வேளச்சேரி அடையார் பேக்கரி, கேக் வாங்க சென்றேன்.. வாங்கிவிட்டு கூல் டிரிக் ஒன்று வாங்கி, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்த நேரம் ஒரு பகட்டு குடும்பம் வந்தது. ஒரு அம்மா, ஒத்த வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உடன் வந்தனர்.
அதில் அந்த அம்மாவின் நடை உடை'யிலிருந்து நல்ல வசதி என்று தெரிந்தது. குழந்தைகளில் இரண்டு அந்த அம்மாவின் குழந்தைகள் என்பதும் அவர்களின் முக சாயலிலிருந்தும், உடைகளிலிருந்தும் தெரிந்தது. ஒரு பெண் குழந்தை மட்டும் ஒரு சாதாரண நைட்டியின் மேல் ஒரு துப்பட்டா போட்டு இருந்தது. அந்த குழந்தைக்கு ஒரு 10 வயது இருக்கலாம். அந்த குழந்தை அந்த வீட்டில் வேலை செய்கிறாள் என்பது அவள் உடையை பார்த்ததும் தெரிந்தது.
இந்த அம்மா அந்த இரண்டு குழந்தைகளிடம் மட்டும் என்ன வேண்டும் என்ற கேட்க..அவர்கள் இருவரும் யோசித்து, எல்லாவற்றையும் பார்த்து.. கேக், சிக்கன் ஃப்வ் என்று ஆர்டர் செய்ய, இந்த அம்மாவும் அவர்களுக்கும் சிக்கன் ஃபவ் ஒன்று ஆர்டர் செய்துவிட்டு.. இந்த குழந்தைக்கு மட்டும் ஒரு சின்ன மாசா பாட்டிலை வாங்கி கையில் கொடுத்தார்.
அந்த குழந்தையும் அதை கையில் வாங்கி குடிக்க ஆரம்பித்தது.. ஆனால் அந்த குழந்தையின் கண்கள் இந்த இரண்டு குழந்தைகள் வைத்து இருந்த அந்த கேக்'கின் மேல் தான் இருந்தது. அதையும் அந்த குழந்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தனக்கு கொடுக்கப்பட்ட மாசா'வை குடித்தது..
என்ன கொடுமை இது.. ஒரே வயது ஒத்த குழந்தைகள், ஒரே மாதிரியான ஆசைகள், விளையாட்டுத்தனம், சிந்தனை , செயல்கள் எல்லாமே இருக்கும். வேலை செய்யும் குழந்தை என்பதால் அதை இப்படித்தான் நடத்தப்படவேண்டுமா? ..அப்படி நடத்துபவர்கள் அந்த குழந்தையை இப்படி பொது இடங்களுக்கு இப்படிப்பட்ட உடையுடன் அழைத்து வராமலேயே இருக்கலாமே..?!
இந்த குழந்தைகள் மனதளவில் எத்தனை வேதனைப்படுவார்கள், அவர்களின் ஏழ்மையினால் ஏற்பட்ட இயலாமை அவர்களின் மனதில் ஏற்படும் சிறு வயது சின்ன சின்ன ஏமாற்றங்கள், ஏக்கங்கள் அவர்களது வாழ்க்கையில் எப்படிப்பட்ட எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளில் என்ன பாகுபாடு?!! மனிதர்களிலேயே பாகுபாடு கூடாது. .இதில் குழந்தைகளில்..?!!
எனக்குமே இப்படி நடந்து இருக்கிறது என்னுடைய திருமணத்தின் போது. எதற்குமே உதவாத, என்னை விட வயதில் பல மடங்கு அதிகமான ஒரு நபரை என் சொந்தங்கள் எனக்கு பார்த்த போது, என் பெரிய அண்ணன் என் அத்தையிடம் " ஏன் அத்தை உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்ப்பீர்களா? ஏன் இப்படி மனசாட்சியே இல்லாமல் நடந்துக்கொள்கிறீர்கள் ?" என்று கேட்டார். அதற்கு அத்தை மிகவும் பொறுமையாக நிதானமாக "கண்டிப்பாக என் பெண்ணிற்கு அப்படி ஒரு மாப்பிள்ளையை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, காரணம் நான் இருக்கிறேன், மாமா இருக்கிறார், அதற்கு மேல் என் பெண்ணிற்கு 100 என்ன 150 பவுன் நகை போடுவேன்( இது நடந்தது 90 களில்) , உன் தங்கைக்கு உன்னால் அவ்வளவு செய்ய முடியுமா? , உன்னால் முடியாது! அதனால் யாருக்கும் பாரமில்லாமல் அந்த பெண்ணை கேட்பவர்களுக்கு கட்டிக்கொடு.. வீடு வீடாக விட்டு வைக்காதே.. வயது பெண்ணை எவ்வளவு நாள் நாங்கள் பார்த்துக்கொள்வது ?" என்றார். இந்த பேச்சு நடக்கும் போது நானும் அங்கு இருந்தேன்.. இன்னமும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத வார்த்தைகள் இவை. பசுமரத்து ஆணிபோன்று பதிந்து போன வார்த்தைகள் இவை.
