தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்
http://iruppu.blogspot.com/2009/07/blog-post_13.html
இராவணன் எழுதிய இந்த கவிதை படித்த போது எனக்கு தோன்றிய சில வரிகள்...... நன்றி இராவணன்.
***************************************
தூசிகள்
படர்ந்த
வெற்றுத்திண்ணையில்
உன் பெயர்
எழுதி...
ரசித்தேன்..!!!
**********************
வாகனங்கள்
கடந்தபின்
தூசிகளை
சுத்தம்
செய்துவிட்டேன்....
**********************
அடுத்த
வாகனம்
எப்போது வருமென
காத்திருக்கிறேன்.........
தூசிகள்
திரும்பவும்
படருமே....!!
***********************
வாகனங்கள்
கடந்து செல்லாமல்
இருக்காது
தூசிகள்
படராமலும்
இருக்காது...
வெற்றுத்திண்ணையாய்
இருப்பது
என் தவறோ.......??!!
****************************
உங்களுக்கு தோன்றுவதையும் சொல்லிவிட்டு செல்லுங்கள்... :)
வெற்றுத்திண்ணை......
Labels: கவிதை 15 Comments
நவீன் vs கவிதா
கவி : நவீன் என் நீயூ ஃபிரண்டு பாருடா வா...வா.. இங்க.... (பப்புவும் நானும் இருக்கும் போட்டோவை அவனுக்கு காட்டுகிறேன்)
நவீன் : ..............................
கவி : ஏன்ன்டா... மெனக்கேட்டு உன்னை கூப்பிட்டு என் நியூ ஃபிரண்டை காட்டினேன் ஒன்னுமே சொல்லாம போற.... பொறாமை புடிச்சவனே.. !!
நவீன் :.... ம்ம்ம்ம் .. அவக்கூட இன்னும் கொஞ்ச நாள் ல உன்னை விட வளந்துடுவாம்மா............!!!!
கவி :........... :((((((
******************************
கவி : (ராத்திரி தூங்க வரும் நவீனை பாத்து )- எனக்கு ஒரு கேள்விடா...
நவீன்... : (நிறைய மொக்கை கேள்விகளை கேட்டு கேட்டு பழக்கமாகி நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பதாலும் வேண்டானாலும் விடாமல் நான் கேட்டே தீருவேன் என்பதாலும் பதில் ஏதும் சொல்லாமல் என் கேள்வி யை மிக கடுப்பாக எதிர் பார்த்துக்கொண்டே படுக்கையை விரித்துக்கொண்டு இருந்தான்...)
கவி : எனக்கு ஒரு பெரிய டவுட்டுடா... இந்த எறும்பு எல்லாம் நைட் ல தூங்குமா? தூங்காதா?...
நவீன் : (இவ்வளவு கேவலமான கேள்விய எதிர்பார்க்காத அவன்... வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்)...ஏம்ம்மா ..ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்.?? ஏன் இப்பூடீஈஈ.?
கவி : டூ யூ திங்க் மை குவஸ்ஸின் ஈஸ் நாட் வேலிட்..........?
நவீன்..: ம்ம்ம்மா.. ராத்திரி மணி 12.20 ஆகுது, இப்படி கேள்வி கேக்கறீயே உனக்கு மனசாட்சியே இல்லையா? என்னை விட்டுடு நான் தூங்கனும்..!!
கவி : :(((((
******************************
கவி : இங்க பாருடா..... வெளி நாடு எல்லாம் போனா அதுவும் பர்டிக்குலரா அமெரிக்கா போனா... அமெரிக்காக்காரிய தயவு செய்து லவ் பண்ணி தொலச்சிடாதடா..........
நவீன் : :)))))))) ஹி ஹி..ஏன் ஒன்ன்னால அந்த அளவு பீட்டர்ல பேச முடியாதுன்னு பயப்படறீயா...
கவி: :((((((((((((((((
******************************
கவி : நவீன் ப்ளிஸ்.... எனக்கு wma to mp3 conversion tool எது நல்லதுன்னு கொஞ்சம் ரெஃபர் செய்யேன்..
நவீன் : ஏன் உன்னோட இன்டர்நேஷனல் வெட்டி ப்ளாகர்ஸ் நிறைய பேர் இருப்பாங்களே அவங்களை கேளூ.... நீங்க எல்லாம் இன்டர்நேஷனல் அறிவாளிகளாச்சே....!! ...
கவி : (ஏன் இப்புடி.. ஒரு வேளை என்னைக்காச்சும் ப்ளாகர் எல்லாத்துக்கும் சேத்து வச்சி சப்போர்ட்டி இருப்பேனோ...இவ்வளவு கடுப்பா இருக்கான்...).... ஏண்டா.. உன்னால முடியலன்னா முடியாதுன்னு சொல்லு அதுக்கு எதுக்குடா.. ப்ளாகர்ஸ் எல்லாரையும் திட்டற..
நவீன் : பின்ன நீ வெட்டியா செய்யற வேலைக்கு ஏன் என் உயிரை வாங்கற...!!
******************************
கவி : நாங்க எல்லாம் சில்ட்ரன்ஸ் பார்க் போறோமே...
நவீன் : யாரு எல்லாம்?
கவி: நானும் என்னோட ப்ளாகர் பிரண்ட்ஸ்'சும்
நவீன் : ஹி ஹி... ஆல் வெட்டிஸ்' போறோம்னு சொல்லேன்.. ரொம்ப டீஸன்ட்டா ப்ளாகர்ஸ் னு சொல்றே.......
கவி : :((((((((((((((((((((((((((
******************************
கவி : நவீன் இன்னும் கொஞ்சம் வளந்துடுடா... இன்னும் ஒரு 2 இன்ச் ஹைட் போதும்.. ...
நவீன் : ம்மா .. நீயும் அப்பாவும் ரொம்ப ஹைட் ன்னு நினைப்பா? உங்க கூட பாக்கும் போது, இவ்வளவு ஹைட் டா நான் வளந்ததே பெரிய விஷயம் இது போதும், அமைதியா இரு..!!
கவி: ப்ளீஸ் டா ரொம்ப இல்ல...இன்னும் 2 இன்ச் போதும்....அதுக்கு தான் இன்னும் உனக்கு நான் காம்ப்ளான் எல்லாம் கொடுக்கறேன்...!!
நவீன் : ஓ..என்னை டீ, காப்பி குடிக்கக்கூடாதுன்னு இம்சை பண்றதுக்கு பின்னால இப்படி ஒரு சதி இருக்கா...? ஏன் என்னை எக்ஸிபிஷன் ல கொண்டு போயீ நிக்க வைச்சி சம்பாதிக்க போறியா?
கவி: :(((((((((((((((
******************************
கவி : நவீன் குட்டி உனக்கு என்ன டிபன் வேனும்டீ ?!
நவீன் : என்ன முடியூதோ செய்யிமா..
கவி: இல்ல நீ கேளு நீ என்ன கேக்கறயோ செய்து தரேன்...
நவீன்; சரி உன்னால என்ன செய்து தரமுடியும் மெனு சொல்லு?
கவி :ம்ம்ம்ம்ம்ம்... இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, சப்பாத்தி, இடியாப்பம்.. பிரட் ஆம்லெட், பிரட் ப்ரென்ச் ப்ரை... நீர் உருண்டை, நூடுல்ஸ், இதை எல்லாம் செய்யமுடியும்..ஆனா ஐ வான்ட் யூ டூ பிரிஃபர் ஒன்லி சம்பா கோதுமை கஞ்சி......
நவீன் : அதானே..அதுக்கு தான் முன்னமே உன்னால என்ன முடியுமோ செய்து தான் னு சொன்னேன்.. உன்னை பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே... கிளம்பு கிளம்பு ....ஏரியாவை காலிப்பன்ணு...!!
கவி: :((((((((((((
*************************************************
கவி : டேய் ஜிம் ல "வரலா" (வரலட்சுமி) உன்னை "எருமைமாடு " ன்னு சொன்னாடா... எல்லாரும் சிரிச்சாங்கடா.... :)))) ஹி ஹி .....
நவீன் : நீயெல்லாம் ஒரு தாயா? பெத்த புள்ளைய 'எருமைமாடு' ன்னு சொல்லி இருக்காங்க.... கொஞ்சம் கூட ரோஷப்படாம அவங்க கூட சேந்து நீயூம் சிரிச்சது இல்லாம என்கிட்ட வேற வந்து சொல்ற.. உனக்கு வெக்காமா இல்ல..?
கவி : அட..ஆமா இல்ல... நான் உன்னை பெத்த தாய் ஆச்சே...நான் மறப்பேனா.. அதனால் தான் அவக்கிட்ட சொன்னேன்... "வேணாம் வரலா' நீ எருமைமாடு னு மட்டும் தான் திட்டுவ.... .ஆனா என் புள்ள கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவான்.. அசிங்கம்மா உன்னை திட்டிடுவான்.." ன்னு சொன்னேன் டா.. அதுக்கு அவ.... "ஓ அசிங்கமா வேற திட்டுவானா... அவன் மூஞ்சியில நான் காரி....த்த்தூஊஊஊன்னு துப்பனேன்னு சொல்லுங்க.... இப்படி ஒரு நல்ல தங்கமான அம்மாவுக்கு இவ்வளவு கேவலமான புள்ளையா ன்னு நான் கேட்டேன்னு சொல்லுங்க ன்னு" சொன்னா டா...................
நவீன் :......ம்ம்மா.... இது மட்டும் என்னமோ அவங்க என்னை திட்டினமாதிரி தெரியலையே......... :(((
கவி : :))))))))))) ஹி ஹி......ஹி ஹி....
*************************************************
அணில் குட்டி அனிதா : ............ அம்மணி இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எவ்வளவு அடிப்பட்டாலும்...மாற போறது இல்ல.... இது தேறாத கேஸூ...... :(((
பீட்டர் தாத்ஸ் : “For a mother the project of raising a boy is the most fulfilling project she can hope for. She can watch him, as a child, play the games she was not allowed to play; she can invest in him her ideas, aspirations, ambitions, and values -- or whatever she has left of them; she can watch her son, who came from her flesh and whose life was sustained by her work and devotion, embody her in the world. So while the project of raising a boy is fraught with ambivalence and leads inevitably to bitterness, it is the only project that allows a woman to be -- to be through her son, to live through her son.”
Labels: அணில் குட்டி 28 Comments
மகளிர் சுய உதவி குழுக்கள்– பாராட்டு, தில்லுமுல்லு, பரிந்துரைகள்
தற்போதைய* ஆட்சியில் மிக அற்புதமான ஒரு திட்டம் இந்த மகளிர் சுய உதவி குழுக்கள். இதனால் பயன்பட்டோர், படுவோர் பல்லாயிரம் பேர். அவர்களில் மகளிர் மட்டும் இல்லை அவர்களை சார்ந்த குடும்பங்களும்.
