உடன் பிறவா சகோதரி, சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்று “No - Tobacco Day” இன்றிலிருந்து புகை இலை/புகைபிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்யுங்கள் (அ) குறைத்து கொள்ளவாவது முயற்சி செய்யுங்கள். உங்களின் அன்பானவர்களுக்கு இதனை சொல்லுங்கள்.
புகை எதற்காக பிடிக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளவும் ஆசை.. அதற்கான சரியான விடை இன்னமும் எனக்கு தெரியவில்லை...பதிப்பை படிக்கும் அனைவரும், அதற்கான விளக்கத்தை இங்கு அளிக்கவும்.. உங்கள் பதிலிலிருந்து நான் என் அடுத்த பதிவை தொடருவேன்..
இந்த பதிப்பை படித்த..அனைவருக்கும்...நன்றி...
Anti-Tobacco Day – ஒரு வேண்டுகோள்..
Posted by : கவிதா | Kavitha
on 11:22
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
39 - பார்வையிட்டவர்கள்:
ம்ம்ம்ம்
நல்ல எண்ணம்..
சில ஜென்மங்கள் அதுவா திருந்தினாத்தான் உண்டு.. இருங்க ஒரு தம் போட்டுவிட்டு வந்து தொடர்கிறேன்...
:-)
யாழிசை தாத்தா, ஏன் தம் போடறீங்கன்னு சொன்னா நானும்..சே சே.. நான் தம் போட மாட்டேன்..
சும்மா தெரிஞ்சுவுக்குவேன்..அதுல அடுத்த பதிவு போடுவேன்.. தொடங்கி வையுங்களேன்..?!!
நல்ல பதிவு. பாராட்டுக்கள் கவிதா.
//புகை எதற்காக பிடிக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளவும் ஆசை.. // கேட்டு சொல்கிறேன் கவிதா. (அப்பா... நான் தம்மடிக்க மாட்டேன்னு சொல்லியாச்சு.) :)
எங்கே இந்த அணில்குட்டி. கவிதா எதாழ்ழும் உருப்படியா எழுதரப்போ பாராட்ட மனசு வராதே அதுக்கு.
அப்படியே புகைத்துத்தான் தொலைப்பேன் என்றால், பக்கத்தில் யாரும் இல்லாமல் பார்த்து இழுக்கச் சொல்லுங்கள். அவர்களுடைய டிக்கெட்டில், இலவச இணைப்பாய் அருகில் இருப்பவர்களையும் இழுத்துச் சென்றுவிடுவார்கள். வேறெங்கே .... அங்கேதான்!
//பக்கத்தில் யாரும் இல்லாமல் பார்த்து இழுக்கச் சொல்லுங்கள். அவர்களுடைய டிக்கெட்டில், இலவச இணைப்பாய் அருகில் இருப்பவர்களையும் இழுத்துச் சென்றுவிடுவார்கள். வேறெங்கே .... அங்கேதான்//
சரிதான்..இருந்தாலும் சுயநலமா நாம் இருக்க வேண்டாம்..அவர்களையும் நிறுத்த சொல்வதுதானே சரி..
//எங்கே இந்த அணில்குட்டி. கவிதா எதாழ்ழும் உருப்படியா எழுதரப்போ பாராட்ட மனசு வராதே அதுக்கு//
இல்லை இன்னைக்கு அணில் குட்டி லீவு..அதான் ஒரு கருத்தும் இல்லை.. நல்லதுதானே விடுங்கள்! இல்லைனா.. நானே ஏதோ தம் அடிக்கற மாதிரி buildup பண்ணாலும் பண்ணி ஆளை கவுத்துடும்..!!
எனக்கு புகைப் பழக்கம் இல்லை. ஆகவே இந்த பின்னூட்டம் மூலம் நானும் பிறரை புகை பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். புகை பிடிப்பதை விட்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டு எப்பொழுதிருந்து நிறுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் கவிதா அவர்களில் பதிவை படித்ததில் இருந்து நிறுத்துங்கள்.(அதாவது எப்ப இருந்து stop பண்ணலாம்ன்னு starting trouble இருக்கறவங்க இந்த பதிவை starting pointa வைச்சுட்டு நிப்பாட்டீடுங்கன்னு சொல்றேன்).
உடன் பிறவா சகோதரி சொல்லியிருக்காங்க கேக்கலை ஆட்டோ வரும்.
//அதாவது எப்ப இருந்து stop பண்ணலாம்ன்னு starting trouble இருக்கறவங்க இந்த பதிவை starting pointa வைச்சுட்டு நிப்பாட்டீடுங்கன்னு சொல்றேன்).//
நன்றி குமரன்
//உடன் பிறவா சகோதரி சொல்லியிருக்காங்க கேக்கலை ஆட்டோ வரும்.//
அடடா..நான் ஆட்டோ அனுப்புர விஷயத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்குன்னா..நல்ல விஷயத்துக்காக அனுப்பிட வேண்டியது தான்..முதல் ஆள்..வேற யாரும் இல்ல..நம்ம பாலா..தான்..
முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்...இருமல் கூட வரும்...அப்புறம் கொஞ்சம் கஷ்டப்பட்டு இழுத்தால் லைட்டா தலை சுத்தி மயக்கம் வருவது போல் தோன்றும்..அப்புறம் கொஞ்சம் சுமாராக இருக்கும்...
காற்று உள்ளே போய் வருவதை உணர முடியும்..
சில ஆண்டுகளுக்கு பிறகு : சாப்பிட்டு ஒரு தம் கட்டினால் தான் திருப்தியாக இருக்கும்..
ரவி, நான் கேட்டது புகை ஏன் பிடிக்கறீங்கன்னு?!! நீங்க சொல்லி இருக்கறது புகை எப்படி பிடிக்கனும்னு.. அதுவும்..நான் நிறுத்துங்கன்னு சொன்னா..நீங்க எப்படி ஆரம்பிக்கறதுன்னு சொல்லியிருக்கீங்க..
ஆமா..இந்த செய்முறை விளக்கம் யாருக்கு... எனக்கா.. ?!!
அதை சொல்லாமல் மழுப்புவதற்க்கு தான் அப்படி எழுதுவது...
சரி..புகைபிடிக்க காரணம் : தனிமையை விரட்ட...
இது பற்றி ஒரு கவியரங்கமே நடந்துள்ளது.
பார்க்க: http://geeths.info/archives/93
நன்றி சிபி, url பார்க்கிறேன்..
//சரி..புகைபிடிக்க காரணம் : தனிமையை விரட்ட... //
நன்பர்களே...ரவி சொல்வது..சரியா?!!
நானும் புகை பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர்கள் சிலர் கேட்பதுண்டு.
"அப்படு சிகரெட் குடிச்சு என்னத்தை காணுற நீ"ன்னு. என்னிடமிருந்து வரும் பதில்
"அதைக் கண்டு பிடிக்கத்தான் குடிச்சிகிட்டிருக்கேன், கண்டு பிடிச்சவுடன் நானே உங்களுக்கு சொல்றேன்"னு
புகைப் பிடிப்பது கூட இருக்கவங்களை விரட்ட இல்லையா?
இவர்கள் புகைப்பதை தடுக்க ஓர் ஐடியா!
சிகரெட்டினுள் இருக்கும் புகையிலைத்தூளினை கீழே கொட்டிவிட்டு அதற்கு பதிலாக, வேப்பமர இலைகளைத் தூளாக்கி, நிரப்பி விட்டால், இரண்டு இழுப்புக்கு மேல் கட்டாயம் இழுக்கமாட்டார்கள் (அய்யா சாமிகளா அடிக்க வராதீங்கப்பா)
//சரி..புகைபிடிக்க காரணம் : தனிமையை விரட்ட... //
அப்ப பொண்ணுங்க கூட கடலைப்போடும் போதுகூட சிலபேர் தம்மடிக்கிறாங்களே? (அது தனிமையா?) :))
அன்பு சகோதரி!
நான் புகை பிடிப்பதில்லை. இப் பழக்கத்திற்கடிமையானவர்கள் பலர் பல காரணம் கூறுவார்கள். இதை நிறுத்த வேண்டுமென மனசார விரும்புபவர்கள்!!முயன்றால் பயனுண்டு.அவர்கள் உடல் நலமும்; அவர்கள் குடும்பத்தவர் உடல் நலத்துடன்;பொருளாதார நலனும்; இதில் தங்கியுள்ளது இன்பதனை ;நினைத்துப் பார்த்தால் முடியும்.
யோகன் -பாரிஸ்
//சரி..புகைபிடிக்க காரணம் : தனிமையை விரட்ட... //
Social smokers தான் இங்கே ஜாஸ்தீங்கோ..
கவிதா,
உங்களின் இந்த கேள்விக்கு விடைகளை பல கோணங்களில் இருந்து அணுகலாம். விஞ்ஞான, ஊளவியல், தனிமனித (personal thoughts) ரீதியாக
என்னை கேட்டால் சிகரெட்டை போல் நல்ல நண்பன் இல்லை (புகைப்பவர்களுக்கு).
I would rather put it in this statment. 'Cigarette smoking gives a complete satisfied feeling in the things you do' . By saying this i am not vindicating for smoker communinity.
//சிகரெட்டினுள் இருக்கும் புகையிலைத்தூளினை கீழே கொட்டிவிட்டு அதற்கு பதிலாக, வேப்பமர இலைகளைத் தூளாக்கி, நிரப்பி விட்டால், இரண்டு இழுப்புக்கு மேல் கட்டாயம் இழுக்கமாட்டார்கள்//
சூப்பர் ஐடியா நாகு..
