கேப்பங்கஞ்சி குடிக்க கூப்பிட்ட கவிதா, விஜி அக்கா காம்ப்ளான் வேணும் னு கேக்க, உனக்கு கேப்பங்கஞ்சி யே அதிகம், காம்ளான் வேறயான்னு தொறத்திவிட,

வந்த விஜி அக்காவை விடாம பிடிச்சி, ஒரு ஓரமா கூட்டியாந்து உக்காரவச்சி கேள்வி கேட்டு அவங்க திறமை எல்லாத்தியும் எப்படி நானு வெளியில கொண்டாந்து இருக்கேன் னு பாருங்க மக்கா... இன்னும் அது முடிஞ்ச பாடில்ல..

அணில் : யக்கா மயில்' ங்கறது யாரு க்கா?

எங்க ஆத்தா ஆடு வளர்த்தல, மாடு வளர்த்தலை, மயிலும் வளர்த்தலை, ஆனா மயிலு மாதிரி பொன்னு வளர்த்தலாம்னு ...........( எப்படி முடிக்கறது)
எழுத்தாளர்ன்னா ஒரு பூனைப்பெயர் இருக்கனும்னு வெச்சேன்.. (இது போதும் இந்த அணிலுக்கு..)

அணில் : சுமல்ஜா - தயவு செய்து திருந்துங்கள் ! அப்படின்னு ஒரு பதிவு எழுதி இருக்கீங்களே... ! அவங்களோட எண்ணங்களை அவங்க பதிந்து இருக்கும் போது அதை நீங்க தவறுன்னு சொல்லி திருந்த சொல்லி இருப்பது நியாயமா? இந்த மாதிரி எத்தனை பதிவர்களை நீங்க திருத்தி இருக்கீங்க..?

ம்ம்ம் சகோதரி சுமஜ்லா அவர்கள் சொல்லியதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் என் வலையில் அதை பதித்தேன். ( அரசியல்வியாதி வாசம் வருதா?? குட்) எனக்கு டீச்சர் வேலை பிடிக்காததால் திருத்த தெரியலை.

அணில்: மிக சமீபத்தில் நீங்க எடுத்த பேட்டியால வலையுலகமே சின்னாபின்னமாகி இருந்திச்சே.. அத பத்தீதீதீதீ உங்களின் கருத்து என்னவோ?

யூ சி அக்சுவலி வாட் ஹேப்பண்ட்..சரி சரி. அது காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதைதான். இப்பத்தான் மீ பேக்குனு எல்லாம் சரியாயிடுச்சே. நெக்ஸ்ட் :))

அணில் : நீங்க எப்ப பாத்தாலும் வலைபதிவர்கள் எழுத்தில் குத்தம் குறை கண்டுபிடிச்சீ சீ சீ... அதை டிரேக்டா கேக்காம.. , இன் டிரேக்டா தாக்கறீங்க (கல்ல்லு சோடா பாட்டில், அழுகின தக்காளி எல்லாம் வீசறதா கேள்விப்பட்டோம்) அதைபத்தி விலாவாரியா சொல்லுங்க?!

இதெல்லாம் உனக்கு மண்டப்பத்தில் யாராச்சும் எழுதி கொடுத்தாங்களா??

அணில் : யக்கா யாரையாச்சும் திட்டனும்னா.. உங்கக்கிட்ட சொன்னா போதுமாமே நீங்க உடனே வினவு அங்கிள் கிட்ட புடுச்சி குடுத்துடுவீங்களாமே. .? உண்மையாக்கா?

பே பே பேப்பே பே .....:))

அணில் : உங்கள கோவை யின் அண்ணபூரணி ன்னு மனசாட்சியே இல்லாம கூப்பிடறாங்களே, நீங்க ஏதாச்சும் ஹோட்டல் நடத்துகிறீர்களா?

ஒரு பத்து லட்சம் தா, நடத்தி காட்டறேன்.


அணில் : யக்கா உங்க ஹோட்டல் வந்து சாப்பிட்டு கை கால் விழுந்து போனவங்க, வாந்தி பேதியில வாரிக்கிட்டு போனவங்கள பத்தி சொல்லுங்க..

அனிலு செல்லம் நீ வாடா கண்ணு முதல் வாய் உனக்குதான்.. ( ரொம்ப ஆடறே).

அணில் : யக்காவ் இது ஒரு ஐசியூ கேள்வி.. நீங்க சென்னை வந்தப்ப, உங்அக் சாப்பாட்டுல விஷம் வச்சி கொல்ல ஏற்பாடு செய்து, அதில் மயிர் இழையில் தப்பிச்சி கோவை க்கு ஓடினீங்க்ளாமே உண்மையாக்கா?

வெளிநாட்டு சதியா இருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா அதற்கு முதல் நாள் நாங்கள் சென்ற சுற்றுலாவில் நடந்த விசயம் எனக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்

அணில்: யாரையாவது தாக்கி எழுதனும்னா, உங்க தலைமையில் ஒரு பெரிய மீட்டிங் அரேஞ் செஞ்சி, பதிவர்களுக்கு , சோறு, தண்ணி எல்லாம் ஊத்திக்கொடுத்து, உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கெஞ்சி கதறுவீங்களாமே அப்படியா?

இதெல்லாம் அரசியல்ல சகஜம் :))

அணில் : யக்க்கோவ்.. நீங்க பேட்டி' ங்கற வார்த்தைய சொன்னாவே எல்லாரும் துண்ட காணோம் துணிய காணோம் னு ஓடறாங்களே ஏன்க்கா?

