அணில் குட்டி அனிதா:- அம்மணி தமிழை எவ்வளவு கொல்லுவாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. கவிதை எழுதறேன்னு அதுல பாதிக்கு மேல தப்பு. .சரி பாவம்னு எல்லாரும் அதையே படிச்சிட்டு சும்மா போகாம..அம்மணி வருத்த படுவாங்களேன்னு பாராட்டு மழை வேற. .எல்லாம் நேரம்.. என்னத்த சொல்ல.. .சரி.. மேட்டருக்கு வரேன்..
தமிழே சரியா தெரியாத அம்மணி பீட்டருல பல நேரம் பலரை கொன்னு குவிச்சி இருக்காங்க. .அதனால வீட்டுல இவிங்க புள்ள .. நீ வீட்டுல பீட்டர் ல பேசப்படாதுன்னு இ.பி.கோ. நவீன் செக்ஷ்ன் 021 ன்னு போட்டு, வீட்டுல இருக்கும் போது ஆங்கிலமா அப்படின்னா ன்னு கேப்பாங்க....
இப்படி பெற்ற புகழ்பெற்றவங்களை மும்பை சிட்டியில.. ஆ.ன்ன்னூ..ஜொள்ளூ வரது க்கூட தெரியாம வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தது இல்லாம நடு நடுவுல "முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !" "முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !" ன்னு ஓவர் சீன் வேற....
லஸி'ன்னா அம்மணிக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் நார்த் பக்கம் போனா நாக்கு தொங்கும். வேற எதுக்கும் இல்ல இந்த 'லஸி' க்கு தான்... வூட்டுக்கார நொய் பண்ணி கடைக்கு போய் குடிச்சாங்க.. குடிச்சிட்டு.. "சூப்பர் அச்சா ஹேய்" தாங்ஸ் ஹெய்" ன்னு அந்த கடைக்காரனை பார்த்து சொல்லிட்டு ..ஹி ஹி..ன்னு ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு வந்தாங்க..
திரும்ப அடுத்தநாள் இன்னொரு லஸி கடைய பாத்து.. "ப்பாஅ.ஆ... லஸி.."னாங்க.. சரி நாக்கு ரொம்ப த்தான் வெளியில தொங்குதேன்னு வூட்டுக்காரரும் கூட்டுட்டு போயி வாங்கித்தந்தாரு...
சாப்பிட்டாங்களே சும்மா வந்தாங்களாஆ?..
"ப்பா.. இந்த லஸி நேத்திக்கு சாப்பிட்டது மாதிரி திக்கா இல்ல தண்ணியா இருக்கு.. அந்த கடக்காரன் கிட்ட சண்டை போடலாம் வாங்க.. " ன்னு சொன்னாங்க..
"ஏன்டி இங்கயுமா? சரி....உனக்கு த்தான் நல்லா ஹிந்தி தெரியும்னு பீத்திக்கற இல்ல நீயே போய் கேளூ..."
அந்த பக்கமா புள்ள இவிங்கள நக்கலா பாத்து சிரிச்சான்..(ஏன்னா அவரு கேவி யில படிச்சவரு.. ஹிந்தியில தினமும் பேசி படுத்து தூங்கறவரு.. பின்ன ஒன்னுமே தெரியாம அச்சா மாலும் அச்சா மாலும் ன்னு சொன்னா.. நக்கலா சிரிக்காம என்ன செய்வாங்களாம்... )
"டேய் என்ன ஓவர் நக்கலா சிரிக்கற...ஒன்ன மாதிரி நான் ஒன்னும் கேவி ஸ்டூடண்ட் இல்ல ஆனாலும் உனக்கே நான் தான் ஹிந்தி சொல்லி கொடுத்தேன். அதை மறக்காதே..."
"ம்ம்..அப்புறம்...." ன்னு இன்னும் சிரிச்சிட்டு.... "ஓவரா பேசறத நிறுத்திட்டு கிளம்பு, அவன் கிட்ட ஏதாவது பேசி வந்த இடத்தில அடி வாங்கி அசிங்கபடாத சரியா...... வா வா..." ன்னு புள்ள அம்மாவை காப்பாத்த பாத்தான்..
ஆனா எங்க... அம்மணி அடங்காம.. முதல்ல ஒத்திகை பார்த்தாங்க...
"ப்பா.. நான் சொல்றது சரியா செக் பண்ணுங்க ஓகே... ன்னு வூட்டுக்காருக்கிட்ட
"அந்த துக்கான் மே லஸி அச்சா கெட்டி ஹே....."
"க்கியூ ஆப் க்கா துக்கான் மே லஸி தோடா தண்ணி ஹூ"
அப்பாவும் புள்ளையும் அங்கேயே விழுந்து விழுந்து சிரிக்க.... அம்மணி மூஞ்சிய பாக்கனுமே.. !!
