்??
ராப் : .சில ஆண்கள், ஒரு வரம்பையும் மீறி பெண்களை பொதுமைப்படுத்தி கீழ்த்தரமான நக்கலில் இறங்கறாங்களே அதப் பார்த்தா ஏதாவது தோனுமா உங்களுக்கு?
சில என்று நீயே சொல்லிவிட்டாய்.. தப்பித்துக்கொண்டாய் இல்லாவிட்டால் அதுக்கு ஒரு பெரிய கும்பலே ஓடிவந்திருப்பார்கள்.(பதிவுகளில் தானே கேட்டே) நிச்சயமாக காது மடல் சூடாகி கோவம் வரும். எழுந்து போய் தண்ணீர் குடிச்சிட்டு வந்து அடுத்த பதிவுக்கு போயிடுவேன். நாமும் பொதுமைப்படுத்தி பேசினால் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையே.. நம்மால் முடிந்தது அடுத்த ஜெனரேசனில் அப்படி எண்ணம் கொள்ளாமல் பிள்ளைகளை வளர்ப்பது தான்.
ராயல் ராம் : - பேசமா இருக்கிறது? அமைதியா இருக்கிறது? சும்மா இருக்கிறது? சத்தம் போடாமே இருக்கிறது? தொணதொணக்காமே இருக்கிறது? இப்பிடியெல்லாம் யாராவது சொல்லிருக்காங்களா? அப்பிடின்னா என்னான்னு அர்த்தம் தெரியுமா??
அதெல்லாம் எங்க வாத்தியாருங்க டீச்சருங்க சொல்லி இருக்காங்க.. ஒரே ஒரு ப்ரண்ட் மட்டும் உன் வாயடைக்கறமாதிரி ஒருத்தன் புருசனா வரனும்டின்னு சொல்லி இருக்கா... ஆனா அவங்க ஆபீஸ் வேலையா எதாச்சும் இருக்கறப்ப மட்டும் தான் ... சொல்வாங்க.. கொஞ்ச நேரம் பேசாம இருன்னு..
சிபி : மொக்கை எதிர்ப்பு நிலைல இருந்த நீங்க எப்ப மொக்கை ஆதரவு நிலைக்கு வந்தீங்க? ஏன்?
மொக்கை எதிர்ப்பு நிலையில் இருந்ததாக நினைவில்லை சிபி. என் பதிவில் நீங்க டீ குடித்து நடத்திய பின்னூட்டக் கும்மியை நிறுத்த சொன்னதால் சொல்கிறீர்கள் போல. அதற்கு பதில் போட்டு மாளவில்லை என்பதால் சொன்னது அது . நான் மற்றவர்கள் பதிவில் போய் கும்மிப்பின்னூட்டங்கள் போடுவதில் மறுப்பேதும் இல்லை.
மங்கை:- வட இந்தியாவில் உள்ள மக்களின் கண்ணோட்டத்திற்கும், தென் இந்தியாவில் உள்ள மக்களின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்கிறீர்களா?
நான் கவனித்தவரை இங்கே குழந்தைகளை மிகத் தன்னம்பிக்கையோடு வளர்கிறார்கள். அவர்களும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் செய்கிறார்கள். நகரங்களில் எல்லாமே ஒரு வித எட்டி நின்று புன்னகைத்து சுதந்திரமாக இருக்கவிடும் பண்பு இருக்கிறதோ என்னவோ.. நான் வளர்ந்த சிறு ஊருக்கு இந்த மெட்ரோ நகரம் மிக வித்தியாசமானது தான்.
ஜியா : கூட சில நண்பர்கள் இருந்தாலே எங்களால எழுத முடியறதில்ல... ஆனா, வீட்ல குட்டீஸ வச்சிக்கிட்டே, சிறு முயற்சி, புகைப்படம்னு தொடர்ந்து கலந்துக்கட்டி அடிக்கறீங்களே? (இப்பவும் அப்படித்தானே எழுதிட்டு இருக்கீங்க? ஏன்னா, நான் பதிவு பக்கம் வந்து லைட்டா ஒரு ஆறு மாசம் ஆகுது:)) அது எப்படி முடியுது?
சிலசமயம் குழந்தைகளின் குறும்புகள் ரசிக்கும்படியே இருக்கும். சிலசமயம் கோவம் வந்து நான் அதை கொட்டினால் அவர்களுக்கு அது சங்கடமாகி போகும்.. இங்கே எழுத உட்கார்ந்தால் அல்லது படிக்க உட்கார்ந்தால் வேறு உலகத்தில் நுழைந்ததுபோலாகி அவை கூலாகிவிடும். இதனால் நன்மைதானே.