உண்மையை தான் அவர் சொன்னார், அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை என்றாலுமே, ஏழையாக இருந்தாலும் ஓரளவுக்கு பார்த்தாவது ஒரு மாப்பிள்ளைக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற மிக சாதாரண நல்ல எண்ணம் இல்லாதது கூட பரவாயில்லை, சொந்த அண்ணன் பெற்ற குலவிளக்கு , அந்த அண்ணன் தான் இவர்களுக்கு எல்லாம் தன் பணத்தில் திருமணம் செய்துவைத்தார், அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் எதுவுமே சேர்த்து வைத்து கொள்ளாமல் .. :).... சரி சொன்னார்கள் இதை எங்கள் இருவரின் மனம் நோகாமல் சொல்லி இருக்கலாம்.. வடுக்களாக பதிந்து இருக்காது... :(
ம்ம்..இப்படிப்பட்ட மனிதர்கள் தான் கொடுக்கிறார்கள் மன உறுதியையும், போராடக்கூடிய எண்ணத்தையும். வாழ்க்கையின் தோல்விகள் எல்லாவற்றையும் வெற்றியாக்க வைராக்கியத்தையும். இப்படிப்பட்ட வார்த்தைகள் எனக்கு இன்னமும் பயன்படுகிறது. :) :):) அவர்களும் அவர்கள் குடும்பமும் நன்றாக எப்போதும் இருக்க வேண்டும் என்னுடைய இந்த வடுங்களின் ரணங்கள் அவர்களை எதுவும் செய்து விடக்கூடாது கடவுளே என்று நான் பல சமயங்களில் நினைப்பதும் உண்டு.
தலைப்புக்கு வருகிறேன். ! .குழந்தைகள் குழந்தைகள் தான் .... வசதி இல்லாதவர்களாக இருக்கட்டும், வேலை செய்பவர்களாக இருக்கட்டும், தாய் தகப்பன் இல்லாதவர்களாக இருக்கட்டும், நொண்டி முடமாக இருக்கட்டும்.. ..குழந்தைகள் குழந்தைகள் தான். .அவர்களின் மனம் நோகும் படி பாரபட்சமாக நடந்துக்கொள்ளாதீர்கள்... வடுக்களை உண்டாக்காதீர்கள்..
அணில் குட்டி அனிதா:- ஓ.. அப்ப ஏதோ ஒரு அப்பாவி தப்பிட்டாருன்னு சொல்லுங்க... .. கவி கிட்ட மாட்டி இருந்தஆஆஆ? வயசானவர்னு வேற சொல்றீங்க. .அய்யோ பாவம் அவர் கதி........ :( செம லக்கி அவரு, தலைக்கு வந்தது தலைப்பாயோடு போயிடுச்சி'அவருக்கு...... !! :)
பீட்டர் தாத்ஸ்:- Children need love, especially when they do not deserve it. ~Harold Hulbert
இவர்களும் குழந்தைகளே...
Posted by : கவிதா | Kavitha
on 20:35
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
30 - பார்வையிட்டவர்கள்:
:((
உங்களுக்காகவும் அந்த ஏழைக் குழந்தைக்காகவும் மனம் விம்முகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவர்களும் அவர்கள் குடும்பமும் நன்றாக எப்போதும் இருக்க வேண்டும் என்னுடைய இந்த வடுங்களின் ரணங்கள் அவர்களை எதுவும் செய்து விடக்கூடாது கடவுளே என்று நான் பல சமயங்களில் நினைப்பதும் உண்டு
Very Good Thoughts..
//எதற்குமே உதவாத//
இது எப்படி உங்களுக்கு தெரியும். அவர் மிக கடின உழைப்பாளியாக கூட இருந்திருக்கலாம்.