ம்ம்..கடலை போடும் போது..தம் அடிப்பாங்களா..?!!
//என்னை கேட்டால் சிகரெட்டை போல் நல்ல நண்பன் இல்லை (புகைப்பவர்களுக்கு).
I would rather put it in this statment. 'Cigarette smoking gives a complete satisfied feeling in the things you do' . By saying this i am not vindicating for smoker communinity. //
கார்த்திக், நாம் அப்படி நினைச்சிக்கிறோம்..அவ்வளவுதான்..
//அன்பு சகோதரி!
நான் புகை பிடிப்பதில்லை. இப் பழக்கத்திற்கடிமையானவர்கள் பலர் பல காரணம் கூறுவார்கள். இதை நிறுத்த வேண்டுமென மனசார விரும்புபவர்கள்!!முயன்றால் பயனுண்டு.அவர்கள் உடல் நலமும்; அவர்கள் குடும்பத்தவர் உடல் நலத்துடன்;பொருளாதார நலனும்; இதில் தங்கியுள்ளது இன்பதனை ;நினைத்துப் பார்த்தால் முடியும்.//
நன்றி, யோகன், நீங்கள் சொல்வதும் சரியே..இருந்தாலும்...இப்படி நாம் அடிக்கடி சொல்லி வந்தால், சிலர் மனம் மாறக்கூடும் இல்லையா?!!
//Social smokers தான் இங்கே ஜாஸ்தீங்கோ.. //
அப்படி இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.. குப்புசாமி சார்...!
//புகைப் பிடிப்பது கூட இருக்கவங்களை விரட்ட இல்லையா?//
தேவ், இப்படி புது ஐடியா எல்லாம் குடுத்து..புதுசா யாரையும் புடிக்க வைச்சுடாதீங்க..
//நானும் புகை பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர்கள் சிலர் கேட்பதுண்டு. //
சிபி, சீக்கிரம் கண்டுபிடிங்க..இல்லைனா.. உங்கள நாங்க கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை வந்துட போகுது..
////Social smokers தான் இங்கே ஜாஸ்தீங்கோ.. //
அப்படி இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.. குப்புசாமி சார்...!//
என்னங்க கவிதா, கவுத்துட்டீங்க?!! சோஷியல் ஸ்மோக்கர்ஸ் தானே அடுத்த கட்ட செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகிறாங்க?!!
என்னது? இருங்க இருங்க.. சோஷியல் ஸ்மோக்கிங்னு எதைச் சொல்றீங்க?
" எல்லாரும் பிடிக்கறாங்க... நானும் பிடிக்கிறேன்.."
"என் மானேஜர் தம்மடிக்கக் கூப்பிடறாரு.. போனாத்தான் மரியாதையா இருக்கும்.. "
இப்படிச் சொல்றவங்களைத் தானே? (சோஷியல் காரணங்களுக்காக)
//என்னங்க கவிதா, கவுத்துட்டீங்க?!! சோஷியல் ஸ்மோக்கர்ஸ் தானே அடுத்த கட்ட செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகிறாங்க?!!//
பொன்ஸ், எப்போதோ ஒரு தரம்னு சொல்லறதனால..சரின்னு சொல்லமுடியாது தான்..ஆனா தொடர்ச்சியா புகைக்கறவங்களுக்கு இது எவ்வளவோ தேவலையே?!!
ஆமா என்ன பொன்ஸ் நீங்களும் நம்ம சந்தோஷ், கார்த்திக் மாதிரி 12 மணிக்கு மேல இராத்திரியில கமண்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க..?!!
//ஆமா என்ன பொன்ஸ் நீங்களும் நம்ம சந்தோஷ், கார்த்திக் மாதிரி 12 மணிக்கு மேல இராத்திரியில கமண்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க..?!!
//
இங்க இன்னும் 12 ஆகலை கவிதா.. சம்பள நாளாச்சே.. அதான் கண்ணால பாத்துட்டுத் தூங்கலாம்னு :)
//இங்க இன்னும் 12 ஆகலை கவிதா.. சம்பள நாளாச்சே.. அதான் கண்ணால பாத்துட்டுத் தூங்கலாம்னு :) //
பொன்ஸ்..Online checking ஆ?!!
ம்ம்ம் ஒரு நைட் தம் போட்டே பெரிய சண்டை நடந்திச்சி .அதுக்குள்ள இன்னோரு சண்டையா! http://geeths.info/archives/93
கவிதா அக்கா,
நான் புகைப்பிடிப்பதில்லை.
மது அருந்துவது இல்லை.
மாமிசம் உண்பது இல்லை.
