இன்றைக்கு எங்களிடம் கேப்பங்கஞ்சி குடிக்க மாட்டியவர், அக்மார்க் தமிழச்சி..மதுரா அவர்கள். இவருடைய படைப்புகள் அனைத்துமே நல்ல வித்தியாசமான தமிழில் எழுதிய படைப்புகள். எனக்கும் அணிலுக்கும் நல்ல தமிழே புரியாது..இவங்க தமிழ் சுத்தமா புரியாது... ஆனாலும் நல்ல தரமான படைப்புகளை தருகிறார்கள் என்பதால் படிப்போம்.. இதோ நம்மிடையே..மதுரா..
வாயைப்புடுங்கற ரவுண்டு:-
கவிதா :-வாங்க தமிழச்சி! எப்படி இருக்கீங்க ?!! இப்ப எங்க இருக்கீங்க.? உங்களை பற்றி சொல்லுங்க....
உங்கள் பதிவில் எனக்கு எழுத வாய்ப்பளித்தமைக்கு (பெருமையுடனும் சந்தோஷத்துடனும்) மனமார்ந்த நன்றி கவிதா. ஜமாய்ச்சிக்கிட்டுருக்கேன்! மஸ்தினியாக இருக்கேன்! :) இப்ப அத்தான் பக்க்க்க்க்க்கத்தில இருக்கேன்! :) நம்ம நாட்டு மண்ணுல. நான் யாருன்னு எனக்கே ரொம்ப டவுட்டு உண்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடத்திலயும் வேறு வேறு கோணங்களில் உலகமும், வாழ்கையும், சுயமும், புரியாம புரிஞ்சு குழப்புனதுல, மொத்தமா கலங்குன பார்டின்னு வச்சுக்கோங்க! :)
கவிதா:- உங்க தமிழ் நிஜமாகவே ரொம்ப வித்தியாசமா இருக்கு, . பேச்சு நடை, எழுத்து நடை..ஏன்..சில சொற்கள் கூட ரொம்ப புதிதாக இருக்கு.. காரணம் என்ன?
கன்னா பின்னான்னு நிறைய மொழிகளை பேசும் யதார்த்ததில் வாழ்கை அமைஞ்சதாலன்னு நினைக்கிறேன். மொழி சம்பந்தப்பட்ட மூளையின் செல்கள் எல்லாம் எப்பவும் எக்குத்தப்பா கெமிக்கல் ஃபயர் பண்ணி வார்த்தைகளை எங்க எங்கருந்தோ தோண்டி எடுத்து சொதப்பிருது.
கவிதா:- உங்கள் எழுத்தில் நாங்கள் கண்டது..ஒரு சமயம் கலவி பற்றி பேசும் தீடீரென்று டவுசர் பாண்டிச்சி.. தீடீரென்று ஹிட்லர், கார்டிரைவிங், நீச்சக் என்று தாவுகிறீர்கள் எப்படி..இப்படி?!
அதுதான் என் சுய ரூபம்னு நினைக்கிறேன். மாமியார் வீட்டுல பாத்திரம் கழுவிக்கிட்டே, ஒரு பக்கம் சினிமா பாட்டு கேட்டுகிட்டே, இன்னொரு பக்கம் குவான்டம் மெகானிக்ஸ் நிஜமா பொய்யான்னு தீவிரமா யோசிச்சிட்டிருப்பேன். டம்முன்னு தட்டு சோப்புல நழுவி கீழ விழுந்து, டென்ஷனா பாப்பேன். யாரும் திட்ட மாட்டாங்க, நானே என்னைய திட்டிக்குவேன்!
கவிதா:- நிறைய நல்ல பதிவுகள் இருந்தும் நிறைய பார்வைகள் உங்கள் எழுத்தின் மேல் படவில்லை என்று நினைக்கிறேன்.. நீங்கள் அதைப்பற்றி?
அய்யோ இருக்கிறவங்களே போதுமையா சாமி. போட்டு வறுத்து எடுத்திடாங்க சில பேரு. இப்படியெல்லாம் கூட கோவிச்சாப்பாங்களா ஒண்ணுமில்லாத உளறுலுக்கெல்லாம்னு மண்ட காஞ்சு போயிட்டேன். நமக்கேத்த நாலு பேர் போதும் என்னைக்கும்!
கவிதா:- வியாபார நோக்கோடு.. பதிவுகள் பார்வையிடப்படனும்னு நீங்க நினைக்கிறீங்களா?.. அதாவது.. அதிக மறுமொழி வரவேண்டும்.. அதற்காக..நாம் நம்மை அதிகபடியாக விளப்பரம் செய்து கொள்ள வேண்டும் , அரசியல் செய்தோ..அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிலோ அல்லது எல்லோருடைய பதிவுலும் போய் ஒரு பின்னூட்டம் போட்டு விட்டு வந்தாலோ..அடுத்தவர்களின் பார்வை நம் மேல் விழும் அல்லவா? இதை பற்றி உங்களின் கருத்து
ஹி ஹீ. எனக்கும் நிறைய கமெண்டு வந்தா புடிக்கும்தான். :) பாராட்டு இன்னுமே ரொம்ப பிடிக்கும்! :) ... அப்பட்டமா அதை சொன்னா அல்பம்னு நினைப்பாங்களோன்னு ஒரு பயம் உண்டு. ஆனாலும் வெக்கப்படுறதுக்கு நமக்கு கொஞ்சம் மானம் கம்மி. :) ஆனா விளம்பரப்படுத்தி எழுதுற அளவுக்கு, என் எழுத்து மேல எனக்கு மரியாதை இன்னும் வரலை. சில பேரு நிஜமாவே பயங்கர ஆழமான குறிக்கோள், தத்துவம், எல்லாம் வச்சு எழுதுறாங்க - அவங்கல்லாம் பெரியவங்க. நான் சும்மாத்தான் எழுதுறேன். ஆனா நிறைய பதிவுகள் போய் வாழ்கையின் பல கோணங்கள், அதன் அழகான பார்வைகள் பார்த்து நிஜமாவே ரசிச்சு சந்தோஷப்புட்டுருக்கேன். பின்னூட்டம் விடதுக்கு சோம்பல் பட்டு விட்டுருக்கேன். ரசிச்சதோட சரி.