மகளிர் திட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் அங்க உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு குழுவை நடத்த ஒரு தலைவி, அதற்கு அடுத்து ஒரு பொருளாலர் என்று இருக்கிறார்கள், வாரம் ஒரு முறை குழுக்களில் உள்ள மகளிர் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்துகின்றனர், அதில் ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு தலைப்பில் அதை துறை சார்ந்த ஒருவர் பேசுகிறார், அதிலிருந்து விவாதங்கள், பிரச்சனைகளுக்கு வடிகால்கள் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கின்றன.
குறைந்த பட்சம் ரூ.20000/- முதல் அதிக பட்சம் ரூ.1.00.000/- வரை கடன் உதவி கிடைக்கிறது. இது கிராமம் மற்றும் நகராட்சி என தனித்தனி திட்டங்களாக இருக்கின்றன். கிராமங்களுக்கு அதிகபட்ச நல திட்டங்கள் உள்ளன. இந்த கடன்கள் மாத தவணை முறையில் திருப்பி அடைக்க வேண்டும். இதில் உள்ள 20 பேரும் தனித்தனியே தலா ரூ.20000/- கடன் பெற்று உள்ளனர், காரணங்கள் வரவு செலவு நோட்டு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அதை ஒரு முறை அடைத்துவிட்டால், திரும்ப இன்னொரு முறை சுழற்சியாக கடன் வசதி பெறலாம். இதில் கடன் தள்ளுபடி சலுகைகளும் குழுக்கள் வாரியாக அவ்வப்பொழுது அரசு வழங்குகிறது. அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர் குழுக்கள் சலுகைகள், தள்ளுபடிகள் அதிகம் பெருகின்றன.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாராட்ட வேண்டிய ஒரு அம்சம், குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும், கணவன் அலுவலகம் அல்லது வியாபாரம் பார்க்க சென்றதும், ஒன்று கூடி திண்ணையில் அமர்ந்து வெட்டி நியாயமும், ஊர் கதையும், வம்பும் பேசிக்கொண்டிருந்த நம் கிராமத்து, நகரத்து பெண்கள் இப்போது இந்த மகளிர் குழுக்களின் மூலம் தங்களின் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் ஓர் ஒற்றுமை மற்றும் ஒழுங்கை பார்க்க முடிகிறது. (ம்ம்.. ஆனால் நாம் இணையத்தில் அந்த வெட்டி நியாயம் பேசும் வேலையை விடாமல் அழகாக செய்து வருகிறோம்:( )
அனைவரும் ஒன்று போல் சீருடை அணிந்து, மகளிர் குழுவின் மேம்பாடு பற்றி பேசுவதும், வங்கி கணக்கு வழக்குகள்மற்றும், தங்கள் வரவு செலவு , கடன் கணக்குகளை பற்றி பேசுவதும், அதை சரியான முறையில் நீ தான் நான் தான் என்று இல்லாமல் அவரவரும் பொறுப்புடன் கணக்கு வழக்கு நோட்டுகளை அன்றாடம் எழுதி நிரப்பிவிடுவதும், குடும்ப வளர்ச்சிக்கு, குறிப்பாக குழந்தைகளின் கல்வி, வியாபார வளர்ச்சி, அல்லது முதல் முதலீடு, தொழில் சார்ந்த தேவைகள், வீட்டு விஷேஷங்கள், வீடு கட்டுதல் போன்றவற்றிக்கு மகளிர் குழுக்களின் மூலம் கிடைக்கும் வட்டி குறைந்த கடன்களை நல்ல முறையில் பயன்படுத்துதல் போன்றவை நடக்கின்றன.
ஒரு மகளிர் குழுவின் தலைவியை சந்தித்து, அவர்கள் செயற்படுத்தும் திட்டங்கள் பற்றி தெரிந்துகொண்டேன். அதன் பலன்கள், படித்தவர், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லோரும் சரி சமமாக ஒன்று சேர்ந்து, இக்குழுக்களை திறம்பட நடத்திவருவது மிகவும் போற்ற க்கூடிய பெருமைப்படகூடிய ஒன்று. மிக சாதாரணமாக தினமும் அனைவரும் வங்கிக்கு சென்று வருவதும், அது சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் தயக்கமின்றி பேசுவதும், தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதும் எனக்கு சாதாரண விஷயமாக தோன்றவில்லை. நாம் நகரத்து பெண்களுடன் கிராமத்து பெண்களை ஒப்பிட்டு பார்க்கமுடியாது. வீடு, வயக்கால், வயல், சமையல், வெட்டி பேச்சு என்றே காலம் கழித்த இவர்களின் முன்னேற்றம் பார்த்து பிரம்மிக்கும் படியாக உள்ளது.
குறிப்பாக நான் இதற்கு முன் சந்தித்திருந்த பெண்களுக்கும், இப்போது மகளிர் குழுவில் சேர்ந்து தன்னை தானே மேம்படுத்திக்கொண்ட பெண்களுக்கும் வித்தியாசத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது, வியப்புடன் ரசித்தேன், அவர்களிடமிருந்த அந்த அறியாமை குறைந்துவிட்டதாக எனக்குப்பட்டது, தன்னால் தனியாக எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களின் பேச்சில், செயலில், நடத்தையில் பார்க்க முடிந்தது. இதில் வேலைக்கு போகும் பெண்கள் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையில் தன்னை புகுத்திக்கொள்ளாமல், சுதந்திரமாக முன்னேறி வருவதாக எனக்குப்பட்டது.
தில்லுமுல்லுகள் :-
1. இதிலும் சிலர் சரியான காரணங்கள் குறிப்பிட்டு கடன்கள் பெறுவதில்லை. இதற்கு வங்கி அதிகாரிகள் முதல் நடு தரகர்கள், குழுவில் இருக்கும் பெண்களும் உடைந்தையாக கூட்டாக செயல் படுகின்றனர்.
2. மேல் சொன்ன தில்லு முல்லுவில் முதலில் இருப்பது, மகளிர் குழு திட்டத்தின் கீழ் வாங்கிய கடனை அதிக வட்டிக்கு வெளியில் கொடுத்து வட்டி தொழில் செய்கிறார்கள். இதற்கு மேற்சொன்னவர்கள் எல்லோருமே காரணம்.
3. பெண்களுக்கே உரிய ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர், அதாவது, இந்த கடன்களை கொண்டு, நகைகள், உடைகள் என பகட்டுக்கும் பயன்படுத்துகின்றனர்.
4. கடன் வசதி வேண்டி வரும் கிராமத்து பெண்களை தகாத முறையில் நடத்த அரசு அதிகாரிகளும், வங்கி அதிகாரிகள் மற்றும் உடன் பெண்களுமே உடந்தையாக இருக்கிறார்கள். இது பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்து வரும் குற்றச்சாட்டுகள்.
இப்படிப்பட்ட செயல்கள் இங்கொன்று அங்கொன்றுமாக இல்லாமல் அடியோடு அழிக்கப்படவேண்டியவை. ஆனால் பெண்களே அதற்கு உடந்தையாக இருக்கும் போது வாயடைந்து நிற்கவேண்டி உள்ளதை மறுக்க முடியாது.
பரிந்துரைகள் :
1. வங்கி கடன்கள் அளிக்கப்படும் போது, சொல்லப்பட்ட காரணத்திற்காகத்தான் பயன்படுத்தப்பட்டதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அரசு சார்ந்த விஷயமாக இருப்பதால் இது நடக்கிறதா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
2. மகளிர் குழுக்களில் வரும் பணத்திற்காக, மகளிரை கொண்டு பின்னால் இருந்து குடும்பத்தார் தேவையற்ற செலவுகளுக்காக மகளிரை கட்டாயப்படுத்தி, கொடுமைப்படுத்தி பணத்தை பெறுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அதற்காகத்தான் மேற்சொன்ன கண்காணிப்பு முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும்
3. மகளிர் குழுக்களில் அன்றாட தேவைகளுக்கு கடன் வழங்குவதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க நல த்திட்டங்களை அரசு கொண்டு வந்து அதை அமல் படுத்த அவர்களுக்கு கடன் உதவி செய்தால் நலம். இதனால் தொடர்ந்து ஒரு சுழற்சியாக ஒருவரை அடுத்து ஒருவர் என்ற வழக்கமான கடன் முறை மாறி, ஒரு கட்டத்தில் தங்கள் வருமானத்திலேயே அவர்கள் தங்களையும் தன் குடும்பத்தையும் கவனிக்கும் திறனை பெறுவார்கள். அதனால் ஒரு காலக்கட்டத்திற்கு மேல் அரசுக்கும் இதில் முதலீடு செய்ய தேவை இருக்காது, அல்லது அதிகமான அளவு குறைந்து போகும்.
4. சிறுத்தொழில், கல்வி போன்றவற்றிற்கு முன்னுறிமை கொடுத்து கடன் தொகையை அதிகப்படுத்தலாம். சிறுதொழிலுக்கு தேவையான திட்டங்களை /வசதிகளை அரசு/தனியார் துறைகளின் உதவியோடு குழுக்களுக்கு பரிந்துரை செய்யலாம். (இது வரை அப்படி எதுவும் அரசு செய்யவில்லை. பணம் கொடுப்பதை மட்டும் செய்துவருகிறது)
5. தனிப்பட்ட நபர் கடன் எந்த காரணமாக இருந்தாலும் கொடுக்கும் படி செய்யலாம். அதற்கு காரணம் நான் பார்த்தவரை, ஏதோ காரணங்கள் சொல்லி கடன்கள் வாங்கப்பட்டு உள்ளன. சில காரணங்கள் என்னுடைய பார்வையில் இப்படி க்கூட தேவைகள் இருக்குமா என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அப்போது அந்த காரணங்கள் கடன் வாங்கவே சொல்லப்பட்டவையாக எனக்கு தெரிந்தன. சில சமயங்களில் உண்மையான காரணங்கள் சொன்னால் கடன் இல்லாமல் போகக்கூடும் என்பதால் பொய்யான காரணங்களை கொடுத்து கடன் பெறுகிறார்கள் என்பது மட்டும் இல்லை, ஒரு பொய்யான காரணம் கூறும் போது அதற்கு தேவையான சப்போர்ட் டாகுமென் டுகளும் பொய்யாக தயார் செய்யும் நிர்பந்தத்திற்கு அவர்கள் உட்படுத்தப்படுகின்றனர். அதனால், தனிநபர் கடன் களுக்கான காரணங்களை எதுவாக இருந்தாலும் பரிசீலனை செய்து அரசு கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதனால் தேவையற்ற ஊழல் குறையும்.