இருப்பினும், தமிழ்ச்சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, இப்பதிவை இட்டதிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இப்பதிவைப் பார்த்து ஒருவராவது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவார்களயின் , அதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் முதல் ஆள் நானாகத்தானிருப்பேன்.
நன்றிகள்.
அன்புடன்
வெற்றி
நல்ல வேண்டுகோள் கவிதா..
இன்றோடு புகைபிடிப்பதை விட்டு 155 நாட்களாகிறது. முதல் ஒரு வாரம் சிரமமாக இருந்தாலும் இப்போது நன்றாக இருக்கிறது. நான் புகைப்பழக்கத்தை விட்டுவிட தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியும் பெற்ற என் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்
பாராட்டுக்கள் முத்துக்குமரன். புகைபிடிக்காமல் இருப்பது பெரிய விசயமல்ல. ஆனால், புகைபிடித்துவிட்டு அதனை நிறுத்தியது ரொம்ப பாராட்டவேண்டிய விசயம். என்னுடைய நண்பர்கள் சிலரை சண்டைபோட்டு நிறுத்த முயன்றேன். எல்லாம் ரெண்டுநாளைக்குத்தான். அப்புறமா, அந்த பிரச்சனை, இந்தபிரச்சனைன்னு ஆரம்பிச்சுட்டானுங்க... போங்கடான்னு விட்டுட்டேன்.
ஆனா நீங்க...விட்டது விட்டதாகவே இருக்கட்டும்.
//இன்றோடு புகைபிடிப்பதை விட்டு 155 நாட்களாகிறது. முதல் ஒரு வாரம் சிரமமாக இருந்தாலும் இப்போது நன்றாக இருக்கிறது. நான் புகைப்பழக்கத்தை விட்டுவிட தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியும் பெற்ற என் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் //
Thanks muthukumaran, great news, please do follow...
//தமிழ்ச்சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, இப்பதிவை இட்டதிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இப்பதிவைப் பார்த்து ஒருவராவது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவார்களயின் , அதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் முதல் ஆள் நானாகத்தானிருப்பேன்.//
Thanks Vettri
தங்களின் மேலான எண்ண்த்தைப் பாராட்டுகிறேன்,..
என் வகுப்பு தோழி ஒருவள் இப்படித்தான் அறிவுரை வழங்கிய வண்ணமிருப்பாள்..நாங்களும் சிரித்து பாட்டி ' எனக்கிண்டலடிப்போம்..ஆனால் ஓர் நாள் அவள் தந்தை சர்க்கரை மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டுப் பின் இறந்தார் என்று அறிந்து ...உறைந்து போனேன்..
வலி கண்ட இதயத்துக்குத்தானே உண்மைகள் புரியும்...
உங்கள் நல்ல இதயத்தைப்பாராட்டுகிறேன்....
வாழ்க !!!வளமுடன்.!!
நல்ல பதிவுங்க. இதைப்படிச்சிட்டு ஒருத்தர் அட்லீஸ்டு முழுவதும் இல்லாட்டியும் ஒரு சிக்ரேட் பிடிப்பதை தவிர்த்தாலும் அது இந்த பதிவின் வெற்றியே.
//என் வகுப்பு தோழி ஒருவள் இப்படித்தான் அறிவுரை வழங்கிய வண்ணமிருப்பாள்..நாங்களும் சிரித்து பாட்டி ' எனக்கிண்டலடிப்போம்..ஆனால் ஓர் நாள் அவள் தந்தை சர்க்கரை மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டுப் பின் இறந்தார் என்று அறிந்து ...உறைந்து போனேன்..
வலி கண்ட இதயத்துக்குத்தானே உண்மைகள் புரியும்...
உங்கள் நல்ல இதயத்தைப்பாராட்டுகிறேன்....
வாழ்க !!!வளமுடன்.!! //
நன்றி தமிழி.. என் தந்தை கூட அப்படி தான் இறந்தார்... மூன்றாவது மாரடைப்பு வந்து ஆஸ்பித்திரியில் சேர்த்து சரியான பிறகு, அவரால் இந்த புகைபிடிக்கும் பழக்கத்தை விடமுடியாது, யாருக்கும் தெரியாமல் பாத்ரூமுக்குள் சென்று புகைத்து விட்டு வர..நான்காவது அடைப்பு வந்து இறந்து போனார்.. யாருக்கும் இது வரக்கூடாது என்பது என் தாழ்மையான எண்ணம்.
//நல்ல பதிவுங்க. இதைப்படிச்சிட்டு ஒருத்தர் அட்லீஸ்டு முழுவதும் இல்லாட்டியும் ஒரு சிக்ரேட் பிடிப்பதை தவிர்த்தாலும் அது இந்த பதிவின் வெற்றியே. //
நன்றி சந்தோஷ்,
Post a Comment