அறிமுக காட்சிகள்:-
பப்பு 3 வயது 3 மாதங்கள் முதலில் முத்துலெட்சுமி, முல்லையை சந்தித்தபோது அவளை பார்த்தது. பேசவே இல்லை சில குழந்தைகள் அப்படித்தான் இருக்கும் என்று நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முத்துலெட்சுமி கொஞ்சம் பேசவைக்க முயற்சி செய்தார்கள், அவள் வாயை திறக்கவேயில்லை... ஆனால் திரும்ப வீட்டுக்கு செல்லும் போது அவள் நார்மலாக கேஷவுலாக இருப்பதாக எனக்குப்பட்டது, ஒரு வித இறுக்கத்துடன் இருந்தவள் சற்றே ரிலாக்ஸ் ஆனது போல் உணர்ந்தேன்..அதனால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் உன்னுடன் சொப்பு விளையாட வருகிறேன் என்றேன்.. அவளும் உடனே என்னை அழைத்தாள், நான் பிறகு வருகிறேன் என்று அவளின் பிஞ்சு கைகளை ஆசையுடன் பிடுத்து சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
நேற்று தான் நேரம் கிடைத்தது... எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடங்கள் தான் பப்புவின் வீடு.. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. அங்கு சென்றவுடன் ஆயாவிடம் நான் பப்புவின் ஃபிரண்டு என்று சொல்ல. ".ஓ நீதான் அந்த ஃபிரண்டா? பப்பு கூட அவள் ஃபிரண்டு வராங்கன்னுத்தான் சொன்னாள் " என்றார்கள்.."ஆஹா.. நம்மை விட ஸ்பீடா இருக்காளா பப்பு' அவளை முந்த விடக்கூடாது என்று முடிவெடுத்து விளையாட ஆரம்பித்தோம்.
ஏன் என்ற கேள்வி...
நான் தான் கேள்வியின் நாயகி என்றாள் பப்பு எனக்கு அக்கா'வாக இருந்தாள்..அவள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாவிட்டாலும் பக்கத்துவீட்டு ஆன்ட்டி சரியா பதில் சொன்னார்கள். எந்த கேள்வி கேட்கும் போதும் அதில் ஒரு தயக்கமோ...இல்லை சந்தேகமோ இல்லை.. பட், பட்டென்று வந்தன..
1. ஏன் நீங்க அன்னைக்கு வரேன்ன்னு வரலை? ம்ம்???!!
2. ஏன் நீங்க பொட்டு வச்சி இருக்கீங்க..? (அந்த பொட்டை எடுத்து போட்டு விட்டு பக்கத்து வீட்டு ஆன்ட்டி நெற்றியில் இருந்த பொட்டை வைத்து, வேறு ஒரு பொட்டையும் உள்ளெ இருந்து எடுத்து வந்து வைத்துவிட்டாள்)
3. ஏன் நீங்க இந்த கம்மல் போட்டு இருக்கீங்க?
4. காலில் உள்ள மெட்டியை காட்டி ஏன் இதை போட்டு இருக்கீங்க..?
5. ஏன் நீங்க தொப்பி போட்டு இருக்கீங்க..?
6. ஏன் நீங்க கண்ணாடி போட்டு இருக்கீங்க?
7. ஏன் நீங்க வண்டியில வந்தீங்க.. ?
8. ஏன் நீங்க நடந்து வரலை?
9. ஏன் நீங்க பேசறீங்க உங்களை பேசவேணாம்னு எத்தனை வாட்டி சொல்றேன்..!! பேசாதீங்கன்னா பேசாதீங்க.. !! (பக்கத்து வீட்டு ஆன்ட்டி'யிடம் பேச ஆரம்பித்தாலே அவளுக்கு பிடிக்கவில்லை அவளிடம் மட்டுமே பேசவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள், மீறி பேசினாள் இப்படி திட்டு மட்டும் இல்லை நல்ல அடியும் கிடைத்தது)
கதையும் கற்பனையும்..
