குஜராத் நிலநடுக்கும், சுனாமியின் தாக்குதல், இப்போது மும்பாய் தீவரவாதிகளின் தாக்குதல் என்று நாம் எதிர்பார்க்காத எத்தனையோ இழப்புகள். இதில் குழந்தைகள் அதிகமாகி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நெருங்கிய சொந்தங்களை இழந்த கொடுமைகள். யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைமையில் தான் ஒவ்வொருவரும் இப்போது இருக்கிறோம்.
நாம் நம் குழந்தைகளுக்கும், நம்மை நம்பி உள்ளவர்களுக்கும் என்ன செய்து வைத்து இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லிவையுங்கள்.
1. உங்களின் சேமிப்புகள், அதன் முழுவிபரம், சேமிக்கு கணக்கின் நம்பர்.
2. உங்களின், உங்களின் குடும்ப உறுப்பினர்களின் இன்சூரன்ஸ் பாலிஸி பற்றிய முழு விவரங்கள்
3. நிலம், வீட்டின் பத்திரங்கள், அதன் கணக்கு வழக்குகள், விபரங்கள்
4. வீட்டிற்காக எடுத்த இயற்கை அழிவுகள் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் தகவல்கள் (Fire, earthquake etc), தனி நபர் விபத்து பாலிஸிகள்
5. நகைகள், உடைமைகள், வாகனங்கள் பற்றிய விவரங்கள்
6. EPF பற்றிய தகவல்கள்
7. எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கடன் பற்றிய தகவல்கள்
8. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து இருந்தால் அந்த விபரங்கங்கள்
மேற்கொண்ட முழுவிவரங்களை தெளிவாக எழுதி உங்களின் நெருங்கிய சொந்தம் குறைந்தபட்சம் இரண்டு நபரிடமாவது கொடுத்துவையுங்கள், நெருங்கிய நண்பர்களிடம் ஒரு காப்பி கொடுத்துவையுங்கள். வீட்டில் மனைவி குழந்தைகளிடம் விபரமாக எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லி அவர்களுக்கும் ஒரு காப்பி கொடுத்து வையுங்கள்.
அவ்வபோது இதனை அப்டேட் செய்யுங்கள், அப்டேட் செய்யும் போது எல்லாம் மறக்காமல் மற்றவர்களிடம் கொடுத்துவையுங்கள்.
என் பக்கத்து வீட்டு நண்பர் வீட்டின் எல்லா சாவிகளையும் கூட அவரின் சொந்த ஊரில் ஒரு செட் செய்து வைத்துள்ளார்... சில விஷயங்கள் நமக்கு funny ஆக இருக்கும் ஆனால் அதன் பலன் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக தெரியும். எங்களது வீட்டில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்து அதில் குடும்பதலைவர் மரணமடைந்தார். அவரின் சாதாரண பேங்க் அக்கவுண்ட் நம்பர் தெரியாமல், பேங்க், இன்சூரன்ஸ் டாகுமன்ட் எங்கு வைத்து இருக்கிறார் என்று தெரியாமல் அவர் மனைவி பட்டப்பாடு அவருக்கு மட்டுமே தெரியும். இதில் இது கூட தெரியாம இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி இருக்கா பாரு!! என்ற ஊர் பேச்சு வேறு. :(((
இதுவரை இவற்றை செய்யாதவர்கள் இனி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
அணில் குட்டி அனிதா :- ம்ம்.. என்னவோ திட்டம் இருக்கு போல ... திட்டம் நல்லாத்தான் இருக்கு ஆனா யாரும் கவிதாக்கு மட்டும் விவரங்களை நம்பி சொல்லாதீங்க.. அப்புறம் கவிதா உங்க வூட்டுலத்தான் டேரா..ங்கோ..!! :))
பீட்டர் தாத்ஸ்- “To keep every cog and wheel is the first precaution of intelligent tinkering”
கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியது..
Posted by : கவிதா | Kavitha
on 14:12
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
13 - பார்வையிட்டவர்கள்:
good post
நல்ல யோசனைதான்.இத்துடன் நமக்கு யாரவது பணம் தரவேண்டியிருந்தால் அதையும் இந்த லிஸ்டில் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நல்ல பதிவு
சரியான செய்தி
உங்கள் வலைப்பதிவு அழகாக உள்ளது
சுரேஷ் மீனாட்சிசுந்தரம் !!
வருகைக்கு நன்றி.. !! :)
//நல்ல யோசனைதான்.இத்துடன் நமக்கு யாரவது பணம் தரவேண்டியிருந்தால் அதையும் இந்த லிஸ்டில் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//
வேலன் வாழ்க வளமுடன், நீங்கள் சொன்னபடி சேர்த்துவிட்டேன்.. அதுவும் ரொம்ப முக்கியமானதுதான்.
//நல்ல பதிவு
சரியான செய்தி
உங்கள் வலைப்பதிவு அழகாக உள்ளது //
நன்றி பிரபு!! :)
காப்பி காப்பின்னு சொல்றீங்களே?? ஃபில்டர் காப்பியா இல்ல இன்ஸ்டண்ட்டா??
//காப்பி காப்பின்னு சொல்றீங்களே?? ஃபில்டர் காப்பியா இல்ல இன்ஸ்டண்ட்டா??//
எவ்வளவு சீரியஸா (மூக்குல குழாய் எல்லாம் மாட்டிக்கிட்டு) ஒரு பதிவை போட்டு இருக்கேன்.. ம்ம் உங்களுக்கு நக்கலு?!!! :)):))
:))
மிக நல்ல உருப்படியான பதிவு
//:))
மிக நல்ல உருப்படியான பதிவு//
சென்ஷி.. நன்றி..:)))) அப்ப என்ன மத்த பதிவு எல்லாம் உருப்படி இல்லையா???
எப்ப கண்ணு சென்னை பக்கம் வரீங்க..?!!
ஜி, என்னோட அணிலுக்கு போட்டியா உங்கக்கிட்ட ஒரு படம் இருக்கு.. அது அணிலா? :((
இது உண்மையில் மிகவும் தேவையான விஷயம்
//இது உண்மையில் மிகவும் தேவையான விஷயம்//
வாங்க அமுதா...நன்றி.! படிப்பவர்கள் அனைவரும் உங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சொல்லுங்கள்...!!
\\7. எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கடன் பற்றிய தகவல்கள்
8. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து இருந்தால் அந்த விபரங்கங்கள்\\
இது ரெண்டும் மிக முக்கியம்...சமீபத்தில் நெருங்கிய உறவில் ஒரு மரணம்...அதானல் பல பிரச்சனைகள்...ஒன்னும் சொல்லிக்க முடியல..;(
நல்லத்தொரு பார்வை ;)
\\7. எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கடன் பற்றிய தகவல்கள்
8. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து இருந்தால் அந்த விபரங்கங்கள்\\
இது ரெண்டும் மிக முக்கியம்...சமீபத்தில் நெருங்கிய உறவில் ஒரு மரணம்...அதானல் பல பிரச்சனைகள்...ஒன்னும் சொல்லிக்க முடியல..;(
நல்லத்தொரு பார்வை ;)//
ஆமாம் கோபி.. நானும் அப்படி ஒன்றை பார்த்துதான் இந்த பதிவை எழுதினேன்.. பாவம் இழப்பை விட அதன் பிறகு அவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகளால் மனதளவிலும் உடலளவிலும் சிரமப்படுவது பார்க்க இன்னும் சங்கடமாக இருக்கிறது.
Post a Comment