நீங்கள் மேலே சொன்னது, உங்களுக்கு நடந்தது எல்லாம் யதார்த்தங்களே. அதை பழகிகொள்ளவேண்டிய நிலையில் தான் எல்லோரும் :(
//ஓ.. அப்ப ஏதோ ஒரு அப்பாவி தப்பிட்டாருன்னு சொல்லுங்க... .. கவி கிட்ட மாட்டி இருந்தஆஆஆ? வயசானவர்னு வேற சொல்றீங்க. .அய்யோ பாவம் அவர் கதி........ :( செம லக்கி அவரு, தலைக்கு வந்தது தலைப்பாயோடு போயிடுச்சி'அவருக்கு...... !! :)//
அத படிச்சுட்டு இத தான் பின்னூட்டமா போடலாம்னு வந்தா இங்க அணில் இதையே தான் சொல்லியிருக்கு. எனக்கும் அணிலுக்கும் ஒரே வேவ்ஸ் :)
நீங்க சொன்னாது போல இங்க நிறைய பேர் இருங்காங்க...காசே தான் கடவுள்.!
கவிதா
நீங்க சொல்ற விஷயம் நேர்ல பார்க்கும் போது கண்ல இரத்தம் வரும்... முதலில் அவ்வ்ளோ சின்ன குழந்தையை வேலைக்கு வச்சதே தப்பு... அதுக்கே அந்த பொம்பளைய உதைக்கனும்..
ரெண்டாவது...அந்த ஆங்கில கோட்... அவர் சொல்ல வந்த மெஸேஜ் அந்த கோட்ல இருக்கானு தெரியலை... quotes are usually expected to influence thoughts... அது இந்த கோட் செய்யுமான்னு தெரியலை...who are we to say that one deserves or not (anything for that matter)... அந்த கோட் சொன்னவரை கேட்க்கனும்... நீங்க சொல்ல வந்த விஷ்யத்தின் தீவிரத்தை அந்த கோட் கம்மி பண்ணீடுச்சுப்பா...:-))
கவிதா,
...எல்லாம் அததது தலையெழுத்துப் படிதான் நடக்கும் வீட்டில் வேலைக்காரியாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால் அந்த சிறு பிஞ்சுகளுக்கு கிடைப்பதும் கிடைக்காமல் போகும் தெரியுமா... எம்பூட்டு உதவியா நாங்க இருக்கோம்.
ஏன் ஒரே மாதிரி வாங்கி கொடுக்காமல்னு கேட்டா...
தினமும் அந்த மாதிரி வாங்கிப் போட முடியுமா அவங்க என்ன குழந்தையை தத்தெடுத்தா வளர்க்கிறாங்க, மனுச நிலையில் இப்படியெல்லாம் இருக்கிறதே பெரிய விசயம்...ஹ்ம்ஹும்.
நாங்க இப்படியெல்லாம் சொல்லி சமாளிச்சிட்டு வாரோம் நீங்க என்னன்னமோ சொல்லி புலம்பித் தள்ளுரீங்க, இப்பத் தெரியுதா ஏன் உங்களுக்கு பி.ப்பி(BP) எகிருதுன்னு :-).
யூ ஆர் ரியலி கிரேட் அக்கா
உங்களுக்காகவும் அந்த ஏழைக் குழந்தைக்காகவும் மனம் விம்முகிறது.//
ராகவன் சார் நன்றி, நிச்சயமாக நான் அப்படி ஒரு விஷயத்தை பார்க்கும் போது அந்த குழந்தையை பார்த்து பரிதாபப்படவில்லை.. அந்த அம்மாவை பார்த்து கோபப்பட்டேன்..
என்னுடைய விஷயத்தில் அத்தை அப்படி சொன்னபோது அதில் உள்ள யதார்த்தை உணர்ந்தேனே தவிர..[அத்தையின் மேல் ரொம்பவும் பாசமாக இருந்தேன் என்று என் வரலாறு சொல்லுகிறது :)] என்னைப்பற்றி பரிதாபப்படவில்லை.
இரண்டு விஷயம் கற்றுக்கொண்டேன்.