பப்புத்தான் எனக்கு அக்கான்னு சொல்லிட்டேனே.. கதைக்கும், கற்பனைக்குமா பஞ்சம் ?! நான் எதிர்பாராதது எல்லாம் நடந்தது. திடீரென்று "ஹய்யோ அங்க பாருங்க பாம்பு பாக்குது ..." நெஜமவா...எங்க எங்க...?" (பக்கத்து வீட்டு ஆன்ட்டி கண்டுக்காம பேசாமல் இருந்தார்கள், என்ன இவங்க இப்படி இருக்காங்களேன்னு நினைப்பதற்குள்) "பேசுது பாருங்க.. " (ஆஹா... எனக்கேவா.. !! ) பப்பு..எங்கம்மா இருக்கு?!! காட்டு.. வாங்க காட்டறேன்னு.. கூட்டுட்டு போயி ரோடில் இருந்த காரை காட்டி அங்க பாருங்க.. அந்த் கார் மேல பாம்பு இருக்கு.. பாருங்க என்னை வா வா' ன்னு கூப்பிடுது.... (அடட்டா... முடியலியே.. நிஜமாவே நம்மை மிஞ்சிடுவா போல இருக்கே..!!)
"அட..ஆமா இல்ல அங்க பாம்பு இருக்கு..ஏ பாம்பு பப்பு கிட்ட வாராதே! போ..போ.."என்று சொல்லிவிட்டு வந்த சிறிது நேரத்தில்... "ஹேஏ...சிங்கம் பாருங்க சிங்கம்........." நான் இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தேன்.."எங்கம்மா சிங்கம் ?" என்றவுடன் கையை பிடித்து என்னை கதவருகில் அழைத்து சென்று கீழே குனிய வைத்து ..இதோ உங்க உட்கார்ந்து இருக்கு பாருங்க.". என்றாள், " அட ஆமா சிங்கம்...?" ஏ சிங்கம் ஏன் இங்க வந்து உட்கார்ந்து இருக்க..? போ போ.. பப்பு தனியா இருக்கும் போது இப்படியெல்லாம் வரக்கூடாது போயிடு.. " பப்புவும்.. கூடவே.. ஆமா போ...போ.. வராதே போ.....:" ..என்றாள்..
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த அவங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி'க்கு கொஞ்சம் தரும சங்கடமாக இருந்தது.. "பப்பு ஆன்ட்டி'க்கு உடம்பு சரியில்லை அவங்கள தொந்தரவு செய்யாமல் விளையாடு " என்றார்கள். கீழ்தளத்தில் ஆட்டம் முடிந்து மேல் தளம் செல்ல ஆயத்தமானோம். .பப்பு உடனே. "என்னோட பூனையை காட்டறேன் வாங்க" என்றாள்.. என் கையை பிடித்து இழுத்து சென்றவள் படி அருகில் சென்றவுடன். .சந்தேகத்துடன்.. "ஆமா நீங்க படி ஏறுவீங்களா? .. (உடம்பு சரியில்லைன்னு சொன்னதால் கேட்கிறாள் போல என்று நினைத்து).. இன்னும் அந்த அளவு வயசு ஆகலை.. ஏறுவேன்மா.. " வா போகலாம் என்றேன்..
பக்கத்து வீட்டு ஆன்ட்டி CD ஐ போட, பாட்டுடன் எல்லா விலங்குகளும் இருக்கும் படம் வந்தது.. அதை ஊஞ்சலில் ஆடிய படியே பார்த்தோம். என் கவனம் முழுதும் அந்த படத்தை விட்டு அப்படி இப்படி போகாமல் பப்பு கவனமாக பார்த்துக்கொண்டாள். என்னை அந்த பிஞ்சு கரங்களால் இழுத்து இழுத்து அணைத்தவாரே பார்த்தாள்...நடு நடுவே படத்தை பற்றி சொல்லியவாறே இருந்தாள்..