"க்க்யூ மேரா ஹிந்தி அச்சா நஹி ஆத்தா ஹேய்..!!? ஒய் யூ போத் ஆர் ஹஸ்தா ஹே?!! அப்பன்னா துக்கான் காரன் கூட னோ பயிட் ஃபார் தஹி...ஹே..... ?"
"அடச்ச்சே வந்துத்தொலடி.....!! உன் கூட எங்க போனாலும் இதே பிரச்சனையா போச்சி..., சரி மனசுல கைவச்சி சொல்லு சென்னையில இப்படி ஒரு லஸி 'ய நீ வாழ்க்கையில குடிச்சி இருக்கியா?... என்னவோ அங்க கட்டி கட்டியா குடுச்சி பழகினவ மாதிரி ஓவரா சீன் போடற.. "
"2 ஸ்பூன் தயிரை ஒரு டம்ளர் லஸி ஆக்கி கொடுப்பானுங்க அதையும் சூப்பரன்னு குடிக்கற உனக்கு இது எல்லாம் ரொம்ப ஓவரா தெரியல.....வா..வா......" ன்னு வூட்டுக்காரு அம்மணி கைய புடிச்சி இழுக்க...
"அம்மணி இருங்கப்பா களாஸை கொடுத்துட்டு வரேன்.." ன்னு விடாம கடைக்குபோய்..
"ஆப்கோ துக்கான் மே....லர்ஸி அச்சா ஹே.. பட்..தோடா தண்ணி ஹே..மேக் ஸ்யூர் நெக்ஸ்ட் டைம் யூ பிரேபேர் குட் திக் ஒன் ஒகே..நோ தண்ணீ.. ஐ மீன் நோ பானி...மிக்ஸிங்.....ஓகே.....!! ' ன்னு சொல்லிட்டு வர ........
அவன் திரு திருவென்று முழிக்க... வெளியில் வந்து...
"ப்பா..துக்கான்வாலா க்கு ஹிந்தி மாலும் நஹிஹே...ஓ பாகல் ஹே " ன்னு சொல்ல...
"ம்ம்......நீ பாகல்ல்லா அவன் பாகல்லா......" னு சொல்லிட்டு அப்பாவும் புள்ளையும் இவிங்கள ரோடுன்னு கூட பார்க்காம தொறத்த..... ..
ஓடமுடியாம ஒடம்ப தூக்கிக்கிட்டு ஓடி ................இரண்டு பேர் கிட்ட இருந்தும் ஜஸ்ட் தப்பிச்சிட்டாங்க..........
பீட்டர் தாத்ஸ் : Language is the most imperfect and expensive means yet discovered for communicating thought. ~William James
முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !
Posted by : கவிதா | Kavitha
on 15:56
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
23 - பார்வையிட்டவர்கள்:
//"அந்த துக்கான் மே லஸி அச்சா கெட்டி ஹே....."
"க்கியூ ஆப் க்கா துக்கான் மே லஸி தோடா தண்ணி ஹூ"//
Too good:)
//"அந்த துக்கான் மே லஸி அச்சா கெட்டி ஹே....."
"க்கியூ ஆப் க்கா துக்கான் மே லஸி தோடா தண்ணி ஹூ"//
Too good:)//
:)))))))) Thanks ...
ஏக் காவ்ன் மேன் ஏக் கிசான் ரஹ்தா தா..
எனக்கும் ஹிந்தி தெரியும்.
ஏக் காவ்ன் மேன் ஏக் கிசான் ரஹ்தா தா..
எனக்கும் ஹிந்தி தெரியும்.//
:)) பட் முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !
/// கவிதா | Kavitha said...
ஏக் காவ்ன் மேன் ஏக் கிசான் ரஹ்தா தா..
எனக்கும் ஹிந்தி தெரியும்.//
:)) பட் முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !///
நான் ஆரம்ப பள்ளி தான்.. நீங்க தான் Phd பன்னீட்டிங்க போல..
ஒ மாடாமே சப்பல்க்கு லேக்கர் ஆவ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// கவிதா | Kavitha said...
ஏக் காவ்ன் மேன் ஏக் கிசான் ரஹ்தா தா..
எனக்கும் ஹிந்தி தெரியும்.//
:)) பட் முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹேய் !///
நான் ஆரம்ப பள்ளி தான்.. நீங்க தான் Phd பன்னீட்டிங்க போல..//
ம்ம் இப்படி சரியா முதலிலேயே சொல்லி இருக்கலாம் இல்ல... தேவை இல்லாம முஜே ஹிந்தி மே bath கர்தி ஹூ... :)
//ஒ மாடாமே சப்பல்க்கு லேக்கர் ஆவ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஜமால் என்னவோ என்னை திட்டறீங்கன்னு மட்டும்..தெரியுது ஆனா என்னன்னு த்தான் தெரியல.... :(((
புரியும்படியா தெளிவா ஹிந்தியில சொல்லுங்க..சரியா.. :)))
//ப்பா..துக்கான்வாலா க்கு ஹிந்தி மாலும் நஹிஹே...ஓ பாகல் ஹே " //
ம்ம்ம்ம்...பேசாரா துக்கான்வாலா.....