* எப்படி இருக்கூடாது
* எப்படி இருக்கவேண்டும்
எப்போதும் என் அனுபவங்களில் நான் கற்றுக்கொள்ளும் பாடம் இவை இரண்டு மட்டுமே :)
நன்றி ஸ்ரீதர்கண்ணன் :)
--------------------------------
//எதற்குமே உதவாத//
இது எப்படி உங்களுக்கு தெரியும். அவர் மிக கடின உழைப்பாளியாக கூட இருந்திருக்கலாம்..//
ஆதவன், கடின உழைப்பாளியாக இருக்கும் பட்சத்தில் என் அண்ணன் அப்படி ஒரு கேள்வியை கேட்டு இருக்க வாய்பில்லை. :) என் கணவரை நான் மனந்தது அவர் உழைப்பாளி என்ற ஒரே நம்பிக்கையில் மட்டுமே. :) என்னுடைய பழைய பதிவில் நிறைய பேசிவிட்ட ஒரு விஷயம் இது. !!
//நீங்கள் மேலே சொன்னது, உங்களுக்கு நடந்தது எல்லாம் யதார்த்தங்களே. அதை பழகிகொள்ளவேண்டிய நிலையில் தான் எல்லோரும் :(//
யதார்த்தம் மட்டுமே இல்லை என்று சொல்லவில்லை... ஆனால் அதை பழகிக்கொள்ளும் போது கண்டிப்பாக வலிகள் இருக்கும் :) வலிப்பவர்களுக்கு மட்டும் புரியும் யதார்த்தம்.. :)
நீங்க சொன்னாது போல இங்க நிறைய பேர் இருங்காங்க...காசே தான் கடவுள்.!//
:) காசு மட்டுமெ இல்லை மனித நேயம் அற்ற மனிதர்கள்...
//ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை
சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை
நிஜார் போட்ட மனிதனின் பேஜார்//
புதிகைச்சாரல், எனக்கு புரியவில்லை. எதற்கு இது??
நீங்க சொல்ற விஷயம் நேர்ல பார்க்கும் போது கண்ல இரத்தம் வரும்... முதலில் அவ்வ்ளோ சின்ன குழந்தையை வேலைக்கு வச்சதே தப்பு... அதுக்கே அந்த பொம்பளைய உதைக்கனும்..//
வாங்க மங்கைஜி, உதைக்கனும்னு ஆரம்பிச்சா.. ம்ஹும் எத்தனை பேரை ? படித்தவர்கள் பலர் வீடுகளில் குழந்தைகள் வேலை செய்கின்றன. கண்டுகொள்ளாமல் வேலை முடிகிறது, ஆள் கிடைத்துவிட்டது என்று பயன்படுத்திகொள்பவர்கள் தான் அதிகம்.
//ரெண்டாவது...அந்த ஆங்கில கோட்... அவர் சொல்ல வந்த மெஸேஜ் அந்த கோட்ல இருக்கானு தெரியலை... quotes are usually expected to influence thoughts... அது இந்த கோட் செய்யுமான்னு தெரியலை...who are we to say that one deserves or not (anything for that matter)... அந்த கோட் சொன்னவரை கேட்க்கனும்... நீங்க சொல்ல வந்த விஷ்யத்தின் தீவிரத்தை அந்த கோட் கம்மி பண்ணீடுச்சுப்பா...:-))//
கண்டிப்பா இது ஒரு கான்ரோ கோட்.. இதை போட நினைத்ததற்கு காரணம்.. அந்த குழந்தைகளை என்னுடைய இடத்தில் இருந்து பார்க்காமல், குழந்தைகளை பாரபட்சமாக பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள் பாருங்கள் அவர்களின் இடத்தில் இருந்து பார்த்து எடுத்துதது. அவர்கள் தானே "they do not deserve it" என்று நினைக்கிறார்கள்.. அப்படி இந்த மனிதர்கள் நினைக்கும் போது.. இதை சொல்லுவதாக நான் எடுத்துக்கொண்டு போட்டது. :) Hope now u got it ....
//..எல்லாம் அததது தலையெழுத்துப் படிதான் நடக்கும் //
தேகாஜி, முதலில் இந்த தலை எழுத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.. தலை எழுத்து என்று நான் எதையும் அப்படியே விட்டுவிடுவதில்லை... முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் வரை தலையெழுத்துக்கு அங்கு வேலை இல்லை என்பது என் எண்ணம்.
//வீட்டில் வேலைக்காரியாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால் அந்த சிறு பிஞ்சுகளுக்கு கிடைப்பதும் கிடைக்காமல் போகும் தெரியுமா... எம்பூட்டு உதவியா நாங்க இருக்கோம்.//
மங்கைஜி சொன்னாங்க பாருங்க.. உதைக்கனும்னு. .அதுல முதல்ல நிற்பது நீங்கதான்.. உங்களை போன்றவர்களை உதைத்தால் போதும் பிஞ்சுகள் படிக்க பள்ளிக்கு போகும்
//ஏன் ஒரே மாதிரி வாங்கி கொடுக்காமல்னு கேட்டா...