பாட்டும் கூத்தும்
அடுத்து ஆரம்பித்தது பாட்டு செக்ஷன், ரைம்ஸ் சொல்லி குதித்தாள்... சொப்பு விளையாட ஆரம்பித்தோம் ரொம்ப நேரம் விளையாடவில்லை. .பாத்ரூம் போகவும் நான் வேண்டும் என்றாள்... நானும் சென்றேன்.. பக்கத்து வீட்டு ஆன்ட்டி'க்கு தான் ரொம்பவும் தர்மசங்கடமாக ஆகிவிட்டது... பிறகு இருவரும் சாக்லெட் சாப்பிட்டோம்.. அவள் வரைந்த படங்களை பார்த்து மெய் மறந்தோம்... என் மேலும், அந்த ஆன்ட்டி மேலும் ஏறி ஏறி குதித்தாள்... அவளை தூக்கி கொள்ள வேண்டும் என்றாள் அதற்கு பிறகு வெளியில் விளையாட செல்லும் வரை தூக்கிக்கொண்டு தான் இருந்தேன்... :)
தோட்டத்தில் இரண்டு ரோஜாக்கள்
வேற யாரு நானும் பப்புவும் தான்... வெளியில் சிறிது நேரம், கையை கிராசாக வைத்து நீட்டி என்னையும் அதே போல் செய்ய சொல்லி இருவரும் சுற்றி சுற்றி விளையாடினோம்.. என்னையும் குதிக்க சொன்னாள்.. உடம்பு சரியில்லைம்மா என்று எஸ் ஆனேன்.. . அங்கேயும் இங்கேயும் இழுத்துக்கொண்டு சுற்றினாள் "இதான் உங்க ஆபிஸ். உங்களை விட்டுட்டு போறேன். .சத்தம் இல்லாம பேசாம இருக்கனும் வேனும்னா விளையாடிக்கோங்க" என்றாள்.. "சரிங்க அப்படியே செய்யறேன்." போய் விட்டு திரும்பவும் வந்தாள் "சரி ..டைம் ஆச்சி வாங்க.. போலாம் ஆபிஸ் விட்டாச்சி" என்றாள் "சரி போவோம்" என்று இருவரும் வந்தோம்.
பக்கத்து வீட்டு ஆன்ட்டி காப்பி கொடுத்தார்கள்... குடித்தேன் ..நேரம் ஆகிவிட்டது என்று கிளம்பினேன்...
பிரியா விடை :-
போகவே கூடாது என்று அடம் பிடித்தவளை எப்படியோ சமாதானம் செய்து 31 ந்தேதி திரும்பியும் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினோம்.. பாதி தூரம் அவளும் பக்கத்து வீட்டு ஆன்ட்டி'யும் வந்தனர்.. கடைசிவரை எனக்கு டா டா சொல்லவே இல்லை... உர்' என்று கோபமாக பார்த்தவாறே இருந்தாள்.. சரி நேரம் ஆகிவிட்டது அவளையும் ரொம்ப ஃபீல் செய்ய வைக்கக்கூடாது என்று கிளம்பிவிட்டேன்..
பின் குறிப்பு:- ம்ம்ம்...உங்களுக்கு எல்லாம் அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி யாருன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்குமே.. அது வேற யாருமில்லை.. நம்ம முல்லை தான்.. என் மேல் பப்பு அதிகபாசம் வந்து.. "இனிமே இவங்க தான் என் அம்மா.." என்று சொல்ல, முல்லை அவளை "அப்பன்னா நான் யாரு?" என்ற கேட்க..." ம்ம்.."நீயா..நீயா.. (நான் காதுக்குள் பக்கத்து வீட்டு ஆன்ட்டி என்று சொல்ல) "ஆமா நீ..பக்கத்து வீட்டு ஆன்ட்டி 'என்று சொன்னதோடு மட்டும் இல்லாமல்... முல்லையை கையை பிடித்து இழுத்து "முதல்ல நீ பக்கத்து வீட்டுக்கு போ " என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
சரி முல்லை என்னை அடித்து விரட்டுவதற்குள் வந்துவிட வேண்டும் என்று வந்துவிட்டேன்.. :))
அணில் குட்டி அனிதா:- போனதுக்கு என்ன செய்யமுடியுமோ செய்துட்டு வந்துட்டீங்க போல.. ஒரு மணி நேரம் இருந்ததற்கே. .அம்மாவை ஆன்ட்டி'னு சொல்ல வச்சிட்டீங்கன்னா. .உங்களை எல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் இருக்க விட்டா... யப்பா வீடு என்ன ஊரே தாங்காதும்மா... மக்கா திருப்ப திருப்ப சொல்றேன்.. சாக்கறதை.. :(.. அம்மணி ய ஒரு டிஸ்ட்டன்ஸ் ல வைங்க.. !!
