திருமதி குஷ்பூ சுந்தர் சி அவர்களுக்கு....
நாங்கள் எல்லாம் என்ன பாவம் செய்தோம்? குஷ்பூ அம்மா..!! தாயே..!! எவ்வளவு தான் நாங்கள் பொறுப்போம்..?!! சரி..சரி.....நான் ஒத்துக்கறேன்..எங்க புள்ளைங்க உங்க தீவிர ரசிகர்களாக மாறி ஒரு காலத்தில் உங்களுக்காக ஒரு கோவில் கட்டினாங்க....அதை நீங்க இன்னமும் போய் பார்த்ததில்லை என்பது நீங்கள் அளித்த பேட்டி மூலம் நாங்கள் அறிவோம். உங்க ரசிகர்கள் முட்டாள்கள் தான்.. ஆனா தொடர்ந்து நாங்க எல்லாருமே முட்டாள்களாகவே இருக்கனும்னு நீங்க முடிவு செய்யலாமா?
எந்த பெண்ணிடம் இல்லாத ஒன்று
அது ஏதோ...
அது ஏதோ
உன்னிடம் இருக்கிறது...
அதை அறியாமல் விடமாட்டேன்..
அப்படின்னு உங்களுக்கு பாட்டு எல்லாம் எழுதினாங்க..ஆனா..நீங்க என்ன அறிந்து கொள்வது ..என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிளாமராக நடித்துவிட்டீர்கள்... இன்னுமா? உங்களுக்கு என்ன இன்னமும் வருஷம் 16 என்ற படத்தில் வந்தது போலவே நினைச்சுக்கறீங்களா? தயவு செய்து உங்களை நீங்கள் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.. வர வர உங்களின் உடை அலங்காரம், தலை அலங்காரம் முக அலங்காரம், முதுகு அலங்காரம்னு பார்க்க முடியலைங்க.. இப்போது எல்லாம் வீட்டு வரவேற்பறை தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வருகின்றன். குடும்பத்தோடு பார்க்கிறோம். எவ்வளவு தான் நாங்களும் பொறுத்து பொறுத்து பார்க்கறது... ?!
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில வருகிறீர்கள்.. நீங்க திரும்பி நின்றாலே பக்குன்னு நெஞ்சை அடைக்குது...!! ஏன்னா பின்னாடி சுத்தமா துணியே இல்லை.. சரி தையல்காரன் மறந்துவிட்டானா? என்று பார்த்தால் எல்லா நிகழ்ச்சிகளிலும் நீங்கள் திரும்பாமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை மனம் உறுக வேண்டிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு நல்ல நிகழ்ச்சி சரி குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்காலம் என்றால் உங்கள் ஆடை குறைப்பு அருவருப்பை மட்டும் இல்லை வயிற்றை பிசைகிறது...
நீங்கள் 80 கிலோ வெயிட் இருந்த போது ஆடினீங்க தெரியுமா? "ஒத்த ரூபா தாரேன்.." ன்னு என்று ஒரு பாட்டு, அது சூப்பர் சூப்பர் ஹிட் ஆச்சி... அப்ப கூட நாங்க எல்லாம் உங்க நடனத்தை ரசித்தோம்.. நிஜமாக குண்டாக இருந்தாலும் நல்லாத்தான் இருந்தீங்க.. ஆனா வர வர நீங்க போடற் ஆட்டம் எங்களால தாங்க முடியல.. தயவு செய்து புரிஞ்சிக்கோங்க...
ஏங்க நாங்க என்னங்க பாவம் செய்தோம்... பொங்கல் அதுவுமா..வீட்டில் நிம்மதியாக டிவி பார்த்துகொண்டு இருக்கலாம் என்று நினைத்து உட்கார்ந்தால்... அட கடவுளே.. வில்லு படத்தில் "ராமா ராமா..ராமன் கிட்ட வில்ல கேட்டான்..பாட்டுல.. ஏங்க.. ஏங்க....?? இப்படி.. என்னால் இதுக்கு மேல பேச முடியலைங்க..........ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க.. அழுகை அழுகையா வருது... தயவுசெய்து எங்களை எல்லாம் விட்டுடுங்க.. உங்களுக்கு குடும்ப செலவுக்கு பணம் வேணும்னா.... அம்மா தாயே ன்னு ஒரு போஸ்டு போட்டு நான் மாசம் மாசம் பணம் உங்க வீட்டுக்கு அனுப்பிடறேன்.. ஆனா எங்களை இப்படி ஆட்டம் போட்டு சாக அடிச்சிடாதீங்க....