அன்புடன் அருணா
//ப்பா..துக்கான்வாலா க்கு ஹிந்தி மாலும் நஹிஹே...ஓ பாகல் ஹே " //
ம்ம்ம்ம்...பேசாரா துக்கான்வாலா.....
அன்புடன் அருணா//
ஏம்ப்பா அருணா..ஏதோ தெரியாத்தனமா முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹே ன்னு போட்டுட்டேன்..
அதுக்குன்னு இப்படி வரவங்க எல்லாம் ஹிந்தியிலேயே மாட்டலாடறீங்களே நல்லாவா இருக்கு..
ஒருத்தர் என்னான்னா "சப்பல்' க்கு லேக்கர்'னு சொல்லறாரு... மும்பைல.. கப்பல் நிறைய இருக்குது.. ஆனா லேக் இல்ல கடல் தான் இருக்கு ..
நீங்க என்னான்னா "பேசாரா" போச்சி ன்னு சொல்லிறீங்க..
நானும் எவ்வளவு தான் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது...:(((
முஜ்ஜே ஏக் பாத் அச்சா நஹி லக்தா.. க்யுன் இத்னா பர்ஷான் கர்கே ஹிந்திமெய்ன் பாத் கர்னா. ஏக் காம் கரோ. ஓ துக்கான்வாலாக்கு ஹமாரா பாஷா டீக்ஸே பாத் கர்னே சிக்காதோ.. ஏ திக்கத் பிர் கபி நஹி ஆயேகா.. லிக்னே பட்னே நஹி. சிர்ஃப் உஸே பாத் கர்னே சிக்காதோ.. பிர் ஓ பந்தா பி ஆப் கி ஜைஸே லிக்னேக்கா ஷுரு கர்தேகா.. முஜே அச்சா டமில் பேச ஆத்தா ஹை கர்க்கே..
ஏ கெய்சா ஹெய்.. :-))
//"சூப்பர் அச்சா ஹேய்" தாங்ஸ் ஹெய்" //
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்க ஆரம்பிச்சிடுச்சு ஹே
;))))
இது தேவையா நமக்கு...போனாமா வாங்கி குடிச்சமான்னு இல்லமா இந்தி வேறயா!!!! ;)))
\\ஹிந்தியிலேயே மாட்டலாடறீங்களே நல்லாவா இருக்கு..\\
அட்டன்னேரா ...
//முஜ்ஜே ஏக் பாத் அச்சா நஹி லக்தா.. க்யுன் இத்னா பர்ஷான் கர்கே ஹிந்திமெய்ன் பாத் கர்னா. ஏக் காம் கரோ. ஓ துக்கான்வாலாக்கு ஹமாரா பாஷா டீக்ஸே பாத் கர்னே சிக்காதோ.. ஏ திக்கத் பிர் கபி நஹி ஆயேகா.. லிக்னே பட்னே நஹி. சிர்ஃப் உஸே பாத் கர்னே சிக்காதோ.. பிர் ஓ பந்தா பி ஆப் கி ஜைஸே லிக்னேக்கா ஷுரு கர்தேகா.. முஜே அச்சா டமில் பேச ஆத்தா ஹை கர்க்கே..
ஏ கெய்சா ஹெய்.. :-))//
சென்ஷி..:((( நியாயமா... ??? திட்டனும் தனியா வாங்கன்னு சொல்லியிருந்தா யாருக்கும் தெரியாம வந்து திட்டு வாங்கி இருப்பேன் இல்ல..? ஏன் இப்படி...?!! பொதுவல வந்து திட்டறீங்க..?!!
என்னோட ப்ளாக் ஹிஸ்டரியில இவ்வளவு மோசமா இவ்வளவு பப்ளிக்கா யாருமே என்னை திட்டினது இல்ல... எனக்கு ஒரே அழுவாச்சியா இருக்கு :((((((
//"சூப்பர் அச்சா ஹேய்" தாங்ஸ் ஹெய்" //
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்க ஆரம்பிச்சிடுச்சு ஹே//
அர்னால்ட், :))) ஹஸ்தா ஹே..!! அச்சா அச்சா..!! பட் வயறு வலிக்கு மேரா நாம் நோ யூஸ் கர்தா ஹே!!
டீக்கே?!!
===================================
கோபிநாத் said...