பீட்டர் தாத்ஸ்:- Education of children, especially girls, is the cornerstone to national progress,”
பப்புவும் நானும்..
Posted by : கவிதா | Kavitha
on 00:35
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
32 - பார்வையிட்டவர்கள்:
ம்ம்ம்...எப்படியோ குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிட்டு வந்துட்டிங்க !! ;))
சந்தோஷம்...மகிழ்ச்சி ;)
//அணில் குட்டி அனிதா:- போனதுக்கு என்ன செய்யமுடியுமோ செய்துட்டு வந்துட்டீங்க போல.. ஒரு மணி நேரம் இருந்ததற்கே. .அம்மாவை ஆன்ட்டி'னு சொல்ல வச்சிட்டீங்கன்னா. .உங்களை எல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் இருக்க விட்டா... யப்பா வீடு என்ன ஊரே தாங்காதும்மா... மக்கா திருப்ப திருப்ப சொல்றேன்.. சாக்கறதை.. :(.. அம்மணி ய ஒரு டிஸ்ட்டன்ஸ் ல வைங்க.. !!//
:))
\5. ஏன் நீங்க தொப்பி போட்டு இருக்கீங்க..?\\
ஆமாம் ஏன் தொப்பி போட்டு இருந்தீங்க.
(அட நானும் பப்பு பிரண்டு தாங்க)
\\8. ஏன் நீங்க நடந்து வரலை?\\
பப்பு உனக்கு தெரியாதுல அந்த 3:6
\\அது வேற யாருமில்லை.. நம்ம முல்லை தான்..\\
நாங்களுக் டிடக்டீவ் தான்.
இரண்டாம் முறை சொல்லும் போதே லேசா சந்தேகம் தட்டுச்சு .
ஆனா ...
\ஆமா நீ..பக்கத்து வீட்டு ஆன்ட்டி \\
இதை எதிர்பார்க்கல
\\அணில் குட்டி அனிதா:- போனதுக்கு என்ன செய்யமுடியுமோ செய்துட்டு வந்துட்டீங்க போல.. ஒரு மணி நேரம் இருந்ததற்கே. .அம்மாவை ஆன்ட்டி'னு சொல்ல வச்சிட்டீங்கன்னா. .உங்களை எல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் இருக்க விட்டா... யப்பா வீடு என்ன ஊரே தாங்காதும்மா... மக்கா திருப்ப திருப்ப சொல்றேன்.. சாக்கறதை.. :(.. அம்மணி ய ஒரு டிஸ்ட்டன்ஸ் ல வைங்க.. !!\\
சூப்பர் அணில் :)
//எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடங்கள் தான் பப்புவின் வீடு.. //
ஃபிளைட்ல போனாவா?:-))
//Blogger அபி அப்பா said...
//எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடங்கள் தான் பப்புவின் வீடு.. //
ஃபிளைட்ல போனாவா?:-))//
ஆமா அபிஅப்பா...அவங்க வண்டியை ஃபிளைட் மாதிரிதானே ஓட்டறாங்க!!! என்னா ஸ்பீடு!! :-)
Education of children, especially girls, is the cornerstone to national progress,”
//
கரெக்ட்டு :)
நல்லவேளை எங்க வீடு உங்க வீட்லேந்து 10 மணி நேரம் :))))
////எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடங்கள் தான் பப்புவின் வீடு.. //
ஃபிளைட்ல போனாவா?:-))
//
வயசு ஆகஆக மனுசனுக்கு.... வேணா நா ஒன்னும் சொல்லல :)))
//உங்களை எல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் இருக்க விட்டா... யப்பா வீடு என்ன ஊரே தாங்காதும்மா... மக்கா திருப்ப திருப்ப சொல்றேன்.. சாக்கறதை.. :(..//
:-))) ஆமா அணிலு!! மேடம் ஒரு அறுந்த வாலு! பப்புவுக்கு ஈக்குவலா விளையாடினாங்க! பப்பு, நான் ஸ்டைல் பேபின்னு சொன்னப்போ நான் ஸ்டைல் ஆன்ட்டி-ன்னு சொன்னாங்க!