நீங்கள் போடும் ஆட்டத்தை தீவிரமாக எதிர்ப்பது மட்டும் இல்லாமல் சினிமாவில் ஆட்டம் மட்டுமாவது இனி போடுவதில்லை என்று எங்களுக்காக உங்கள் குழந்தைகளின் மீது சத்தியம் செய்து கொடுங்கள் என்று கேட்டு கொள்ளவது மட்டும் இல்லாமல்-
உங்க ஆட்டத்தை வில்லு பட பாட்டில் பார்த்து கை கால் விழுந்து, வாய் ஒரு பக்கமாக இழுத்து கொண்டு இன்றைக்கோ நாளைக்கோ என்று இழுத்துக்கொண்டு இருக்கும் என் அணில் குட்டியின் சார்பாக .......
எங்களின் நலம் காக்க வேண்டி
கவிதா... :(((
அணில் குட்டி அனிதா :- .....பவி... குஷ்ழ்....வேண்ட்,,,,,ஆம்.... நா...டி.வி...பாக்கல... சுஷ்..வேனா...மாஅ.ஆ... குழ்.....ஜாக்கெ... போ..ட... சொல் லு... குஷ்...வேன்......டா...சொல்லி...
பீட்டர் தாத்ஸ் :- “Is she fat? Her favorite food is Money”
ராமா ராமா குஷ்பூ ஏம்மா ஏம்மா?
Posted by : கவிதா | Kavitha
on 19:32
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
46 - பார்வையிட்டவர்கள்:
:-)) செம காமெடிப் பதிவு!!
செய்றவங்களையும் விட மாட்டீங்களே! ஏதோ, அவங்களாலே முடிஞ்சது சமூகத்திற்கு செய்றாங்க, ஏங்க இப்படி... நாங்கலெல்லாம் ஏமாந்து போயிடுறதில உங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷமா? :D
என்னது அணில் நாக்கு நசுங்கிப் போச்சா... :-0
:))))
Rombavae damage pola :D Idhukku dhaan naanga villu pada paatunaalae en poster kaamcha kooda channela maathidaradhu :D
இன்னும் அந்த பாட்டை பார்க்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நான் இந்த பதிவில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்.
ஆணிலு ஒன்னும் கவலைப் படாதே...அதே படத்தில் விஜய் நடிச்சி இருக்காராம் (அப்படின்னு சொல்லாறங்க) அதை இன்னும் ஒரு ரெண்டு முறை பாரு.....பார்த்த என்ன இதெல்லாம் சரியாகிடுமான்னு கேட்டுறியா..!!?
ஒரேடியாக ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ தான் ;))
குசப்பூ ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு என் கண்டனங்கள்.
ஆகா! விட்டா அடுத்து தீபாவெங்கட்க்கு பதிவு போட்டுடாதீங்க தாயே!
இப்படிக்கு
தர்மகர்த்தா
தீபாவெங்கட் கோவில்
அணிலோட எக்ஸ்ப்ரஷன்ஸ் ROTFL கவி!! ஆமா,
//குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்காலம் என்றால் உங்கள் ஆடை குறைப்பு அருவருப்பை மட்டும் இல்லை வயிற்றை பிசைகிறது...//
உண்மைதான்! புதுமை பண்றோம்னு ரசனையை விட்டுடறாங்க...
நல்லவேளை, இன்னும் அந்த வில்லுப்பாட்டை பார்க்கலை!!
//தலை அலங்காரம் முக அலங்காரம்//
இது ஓக்கேவாதான் தோணுது எனக்கு, ஜாக்பாட்-ல!!