அது பொறாமை அனிலு, :)


அணில் : இத கேக்க எனக்கு வெக்க வெக்கமா இருக்கு... பெண்களின் கவர்ச்சி படம் போட்டு ..ஹி ஹி ஹி... யாரும் பதிவிட்டா, உடனே பொங்கி பொங்கலாகி படத்தை எடுத்தால் தான் பொங்கல் செய்வதை நிறுத்துவேன் னு சொல்றீங்களே.. ஏன்க்கா உங்ககுக்கு இம்புட்டு பொறாமை?

யாரு அப்படி சொன்னாங்க, இந்த மாதிரி புரளி கெளப்பி விடரதே வேலையாப்போச்சு.. ( யாரு போட்டிருக்கா)

அணில் : இதுக்கு மூக்குல டியூப் விட்டு சீரியஸா பதில் சொல்லனும் ஒகே.. பெண்ணியம் - என்றால் என்ன பத்து வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்.

அது இந்த அலுமனியம் மாதிரி எதுனா வஸ்துவா இருக்கும். பென்னீயத்தில் குக்கர் அவய்லபிலான்னு பார்க்கனும்)

அணில்: யக்கா நீங்க எழுதற பல போஸ்ட் மண்டபத்தில யாரோ எழுதி கொடுத்து தான் போடறீங்கன்னு பேசிக்கறாங்களே உண்மையாக்கா? நீங்க. உண்மைய சொல்லலன்ன்னா... ரத்தம் கக்கி சாவீங்கன்னு அந்த சிகப்பு சட்டைக்காரன் சொல்ரான் க்கா...

ம்ம் அனிலு நீயாவது கேளு, நான் மட்டமதியானம் வண்டிக்கு பெட்ரோல் போட்டு ரெண்டு கிலோமீட்டர் போயி லைட் எரியாத லைப்ரரியில் வாயில நுழையாத பேரில் தலைப்பு இருக்கும் பொஸ்தக்கமா பார்த்து எடுத்துட்டு வந்து மதியான தூக்கத்தை தியாகம் பண்ணி படிச்சு எழுதி வச்சா, இதுங்க பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க. நம்மள எளக்கியவாதி ஆக ஒரு பய விடமாட்டாங்க போல :)

அணில் : யக்கா நீங்க எழிதினல பிடிச்சது, பிடிக்காதது..

நெசமாத்தான் கேக்கிறையா?? அது இனிமேல் தான் எழுதனும் ( எப்படி ஒரு கவிஞர் மாதிரியே பதில் இருக்குல்ல )

அணில்: யக்கா நீங்க பதிவர்களுக்கு நிக் நேம் வச்சி கூப்பிடறீங்களாமே.. எங்க ஓனர் கவிதா க்கு ஏதாவது பேரு வச்சி இருக்கீங்களா?

அனிலு அது தனியா சொல்றேன்.

அணில்: எப்ப பாத்தாலும், யாரை பாத்தாலும் துப்பறீங்களே... யாராச்சும் டென்ஷன் ஆகி உங்க நாக்கை நறுக்கிட்டா என்ன செய்வீங்க?

இந்த துப்பு சொல்லிக்கொடுத்த குரு அட்ரஸ் கொடுத்து அனுப்புவேன்.


அணில் : ஹி ஹி...நீங்கள் பதிவுலகத்தில் பிரபலமாகத்தான் அடிக்கடி ஓடி ஓடி பேட்டி எடுப்பதும், எல்லோரிட பதிவுகளிலும் ஓடி ஓடி பின்னூட்டம் இட்டும் வருகிறீர்கள் என்று செய்திகள் வந்தவன்னம் உள்ளதே. .இதைப்பத்தி

பிரபலம் என்ற வார்த்தையில் வந்த வினைதான் பேட்டி என்னும் விடை :))) ( சமாளிச்சுட்டேன்) பின்னூட்டம் ஒரு சிலருக்கு மட்டும் இடுவேன், படிக்க நேரம் இருந்து பிடித்திருந்தால் மட்டும்.


அணில்: அடுத்தவங்க உயிரை பத்தி எந்த கவலையுமே இல்லாம சில சமயம் கவிதை ன்னு பேரு வச்சி ஏதோ எழுதி பஸ் ல ஏத்தறீங்களே.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

ஹெஹெஹ் மனிதர் உணர்ந்து கொள்ள அது மனிதக்கவிதை அல்ல. அதையும் தாண்டி சுட்டது.


அணில்: யார் உங்களை எவ்வளோ திட்டினாலும், துடைச்சி விட்டுக்கிட்டு திரும்பி எப்பவும் போல சிரிக்கறீங்களே உங்களுக்கு இந்த சூடு, சுரணை எதுவும் இல்லையா?

வேற வழி, உன் ஓனரோட எல்லாம் ஒரு வருசமா பழகினா அப்படித்தான்

அணில்: கடைசியா ஒரே ஒரு கேள்வி - உங்க வூட்டுக்கார் பத்தி 10 வரிகள் மிகாமல் சிறு குறிப்பு வரஞ்சிட்டு இடத்தை காலிப்பண்ணுங்க. .நாங்க கழுவி விடனும்.. .

கம்ப்யூட்டரில் இங்க் தீர்ந்து போச்சு :)))

.