பப்புதான் உங்க வலைப்பூவுக்குள் என்னைக் கூட்டி வந்தாள். சந்திப்பு ஸ்வீட். விவரிப்பு ஸோ ஸ்வீட். குறிப்பா பக்கத்து வீட்டு ஆன்ட்டி, அணில் குட்டி அனிதா ஆகியோரை ரொம்ப ரசித்தேன்.
கலக்கலாக எழுதுகிறீர்கள் கவிதா.
பப்பு ஃப்ரன்டுன்னா சும்மாவா:)?
:))))
//ஆமா அபிஅப்பா...அவங்க வண்டியை ஃபிளைட் மாதிரிதானே ஓட்டறாங்க!!! என்னா ஸ்பீடு!! :-)//
அப்படி ஒட்டி சில்லரை அள்ளிய கதை எல்லாம் அவங்க ப்ளாக்லே இருக்கு சந்தனமுல்லை. அதையும் படிச்சு பாருங்க...
பப்புவுக்கு புது தோழி கிடைச்சிருக்காங்களா ,மகிழ்ச்சி :)
பக்கத்து வீட்டு ஆன்ட்டி, ஆன்ட்டின்னு சொல்லி, முல்லையோட இமெஜையே டேமேஜ் ஆக்கிட்டீங்களே.
படிக்கும் போது ஒரே யோசனை, முல்லை எங்கே போனாங்க அப்படின்னு.
பப்புவோடு நீங்கள் செலவழித்த நிமிடங்களை மிகவும் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்.
// நாகை சிவா said...
:))))
//ஆமா அபிஅப்பா...அவங்க வண்டியை ஃபிளைட் மாதிரிதானே ஓட்டறாங்க!!! என்னா ஸ்பீடு!! :-)//
அப்படி ஒட்டி சில்லரை அள்ளிய கதை எல்லாம் அவங்க ப்ளாக்லே இருக்கு சந்தனமுல்லை. அதையும் படிச்சு பாருங்க...
//
அப்புடி சொல்லுப்பா புலி! இந்த லட்சனத்திலே ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்னு ஒரே அழுகாச்சி வேற! அந்த தலைப்பே ஒ...பயங்கரம்:-))
கவிதா பப்புவோட பிரெண்டு ஓகே ...எல்.கே.ஜி யானு பப்பு கேட்கவே இல்லையா கடைசி வரைக்கும்?!
ம்ம்ம்...எப்படியோ குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிட்டு வந்துட்டிங்க !! ;))
சந்தோஷம்...மகிழ்ச்சி ;)//
:) ம்ம்..அணில் தான் சொல்லுதுன்னா நீங்களுமா கோபி..
------------------------------
நிஜமா நல்லவன்.. அணில் சொன்னத கேட்டு ரொம்ப சந்தோஷம் போல நக்கலு..சிரிப்பா? நடக்கட்டும் நடக்கட்டும்.. !!
--------------------------
ஆமாம் ஏன் தொப்பி போட்டு இருந்தீங்க.
(அட நானும் பப்பு பிரண்டு தாங்க)//
ஜமால், இதை நான் எத்தனை பேருக்கு தான் சொல்றது.. பப்பு தான் சின்ன புள்ள..நீங்க எல்லாருமா..?!!
வெயில் எனக்கு ஒத்துக்காது..அதனால் எப்பவும் வெயிலில் போனால்.. தொப்பி..போதுமா?!! :))
---------------------------------
பப்பு உனக்கு தெரியாதுல அந்த 3:6//
ஜமால் வேண்டாம் ..சரியா.. :))
----------------------------------
\ஆமா நீ..பக்கத்து வீட்டு ஆன்ட்டி \\
இதை எதிர்பார்க்கல//
கவிதாவை இவ்வளவு மட்டமாகவா நினைப்பது..?!! :)) அப்படியே அன்பை பொழிவோம் இல்ல.. அதுவும் உண்மையாக..!!
-----------------------------------
super... அடிக்கடி அழுத்தி பக்கத்து வீட்டு ஆண்ட்டின்னப்பவே ... இப்படித்தான் எதோன்னு நினைச்சேன்..