கவிதா: ஒரு பெண் தன் கணவர், குழந்தைகளின் விருப்பத்திற்கும், விருப்பத்தை கேட்டும் நடந்து கொளவ்து பெண் அடிமைத்தனம் அல்லது அந்த பெண் அவர்களை சார்ந்து இருக்கிறாள் என்று சொல்லிவிட முடியுமா?
இருபக்கமும் கேட்டு கலந்தாலோசித்து நடக்கும் பட்சத்தில் அது ஒரு அழகான விசயம். பெண் மட்டும் கேட்டு நடந்துகொள்கிறாள் என்றால் அவளோட அன்பும் , அட்ஜஸ்ட் செய்து போகிற தன்மையும் தெரியவருகிறது. ஆனால் அப்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று கட்டளை இருந்தால் அங்கே பெண் அடிமைத்தனம் இருக்கின்றதோ என்று தோன்றுகிறது..
ரவுண்டு கட்டி கேட்ட கேள்விகள்
கவிதா : உங்கள் தாத்தாவிடம் நீங்களும் நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயம்?
விடாத கடவுள் சாதனை..... எல்லோரிடத்திலும் கனிவு
ராப் : .என்னைய பார்த்தா அடுத்த நிமிஷம் என்ன கேப்பீங்க?
என் கையால செய்த பிரியாணிய சாப்பிடறயா இல்லன்னா
வரியா சரவணாலயோ ஆனந்தபவன்லயோ போய் சாப்பிட்டுட்டுவரலாம்ன்னு
நீ என்ன சொல்வே "குட் ஐடியாக்கா.." அப்படின்னு ரைட்..?
ராயல் ராம் : தலைநகரின் தலை சிறந்த தமிழ் பேச்சாளர்'னு சொல்லி சிலை வைக்கிறப்போ அதுவும் பேசிட்டு இருக்கிறமாதிரி தான் வைக்கனுமா???
நிச்சயமா வைக்கமாட்டாங்க அதனால் இப்படி ஒரு சந்தேகம் வரவே வேண்டாம்.. இந்த பேச்சாளர் பட்டமே நண்பர்கள் சும்மா போட்டுவிட்ட பட்டம் தானே..
கவிதா:- சிறந்த பதிவர்கள் –எழுத்தில், மொக்கையில், நகைசுவையில்-
மொக்கைக்கு – சென்ஷி , ராப், நகைச்சுவைக்கு - அபிஅப்பா, குசும்பன், சின்னப்பையன், எழுத்துக்கு - பாலைத்திணை காயத்ரி, செல்வநாயகி
குறிப்பு: யாரும் தவறாக நினைக்கவேண்டாம். எனக்கு சட்டென்று நினைவுக்குவந்தவர்கள் இவர்க்ள் தான்
சிபி :- நேர்ல பார்க்காத வரை ரொம்ப புத்திசாலி/சாமார்த்தியசாலின்னு எல்லாரையும் நம்ப வைக்கிறீங்களே எப்படி?
செண்ட்ரல் ரயில்வெஸ்டேஷனுக்கு வர முன்னாடியே இந்த குசும்பன் சிபி ஜி3 குழுவினர் ப்ளானோடதான் வந்தாங்க.. மூவரும் மாத்தி மாத்தி பேசி என்னை முழிக்கவிட்டாங்க. அப்ப கண்டுபிடிச்ச உண்மைதான் நான் சாமர்த்தியசாலி இல்லைன்னு அதை இங்க விளம்பரம் செய்துட்டாங்க... :) புத்திசாலின்னு எப்பவுமே நான் சொல்லிக்கிட்டதே இல்லை. என்னோடது வெறும் சிறுமுயற்சி என்கிற தன்னடக்கத்தை சிலர் தப்பா புரிஞ்சுகிட்டாங்களோ என்னவோ.. ?
ராப் : அதெப்படி எப்பவும் எல்லாத்தையும் கூலாவே எடுத்துக்கறீங்க?
அனுபவம் தான். பொதுவா நான் எப்போதுமே சட்டென்று கோபப்பட்டு எதிராடுவது தான் வழக்கம். இப்போது மிகக்குறைந்திருக்கிறது. கோபத்தால் எனக்கே பூமாராங் மாதிரி திரும்ப அடிபட்டு ... இப்ப கூலா இருக்க பழகிவருகிறேன்.
G3 - மூச்சு விடாம பேசறீங்களே.எப்போதிலிருந்து இப்படி?
சின்னவயசிலேர்ந்தே இப்படித்தான். சாப்பாடு கூட வேண்டாம் தண்ணீர்( H 2 O) குடிச்சே பேசுவாளே என்று எனக்கு புகழ் உண்டு.
கவிதா:- உங்களின் பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது.
குப்பையை எங்கே போட்டீர்கள்?
மங்கை: - பெண் சுதந்திரம் என்று எதை சொல்லுவீர்கள்?