கவிதா:- உங்கள் எழுத்துக்களில் பெண்ணியம் பற்றிய சிந்தனை நிறைய இருக்கு..அதில் எனக்கு உடன் படாத கருத்துக்கள் நிறையவே இருக்கு.. பெண்ணியம் - என்பதை பற்றி சுருக்கமா நச்சுன்னு சொல்லுங்க
பெண்ணின் இயம் அவ்வளவுதாங்க. பெண்களின் இயம் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டதாய் எனக்கு தோணும் அடிக்கடி. அதை அன்பும் ஆனந்தமுமாய் சமுதாயத்தில் பார்வைக்கு வெளிக்கொண்டு வரணும்னு ஒரு ஆசை உண்டு. குழப்பம், கோபம்தான் சில சமயம் வாங்கிக் கட்டிருக்கேன். :) சுய வாழ்கையில பயப்படுறதே இல்ல, உண்மைய உளறி கொட்டி நிம்மதியா இருந்திருவேன். ஆனா சமுதாயத்தில எப்படி வெளி கொண்டு வரணும் - அவை அறிதல் இன்னும் முழுசாத் தெரியல.
கவிதா:- நீங்கள் எழுதியதில் குறிப்பா பச்சைக் குத்தின பாண்டிச்சி! ..... இவிங்க யாரு.. சும்மா சூப்பரா பாட்டு எல்லாம் பாடி இருக்கீங்க இந்த பதிவுல.. நீங்க இவிங்க கூட சேர்தவங்களா?"
நானே நானா... யாரோ தானா? மெல்ல மெல்ல மாறினேனா?" :) சொன்னதெல்லாம் உண்மைதான் பேரைத்தவிர :)
அணில்:- தமிழச்சியக்கா..அது என்னாங்கக்கா.. இஸ்.பேக்கு ? “டவுசர் பாண்டிச்சி இஸ் பேக்கு??
எனக்குக்குள்ள ஆயிரம் தமிழச்சி; அதுல ஒண்ணு டவுசர் பாண்டிச்சி. அதுதான் பேக்கு மத்தெல்லாம் கோக்கு மாக்கு :)
எனக்குக்குள்ள ஆயிரம் தமிழச்சி; அதுல ஒண்ணு டவுசர் பாண்டிச்சி. அதுதான் பேக்கு மத்தெல்லாம் கோக்கு மாக்கு :)
கவிதா :- ஹா..ஹா...கோக்கு மாக்கா?!! சரி..உங்களின் ஒரு பதிவில் “விவாக ரத்து - யதார்த்தமான கண்ணோட்டம்.." பதிவை படித்திருக்கிறேன். அதிகபடியான விவகரத்து பெண்களுக்கு ஆக்கப்பூர்வமானதுன்னு நீங்க நினைக்கறீங்களா?
இனிமையும் இன்றி, இயமும் அன்றி, வாழும் பெண்மையை போற்றும் கொடுமையான கலாசாரமாக நான் தமிழர்களின் வாழ்வு முறையை பார்க்கவில்லை. கலாசார போர்வையில் புகுந்து, இயம் மாறி அஞ்சி வாழாமல், இனிமை இழக்காமல் சிறகு விரித்து புதிய வானில் ரம்மியம் தேடுங்கள் அவ்வளவுதான் என் கருத்து.
கவிதா:- “ஹிட்லரும், நானும், எங்கள் தோட்டியும்" என்ற பதிவில் தோட்டி பற்றியும் உங்க மனஓட்டத்தையும் புர்ஞ்சிக்க முடிஞ்சிது.. இப்பவும் நாகரீகமாக இது நடக்குது தெரியுமா?
இப்பவும் நான் அதை பார்க்க நேர்ந்தால் என்னால் ஒண்ணும் செய்ய முடியாதோன்னு நினைச்சா பயமாதான் இருக்கு. என்ன செய்யணும், எப்படி செய்யணும், அதை பற்றி ஆழமாய் சிந்திக்க வேண்டும், சிந்திப்பதோடு இல்லாமல் செய்ய வெண்டும். செய்வேனா? செஞ்சப்புறம் சொல்றேன். இப்ப வெறும் பேச்சு தான்! கறிக்காவாது.
கவிதா:- ஆண் - ??
பெண்ணின் இயம் அறியாமல் எத்தனையோ வித்தைகள் செய்து பார்க்கும் அப்பாவிகள். மற்றபடி இந்த குழப்பத்திலிருந்து எஸ்கேப் ஆகி, அவர்கள் போக்கில் அவர்கள் இருக்கும் போது இனிமையானவர்கள், அருமையானவர்கள், அன்பானவர்கள், ஆனந்தமானவர்கள்.
ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-
மதுரா / தமிழச்சி - ஒற்றுமை வேற்றுமை
தமிழச்சி நிஜம்; பல விதம். நிஜத்தை எழுத்தில் வடிக்கும் ஒரு முயற்சி மதுரா. மதுராவும் ஒரு வகையில் தமிழச்சியே.
உங்கள் மச்சானிடம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் ஒன்று-
எனக்கு என்னை விட உன் மனதில் தெரியும் என் பிம்பம் மிகவும் பிடித்தமானதாய் உள்ளது. அதனையே எதிர்பார்த்து உன்னை மணந்தேனோ இந்த சுய-நல வாதி?
உங்கள் குழந்தைகள் “தமிழச்சிகளாக வளர்க்கபடுவார்களா?
தமிழர்களின் அருமையான உணவு, அழகிய உடைகள், அமுதமான இலக்கிய உலகம் அவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் விடப்படும். பாடல்கள், கவிதைகள், நடனங்கள், நாட்டுப்புற கலைகள் அனைத்தும் அவர்களுக்கு காட்டித்தரப்படும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்; திரைகடல் ஓடி திரவியம் தேடு" என்னும் தமிழ் சொல்லாடல்களும் சொல்லிக் கொடுக்கப்படும்! :)
உங்கள் எழுத்தில் உங்களுக்கு பிடித்த பதிவுகள்
அன்பர் நண்பர்களிடமே பகிராத உண்மைகளை, எண்ணங்களை, அப்பட்டமாய் எழுதிய அத்தனை வார்த்தைகளும், மிகவும் பிடிக்கும். அங்கங்கு காணக் கிடைக்கும் அவை.