;))))
இது தேவையா நமக்கு...போனாமா வாங்கி குடிச்சமான்னு இல்லமா இந்தி வேறயா!!!! ;)))
கோபி...அப்புறம் வாழ்க்கையில எப்பத்தான் ஹிந்தியில மாட்டலாட கத்துக்கறது.. ?!!
================================
நட்புடன் ஜமால் said...
\\ஹிந்தியிலேயே மாட்டலாடறீங்களே நல்லாவா இருக்கு..\\
அட்டன்னேரா ...//
அட்ரா சக்க !! அட்ரா சக்க!! அட்ரா சக்க!! ஜமால்... இது என்ன லாங்வேஜ்..னு சொல்லுங்க அதுலையும் பேசிடலாம்..!! :)))))))
GOOD COMEDY...BUT THE LAST LINES FROM "WILLIAM JAMES"...IS THE REAL "PUNCH"...MADE THE COMEDY..A LITTLE SERIOUS ONE...FINE...HUMARA HINDI VIDTHWATH BAHOOTH KAREEB HAI..."JAI HIND"...
GOOD COMEDY...BUT THE LAST LINES FROM "WILLIAM JAMES"...IS THE REAL "PUNCH"...MADE THE COMEDY..A LITTLE SERIOUS ONE...FINE...HUMARA HINDI VIDTHWATH BAHOOTH KAREEB HAI..."JAI HIND"...//
வாங்க ராமசுப்ரமணியஷர்மாஜி, (ஸ்ஸ் ப்பா..எவ்வளாஆஆம் பெரிய பேரு???)
நன்றி.. நல்லா சிரிச்சீங்களா.. ?!! சந்தோஷம் என்ன பன்றது என்னோட ஹிந்தி புலமை உங்களை எல்லாம் சிரிக்க வைக்குது.. :)
பீட்டர் தாத்ஸ் எப்பவும் அப்படித்தான் பஞ்ச் வைப்பாரு.. அவரு தான் என்னோட பதிவுகளில் ஒழுங்கா உருப்படியா எழுதற ஒரே ஆள்.. :)))
//UMARA HINDI VIDTHWATH BAHOOTH KAREEB HAI..."JAI HIND"...//
இதை மட்டும் இங்லீஷ்ல சொல்லாம ஹிந்தியில சொல்லுங்க சரியா புரிஞ்சிக்குவேன்.. இப்ப புரியல.. :(
//அர்னால்ட், :))) ஹஸ்தா ஹே..!! அச்சா அச்சா..!! பட் வயறு வலிக்கு மேரா நாம் நோ யூஸ் கர்தா ஹே!!
டீக்கே?!!// அச்சா...டீக்கே டீக்கே...மேரா அச்சா(மலயாளம்=அப்பா) தோ டீக்கே லேக்கின் மேரா அம்மா டீக் நகி ஹேய். "இப்படி என்ன பாஷை பேசுறதுனே சில நேரம் மறந்து போயிடுதுங்கோ" (சில வெளிநாட்டார்கள் உங்க நாட்டில இத்தன பாஷையா என வாய் பிளக்கிறார்கள்!!!)
அச்சா...டீக்கே டீக்கே...மேரா அச்சா(மலயாளம்=அப்பா) தோ டீக்கே லேக்கின் மேரா அம்மா டீக் நகி ஹேய். "இப்படி என்ன பாஷை பேசுறதுனே சில நேரம் மறந்து போயிடுதுங்கோ" (சில வெளிநாட்டார்கள் உங்க நாட்டில இத்தன பாஷையா என வாய் பிளக்கிறார்கள்!!!)//
ஹ ஹா.:)) நான் ஹிந்தியில அச்சா' ன்னு சொன்னா நீங்க மலையாள அச்சனை 'ரெஃபர் செய்யறீங்க.. ம்ம்.. நீங்க சொல்றது சரிதான்.. நம்மக்கிட்ட நிறைய மொழி இருக்கு... :)
குஜராத் ல இருக்கும் போது "கேம் ச்சூ", "பாரபர் ச்சூ".. "மஜாமே ச்சே" ன்னு ஒரே ச்சூ..சே..வா இருக்கும்.. அங்கேயும் இப்படித்தான்.. தமிழ், இங்கலீஷ், ஹிந்தி, குஜராத்தின்னு எல்லாத்தையும் பேசி எல்லாரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழப்பி விடுவேன்.. :))
ச்சே சான்ஸே இல்ல உங்கள் விட வேற யாராலும் இவ்வளவு அருமையா இந்தி பேச முடியாது :-)
ச்சே சான்ஸே இல்ல உங்கள் விட வேற யாராலும் இவ்வளவு அருமையா இந்தி பேச முடியாது :-)//
போங்க புனிதா....வெக்க்கம்ம்ம்மா இருக்கு!!.. :)))
பட் பட் கே மேரா பேட் துக் ஓகயாஹே!!!!
Post a Comment