குஷ்பன்கள் நிறையா இருக்கிறாங்களோ?ஆட்டத்துக்கு ஒருத்தரையும் காணோம்:)
அவங்க ஆடுறப்போ நீங்க கண்ணை மூடிக்க வேண்டியதுதானே??? அதெயெல்லாம் ஏன் பார்க்கனும்.. இப்பிடியொரு புலம்பல் போஸ்ட் போடனும்...?? :))
//அணில் குட்டி அனிதா :- .....பவி... குஷ்ழ்....வேண்ட்,,,,,ஆம்.... நா...டி.வி...பாக்கல... சுஷ்..வேனா...மாஅ.ஆ... குழ்.....ஜாக்கெ... போ..ட... சொல் லு... குஷ்...வேன்......டா...சொல்லி...//
அணிலு,
பிரியாணி சாப்பிட பல பேருக்கு ஆசையா இருக்காம்... :))
ஹிஹி.. அவ்ளோ மோசமாவா இருக்கு?... எதுக்கும் ஒரு தடவை யூட்யூப்லே இருக்கான்னு பாக்கறேன்... :-))))
//எங்க புள்ளைங்க உங்க தீவிர ரசிகர்களாக மாறி ஒரு காலத்தில் உங்களுக்காக ஒரு கோவில் கட்டினாங்க//
இதிலிருந்து புரிகிறது! நீங்க எவ்வளவு பெரியவங்கன்னு!
பொறாமை! பொறாமை!
குஷ்பூ மேல பொறாமை!
//எதுக்கும் ஒரு தடவை யூட்யூப்லே இருக்கான்னு பாக்கறேன்.//
யூடியூபெல்லாம் பத்தாது!
யூவீராணத்துலே தேடிப்பாருங்க!
//ச்சின்னப் பையன் said...
ஹிஹி.. அவ்ளோ மோசமாவா இருக்கு?... எதுக்கும் ஒரு தடவை யூட்யூப்லே இருக்கான்னு பாக்கறேன்... :-))))//
இச் சின்னபையர்,
பார்த்துட்டு எனக்கும் லிங்க் சாமி அனுப்பி வைங்க... :)
// அபி அப்பா said...
ஆகா! விட்டா அடுத்து தீபாவெங்கட்க்கு பதிவு போட்டுடாதீங்க தாயே!
இப்படிக்கு
தர்மகர்த்தா
தீபாவெங்கட் கோவில்//
அந்த மூக்கு சிந்துற ஆண்டியே விடமாட்டிங்களா அங்கிள்...
//பார்த்துட்டு எனக்கும் லிங்க் சாமி அனுப்பி வைங்க... :)//
என்னதான் இந்த காலத்து ஈரோயினிகள் வந்தாலும் குஷ்பு வை யாராலும் அடிச்சிக்க முடியாதுல்ல ராம்!
நாங்கலெல்லாம் ஏமாந்து போயிடுறதில உங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷமா? :D//
தேகாஜி, உங்க மேல கொஞ்சமாக மரியாதை வைத்து இருக்கிறேன்.. ஏன் அதை இப்படி எல்லாம் பின்னூட்டம் போட்டு கெடுத்துகறீங்க.. ம்ம்,,,,:))
-----------------------------
என்னது அணில் நாக்கு நசுங்கிப் போச்சா... :-0//
நசுங்கி போல அதிர்ச்சியில இழுத்துக்கிச்சி.. பாவம் ரொம்பத்தான் பேச கஷ்டபடது அண்டர் ட்ரீட்மெண்டு!!
:))))
Rombavae damage pola :D Idhukku dhaan naanga villu pada paatunaalae en poster kaamcha kooda channela maathidaradhu :D//
வாங்க G3, ஆமா ரொம்ப டேமஜ்..அதான் பதிவு.. :(
------------------------------
இன்னும் அந்த பாட்டை பார்க்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நான் இந்த பதிவில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்...//
கோபி..ஒரு பாட்டு ஒரு சீன் பாத்ததுக்கே அணிலு இப்படி இருக்கு இதுல தைரியமாக படத்தை பாக்க போறீங்களா..??!!
---------------------------------
குசப்பூ ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு என் கண்டனங்கள்.//
டிபிசிடி உங்களை எல்லாம் ஏதாச்சும் கண்டத்துக்கு தான் அனுப்பி வைக்கனும்.. இன்னுமா குஷ்பூ ரசிகர் மன்றம்???
------------------------------------
//ஆகா! விட்டா அடுத்து தீபாவெங்கட்க்கு பதிவு போட்டுடாதீங்க தாயே!//
அண்ணன் ஒரு கோயிலென்றால்
தங்கை அதில் தீபமன்றோ!