உங்களுக்கு ப்ளாக் ளில் பிடிக்காத விஷயங்கள்
என் அன்புக்குரியவர்களின் நிஜங்களை வைத்து தருமமாய் செய்கிறேன் என்று நினைத்து சூதாட்டமாய் போன விளையாட்டு, சில பதிவுகள். அது எனக்கு மிகுந்த வருத்தம் தந்தது. அடுத்தவர்கள் பதிவு அவர்கள் விருப்பம். நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.
நீங்கள் ஒரு தமிழச்சி யாக சாதிக்க நினைப்பது ?
வளர்த்த மண்ணில் என்னால் முடிந்த அளவு இனிமை விதைப்பது; ஆனந்தம் காப்பது; உண்மையை மேடை ஏற்றுவது! எப்படின்னு தெரியல.
நீங்கள் எழுதவந்தது ஏன்?என்னைப் போல யாராவது இதே மாதிரி குழப்பங்கள் கண்டு கலங்கியிருந்தால், ஒரு தோழமை காண்பார்கள் என் எழுத்தில் என்பதால். அவ்வகை தோழமைக்காக நான் பல முறை ஏங்கி இருக்கிறேன்.
உங்கள் மச்சான் உங்களை பாராட்டிய ஒரு நிகழ்வு.
மச்சான் பாராட்டித் தள்ளிருவாரு. ஒண்ணா இரண்டா, எப்பவுமே பாராட்டு தான். ஆனா அப்பப்ப குசும்பு நடக்கும் "அந்த பொண்ணு எவ்வளவு அழகு, உன்னை மாதிரி கண்ணு என்னை மாதிரி மூக்கு" அப்படின்னுவாரு - "என் மூக்கு குடை மிளகாய்ன்னு சொல்ற" அப்படின்னு வேதாளம் உடனே ஆரம்பிச்சிரும்! விக்கிரமாதித்தன் மாதிரி பதில் சொல்லி அனுப்பிருவாரு! :)
தமிழச்சி - பிளாக்கில் என்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? தமிழில் பெண் இயத்தின் உண்மைகளை இனிமையாய் ஆனந்தமாய் எழுதி சமுதாயத்தின் பார்வையில் வைக்கும் மொழித் திறன் மட்டுமில்ல மனப் பக்குவமும் வரவேண்டும் அப்படின்னு ஒரு பேராசை உண்டு! :)
உங்களுடைய மற்ற interest..
பயணம் - பல தொலைவுகளில், பல கலாச்சாரங்களில். பயிரிடுதல் - பழங்கள், நெடு மரங்கள், எனக்குரிய பூமியில், என் வியர்வையில்.
கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் தமிழச்சி!
Labels: கேப்பங்கஞ்சி 10 Comments
சினிமா எப்படி பார்க்கவேண்டும்?
இங்குள்ள படத்தை பாருங்கள் . இந்த படம் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பில் கட்டும் டேபிளில் கண்ணாடியில் பதிக்கப்பட்ட பூச்சாடியின் படம். இந்த ஹோட்டலுக்கு நாங்கள் மாதம் ஒருமுறையாவது போவோம். இந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அது சீனக்காரின் முகம் போல தோன்றும். முதலில் தூர இருந்து பார்த்த நான்..அது சீன க்காரிர் ஒருவரின் முகம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் கணவர் முதல் முறை பார்க்கும் போதே “லூசே! அது பூச்சாடி” என்றார். நான் நம்பாமல் பக்கத்தில் சென்று உறுதி செய்தேன். இருந்தாலும் நான் பார்க்கும் போது அது சீனக்காரின் முகம் போல த்தான் எனக்கு தோன்றும்.. அதற்கு என் மகனும் “ அம்மா! உனக்கு கண்ணு தெரியலன்னு சொல்லு அதவிட்டுட்டு அறிஜீவிக்கணக்கா பேசதான்னு நக்கல் அடிப்பான்”..
உங்களுக்கு எப்படி தெரியுதுன்னு பாருங்க.. ?!! இது நான் ஏதோ முடிந்தவரை அந்த பூச்சாடி போல் வரைந்தது..
சரி விஷயத்துக்கு வரேன்.. நம்ம தல கைப்புள்ள ஏதோ பெண்ணியத்தை பற்றி சொல்லும் போது அவர் பார்த்த படம் கருத்தம்மா’ விலிருந்து ஒரு காட்சியை அவர் எப்படி ரசித்தார், எந்த நோக்கத்தோடு பார்த்தார் என்றும் சொல்லியிருந்தார். அது ஒரு தப்பா..?!! அத்தனை பேரும் கருத்தம்மா கண்ணீர் கதையை கேட்டு அழத்தான் வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா.. ? என்னங்க ஒருத்தர் படம் அவங்க இஷ்டத்துக்கு பார்த்து ரசிக்க கூட உரிமை இல்லையா?.. அவர்கள் கருத்தை சொல்ல உரிமை இல்லையா?.. எது சொன்னாலும் பின்னால் ஓடி ப்போய் ஒரு பதிவு அவர் இதை இப்படி சொன்னார் அதை அப்படி சொன்னார் என்று போட்டு எந்தவிதமாக நாம் மிக சிறந்த அறிவாளி என்று நிருபித்து கொள்ள போகிறோம்னு தெரியவில்லை..
இந்த பதிவு கூட அவசியம் இல்லாத பதிவுதான்..ஆனா.. எதையுமே அவர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மனக்குமறல்களை சொல்லவிட கூடாது என்பது போல் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் பார்க்கும் நோக்கிலேயே பதிவுகளை படித்து அதையும் ஒரு பதிவாக போடுபவர்களக்காக அஞ்சியே நிறைய பேர் தங்களின் உண்மை கருத்தை சொல்லவே தயங்குகிறார்கள்.. மாற்று கருத்து சொல்லித்தான் நாம் யாரென்றும் நம் சிந்தனை ஓட்டம் இப்படி ப்பட்டது என்றும் அடுத்தவர்களுக்கு புரியவைக்க வேண்டுமா என்ன?..
