அணிலும் மயிலும் - ஒரு பரப்பரப்பு பேட்டி

கேப்பங்கஞ்சி குடிக்க கூப்பிட்ட கவிதா, விஜி அக்கா காம்ப்ளான் வேணும் னு கேக்க, உனக்கு கேப்பங்கஞ்சி யே அதிகம், காம்ளான் வேறயான்னு தொறத்திவிட,

வந்த விஜி அக்காவை விடாம பிடிச்சி, ஒரு ஓரமா கூட்டியாந்து உக்காரவச்சி கேள்வி கேட்டு அவங்க திறமை எல்லாத்தியும் எப்படி நானு வெளியில கொண்டாந்து இருக்கேன் னு பாருங்க மக்கா... இன்னும் அது முடிஞ்ச பாடில்ல..

அணில் : யக்கா மயில்' ங்கறது யாரு க்கா?

எங்க ஆத்தா ஆடு வளர்த்தல, மாடு வளர்த்தலை, மயிலும் வளர்த்தலை, ஆனா மயிலு மாதிரி பொன்னு வளர்த்தலாம்னு ...........( எப்படி முடிக்கறது)
எழுத்தாளர்ன்னா ஒரு பூனைப்பெயர் இருக்கனும்னு வெச்சேன்.. (இது போதும் இந்த அணிலுக்கு..)

அணில் : சுமல்ஜா - தயவு செய்து திருந்துங்கள் ! அப்படின்னு ஒரு பதிவு எழுதி இருக்கீங்களே... ! அவங்களோட எண்ணங்களை அவங்க பதிந்து இருக்கும் போது அதை நீங்க தவறுன்னு சொல்லி திருந்த சொல்லி இருப்பது நியாயமா? இந்த மாதிரி எத்தனை பதிவர்களை நீங்க திருத்தி இருக்கீங்க..?

ம்ம்ம் சகோதரி சுமஜ்லா அவர்கள் சொல்லியதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் என் வலையில் அதை பதித்தேன். ( அரசியல்வியாதி வாசம் வருதா?? குட்) எனக்கு டீச்சர் வேலை பிடிக்காததால் திருத்த தெரியலை.

அணில்: மிக சமீபத்தில் நீங்க எடுத்த பேட்டியால வலையுலகமே சின்னாபின்னமாகி இருந்திச்சே.. அத பத்தீதீதீதீ உங்களின் கருத்து என்னவோ?

யூ சி அக்சுவலி வாட் ஹேப்பண்ட்..சரி சரி. அது காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதைதான். இப்பத்தான் மீ பேக்குனு எல்லாம் சரியாயிடுச்சே. நெக்ஸ்ட் :))

அணில் : நீங்க எப்ப பாத்தாலும் வலைபதிவர்கள் எழுத்தில் குத்தம் குறை கண்டுபிடிச்சீ சீ சீ... அதை டிரேக்டா கேக்காம.. , இன் டிரேக்டா தாக்கறீங்க (கல்ல்லு சோடா பாட்டில், அழுகின தக்காளி எல்லாம் வீசறதா கேள்விப்பட்டோம்) அதைபத்தி விலாவாரியா சொல்லுங்க?!

இதெல்லாம் உனக்கு மண்டப்பத்தில் யாராச்சும் எழுதி கொடுத்தாங்களா??

அணில் : யக்கா யாரையாச்சும் திட்டனும்னா.. உங்கக்கிட்ட சொன்னா போதுமாமே நீங்க உடனே வினவு அங்கிள் கிட்ட புடுச்சி குடுத்துடுவீங்களாமே. .? உண்மையாக்கா?

பே பே பேப்பே பே .....:))

அணில் : உங்கள கோவை யின் அண்ணபூரணி ன்னு மனசாட்சியே இல்லாம கூப்பிடறாங்களே, நீங்க ஏதாச்சும் ஹோட்டல் நடத்துகிறீர்களா?

ஒரு பத்து லட்சம் தா, நடத்தி காட்டறேன்.


அணில் : யக்கா உங்க ஹோட்டல் வந்து சாப்பிட்டு கை கால் விழுந்து போனவங்க, வாந்தி பேதியில வாரிக்கிட்டு போனவங்கள பத்தி சொல்லுங்க..

அனிலு செல்லம் நீ வாடா கண்ணு முதல் வாய் உனக்குதான்.. ( ரொம்ப ஆடறே).

அணில் : யக்காவ் இது ஒரு ஐசியூ கேள்வி.. நீங்க சென்னை வந்தப்ப, உங்அக் சாப்பாட்டுல விஷம் வச்சி கொல்ல ஏற்பாடு செய்து, அதில் மயிர் இழையில் தப்பிச்சி கோவை க்கு ஓடினீங்க்ளாமே உண்மையாக்கா?

வெளிநாட்டு சதியா இருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா அதற்கு முதல் நாள் நாங்கள் சென்ற சுற்றுலாவில் நடந்த விசயம் எனக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்

அணில்: யாரையாவது தாக்கி எழுதனும்னா, உங்க தலைமையில் ஒரு பெரிய மீட்டிங் அரேஞ் செஞ்சி, பதிவர்களுக்கு , சோறு, தண்ணி எல்லாம் ஊத்திக்கொடுத்து, உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கெஞ்சி கதறுவீங்களாமே அப்படியா?

இதெல்லாம் அரசியல்ல சகஜம் :))

அணில் : யக்க்கோவ்.. நீங்க பேட்டி' ங்கற வார்த்தைய சொன்னாவே எல்லாரும் துண்ட காணோம் துணிய காணோம் னு ஓடறாங்களே ஏன்க்கா?

அது பொறாமை அனிலு, :)


அணில் : இத கேக்க எனக்கு வெக்க வெக்கமா இருக்கு... பெண்களின் கவர்ச்சி படம் போட்டு ..ஹி ஹி ஹி... யாரும் பதிவிட்டா, உடனே பொங்கி பொங்கலாகி படத்தை எடுத்தால் தான் பொங்கல் செய்வதை நிறுத்துவேன் னு சொல்றீங்களே.. ஏன்க்கா உங்ககுக்கு இம்புட்டு பொறாமை?

யாரு அப்படி சொன்னாங்க, இந்த மாதிரி புரளி கெளப்பி விடரதே வேலையாப்போச்சு.. ( யாரு போட்டிருக்கா)

அணில் : இதுக்கு மூக்குல டியூப் விட்டு சீரியஸா பதில் சொல்லனும் ஒகே.. பெண்ணியம் - என்றால் என்ன பத்து வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்.

அது இந்த அலுமனியம் மாதிரி எதுனா வஸ்துவா இருக்கும். பென்னீயத்தில் குக்கர் அவய்லபிலான்னு பார்க்கனும்)

அணில்: யக்கா நீங்க எழுதற பல போஸ்ட் மண்டபத்தில யாரோ எழுதி கொடுத்து தான் போடறீங்கன்னு பேசிக்கறாங்களே உண்மையாக்கா? நீங்க. உண்மைய சொல்லலன்ன்னா... ரத்தம் கக்கி சாவீங்கன்னு அந்த சிகப்பு சட்டைக்காரன் சொல்ரான் க்கா...

ம்ம் அனிலு நீயாவது கேளு, நான் மட்டமதியானம் வண்டிக்கு பெட்ரோல் போட்டு ரெண்டு கிலோமீட்டர் போயி லைட் எரியாத லைப்ரரியில் வாயில நுழையாத பேரில் தலைப்பு இருக்கும் பொஸ்தக்கமா பார்த்து எடுத்துட்டு வந்து மதியான தூக்கத்தை தியாகம் பண்ணி படிச்சு எழுதி வச்சா, இதுங்க பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க. நம்மள எளக்கியவாதி ஆக ஒரு பய விடமாட்டாங்க போல :)

அணில் : யக்கா நீங்க எழிதினல பிடிச்சது, பிடிக்காதது..

நெசமாத்தான் கேக்கிறையா?? அது இனிமேல் தான் எழுதனும் ( எப்படி ஒரு கவிஞர் மாதிரியே பதில் இருக்குல்ல )

அணில்: யக்கா நீங்க பதிவர்களுக்கு நிக் நேம் வச்சி கூப்பிடறீங்களாமே.. எங்க ஓனர் கவிதா க்கு ஏதாவது பேரு வச்சி இருக்கீங்களா?

அனிலு அது தனியா சொல்றேன்.

