வெயில் படத்தில் வரும் “வெயிலோடு வெளையாடி “ பாட்டை பார்க்கும் போது எல்லாம் சிறு வயதில் நாங்கள் விளையாடிய விளையாட்டு நினைவுக்கு வருகிறது. எங்களுடைய மகனிடம் அதை எல்லாம் சுட்டிக்காட்டி பள்ளியிலாவது இப்படி விளையாடுவீர்களா என்று கேட்டேன். அவனோ.. “உன்னை மாதிரி நான் என்ன “கேவுருன்னு’ (அதாங்க நம்ம கேப்பங்கஞ்சி வைக்கறோமே அது) நினைச்சியா?.. ன்னு கேட்கிறான்.??
எத்தனை அற்புதமான விளயாட்டுக்கள்.
கோலி அடித்தே எங்கள் வீட்டு மதில் சுவரை ஓட்டை செய்துவிட்டு போன என் வயது சிறுவர்கள். அவர்களுடன் நானும் என் சின்ன அண்ணனும் சேர்ந்து நடுரோட்டில் கையை ரோட்டில் பதித்து ஜான் அளவு வைத்து அளந்து அளந்து விளையாடிய கோலி விளயாட்டு.
அண்ணனை போலவே எனக்கும் வேண்டும் என்று அழுது அடம் பிடித்து வாங்கிய பம்பரம், அதை ரோட்டில் அண்ணனுடன் சேர்ந்து வட்டத்துள்ளிலிருக்கும் அடுத்தவனின் பம்பரத்தை நம் பம்பரத்தால் குத்தி வெளியில் எடுக்க முயற்சி செய்த நாட்கள். என்னால் சரியாக குத்தி எடுக்க முடிந்ததில்லை. அதற்காக அண்ணனிடம் படு கேவலமாக திட்டு வாங்கியது. (அவங்க friends முன்னாடி அவருக்கு அசிங்கமா போய்டும்)
சோடா பாட்டில் மூடியின் விளிம்புகளை சுத்தியால் அடித்து விரித்து நடுவில் இரண்டு ஓட்டை போட்டு டொயன் நூல் சேர்த்து இழுத்து, மற்றவர்களின் நூலை அறுத்து விளயாடுவது.
கண்ணாடி எல்லாம் சேர்த்து வைத்து அரைத்து நூல் மாஞ்சா போட்டு, (அண்ணன் என்ன செய்தாலும் அங்கு நானும் பிரசண்ட். ஆகிவிடுவேன்.), பட்டம் விட நூல் தயார் செய்து அண்ணனுக்கு பட்டதை ஏற்ற உதவி செய்து விட்டு..மேலே போனவுடன் அதை வாங்கி சும்மாவாவது கையில் வைத்து க்கொண்டு, பட்டம் விட்டென் என்று சொல்லிக்கொண்டது...
பனஓலையில் திருப்பிபோட்டு உட்கார்ந்து ஒருவர் இழுக்க..பயணம் செய்தது
வேப்பங்காய் கொட்டையை கைவிரலின் வெளிப்புறம் வைத்து குத்தி ரத்தம் வர வைத்தது.
கல்லா மண்ணா விளையாட்டு, நொண்டி, ஓடிப்பிடித்தல்., சில்லி கல் வைத்து கட்டம் போட்டு நொண்டி அடித்து விளையாட்டு
பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கல்லாங்காய்
கூட்டாஞ்சோறு..
எங்கு மணலை கண்டாலும் இருவர் உட்கார்ந்து, குச்சியை அதில் மறைத்து விளையாடும் விளையாட்டு.....
ஒருவரை குனியவைத்து, ஓடி வந்து மேல் ஏறி குதித்து சென்று விளையாடுவது..
அண்ணனை போலவே மரம் ஏறி மேலிருந்து விழுந்து, முதுகு வளைந்து போக, அண்ணன் மேல இருந்து சிரிப்பாய் சிரித்தது..
பட்டாம்பூச்சி, தும்பி பிடித்து, அதை நூலால் கட்டி, மதில் சுவரில் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, அது பறக்க முடியாமல் தவிப்பதை ரசித்தது.....
ஆட்டை ஓட ஓட விரட்டி, பால் கறந்து விளையாடியது (எங்கவீட்டு ஆடு இல்லைங்க)
சொல்லிக்கொண்டே போகலாம்.....
இதில் எந்த விளையாட்டுமே என் மகன் விளையாட ஆர்வம் காட்டியதில்லை, தெரிந்து வைத்திருக்கவும் இல்லை என்றே நினைக்கிறேன்... தெரிந்தவை
டி.வி
கம்புயூட்டர்
தொலைபேசியில் ஒன்றைநாள் நண்பர்களுடன் பேச்சு
சினிமா (ஆங்கிலம், இந்தி மட்டுமே)
கிரிக்கெட்
கால்பந்து
Chess
கேரம்.