6. குழுக்குளின் தலைமை பொறுப்பை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மாற்ற வேண்டும். தலைமை மாறும் போது, அந்த தனிப்பட்ட பெண்ணின் தலைமையை பொறுத்து நல்ல பல விஷயங்கள் நடைமுறை படுத்த வாய்ப்பிருக்கிறது. அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்தித்தரவேண்டும்
7. ஒரே ஊரை சார்ந்த மகளிர் குழுக்களுக்கு இடையே போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை இன்னமும் திறமையாக செயல்பட வைக்க ஊக்கம் கொடுக்கலாம்.
அணில் குட்டி அனிதா :
Labels: சமூகம் 10 Comments
நான் ஒரு முட்டாளுங்க..
நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்து புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க
கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
ஏ..ஏ...ஏ.. கைதே ...டாய்..
கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீச் பீசா கீசாங்க பேஜாரா பூட்டுங்க..
நான் ஒரு முட்டாளுங்க
கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லம் நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க
நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னெங்க அடிக்க தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன் என்னாங்க.
நான் ஒரு முட்டாளுங்க...
பாடல்: நான் ஒரு முட்டாளுங்க..
படம்: சகோதரி.
பாடியவர்: சந்திரபாபு.
இந்த பாடலோடு... ஆரம்பிக்கிறேன்... முட்டாள் என்று உணர்வதும் அதை ஒற்றுக்கொள்ளவும் கூட நம் மனம் பக்குவப்பட்டு இருக்க வேண்டும். அந்த பக்குவத்தை பெற நான் எந்த முயற்சியையும் எடுத்தேனா என்பதை விடவும், என்னை பக்குவப்படவைக்க என்னை சுற்றி நிறைய அறிவாளிகள், சாமர்த்திய சாலிகள், முகம் ஒன்று பேசி புறம் ஒன்று பேசுபவர்கள், வெளியே புன்னகையும் உள்ளே பொறாமை கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள் என்ற நம்பிக்கை 100% இருக்கிறது. :) இவர்களுக்கு மத்தியில் நிச்சயம் நான் ஒரு முட்டாளுங்க.. :)
தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும், இல்லை எல்லாமே புரிந்தும் சாமர்த்தியமாக பல் இளிக்க தெரியாத முட்டாளாகவே என்றும் இருப்பதில் பெருமையே அன்றி சிறுமை இல்லை என்று என்னை அவ்வப்போது பக்குவப்பட வைக்கும் அனைத்து அறிவாளி திலகங்களுக்கும் வந்தனம்..!! வணக்கம்..!! நமஸ்கார்... !!..என்று சொல்லி ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன்.
அபி' யின் வேலை குறித்து அவளின் அப்பா எழுதிய பதிவை படித்தலிருந்து... என்னவோ மனதில் சொல்ல முடியாத பாரம் அழுத்திக்கொண்டே இருக்கிறது. ஐயா நல்லவர்களே நாலும் தெரிந்தவர்களே, பெண்ணின காவலர்களே பேராற்றல் மிக்க பெருந்தகைகளே.... திருமணம் ஆகும் வரையாவது பெண் குழந்தைகள் சந்தோஷமாக, உடல் வலி மன வலி எதுவும் இன்றி, நேரம் காலம் இன்றி தூங்கி, நன்றாக சாப்பிட்டு,குழந்தை குழந்தையாக சந்தோஷமாக இருக்கட்டுமே.
குழந்தைக்கு உழைப்பின் அருமை தெரியவேண்டும், அவர்களின் உடல் வாகிற்காகவும், நலினத்திற்காகவும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக சில வேலைகள் செய்யத்தான் வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் செய்து எந்த பலனும் இல்லை என்று என் அனுபவம் கூறுகிறது. என் குழந்தை வயிற்றில் இருந்த போது காலை 4-லிருந்து இரவு 9.30 வரை நின்ற கால் நிலை காலாக சுக பிரசவம் ஆக வேண்டும் என்று வேலை வாங்கினார்கள். ஆனால் எனக்கு சுக பிரசவம் ஆகவில்லை. என்னை பிழிந்து எடுத்து வேலை வாங்கியது மட்டுமே மிச்சம். சென்ற நாட்கள் மீண்டும் வாரா.
பொங்கல் தீபாவளிக்கு இரவு விழித்து மேல் தளத்திலிருந்து கீழ் தளம் வரை கூட்டி பெருக்கி கழுவி சுத்தம் செய்து,பெரிய பெரிய மாக்கோலங்கள் போடுவதும், பொது சேவை செய்கிறாயா என்று வீட்டில் உள்ளவர்கள் திட்ட திட்ட, பழக்கிவிட்ட ஆயாவை திட்டிக்கொண்டே நானும் செய்வதை நிறுத்தாமல் செய்தும் பலனொன்றும் காணேன்.. கதவடைக்கப்பட்ட மற்ற வீடுகளில் பெண்கள் சூரியன் பின்னங்கால்களில் அடித்த பிறகு, பொறுமையாக எழுந்து எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் திபாவளியை கொண்டாடத்தான் செய்கிறார்கள், கோலம் போட்ட என்னை பாரட்டவும் செய்வார்கள். அவர்கள் எல்லாம் என்னைவிடவும் சந்தோஷமாக எளிமையாக நாட்களை நகர்த்துகிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவம் இல்லை. தன் குடும்பம் தன் வீடு என்று வந்தால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவம் பெற்றவர்களாக தான் இருக்கிறார்கள்.
வேலையும், உழைப்பும், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தத்துவ பேச்சுகளுடன் கொட்டி கொட்டி வளர்க்கப்பட்ட எனக்கு அப்படி இல்லாத மற்றவர்களை பார்க்கும் போது வெறுத்து போனது வாழ்க்கை தான் அன்றி, வேறில்லை. ஒரு வேளை எனக்கு பொறமையோ..??, பொறாமை பட்டு இருந்தால் அவர்களை போல் என் வாழ்க்கை தரத்தை மாற்றி இருப்பேனே... மாறாக இன்னமும் எப்போதும் வேலை வேலை வேலை...... ஏனென்றால் நான் ஒரு பெண்....இரத்தத்தில் ஊட்டி வளர்த்து இருக்கிறார்கள் நல்லவர்கள். :)
சுகாதாரம், சுத்தம் என்பதே என்ன என்று தெரியாத சோம்பேறிகளும், வெட்டி நியாயம் பேசிக்கொண்டு சிரித்து கும்மாளமிட்டு கொண்டு, அடுக்கடுக்காக பொய்கள் பேசியும் புறம் பேசியும் பொறாமை பட்டும், புது புடவை நகைகள், பொழுது போக்குகள், போதுமான பிடித்த சாப்பாடு என்ற ஊரில் இருக்கும் அத்தனை உணவகங்களிலும் உட்கார்ந்து ஒய்யாரமாக சாப்பிட்டு உடம்பை வளர்த்தும், பணம் பத்தும் செய்யும் என்று பகட்டாக காட்டி, பகல் இரவு பார்க்காமல் ஊர் சுற்றியும், எகத்தால பேச்சும்,ஏளன பேச்சும், எடுந்தெரிந்த வார்த்தைகளும், நடத்தையும் என்று இப்படி இருப்பவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட செயல் படுத்திக்கொள்ள முடியாத பாடம் ஏராளம்....
சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள்... இப்படியே இருந்துவிட்டு போகட்டும்... யாருக்கு நஷ்டம்... அவர்களுக்கா இல்லை இந்த நாட்டிற்கா? Bull Shit !! கொடிப்பிடித்தவனும், இன்னமும் கொடிப்பிடிப்பவனும் முட்டாள்கள்... :) முன்னேற வழி தெரியாத மூடர்கள் தான்... :)
ம்ம்....தயவு செய்து குழந்தைகளுக்கு எப்படி சாமர்த்தியமாக இருக்க வேண்டும் என்று மட்டும் கற்றுக்கொடுங்கள். வேறு ஒன்றுமே தேவையில்லை... பிழைத்துக்கொள்வார்கள். நம் சமூகம் அப்படித்தான் வளர்ந்து கொண்டு இருக்கிறது....
ஒன்று சேர்ந்து கும்மி அடிக்கத்தெரியாமல், தனியாக இருந்து இப்படி பதிவு போட்டு.....அதற்கும் நேரடியாக வந்து திட்டமாட்டார்கள்.. . முதுகுக்கு பின் கூட்டம் கூடி எச்சில் தெறிக்க, இளக்காரமாய் பேசுவார்கள்...
இங்கே வந்து மட்டும் அதையே பேசட்டுமே..... கட்டாயமாக... முகம் கிழிந்து தான் போவார்கள் ............முகமூடி அணிந்தவர்கள் அத்தனை பேரும்.....
அணில் குட்டி அனிதா : அய்யய்ய.... என்னடா இது வம்பா போச்சி.. யாருப்பா அது. .அம்மணிய இப்படி கிளப்பிவிட்டது. .....நல்லா இருங்கப்பா...!!! பாரு... வரும் போதே என்னா சவுண்டு..ன்னு....... முடியல. .அப்படி ஓரமா உக்காந்துக்கிறேன்.. என்னைய கோவத்துல மிதிச்சிடபோறாங்க..
பீட்டர் தாத்ஸ் :- Four things a woman should know: How to look like a girl, How to act like a lady, How to think like a man, And how to work like a dog”
Labels: சமூகம் 21 Comments
அவசியம் தேவை - அறிவிப்பு
பார்வைகள் படித்துவரும் அனைவருக்கும் வணக்கம். கீழ் இருக்கும் பட்டியல் வருடம் தோரும் பார்வைகளில் இட்ட இடுகைகளின் எண்ணிக்கை.
2009 - 115+1
2008 - 48
2007 - 40
2006 - 48
ஆக...2009 ல் மட்டும் 115 +1 எழுதிவிட்டேன்.. இன்றைக்கு தான் கவனித்தேன்.. மற்ற வருடங்களை பார்த்தபோது இந்த வருடம் ரொம்பவே அதிகம் னு தோன்றியது...
எனக்கும் கொஞ்சம் எழுத்தில் இருந்து ஓய்வு தேவைன்னு படுது. கொஞ்ச நாட்கள் ப்ளாக் மறந்து, இண்டர்நெட், நண்பர்கள் எல்லாம் மறந்து அமைதியாக இருக்கனும்னு நினைக்கிறேன். அந்த அமைதி அவசியமானதும் கூட.
ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேர் முதல் அதிக பட்சமாக 1000 பேருக்கு மேல் பார்வைகள் பதிவுகளை படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களும் நன்றிகளும். எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்தது போலவே திரும்ப வந்து எழுதும் போதும் கொடுங்கள் !!
தலைவர் பாணியில் வருவேன் ஆனா......எப்ப வருவேன்.. எப்படி வருவேன் னு மட்டும் சொல்ல மாட்டேன்.. வர்ட்டா.... ஹா ஹா..ஹா...!! :))))
அணில் குட்டி அனிதா : அட ப்ளாக் ஒரு 7 1/2 தொல்ல கொஞ்ச நாள் உங்களுக்கு இல்லையா.. ஹை..... எனக்கு ஜாலி.. அம்மணி எழுதற கொடுமைய எல்லாம் நான் தான் முதலில் படிக்கிறேன்... அதனால் எனக்கு தான் பர்ஸ்டு ரீலிப்பூ..
சரி மக்கா இம்புட்டு சொல்லியும் கீழ இருக்கறாப்பல யாராச்சும் அம்மணிக்கு மெயில் அனுப்பனீங்க நானு டெரரு ஆயிடுவேன்... ..
1. மேடம் இருக்கீங்களா செத்துட்டீங்களா?
2. யக்கா.. உடம்புக்கு ஏதும் பிரச்சனையா?
3. கவிதா யாராவது ஏதாவது பிரச்சனை செய்தாங்களா?
4. கவி வாட்ஸ் அப் ரே..?
5. யக்கா ப்ளாக் ஆ எவனா எதாச்சும் செய்தானா சொல்லு.. உலகத்துல நான் எந்த மூலையில் இருந்தாலும் வந்து அவனை கவனிக்கிறேன்..
6. கவிதா என்ன பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா தீர்த்து வைக்கலாம்..
7. கவிதா என்ன தீடீர்ன்னு?
8. அணிலு ஏதாச்சும் சொல்லிடிச்சா?
9. சரி கவிதா நல்லாயிருங்க.. கீப் இன் டச் சூ..
10. ஹல்லோ டொக் டொக் டொக்..மே ஐ கம் இன்.. எனி ஒன் அட் ஹோம்.. ஆர் யூ ஸ்டில் அலைவ்வ்வ்வ்வ் ?!!
பீட்டர் தாத்ஸ் :- “Sometimes the most urgent thing you can possibly do is take a complete rest”
.
Labels: கதம்பம் 16 Comments
திருட்டு பசங்க திருட்டு பசங்க தான்,,!!
சென்னையில் தனியாக நபர்கள் இருப்பதை கவனித்து, அந்த வீடுகளில் கொள்ளைகள் நடப்பது சகஜமாகிவிட்டது. நாங்கள் இருக்கும் இடத்தில் தனியாக பகல் 11 மணி அளவில் நடந்து சென்ற பெண்ணின் தங்க சங்கிலி'ஐ திருடன் அறுத்து சென்றுவிட்டது, எங்கள் நகர் பெண்களுக்கு் மனதில் கிலி'யை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து அடுத்த அடுத்த நாள் ஒரே இடத்தில் இரண்டு முறை நடக்கவே... எல்லோரும் பயந்து, போலிசார் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து ரோந்தில் இருந்து வருகிறார்கள்.
இந்த மாதிரி திருடர்களை பற்றியும், வீடு புகுந்து திருடும் ஆட்களை பற்றிய பேச்சு வரும் போது, என் கணவரிடம் "நீங்கள் கவலை படாதீர்கள், எப்படிப்பட்ட திருடன் வந்தாலும்.. நான் அவனை உட்காரவைத்து, அன்பாக பேசி, சாப்பாடு எல்லாம் போட்டு நல்லவானாக்கி அனுப்பி வைக்கிறேன்" என்றேன்.
அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி சிரிக்கிறார் என்று முறைத்தால்.."திருட்டு பசங்க திருட்டு பசங்க தான்.. மாறவே மாட்டாங்க. .நீ உட்கார்ந்து பேசி சாப்பாடு எல்லாம் போட்டாலும், எல்லாம் முடிந்த பிறகு உன் நடு மண்டையில் நச்'ன்னு (அது ஏன் நடுமண்டை என்ற கேள்வி எழுந்தது) போட்டுட்டு, அவன் வந்த வேலையை முடிக்காமல் போக மாட்டான் "என்றார்.
"அப்படியா? "என்று நானும் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினேன்.. ஹி ஹி..அப்படி என்ன இதுல சிந்திக்க இருக்குன்னு நீங்க நினைக்கறீங்களா.. வேற ஒன்றும் இல்லை.. நடு மண்டையில் நச்சுன்னு போட்டால், என்ன செய்வது என்று தான்.
இது வரையில் இரண்டு முறை நேரடியாக திருட்டை பார்த்து இருக்கிறேன். திருடும் போது இல்லை, திருடிக்கொண்டு சென்ற பிறகு. என்னுடைய ஆயா வெள்ளிக்கிழமை ஆனால் போதும் காலையில் 4 மணிக்கு எழுந்து, தலையில் எண்ணெய் வைத்து, வெளி அடுப்பில் சுடத்தண்ணீர் வைத்து, குளிப்பது வழக்கம். எப்போதும் 4 மணிக்கு எழுந்தாலும், வெள்ளியன்று தலைக்குளித்தல் என்பது திருடனுக்கு வசதியாக போயிற்று. ஏனென்றால் அன்று தான் அவர் கம்மல், மூக்குத்தி கழட்டி வைத்துவிட்டு குளிப்பார்.
அன்றும் அப்படித்தான், நாங்கள் எல்லாம் உறங்கிக்கொண்டு இருக்க, ஆயா கம்மல், மூக்குத்தியை கழட்டி வைத்துவிட்டு, எப்போதும் போலவே கதவையும் திறந்து வைத்துவிட்டு, அவர் வெளியில் சுடத்தண்ணீர் வைக்கும் இடத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக்கொண்டு இருக்க, தொடர்ந்து கவனித்து வந்திருந்த திருடன், வீட்டில் நுழைந்து கம்மல் மூக்குத்தியை தேடத்தொடங்கி இருக்கிறான்.
படுத்திருந்த எங்கள் அனைவரையும் தாண்டி, இரண்டு பீரோக்களை திறந்து துணி எல்லாம் இழுத்து கீழே போட்டு, மற்ற அறைகளிலும் துளிக்கூட சத்தமே இல்லாமல் தேடிவிட்டு, கடைசியில் , அடுப்பங்கறையில் ஒரு டப்பாவின் மூடி மேல் சர்வ சாதாரணமாக கழட்டி வைத்திருந்த கம்மல், மூக்குத்தியை எளிதாகவே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
குளித்துமுடித்து வந்த ஆயா கண்ணில் பட்டது பீரோக்கள் !?? நான் தான் முதல் டார்கட்... பாப்பா எழுந்திரு... எவனோ உள்ள வந்துட்டு போயிருக்கான்...அதுக்கூட தெரியாம தூங்கறியா...?!!
".........................." (தூக்கம் கலையாமல் கடுப்பாக எழுந்த எனக்கு பீரோவை பார்த்ததும், பதட்டத்தோடு சட்டென்று எழுந்து நின்றுவிட்டேன்.)
"பாப்பா, உன்னைத்தாண்டி தானே போயிருக்கான்..காலடி சத்தம் கூட தெரியாமல் தூங்கனியா. .என்ன பொண்ணும்மா நீ.. பொண்ணு இப்படியா தூங்கறது... ?!!
ஆரம்பிச்சாட்டங்கய்யா காலையிலேயே.. பொண்ணு எப்படி இருக்கனும்னு... ம்ம்ம்.. இன்னைக்கு முழுக்க நிச்சயமாக வீட்டில் இருக்கும் அத்தனை வாயிலும் நான் தான் மாட்டுவேன். இருந்தாலும் ஆயா சொல்லுவதில் ஏதோ இருக்குமோ??? நாம் அப்படி தூங்கி இருக்கக்கூடாதோ?!! என்ற கேள்வி எழாமல் இல்லை...
எல்லாம் திறந்து இருந்தாலும் எதுவும் திருடு போகவில்லை என்று ஹாலையும், ரூம்; யையும் வைத்து முடிவு செய்த நாங்கள், ஆயாவின் கம்மலை மறந்து போனோம், ஆயாவும் தான். !!
அரைமணி நேரம் கழித்துத்தான் ஆயா சமையல் அறை சென்று பார்க்க, கம்மல் காணவில்லை என்று தெரிந்தது. அப்படியே முழங்கால் கட்டி உட்கார்ந்துவிட்டார்கள்.
*********************
இது முடிந்து பல மாதங்கள் கழித்து தாத்தா எங்களின் குடும்ப ஜாதக புத்தகத்தை எடுத்துவர சொன்னபோது, எடுத்து வந்து அவரின் பக்கத்தில் உட்கார்ந்து முதலில் ஆரம்பித்த தாத்தாவின் ஜாதகத்தில் இருந்து புரட்ட ஆரம்பித்தேன். அடுத்து ஆயா ஜாதகம் வந்தது. திருடு விஷயமாக தாத்தா குறிப்பு ஏதோ எழுதி இருப்பதை பார்த்து படிக்க ஆரம்பித்தேன்.
அதாவது திருடு நடந்த பிறகு இரவும் பகலுமாக உட்கார்ந்து ஆயாவின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து, கணக்கிட்டு, "இந்த கிரகபலன்களினாலும், பார்வையினாலும் பத்மாவின் கம்மல் தொலைந்துபோனது - பொருள் நஷ்டம்" என்று எழுதி இருந்தார்.
அட.. தாத்தா இவ்வளவு நல்லா ஜாதகம் பார்க்கிறாரே? ஏன் இந்த கணக்கை எல்லாம் இந்த திருட்டு சம்பவம் நடக்கும் முன்னமே கணக்கிட்டு சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த திருட்டு நடக்காமல் ஆயா கவனமாக இருந்து இருக்கலாமே? நடந்து முடிந்த பிறகு கணக்கிட்டு பார்ப்பதில் என்ன பலன்? ஒரு வேளை இவரின் ஜாதகம் பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்கிறாரா?
ஏன் ஜோசியர்கள் நடந்து முடிந்த விஷயத்திற்கு இவ்வளவு துள்ளியமாக காரணம் கண்டு பிடிக்கிறார்கள்? இத்தனை துள்ளியமாக ஏன் அவர்களால் எதிர்காலத்தை கணிக்க முடிவதில்லை...? அப்படிமட்டும் முடிந்துவிட்டால், எத்தனை விஷயங்களில் நாம் கவனமாக இருக்க முடியும்.