தளையாக எதையும் உணராமல் பெண் காரியங்களை இயல்பாக செய்வது தான். எதை செய்தாலும் யாராவது பெண் என்பதால் மட்டும் அந்த செயலை செய்ய தடை விதித்தால் அங்கே தான் ப்ரச்சனை வருகிறது.
ராயல் ராம் : Delhi Non-stop FM இப்பிடின்னு யாராவது பட்டபேரு வைச்சிருக்காங்களா???
அதான் இப்ப வச்சிட்டீங்களே!
முத்துலெட்சுமி'யின் தத்துவம் : நல்லதொரு மாற்றத்தினைக்கான மாற்றத்தின் முதல்படியா நீங்களே இருங்கள்... மகாத்மா காந்தி
கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் முத்துலெட்சுமி-கயல்விழி
Posted by : கவிதா | Kavitha
on 17:42
Labels:
கேப்பங்கஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
53 - பார்வையிட்டவர்கள்:
Kayalvizhinnu peru vechaalum vechaanga.. ivanga kannu meen maadiri irukko illayo.. kelvikellam kazhuvara meenla nazhuvura meen maadhiriyae badhil soldraangappa :)
அடேங்கப்பா அதுக்குள்ளும் கேள்விகளை தயார் பண்ணி அதற்கு பதில்களும் தட்டி, பதிவும் வெளியில வந்துருச்சே... நடக்கட்டும், நடக்கட்டும். என்ன அணில் அடக்கி வாசிச்சிருக்க மாதிரி இருக்கு.
முத்துன்னா என்ன பயம்ம்மா அணிலூஊ :-)
ஆகா! அற்புதமான பேட்டி! பேட்டி முடிஞ்சாச்சு! எங்கப்பா அந்த லெல்லி முதல்வர் நாற்காலி :-))
நல்ல கேள்விகள் அதுக்கு நல்ல பதில்கள்!
ஆஹா டெல்லி முதல்வர் நாற்காலி லெல்லி முதல்வர் நாற்காலி ன்னு ஆகிடுச்சே!
ரொம்ப குறைந்த நேரத்தில் தயார் செய்த பதிவு நேற்று இரவு 8.30 மணிக்கு நம் பதிவு குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு முத்து'விற்காக கேள்விகள் வேண்டுமென்று தொந்தரவு செய்து, இன்று காலை முத்துவுக்கு அனுப்பி, அதற்கு பிறகும் மூவர் அனுப்பிய கேள்விகளை அவருக்கு அனுப்பி அதற்கும் அவர்கள் பதில் போட்டு.....
..... அலுவலகத்தில் வேறு...நடு நடுவே இந்த பதிவை இன்று போட்டே விட வேண்டும் என்று முடிவோடு கம்பைல் செய்து..:)) போட்டாச்சு போட்டாச்சு.. :)
முத்துவின் ஒத்துழைப்பிற்கும், கேள்விகள் கொடுங்கள் அதுவும் இரவுக்குள் வேண்டும் என்று சொன்னவுடன் சிரமம் பார்க்காமல் உடனே அனுப்பிவைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.. :)
இதுல கேள்வி அனுப்பாமல் நான்கு பேர் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.. ஆனதும் நல்லதே. .இதிலேயே என்னுடைய, அணிலுடைய, ஏன் நண்பர்கள் சிலரின் கேள்விகளும் பதிவின் நீளம் கருதி டெலிட் செய்ய வேண்டியதாகிவிட்டது. :( யாரும் கோச்சிக்காதீங்க.. அணிலே கோச்சிக்கலை நீங்க கோச்சிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..:))
//முத்துன்னா என்ன பயம்ம்மா அணிலூஊ :-)//
தெகாஜிஅணிலுக்கு இல்லை. எனக்குத்தான் பயம்.. காதுல ரத்தம் வருமில்ல.. :)
//வீரமங்கை கவிதாவிற்கு வணக்கம். //
முத்து ஏன் இந்த கொலவெறி..!! :))
ஆஹா என்னா ஒரு ஸ்பீடு...
செல்வநாயகி எழுத்து எனக்கும் பிடித்தது.. என்னைக் கேட்டால் எனக்கும் சட்டென்று அவங்க தான் நினைவில் வருவாங்க
//கவிதா : உங்கள் தாத்தாவிடம் நீங்களும் நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயம்?
//விடாத கடவுள் சாதனை..... //
முத்து இந்த பதில் எனக்கு புரியல.. உங்கக்கிட்ட கேட்டு தெளிவாக்கிவிட்டு போட நேரம் எனக்கு இடம் தரலை..
இப்ப சொல்றீங்களா.. இதை கேட்டதே தாத்தாவிடம் இருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் ..புரியலைன்னா எப்படி?!