அணில்: எப்ப பாத்தாலும், யாரை பாத்தாலும் துப்பறீங்களே... யாராச்சும் டென்ஷன் ஆகி உங்க நாக்கை நறுக்கிட்டா என்ன செய்வீங்க?

இந்த துப்பு சொல்லிக்கொடுத்த குரு அட்ரஸ் கொடுத்து அனுப்புவேன்.


அணில் : ஹி ஹி...நீங்கள் பதிவுலகத்தில் பிரபலமாகத்தான் அடிக்கடி ஓடி ஓடி பேட்டி எடுப்பதும், எல்லோரிட பதிவுகளிலும் ஓடி ஓடி பின்னூட்டம் இட்டும் வருகிறீர்கள் என்று செய்திகள் வந்தவன்னம் உள்ளதே. .இதைப்பத்தி

பிரபலம் என்ற வார்த்தையில் வந்த வினைதான் பேட்டி என்னும் விடை :))) ( சமாளிச்சுட்டேன்) பின்னூட்டம் ஒரு சிலருக்கு மட்டும் இடுவேன், படிக்க நேரம் இருந்து பிடித்திருந்தால் மட்டும்.


அணில்: அடுத்தவங்க உயிரை பத்தி எந்த கவலையுமே இல்லாம சில சமயம் கவிதை ன்னு பேரு வச்சி ஏதோ எழுதி பஸ் ல ஏத்தறீங்களே.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

ஹெஹெஹ் மனிதர் உணர்ந்து கொள்ள அது மனிதக்கவிதை அல்ல. அதையும் தாண்டி சுட்டது.


அணில்: யார் உங்களை எவ்வளோ திட்டினாலும், துடைச்சி விட்டுக்கிட்டு திரும்பி எப்பவும் போல சிரிக்கறீங்களே உங்களுக்கு இந்த சூடு, சுரணை எதுவும் இல்லையா?

வேற வழி, உன் ஓனரோட எல்லாம் ஒரு வருசமா பழகினா அப்படித்தான்

அணில்: கடைசியா ஒரே ஒரு கேள்வி - உங்க வூட்டுக்கார் பத்தி 10 வரிகள் மிகாமல் சிறு குறிப்பு வரஞ்சிட்டு இடத்தை காலிப்பண்ணுங்க. .நாங்க கழுவி விடனும்.. .

கம்ப்யூட்டரில் இங்க் தீர்ந்து போச்சு :)))

.

இரண்டு பாடல்களும் ஒரே மாதிரியாக...

இந்த இரண்டு பாடல்களுக்கும் ...இசை, நாயகர்கள், நாயகிகள் மாற்றம் தவிர்த்து அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை..

நடனம், நடை, நாயகன், நாயகி உடல் அசைவுகள், பின்னால் ஆடும் வேற்று நாட்டுக்காரர்கள்.. இசை, பாடல் வரிகளை தவிர்த்து.. எல்லாமெ....


வாரணம் ஆயிரம்விண்ணைத்தாண்டி வருவாயா..அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்.. பார்ர்றாஆ...அம்மனி கண்டுபிடிச்சிட்டாங்க..!! சரி இதுல இருந்து நீங்க சொல்ல வரும் கருத்து.. ?!!! ............... ஒன்னும் இருக்க சான்ஸே இல்லையே.. அப்ப எதுக்கு இது..?!!

பீட்டர் தாத்ஸ் :- "Fear on Film ; Special Effects "

3. நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:)

இன்று..

இனியவள் புனிதா

நட்பைப் பற்றி
நாலு வார்த்தை
சொல்லச் சொன்னாய்
எனக்குத் தெரிந்த
ஒற்றைச் சொல்
'நீ "

செந்தில் :

ஐயோடா.. என்னையும் ஒரு எழுத்தாளனா மதிச்சி என்கிட்ட எழுத சொல்லி கேட்ட உங்க மனசு ரொம்ப வெள்ளை..

உங்க தலைப்பைப் பார்த்தவுடனே எனக்கு நினைவுக்கு வந்த ஒரு விடயத்தை வார்த்தைகளா இங்க கொட்டியிருக்கேன்.. இது முன்னர் என் வாழ்வில் சூறாவளியாக வீசிய ஒரு விடயம்.. கருத்து மட்டும் அதே..
-----------------------------------
நண்பா..

அன்று
நீயும் நானும்
எச்சில் சோறு உண்டு
ஓர் சட்டைப் பகிர்ந்து
ஓரே அன்னை இல்லயே என
வருந்தினோம்.

இன்றோ
வழியில் நீ
விபத்தில் சிக்கிய போதும்
கடந்து செல்கிறேனே

நம்மை வகுத்த அவளின் மோகத்திலே..

சின்னஅம்மணி அகிலா

நட்பு என்பது செல்வம் போன்றது. சம்பாதிப்பது கூட சுலபம். தக்கவைத்துக்கொள்வது கடினம். நல்ல நட்பு என்பது வெவ்வேறு தெருக்களில் நடந்தாலும் ஒரே திசையை நோக்கி நடப்பது போன்றது. என்னைப்போன்று வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குடும்பத்தை விட்டு இருக்கிறோமே என்று நினைக்கும்போது நட்புகள்தாம் அதை மறக்கடிக்கின்றன.

கடைசியாக

இது தப்பா எனக்கு வந்திடுச்சு போலிருக்குங்க கவிதா என்றால் இல்லைங்க , உங்களுக்குதான் அனுப்பி இருக்கேன் என்று நம்மையும் மதித்து சொல்லுங்க என்று சொல்வதும் நட்பு :)

Maddy :

ஆயிரம் வேலை இருந்தாலும் அவன்/அவள் அழைக்கும் போது அதுவே முக்கியம் என்பதும், காலத்தின் சுழற்சியில் காணமல் போனாலும் அந்த கைபேசி அழைப்பில் கட்டி அணைக்கும் எண்ணமும், என்னுடையது என்ற எண்ணம் இல்லாமல் உனக்கும் தான் என்ற மனமும் ஏன்? எப்படி? எதற்கு? என ஆயிரம் கேள்விகள் கேட்காமல், உன் கவலையில் எனக்கும் பங்குண்டு என்று சொல்லாமல் சொல்லி அமைதியை அருகில் அமர்வதும், எண்பது வயதிலும் "டா" :"டீ" என்று அழைக்கும் சுதந்திரமும் எங்கே உள்ளதோ, அதுவே நட்பு.

குசும்பர் :கவி: :(((((((( ஏன் இப்படி?!! ப்ளான்க் மெயில் அனுப்பி வச்சி இருக்கீங்க..?!

குசும்பர் : :))) எனக்கு ஒன்னுமே தோணலங்க.. ஒக்கே....... இப்ப என்னா செய்யனும்?

கவி : நட்பு பத்தி சொல்லனும்..

குசும்பர் : காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடைசி வரை நீடித்திருக்கும் ஒரு உறவு தான் நட்பு

கவி : அவ்வளவுதானா..?

குசும்பர் : ஸ்ஸ்ஸ்ப்ப்பா இதை யோசிக்கவே மண்ட சூடாயிட்டு.. இது மாதிரி டஃப் கொஸ்டின் இனிமே கேட்டீங்க.... @$#$%#$^%$%&#@$###@$

கவி: அவ்வ்வ்வ்வ்வ்...!! இதுக்கு மேல குசும்பர் மிரட்டியதை வெளியில சொல்ல முடியாதுங்க. குசும்பரே நீங்களும் நானும் பிரண்ட்ஸ். .நோ நோ. .கொலவெறி மிரட்டல் ஒகே... !!அன்று 04.August.2006

மா.சிவகுமார்

நட்பு என்பது என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், உண்மையான நட்பு ஒன்றை பல கட்டங்களில் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன.

பள்ளியில் கிடைத்த நண்பன், அவன் வேறு பள்ளிக்குப் போய் விட்ட பிறகு ஏற்பட்ட வெறுமை, பல ஆண்டுகளாக நட்புகள் தவிர்த்து வாழ்ந்த பாலைவன நாட்கள், கல்லூரியில் கிடைத்த ஒரு நட்பு, அப்புறம் வேலையில் சேர்ந்த பிறகு மீண்டும் வெறுமை. பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சிறந்த நண்பனைக் கண்டு கொண்டு இன்று வரை, தொலைவாகப் போய் விட்டாலும், இளைப்பாறும் நிழலாக இருக்கும் சுகம்.