தாத்தாவிடமும் கேட்டு விட்டேன் தான்... ஆனால் பதில் ஏதும் தாத்தா சொல்லாமல் "ம்ம்ம்ம்.....பத்தா..(பத்மா) உன் பேத்தியம்மா கேள்விய பாத்தியா..?!! அம்மாடி...நீ கேட்டுட்டே. .இனிமே அப்படி கணித்து வைக்க முடியுதான்னு பார்க்கிறேன்... " என்று அப்போது சொன்ன தாத்தா அடுத்து கணித்து வைத்து இருந்தது என் அப்பாவின் மரணம் குறித்தது....
அதை எழுதாமல் மனதில் வைத்திருந்து..... அப்பா இறந்தபின், அவரின் இழப்பு தாங்காமல் தனியாக அமர்ந்து அப்பாவை பற்றி பேசிக்கொண்டே இருப்பார், அப்படி பேசும் போது இந்த குறிப்பையும் சொன்னார், மார்ச் 18 ஐ தாண்ட மாட்டேன்னு தெரியும்டா.. உன்னை விட்டுட்டு ஊருக்கு போகாமல் இருந்து இருக்கலாம்.. உங்க அம்மா உன் பக்கத்தில் இருந்து இருந்தா..... உன் உயிரை எப்படியும் திருப்பி கொண்டு வந்து இருப்பா...." என்றார்.
கேட்டுக்கொண்டு இருந்த நான் அப்போது நினைத்தது...."உண்மைதான் ஆயா மட்டும் இருந்து இருந்தால், கண்டிப்பாக அப்பா இறந்து இருக்கமாட்டார்."
அணில் குட்டி அனிதா : சரி என்ன சொல்ல வரீங்க..திருட்டு பசங்கள திருத்த முடியாதுன்னா? இல்ல உங்க தாத்தா நல்ல ஜோசியரா? வேஸ்டா?
பீட்டர்தாத்ஸ் : Thief : - Set a thief to catch a thief ....... :
Horoscope : - “There are many methods for predicting the future. For example, you can read horoscopes, tea leaves, tarot cards, or crystal balls. Collectively, these methods are known as "nutty methods." Or you can put well-researched facts into sophisticated computer models, more commonly referred to as "a complete waste of time.”
.
Labels: சமூகம், பழம்-நீ 21 Comments
கட்டில் காட்சிகள்
அதிகமாக ஆங்கிலபடங்கள் பார்க்க 90 களில் ஆரம்பித்தது. ஆங்கில படங்களில் கடைசியாக பார்த்த Terminator Salvation 2009 வரை என்ன இல்லை? நம்மை விட அதிக அளவு சென்டிமென்ட்'ஸ், காதல், குடும்பம், குழந்தைகள், பாடல்கள், அழுகை, சிரிப்பு, பிரிவு, நடனம் என்று எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் விட வியக்கவைக்கும் டெக்னாலிஜி! பல வருடங்கள் முன்னோக்கி எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் அவர்களின் சிந்தனையும் செயலும் ஆச்சரியப்பட வைக்கிறது. நாம் இன்னும் பின்னோக்கி சென்று 70-80 கதைகளை தேடிபிடித்து எடுத்து அதை 100% வெற்றி பெறவும் செய்கிறோம். டெர்மினேடர் சீரியல் படங்களில் எல்லாம் இயந்திர மனிதனுக்கு க்கூட இதயம் இருக்கிறது போன்று அமைக்கப்பட்ட காட்சிகள் தமிழ் சினிமாக்களின் சென்ட்டிமெண்டுகளை எல்லாம் வீழ்த்திவிடுகின்றன.
தலைப்புக்கு வருவோம், காதல், முத்தம், அணைப்பு, கட்டில் காட்சிகளும் ஆங்கில படங்களில் மிகைப்படுத்தப்படாமல், அதாவது கதையோடு ஒன்றி தேவையான இடத்தில், அதுவும் நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. ஆனால் தமிழ் படங்களில்? அடடா... குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க முடியாதவாறு நம்மை நெளிய வைக்கின்றன. முத்தம் கொடுப்பதை நேராக காட்டமாட்டார்கள், (இதில் கமல்ஜி விதிவிலக்கு) முன்னே இரண்டு பூக்கள் கேமாராவிற்கு முன் வந்து நிற்கும், இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து நம்மவர்கள் தங்களின் கிரியேட்டிவிட்டியை காட்டுவார்கள். ஆனால் அத்தோடு விடுவதில்லை, அந்த பெண்ணின் கண்ணில் ஆரம்பித்து, உதடு, கழுத்து, மார்பு, இடுப்பு, தொப்புள் என்று கேமராவின் கண்கள் மட்டும் அல்ல அனைவரின் கண்களும் ஒன்றொன்றாக சென்றுக்கொண்டே இருக்கும். இது தேவையா? இத்தனை முக்கியத்துவம் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணின் உடலுக்கு கொடுத்து தமிழ் படங்களில் காட்டுவதை என்று நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.
சின்ன வயதிலிருந்து, இந்த பெண்ணியம் பேசும் பேச்சாளிகளிடம் இதை பற்றி கேட்கவேண்டும் என்று நினைத்ததுண்டு, ஆ..ஊ வென்றால் பெண்களுக்கு எதிராக அது நடந்து விட்டது இது நடந்து விட்டது என்று கூப்பாடு போடும் பெண்கள், நடக்க தூண்டுதலாக நடை உடையுடனும், இப்படி கவர்ச்சியாகவும் உடம்பை காட்டி மிகவும் அசிங்கமாக நடிக்கும் பெண்களுக்கும் எதிராக என்றாவது குரல் கொடுத்தார்களா? ஒரு முறை குஷ்புவை எதிர்த்து குரல் கொடுத்தார்கள், அந்த அம்மா திருமணத்திற்கு முன்னும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள் என்று துடைப்பம் செருப்பு எல்லாம் காட்டினார்கள்.
பல வீடுகளில், குறிப்பாக பல இளைஞர்களின் அறைகளில் இப்படி அரை குறை ஆடையுடன் கூடிய நடிகையின் படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. அவர்களுக்கு தன் ஆசைகளை தீர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட படங்கள் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்களை பார்க்கும் போது இது இல்லாவிட்டால் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்ததுண்டு.
மிகவும் விரசமான தாபத்தை ஆசைகளை தூண்டி விடக்கூடிய கட்டில் காட்சிகள் தமிழ் படங்களில் காட்டபடுகின்றன. உலக நாயகனின் பல படங்களை இதற்கு உதராணமாக சொல்லலாம். அவை தேவையில்லை, திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. தேவர்மகன், ரேவதி-கமல்ஜி, நாயகன் - சரண்யா- கமல்ஜி, ரோஜா - அரவிந்த்சாமி-மதுபாலா, பாம்பே - அரவிந்த்சாமி மனிஷா கொய்ராலா
பயணங்கள் முடிவதில்லை மோகன்- பூர்ணிமா ஜெயராம், வெள்ளை ரோஜா, சுரேஷ்-ராதா, அலைகள் ஓய்வதில்லை, கார்த்திக்-ராதா.. எம்.ஜி. ஆர் -லதா, மஞ்சுலா, etc இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை எல்லாமே அந்த இயக்குனரின் எண்ண ஓட்டத்தை, ஆர்வத்தை, விருப்பத்தை காட்டுகிறது என்றே வைத்துக்கொள்ளலாம். வேட்டையாடு விளையாடு படத்தில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வருவார்கள். நேராக மாடிக்கு போவார்கள் உடனே முதலிரவு.. அட அட அட..?!! தமிழ் சினிமாக்களில் என்ன ஒரு முக்கியத்துவம், அவசரம் அந்த முதலிரவு காட்சிகளுக்கு மட்டும்.? ஒரு திருமணத்தில் இது மட்டும் தான் ஹை லைட் செய்து காட்டவேண்டிய விஷயமா? இதை விடவும் எத்தனையோ முக்கியமான நமக்கு தேவையான சடங்குங்கள் இருக்கின்றனவே.. ஒரு வேளை நாம் அதை தான் இயக்குனர்களி்மிருந்து எதிர்பார்க்கிறோமா? அதனால் கொடுக்கிறோம் என்று அவர்கள் சொல்லுவார்களோ?
கதையின் ஓட்டத்தோடு வருகின்ற முத்தக்காட்சிகள், கட்டில் காட்சிகள் அவசியமே என்றாலும் அதை மிகவும் விரசமாக காட்டாமல், தேவை (படத்திற்கும், நமக்கும்) என்ற அளவில் காட்டினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. Sylvester Stallone - இவரின் ஒரு படத்தில் (பெயர் நினைவில்லை) இவரும் , படத்தின் கதாநாயகியும் நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் காட்டப்படும், அசிங்கமாகவோ, கவர்ச்சியாகவோ, விரசமாகவோ முகத்தை சுளிக்கும் படியாகவோ இருக்காது. காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும், கேமரா ஆங்கி்லும் அப்படி இருக்கும். ஏன் மிக சிறந்த படமான டைட்டானிக் படத்தில் வரும் முத்த காட்சிகளும், கட்டில் காட்சிகளும் நம்மை முகம் சுளிக்க வைத்தனவா? ரசிக்கமுடிந்ததல்லவா? அந்த படத்திலும் நிர்வாணமாக ஒரு பெண்ணை காட்டி இருக்கிறார்கள் தானே?
தமிழ் படங்களில் தவிர்க்க வேண்டிய கட்டில் காட்சிகளை வரவேற்றும், தேவையான மற்றவற்றில் கவனம் செலுத்தவும், உலக தரத்திற்கும் முன்னோக்கிய சிந்தனையோடும் படங்கள் எடுக்க மாட்டார்களா என்று எதிர்ப்பார்க்கும், கட்டில் காட்சிகளையும், படங்களில் சம்பந்தமே இல்லாமல் முதல் இரவு காட்சிகளின் அவசரத்தையும் வெறுக்கும் ஒரு ரசிகைன்னு வைத்துக்கொள்ளலாம்.
அணில் குட்டி அனிதா : ...............கவி ஆர் யூ..ஓகே?????? ஏதும் பிரச்சனையா? என்க்கிட்ட கூட சொல்லவே இல்ல?
பீட்டர் தாத்ஸ் : Life without sex might be safer but it would be unbearably dull. It is the sex instinct which makes women seem beautiful, which they are once in a blue moon, and men seem wise and brave, which they never are at all. Throttle it, denaturalize it, take it away, and human existence would be reduced to the prosaic, laborious, boresome, imbecile level of life in an anthill. ~Henry Louis Mencken
Labels: சமூகம் 44 Comments
பிரவாகம் காயத்' திரி 'க்கு.....