மேலே சொன்ன படம் மாதிரிதாங்க.. ஒவ்வொருத்தரின் பார்வையும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகிறது...
அணில் குட்டி அனிதா:- சரி, நீங்க படம் வரைவீங்கன்னு சொல்லறதுக்கு ஒரு பதிவா.. ஆமா அடுத்தவங்கள குத்தம் சொல்லதன்னு நீங்க அடுத்தவங்கள குத்தம் சொல்றீங்க.. எந்த வூரு நியாயம் இது .? நல்லவா இருக்கு.. இது உங்களுக்கு.. ம்ம்..... ஆனா..இந்த பதிவுல ஒரு நல்ல விஷயம் இருக்கு அது என்னான்னா... கண்ணு தெரியமா எதையோ பார்த்துட்டு.. எதுவோ மாதிரி தெரியுதுன்னு சொல்லி..அதுல வேற.... நீங்க ஒரு அறிவு ஜீவிய போல பார்க்கறதா நெனச்சிகறீங்க.. பாருங்க.. ஹய்யோ ..ஹய்யோஒ........ தாங்கலடா சாமீ . கவி.. கவி........இங்க பாருங்க..நான் யாருன்னு தெரியுதா..??
பீட்டர் தாத்ஸ் :- Don’t measure yourself by what you have accomplished, but by what you should have accomplished with your ability.
Labels: சமூகம் 2 Comments
கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் -ஜொள்ஸ்
இன்றைக்கு நாங்க சந்திக்க போகிறவரை boat ல போய் பார்த்துத்தான் இன்டர்வயூ பண்ணவேண்டியதா இருந்தது.. ம்ம்... ஜொள்ளுவால மிதிக்கற ஜொள்ளுப்பேட்டைக்கு எப்படி நடந்து போகமுடியும்.. YES !!! இன்றைக்கு நம்ம கூட ஜொள்ளுவிட வந்து இருக்கறது.. நம்ம.. பாண்டி... ஜொள்ளூபாண்டி.. தான்..!!! .... அவரு விடற ஜொள்ளுக்கு..பரிசா.. வேற என்ன..நம்ம சூப்பர் கேப்பங்கஞ்சி .....தான்..!! :)
வாயைப்புடுங்கற ரவுண்டு
அணில் :- வாங்க ஜொள்ளு அண்ணே எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் ஆச்சி பார்த்து.. ..
வா அணிகுட்டி !!! நான் இங்கன தானே சுத்திகிட்டு இருக்கேன் லேட்டஸ்டா நம்ம தானைய தலைவிய கொஞ்சம் Replace பண்ண வேண்டிய பணிகள் இருந்ததாலே கொஞ்சம் பிஸி !!
அணில்:- அண்ணே...ஜொள்ளுவிடவே ஒரு ப்ளாக் ரெடிபண்ணி விடாம தொடர்ந்து ஜொள்ளு விட்டுக்கிட்டே இருக்கீங்களே.. எப்படி இது?
அல்லாரும் பண்றதுதானே ! மத்தவங்கெல்லாம் சத்தம்காட்டாம பண்ணிகிட்டு இருக்காங்க நான் அதையே எழுதிகிட்டு இருக்கேன். அதெல்லாம் தானா வருது அணிலு ! என்ன பண்றது ?
கவிதா: பாண்டி..உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க..உங்க படிப்பு, வேலை, குடும்பம் பற்றி நீங்க விருப்பப்பட்டா....
நெம்ப கஷ்டப்பட்டு என்ஜினியரிங் முடிச்சிட்டு இப்போ IT யிலே குப்பை கொட்டிகிட்டு இருக்கேன் !! வேறென்னத்த சொல்ல !
அணில்:-அட அண்ணே...நீங்க.. என்ஜினியரா?.. ம்ம்..நாங்க எல்லாரும்..நீங்க ஜொள்ளு விடறதால Ph.d ன்னு இல்ல நெனச்சிக்கிட்டு இருக்கோம்..!
அட சும்மா இரு அணிலு ! வெட்கமா இருக்கு ! ஆமா ஆராச்சும் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்கன்னா சொல்லு ! Dr. ஜொள்ளுப்பாண்டி நல்லாத்தேன் இருக்கு பேரு !!
அணில்:- அது சரி..ஓசி..பட்டம் வாங்க காத்துக்கிட்டு இருக்கீங்க போல.. அதுக்கு நீங்க அரசியலத்தான் சேரனும்.. சரி..அண்ணே..ஜொள்ளுவிட நீங்க..புது புது ஐடியாவா குடுக்கறீங்களே..எப்படி ரூம் போட்டு யோசிப்பீங்களா?
அட இதுக்கெல்லாம் ரூம் போட்டா செலவு என்னாவறது ? அப்படியே லேடீஸ் காலேஜு , IT பார்க்கு , பீச்சு, சினிமாதியேட்டர், ஷாப்பிங் மால் ன்னு அப்படியேக்கா 360 டிகிரியிலே கண்ணை ஓட்டினாவே போதுமே !!
கவிதா:- எப்பவும் ரொம்ப ஜாலியா ஜொள்ளுவிட்டு க்கிட்டு இருக்கீங்களே.. உங்களுக்கு கொஞ்சம் சீரியசாக சமுதாயம், அரசியல் சார்ந்த பதிவுகள், கவிதைகள், கதைகள் போன்றவை எழுத ஆர்வம் இல்லையா?
இதெனாங்க கவிதா கோக்குமாக்கா கேக்குறீங்க ? சமுதாயம் அரசியல் எல்லாம் பேப்பர்ல பார்கறதோட சரிங்க. கவிதையிலயும் கதையிலயும் கொஞ்சம் ஆர்வம் உண்டுங்க !
கவிதா:- ம்ம்...ஜாலிய எழுதற உங்ககிட்ட..சில சீரியஸ் கேள்விகள் கேட்கலாம் என்று நினனக்கிறேன்.. ப்ளாக்ல இப்ப எல்லாம் சங்கங்கள் அதிகமாகிகிட்டே வருது.. இதை பற்றி உங்களின் கருத்து..?!!