தினமும் அந்த மாதிரி வாங்கிப் போட முடியுமா அவங்க என்ன குழந்தையை தத்தெடுத்தா வளர்க்கிறாங்க,//
ஐயா சாமி நீங்க தத்து எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்க ஒன்றுமே சாப்பிட கூட தரவேண்டாம்.. உங்களால் சரி சமமாக நடத்த முடியவில்லை என்றால் அந்த அளவிற்கு மனபக்குவம் உங்களுக்கு இல்லை என்றால் உங்கள் குழந்தைகளை தனியாக கவனியுங்கள்.
//மனுச நிலையில் இப்படியெல்லாம் இருக்கிறதே பெரிய விசயம்...ஹ்ம்ஹும்.//
ஏன் என்கிட்ட வாங்கிக்கட்டிகிட்டு போகனும்னு வந்து இருக்கீங்களா?
//நாங்க இப்படியெல்லாம் சொல்லி சமாளிச்சிட்டு வாரோம் நீங்க என்னன்னமோ சொல்லி புலம்பித் தள்ளுரீங்க, இப்பத் தெரியுதா ஏன் உங்களுக்கு பி.ப்பி(BP) எகிருதுன்னு :-).//
கிளம்பிட்டாங்கய்யா என் பிபி கதையை பேச...!! :)
அடுத்தவர்கள் மனம், உடல் துயரம் பாராமல் உங்களின் சந்தோஷம் மட்டுமே பார்த்து சுயநலமாக சமாளித்து வருகிறீர்கள் உங்களை போன்ற சுயநலக்காரர்களிடம் என்னத்தை பேசி எண்ணத்தை புரியவைப்பது... மங்கை சொன்ன வைத்தியம் தான் "உதை"
ஆனா.. இப்படி பின்னூட்டம் போட்டு என் பிபியை ஏற்றிவிடவே நீங்கள் எல்லாம் வறீங்க... :) என்னத்த செய்யறது. .எவ்வளவோ சமாளிச்சாச்சி வாழ்கையில..... இதையும் சமாளிக்கவேண்டியது தான்
அப்துல்லா நன்றி :)
/மங்கை said...
கவிதா
நீங்க சொல்ற விஷயம் நேர்ல பார்க்கும் போது கண்ல இரத்தம் வரும்... முதலில் அவ்வ்ளோ சின்ன குழந்தையை வேலைக்கு வச்சதே தப்பு... அதுக்கே அந்த பொம்பளைய உதைக்கனும்..
ரெண்டாவது...அந்த ஆங்கில கோட்... அவர் சொல்ல வந்த மெஸேஜ் அந்த கோட்ல இருக்கானு தெரியலை... quotes are usually expected to influence thoughts... அது இந்த கோட் செய்யுமான்னு தெரியலை...who are we to say that one deserves or not (anything for that matter)... அந்த கோட் சொன்னவரை கேட்க்கனும்... நீங்க சொல்ல வந்த விஷ்யத்தின் தீவிரத்தை அந்த கோட் கம்மி பண்ணீடுச்சுப்பா...:-))/
ரிப்பீட்...!
/ எம்.எம்.அப்துல்லா said...
யூ ஆர் ரியலி கிரேட் அக்கா/
இதுக்கும் ஒரு ரிப்பீட்டு..!
எத்தனை பேரையா...
எத்தனை பேராயிருந்தாலும் உதக்கனும்.. தேடி கண்டுபிடிச்சு உதைக்கனும்... அது யாராயிருந்தாலும் சரி...என் உறவினர் விடுகளில் இது மாதிரி செய்திருக்காங்க...அக்கம்பக்கத்திலும் தான்... உறவினர் வீட்டில் போய் உண்ணாவிரதம் இருந்து அந்த குழந்தைகளை பெற்றவர்களிடம் சேர்த்திருக்கேன்...அதுனால இன்று வரை என்னோட பேசாம இருக்குறவுங்க இருக்காங்க. இருந்துட்டு போகட்டுமே, எனக்கென்ன
இங்க தில்லியில தான் அது முடியலை.. கண் முன்னாடி நடக்குது.. ரெண்டு மூனு முறை சொல்லி பார்த்தேன்,ம்ம்ம்.. house ownners association la complaint பண்ணிட்டாங்க...இந்த அம்மா எங்களை தொந்தரவு பண்றாங்கன்னு.. சப்போர்ட் இல்லாம ஒன்னும் பண்ண முடியலை... நம்ம ஊர்ல நடக்கறது எல்லாம் ஒன்னுமே இல்லை...இங்க பார்க்கும் போது..லக்ஷ்மி கிட்ட கேளுங்க வண்டி வண்டியா சொல்லுவாங்க...