ஆமாம், என்னைப் பொறுத்த வரை நட்பு என்பது இளைப்பாறும் இடம். பாசாங்குகளை எல்லாம் துடைத்துப் போட்டு விட்டு முகமூடிகளை எல்லாம் கழற்றி விட்டு நாம் நாமாக இருக்கும் இடம் நட்பு. எந்த விதக் கேள்விகளும் இல்லாமல் நிபந்தனையற்ற அன்பு நட்பில் ஒன்றுதான் கிடைக்கிறது. இன்றைக்கும் என்னுடைய நண்பனுக்குத் தொலை பேசி என்ன வேண்டுமானாலும் பேசி மனதைக் கொட்டி விடும் சுவாதீனம் இருக்கிறது. அதுதான் நட்பின் கொடை. பல மாதங்கள் கழிந்து சந்தித்த பிறகு பிரியவே இல்லாதது போல பேச்சு தொடர்வது இந்த உறவில் மட்டும் நடக்கும் அற்புதம்.

இதை(நட்பை) விரிவு படுத்தி உலகெங்கும் இத்தகைய உறவாக மாற்றுவது சாத்தியம் என்று தோன்றுகிறது.

பெயர் வெளியிட விரும்பாத நண்பர்

எல்லா எல்லைகளையும் கடந்தது நட்பு என்கிற காலம் போய்..
நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்கிற காலத்தில் வாழ்கிறோம...கடன் நட்பை முறிக்கும் என்கிற வாசகம் சொல்லும் நட்பின் எல்லையை...நட்பு என்பது முள் செடியில் இருக்கும் ரோஜா, கண்னில் இருக்கும் கருவிழி என்பதெல்லாம--நம்முள் இருக்கும் யாதர்த்தத்திற்கு நாம் போட்டுக்கொள்ளும் முகமூடிகளே...

Friendship = Friendship

சந்தோஷத்தை தரும் பொய்யை விட உண்மை தரும் வலி மிகவும் இன்பமானது யாதர்த்தமானது....எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்குமான பதில்கள்தான் வெற்றிகளும் தோல்விகளும்........இதுதான் வாழ்க்கை என்று எடுத்துக்கொள்வதை விட இதுவும் வாழ்க்கை என்பது யாதர்த்தம்...

இங்கு காதலியின் தோல்வியை காதலின் தோல்வியாக சொல்லும் இளைஞர்கள் ஏராளம்....

தன் இயலாமையை சமுதாயத்தின் இயலாமையாக பார்க்கும் மக்கள் ஏராளம்.. ஏன் இந்த முரண்பாடு??? யதார்த்த வாழ்க்கைக்கு முரணாக வளர்க்கப்பட்டதன் விளைவு....நடப்பதை யார் அறிவார் என்று உளறிக்கொண்டிருப்பதை விட நடந்ததையாவது அறியும் குணம் வளரவேண்டும். குடித்தால் மட்டும்தான் போதையா... படித்தாலும் போதைதான் கவிதைகளை..

நட்பு தொடரும்...

2. நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:)

இன்று....

நான் ஆதவன்:

நட்பு....பக்கம் பக்கமாக எழுத வேண்டியதை பத்து வரிக்குள் அடக்குவது கடினமாகத்தான் இருக்கிறது. குழந்தை பருவத்தில் விளையாடும் பொம்மையில் கூட தன் விருப்பத்தை பெறமுடியாத நிலையில், சுயம் எடுக்க முடிகின்ற ஒரே பெருமையான விசயம் நட்பு. பருவத்தின் பல அறைகளை கடந்தாலும் கசிந்தூறும் மழை நீராய் நம்மையும் அறியாமல் படர்ந்து அந்தம் வரை தொடர்கிறது நட்பு. காதலின் வலியை, பெ(உ)ற்றோரின் இழப்பை, பொருளாதார இயலாமையை, தாழ்வு மனப்பான்மையை என அனைத்து பிணி தீர்க்கும் அற்புத மருந்து அது.

வெளிநாட்டு வாழ்க்கைக்கு வந்த பின், தனிமையை உணர்ந்த ஒரு நாள் பதிவுலகத்திற்கு வந்த போது கிடைத்த நட்புகளை, பொம்மை கடைக்குள் புகுந்த குழந்தை போல சந்தோஷத்தோடு வாரிச் சுருட்டி அணைத்துக்கொண்டேன். அதில் மேலும் இறுக்க அணைத்து கொண்ட நட்புகள், தோளில் சாய்ந்த நட்புகள், அணைப்பிலிருந்து வெடுக்கென விலகிய நட்புகள் என என் சின்ன உலகத்தை சுவாரஸியமாக்கி வருகிறது. இது போன்று நட்பிற்கென சில நாட்களை மட்டும் விழாக்களாக கொண்டாடுவதில் உடன்பாடில்லை என்றாலும் நண்பர்களைப் பற்றி இது போல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தமையால் மகிழ்வாக உணர்கிறேன்.

கயல்விழி முத்துலட்சுமி

நட்பு கற்றுக்கொள்ள பலகாலம் பிடித்தது. தயங்கி நிற்கும் என்னை தானாக வந்து சேர்ந்த தோழிகள். இமைபோல தோழிகள் இருந்த காலம் ஒன்று. அது பள்ளிக்காலம்.

பின் ஒருகாலம் நானாக வலியத்தேடியடைந்த நட்புகள். தெரியாதவர்கள் இல்லை அறியாதவர்கள் இல்லை என அலைகளைப்போல ஓயாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் கூட்டமாய் ஒன்றாய் மனம் கலந்த தோழிகள் என கல்லூரிக்காலம் ஒன்று. என்ன கொடுத்து என்ன பெற்றோம் தெரியாது.

சிதறிய முத்துக்களாய் எங்கோ பதிந்து வைக்கப்பட்டவர்களாய் தொலைந்து போன நட்புக்களை எண்ணி ஏங்கியபடி இன்று. நீண்ட கரங்களில் எல்லாம் நட்புரிமை குலுக்கி..இழந்தவர்களை கண்டடைய ஒருமுயற்சி. நட்பில் கரைந்து போவது அப்போதும் இப்போதும் எப்போதும் ஒன்று போலவே தான். பத்தாவதில் பிரிந்து பன்னிரண்டில் இணைந்த சுதாவைத்தேடுகிறேன். செம்பருத்தி அணிந்த தேவதை சீதளாவைத் தேடுகிறேன். கலகலவென்று சிரிப்புடன் உள்நுழையும் அருளை தேடுகிறேன்....

இழந்த நட்புகளை சொர்க்கத்தில் சந்திக்கலாம். தொலைந்த விலகிய நட்புக்களை
எண்ணியபடி நாட்கள் . அவர்களை கொண்டுவந்து சேர்க்கும் நட்புதினம் என்று
வரும்? ........

தெக்கிக்காட்டான்


பால்ய காலத்து நட்புகள் கள்ளமில்லாதது என்றாலும், காலத்தோடு வளரும் பொழுது அவைகளிலும் பிணக்கு காண்பது தவிர்க்க முடியாததாகிப் போகும். அப்படியே வளர்த்(ந்)து வந்தாலும், சில பல சாக்கு போக்குகளைக் கொண்டே பூசி வளர்ந்து வர வேண்டுமாய் இருக்கும். இருப்பினும், புரிதலற்ற திருமண வாழ்க்கையில் நாங்கள் 30ஆவது வருடத்தில் காலெடுத்து வைக்கிறோம் என்று கூறிக் கொள்வதில்லையா அது போல கூறிக் கொள்ளவாவது அந்த நட்புகள் தேவைப்படலாம்.