நல்லா கொட்டம் அடிச்சிருக்கீங்க போலயே.. :)
//எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடங்கள் தான் பப்புவின் வீடு.. //
ஃபிளைட்ல போனாவா?:-))//
.....ஏன்ன்ன்?!! அபி அப்பா?!! . அதான் அப்துல்லா நல்லா பதில் சொல்லி இருக்காரு உங்களுக்கு... :)
-----------------------
நல்லவேளை எங்க வீடு உங்க வீட்லேந்து 10 மணி நேரம் :))))//
10 மணி நேரம் தானே.. அமெரிக்காவாக இருந்தாலும் நாங்க வரணும்னு முடிவு செய்துட்டா வருவோம்.. :)
அப்துல்லா...ரொம்ப சந்தோஷப்படாதீங்க சரியா..
-----------------------------------
:-))) ஆமா அணிலு!! மேடம் ஒரு அறுந்த வாலு! பப்புவுக்கு ஈக்குவலா விளையாடினாங்க! பப்பு, நான் ஸ்டைல் பேபின்னு சொன்னப்போ நான் ஸ்டைல் ஆன்ட்டி-ன்னு சொன்னாங்க!/
அணில் கூட சேர்ந்து ஆட்டம் போடற எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்க ஆசைபடறேன்.. !! இதுக்கு எல்லாம் நீங்க கண்டிப்பாக ஒரு நாள் கவிதாக்கு பதில் சொல்லியே ஆகனும்..!! :))
--------------------------------
கலக்கலாக எழுதுகிறீர்கள் கவிதா.
பப்பு ஃப்ரன்டுன்னா சும்மாவா:)?//
நன்றி ராமலட்சுமி, பப்பு நிறைய எனக்கு சொல்லி கொடுத்து இருக்கா இல்லையா அதான் ... :))
--------------------------------
))))
//ஆமா அபிஅப்பா...அவங்க வண்டியை ஃபிளைட் மாதிரிதானே ஓட்டறாங்க!!! என்னா ஸ்பீடு!! :-)//
அப்படி ஒட்டி சில்லரை அள்ளிய கதை எல்லாம் அவங்க ப்ளாக்லே இருக்கு சந்தனமுல்லை. அதையும் படிச்சு பாருங்க...//
சிவா...ஏன் இப்படி ஒரு சந்தோஷம்!! அதுவும் நான் சில்லறை அள்ளினா? !! வேணும்னு கேட்டு இருந்தா..பாதி கொடுத்து இருப்பேன் இல்ல.. ?!! மறக்காம பின்னூட்டம் போடறீங்க..?!!
எப்படியோ தாயையும், பிள்ளையும் பிரிச்சாச்சு.. ம்ம்ம் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவோ?
//பப்புவுக்கு புது தோழி கிடைச்சிருக்காங்களா ,மகிழ்ச்சி :)//
சின்ன அம்மணி வாங்க. .ஆமா.. நான் தான் அது!! : )))
--------------------------------
அமிர்தவர்ஷினி அம்மா said...
பக்கத்து வீட்டு ஆன்ட்டி, ஆன்ட்டின்னு சொல்லி, முல்லையோட இமெஜையே டேமேஜ் ஆக்கிட்டீங்களே.//
நோ பீலிங்ஸ்.. இன்னைக்கு ஃபோன் பண்ணி பப்பு "கவிதா ஆன்ட்டி" ன்னு இனிமே நீ என்னை அட்ரஸ் பண்ணனும்னு சொல்லி கொடுத்துட்டேன்.. கவிதா ஆன்ட்டி ன்னு சொல்லுன்னு 3 தரம் இம்போஸிஷன் வேற கொடுத்தேன்.. :) சோ நோ ப்ராப்ஸ்!!
//பப்புவோடு நீங்கள் செலவழித்த நிமிடங்களை மிகவும் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்.//
நன்றி... :))
//ஆமா அபிஅப்பா...அவங்க வண்டியை ஃபிளைட் மாதிரிதானே ஓட்டறாங்க!!! என்னா ஸ்பீடு!! :-)//
அப்படி ஒட்டி சில்லரை அள்ளிய கதை எல்லாம் அவங்க ப்ளாக்லே இருக்கு சந்தனமுல்லை. அதையும் படிச்சு பாருங்க...