அந்த கோட் அர்த்தம் எனக்கு புரியாம இல்லைக் கவிதா.. அதான் சொன்னேனே அவர் நினைச்ச மெசேஜ் அந்த கோட் கொண்டு போகுமான்னு தெரியலைன்னு...
கவிதா மேடம் எல்லாம் பார்த்து பார்த்து பழகி போச்சு.. அவங்களுக்கு மனசாட்சின்னு இருந்த்தா அந்த குழந்தைய வேலக்காரியா நடத்த மாட்டாங்க! அதுக்குமேல அவங்ககிட்ட மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது நம்ம பார்வை கோளாறு..
\\அப்படி நடத்துபவர்கள் அந்த குழந்தையை இப்படி பொது இடங்களுக்கு இப்படிப்பட்ட உடையுடன் அழைத்து வராமலேயே இருக்கலாமே\\
இதையாவது செய்யலாம்.
என்ன சொல்றதுன்னே தெரியலைங்க முழுதா படித்த பிறகு.
எது எப்படியோ நம்மல பார்த்து யாரும் இப்படி சொல்லிடக்கூடாது அதாவது அப்படி நான் நடந்துவிடக்கூடாதுன்னு மணம் விரும்புது.
முயற்சிகள் மேலும் தொடரும்.
எது எப்படியோ நம்மல பார்த்து யாரும் இப்படி சொல்லிடக்கூடாது அதாவது அப்படி நான் நடந்துவிடக்கூடாதுன்னு மணம் விரும்புது.
முயற்சிகள் மேலும் தொடரும்.//
நன்றி ஜமால்..:)))) இதை தான் என் எழுத்திற்கு நான் எதிர்பார்க்கிறேன்.. என் சொந்த விஷயங்களையும் கூட எடுத்துக்காட்டுகிறேன். அதை என்னால் மறைத்து எழுத முடியும், ஆனால் இதை படிப்பதால், ஒரு சிலரையாவது யோசிக்க வைத்து இப்படி நடந்துக்கொள்ளாமல், அல்லது இப்படி நடப்பவர்களை தட்டி கேட்க தூண்டமுடியுமானால் அது என்னுடைய வெற்றி :) மீண்டும் நன்றி :)
கவிதா மேடம் எல்லாம் பார்த்து பார்த்து பழகி போச்சு.. அவங்களுக்கு மனசாட்சின்னு இருந்த்தா அந்த குழந்தைய வேலக்காரியா நடத்த மாட்டாங்க! அதுக்குமேல அவங்ககிட்ட மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது நம்ம பார்வை கோளாறு..//
சிங்கு பார்வை கோளாறு மூளை கோளாறு என்று சொல்லிவிட்டு நாம் செல்ல செல்லத்தான் இவை அதிகமாகின்றன்.
சுட்டிக்காட்ட கூடிய தவறுகள், சுட்டிக்காட்டப்பட வேண்டும். இவர்கள் இப்படித்தான் இவர்களை திருத்துவது என் வேலை இல்லை என்று சொல்லி நழுவுவது சுயநலம்....!! இப்படி நினைப்பவர்கள் பலர் தான் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடகூடாது, முதர்ச்சியுடன் இருப்பதாகவும் சொல்லிக்கொள்வார்கள். இவர்களை தான் நான் கண்டுக்கொள்வதில்லை.. இவர்களை பார்க்கும் போது என் பார்வையில் கோளாறு வரும் :))
குழந்தைகள் தான் எதிர்கால தூண்கள், அவர்கள் மனம் எந்த விதத்திலும் யாராலும் புண்பட்டுவிடக்கூடாது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
எத்தனை பேரையா...