சங்கங்கள் ப்ளாக் உலகின் அங்கங்கள் !! இருந்துட்டு போகட்டுமே !!
கவிதா :- சங்கங்கள் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு Direct /Indirect support இருக்குன்னு நினைக்கறேன்.. நீங்க அதைப்பற்றி..
அதெல்லாம் கெடையாதுங்க நீங்க வேற ! நம்ம எழுத்தை பிடிச்சவங்க நம்மளை சப்போர்ட் பண்ணுவாங்க அவ்வளவுதான்.
கவிதா:- ஜொள்ளுவிடறது தவிர பெண்ணைப் பற்றி -
என்னைய பொறுத்த வரையிலே பொண்ணுங்க எல்லாருமே ரொம்ப அன்பானவங்க. அவங்களோட எக்கசக்கமான அன்பை சில சமயம் நாமெல்லாம் தப்பா possessiveness ன்னு நெனச்சுக்குறோம். என்னடா இந்த பொண்ணுங்க எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு அழுகாச்சியா அழுவறாங்கன்னு நாமெல்லாம் நெனக்கிறோம். நம்ம வள்ளுவர் தாத்தா என்ன சொல்லியிருக்காருனா
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
அர்த்தம் என்னான்னா “அன்பை அடைச்சு வைக்க முடியாது. கண்ணீரே காட்டிக்கொடுத்துவிடும்.” அன்பு கண்ணா பின்னான்னு நெரம்பி கெடக்குறதாலவோ என்னவோ இந்த பொண்ணுங்க அன்பை அடைச்சு வச்சுக்க முடியாம பொசுக்கு பொசுக்குன்னு அழுதுபுடுறாங்க.அம்புட்டுதேன் ! வாழ்க தாய்குலங்கள் !!
கவிதா:- ம்ம் நான் ஏதோ கேட்டு உங்க வாயை புடுங்களாம்னு நெனச்சா நீங்க ஏதோ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ ன்னு கதை சொல்றீங்க..ம்ம்..பரவாயில்லை Next - ஆணாதிக்கம் பற்றிய உங்கள் பார்வை-
ஆண் அன்பிலே ஆதிக்கம் செலுத்தினால் போதுங்க. இந்த வார்த்தையே ஒழிஞ்சிடும் !
கவிதா:- குஷ்பு கலாச்சாரம் உங்களின் அலசல்
அலசலா ? என்னா கவிதாக்கா இப்படி கேட்டுபுட்டீக? எப்போவாச்சும் துணி துவைச்சா அலசுவேன் அவ்ளவுதாங்கோ !!
அணில்:- அண்ணே..அம்மணிக்கிட்ட இருந்து செம சூப்பரா எஸ்கேப் ஆகறீங்க..ம்ம்..நம்ம தல (கைப்புள்ள தான்) இது தெரியாம.. Net ல எல்லாம் search பண்ணி .......ம்ம்.. இதுக்கு மேல என்னத்த சொல்ல................சரி நாம அம்மணிய ஓரம் கட்டிட்டு 2 nd round க்கு போகலாம்.
ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-
1. ஜொள்ளு பாண்டிக்கு எதிரா ஒரு ஜொள்ளு பாண்டச்சி இருக்காங்க போல? ..
அட ஆமாங்க. ஒரு அம்மணி இருக்காக. எதிரான்னு சொல்லாதீங்க எல்லாரும் நமக்கு ப்ரெண்டுதாங்கோ !!
2. ப்ளாக்ல ஜொள்ளு ...வெளியில...........
வெளியிலே நான் ஒரு Silent ஜொள்ளந்தேன். நான் ஜொள்ளுவிடுறது என் வாய்க்கு கூட தெரியாதுன்னா பார்த்துக்குங்களேன் !!
3. உங்களின் ஜொள்ளின் சாதனையாக நீங்கள் நினைப்பது
அட போங்க இதையெல்லாம் ஒரு சாதனையா கேட்டுகிட்டு. ஆனா ஜொள்ளுப்பேட்டைய படிக்கறவுக நெறையா பேரு என்னோட ப்ளாக் படிச்சுட்டு நல்லா சிரிச்சு ரிலாக்ஸ் ஆனேன்னு சொல்லிட்டு போறதுதான் என்னோட சாதனையா நெனைக்கிறேன். எல்லாரும் சந்தோசமா சிரிச்சிகிட்டே இருக்கனும்கறதுதான் என்னோட ஆசை !
4. இப்படி நீங்க அநியாயத்துக்கு ஜொள்ளுவிட்ட விஷயம் வருங்காலத்துல உங்க மனைவிக்கு தெரிஞ்சா? (கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடுவீங்க இல்ல)
அட என்னாங்க நீங்க இப்படியெல்லாம் கேட்டு பீதியக்கொளப்பறீங்க ! என்னைய பொருத்த வரைக்கும் மனைவினா ஒரு நல்ல ப்ரெண்ட் மாதிரிங்க. ஒரு நல்ல ப்ரெண்ட் என்னைய புரிஞ்சுக்க மாட்டாங்களா என்ன ?
5. உங்களின் ப்ளாக் பெண் ரசிகைகள் பற்றி - (எங்களையும் சேர்த்துக்கோங்க)
ஆஹா !!! பெண் ரசிகைகள்னு ஏங்க அவங்களை தனிமைப்படுத்தறீங்க? ஜொள்ளை பொண்ணுகளும் ரசிக்கராங்கன்னு எனக்கு புரியவச்சவங்க அவங்க ! எனக்கு ஊக்கம் கொடுத்து மேன்மேலும் ஜொள்ளுவிட வைக்குறாகுளே அவுக அன்புக்கு நான் அடிமை !!
6. உங்களின் வீட்டில் “ஜொள்ளு பேட்டையின்” ரசிகர்கள் யாராவது?