அபி அப்பாவுக்கு கோயில்!
தீபா வெங்கட் தீபம்!
ஆகா! விட்டா அடுத்து தீபாவெங்கட்க்கு பதிவு போட்டுடாதீங்க தாயே!
இப்படிக்கு
தர்மகர்த்தா
தீபாவெங்கட் கோவில்.//
அபி அப்பா அவிங்க யாரு?? எனக்கு தெரியாதே? அவங்களுக்கும் கோவிலா..? ஆமா உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? அபி அம்மா வோட போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்.!!
//அபி அம்மா வோட போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்.!!//
நான் தரேன்!
//தலை அலங்காரம் முக அலங்காரம்//
இது ஓக்கேவாதான் தோணுது எனக்கு, ஜாக்பாட்-ல!!..//
சரி நானும் முல்லை சொல்றதை ஒத்துக்கறேன்..ஆனா அந்த அம்மாவை டைட் குளோஸ்'அப்ல மட்டும் காட்டனும் ஓகே வா? :)
ராம்;ஐ யும் சிபியையும் நாளைக்கு காலையில.. வந்து கவனிச்சிக்கிறேன்..
தூக்கம் தூக்கமா வருது.. !!
:-))
தங்கத்தலைவிகளை இழிந்துரைக்கும் பதிவின் உச்சக்கட்டம் இது.. முன்பு நயந்தாரா இன்று குஷ்பு..
இது தொடருமானால் அகில உலக பதிவுகள் காணாத போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை..
//சரி நானும் முல்லை சொல்றதை ஒத்துக்கறேன்..ஆனா அந்த அம்மாவை டைட் குளோஸ்'அப்ல மட்டும் காட்டனும் ஓகே வா? :)//
அவங்களை சாதாரணமா காட்டுறதே குளோஸ்-அப் மாதிரிதான் தெரியும். இதுல தனியா வேற ஜூம் செய்யணுமா.. என்ன கொடுமை கவிதாக்கா இது :-))
சின்னத்தம்பி - போவோமா ஊர்கோலம், அரைச்ச சந்தனம், நீ எங்கே என் அன்பே
வருஷம் 16 - பூ பூக்கும் மாசம் தை மாசம்
கிழக்குக் கரை - எனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்த இவதான்!
போன்ற பாடல்களுக்காக அந்த படங்களை பல முறை பார்த்தவன்!
//பார்த்துட்டு எனக்கும் லிங்க் சாமி அனுப்பி வைங்க... :)//
என்னதான் இந்த காலத்து ஈரோயினிகள் வந்தாலும் குஷ்பு வை யாராலும் அடிச்சிக்க முடியாதுல்ல ராம்!//
தள,
என்னை இதுக்கு ஒங்க ஆட்டையிலே சேர்த்துக்கீறிங்க?? நான் டவுசர் போட்டுருந்த காலத்திலே அந்த ஆண்டி ரிட்டர்ய்ட் ஆகிருச்சு... :)) அப்புறம் கொஞ்சநாளிலே ஒத்தரூவா தாரேன்னு ஜிங் ஜிங்'னு ஆட்டம் போட்டுச்சு.. :)
அவ்வளவுதான் எனக்கு தெரியும்...
:)
பதிவை படித்ததும் சிரிப்பு அடக்க முடியல.. :)
//ஹிஹி.. அவ்ளோ மோசமாவா இருக்கு?... எதுக்கும் ஒரு தடவை யூட்யூப்லே இருக்கான்னு பாக்கறேன்... :-))))//
கீழே உள்ள இணைப்பில் வில்லு பாட்டு இருக்கு..
http://oruwebsite.com/music_videos/villu/hey-rama-rama-video_0f6afdae0.html
:)))))))
அவங்களால ஆட முடியுது,ஆடிட்டு போவட்டுமே பாத்துட்டு போவிங்களா! பிடிக்கலன்னா வேற சேனல் மாத்திகோங்க! அவங்களுக்கும் பொழப்பு போக வேண்டாமா?
வக்கிறாங்க ஆப்பு தலைப்பிலேயே ...
காம நெடி குஷ்பு
இப்போ
காமெடி குஷ்பு
அக்கா கலக்குறேள் ...