எத்தனை பேராயிருந்தாலும் உதக்கனும்.. தேடி கண்டுபிடிச்சு உதைக்கனும்... அது யாராயிருந்தாலும் சரி...என் உறவினர் விடுகளில் இது மாதிரி செய்திருக்காங்க...அக்கம்பக்கத்திலும் தான்... உறவினர் வீட்டில் போய் உண்ணாவிரதம் இருந்து அந்த குழந்தைகளை பெற்றவர்களிடம் சேர்த்திருக்கேன்...அதுனால இன்று வரை என்னோட பேசாம இருக்குறவுங்க இருக்காங்க. இருந்துட்டு போகட்டுமே, எனக்கென்ன//
மங்கைஜி - ஒரு சல்யூட் போட்டுக்கறேன்..!! யூ ஆர் கிரேட்!! இந்த அளவுக்கு கூட நான் செய்ததில்லை.. :( உங்களிடமிருந்து கண்டிப்பாக இவற்றை எல்லாம் நான் கற்றுக்கொள்ளவேண்டும்... எக்ஸ்லன்ட் ஜாப்!! ஐ பிரவுட் ஆஃப் யூ, பீயிங் யுவர் கோ பிளாகர்..:)
முல்லை, நிஜமா நல்லவன் ..வருகைக்கும் தருகைக்கு நன்றி!! :)
/கவிதா மேடம் எல்லாம் பார்த்து பார்த்து பழகி போச்சு.. அவங்களுக்கு மனசாட்சின்னு இருந்த்தா அந்த குழந்தைய வேலக்காரியா நடத்த மாட்டாங்க! அதுக்குமேல அவங்ககிட்ட மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது நம்ம பார்வை கோளாறு..//
சிங்கு பார்வை கோளாறு மூளை கோளாறு என்று சொல்லிவிட்டு நாம் செல்ல செல்லத்தான் இவை அதிகமாகின்றன்.
சுட்டிக்காட்ட கூடிய தவறுகள், சுட்டிக்காட்டப்பட வேண்டும். இவர்கள் இப்படித்தான் இவர்களை திருத்துவது என் வேலை இல்லை என்று சொல்லி நழுவுவது சுயநலம்....!! இப்படி நினைப்பவர்கள் பலர் தான் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடகூடாது, முதர்ச்சியுடன் இருப்பதாகவும் சொல்லிக்கொள்வார்கள். இவர்களை தான் நான் கண்டுக்கொள்வதில்லை.. இவர்களை பார்க்கும் போது என் பார்வையில் கோளாறு வரும் :))
குழந்தைகள் தான் எதிர்கால தூண்கள், அவர்கள் மனம் எந்த விதத்திலும் யாராலும் புண்பட்டுவிடக்கூடாது என்பதை அனைவரும் உணரவேண்டும்.//
பத்து வருடங்களுக்கு முன்பு எனது பதின்ம வயதில் நடந்த நிகழ்வு
அரசு மருத்தவமனையில் எனது உறவினரை பார்க்க சென்றேன். அங்கே விஷமருந்தி சிகிச்சைக்காக ஒரு நோயாளி.
உடலில் இருந்த மருந்தெல்லாம் வெளியேற்றிய பின் வெளிச்சுவாசம் செலுத்தினார்கள்! நான் அந்த நிகழ்வை கவனத்துடன் கவனித்து கொண்டு இருந்தேன். ஆக்ஸிசன் நீர் நிரப்பபட்ட பாட்டில் வழியே நோயாளிக்கு சென்று கொண்டு இருந்தது. நேரம் செல்ல செல்ல ஆக்ஸிசன் செல்லும் வீதம் குறைவானது.இதை யாரும் கவனிக்க வில்லை- நோயாளியின் உடன் இருந்தோர் உட்பட. அதே நேரம் நோயாளி தன் மனைவியிடம் சிரித்து பேசி கொண்டு இருந்தார்.ஆக்ஸிசன் வீதம் குறைய குறைய என்னுடைய இதய துடிப்பு அதிகமானது. என் எதிரில் தென்பட்ட தாதியரை கூப்பிட்டு .எனக்கு இந்த டெக்னாலஜி எதுவும் புரியாது.ஆனா நான் கவனித்தவரை ஆக்ஸிசன் வீதம் குறைந்துள்ளது என்றேன் . என் மீசை யில்லா முகத்தை பார்த்து அலட்சியமாக சென்று விட்டார்.