கவிதா.. அவங்க தினமும் காலையில் எழுந்ததும் சிவபூஜை செய்யாம வேறு வேலை செய்வது இல்லை. எத்தனையோ வருடங்களாக அதை தொடர்ந்து வருகிறார்கள். கடவுளை இடைவிடாது கும்பிடுவது என்ற பொருளில் அதை எழுதினேன்
அவங்க சினிமாவே பார்க்கமாட்டாங்க..ஒரே முறை திருநீலகண்டர் திரைப்படம் எங்களோடு வந்தார்கள்.
ஜி3 நீயே அழகா பாயிண்ட் குடுத்தே நன்றிம்மா...
--------------------
தெகா... உங்களமாதிரியா கடாபுடா வார்த்தையப்போடறோம் சட்டுன்னு நினைச்சதை எழுதிப்போடறது தான்..
----------------
அபி அப்பா லெல்லி நாற்காலியா .. ஒரு நல்ல சுத்தற நாற்காலியா கேட்டுட்டு இருக்கேன் வீட்டுல கணினிக்கு முன்னாடி உக்கார அதுகிடைச்சா போதும்..
நான் ஸ்பீடுங்கறத விட நீங்க ஸ்பீடா பின்னூட்டம் போட்டது ஆச்சரியம் மங்கை.. :)
----------------------
நிஜம்மா நல்லவருங்க நீங்க :)
நன்றி
//ராயல் ராம் : தலைநகரின் தலை சிறந்த தமிழ் பேச்சாளர்'னு சொல்லி சிலை வைக்கிறப்போ அதுவும் பேசிட்டு இருக்கிறமாதிரி தான் வைக்கனுமா???
நிச்சயமா வைக்கமாட்டாங்க அதனால் இப்படி ஒரு சந்தேகம் வரவே வேண்டாம்.. இந்த பேச்சாளர் பட்டமே நண்பர்கள் சும்மா போட்டுவிட்ட பட்டம் தானே..
//ராயல் ராம் : Delhi Non-stop FM இப்பிடின்னு யாராவது பட்டபேரு வைச்சிருக்காங்களா???
அதான் இப்ப வச்சிட்டீங்களே!
சிரிச்சுகிட்டே இருக்கேங்க... நல்ல நகைச்சுவை.. :)
முதலில் முத்துக்கா & கவிதா அக்கா உங்கள் இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ கவிதா அக்கா ;)
ஒருவரே கேள்வியை கேட்டு ஒரே மாதிரியாக பதிவு போடமால் அனைத்து நண்பர்களிடமும் கோட்டு வித்தியாசமாக செய்து இருக்காங்க அதுக்காக கவிதா அக்காவுக்கு என்னோட பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ;)
@ முத்துக்கா ;)
எந்த திசையில் இருந்தும் எப்படி பந்து வந்தாலும் அதை பவுண்டிரியாகவும் சிக்சராகவும் அடிச்சி தூள் கிளம்பிவிடுங்க எங்க முத்துக்கா அதை மீண்டும் இந்த கேப்பங்கஞ்சியில் நிருப்பிச்சியிருக்காங்க. அவர்களுக்கும் என்னோட மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துக்கள் ;)
@ கேள்வி கேட்ட நண்பர் (ஒரு வித கொலைவெறியோட தான் இருந்து இருகிகங்க எல்லாரும்)
இவ்வளவு குறைந்த நேரத்தில் நல்லதொரு கேள்விகளாக கேட்டு கலக்கியிருக்கிங்க மக்களே..உங்களுக்கும் என்னோட பாராட்டுகள் & வாழ்த்துக்கள் ;)
\\சரி ஒன்னே ஒன்னு தான்... நீங்க அந்நியன் மாதிரி ஸ்பிலிட் பெர்சானலிட்டியா உண்மையில்??\\
இதற்கு 100 வரிக்கு குறையமால் பதில் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ;)
\\குறிப்பு: யாரும் தவறாக நினைக்கவேண்டாம். எனக்கு சட்டென்று நினைவுக்குவந்தவர்கள் இவர்க்ள் தான்\\\
;-))) இதுவும் நல்லதுக்கு தான்...இந்த வரிகள் ரொம்ப பிடிச்சியிருக்கு ;)
\\முத்துலெட்சுமி'யின் தத்துவம் : நல்லதொரு மாற்றத்தினைக்கான மாற்றத்தின் முதல்படியா நீங்களே இருங்கள்... மகாத்மா காந்தி\\
ரைட்டு...நோட் பண்ணிக்கிட்டேன் ;)
//வீரமங்கை கவிதாவிற்கு வணக்கம்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//கவிதா:- சிறந்த பதிவர்கள் –எழுத்தில், மொக்கையில், நகைசுவையில்-
மொக்கைக்கு – சென்ஷி , ராப், நகைச்சுவைக்கு - அபிஅப்பா, குசும்பன், சின்னப்பையன், எழுத்துக்கு - பாலைத்திணை காயத்ரி, செல்வநாயகி
குறிப்பு: யாரும் தவறாக நினைக்கவேண்டாம். எனக்கு சட்டென்று நினைவுக்குவந்தவர்கள் இவர்க்ள் தான்//
நல்ல வேளை எங்க உங்க பேர சொல்லிட போறாங்களோன்னு பயந்துட்டேன்
//தற்போது "நான் ஆதவன்" என்கிற பதிவரின் பதிவில் அனிமேசன்களைப் பார்த்து அவர் உதவியுடன் சில வரைதலை பழகிவருகிறேன்.//
என்னைய கூட ஞாபகம் வச்சு சொல்லியிருக்காங்க......