இதில் சொல்லிகொள்வது அவரு “hi-fi” நாங்க “கேவுரு“
அணில்குட்டி அனிதா :- என்ன கவி ரோட்டுல எல்லாம் போய் விளையாடுவீங்களா நீங்க? சரி உங்க புள்ளைய நீங்க இப்படி free ஆ ரோட்டுல விட்டு வளக்கறீங்களா? ரோட்டுக்கு அவரு போனவே..”என்ன ரோட்டுல உனக்கு வேலை” ன்னு கேக்கறீங்க?.. ஆனா அவரு உங்க “கேவுரு” விளையாட்டு எல்லாம் விளையாடலன்னு கவல வேற.. சரியா இல்லையே..?.. உங்க புள்ள டெக்னாலாஜி டெவலப் க்கு தகுந்த மாதிரி விளையாடறாரு.. எதுக்கு அவர பாத்து உங்களுக்கு பொறாமை சொல்லுங்க..?!
பீட்டர் தாத்ஸ் :- Many of life’s failures are men who did not realize how close they are to success when they gave up.
மறந்துபோன விளையாட்டுக்கள்
Posted by : கவிதா | Kavitha
on 11:52
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
15 - பார்வையிட்டவர்கள்:
நல்லா கேளு அணிலு. ஆனா கேட்கும் பொழுது கொஞ்சம் distance maintain பண்ணு உன் மேல விழுந்து உன்னை கொன்னுட போறாங்க :))..
சிறு வயது மற்றும் விளையாட்டுக்கள் குறித்த எழுத்துக்கள் உங்களது எனது சிறுவயதை நினைவு படுத்தியது. ஒரே ஒரு வித்தியாசம். நான் அங்கே அண்ணனாக இருந்தேன்!
பனை ஓலையில் பயணம், கூட்டாஞ்சோறு.. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, நீங்கள் நிச்சயம் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்!
//எனக்கு அந்த வேப்பங்கொட்டை நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா எதுக்காக பண்ணுவோம்னு ஞாபகமே இல்லை, அதுலையும் கை மொழியில பண்ணுவோம் - என்னதுக்கு - ஞாபகம் இருக்கா? ஒரு வேளை சும்மாதான் பண்ணுவமோ? :) //
மது இல்லை எனக்கும் எதுக்குன்னு ஞாபகம் இல்லை... யாரிடமாவது நிச்சயம் கேட்டு தெரிஞ்சிக்கனும்.. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்..
//நல்லா கேளு அணிலு. ஆனா கேட்கும் பொழுது கொஞ்சம் distance maintain பண்ணு உன் மேல விழுந்து உன்னை கொன்னுட போறாங்க :))..//
சந்தோஷ், ஒரு 2/ 3 பதிவா நம்மல என்னவோ ஒரு கொலைகார பெண்மணி ரேஞ்சுக்குக்கு வச்சு பார்க்க ஆரம்பிச்சிடாங்க.. நீங்களுமா?
//நீங்கள் நிச்சயம் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்! //
ரகு, ஆமாம் ரொம்ப தென் இல்லை- இங்க பக்கத்துல விழுப்புரம் தான் சொந்த ஊர், பிறந்தது, படித்தது..எல்லாமே அங்க தான்.. கல்லூரி மட்டுமெ சென்னை.. எத்திராஜ்.. :) , திருமணத்திற்கு பின் சென்னை ஊராகிப்போனது..
இப்போ இவைகள் எல்லாம் காணாம போச்சு .
கிராமத்திலேயும் இப்போ காய்ங்சு போன கம்மாய்க்குள்ள கிரிகெட் விளையாடுரதுதான் பேசன்.
வாங்க நாடோடி, கிராமத்திலும் கிரிக்கெட் தானா? நான் என்னவோ குழந்தைகள் இப்பவும் கிராமத்தில் இப்படி எல்லாம் விளையாடுகிறார்கள் என்றே நினைத்தேன்.. :(
kitti pul, naadu pudikurathu, ice boy, sudukai, oonan ithai sethukalam.
:-)))))
சிவா, என்னாச்சு தமிழ்??
நீங்க சொன்னதுல கிட்டிபுல் நானும் அண்ணனும் விளையாடினது இல்ல, இல்ல.. ஆனா மத்த பசங்க விளையாடுவாங்க.. பார்த்திருக்கிறேன்.. அது யார்மேலாவது பட்டு அடிபட்டுவிடும் என்பதால் வீட்டில் தடை.
