இன்று..

இனியவள் புனிதா

நட்பைப் பற்றி
நாலு வார்த்தை
சொல்லச் சொன்னாய்
எனக்குத் தெரிந்த
ஒற்றைச் சொல்
'நீ "

செந்தில் :

ஐயோடா.. என்னையும் ஒரு எழுத்தாளனா மதிச்சி என்கிட்ட எழுத சொல்லி கேட்ட உங்க மனசு ரொம்ப வெள்ளை..

உங்க தலைப்பைப் பார்த்தவுடனே எனக்கு நினைவுக்கு வந்த ஒரு விடயத்தை வார்த்தைகளா இங்க கொட்டியிருக்கேன்.. இது முன்னர் என் வாழ்வில் சூறாவளியாக வீசிய ஒரு விடயம்.. கருத்து மட்டும் அதே..
-----------------------------------
நண்பா..

அன்று
நீயும் நானும்
எச்சில் சோறு உண்டு
ஓர் சட்டைப் பகிர்ந்து
ஓரே அன்னை இல்லயே என
வருந்தினோம்.

இன்றோ
வழியில் நீ
விபத்தில் சிக்கிய போதும்
கடந்து செல்கிறேனே

நம்மை வகுத்த அவளின் மோகத்திலே..

சின்னஅம்மணி அகிலா

நட்பு என்பது செல்வம் போன்றது. சம்பாதிப்பது கூட சுலபம். தக்கவைத்துக்கொள்வது கடினம். நல்ல நட்பு என்பது வெவ்வேறு தெருக்களில் நடந்தாலும் ஒரே திசையை நோக்கி நடப்பது போன்றது. என்னைப்போன்று வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குடும்பத்தை விட்டு இருக்கிறோமே என்று நினைக்கும்போது நட்புகள்தாம் அதை மறக்கடிக்கின்றன.

கடைசியாக

இது தப்பா எனக்கு வந்திடுச்சு போலிருக்குங்க கவிதா என்றால் இல்லைங்க , உங்களுக்குதான் அனுப்பி இருக்கேன் என்று நம்மையும் மதித்து சொல்லுங்க என்று சொல்வதும் நட்பு :)

Maddy :

ஆயிரம் வேலை இருந்தாலும் அவன்/அவள் அழைக்கும் போது அதுவே முக்கியம் என்பதும், காலத்தின் சுழற்சியில் காணமல் போனாலும் அந்த கைபேசி அழைப்பில் கட்டி அணைக்கும் எண்ணமும், என்னுடையது என்ற எண்ணம் இல்லாமல் உனக்கும் தான் என்ற மனமும் ஏன்? எப்படி? எதற்கு? என ஆயிரம் கேள்விகள் கேட்காமல், உன் கவலையில் எனக்கும் பங்குண்டு என்று சொல்லாமல் சொல்லி அமைதியை அருகில் அமர்வதும், எண்பது வயதிலும் "டா" :"டீ" என்று அழைக்கும் சுதந்திரமும் எங்கே உள்ளதோ, அதுவே நட்பு.

குசும்பர் :கவி: :(((((((( ஏன் இப்படி?!! ப்ளான்க் மெயில் அனுப்பி வச்சி இருக்கீங்க..?!

குசும்பர் : :))) எனக்கு ஒன்னுமே தோணலங்க.. ஒக்கே....... இப்ப என்னா செய்யனும்?

கவி : நட்பு பத்தி சொல்லனும்..

குசும்பர் : காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடைசி வரை நீடித்திருக்கும் ஒரு உறவு தான் நட்பு

கவி : அவ்வளவுதானா..?

குசும்பர் : ஸ்ஸ்ஸ்ப்ப்பா இதை யோசிக்கவே மண்ட சூடாயிட்டு.. இது மாதிரி டஃப் கொஸ்டின் இனிமே கேட்டீங்க.... @$#$%#$^%$%&#@$###@$

கவி: அவ்வ்வ்வ்வ்வ்...!! இதுக்கு மேல குசும்பர் மிரட்டியதை வெளியில சொல்ல முடியாதுங்க. குசும்பரே நீங்களும் நானும் பிரண்ட்ஸ். .நோ நோ. .கொலவெறி மிரட்டல் ஒகே... !!அன்று 04.August.2006

மா.சிவகுமார்

நட்பு என்பது என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், உண்மையான நட்பு ஒன்றை பல கட்டங்களில் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன.