அவ்வ்வ்வ்(இது ஆனந்த கண்ணீர்)
//சிபி :- நேர்ல பார்க்காத வரை ரொம்ப புத்திசாலி/சாமார்த்தியசாலின்னு எல்லாரையும் நம்ப வைக்கிறீங்களே எப்படி?//
:-)
தேறிட்டம்மா ...தேறிட்டே......
நல்லாவே தேறிட்டே:-))))))
கயலு,
இப்படித்தாய்ங்க சொல்லத் தோணுது
கேப்பங்கஞ்சி நல்லா இருந்தது. முத்தக்கா கிட்ட கேக்கணும்னு நினைச்ச கேள்வி எல்லாம் மத்தவங்க கேட்டுட்டாங்க.
\\சரி ஒன்னே ஒன்னு தான்... நீங்க அந்நியன் மாதிரி ஸ்பிலிட் பெர்சானலிட்டியா உண்மையில்??\\
@முத்து - இல்லை
---------------
//இதற்கு 100 வரிக்கு குறையமால் பதில் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ;)//
@ கோபி - பதிவு வேணும்னா போடவா? 100 வரிக்கு இங்க எழுதினா.. வந்து படிக்கறவங்க அந்நியனா மாறிடுவாங்க..:)
//வீரமங்கை கவிதாவிற்கு வணக்கம்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
:))) (பொறாமை?!! )
நல்ல வேளை எங்க உங்க பேர சொல்லிட போறாங்களோன்னு பயந்துட்டேன்//
ஆதவன்.. சொல்லாதவரைக்கும் நல்லது.. சொல்லிட்டா அதை வேற காப்பத்தனும்.. அது எல்லாம் நடக்கற விஷயமா சொல்லுங்க?! :)
என்னோட அந்த முக்கியத்துவம் வாய்ந்த கேள்விய புறக்கணித்த இருவரின் பித்தளைதனத்தை கண்டிக்கும் பொருட்டு பதிவிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்....... :)
// அபி அப்பா said...
ஆகா! அற்புதமான பேட்டி! பேட்டி முடிஞ்சாச்சு! எங்கப்பா அந்த லெல்லி முதல்வர் நாற்காலி :-))
7:18 PM
Blogger அபி அப்பா said...
நல்ல கேள்விகள் அதுக்கு நல்ல பதில்கள்!
7:19 PM
Blogger அபி அப்பா said...
ஆஹா டெல்லி முதல்வர் நாற்காலி லெல்லி முதல்வர் நாற்காலி ன்னு ஆகிடுச்சே!//
வழக்கம்ப்போலே படிக்காமாலே பின்னூட்டத்தை வாரி இறைச்சிட்டாரு.... :)
//G3 - மூஅச்சு விடாம பேசறீங்களே.எப்போதிலிருந்து இப்படி?//
தோடா... இதே கேள்விய அவங்க திரும்ப ஒங்கக்கிட்டே கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க சொர்ணாக்கா??? :)
//என்னோட அந்த முக்கியத்துவம் வாய்ந்த கேள்விய புறக்கணித்த இருவரின் பித்தளைதனத்தை கண்டிக்கும் பொருட்டு பதிவிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்....... :)//
ராம் ப்ளீஸ் போகாதீங்க.. உங்க கேள்விய இதோ இங்க போட்டுடறேன்..!
ராயல் ராம் : மிஸ்டர் முத்துலெட்சுமி எப்பிடி ஜஸ்ட் லிஸ்ட்னர்'ஆ? இல்ல உங்களைமாதிரி ஸ்பீக்கர் மட்டுமா?