வீட்டிலேயா ? மொதோ மொதலா குங்குமத்திலே வந்த கதைதான் என்னோட பேரை என் வீட்டிலே சொல்ல வச்சது. என் பேரை கேடுபுட்டு எங்கம்மா கேட்டது “என்னடா பேரு இது ஜொள்ளுப்பாண்டி? ன்னு ஆமா ஜொள்ளுன்னா என்னா ஏதாச்சும் பலகாரமா ? “
7. ஜொள்ளுபாண்டியா நீங்க இல்லைனா வேற யாரா இருந்து இருப்பீங்க? யாரா இருக்க ஆசை படறீங்க?
நான் இப்படியேதாங்க இருக்க ஆசைப்படறேன். நான் நானாகவே இருக்க ஆசை.
8. உங்களின் எந்த பதிவில் ஓவர் ஜொள்ளுல எல்லாரும் மிதந்தாங்கன்னு நினைக்கறீங்க?
அப்படியேல்லாம் வகைப்படுத்த முடியாதுங்க. ஆனா நம்மளோட ஜொள்ளாராய்ச்சியெல்லாமே மக்களை ஜொள்ளிலே நல்லா மிதக்க வச்சிருக்கு !! லேட்டஸ்டா இஞ்சி இடுப்புன்னா என்னாங்கற வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பதிவில் வந்த இலியானாவைப் பார்த்து பலபேறு சுனாமியா ஜொள்ளுவிட்டதாக அறிகிறேன்.
9. பிடித்த பெண்கள் - எந்த துறையா இருந்தாலும் (ஜொள்ளுவிடாம சொல்லனும் சரியா)
கேள்வியே தப்புங்க !! எப்படி என்னால குறுகிய மனப்பான்மையோட இருக்க முடியும்னு எதிர் பார்கறீங்க? ஒருதவங்களை சொன்னா இன்னொருத்தவங்களுக்கு கோவம் வந்துடாது ? எல்லாப் பெண்களுமே ஏதாசும் ஒரு வகையிலே பிடிச்சு போய்டுறாங்களே !!
10. கடைசியாக உங்களுக்கு பிடிக்காத கேள்வி- பிடித்த ஆண்கள்
அட யாருங்க இப்படியெல்லம் குண்டக்க மண்டக்க போட்டு விடுறது ? எனக்கு பிடிச்ச ஆண் என் அப்பாதான் !
அணில்:-அண்ணே..எங்க அதுக்குள்ள தப்பிச்சி ஓட பார்க்கறீங்க நாட்டுக்கு ஒரு தத்துவம் சொல்லிட்டு போங்க...
ஜொள்ஸ்ஸின் தத்துவம்:- Time is like a river. You cant touch the same water twice because the flow that passed will never pass again. Enjoy every moment of your Life .
அணில்:- நம்ம ஜொள்ளு சும்மா ஜாலியா..சூப்பரா... கவிதாக்கிட்ட.. எங்கேயும் மாட்டிக்காம ரொம்ப சாதூர்யமாக பதில் சொல்லி .. அம்மணி வீசிய வலையிலிருந்து தப்பிச்சி ஓடிட்டாரு.. ம்ம்... அம்மணி எரிச்சல் தாங்கமுடியாம..... உப்புப்போடத..... ஒழங்கா வேகவைக்காத கஞ்சிய அவருக்கு குடிக்க கொடுத்து..... அவரை வேறு விதமா பழிவாங்கிடாங்க ..ம்ம்.. அவரு இனி.. 2- நாளைக்கு .. பாத்ரூம் விட்டு வெளியில வரமாட்டாருங்கோ..
Labels: கேப்பங்கஞ்சி 35 Comments
கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் கைப்புள்ள!
வாயைப்புடுங்கற ரவுண்டு :-
கவிதா :-வாங்க கைப்ஸ்! எப்படி இருக்கீங்க ?!!
வணக்கம் கவிதா, ஹாய் அனிதா! இது வரைக்கும் நல்லா தான் இருக்கேன். இனிமே எப்படி இருக்கப் போறேங்கிறது உங்க கேள்வி முடிஞ்சப்பிறகு தான் தெரியும்.
கவிதா - வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லு-ங்களேன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜாலியாக சிரித்து மகிழ நகைச்சுவையான பதிவுகளை இட்டு, படித்தவர்கள் மகிழ்ச்சியான நினைவுகளுடன் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒத்த கருத்துடைய நண்பர்களினால், தொடங்கப் பட்ட ஒரு ‘Cool Hangout Place’ போன்ற ஒரு கூட்டு வலைப்பூ முயற்சி. அனைவரது உழைப்பினாலும், ஒத்துழைப்பினாலும் சங்கத்துக்கு நல்ல ஆதரவு கெடைச்சு நல்லபடியா நடந்துட்டிருக்கு.
கவிதா :- உங்க படிப்பு, வேலை, உங்க குடும்பம் பற்றி, நீங்க விருப்பப்பட்டா சொல்லுங்க..
அது என்ன விருப்பப்பட்டா...? அதுக்குத் தானே வந்துருக்கோம். நீங்க ஊத்தப் போற கேப்பங்கஞ்சிக்காகவாச்சும் ஒரு ரெண்டு கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லித் தானே ஆவனும்? எம்பி எம்பி ஒரு எம்பிஏ டிகிரி வாங்குனதாலே ஊர் ஊராச் சுத்தி ப்ளாக் படிக்கிறதுக்கு ஒரு கன்சல்டண்ட் வேலை கெடச்சிருக்கு. எதோ எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாராம்னு ‘நான் கன்சல்டண்ட், நான் கன்சல்டண்ட்’னு ஊரை ஏமாத்திட்டிருக்கேன். என்னோட குடும்பத்தைப் பத்தி சொல்லனும்னா, எங்க தோப்பனார் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், தாயார் தடிப்பசங்களுக்காகவே உழைச்சு ஓடாத் தேய்ஞ்ச ஒரு இல்லத்தரசி, இளவல் ஒருத்தரு இருக்காரு...சமீபத்துல அவரும் விரிவுரையாளரா சென்னையில் ஒரு கல்லூரியில் பணியில் சேர்ந்திருக்காரு. நாலு பேரைக் கொண்ட மகிழ்ச்சியான குடும்பம் எங்க குடும்பம். என்னைத் தவிர எல்லாரும் சென்னையில தான் இருக்காங்க.