பால்யம் தாண்டிய நட்பு உலக நடத்தையுடனாக மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. என்னய பொருத்த மட்டிலும் நட்புகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. மனதுக்கு நெருக்கமானதும், உண்மையானதுமாக!! நம்மையேதான் எதிர்த்தரப்பிலும் பார்ப்போம், ஏனெனில் எப்பொழுதும் நமக்கும், நண்பர்களுக்குமான மூன்றடி இடைவெளியில் ஒரு கண்ணாடியை தூக்கியே அலைகிறோமென்பதால்.
நட்பு என்னைப் பொறுத்தவரை என்னை மையமாக வைத்து 3 வட்டத்துக்குள் வரும். முதல் வட்டம் மனதிற்கு நெருங்கிய நட்பு, பேசினாலும் பேசாவிட்டாலும் என்றும் தொடரும். அந்த நட்புக்கு பெற்றவர்களைவிட முக்கியத்துவம் அதிகம். இரண்டாவது நமது விருப்பு வெறுப்புகள் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும் நட்பு. சில சின்ன சண்டைகளும், சந்தோசங்களுமாக தொடரும். மூன்றாவது நம் சிரிப்பை மட்டும் பகிரும் நட்பு, நம்மில் அதிகம் இந்த வகைதான் இருப்போம். எதுவானாலும் எல்லா நேரத்திலும் எதோ ஒரு வகையில் நட்பு சங்கிலி தேவை, இல்லன காலில் சங்கிலி கட்டும் நிலைக்கு வந்துடுவோம்.

*************

அன்று.. (04-August-2006)

தேவ்:-

Friendship is something which nurtures no expectations...It allows you to be yourself... Its the most comfortable feeling mankind has been ever blessed with. Friends are reflections of oneself...Friendship is nothing but just taking a look at yourself in a mirror

தேவ் பதிவிலிருந்து எடுத்த அவரின் சில வரிகள்:-
மேடைப்போட்டு அறிவிக்கத் தேவையில்லை கடமையென்னும் கயிற்றில் கட்டிவைக்க அவசியம் இல்லை இதயத்தின் ஒரு ஒரம் போதும் நினைத்தவுடன் பூப்பதற்குஅதற்கு நட்பு என்று பெயர்..

கார்த்திக்ஜெயந்த்:-

"A friend is a beautiful gift you give your self"
It is by chance we met, by choice we became friends... Friendship is a strange thing....we find ourselves telling each other the deepest details of our lives....But what is a friend? A confidant? A lover? A fellow email junkie? A shoulder to cry on? an ear to listen? a heart to feel?... A friend is all these things...and more. No matter where we met, I call you friend. A word so small...yet so large in feeling...a word filled with deep emotion.

சந்தோஷ்
:-

விதை இல்லை
செடி இல்லை
காய் இல்லை
பழம் இல்லை
ஆனாலும்
பூக்குது இந்தப்பூ!

அட அதுதாங்க
நட்பு

செந்தழல் ரவி
:-

எனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...
ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று.. பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்.. பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்... ஆனால்.. எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...

பிரியன்
:-

பாய்மரக்கப்பல் வாழ்க்கையில் நம்மை அன்பால் செலுத்தும் துடுப்பு தாய் , சரியான திசையினில் செலுத்துவது தந்தை உறவு.நம்மை தாங்கி நிற்கும் மரம் இறைவன்.இவர்கள் கூட கைவிட்டுவிடும் ஒரு நிலையில் , கடலில் தத்தளிக்கும் நிலையில் கையில் கிடைக்குமே ஒரு மரக்கட்டை அது நட்பு.
பெண் நட்பை பொறுத்தவரை: எந்த நண்பி கடைசி வரை காதலியாகாமல் இருக்கிறாளோ அவள் நண்பி. என் வீட்டில் ஒரு புத்தம் புது பூ பூக்கிறது! வந்து நீயே பறித்துக் கொண்டால் நீ நண்பி! பறித்து நான் தரும் வரை காத்திருந்தால் நீ காதலி!

நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:)

கோவி.கண்ணன் :
ஆகா........கெளம்பிட்டாய்ங்க......
நட்பு என்பது உப்பு போல இருக்கனும், உணவில் உப்பு எப்படியோ மனித உறவில் நட்பும் அப்படித்தான், மிகுதியானாலோ (மிகுந்த உரிமை எடுத்துக் கொள்வது), குறைவானலோ (பெயரளவுக்கு இருந்தாலோ) சுவைக்காது. எல்லாம் சரியான அளவோடு இருக்கனும். அளவுக்கு மிஞ்சினால் நட்பும் உப்பும் உவர்ப்பு தான். உப்பில்லாத உணவு பத்தியம், சிலருக்கு உடல் கோளாறினால் பத்தியம் தேவைப்படும், மன அளவில் பிறரிடம் நெருங்கிப் பழகும் தகுதி இல்லாவர்கள் நட்பின் பங்களிப்பு பற்றி கவலைப்படுவதில்லை, அவர்களுக்கு தேவைப்படுவதும் இல்லை.

தமிழரசி :
சுயநலம் போட்டி பொறமை என எந்த தீவினை பயக்காத உறவை தருவதே நட்பு ..எதிர்பார்ப்பு எதுவும் இன்றி விட்டு கொடுத்து நீ நான் என இல்லாமல் நாம் என சொல்லும் அன்பே நட்பு . களங்கம் கற்பிக்காத கட்டுக்குள் அடங்காத ஆழ்மனம் சுமக்கும் அர்த்தமான உறவு நட்பு. சோகம் தாங்கி சுமை குறைத்து தாயாய் மாறி தன்னலம் மறந்து தலை கோதி நலம் மட்டும் தந்து நான் இருக்கேன் என சொல்லும் அன்பே நட்பு.கண்கள் கண்டதும் வரும் காதல் போலத்தான்..எந்த பரிந்துரைக்கும் பற்றாக்குறைக்கும் விலை போகா விவேகம் நட்பு .இதை கொண்டாட நாள் ஒன்று போதாது நல்ல மனம் மட்டுமே இதன் வித்து .நல்ல விதைகளையே நடுவோம் நல்ல நட்பையே வளர்ப்போம்.....நீர் ஊற்றி அல்ல நல்ல எண்ணம் சாற்றி. அர்த்தம் சொல்லும் அதனை பொருளும் நட்பு என்னும் நற்சொல் அறியும்

.உன்னை கண்டதும் நான் கொண்டது நட்பே பெண்ணே ..
நட்புடன் ஜமால்
நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கை
--------------------------------------
நட்பு ஒரு கண்ணாடி போன்றது, முகத்தில் இருக்கும் அழுக்கை மறைக்காமல் காட்டும் கண்ணாடி போன்று நண்பன் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவது நட்பு.
-------------------------------------
Friendship is not a word but a worLd with Love

சித்தார்த் & காயத்திரி
நட்பும் நட்பு சார்ந்த பிரதேசங்களும்
எப்பொழுதும்
அடர்பச்சை நிறத்தில் செழித்திருக்கும்
என்று சொல்வதற்கில்லை.
அங்கும் மழை பொய்ப்பதுண்டு.
வறட்சி வருவதுண்டு.
தாவரங்களின் நீர்மையை
காற்றின் கொடுங்கரங்கள் உருவியெடுக்க
நிலமெங்கும் பழுப்பு பரவுவதுண்டு.

இத்தனைக்குப் பிறகும்
ஒரு துளி நீருக்கான காத்திருப்பை
விடாமல் இந்நிலம் நிகழ்த்திக்கொண்டிருப்பதால்
இது ஒருபோதும் பாலையாவதில்லை

- வெ. சித்தார்த்

******************

நம் நண்பர்கள் 2006 ல் நட்பு பற்றி சொன்னவை...

எஸ்.பாலபாரதி

அம்மா- தொப்புள்கொடி கொடுக்கும் உறவு. அப்பா- உயிர் கொடுத்த உறவு. உடன் பிறப்புகள்- ஒரே ரத்தம் என்பதால் வரும் உறவு. மனைவி- காமத்தின் அடித்தளம் அமைந்த உறவு. நட்பு--- எங்கோ பிறந்து, எங்கோவளர்ந்து, எந்த ரத்த உறவுமில்லாமல்.. அன்பு செலுத்துகிற உறவு. சுருக்கமாகச் சொன்னால்.... எங்கொல்லாம் ஒரு மனம் காயப்படும் போது..
அதற்கு ஆதரவாய் இன்னொரு மனம் குரலெழுப்புகிறதோ..
அங்கே இருக்கிறது நட்பு.

பொன்ஸ்

நண்பர்கள் என்பவர்கள் ஆற்றின் கரை மாதிரி. நம் கருத்துகளில், செயல்களில், அதிகம் ஊடுறுவக் கூடாது. அந்தக் கருத்துகளைச் செதுக்குவதற்கு உதவலாம் ஆனால், கட்டாயப் படுத்தும் அன்போ, நட்போ நிச்சயம் போகப் போகக் கசப்பைத் தரும்.