மிஸ்டர் ரொம்ப நல்ல பாடகர்... எப்பவும் பாட்டு பாடிக்கிட்டே இருப்பாங்க.. பல சமயம் பாட்டு வரிகள் மாற்றி தன் கற்பனைக்கு போட்டு பாட்டு பாடுவாங்க.. சில சமயம் அப்படியே பாடினாங்கன்னா நானும் கூட சேர்ந்து பாடுவேன். :)
முத்து தயவுசெய்து இங்க வாங்க.. ராம் கேட்ட ஸ்பீக்கர் கேள்விக்கும் உங்க பதிலுக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லிட்டு போங்க.. :))
அவரு என்னவோ.. உங்க மிஸ்டர் உங்களை மாதிரி பேசுவாறா? ன்னு கேட்டு இருக்காரு..
நீங்க என்னன்னா. .அவரு நல்லா பாடுவாரு ன்னு சொல்லி இருக்கீங்க..
சத்தியமா எனக்கு புரியலப்பா...
//G3 - மூஅச்சு விடாம பேசறீங்களே.எப்போதிலிருந்து இப்படி?//
தோடா... இதே கேள்விய அவங்க திரும்ப ஒங்கக்கிட்டே கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க சொர்ணாக்கா??? :)//
கேட்டா திருப்பி பதில் சொல்லுவாங்க.. :)) G3 நல்லா பாட்டு வேற பாடறாங்க அதுவும் லிரிக்ஸ் தப்பு பண்ணாம எல்லா பாட்டும் பாடறாங்க அது தெரியுமா உங்களுக்கு?!! :)
ஸ்ரீதர்கண்ணன் நன்றிங்க.. :)
--------------------------
கோபி கமெண்ட்டா இது இத்தனை நீளமா இருக்கே .. என்ன எங்கபக்கமெல்லாம் பெரிய கமெண்டு ?? :) கிடைச்சா வாங்கிட்டுப்போகாம இது என்ன கேள்வி ?ரைட்டு!!
------------------------
ஆதவன் சும்மா ஆனந்தக்கண்ணீர் எல்லாம் விடக்கூடாது வகுப்பு எல்லாருக்க்கும் எடுக்க சொன்னேனே !! டிப்ஸ் எல்லாம் தமிழில் போடுங்க..
துளசி என்ன நீங்க இப்படி எல்லாம்.. பெரியவங்க சொல்லிட்டீங்க.. ஏத்துக்கறேன்..:)
------------------------
சின்ன அம்மிணி நீங்களும் இதே தானா கேக்க நினைச்சீங்க.. :) சரி இனி நான் கொஞ்சம் கவனிக்க ஆரம்பிக்கனும் என்னை.. :)
-----------------------
இராம் நான் பதில் சொன்னேன்ப்பா..பதிவு நீளமாகிடுச்சுன்னு கட் செய்தாங்க.. அப்பறம் என் பேச்சால நீளமாகிடுச்சுன்னு சொல்லக்கூடாது கேள்விகள் நிறைய.. :)
கரெக்ட் ராம் ஜி3 பயங்கரம் ட்ரைன் மாதிரி பேசறாங்க ஜி3 ஜிகுஜிகு ஜிகு...
கவிதா அதான் போட்டிருக்கேனேப்பா //எப்பவும்// ன்னு நான் வாயத்திறந்தா பேசிட்டே இருப்பது போல அவங்கப்பா எப்பவுமே பாடிக்கிட்டே ஹம் செய்துக்கிட்டே இருப்பாங்க.. சில சமயம் பாட்டு வரியை மாத்திப்பாடும்போது நாங்க சிரிச்சிடுவோம்.. சில சமயம் ஏன் இப்படி வார்த்தைய போட்டு கொடுமைபடுத்திறீங்கன்னு அதட்டுபோடுவோம்.. :))
//ராயல் ராம் : மிஸ்டர் முத்துலெட்சுமி எப்பிடி ஜஸ்ட் லிஸ்ட்னர்'ஆ? இல்ல உங்களைமாதிரி ஸ்பீக்கர் மட்டுமா?
மிஸ்டர் ரொம்ப நல்ல பாடகர்... எப்பவும் பாட்டு பாடிக்கிட்டே இருப்பாங்க.. பல சமயம் பாட்டு வரிகள் மாற்றி தன் கற்பனைக்கு போட்டு பாட்டு பாடுவாங்க.. சில சமயம் அப்படியே பாடினாங்கன்னா நானும் கூட சேர்ந்து பாடுவேன். :)//
பாவம்... அவரு கஷ்டத்தை பாட்டு பாடியே போக்கிக்குவார் போலே..... :)))
//பதிவெழுத வந்த மிக குறுகிய காலத்திலேயே நீங்கள் தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆகி இருக்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன? (இப்படி ஒரு கேள்வியை நாகை சிவாவிற்கு பிறகு உங்களிடம் மட்டுமே கேட்கிறேன்)//
இந்த கேள்வியை நாங்க இரண்டு பேரும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவங்க என்ற காரணத்தினால் கேட்டீங்களா? இல்ல வேறு ஏதும் காரணம் இருக்கா?