கலக்கல் காமெடி ...
ச்சூ ச்சூ
அனில் குட்டீ ...
why blood????
same blood....
ராஜ நடராஜன் said...
குஷ்பன்கள் நிறையா இருக்கிறாங்களோ?ஆட்டத்துக்கு ஒருத்தரையும் காணோம்:)//
:) ம்ம்..இதோ பாருங்க இப்ப..வந்துட்டாங்க.. :)))
-----------------------------
இராம்/Raam said...
அவங்க ஆடுறப்போ நீங்க கண்ணை மூடிக்க வேண்டியதுதானே??? அதெயெல்லாம் ஏன் பார்க்கனும்.. இப்பிடியொரு புலம்பல் போஸ்ட் போடனும்...?? :))//
இல்ல ராம் இந்த போஸ்ட் போட்டதால் அவங்க அதுல ஆடறாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சி உஷாரா பார்ப்பீங்க.. ஆனா நானும் அணிலும்.. அவங்க வருவாங்கன்னு எந்த முன் அறிவிப்பும் இல்லமா பார்த்ததால இந்த புலம்பல்ஸ்..:(
---------------------------------
இராம்/Raam said...
//அணில் குட்டி அனிதா :- .....பவி... குஷ்ழ்....வேண்ட்,,,,,ஆம்.... நா...டி.வி...பாக்கல... சுஷ்..வேனா...மாஅ.ஆ... குழ்.....ஜாக்கெ... போ..ட... சொல் லு... குஷ்...வேன்......டா...சொல்லி...//
அணிலு,
பிரியாணி சாப்பிட பல பேருக்கு ஆசையா இருக்காம்... :))//
ஓ..அப்படியா?!
நாங்க எல்லாம் வெஜ் ல இருந்து
நான் வெஜ்'க்கு மாறிட்டோம்..!!
அப்ப நீங்க?!!!
இப்படி எல்லா ப்ளாகரும் வந்து உங்ககிட்ட சொல்லிடுவாங்க பாருங்க..
இப்ப என்னா செய்வீங்க? ஹான்.. இப்ப என்னா செய்வீங்க?!!
--------------------------------
ச்சின்னப் பையன் said...
ஹிஹி.. அவ்ளோ மோசமாவா இருக்கு?... எதுக்கும் ஒரு தடவை யூட்யூப்லே இருக்கான்னு பாக்கறேன்... :-))))//
இப்படி ஒரு பதிவு போட்ட பிறகும் என்ன தைரியம்.!! .:)
--------------------------------
Namakkal Shibi said...
//எங்க புள்ளைங்க உங்க தீவிர ரசிகர்களாக மாறி ஒரு காலத்தில் உங்களுக்காக ஒரு கோவில் கட்டினாங்க//
இதிலிருந்து புரிகிறது! நீங்க எவ்வளவு பெரியவங்கன்னு!//
ம்ம் ..:).. இதை நீங்க சொல்றீங்க பாருங்க..அங்கத்தான் என்னால சிரிப்பை தாங்க முடியல.. பாருங்க.. ராம் என்ற உங்க சங்கத்து சிங்கம் ஒன்று.. உங்களை என்ன சொல்லி இருக்காருன்னு...:))) நான் சொல்லலப்பா.. :))
--------------------------------
Namakkal Shibi said...
பொறாமை! பொறாமை!
குஷ்பூ மேல பொறாமை!//
ஆமா எங்களுக்கு பொறாமை பொறாமை.. :) ஏன் சிபி.. ?!! இப்படி காமெடி பண்றீங்க..?!! :)))
--------------------------------
Namakkal Shibi said...
//பார்த்துட்டு எனக்கும் லிங்க் சாமி அனுப்பி வைங்க... :)//
என்னதான் இந்த காலத்து ஈரோயினிகள் வந்தாலும் குஷ்பு வை யாராலும் அடிச்சிக்க முடியாதுல்ல ராம்!//
ஆமா சிபி குஷ்பூ வை யாராவது அடிக்க முடியுமா.. அவங்க போட்ட ஒரு சின்ன ஆட்டத்துக்கே அணிலு இன்னைக்கோ நாளைக்கோன்னு கிடக்குது.. இதுல அடிப்பாங்களா..? எங்க உடம்பு எல்லாம் என்ன ஆவது?? ம்ம்?? :((
----------------------------------
சரவணகுமரன் said...