ஐயோ ஐஸ் பாய் எப்படி மறந்தேன்?!! :)
ஆமா சுடுகாய் ?!! என்றால் என்ன அதுவும் தெரியாது..
தவிர..ஓநான் பிடித்து ம்ம்..அண்ணன் விளையாடுவாங்க எனக்கு பயம் !! :)
நண்டா நாடா?? நண்டா இருந்தா சரி.. தெரியும்..அதுவும் எனக்கு பயம்.. :)
அன்பின் கவிதா
வணக்கம், என்ன ஒரு கருத்தொற்றுமை பாருங்களேன், சற்று நாட்கள் முன்புதான் எங்களின் முத்தமிழ் குழுமத்தில் செல்வி.சில்வண்டு அவர்கள் தளிர்களின் விளையாட்டுக்கள் என்று ஒரு இழை போட்டு விளையாட்டுக்களை வரிசைப்படுத்த ஆரம்பித்தார், அதுதான் உங்கள் பதிவைக்கண்டதும் ஆச்சரியத்தில் அந்த பதிவின் சுட்டியையும் தருகின்றேன், சென்று காணுங்களேன், பதிவு அருமை, சொல்லவும் வேண்டுமா? கீழே சுட்டி..
http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/58055e7d0ff3fde2/2457445845dcb563?q=thalirhal+&lnk=ol&
ஷிவாதேவ், சுட்டிக்கு நன்றி, பார்த்தேன்..நிறைய நான் விட்டு இருக்கிறேன் என்று தெரிந்தது. .என்னை போலவே அவரும் நல்ல நினைவுகளை கொண்டுவந்து இருக்கிறார்... :) என்ன ஒற்றுமை. எப்படி இப்படி எல்லாம்.. ?!! தெரியல..
கவிதா அக்கா,
உங்கள் பதிவு படித்த போது சந்தோஷமா இருந்தது... அப்படியே என் சின்ன வயதில் விளையாடிய விளையாட்டுக்களின் நினைவுகள் என் கண்ணில்...
அதெல்லாம் சரி அணில் குட்டி... கவிதா அக்கா "மறந்துபோன விளையாட்டுக்கள்", "அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது" & "மறக்கமுடியாத அடி'களில் - ஆறு" போன்றவை எல்லாம் அவங்க வாழ்க்கையின் இருந்து எடுத்து கிறுக்கி... சாரி.... எழுதி இருக்காங்களா?
இப்போ பொங்கல் வர போகுது... அது பத்தி எதாவது இருக்கான்னு கேட்டு சொல்லு....
//அதெல்லாம் சரி அணில் குட்டி... கவிதா அக்கா "மறந்துபோன விளையாட்டுக்கள்", "அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது" & "மறக்கமுடியாத அடி'களில் - ஆறு" போன்றவை எல்லாம் அவங்க வாழ்க்கையின் இருந்து எடுத்து கிறுக்கி... சாரி.... எழுதி இருக்காங்களா?//
விசு, நன்றி.. ம்ம்..நீங்கள் குறிப்பிட்ட எல்லா பதிவுகளுமே.. என் சொந்த அனுபவங்கள் தான்.. அணில் கிட்ட கேட்கவேண்டாம் நானே சொல்லுவேன்.. !!
பொங்கல் பற்றி எழுதனும்..ஆனா இப்ப இல்ல.. எழுதறேன்.. நல்லா இருக்கும் எங்கவீட்டு சர்க்கரை பொங்கலும், பொங்கல் பண்டிகையும்.. :)
இதே மாதிரி அந்தப் பாட்டைப் பாத்ததும் நான் எழுதின ரெண்டு போஸ்ட் இதோ உங்களுக்காக.
http://veyililmazai.blogspot.com/2006/12/21.html
http://veyililmazai.blogspot.com/2006/12/22_29.html
ஹி..ஹி... ஏன் டா இந்த தற்பெருமைன்னு கேக்குறீங்களா? இதெல்லாம் அரசியல்ல சாதரணம்ங்க.
//ஹி..ஹி... ஏன் டா இந்த தற்பெருமைன்னு கேக்குறீங்களா? இதெல்லாம் அரசியல்ல சாதரணம்ங்க.//
ஜி, ம்ஹூம் !! நாங்க ஏங்க கேட்கறோம்.. எங்களுக்கு தான் தெரியுமே.. இது எல்லாம் அரசியல்ல சகஜம்னு.. :)
//பழையன கழிதலும் புதியன புகுதலும் ....//
வைசா..சரியா சொன்னீங்க.. இருந்தாலும் பழசுக்கு எப்பவும் ஒரு மவுசுங்க.. :) நினைத்து பார்க்கும் போதே..ஒரு சந்தோஷம் இருக்கும் இல்லையா..
Post a Comment