ஜொள்ஸ்

நட்பு எனக்கு மிகவும் பிடித்த பூ !
---------------------------------------
உன்னை என் நண்பர்களுக்கும் என்னை உன் நண்பர்களுக்கும் பிடிக்காவிட்டாலும் நம்மை பிடித்துவிட்டது நட்புக்கு!
------------------------------------------
உன்னைக் கொடுத்தால்தான்
என்னைக் கொடுப்பேன் என்ற பேராசையெல்லாம்
காதலைப்போல் நட்பிற்கு இல்லை !

சீனு

இந்த உலகில் உள்ள எந்த ஒரு உறவும், ஏதோ ஒரு எதிர்ப்பார்புடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ உண்டாவது. கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருப்பது திருமணம் தாய் பிள்ளையை நேசிப்பது, தன் பிள்ளை என்பதால் தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் இருப்பது கட்சி என்னும் பந்தம். ஆனால், எதையும் எதிர்ப்பார்க்காமல் வெறும் நேசத்தை மட்டுமே கொண்டுள்ளது நட்பு மட்டுமே. காரணம், நண்பர்கள் பெரும்பாலும் ஒரே வயது உள்ளவர்கள். அதனால் ஒரே wavelength இருக்கும். இதுவே,மிக முக்கியமான காரணம், அங்கே எதிர்காலத்தினைப் பற்றின பயம் சுத்தமாக இருக்காது. அதனால், கவலைகள் இல்லை. Hostel Life வாழ்ந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

* Photos - Mumbai - Marine Drive Beach

நட்பு இன்னும்....தொடரும்.... :)

மறந்து போன விளையாட்டு - தாயம்

தாயம் - விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து விளையாடுவோம். பெண்கள் பொதுவாக வீட்டில் விளையாடுவார்கள். ஆண்கள் தமிழ் திரை படங்களில் விளையாடி பார்த்திருக்கிறேன் ஆனால் நேரில் பார்த்ததில்லை. திரை படங்களில் வரும் தாயவிளையாட்டு கட்டங்கள் வேறு மாதிரியாக இருக்கும். இது தான் எங்களது வீட்டில் விளையாட பயன்படுத்துவோம்.

குறைந்தபட்சம் இருவர் இதை விளையாட தேவை. அதிகபட்சம் எத்தனை பேர் 12 பேர் இருக்கலாம் ஒரு குழுவில். உறுப்பினர் எண்ணிக்கை இரட்டை படையில் தான் இருக்க வேண்டும், அதாவது 2, 4, 6 என்று.

காய்கள் ஒரு குழுவிற்கு மொத்தம் 12. புளியங்கொட்டை, சோழி வைத்து விளையாடலாம். ஒரு குழுவின் காய்கள் மற்றதை வேறுப்படுத்தி காட்ட வேண்டும்.

A, B - போட்டுள்ள இடத்தில் காய்களை வைத்து துவக்கி தாயக்கட்டை* கொண்டு தாயம் போட்டு ஒவ்வொரு காயாக இறக்கி, அதை அவரவர் பக்கமாக தாயக்கட்டை போட்டு வரும் எண்ணில் நகர்த்தி முழுவதுமாக ஒரு சுற்று வந்து Z இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும், நடுவில் எதிரே எதிராளியின் காய்கள் வந்தால் அதை வெட்டலாம். வெட்டப்பட்ட காய்கள் திரும்ப ஆரம்ப இடத்திலிருந்து மீண்டும் தாயம் போட்டே வெளிவரவேண்டும்.

அடுத்து அந்த கிராஸ் மார்க் இருக்கும் இடங்கள் எல்லாம் "மலை" என்று சொல்லுவார்கள். A குழுவினர் ஒரு மலையை பிடித்து காயை அதில் வைத்துவிட்டால், B அந்த மலையை பிடிக்க முடியாது. இந்த மலையை பிடிக்க ஆட்டம் நடக்கும் போது போட்டி நடக்கும்.* படம் ரொம்ப கஷ்டப்பட்டு வரைந்தேன்.. தப்பு சொல்றவங்க கொஞ்சமா சொல்லுங்க..

இதில் காய் நகர்த்தலில் சாமர்த்தியமும், கட்டங்கள் எண்ணி காயை வேகமாக நகர்த்தவும் தெரிந்தால் போதும். ஒரே சமயத்தில் நிறைய எண்ணிக்கைகள் விழும் போது, அதாவது, தாயக்கட்டையில், 5, 6, 12, போன்ற எண்கள் விழுந்தால், ஒருவரே 2, 3, 4 போன்ற எண்கள் விழும் வரை தொடர்ந்து ஆடலாம். அப்படி தொடர்ந்து ஆடும் போது, ஒரு காயை மட்டும் இல்லாமல் பல காய்களை நகர்த்தமுடியும்.

z க்குள் எந்த குழு முதலில் எல்லா காய்களையும் எடுத்து சென்று சேர்க்கிறதோ அதுவே வெற்றி ப்பெற்றதாக ஆகும்.

* தாயக்கட்டை (படம்-நன்றி கூகுல்)
இதற்கு முன்பு மறந்து போன விளையாட்டுகள் பற்றி எழுதிய இடுகை. இதில் அநேகமாக எல்லா மறந்த விளையாட்டுகளையும் குறிப்பிட்டு உள்ளேன் என்றே நினைக்கிறேன். :)

மற்றொரு பதிவு ஆடு புலி ஆட்டம்

அணில்குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்.... ..... வீட்டுல புள்ள கம்பியூட்டர் ல விளையாடி பறக்குது.. இவிங்க இன்னமும் தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் னு.. .!! :(

பீட்டர் தாத்ஸ் : “Games are a compromise between intimacy and keeping intimacy away

ஆட்டி படைக்கும் ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி என்று இல்லை, இந்த குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்கும் போதும் எல்லாம், நமக்கு உடம்பு ஆட்டம் கண்டு போகுது. பெரிய வேலை ஒன்றும் இல்லைதான். ஆனா அந்த அடுப்பு இருக்கே அடுப்பு.. அது தான் பெரிய பிரச்சனை.

எங்களது வீட்டில் கடைக்குட்டி மருமகள் நானே.. வருடாவருடம் யாராவது போன் செய்து அழைப்பார்கள், நைஸ் சாக அவர்களுடன் சேர்ந்து போயி, கோயிலையும், மக்களையும் சுத்தி பார்த்துவிட்டு, சைட் வேலை ஏதாவது இருந்தால் செய்து விட்டு, மூத்தார் குழந்தைகள், பேர குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டு இருந்தேன். எல்லாருக்கும் நான் ரொம்ப செல்லமாக(நோ பொறாமை ஹியர், எல்லாருக்கும் எல்லாமும் அமைந்துவிடுவதில்லை னு நீங்க எல்லாரும் முதல்ல புரிஞ்சிக்கனும்) இருந்ததால் அவர்களும் என்னை எதுவும் செய்ய விட்டதில்லை. அதனாலேயே பொங்கல் வைப்பது, இந்த மாவிளக்கு செய்வது போன்றவை தனியாக செய்ய வேண்டிய சூழ்நிலை வராமலே போயிவிட்டது. கற்றுக்கொள்ளவும் இல்லை.

இப்போது எல்லாம் அவரவருக்கு அவரவர் வேலைகள் பெரியதாகிவிட்டது, முன்பு போல் எல்லோரையும் அழைத்து செய்வதில்லை. நாமும் அப்படியே டீல் லில் விட்டு விடலாம் என்றால். தெய்வகுத்தம் ஆகி, அது நம்மோட கண்ணை குத்தினால் பரவாயில்லை. எப்போதாவது ஊரில் யாராவது மண்டையை போட்டுவிட்டால், அப்போது தெரியும், கவிதா செய்த தெய்வக்குத்ததினால் அவர் இறந்துவிட்டார் என்று நமக்கே சொல்லுவார்கள். "அடடா..!! இல்லைன்னா அவரு சாகாமையே இருந்து இருப்பாரு இல்லைன்னு ?! " கேட்க தோணும் ஆனா வெளியில சொல்ல முடியாது. ஏன்னா...அங்கே போனால் என் இஷ்டத்திற்கு நினைத்ததை எல்லாம் பேச முடியாதபடி என் வீட்டுக்காரர் இங்கேயே பெரிய பூட்டாக பூட்டி கூட்டி சென்று இருப்பார்.