:-))//
சரவணகுமரன்.. நன்றி :))
---------------------------------
சென்ஷி said...
தங்கத்தலைவிகளை இழிந்துரைக்கும் பதிவின் உச்சக்கட்டம் இது.. முன்பு நயந்தாரா இன்று குஷ்பு..//
வாம்மா மின்(சென்)னல், உங்க தங்க தலைவிங்க கிட்ட சொல்லி அதிகம் வேண்டாம் ஒரு 2 கிலோ தங்கம் தரசொல்லுங்க.. போதும்..!! :)
//இது தொடருமானால் அகில உலக பதிவுகள் காணாத போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை..//
மின்னலு...தண்ணி பார்ட்டி பிரியாணியோட வேணும் னு டேரட்க்ட்டா சொல்லிட்டு போங்களேன். .எதுக்கு இம்புடு பில்டப்பு..:)
//சரி நானும் முல்லை சொல்றதை ஒத்துக்கறேன்..ஆனா அந்த அம்மாவை டைட் குளோஸ்'அப்ல மட்டும் காட்டனும் ஓகே வா? :)//
அவங்களை சாதாரணமா காட்டுறதே குளோஸ்-அப் மாதிரிதான் தெரியும். இதுல தனியா வேற ஜூம் செய்யணுமா.. என்ன கொடுமை கவிதாக்கா இது :-))//
அட ஆமா இல்ல?!! :))))
------------------------------------
Namakkal Shibi said...
சின்னத்தம்பி - போவோமா ஊர்கோலம், அரைச்ச சந்தனம், நீ எங்கே என் அன்பே
வருஷம் 16 - பூ பூக்கும் மாசம் தை மாசம்
கிழக்குக் கரை - எனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்த இவதான்!
போன்ற பாடல்களுக்காக அந்த படங்களை பல முறை பார்த்தவன்!//
ஏன் நாட்டாமை - ஏ கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும்.. விட்டுடீங்க..
மன்னன் - படத்துல கூட ஒரு பாட்டு தலைவர் கூட சும்மா கும்முன்னு ஆடி இருப்பாங்க இல்லைன்னா சொன்னேன்.. :)
-----------------------------------
:-))
//இராம்/Raam said...
//பார்த்துட்டு எனக்கும் லிங்க் சாமி அனுப்பி வைங்க... :)//
என்னதான் இந்த காலத்து ஈரோயினிகள் வந்தாலும் குஷ்பு வை யாராலும் அடிச்சிக்க முடியாதுல்ல ராம்!//
தள,
என்னை இதுக்கு ஒங்க ஆட்டையிலே சேர்த்துக்கீறிங்க?? //
ஹே ராம்.. இதை இதை இதை தான் எதிர்பார்த்தேன்.. ரெம்ப நன்றி.. ஹி ஹி.. :))
-----------------------------------
கவின் said...
:)//
கவின் நன்றி :))))
-----------------------------------
ஓவியா said...
பதிவை படித்ததும் சிரிப்பு அடக்க முடியல.. :)
ம்ஹிம் என்னோட அணிலு உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கு.. உங்களுக்கு என்னான்னா சிரிப்பை அடக்க முடியலையா?! என்ன கொடுமை அணிலு இது!! :))
-----------------------------------
நிஜமா நல்லவன் said...
:)))))))//
வாங்க நிஜமா நல்லவன்..நன்றி :))
-----------------------------------
சிங். செயகுமார். said...
அவங்களால ஆட முடியுது,ஆடிட்டு போவட்டுமே பாத்துட்டு போவிங்களா! பிடிக்கலன்னா வேற சேனல் மாத்திகோங்க! அவங்களுக்கும் பொழப்பு போக வேண்டாமா?//
என்ன சொல்ல வரீங்க? என்னால ஆட முடியல அதான் பதிவு போட்டு இருக்கேன்னா.. இது எல்லாம் நியமா? தர்மமா? ஏன் நான் ஆடி நாட்டுல நாலு பேரு இன்னைக்கே மண்டைய போடவா?
----------------------------------
நட்புடன் ஜமால் said...