சரியாக 20 நிமிடங்களில் ஆக்ஸிசன் வீதம் குறைந்து காது வழியே ரத்தம் வந்து இறந்து விட்டார் . நான் அன்று கண்டது திட்டமிட்ட உயிர் இழப்பு. நடப்பதை எட்ட நின்று கவனித்தேன்.மருத்துவர் வந்து உதடு பிதுக்கி சாதாரணமாக சென்று விட்டார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் டாக்டரின் அழைப்பில் உள்சென்றேன்.என்னிடம் விளக்கம் சொன்னார், என்னிடம் ஏன் சொல்கிறீர்கள் என்றேன் . அவரது தரப்பு நியாங்களை சொல்ல ஆரம்பித்தார்.என் வயதுக்கு எதும் புரியவில்லை
எனக்கு உறவும் அல்ல தெரிந்த்தவரும் அல்ல,இருந்தும் நீங்கள் என்னை உள் அழைத்து சொன்னதற்கு என் நன்றி என சொல்லி ஒரு விஷயம் மட்டும் நிச்சயம் - நீங்கள் ஆக்ஸிசன் சிலிண்டரை மாற்றி இருந்த்தால் இந்த இழப்பு நிச்சயம் என்றேன். அவர் அரசு நடவடிக்கை மற்றும் அரசு எந்திரத்தை குறை சொன்னார். நான் அவரை மதியாமல் நமக்கும் குடும்பம் உறவு என்று உள்ளது என்று நீங்கள் நினைத்தால் இந்த பதில் உங்களிடமிருந்த்து வராது என்றேன்.பின் அங்கு இருக்க பிடிபடாமல் பேருந்து நிலையம் வந்தேன் .அதற்குள் அங்கே உள்ள பிரபல ரவுடி இருவர் பேருந்து நிலையதில் சுற்றி வளைத்தனர். நான் அவர்களுக்கு போக்கு காட்டி விட்டு வீடு சென்றேன். மூன்று தினங்கள் எனக்கு உறக்கமே இல்லை - ஏனெனில் நான் ஒரு ஒரு நோயாளியாக அந்த இடத்தில் இருந்திருந்த்தால் இதே விளைவுதான் எனக்கு.இந்த நிகழ்வை அந்த வயதில் ஜூனியர் விகடன் வரை கொண்டு சென்றேன்.
சரியாக ஏழு வருடம் கழித்து அதே மருத்துவரின் தனி மருத்துவமனையில் என் சகோதரி பிரசவத்திற்கு சேர்த்து இருந்த்தோம். என் முகம் மருத்துவருக்கு மறந்த்து விட்டது. அதே நேரம் அன்றைக்கு நான் மருத்துவருக்கு நான் செய்த சிறிய உதவியால் மருத்துவ கட்டணத்தில் ரூ.5000 குறைத்து கொள்ள சொன்னார். நான் முழு தொகையையும் கொடுத்து உங்களுக்கு எதிராக பத்திரிகையில் எழுதியது நான்தான்.இனி அவ்வாறான நிகழ்விற்கு துணைபோகாதீர்கள்.மற்றவரையும் அனுமதிக்காதீர்கள் என்றேன் . அவர் சொன்ன தொகையை குறைத்து கொண்டு என்னால் முடிந்த அளவு நல்லது செய்கின்றேன் என்றார். இந்த செய்தியைதான் எனது முதல் பதிவாக எழுதியிந்தேன்
ஒரு வேளை இப்படி இருந்து இருக்கலாம்.
அந்த குழந்தை அந்த வீட்டில் வேலை செய்பவர் மகளாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது. இது சும்மா ஒரு கணிப்பு தான்.
மத்தப்படி நீங்க சொல்வதை சரியே!
அந்த குழந்தை அந்த வீட்டில் வேலை செய்பவர் மகளாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது. இது சும்மா ஒரு கணிப்பு தான்.//
சிவா ஏன்..? இந்த கணிப்பு தேவையா? :) அப்படி எல்லாம் வீட்டில் வேலை செய்யும் வேலையாளின் குழந்தையை அழைத்து வரும் நல்லவர்களாக இருந்தால் இப்படி நடந்துக்கொள்ள மாட்டார்கள்..
இந்த நிகழ்வை அந்த வயதில் ஜூனியர் விகடன் வரை கொண்டு சென்றேன்.
//
சிங்கு..நீங்க இவ்வளவு நல்லவரா? சொல்லவே இல்ல... ?!! எல்லோரும் இப்படி இருந்துவிட்டால்.. ஆனால் எங்கே..?! ஆதாங்கம் தான் மிஞ்சுகிறது...!! :(
Post a Comment