சரி, நாம மேட்டருக்கு வருவோம், நமக்கு அத்துபடியானது குக்கர் பொங்கல். :) ம்ஹூம்.. ஆனா எங்க கோயிலுக்கு போனால் அடுப்பு மூட்டி, அங்கு இருக்கும் குச்சிகளை வைத்து எரிய வைத்து பொங்கல் செய்து முடிப்பதற்குள் ஆட்டம் கண்டு விடுகிறது. எனக்கு மட்டும் தான் இந்த அடுப்பு இப்படி புகைந்து கஷ்டம் கொடுக்கிறதா ? இல்லை எல்லோரும் அப்படியா என்று சுற்றும் முற்றும் பார்த்தால்.. ம்ம்..ஆமாம்.. :( எல்லாரும் ரொம்ப சுலமாக அடுப்பு எரிப்பதாகவே எனக்கு தெரிகிறது.

நிறைய வருஷம் மற்றவர்களை ஏமாற்றியே பழகிவிட்டதால் சாமி நம் அடுப்பை மட்டும் புகைய வைக்குது போல என்று நானே என்னை தேற்றிக்கொண்டு, நடுவே நடுவே , புகைச்சலில் கண்கள் சிவந்து கண்ணீர் மல்கி, மூக்கொழிகி துடைத்து (அதற்காக தனியா ஒரு துணி இங்க இருந்து எடுத்துட்டு போயிடுவேன், நாங்க எல்லாம் ரொம்ப உஷாரூஊஊ! ) போடுவதை பார்த்து சிரிப்பது மட்டும் இல்லாமல் சுத்தி சுத்தி எல்லா போஸ் களிலும் போட்டோ எடுக்கும் என்னை கட்டிக்கிட்டவர் ஒரு பக்கம் என்னை டென்ஷன் பண்ணுவார். இருந்தாலும் புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்று, டென்ஷனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஹி ஹி ஹி.. என்று சிரித்து நானும் போஸ் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.

எப்படியோ ஓவ்வொரு வருடமும் இந்த பொங்கல் வைப்பது பெரிய டார்கட் ஆக அமைந்து விட்டாலும், பூஜை முடிந்து பொங்கல் லை வினோயகம் செய்துவிட்டு வரும் என் கணவர், "என்னடி நீ செய்த பொங்கலுக்கு நிறைய டிமேன்ட் இருக்கு... பாரு எல்லாம் தீர்ந்து போச்சி, வீட்டுக்கு எடுத்து வச்சி இருக்கியா இல்லையா ?" என்று கேட்கும் போது, அவரு கிண்டல் செய்கிறாரா இல்லையா என்று தெரியாமலேயே (தெரிஞ்சிட்டாலும்!! ) , ரொம்பவே சந்தோஷத்தோட.. ம்ம்ம் எனக்கு தெரியுமே..!! . அது சூப்பர் டேஸ்ட்டா இருக்குன்னு..!! நவீனுக்காக கொஞ்சம் எடுத்து வைத்து விட்டேன்'ன்னு சொல்லுவேன்.

அடுத்து மாவிளக்கு - யார்ப்பா கண்டுபிடிச்சாங்க இதை எல்லாம். அந்த காலத்தில உரல் உலக்கை கொண்டு இடித்து தயார் செய்வாங்க. இப்ப இருக்கவே இருக்கு மிக்ஸி.. இந்த முறை செய்யும் போது, வெல்லம் அதிகமாகி ரவுண்டாக பிடிக்க வரவில்லை. தண்ணியாகிவிட்டது. வீட்டுக்காரர் நோட் செய்து கும்மும் முன் சரி செய்து விட வேண்டுமென்று, குடுகுடுவென்று ஆன்லைன் வந்தேன், யாராவது ஒரு மகராசி, மகராசன் உதவி செய்வாங்கன்னு நம்பி ஓடிவந்தேன், கிடைத்தவர், நம்ம முத்துலட்சுமி... கேட்டவுடன்.. "ஏன்ப்பா இது ஒரு மேட்டாரா. கொஞ்சம் அரிசி மாவு போட்டுக்கோங்க. .பிடிக்கவரும் என்று சொல்லி என்னை எப்படி வாழ்த்தினார் என்று பாருங்கள்.. :)

Muthulakshmi: செயிச்ச்ட்டு வெற்றித்திருமகளா வாங்க ப்பா திலகமிடறேன்..

நான் செயிச்ச்ட்டேன் முத்து சீக்கிரம் ஒடியாந்து வெற்றி திலகமிடுங்கள் !! :))))

மாவிளக்கு செய்முறை :(இது அடுத்த வருஷம் செய்ய எனக்காக நானே எழுதி வைத்துக்கொள்ளும் குறிப்பு) பச்சரசி முக்கால் ஆழாக்கு 2 மணி நேரம் ஊறவைத்து, கழுவி, உலரவைத்து, லேசாக ஈரப்பதமாக இருக்கும் போது மிக்ஸியில், ஒரு ஏலக்காய்(தோலெடுத்து) போட்டு நைசாக அரைக்கவேண்டும், மாவு நன்கு அரைந்தவுடன், கால் ஆழாக்குக்கும் சற்று குறைந்த அளவு வெல்லம்(பொடித்தது) போட்டு அதையும் ஒரு இரண்டு மூன்று சுற்றுகள் சுற்றி எடுத்து, உருண்டையாக பிடித்து, நடுவில் குழியிட்டு, நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றிவிடலாம். விளக்கை கோயில் ல போயி தான் ஏற்றனும்.

அணில் குட்டி அனிதா : ம்ம்... இதோடா.. .!! எங்க வெளக்க ஏத்தனும் னு எங்களுக்கு தெரியும் உங்க அளவுக்கு நாங்க எல்லாம் மக்கு மந்தாரம் இல்ல... கிளம்புங்க!!

பீட்டர் தாத்ஸ் : And it is time for those who talk about family values to start valuing families.
.

ஆண் தெய்வங்களே தயவுசெய்து செய்யுங்கள்.. !

நம் சமுதாயம் மற்றும் குடும்ப அமைப்பு ஒரு ஆணை சார்ந்ததாகவே உள்ளது. ஆண் என்பவர் தான் குடும்ப தலைவர், அவர் குடும்பத்தை காப்பாற்றினாலும் இல்லையென்றாலும் அவர் தான் தலைவர். ஆண் இல்லாத குடும்பத்தில், பெண் தலைவராக இருப்பார்கள். சமீபத்தில் (அந்த சமீபம் இல்ல), நண்பர் ஜார்ஜ் இறப்பிற்கு பின், அவருடைய மனைவி என்னை அழைத்து, அதிகமாக பிரச்சனையில் இருப்பதாகவும், அவரை வந்து பார்க்கும் படியும் அழைத்திருந்தார். சென்ற போது தான் தெரிந்தது ஜார்ஜ் அந்த பெண்ணை எத்தனை பிரச்சனையில் விட்டு சென்றிருக்கிறார் என்பது.

பிரச்சனைகள் என்று அவர் சொல்லியது :-

1. ஜார்ஜ் பெயரில் ரேஷன் கார்டு இல்லை. ரேஷன் கார்டு பொதுவாக முகவரி அத்தாட்சி மற்றும் குடும்ப உறுப்பினர் பற்றிய முழுவிபரங்களின் சான்றுகளுக்காக பயன்படுத்தப்படும். அதை கொண்டு தான் மற்றவை பெற முடியும். குறிப்பாக பாஸ்போர்ட், Bank Account Opening போன்றவற்றிக்கு இதை கேட்பார்கள். இவை இல்லாதவர்கள், கல்வி சான்றிதழ்களை பயன்படுத்தி பெற முடியும். இருந்தாலும் ரேஷன் கார்டிற்கு உள்ள தேவை மற்றவைக்கு கிடையாது.

ஜார்ஜ் பெயரில் ரேஷன் கார்டு இல்லாததால், Legal Heir பிரச்சனையில் அவருடைய அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய Final Settlement Amount கிடைக்கவில்லை. தற்போது தான் புதிய வீடு வாங்கியதால், வேறு எதிலும் அந்த வீட்டின் விலாசம் இல்லாததால், வேறு எந்த டாக்குமென்டையும் பயன்படுத்த முடியாத சூழலில் இருக்கிறார்கள். அவருடைய பாஸ்போர்ட் புதுப்பிக்காமல் விட்டு இருக்கிறார். அதனால் பாஸ்போர்ட் இருந்தும் அதை பயன் படுத்த முடியவில்லை.