பிரவாகம் காயத்திரி குட் மார்னிங் மெயில் அனுப்புவாங்க. அதில் ஒரு முறை இந்த இயற்கை காட்சி வந்தது. வரைந்து பார்க்கலாமே என்று முயற்சி செய்தேன். இதை வரைந்த பிறகு ஒரிஜினல் படத்தை பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக போச்சி.. ஏன்னு எல்லாம் கேட்கப்பிடாது.... :))))))))
* படத்தை க்ளிக்'கி பெரிதாக்கி பார்க்கவும். :)
அணில் குட்டி அனிதா : ஆமாம்ம்மா...... ஏன்ன்னு எல்லாம் கேட்கப்பிடாது.. ஒரிஜினல் படத்தை காட்ட மட்டும் சொல்லுங்க... த்த்தூஊஊஊஊ... ன்னு துப்பிட்டு போயிடுவீங்க.. அதுக்கு தான் அம்மணி பில்டப் டு கொடுத்து இருக்காங்க.. (ஆனா மக்கா நான் சொல்றனேன்னு உணர்ச்சி வசப்பட்டு துப்பிடாதீங்க. .உங்க கம்பியூட்டர்க்கு தான் டோட்டல் டேமேஜ். .ஹி ஹி.. ... )
காயத்திரி யக்கோவ்வ்வ் ..! ஏண்டா இவிங்களுக்கு இப்படி எல்லாம் மெயில் அனுப்பினோம்னு.. !! இப்பவாச்சும் நீங்க ஒரு நிமிட் யோசிச்சி பாக்கனும்.. சொல்லிட்டேன்..!!
பீட்டர் தாத்ஸ் :- Drawing is the honesty of the art. There is no possibility of cheating. It is either good or bad.
அணில் குட்டி அனிதா : பீட்டரு....போதும் நிறுத்திக்கோ....!!! வர வர நீ டூ மச்சா கவி க்கு குவாட்(டர்) கொடுக்கற ....என்னால முடியல......நிறுத்திக்கோஒ.... :(( சொல்லிட்டேன்.. டென்ஜன் பண்ணாத என்னைய !! :(
Labels: ஓவியம்/புகைப்படம் 10 Comments
ஆடு - புலி ஆட்டம்
ஆடு புலி ஆட்டம் இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக சொல்லப்படுகிறது. திண்ணையில் அமர்ந்து விளையாடுவார்கள்.
எங்க வீட்டில் இந்த ஆடு - புலி ஆட்டம் அடிக்கடி விளையாடுவோம். (எங்க வீடு ன்னா.. ஆயா, தாத்தா வீடு) , திருமணத்திற்கு பிறகு ஒரு முறை கூட இந்த விளையாட்டை விளையாடவில்லை. எங்கள் வீட்டில் ஆயா வை இது வரையில் இந்த ஆட்டத்தில் யாரும் வெற்றி பெற்றது இல்லை.
அப்பாவும் ஆயாவும் இந்த விளையாட்டை விளையாடி பார்த்ததில்லை. அப்பா ஒரு வேளை ஆயாவை தோற்க்கடித்து இருக்கலாம் என்றாலும் ஆயாவை போன்ற சமயோஜிதமாக யோசிக்கும் திறன் அப்பாவிற்கு உண்டா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆயாவுடன் விபரம் தெரிந்து நான் விளையாடவில்லை என்றாலும், விளையாடிய வரை தோற்று த்தான் போயிருக்கிறேன். 16 ஆடுகளில் 12 ஐகொண்டே புலியை அடக்கிவிடுவார்கள். ஆச்சரியம்.. மீதமுள்ள 4 காய்களை எங்களின் கையில் திணித்துவிட்டு வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
ஆயா வை இதில் மட்டும் இல்லை, எதிலுமே வெல்வது அத்தனை சுலபமல்ல.. A great Courageous Woman !!. :) ..
இது ரொம்பவும் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கும். மேலுள்ள படம் தான் ஆடு - புலி ஆட்டத்தின் கட்டங்கள். தரையில் சுண்ணாம்பு கட்டி /சாக்பீஸ் கொண்டு வரைந்து கொள்ளலாம். தேர்வு எழுத பயன்படுத்தும் அட்டையின் பின்புறம் வரைந்தும் வைத்துக்கொள்ளலாம்.
இருவர் விளையாடகூடிய விளையாட்டு
புலிகள் - 3 - படத்தில் இருப்பது போன்று ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது வைத்துக்கொள்ள வேண்டும்
ஆடுகள் - 16 இதை புலிகள் நகராதவாறு ஆடுகளை வைத்து விளையாட வேண்டும்.
3 புலிகளையும் நகராதவாறு செய்துவிட்டால் ஆடுகள் புலிகளை அடக்கிவிட்டன. இல்லையேல் புலிகள் ஆடுகளை விழுங்கிவிட்டது. புலிகளுக்கு பக்கத்தில் ஆடுகளை வைத்தால் தாண்டி வெட்டிவிடும். அதனால் புலிகளை கட்டும் போது அது தாண்டாதவாறு பார்த்து ஆடுகளை வைக்கவேண்டும்.
சோழிகளை காய்களாக பயன்படுத்துவோம்.
புலிகளுக்கு தான் இதில் நிறைய வாய்ப்புகள் உண்டு. மிக எளிதாக ஆடுகளை விழுங்க முடியும். அதனால் ஆடுகளை தேர்ந்தெடுத்து விளையாடுபவர்களுக்கு தான் இந்த ஆட்டம் கஷ்டம். ஆடுகளாக விளையாடி பார்ப்பதில் தான் ஒரு திரில் இருக்கும்.
குறிப்பு- ஆடு-புலி ஆட்டத்தை பற்றி ஏதும் தகவல் இருக்கிறதா என்று கூகுலில் தேட, கிடைத்தது பதிவர் சிந்தாநிதி யின் இந்த இடுகை. நன்றி சிந்தாநதி.
அணில் குட்டி அனிதா : - ஓஓஓஓ்......அம்மணி .செம வெட்டியா ... ?!! அவனவன் கம்பூயூட்டர் ல உலகத்தையே சுத்திட்டு வரான்.. இப்பத்தான் இவங்க....ஆடு.. புலி ன்னு க்கிட்டு இருக்காங்க...... மக்கா பாத்து... அப்படியே கற்காலத்துக்கு போயி இது தான் கல்...இரண்டு கல்லை இப்படி தேச்சா....நெருப்பு வரும் னு சொல்லிக்கொடுக்காம பாத்துக்கோங்க............ ...... முடியலடா சாமி....!!!!
பீட்டர் தாத்ஸ் : It's not so important who starts the game but who finishes it.
.
Labels: சமூகம் 12 Comments
வீடு
பாலுமகேந்திரா அவர்களின் படம் ஒன்று வந்தது. நடிகை அர்ச்சனா மட்டும் நினைவு இருக்கிறது. ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்குள் எத்தனை பிரச்சனை சங்கடங்கள் என்று சொல்லும் படம். இல்லம் என்ற சிவகுமார்ஜி, அமலா நடித்த படமும் வீட்டை பற்றிய கதைதான். இரண்டும் பார்க்கும் போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம் வீட்டை பற்றிய கனவுகளும் கற்பனைகளும் இல்லாமல் இல்லை என்பது புரியும். வீட்டை கட்டிப்பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி கூட உண்டு.
வீட்டை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்தது. கட்டிடம் சார்ந்த படிப்பை படிக்கவில்லை என்றாலும்,கட்டிடம் கட்டும் போது பார்த்து கவனித்து அதை சார்ந்த படிப்பு படித்தவர்களுடன் பேசி தெரிந்துக்கொண்ட விஷயங்களை எழுதி இருக்கிறேன். தவறுகள் இருக்கலாம், கவனிப்பவர்கள் சுட்டவும்.
வீட்டுமனை வாங்குவதில் இருந்து ஆரம்பிக்கலாம். பொதுவாக மனை வாங்கும் போது திசை பார்ப்பார்கள், இப்போது இருக்கும் சூழலில் எப்படியோ ஒன்று வாங்கிவிட்டாலும், கண்டிப்பாக அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
1. வாஸ்து :
எல்லோருமே பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு செய்துவிட்டால் பிற்காலத்தில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனால் ஒரு பிரச்சனை என்று யாராவது சொல்லும் போது தேவையில்லாமல் நாம் கவலைப்பட்டு அந்த சமயத்தில் முடிந்தும் முடியாமல் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. வாஸ்து என்ற கடவுள் அந்த நிலத்தில் எந்த நிலையில் சயனத்திருக்கிறார் என்பதை கடகால் தோண்டுவதற்கு முன்னே சொல்லிவிடுவார்கள். இதுவும் திசையை வைத்து தான் கணிக்கிறார்கள். அதைக்கொண்டு குறிப்பாக சமையல் அறை, கழிவறைகள், தண்ணீர் வரவு எந்தெந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று சரியாக வைத்துவிட்டால் போதும்.
2. காற்று சுழற்சி
இது ஒவ்வொரு காலக்கட்டதிற்கு தகுந்தார் போன்று மாறும். அதாவது உங்கள் வீடுகளிலேயே கவனித்து பார்த்தீர்கள் என்றால் வருடம் முழுதும் நமக்கு காற்று ஒரே திசையில் இருந்து வராது. மாறிக்கொண்டே இருக்கும். இந்த காற்றின் திசை சுழற்சியை கவனித்து, அதற்கு தகுந்தார் போன்று வீட்டின் கதவுகள், ஜன்னல் வைக்க நாம் கட்டிடத்தை வடிவமைக்க வேண்டும். அதை வெற்று நிலமாக இருக்கும் போது முடிவு செய்ய முடியும். காற்றின் சுழற்சி எந்த ஒரு காலகட்டத்திலும் வீட்டினுள் வாராமல் தடையாக எந்த சுவரையும் எழுப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.இயற்கை காற்றினால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.
3. தண்ணீர்
நிலத்தடி நீரோட்டத்தை மனை இருக்கும் இடத்திலோ, அதை சார்ந்தவர்களிடமோ தீர விசாரித்து, வாஸ்த்துவையும் மனதில் கொண்டு பிறகு தண்ணீர் எடுக்கும் இடத்தை குறிக்க வேண்டும். குத்துமதிப்பாக தோண்டினால், நிலத்தடி நீரோட்டம் இல்லாத இடமாக போனாலோ, பாறை இருந்துவிட்டாலோ பிரச்சனை.