இந்த நேரத்தில் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
கட்சியில் சேர்ந்த சில காலத்திலே பதவிக்கு வந்துட்டீங்களேனு
தயாநிதி மாறனை கேட்டீங்களா?
அன்புமணி ராமதாஸை கேட்டீங்களா?
கனிமொழி யை கேட்டீங்களா?
கயல்விழியை கேட்டீங்களா?
அவர்களை எல்லாம் கேட்காமல் எங்கள் இருவரை மட்டும் குறி வைத்து தாக்கப்படும் இந்த நிலை ஏன்? ஏன்?
ஏன்????????????
//இந்த கேள்வியை நாங்க இரண்டு பேரும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவங்க என்ற காரணத்தினால் கேட்டீங்களா? இல்ல வேறு ஏதும் காரணம் இருக்கா?//
சிவா, கண்டிப்பா இல்லை. இது வரைக்கும் யார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவங்கன்னு தெரிந்து நான் பேசியதில்லை. கேள்வி கேட்டது இல்லை, பிரித்தோ கூட்டியோ பார்த்தது இல்லை.
ஆனால் சிலரிடம் இப்போது பேசும் போது தான் தெரிகிறது, மண் சார்ந்தவர்கள் நிறைய பேர் ஒற்றுமையோடு ஒருவரை ஒருவர் விட்டு க்கொடுக்காமல் இருக்கிறார்கள். அப்படி எல்லாம் எனக்கு பாகுபாடு இல்லை. :) அப்படி எந்த குரூப்'பிலும் நான் இல்லை. :), குருப்'பில் இருப்பவர்களையும் என்னால் அறிந்து கொள்ள முடிவதில்லை. இது எனக்கு தேவையில்லாத வேலையும் கூட. :)
//இந்த நேரத்தில் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
கட்சியில் சேர்ந்த சில காலத்திலே பதவிக்கு வந்துட்டீங்களேனு
தயாநிதி மாறனை கேட்டீங்களா?
அன்புமணி ராமதாஸை கேட்டீங்களா?
கனிமொழி யை கேட்டீங்களா?
கயல்விழியை கேட்டீங்களா?//
அவர்களை பேட்டிக்காணும் போது கேட்பேன்.. ! அதுவரை பொறுமை அவசியம்.. :)
//அவர்களை எல்லாம் கேட்காமல் எங்கள் இருவரை மட்டும் குறி வைத்து தாக்கப்படும் இந்த நிலை ஏன்? ஏன்?
ஏன்????????????//
பொதுவாக யாரை கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் அவர்களின் பதிவுகளை முதல் பதிவில் இருந்து கடைசி வரை ஒரு முறை (ஒரு முறை மட்டுமே) கவனமாக படிப்பேன். அதில் எனக்கு சுவரசியமாகாவோ, அந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்று கேள்விகள் எழுந்தாலோ கேட்பதுண்டு.
அப்படி எழுந்த கேள்வி தான் முத்துவிடம் கேட்டேன். உங்களை கண்டிப்பாக பதிவை படித்து கேட்கவில்லை, நீங்க ஸ்டார் ஆனவுடனே கேட்டுட்டேன். அதையே திருப்பி உங்களின் கஞ்சி ஊத்தும் போதும் கேட்டுட்டேன்..! :)
ஆனா உங்க இரண்டு பேரு பதிலிலும் எனக்கு என்னவோ திருப்தி இல்லை :) தமிழ்மண ஓனர்கள் தான் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டும். :)
சரி இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்க..
நீங்க ஸ்டார் ஆகிட்டீங்களா இல்லையா?
சரி இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்க..
நீங்க ஸ்டார் ஆகிட்டீங்களா இல்லையா?
//
இல்லை..!! இது தான் என்னுடைய கேள்விக்கு காரணம்னு நீங்க நினைத்தால்.. :) சிரிப்பான் போட்டு விட்டேன்..
/கவிதா | Kavitha said...
சரி இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்க..
நீங்க ஸ்டார் ஆகிட்டீங்களா இல்லையா?
//
இல்லை..!! இது தான் என்னுடைய கேள்விக்கு காரணம்னு நீங்க நினைத்தால்.. :) சிரிப்பான் போட்டு விட்டேன்..//
ஏன் அது என்ன பத்மஸ்ரீ அவார்ட்'ஆ??? :))
அருமையான சிந்தனையை தூண்டும் கேள்விகள்.. சிந்திக்க வைத்த பதில்கள்.. ஆகா அசத்தி விட்டீர்கள் அக்கா(ஸ்)
//இனி பெயரை மாற்றமாட்டேன் என்று நினைக்கிறேன்..ஜி...:)//
வாழ்த்துக்கள் அக்கா.. :-))
//இல்லை..!! இது தான் என்னுடைய கேள்விக்கு காரணம்னு நீங்க நினைத்தால்.. :) சிரிப்பான் போட்டு விட்டேன்..//
அந்த கேள்விக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்களாகவே நீ அதுக்குள்ள அப்படி நினைச்சுக்குறீங்க.....
