ஆடி வெள்ளி என்று இல்லை, இந்த குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்கும் போதும் எல்லாம், நமக்கு உடம்பு ஆட்டம் கண்டு போகுது. பெரிய வேலை ஒன்றும் இல்லைதான். ஆனா அந்த அடுப்பு இருக்கே அடுப்பு.. அது தான் பெரிய பிரச்சனை.

எங்களது வீட்டில் கடைக்குட்டி மருமகள் நானே.. வருடாவருடம் யாராவது போன் செய்து அழைப்பார்கள், நைஸ் சாக அவர்களுடன் சேர்ந்து போயி, கோயிலையும், மக்களையும் சுத்தி பார்த்துவிட்டு, சைட் வேலை ஏதாவது இருந்தால் செய்து விட்டு, மூத்தார் குழந்தைகள், பேர குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டு இருந்தேன். எல்லாருக்கும் நான் ரொம்ப செல்லமாக(நோ பொறாமை ஹியர், எல்லாருக்கும் எல்லாமும் அமைந்துவிடுவதில்லை னு நீங்க எல்லாரும் முதல்ல புரிஞ்சிக்கனும்) இருந்ததால் அவர்களும் என்னை எதுவும் செய்ய விட்டதில்லை. அதனாலேயே பொங்கல் வைப்பது, இந்த மாவிளக்கு செய்வது போன்றவை தனியாக செய்ய வேண்டிய சூழ்நிலை வராமலே போயிவிட்டது. கற்றுக்கொள்ளவும் இல்லை.

இப்போது எல்லாம் அவரவருக்கு அவரவர் வேலைகள் பெரியதாகிவிட்டது, முன்பு போல் எல்லோரையும் அழைத்து செய்வதில்லை. நாமும் அப்படியே டீல் லில் விட்டு விடலாம் என்றால். தெய்வகுத்தம் ஆகி, அது நம்மோட கண்ணை குத்தினால் பரவாயில்லை. எப்போதாவது ஊரில் யாராவது மண்டையை போட்டுவிட்டால், அப்போது தெரியும், கவிதா செய்த தெய்வக்குத்ததினால் அவர் இறந்துவிட்டார் என்று நமக்கே சொல்லுவார்கள். "அடடா..!! இல்லைன்னா அவரு சாகாமையே இருந்து இருப்பாரு இல்லைன்னு ?! " கேட்க தோணும் ஆனா வெளியில சொல்ல முடியாது. ஏன்னா...அங்கே போனால் என் இஷ்டத்திற்கு நினைத்ததை எல்லாம் பேச முடியாதபடி என் வீட்டுக்காரர் இங்கேயே பெரிய பூட்டாக பூட்டி கூட்டி சென்று இருப்பார்.

சரி, நாம மேட்டருக்கு வருவோம், நமக்கு அத்துபடியானது குக்கர் பொங்கல். :) ம்ஹூம்.. ஆனா எங்க கோயிலுக்கு போனால் அடுப்பு மூட்டி, அங்கு இருக்கும் குச்சிகளை வைத்து எரிய வைத்து பொங்கல் செய்து முடிப்பதற்குள் ஆட்டம் கண்டு விடுகிறது. எனக்கு மட்டும் தான் இந்த அடுப்பு இப்படி புகைந்து கஷ்டம் கொடுக்கிறதா ? இல்லை எல்லோரும் அப்படியா என்று சுற்றும் முற்றும் பார்த்தால்.. ம்ம்..ஆமாம்.. :( எல்லாரும் ரொம்ப சுலமாக அடுப்பு எரிப்பதாகவே எனக்கு தெரிகிறது.

நிறைய வருஷம் மற்றவர்களை ஏமாற்றியே பழகிவிட்டதால் சாமி நம் அடுப்பை மட்டும் புகைய வைக்குது போல என்று நானே என்னை தேற்றிக்கொண்டு, நடுவே நடுவே , புகைச்சலில் கண்கள் சிவந்து கண்ணீர் மல்கி, மூக்கொழிகி துடைத்து (அதற்காக தனியா ஒரு துணி இங்க இருந்து எடுத்துட்டு போயிடுவேன், நாங்க எல்லாம் ரொம்ப உஷாரூஊஊ! ) போடுவதை பார்த்து சிரிப்பது மட்டும் இல்லாமல் சுத்தி சுத்தி எல்லா போஸ் களிலும் போட்டோ எடுக்கும் என்னை கட்டிக்கிட்டவர் ஒரு பக்கம் என்னை டென்ஷன் பண்ணுவார். இருந்தாலும் புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்று, டென்ஷனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஹி ஹி ஹி.. என்று சிரித்து நானும் போஸ் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.