4. முன் வாசல்
கவனித்து பார்த்தவரை தெற்கு வாசல் சிறந்தது என்று பலர் சொல்லி கேட்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் நிலமாக நாம் தேர்ந்தெடுத்து வாங்கலாம். இல்லாதபட்சத்தில் கிழக்கு (அ) மேற்காக முன் வாசல் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது. இதற்கு காரணம் சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டின் முன் விழும். அதனால் வெப்பம் அதிகமாக வீட்டுக்குள் காலையும் மாலையும் பரவும். முன் வாசல் கதவுகளில் ஆண்டு முழுதும் தொடர்ந்து சூரிய வெப்பம் தாக்குவதால் மிக குறுகிய காலத்தில் கதவு அழகிழந்தும், வெளுத்தும் போய்விடும். தெற்கு வாசல் ஏனென்று ஒரு முறை யாரையோ விசாரித்தபோது மேற்கண்ட விளக்கம் எனக்கு கொடுக்கப்பட்டது. .
5. வெளிச்சம்
காற்றுக்கு அடுத்து முக்கியத்துவம் தரவேண்டிய விஷயம் வெளிச்சம். கண்களுக்கு மட்டும் அல்ல, நல்லமுறையில் தெளிவாக நம் மூளை வேலை செய்யவும், கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் போன்றவை அடிக்கடி நிகழாமல் இருக்க வெளிச்சம் நமக்கு உதவி செய்கிறது. இதற்கு நம் கட்ட விருக்கும் வீட்டை சுற்றி உள்ள வீடுகளின் அமைப்புகள் மிகவும் முக்கியம். வெளிச்சம் வராத அளவு மிக உயர்ந்த கட்டிடங்கள் நம் மனையை சுற்றி இருந்தால், சுற்றிலும் 5- 7 அடி அளவு இடம் விட்டு வீட்டை கட்டலாம். இது மழைபெய்யும் போது நம் வீட்டில் விழும் தண்ணீர் நிலத்திற்குள் செல்லவும் வழிவகுக்கும். சந்துகள் முழுசாக சிமெண்டு போட்டு மூடிவிடாமல், செடி, கொடி, மரங்கள் வைத்து பராமரித்தால் நல்லது. காரணம் நல்ல காற்றும், செடி, கொடி, பூக்களின் வாசமும் கிடைக்கும். மழைநீர் வீணாகாமால் நிலத்தடி நீராக மாறும்.
6. அஸ்திவாரம்
எந்த ஒரு விஷயத்திற்கும் அஸ்திவாரம் மிகவும் முக்கியம். எத்தனை செலவானாலும் அஸ்திவாரம் அந்த இடத்திற்கு தகுந்தார் போன்று, இன்றிலிருந்து அடுத்த 40 வருடங்களுக்கு அந்த இடம் எப்படிப்பட்ட வளர்ச்சிகளை பெரும் என்பதை கணக்கிட்டு ஆழம் மட்டும் இல்லை உயரத்தையும் அதிகப்படுத்தி போட்டு விட வேண்டும். அரசு செயற்படுத்தும் திட்டங்களின் மூலம் நம் குடியிருப்பில் இருக்கும் ரோடுகள் உயரப்படுத்தப்படும், இது 4 ஆண்டுக்கு ஒரு முறை என்று ஊகித்தாலும் 40 வருடங்களில் எத்தனை முறை ரோடு உயர்த்தப்படும் என்பதை கணக்கிடலாம். இப்படி கணக்கிடாமல் தெருவிலிருந்து ஓரளவு உயரமாக கட்டிடத்தை எழுப்பினால், நாளடைவில் வீடு உள்ளேயும் , தெரு மேலேயும் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. அதனால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே வர வாய்பிருக்கிறது. அதனால் வீட்டின் உயரத்தை எப்போதும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.
7. கவனிக்க வேண்டியவை
- மேல்தளம், வெப்பம் நேரடியாக வீட்டில் இறங்காமல் வெதர் ப்ரூஃப் கண்டிப்பாக போட்டுவிடவேண்டும்.
- நம் வீட்டு மழைநீர் சுற்றி உள்ள வீடுகளில் விழாதவாறு நம் வீட்டு ஜன்னல், கதவு வெளிப்புற லாஃப்டுகள் அமைக்க வேண்டும்.
- மேல் மாடி மழைநீர் வீணாகாமல் கிணற்றுக்குள் அல்லது ஆழ்துளைக்குக்குள் செல்லும் வசதியை செய்து விட வேண்டும்
- வாகனங்கள் நிறுத்த வசதியாக இடம் அமைத்து க்கொள்ள வேண்டும்
- கிட்சன் ஒர்க் ஸ்பேஸ் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் நல்லது
- வாஷிங்மிஷின், கேபிள், டிஷ் வைக்க தேவையான புரொவிஷன் வைத்துக்கொள்வதும் நல்லது.
- அரசாங்கத்தின் கழிவுநீர் குழாயின் மட்டத்தை விட, அதனை சென்று அடையும் நம் வீட்டு கழிவு நீர் குழாய் குறைந்தபட்சம் 3-4 அடி உயரம் இருந்தால் நல்லது
- எல்லாவற்றிக்கும் மேல் நாம் வீடு கட்டும் போது, ஜல்லி, செங்கல், மணல் போன்றவற்றை தெருவில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கொட்டாமல் பார்த்துக்கொள்வது ரொம்பவும் முக்கியம். தெருவில் கொட்டி வைத்தே நம் வேலையை முடிக்கிறோம். அது மற்றவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது என்பதை நாம் என்றும் சிந்தித்து பார்த்தே இல்லை.
- வரவேற்பு அறை மற்றும் உள்அறைகள் போன்றவற்றில் பர்னீச்சர் எப்படி போடுவோம், அல்லது எப்படிப்பட்ட பர்னீச்சர் நமக்கு போட விருப்பம் என்பதற்கு ஏற்றார் போன்று அவற்றின் அளவுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். .
அணில் குட்டி அனிதா : அட... இம்புட்டு சொல்லி இருக்காங்க ஆனா அம்மணி இன்னும் சொந்தமா வூடு கட்டவே இல்லையே?!!! அட கடவுளே...... .கட்டாமேயே இப்படி ஒரு பதிவா? இவிங்க மட்டும் வூடு கட்டியிருந்தா.. இன்னும் செமத்தியா பதிவுல வூடு கட்டுயிருப்பாங்கப்பா .. ............ சொல்றதுக்கு இதுக்கு மேல என்ன இருக்கு??????
பீட்டர் தாத்ஸ் : - “A house is made of walls and beams; a home is built with love and dreams.”
“Home is not where you live, but where they understand you”
“Home, the spot of earth supremely blest, A dearer, sweeter spot than all the rest”
.
Labels: சமூகம் 17 Comments
தம்பிக்கு பிறந்தநாள்
ரொம்பவேஏஏஏஏ.... லேட்...ஆனாலும் தலைவர் ஸ்டைல்ல்ல்ல.... லேட் டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வருவோம்..!! னு சொல்லிக்கிட்டு....
அன்பு தம்பி Choco விற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறோம்..! அந்த கிறோம்.....ல இருக்கவங்க அணிலும் பீட்டரும்.. என்னைய விட அவங்க இரண்டு பேரையும் தம்பிக்கு பிடிக்கும் அதுவும் பீட்டரை ரொம்பவே பிடிக்கும் அதனால பீட்டர் தாத்ஸ் சார்பாக இன்னொரு தரம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி !!
இப்படிக்கு
அன்புடன், பாசத்ததுடன்... வேற எப்படி... சொல்லலாம் ம்ம்..நேசத்துடன் னும் கூட வச்சிக்கலாம். (கமல்ஜி மாதிரி படிச்சிக்கனும்! )
கவிதா
அணிலு
பீட்டர்தாத்ஸ்
Labels: கதம்பம் 8 Comments
இன்ட்டியூஷன் -(Intuition) இம்சைகள் !
Intuition - உள்ளுணர்வு - நடக்க போவதை அல்லது நடந்த விஷயத்தை பற்றிய ஊகம், இப்படி, இங்கே இது நடந்து இருக்கலாம்/நடக்கலாம் என்று நம் மனதும் அறிவும் ஒன்று சேர்ந்து நமக்கு அறிவுருத்துவது. எளிதான உதாரணம் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஜி "ராகவன்'ஸ் இன்ஸ்டின்ங்ட் " சொல்கிறது என்பார். அது படி நடந்துவிட்டால் நம்முடைய இன்ட்டியூஷன் சரி என்று நினைக்கலாம். அல்லது தவறாக நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது, எனக்கு இரண்டுமே நடந்து இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் சரியாக நடந்து இருப்பது எனக்கு என்னுடைய இன்ட்டியூஷன் மேல் ஒரு நம்பிக்கையும் உண்டு.
நேற்று இரவு என் கணவருடன் விஜயநகர் வரை வண்டியில் சென்ற போது மிக மோசமான அவரின் டிரைவிங் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவைத்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டாலும், இன்றைக்கு காலை ரவுண்டு குட்டியுடன் அவர் கிளம்பி போன சிறிது நேரத்திற்கு எல்லாம் என் மனதினுள் இருவருக்கும் விபத்து நடக்க போகிறது,அதற்கு இவரின் மோசமான டிரைவிங் ஒரு காரணமாக இருக்கும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் ஒரு பக்கம், யாரை பார்ப்பது, எப்படி இவர்களை கவனிப்பது போன்ற எண்ணங்கள் எழ அதற்கான விடைகளை தேடிக்கொண்டு இருந்தேன். எந்த நிலையில் வீடு வருவார்களோ..என்ற ஒரு வித பதட்டமும் பயமும் இருந்தது.
அவர்கள் சென்று 25 நிமிடங்களில் காலிங் பெல்.....சத்தம் கேட்டவுடன், நான் நினைத்தது நடந்துவிட்டதாகவே நினைத்து கதவை திறந்தேன். ஆமாம்...ரவுண்டுகுட்டி தான் ... வேளச்சேரி தாம்பரம் ரோடில், மடிப்பாக்கம் கூட்டு ரோடு தாண்டி சென்று கொண்டிருக்கும் போது ஒரு இரண்டு சக்கர வாகனம் இடையூறு செய்ய இருவரும் விழுந்து விபத்து ஏற்பட்டும் விட்டது. நல்ல அடி ரோடில் தேய்த்துக்கொண்டு விழுந்து இருக்கிறார்கள். சட்டை பேன்ட் இருவருக்குமே கிழிந்து, முட்டி கை, கால்களில் ரத்தக்காயத்தோடு தப்பித்து வந்து சேர்ந்து இருக்கிறார்கள். (மருத்தவமனைக்கு சென்று வந்தாகிவிட்டது, இருவரும் நலமே)
சில மாதங்களுக்கு முன் வெளி ஊரில் உள்ள நண்பர் ஒருவருக்காக பல மாதங்களாக வைத்திருந்த பரிசு பொருளை ஒரு நாள் தீடிரென்று எடுத்து கடையில் பேக் செய்ய கொடுத்தேன். அன்று காலையிலிருந்து எனக்கு என்னவோ அவர் சென்னையில் தான் இருப்பதாக என் மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் ஒருவேளை வந்து நின்றால், அப்போது அவசரமாக போய் அதை செய்து க்கொண்டு இருக்க முடியாது என்று நினைத்து கடையில் கொடுத்தேன். அன்று மாலை ஒரு 7 மணிக்கு மேல் தொலைபேசி அழைப்பு வரும் போதே அது அவர் தான் என்று எடுத்தேன், அவரே தான், சென்னையில் இருப்பதாக தகவல் சொன்னார்.