வக்கிறாங்க ஆப்பு தலைப்பிலேயே ...//
காம நெடி குஷ்பு
இப்போ
காமெடி குஷ்பு
அக்கா கலக்குறேள் ...//
நட்புடன் ஜமால் said...
கலக்கல் காமெடி ...
ச்சூ ச்சூ
அனில் குட்டீ ...//
ஜமால் நீங்க ஒருத்தர் ஆச்சும் என் அணிலுக்காக ச்சூ கொட்டி இருக்கீங்க..அதனால உங்களுக்கு ஒரு சல்யூட் அடிச்சிக்கிறேன்.. !!
----------------------------------
நான் ஆதவன் said...
why blood????
same blood....//
ஹ ஹஹா... ஆதவன்.. சும்மா நச்சுன்னு சொன்னீங்க.. ஆமா சேம் பிளட்'டு.. :)
ஹா ஹா ஹா செம காமெடியா இருக்கு..
என்ன தான் கூறினாலும் நாங்க குஷ்பூ ஆட்டம் பார்த்தே ஆகனும் .... :-))))
முன்னே எதோ ஒரு பதிவிலே ஒருத்தர் ஜெயா டிவியில் தாராளம் காட்டி கலைஞர்ல அப்படி இருக்க மாட்டேங்கிறார்ன்னு "ஒரு கண்ணுல சுண்ணாம்பு ஒரு கண்ணுல வெண்ணெய்"ன்னு ஃபீல் பண்ணிருந்தாரு (படமெல்லாம் போட்டு). நீங்க டைட் க்ளோஸப்ல மட்டுமே அம்மணிய காட்டணும்ன்னு சொன்னா அவரு ரொம்ப ஃபீல் பண்ணிடப் போறாரு.
இவரு நடிச்சு "நாறிப்போன குடும்பம்"ன்னு ஒரு சீரியல் வந்துச்சே, என்ன ஆச்சு? ஊத்தி மூடிட்டாங்களா?
சிபி இந்த பிளாக் நயன்தாராவும் படிக்கிறாங்களாம்!!!!!
கிரி said...
ஹா ஹா ஹா செம காமெடியா இருக்கு..
என்ன தான் கூறினாலும் நாங்க குஷ்பூ ஆட்டம் பார்த்தே ஆகனும் .... :-))))//
தலைஎழுத்தை யாரால மாத்தமுடியும்.. போங்க போய் பாருங்க..என் அணிலை மாதிரி ஆயிடுவீங்க.. :)))
--------------------------------
KVR said...
முன்னே எதோ ஒரு பதிவிலே ஒருத்தர் ஜெயா டிவியில் தாராளம் காட்டி கலைஞர்ல அப்படி இருக்க மாட்டேங்கிறார்ன்னு "ஒரு கண்ணுல சுண்ணாம்பு ஒரு கண்ணுல வெண்ணெய்"ன்னு ஃபீல் பண்ணிருந்தாரு (படமெல்லாம் போட்டு). நீங்க டைட் க்ளோஸப்ல மட்டுமே அம்மணிய காட்டணும்ன்னு சொன்னா அவரு ரொம்ப ஃபீல் பண்ணிடப் போறாரு.
இவரு நடிச்சு "நாறிப்போன குடும்பம்"ன்னு ஒரு சீரியல் வந்துச்சே, என்ன ஆச்சு? ஊத்தி மூடிட்டாங்களா?//
:)) சீரியிலுக்கும் எனக்கு ரொம்ப தூரம் கேவிஆர், சீரியில் பார்ப்பதே இல்லை... போகோ சேனல், காமெடி சேனல், பாட்டு, நியிஸ்.. இது தான் என்னோட சாய்ஸ்.. சோ நிஜமா நீங்க சொல்ற சீரியல் பத்தி எனக்கு தெரியல...
---------------------------------
manasu said...
சிபி இந்த பிளாக் நயன்தாராவும் படிக்கிறாங்களாம்!!!!!//
அடகடவுளே!! மனசு... நயந்தாரா படிச்சா என்னா? சிபி படிச்சா என்னா? எல்லாம் ஒன்னுத்தான்... :)))
அவங்க ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. :)
தலைவியப் பார்த்து பொறாமக்கா உங்களுக்கு :))
haha...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்கோ..!:) பின்னி பெடல் எடுக்குறீங்க...
Nice
Post a Comment