நீங்களும் ஆகி இருந்தால் உங்களுக்கு சுலபமாக புரிய வச்சு இருக்கலாம்.
அதான் கேட்டேன்... :)))
சிவா... நான் என்னை தமிழ்மண ஸ்டாராக லேட்டாத்தான் தேர்ந்தெடுத்ததா நினைச்சிட்டிருக்கேன்னு சொல்றேன் யாரும் அதை கவனிச்சமாதிரியே தெரியலயே.... என்னைப்பத்தி நானே உயர்வா நினைச்சிட்டனோ அப்பன்னா ..இவங்க ஸ்டாராகி இருந்தா நம்ம சொல்றது புரிஞ்சுருக்குமன்றதும் சரிதான்..சரி விசாரிச்சி சொல்றேன்னு இருக்காங்க வெயிட் செய்வோம்.. :)
சென்ஷி பதிவைப்படிச்சிட்டாப்பா இந்த கமெண்ட்.. ஹ்ம்..
//நீங்களும் ஆகி இருந்தால் உங்களுக்கு சுலபமாக புரிய வச்சு இருக்கலாம். //
//இவங்க ஸ்டாராகி இருந்தா நம்ம சொல்றது புரிஞ்சுருக்குமன்றதும் சரிதான்..//
சிவா , முத்துலட்சுமி...நான் ஆகி இருந்தாலும் என்னுடைய கேள்வியாக கண்டிப்பாக இது இருந்து இருக்கும்..
மேலும், தமிழ்மணம் எந்த காரணத்தில் உங்களை (மற்றவர்களையும்) தேர்ந்தெடுதிருக்கிறது தனிப்பட்ட முறையில் காரணம் சொல்லுகிறார்களா? அப்படி சொல்லியிருந்தால் மட்டுமே நீங்கள் எனக்கு விளக்கவும் முடியும், நான் அதை புரிந்து கொள்ளவும் முடியும்.. :)
நான் ஸ்டார்'ஆகிவிட்டிருந்தால் மட்டுமே என்னால் நீங்கள் சொல்லுவதை புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? .
//அருமையான சிந்தனையை தூண்டும் கேள்விகள்.. சிந்திக்க வைத்த பதில்கள்.. ஆகா அசத்தி விட்டீர்கள் அக்கா(ஸ்)//
சென்ஷி உங்க பின்னூட்டம் கூட செம செம அசத்தல்..!! :)
எந்த காரணமும் சொன்னதா தெரியல..நீங்க கேட்டு சொல்லுங்கப்பா என்னை ஏன் தேர்ந்தெடுத்தாங்கன்னு.. எனக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்குல்ல.. :)
எந்த காரணமும் சொன்னதா தெரியல..நீங்க கேட்டு சொல்லுங்கப்பா என்னை ஏன் தேர்ந்தெடுத்தாங்கன்னு.. எனக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்குல்ல.. :)//
முத்து ஒரு குறிப்பிட்ட பதிவரை ஏன் ஸ்டார் ஆக தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்பது நாகரீகம் இல்லை.. ஒரு வேளை என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த கேள்வியை நான் எழுப்பினால் அதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் போது எனக்காக கேட்டு, அதை உங்களுக்கும் சொல்கிறேன்.!! :)
சிவா'வை வின் கேப்பங்கஞ்சி'யிலிருந்து -
//
கவிதா:- தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆன தகுதிகள் என்ன என்ன வேண்டும்?
இதை நீங்க விடவே மாட்டேன், அடம் பண்ணுறீங்களே... உங்களை சீக்கிரம் ஸ்டார் ஆக்க நான் பரிந்துரை செய்யுறேங்க போதுமா?
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, தொடர்ந்து எழுதுங்கள். எல்லா பதிவுகளுக்கும் சென்று முடிந்த அளவு சென்று விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களை ஒரு நாள் ஸ்டார் ஆக்குவார்கள். ஆனால் நிலைமை தற்பொழுது அப்படி இல்லை என்று தான் எனக்குப்படுகின்றது.
:) யாருக்காவது ஏன் தமிழ்மணத்தில் தன்னை ஏன் ஸ்டார் ஆக்கினார்கள் என்று காரணம் தெரிந்தால் பின்னூட்டம் போடுங்கள்....
parattugal
polurdhayanithi
Post a Comment