//
அப்புடி சொல்லுப்பா புலி! இந்த லட்சனத்திலே ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்னு ஒரே அழுகாச்சி வேற! அந்த தலைப்பே ஒ...பயங்கரம்:-))//
சிவா, அபிஅப்பா. .!! வீர தமிழச்சியின் விழு(ந்த) புண்கள் அவை!! இது எல்லாம் பொது வாழ்க்கையில் சகஜம்..
இன்னும் நான் ரன்னிங்ல பஸ்ஸில் ஏறி கை ஒடிந்த கதை உங்களுக்கு எல்லாம் தெரியாது..
வேகமாய் ஓடும் ரயிலில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஏறியது உங்களுக்கு எல்லாம் தெரியாது.. தெரிந்தால்..
வேற என்ன இப்படி பொறாமை பட்டு பின்னூட்டம் போடுவீங்க யாராவது வீரமாக இருந்தால் உங்களுக்கு எல்லாம் பொங்குமே..!!
//கவிதா பப்புவோட பிரெண்டு ஓகே ...எல்.கே.ஜி யானு பப்பு கேட்கவே இல்லையா கடைசி வரைக்கும்?!//
ஹா ஹா.. ஆமாம்பா டவுட்'டு !! அவ என்னை கேட்க மறந்துட்டா.. போல.. அடுத்தமுறை கேக்க வச்சிட்டா போச்சி.. :)
இதுக்கு எல்லாம் நானு அசிங்க படவே மாட்டேன்..!!
//super... அடிக்கடி அழுத்தி பக்கத்து வீட்டு ஆண்ட்டின்னப்பவே ... இப்படித்தான் எதோன்னு நினைச்சேன்..
நல்லா கொட்டம் அடிச்சிருக்கீங்க போலயே.. :)
//
முத்து...ஆமாம் செம கொட்டம். கொஞ்சம் உடம்பு சரியில்லை இல்லன்னா இன்னும் ஓவரா போயி.. முல்லை நிஜமாகவே என்னை அடிச்சி அனுப்பி இருப்பாங்க..
எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது முல்லைக்கு நல்லது :) இல்லன்னா நெஜமா அவங்க பாவம்ப்பா.. :))))
//ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்னு ஒரே அழுகாச்சி வேற! அந்த தலைப்பே ஒ...பயங்கரம்:-))//
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
!! லைஃப் னா ரிஸ்க் எடுக்க வேண்டாமா..?? ஆனா தலை எழுத்து இந்த போலிஸ்காரங்களுக்கு மொய் எழுதனுமேன்னு போட்டுக்கிட்டு போறேன்.. நெஜமா ஹெல்' மெட்டு எனக்கு ஹெல் தான்..!1 :(
அக்கா நீங்கள் ஒரு (PoornimaSaran பின்னூட்டம் இல்ல) பின்னூட்டத்திற்கு பதில் சொல்லவேல்ல...அப்படின்னா அதுக்கு சூட சூட பதிவு வருமா!!? என்பதை உங்களின் கொலைவெறி ரசிகர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். ;))
//அக்கா நீங்கள் ஒரு (PoornimaSaran பின்னூட்டம் இல்ல) பின்னூட்டத்திற்கு பதில் சொல்லவேல்ல...அப்படின்னா அதுக்கு சூட சூட பதிவு வருமா!!? என்பதை உங்களின் கொலைவெறி ரசிகர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். ;))//
ஆமா மறந்து விட்டுட்டு போயிட்டேன்.. இப்ப பதில் போடறேன்!! நாங்க எல்லாம் வருவோம்.. ஆனா எப்ப வருவோம் எப்படி வருவோம்னு சொல்லமாட்டோம்..!! :)
//எப்படியோ தாயையும், பிள்ளையும் பிரிச்சாச்சு.. ம்ம்ம் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவோ?//
ம்ம்..நான் பாட்டுக்கும் சிவனேன்னு இருந்தேன். என்னை இப்படி உசுப்பேத்தி விட்டதால.. அடுத்து நீங்கத்தான்.. :))
//எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது முல்லைக்கு நல்லது :) இல்லன்னா நெஜமா அவங்க பாவம்ப்பா.. :))))//
நல்ல வேளை இல்லாட்டி அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கும்:-))
Post a Comment