கவிதா:- இவ்வளவு படிச்சி இருக்கீங்க..ஆனா தெரியவே இல்ல.. ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு.. உங்களின் வேலை சம்பந்தமா உங்களின் வருங்கால திட்டம் என்ன?
என்னது...தெரியவே இல்லியா? ஏன் நம்ம மூஞ்சைப் பாத்தா மாங்கா மடையனாட்டம் இருக்கா? தன்னடக்கம் எல்லாம் ஒன்னுமில்லீங்க. சான்ஸ் கெடச்சா சந்துல சிந்து பாடிடுவோம்ல? வருங்கால திட்டம்னு பாத்தா... இன்னும் நெறைய காசைச் சேர்க்கனும். வாங்கி அதை கல்லால போட்டுக்கணும். அம்புட்டுத் தான்.
கவிதா:- பெண் – Define
ஆஹா! கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாங்கையா! எங்கடா ஆப்புன்னு எதுவும் இன்னும் வரலியேன்னு பாத்தேன். அப்படியே தலைல துண்டைப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தா கேப்பங்கஞ்சின்னு ஒன்னு குடுத்தீங்களே அதை வேற குடிச்சிட்டேன்?
ஒன்னு பண்ணறேன். காலேஜ் படிக்கும் போது ‘வாட்டாக்குடி இரணியன்’னு படம் ஒன்னு வந்துச்சு. அந்தப் படத்துல கோழி குஞ்சுகளை மீனா கொஞ்சற மாதிரி ஒரு ஸ்டில் ஒன்னு செய்தித் தாள்ல வந்துச்சு. அதை அப்படியே(!) காப்பியடிச்சிட்டு, எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு நாலு வரி ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸா கிறுக்கி வச்சிருக்கேன். அதை கீழே இருக்கற சுட்டியில போய் படிச்சிப் பாருங்க. அதுலேயே நாங்க டிஃபைனி வச்சிருக்கோம். http://beta.blogger.com/
கவிதா :- உங்களின் interest எழுதுவது, படிப்பது தவிர..
எழுதுவதும் படிப்பதும் என் interestனு யாரு சொன்னா? நெறைய விஷயத்துல மூக்கை நுழைச்சி ஒன்னையும் உருப்படியாத் தெரிஞ்சிக்காம இருக்கறது தான் நம்ம ஒரே interest. அதுலேயே ரொம்ப நாளா இருக்கறதுன்னு பாத்தா கேலிகிராஃபியும்(Calligraphy) தபால் தலை சேகரித்தலும், இப்போ புதுசா போட்டா புடிக்கிறதும்
இதுக்கு அம்மணியே பரவால்ல போலிருக்கு. இன்னிக்கு எனக்கு டின்னு கட்டி விடாம அனுப்பப் போறதில்லைனு நெனக்கிறேன். இருந்தாலும் நீ கேக்கறியேங்கிறதுனால சொல்றேன். உண்மையில சொல்லப் போனா எனக்கும் பெண்ணியத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது. சரி, என்னான்னு தெரிஞ்சிக்கலாம்னு விகிபீடியாவுக்குப் போய் ‘Feminism’னு தேடுனேன். எக்கச்சக்கமா மேட்டர் வந்துச்சு. யார் யாரோ ஃபிரெஞ்சு, பிரிட்டிஷ் மேடம் பேரெல்லாம் போட்டுருந்துச்சு. பெண்கள் கல்விக்காகவும், ஓட்டுரிமைக்காகவும், சம உரிமைக்காகவும் போராடறது தான் பெண்ணியம் அப்படீங்கற மாதிரி போட்டிருக்கு. அப்படியே மேல படிச்சா வர்ஜினியா உல்ப்(Virginia Woolf) அப்படீங்கற எழுத்தாளர் ‘Feminism’ அப்படிங்கற சொல்லையே வெறுக்கறதா போட்டுருந்துச்சு. அவங்களைப் பொறுத்தவரை ‘Feminism’னு தனியா எதுவுமில்லையாம். எல்லாமே ‘Humanity’ தானாம். அவங்களோட பர்சனல் வாழ்க்கை பத்தி எல்லாம் படிச்சும், அதைப் பத்தி எல்லாம் ஆராயாம அவங்களோட கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்தா ‘பெண்ணியம்’னு சொல்றது மனிதத் தன்மைக்குள்ள அடங்குனதுன்னு தான் எனக்கும் படுது. ஆண் பால், பெண் பால்ங்கிறதை மறந்து இரு பாலரும் அந்த மனிதத் தன்மையை மட்டும் மதிக்கக் கத்துக்கிட்டா ‘பெண்ணியம்’ அப்படின்னு தனியா எதுக்கும் தேவையிருக்காதுன்னு நெனக்கிறேன். அந்த மனிதத் தன்மைக்குள்ள பல பல மைக்ரோ சமாசாரங்கள் அடங்கியிருக்குன்னும் நெனைக்கிறேன். அது என்னென்னன்னு வெளக்கமாச் சொல்லவும் பேசவும் நெறைய அனுபவமும் அறிவும் தேவைன்னும் நெனக்கிறேன்.