2. தனக்கென்று அல்லது மனைவி குழந்தையின் பெயரில் நயா பைசா சேமிப்பு இல்லை. முன்று லட்சம் ரூபாய்க்கு ஒரு எல். ஐ.சி பாலிசி எடுத்து இருக்கிறார். கால் ஆண்டு முதல் தவணை கட்டிவிட்டு, இரண்டாவது தவணையை கட்ட நேரம் இல்லாமல் அந்த ஏஜெண்டிடம் கொடுத்து இருக்கிறார். அந்த புண்ணியவான் கட்டாமல் விட்டுவிட்டார். ஜார்ஜ் இறந்த பிறகு அந்த பணம் வருமென்று நினைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவிக்கு பணம் கட்டாமல் விட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அது சம்பந்தமாக இன்னமும் அந்த ஏஜெண்டிடம் போராடி கொண்டு இருக்கிறார்களே ஒழிய பணம் வரும் என்ற நம்பிக்கை இல்லை.

3. புது வீடு மாத தவணையில் கடனாக வாங்கியதால் அதற்கும் இவர்கள் இனி தவணையில் பணம் கட்டியாக வேண்டும். அதற்கும் தீவிபத்து, இயற்கை சீற்றம் பாதிப்பு சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் எதுவும் எடுக்கவில்லை.

4. எல்லாவற்றிற்கும் மேல் சிகிரேட் பிடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் சொல்லிய பிறகும் , யாருக்கும் தெரியாமல் சிகிரேட் பிடித்ததே ஜார்ஜ்'ஜின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. 42 வயதில் மரணம் !.

ஆக அவருடைய மனைவி எதை தொட்டாலும் பிரச்சனை என்ற நிலையில் இருக்கிறார். சுத்தமாக அவருக்கு இப்போது வருமானம் இல்லை, படித்திருக்கிறார். வேலைக்கு செல்லலாம் என்றாலும் , ஜார்ஜ் ஜின் திடீர் இழப்பு அவரை வெகுவாக பாதித்துள்ளது. வெளியில் என்னால் செல்லவே முடியாது கவிதா என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். 2ஆம் வகுப்பு படிக்கும் சிறு குழந்தை, அவனுக்கும் நல்ல உடல்நிலை இல்லை. அடிக்கடி வீசிங் தொல்லையால் சிறு வயது முதலே அவதிப்பட்டு கொண்டு இருப்பான். அவனை கவனிக்கவே முழு நேரமும் முன்பு இவருக்கு சரியாக இருக்கும், இப்போது கூடுதலாக ஜார்ஜ் ஜின் பொறுப்புகள் அத்தனையும் இவருக்கு வந்துள்ளது. எப்படி சமாளிக்க போகிறார் என்பதை விட, எளிதாக சமாளிக்க ஜார்ஜ் எதையும் செய்துவிட்டு போகவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.

தயவு செய்து உங்களை நம்பி வரும் பெண்களுக்கு தேவையானவற்றை செய்து வையுங்கள் :-

1. திருமணம் ஆனவுடன், உங்கள் வீட்டிலிருந்து உங்கள் பெயரையும், பெண் வீட்டிலிருந்து அவருடைய பெயரையும் பிரித்து ரேஷன் கார்டு உங்களின் பெயரில் வாங்குங்கள். கூட்டு குடும்பமாக இருந்தாலும் இதை செய்துவிடுவது நல்லது.

2. புதுப்பிக்க வேண்டியவை அணைத்தையும், முன்கூட்டியே தேதி குறித்து வைத்து புதுப்பித்து விடுங்கள். பாஸ்போர்டு, வீடு, வண்டிக்கு எடுத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிஸிகள் முதலானவை. கட்ட வேண்டிய வரிகள் ஏதாவது இருப்பின் நேரத்திற்கு கட்டுங்கள்.

3. இது வரையில் இன்சூரன்ஸ் பாலிசி, சேமிப்பு கணக்குகளில் நாமினி பெயர்களில் உங்களது பெற்றோர், உடன் பிறந்தோர் பெயர் இருந்தால், அதனை உடனடியாக மனைவி மற்றும் குழந்தையின் பெயருக்கு மாற்றம் செய்துவிடுங்கள்.

4. இதை தவிர்த்து மனைவிக்கு ஓரளவு வெளிஉலக நடப்புகளை அவ்வப்போது கற்றுக்கொடுத்தும், பழக்கப்படுத்தியும் வையுங்கள். அவர் எதையும் தனியாக செய்யும் திறனை வளர்த்து விடுங்கள்.

மேலும் சில முன்னவே பதிவிட்டு இருக்கிறேன் தயவு செய்து அதையும் படித்து இதுவரையில் யாரும் எதுவும் செய்யாமல் விட்டுவைத்து இருந்தால், உடனே செய்துவிடுங்கள்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியது..
புகைப்பிடித்தல் பற்றிய பதிவு

அணில் குட்டி அனிதா : ம்ம் அம்மணி சொல்லிட்டாங்க செய்துடுங்க. .அப்புறம் அம்மணி எப்படி வூட்டுக்காரு எவ்வளவு சொல்லி கொடுத்தாலும் மக்காவே இருக்காங்கன்னு கேட்டு எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

பீட்டர் தாத்ஸ் : The fear of death follows from the fear of life. A man who lives fully is prepared to die at any time. ~Mark Twain

விவாகரத்து தேவையா..?!!

குழந்தைகள் இருக்கும் தம்பதியினர் ரொம்பவே யோசித்து "வேண்டாம்" என்று முடிவெடுப்பது சிறந்தது. நம்மிடையே திருமணபந்தம் என்பது அத்தனை எளிதாக விட்டுவிட்டு வந்துவிட கூடியது அல்ல. அவசர முடிவுகள் தீராத வேதனையையும் வலியையும் இப்போது இருப்பதை விட அதிகமாகவே தரும். அதை அனுபவித்து தெரிந்துக்கொள்வதை விட, புத்திசாலியாக முன் யோசனையோடு நடந்துக்கொள்வது நமக்கும் , நம்மை சார்ந்தவர்களுக்கும் அமைதியையும், நிம்மதியையும் தரும்.

கணவன் மனைவி இருவரில் யாரோ ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ தவறுகள், பிரச்சனைகள் இருக்கலாம், அதை பேசியோ அல்லது பேசாமல் இருந்தோ தீர்த்துக்கொள்ள வேண்டுமே அன்றி விவாகரத்து வரை செல்வது இருவரின் இயலாமையை மட்டுமே காட்டுகிறது. தவறு செய்யாத மனிதன் இல்லை, எப்படிப்பட்ட தவறாக வேண்டுமானாலும் இருக்கட்டும், முதலில் ஒருவர் செய்யும் தவறை கூட தவறு என்று மற்றவரால் முடிவு செய்ய முடியாது. செய்பவர், அதை தவறு என்று எண்ணியிருந்தால் செய்திருக்கவே மாட்டார் என்பது ஒரு புறம் இருக்க, தவறு செய்தவராக சொல்லப்படுபவரும் மற்றவரின் பழக்கவழக்கம், நடத்தை, குணநலன் களால் கூட தவறு செய்திருக்கக்கூடும்.

எந்த ஒரு விஷயத்திற்குமே கால அவகாசம் என்பது ரொம்ப முக்கியம். அதை மற்றவருக்கு கொடுப்பதில் நாம் குறைந்து போவதில்லை. விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இவற்றை தாண்டி, இந்த வாழ்க்கையை இவரிடம் வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்ற பிடிவாதமும் இருந்துவிட்டாலே போதும் வென்று வந்துவிடுவோம். அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சவால் களை சந்திக்கிறோம், வெற்றி பெறுகிறோம், வாழ்க்கையில் கூட அப்படி ஒரு சவால் நமக்கு தினமும் இருக்கிறது என்று நினைத்து வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.

இன்று தவறாக தெரியும் ஒரு விஷயம் நாளை வேறு மாதிரியாக தெரியலாம், அல்லது நல்லதாக தெரிபவை நாளை பிரச்சனைகளை உண்டு பண்ண கூடியதாக இருக்கலாம். நாளை வரும் போது, நேற்றே நன்றாக இருந்ததே என தோன்றும். ஆக, எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், சூழ்நிலை கைதி ஆகிவிடாமல் இருப்பது ரொம்பவே முக்கியம். அப்படியே சூழ்நிலை கைதி ஆகி விட்டாலும், ஆகி இருக்கிறோம் என்று அறிவை பயன்படுத்தி உணர்பவராக இருந்துவிட்டால், extreme decisions எதையும் எடுக்காமல் தள்ளியாவது போடுவோம். அமைதிக்காப்போம்.

பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இடத்தில், முடிவுகளை உடனே எடுக்காமல், கொஞ்சக்காலம் தள்ளி போட்டு வைப்பது தான் நல்லது, மனிதன் மனிதனோடு தான் வாழ்கிறான், மிருகங்களோடு வாழவில்லை, அவை எந்த நேரத்தில் என்ன செய்துவிடும் என்று ஒரு அச்சத்தில் வாழ வேண்டியதில்லையே. அவற்றைக்கூட பழக்கி நம் வழிக்கு கொண்டு வந்துவிட முடியும் என்பதை பார்த்திருக்கிறோம்.. மனிதனை முடியாதா என்ன? முடியாமல் கூட இருக்கட்டுமே, என் வழி இது, உன் வழி அது என்று அவரவர் வழியில் அவரவர் இருந்துவிட முடியும், விவாகரத்து பெற்று தான் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.

அம்மா அப்பா இல்லாமல் அல்லது இருவரில் ஒருவர் இல்லாமல் வளரும் குழந்தையின் மனநிலை மோசமாக பாதிக்கப்படும். மனதளவில் எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை ஓரளவு அறிந்தவள் நான். பெற்றோர் இருக்கும் குழந்தைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளப்படுவது சரியில்லை. மேலும் உங்களுடைய பிரச்சனைகளால் குழந்தை ஏன் பாதிக்கப்பட வேண்டும். அந்த குழந்தை என்ன செய்தது? ஒன்றும் அறியாத வயதில் ஊர் பேசும் பேச்சிலும், உறவினர்களின் ஏச்சிலும், பரிதாப பார்வைகளாலும் செய்வதறியாது பேச்சற்று போய், தனக்குள்ளே பேசி, தனக்குள்ளேயே அழுது, தனக்குள்ளேயே முடிவுகளை எடுத்து, சமுதாயத்தின் மீது நம்பிக்கை அற்று, யாரை கண்டாலும் அவரின் பார்வை என் மீது எப்படி இருக்கிறது என்ற ஆராய்ந்து........... நீண்டு கொண்டே போகும் பட்டியலுக்கு முடிவு இல்லை.

இந்த பாதிப்பு இத்துடன் முடிந்து விடுவதில்லை, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, திருமணம் முடிந்து, கணவர் அல்லது மனைவி வீட்டில் இதை வைத்து உற்றார் உறவினர் பேசும் பேச்சுகள், சிலர் நேரடியாக வந்தும் கேட்பார்கள், அவர்களுக்கு பதில் சொல்லவே தர்ம சங்கடமாக இருக்கும். இருப்பினும் எதையோ சொல்லி மழுப்பி கெளரவத்தை காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவர்.

மனதளவில் குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்க, நமக்கு என்ன உரிமை இருக்கு?. அவர்கள் விரும்பி இந்த உலகத்திற்கு வரவில்லை, நம்மால் தான் அவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை எந்தவிதத்திலும் நாம் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது சரியில்லை. எனக்கு தெரிந்து இதற்கு குழந்தைகளுக்காக தனி சட்டம் கொண்டுவந்தால் கூட சந்தோஷப்படுவேன். அம்மா, அப்பா இருவரிடமும் வளர நினைக்கும் குழந்தைக்காக பெற்றோர் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் சந்தோஷப்படுவேன்.

குழந்தையை பொறுத்தவரை அம்மா, அப்பா இருவருமே தேவையாக இருக்கிறார்கள். அதை பெற்றவர்கள் உணர்ந்துவிட்டாலே போதும். நான் மட்டும் போதும் என்று அம்மாவோ, அப்பாவோ நினைத்தால், அது குழந்தையின் விருப்பமாக இருக்காது, அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடிய முதிர்ச்சி குழந்தைக்கும் இருக்காது.

எங்கள் பக்கத்துவீட்டில் தீடிரென்று பிரச்சனையில் பிரிந்து சென்றுவிட்டார் குழந்தையின் அப்பா. அது விஷயமாக பேச என்னை அந்த பெண் அழைத்த பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர்களின் 4 வயது பெண் குழந்தை நடுவே வந்து "அம்மா எனக்கு அச்சன் வேணும்ம்மா.. அச்சன் நம்மளோடையே இருக்கட்டும் மா.. அச்சன் எப்ப வரும் மா என்று கேட்க... கோபம் தாங்க முடியாமல் , அந்த பெண் அந்த குழந்தையை அடித்து நொறுக்கிவிட்டு சொன்னது, "ஏண்டி உனக்கு எல்லாம் நான் செய்யறேன் , உனக்காக தான் வேலைக்கு போறேன், உன்னை விட்டு ஓடி போன அப்பாவை வேணும்னா கேக்கற.". ன்ற விழந்த அடி இருக்கே.. குழந்தை பாவம் பிரச்சனை தெரியவில்லை, அதற்கு தேவை அப்பா ..அவ்வளவே! அழுதுக்கொண்டு அம்மாவின் மடியில் வந்து பேசாமல் படுத்துக்கொண்டது. குழந்தைக்கே இந்த அடி என்றால், நான் அவரிடம் சேர்ந்து இருங்கள் என்று எப்படி சொல்வது என்று அவர் பேசுவதை கேட்டுவிட்டு வந்துவிட்டேன். :(

ஏன் பெற்றோர் குழந்தையின் இடத்தில் இருந்து அதன் தேவை என்ன என்பதை பார்க்க தவறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் பிரச்சனையே அவர்களுக்கு முதன்மையாக தெரிகிறது.

இதை தவிர்த்து, நம் வாழ்க்கையில் மூன்றாம் மனிதர் தலையீடு இருக்கவே கூடாது. இது என் வாழ்க்கை, இதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று இருவருக்குமே இருக்க வேண்டும், எது சரி, எது தவறு என்று நம் அறிவை கொண்டு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போதே விவாகரத்து ஒரு முடிவாகாது என்று தெரிந்துவிடும், மூன்றாம் ஒருவரின் தலையீடு இருக்கும் போது அது பிரிவை அதிகப்படுத்தும். அந்த மூன்றாமவர், இருவரின் பெற்றோராக இருக்கலாம், அவர்கள் தன்னை சார்ந்தவர்களுக்கு அந்த நேர பிரச்சனைகளின் சாராம்சத்தை வைத்து முடிவு சொல்லுவார்கள். அடுத்து நண்பர்கள், உறவினர்கள் என்று அவரவருக்கு தெரிந்ததை சொல்லி மேலும் மேலும் நம் மனதை குழப்பியோ பிரச்சனைகளை அதிகப்படுத்தியோ விடுவார்கள் அன்றி குறையாது. அதனால் நம் வாழ்க்கையை பற்றி, நாம் முடிவு செய்ய வேண்டும், அதுவும் யாருடைய influence யையும் நமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு முடிவுகள் எடுக்க க்கூடாது, அப்படிப்பட்ட முடிவுகள் எதிர்காலத்தில், நமக்கே பிரச்சனையாக தான் முடியும். நம்மை நாமே நடுநிலையாக வைத்து யோசித்து முடிவு செய்ய வேண்டும். நாளை நமக்காக பேச யாரும் நம் வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து முடிவுகள் எடுப்பது நலம்.

விவாகரத்து வேண்டாமே..!! முடிந்தவரை வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே....அப்படியே இல்லை முடியவே முடியாது என்ற ஈகோ அதிகமாக இருந்தால் இப்படி க்கூட சொல்லலாம், கணவருக்கோ, மனைவிக்கோ நாம் வாழ்வளித்தாக நினைத்து பெருமைப்பட்டும் கொள்ளலாம்.

அணில் குட்டி அனிதா : ச்சோஓஓ கடவுளே.. ச்சும்மா இருன்னா எங்க??? சொன்ன பேச்சு கேக்கக்கூடாதுன்னே பொறந்த ஜென்மம் கவியோ?!

பீட்டர்தாத்ஸ் :"The ideal that marriage aims at is that of spiritual union through the physical. The human love that it incarnates is intended to serve as a stepping stone to divine or universal love." - Gandhi