இப்படி பல சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனித்து வரும் போது இப்படி ப்பட்ட இன்ட்டியூஷன் களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து, யோசிப்பது வழக்கமாகிவிட்டது. இது சிலமுறை நெகட்டிவாகவும் நடந்து இருக்கிறது. அதாவது எனக்கு ஒன்று தோன்ற ..நடந்தது வேறு விதமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதற்காக செய்ததை சரி செய்ய முயற்சி செய்ததும் உண்டு.
இதை pre defined assumption, perception என்று கூட சொல்லலாமா? அப்படித்தான் என்னை சுற்றி உள்ளவர்கள் சொல்லுவார்கள். முன் முடிவுகளோடு ஒரு காரியத்தை நெருங்குவது. அது தவறு என்று எனக்கு நெருங்கியவர்களால் பலமுறை அறிவுறுத்தப்பட்டு இருக்கிறேன். பலருக்கு பிடிப்பதில்லை அல்லது புரிவதில்லை. என்னை நன்கு புரிந்தவர்கள் நான் இப்படி செய்வதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.. இது லூசு இப்படித்தான் என்று ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
முன் முடிவுகளோடு நெருங்குகிறேன் என்பதை விடவும், நினைப்பவை நடப்பதால் ஏற்படும் ஒரு வித கலக்கம், நடந்த பிறகு யோசிக்கும் அளவு எனக்கு பொறுமையின்மை, என்னுடைய உடன் பிறந்த வேகம் எல்லாம் ஒன்று சேர்ந்து முன் யோசனை, திட்டமிடல் செய்ய ஆரம்பித்து விடுகிறது. அதை கட்டுப்படுத்தி அமைதியாக்க நான் கற்ற பாடம் தியானம். ஆனால் தொடர்ந்து இதை செய்ய முடிவதில்லை.
ம்ஹூம் அதனால் இப்படி இன்ட்டியூஷன் இம்சைகள் தொடரத்தான் செய்கின்றன...
அணில் குட்டி அனிதா :... ம்ம்ம்....... இந்த அம்மணிக்கிட்ட வேல செய்ய முடியாது..விட்டுட்டு போனத்தான் சரிவரும்..!! அட .சொல்ல மறந்துட்டேனே... வூட்டுல ரவுண்டும், ரவுண்டோட அப்பா வும் இன்னைக்கு செம சில்லறை...பொறுக்கிட்டு வந்தாங்க.. பாக்கனுமே..!! ஹி ஹி... .. :)) காலையில ரெம்பத்தான் டிப்பு டாப் ஆ போனாங்க... வரும் போது.. ஹி ஹி..... பேன்டு சட்டை எல்லாம் கிழிஞ்சி.... அவ்வ்வ்வ்வ் !! அதே ஏன் கேக்கறீங்க...பாத்து ரசிக்கனும்... இப்படி படிச்சிட்டு ரசிக்கக்கூடாது .. :))), இன்னுன்னு சொல்லிக்கிறேன்.. இனி ரவுண்டு அப்பாவிற்கு ரவுண்டு தான் ட்ரைவர்... நோ செல்ஃப் டிரைவிங் ன்ன உத்தரவு போட்டாச்சூ....... !! :))))))
பீட்டர் தாத்ஸ் : - Intuition comes very close to clairvoyance; it appears to be the extrasensory perception of reality
.
Labels: சமூகம், பழம்-நீ 19 Comments
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
பதிவர் *ஜீவ்ஸ்* ஸிடம் இந்த பாடலை பாடி பதிவிட போகிறேன் என்று சொன்னபோது, இதற்கு முன் சில பாடல்களில் நான் பாடிய வரிகள் தவறாக இருந்ததால், அப்படி பாடி விடாதீர்கள் என்று இந்த பாடல் வரிகளை எனக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி இருந்தார். இத்தனை மாதங்கள் கழித்து இப்போது தான் இந்த பாடலை பதிவிடுகிறேன். நன்றி ஜீவ்ஸ்... :)
பாடல் வரிகள் - கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி. Get this widget | Track details | eSnips Social DNA
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
***************************
அணில் குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....இவிங்க ச்சும்மா இருந்தாலும் அக்கம் பக்கத்துல இருக்கவங்க ச்சும்மா இருக்க மாட்டாங்க போல... . என்ன கொடுமை சார்..இது...!! :(
பீட்டர் தாத்ஸ் :- “Always keep a song in your heart - it's like karaoke for the voices in your head”
Labels: அப்பாவிற்காக 9 Comments
தேடல்கள் நிற்பதில்லை......
மரம்
காடுகள்
மலைகள்
குகைகள்
தேடிப்போகிறான்
மனிதன் அவனை துறந்து...
ஏனோ
இது
பிடித்திருக்கிறது...
பளு
தாங்காமல்
உடைந்து போகுமோ ???????
கேள்விகள்
தொக்கி நிற்கும் வரை
தேடல்களும்
முடிவதில்லை.........
துறவுகளும்
நிகழ்வதில்லை.........
.
Labels: கவிதை 11 Comments
இது இவங்களுக்கு தேவையா ?!! :)))))))
ஜூலை 1, "International Jokes Day " வாக கொண்டாட படுகிறது. உலக தரம் வாய்ந்த ஜோக்'குகளை சொல்ல முடியாவிட்டாலும் அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் எவ்வளவோ சிரிக்கும் படியாக நடக்கிறது. அப்படி நான் இன்ஸ்டன்டாக சிரித்து மகிழ்ந்த சில......
***********************
கவி : - ஒரு லூசு எனக்கு மே 22 birthday wishes அனுப்பி இருக்கு...
முல்ஸ் : Give 3 Roses Mind Sharp Tea to that Loosu !!
****************
கவி : It is Pain !! (gtalk status msg)
சிபி : pain killer tablet சாப்பிடுங்க pain சரியா போயிடும்..!!
****************
கவி : மும்பை போலாம்னு இருக்கேன், .. உங்களுக்கு ரயில்வே'ஸ் ல யாராச்சும் தெரியுமா?
சிபி : தெரியாதே, டிக்கெட் புக் பண்ணனுமா?
கவி : ஆமா, எல்லாம் வெயிடிங் லிஸ்ட் , ஒரு ட்ரைன்ல கூட டிக்கெட் இல்ல.. :(
சிபி : ரெயில்வேல யாராச்சும் இருந்தா அவங்களை வெச்சி ஒரு சிறப்பு டிரெயின் விட வெச்சி அதுல புக் பண்ணனுமா?
கவி: அவ்வ்வ்வ்வ்வ்வ் !! உங்களை போய் கேட்டேன் பாருங்க..என்னை....!!!! :(((
*******************
கவி : Vazhi sollunga Naan poikerean ....
முல்ஸ்: hmm antha corner la Irunthu
take imme left
apram athula straight aa poi
right edunga
athula engeyumey thirumbatheenga
apram oru medicals varum
கவி: hmm
முல்ஸ் : athai thaandi ponga
oru kadai varum
athula right
thirumbi
கவி: r u sure first eduthavudanea left aa?
right thirumnappala nenaivu
முல்ஸ்: avvvvvvvvvvvv
ithuku thaan solren
sari oru 5 o clk varakium
wait panreengala
கவி: sari sure
முல்ஸ்: ungaliyum kootitu poren
wait near food world velachery
கவி: enga food world ku kootitu poreengala
athukku ethukku neenga naanea thaniya poikuvean, vazhi theriyum !
:)
முல்ஸ்: kirrrrrrrrrr
*****************
கவி : முள்ளை முள்' ன்னு சொன்னா கோவம் வருமா?
ஆயில்ஸ்: வள்”ன்னு சொன்னா கண்டிப்பா கோவம் வரும்
:)
*******************
கவி : Namma makkala vera yaar kitta ketkalam. any idea..?
yaaravathu help saivaangala?
சிபி்: no idea
கவி: hmm sari..
சிபி்: sorry
கவி: அட..பரவாயில்லை..
சிபி்: sari theriyama sollitten
கவி: :)
சிபி்: அய்யோ ரெண்டு தபா சாரி சொல்லி உங்களை காயப் படுத்திட்டேனா?
கவி: வேணாம் சிபி
சிபி்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
கவி: போங்க போய் தண்ணி குடிங்க
சிபி்: மறுபடியுமா
கவி: அட நான் சொல்ல வேண்டிய டயலாக் இது
சிபி்: தண்ணி குடிச்சிட்டேன்
கவி: ஓ அது தான் பிரச்சனையோ
அப்புறம் நிம்மதியா இருப்பீங்க.. காம் ஆ இருப்பீங்க..
சிபி்: அங்க போனா மப்பு நெறங்கிடுமே
கவி: நெறங்கிடும் னா?
ஓ தண்ணியில இப்படித்தான் தமிழ் பேசுவாங்க..
சிபி்: அதைத்தான் த(ண்)ணித் தமிழ்னு சொல்வாங்க
கவி: :)
சிபி்: பிர்லா
கவி: ஹா ஹா..
பிசாசு..
பை பை
(ஏ... இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்னா செய்வீங்க)
சிபி: கடைசியில கையெழுத்து போட்டாச்சுல்ல
அப்புறம் என்ன திரும்ப பை பை
கவி: ஓஓஓஓ அது கையெழுத்தா
அப்பசரி
பிர்லா..
பைபை
அணில் குட்டி அனிதா : ஹி ஹி ஹி.. ரொம்ப டீஜன்டா இருக்கறத வரைக்கும் போட்டு இருக்காங்களா... அம்மணி ரெம்பத்தான் உஷாரா ஆகிகிட்டு வராங்கபோலவே.. ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும் நான் எதுக்கு இருக்கேன்.. ஒரு நாள் எல்லாத்தையும் சேர்த்து வைத்து கவனிச்சிக்கிறேன்...
பீட்டர் தாத்ஸ் : - “The crisis of today is the joke of tomorrow.”
.
Labels: அணில் குட்டி 26 Comments