தாயம் - விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து விளையாடுவோம். பெண்கள் பொதுவாக வீட்டில் விளையாடுவார்கள். ஆண்கள் தமிழ் திரை படங்களில் விளையாடி பார்த்திருக்கிறேன் ஆனால் நேரில் பார்த்ததில்லை. திரை படங்களில் வரும் தாயவிளையாட்டு கட்டங்கள் வேறு மாதிரியாக இருக்கும். இது தான் எங்களது வீட்டில் விளையாட பயன்படுத்துவோம்.

குறைந்தபட்சம் இருவர் இதை விளையாட தேவை. அதிகபட்சம் எத்தனை பேர் 12 பேர் இருக்கலாம் ஒரு குழுவில். உறுப்பினர் எண்ணிக்கை இரட்டை படையில் தான் இருக்க வேண்டும், அதாவது 2, 4, 6 என்று.

காய்கள் ஒரு குழுவிற்கு மொத்தம் 12. புளியங்கொட்டை, சோழி வைத்து விளையாடலாம். ஒரு குழுவின் காய்கள் மற்றதை வேறுப்படுத்தி காட்ட வேண்டும்.

A, B - போட்டுள்ள இடத்தில் காய்களை வைத்து துவக்கி தாயக்கட்டை* கொண்டு தாயம் போட்டு ஒவ்வொரு காயாக இறக்கி, அதை அவரவர் பக்கமாக தாயக்கட்டை போட்டு வரும் எண்ணில் நகர்த்தி முழுவதுமாக ஒரு சுற்று வந்து Z இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும், நடுவில் எதிரே எதிராளியின் காய்கள் வந்தால் அதை வெட்டலாம். வெட்டப்பட்ட காய்கள் திரும்ப ஆரம்ப இடத்திலிருந்து மீண்டும் தாயம் போட்டே வெளிவரவேண்டும்.

அடுத்து அந்த கிராஸ் மார்க் இருக்கும் இடங்கள் எல்லாம் "மலை" என்று சொல்லுவார்கள். A குழுவினர் ஒரு மலையை பிடித்து காயை அதில் வைத்துவிட்டால், B அந்த மலையை பிடிக்க முடியாது. இந்த மலையை பிடிக்க ஆட்டம் நடக்கும் போது போட்டி நடக்கும்.



* படம் ரொம்ப கஷ்டப்பட்டு வரைந்தேன்.. தப்பு சொல்றவங்க கொஞ்சமா சொல்லுங்க..

இதில் காய் நகர்த்தலில் சாமர்த்தியமும், கட்டங்கள் எண்ணி காயை வேகமாக நகர்த்தவும் தெரிந்தால் போதும். ஒரே சமயத்தில் நிறைய எண்ணிக்கைகள் விழும் போது, அதாவது, தாயக்கட்டையில், 5, 6, 12, போன்ற எண்கள் விழுந்தால், ஒருவரே 2, 3, 4 போன்ற எண்கள் விழும் வரை தொடர்ந்து ஆடலாம். அப்படி தொடர்ந்து ஆடும் போது, ஒரு காயை மட்டும் இல்லாமல் பல காய்களை நகர்த்தமுடியும்.

z க்குள் எந்த குழு முதலில் எல்லா காய்களையும் எடுத்து சென்று சேர்க்கிறதோ அதுவே வெற்றி ப்பெற்றதாக ஆகும்.

* தாயக்கட்டை (படம்-நன்றி கூகுல்)




இதற்கு முன்பு மறந்து போன விளையாட்டுகள் பற்றி எழுதிய இடுகை. இதில் அநேகமாக எல்லா மறந்த விளையாட்டுகளையும் குறிப்பிட்டு உள்ளேன் என்றே நினைக்கிறேன். :)

மற்றொரு பதிவு ஆடு புலி ஆட்டம்

அணில்குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்.... ..... வீட்டுல புள்ள கம்பியூட்டர் ல விளையாடி பறக்குது.. இவிங்க இன்னமும் தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் னு.. .!! :(

பீட்டர் தாத்ஸ் : “Games are a compromise between intimacy and keeping intimacy away