பள்ளியில் கிடைத்த நண்பன், அவன் வேறு பள்ளிக்குப் போய் விட்ட பிறகு ஏற்பட்ட வெறுமை, பல ஆண்டுகளாக நட்புகள் தவிர்த்து வாழ்ந்த பாலைவன நாட்கள், கல்லூரியில் கிடைத்த ஒரு நட்பு, அப்புறம் வேலையில் சேர்ந்த பிறகு மீண்டும் வெறுமை. பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சிறந்த நண்பனைக் கண்டு கொண்டு இன்று வரை, தொலைவாகப் போய் விட்டாலும், இளைப்பாறும் நிழலாக இருக்கும் சுகம்.

ஆமாம், என்னைப் பொறுத்த வரை நட்பு என்பது இளைப்பாறும் இடம். பாசாங்குகளை எல்லாம் துடைத்துப் போட்டு விட்டு முகமூடிகளை எல்லாம் கழற்றி விட்டு நாம் நாமாக இருக்கும் இடம் நட்பு. எந்த விதக் கேள்விகளும் இல்லாமல் நிபந்தனையற்ற அன்பு நட்பில் ஒன்றுதான் கிடைக்கிறது. இன்றைக்கும் என்னுடைய நண்பனுக்குத் தொலை பேசி என்ன வேண்டுமானாலும் பேசி மனதைக் கொட்டி விடும் சுவாதீனம் இருக்கிறது. அதுதான் நட்பின் கொடை. பல மாதங்கள் கழிந்து சந்தித்த பிறகு பிரியவே இல்லாதது போல பேச்சு தொடர்வது இந்த உறவில் மட்டும் நடக்கும் அற்புதம்.

இதை(நட்பை) விரிவு படுத்தி உலகெங்கும் இத்தகைய உறவாக மாற்றுவது சாத்தியம் என்று தோன்றுகிறது.

பெயர் வெளியிட விரும்பாத நண்பர்

எல்லா எல்லைகளையும் கடந்தது நட்பு என்கிற காலம் போய்..
நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்கிற காலத்தில் வாழ்கிறோம...கடன் நட்பை முறிக்கும் என்கிற வாசகம் சொல்லும் நட்பின் எல்லையை...நட்பு என்பது முள் செடியில் இருக்கும் ரோஜா, கண்னில் இருக்கும் கருவிழி என்பதெல்லாம--நம்முள் இருக்கும் யாதர்த்தத்திற்கு நாம் போட்டுக்கொள்ளும் முகமூடிகளே...

Friendship = Friendship

சந்தோஷத்தை தரும் பொய்யை விட உண்மை தரும் வலி மிகவும் இன்பமானது யாதர்த்தமானது....எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்குமான பதில்கள்தான் வெற்றிகளும் தோல்விகளும்........இதுதான் வாழ்க்கை என்று எடுத்துக்கொள்வதை விட இதுவும் வாழ்க்கை என்பது யாதர்த்தம்...

இங்கு காதலியின் தோல்வியை காதலின் தோல்வியாக சொல்லும் இளைஞர்கள் ஏராளம்....

தன் இயலாமையை சமுதாயத்தின் இயலாமையாக பார்க்கும் மக்கள் ஏராளம்.. ஏன் இந்த முரண்பாடு??? யதார்த்த வாழ்க்கைக்கு முரணாக வளர்க்கப்பட்டதன் விளைவு....நடப்பதை யார் அறிவார் என்று உளறிக்கொண்டிருப்பதை விட நடந்ததையாவது அறியும் குணம் வளரவேண்டும். குடித்தால் மட்டும்தான் போதையா... படித்தாலும் போதைதான் கவிதைகளை..

நட்பு தொடரும்...