எப்படியோ ஓவ்வொரு வருடமும் இந்த பொங்கல் வைப்பது பெரிய டார்கட் ஆக அமைந்து விட்டாலும், பூஜை முடிந்து பொங்கல் லை வினோயகம் செய்துவிட்டு வரும் என் கணவர், "என்னடி நீ செய்த பொங்கலுக்கு நிறைய டிமேன்ட் இருக்கு... பாரு எல்லாம் தீர்ந்து போச்சி, வீட்டுக்கு எடுத்து வச்சி இருக்கியா இல்லையா ?" என்று கேட்கும் போது, அவரு கிண்டல் செய்கிறாரா இல்லையா என்று தெரியாமலேயே (தெரிஞ்சிட்டாலும்!! ) , ரொம்பவே சந்தோஷத்தோட.. ம்ம்ம் எனக்கு தெரியுமே..!! . அது சூப்பர் டேஸ்ட்டா இருக்குன்னு..!! நவீனுக்காக கொஞ்சம் எடுத்து வைத்து விட்டேன்'ன்னு சொல்லுவேன்.

அடுத்து மாவிளக்கு - யார்ப்பா கண்டுபிடிச்சாங்க இதை எல்லாம். அந்த காலத்தில உரல் உலக்கை கொண்டு இடித்து தயார் செய்வாங்க. இப்ப இருக்கவே இருக்கு மிக்ஸி.. இந்த முறை செய்யும் போது, வெல்லம் அதிகமாகி ரவுண்டாக பிடிக்க வரவில்லை. தண்ணியாகிவிட்டது. வீட்டுக்காரர் நோட் செய்து கும்மும் முன் சரி செய்து விட வேண்டுமென்று, குடுகுடுவென்று ஆன்லைன் வந்தேன், யாராவது ஒரு மகராசி, மகராசன் உதவி செய்வாங்கன்னு நம்பி ஓடிவந்தேன், கிடைத்தவர், நம்ம முத்துலட்சுமி... கேட்டவுடன்.. "ஏன்ப்பா இது ஒரு மேட்டாரா. கொஞ்சம் அரிசி மாவு போட்டுக்கோங்க. .பிடிக்கவரும் என்று சொல்லி என்னை எப்படி வாழ்த்தினார் என்று பாருங்கள்.. :)

Muthulakshmi: செயிச்ச்ட்டு வெற்றித்திருமகளா வாங்க ப்பா திலகமிடறேன்..

நான் செயிச்ச்ட்டேன் முத்து சீக்கிரம் ஒடியாந்து வெற்றி திலகமிடுங்கள் !! :))))

மாவிளக்கு செய்முறை :(இது அடுத்த வருஷம் செய்ய எனக்காக நானே எழுதி வைத்துக்கொள்ளும் குறிப்பு) பச்சரசி முக்கால் ஆழாக்கு 2 மணி நேரம் ஊறவைத்து, கழுவி, உலரவைத்து, லேசாக ஈரப்பதமாக இருக்கும் போது மிக்ஸியில், ஒரு ஏலக்காய்(தோலெடுத்து) போட்டு நைசாக அரைக்கவேண்டும், மாவு நன்கு அரைந்தவுடன், கால் ஆழாக்குக்கும் சற்று குறைந்த அளவு வெல்லம்(பொடித்தது) போட்டு அதையும் ஒரு இரண்டு மூன்று சுற்றுகள் சுற்றி எடுத்து, உருண்டையாக பிடித்து, நடுவில் குழியிட்டு, நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றிவிடலாம். விளக்கை கோயில் ல போயி தான் ஏற்றனும்.

அணில் குட்டி அனிதா : ம்ம்... இதோடா.. .!! எங்க வெளக்க ஏத்தனும் னு எங்களுக்கு தெரியும் உங்க அளவுக்கு நாங்க எல்லாம் மக்கு மந்தாரம் இல்ல... கிளம்புங்க!!

பீட்டர் தாத்ஸ் : And it is time for those who talk about family values to start valuing families.
.