இது இப்படியிருக்க... கருத்தம்மா படத்துல பார்த்த ஒரு காட்சி. டைரக்டரோட ‘டச்’ வெளிப்படற ஒரு காட்சி. கைகால் முடமானத் தன் தந்தையான பேராசிரியர் பெரியார்தாசனைக் கருத்தம்மா ராஜஸ்ரீ குளிப்பாட்டுவது போல அமைந்த ஒரு காட்சி. தென்னங்கீற்று இடுக்குகளின் வழியாக முதியவர் குளிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் “டேய்! தாத்தா அம்மணமா குளிக்கிறாருடா”ன்னு சொல்லுவதாக வரும். “டேய்! போங்கடா” என அந்தச் சிறுவர்களை ராஜஸ்ரீ விரட்டுவார். அதன் மூலம் கருத்தம்மா எனும் கதாபாத்திரத்தை உயர்வாகச் சித்தரிக்கும் நோக்கிலும் இயக்குனர் வெற்றி பெறுவார். குழந்தையாக இருக்கும் போது தன்னையே கொல்ல முனைந்த, தன் தந்தையின் நிர்வாணத்தையும் பொருட்படுத்தாமல், அவரைத் தன் குழந்தை போல பாவிக்கும் ஒரு பென்ணின் தாய்மை உணர்வு பெண்ணியத்துள் வருமா? இல்லை படிப்பறிவில்லாததால் தான் என்னைக் கொல்ல முனைந்தவனுக்கும் சேவை புரியும், அடிமைத் தனத்துக்கும் அவல நிலைக்கும் நான் உட்படுத்தப் படுகிறேன், இதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று போராடுவது பெண்ணியத்துள் வருமா? நக்கலுக்காகக் கேக்கவில்லை. ஏனெனில் விகிபீடியாவில் liberation, suppression, equality இவைகளைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் மேலே சொன்னது போன்ற எண்ணற்றப் பெண்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. அப்பெண்களின் பார்வையில் பெண்ணியம் என்பது எது? பதில் தெரியாததாலும், பெண்ணியத்தைப் பற்றி பேச கவிதா வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாலும் உண்மையாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்கிறேன். யாருக்கிட்டயாச்சும் விளக்கம் இருந்தாச் சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கிறேன்.
ஒன்னை பதிலு சொல்லச் சொன்னா கேள்வியாடா கேக்குறேன்னுட்டு, பேட்டியை முடிச்சிட்டு கெளம்பற நேரத்துல கேப்பங்கஞ்சிக்கு பில்லை நீட்டிடாதே தாயீ. ஜோபியில துட்டு வேற இல்ல!
அனிதா:- தல உங்களின் அழகின் ரகசியம் என்ன?
இப்போ கேட்டியே இது கேள்வி. இப்பச் சொல்றதை, நல்லா கொட்டை எழுத்துல ஃபாண்ட் சைஸ் அம்பதுல போட்டுக்க. நம்ம மேனி எழிலோட ரகசியம் என்னான்னு கேட்டீன்னா சமீப காலம் வரைக்கும் ‘மஞ்சளும் சந்தனமும் சேர்ந்த விக்கோ டர்மெரிக் இல்லை காஸ்மெடிக் தான்’. ஆனா பொண்ணுங்க போடற ஃபேர்னஸ் க்ரீம் எதுக்குன்னு சூர்யா கேள்வி கேக்கச் சொல்லிக் குடுத்ததுக்கப்புறமா இப்பல்லாம் ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம்’ தான். இதெல்லாமும் பூசிக்கலைன்னாலும் நாம அழகோ அழகு தான். ஆனா நாம க்ரீமைப் பூசிக்கிட்டா ஒரு நாலு பேரு வீட்டுல அடுப்பெரியுமில்ல? அதுனால இதை ஒரு பொது சேவையா செய்றேன். வேற ஒன்னுமில்லை. இந்தப் பதிலை மட்டும் போல்ட் இட்டாலிக் அண்டர்லைன்ல கட்டம் கட்டிப் போட்டுடு சரியா?
கவிதா :- நீங்க சாதிக்கனும்னு நினைக்கற ஒரு விஷயம்...
ஒரு விஷயமாவது முழுசா உருப்படியாத் தெரிஞ்சு வச்சிக்கணும். இத சாதிக்க முடிஞ்சாலே அது எனக்குப் பெரிய விஷயம் தான்.
அனிதா :- ஏன் தல... எல்லார் கிட்டயும் ஒத வாங்கறத ஒரு தொழிலாவே ஆக்கிட்டீங்க?
என்ன அனிதா பண்ணறது? ஒத வாங்குனதுக்கப்புறம் ‘எவ்வளோ அடி வாங்குனாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா’னு ஒரு சர்டிஃபிகேட் குடுத்துடறாங்களே? அது அடுத்ததா ஒத வாங்குறதுக்கு ஒரு ஊக்க மருந்தா அமைஞ்சுப் போயிடுது. என்ன பண்ணறது?
கவிதா:- நீங்க சிவகுமார் சார் பதிவில் ஒருமுறை பொருளாதாரம் பற்றிய உங்களின் கருத்து சொன்னதற்கு புத்தகம் பரிசா வாங்கனீங்க.. அது போன்ற விஷயங்களை, அதாவது பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றை உங்கள் பதிவிலும் எழுதுலாம் இல்லையா? நீங்க எழுதாம இருக்க என்ன காரணம்.?
ஹி...ஹி...எழுதலாம் தான். ஆனா அடுத்தவங்க கிட்டேருந்து கத்துக்கறதுல இருக்கற ஆர்வம், நாம நாலு பேருக்கு நல்லது செய்யனும்னு வரும் போது இல்லாத போயிடுதுன்னு நெனக்கிறேன். சுயநலமும் சோம்பேறித் தனமும் தான் உருப்படியா எதுவும் எழுதாததுக்குக் காரணம். வேற என்ன?
கவிதா :- சரிங்க தல, நிறைய வெளியிடங்களுக்கு போயிருக்கீங்க.. அப்படி நீங்க போகும் போது கற்றுக்கொண்ட சில விஷயங்கள்?
எந்த ஒரு புது இடத்துக்குப் போனாலும் புதுசா கத்துக்க எதாவது இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதே ஒரு பாடம் தான்.
ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-
1. உங்களுக்கு இருக்கற நிக்நேம்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?
மோசி, மோகா, மோகு, மாமா, கைப்பு, கைப்ஸ்...அம்புட்டுத் தான்னு நெனக்கிறேன்.
2. உங்க பள்ளிபடிப்புல உங்களுக்கு மறக்க முடியாத டீச்சர் ?
படிப்போட சேர்த்து, நல்லது கெட்டதுகளையும் சொல்லிக் குடுத்த எங்கத் தமிழ் மிஸ்.
3.உங்கக்கிட்ட உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்
சோம்பேறித்தனம், அவநம்பிக்கை, சுயநலம்
4.ப்ளாக்ல சந்திக்க விரும்பற 3 பேர்..
அப்படின்னு குறிப்பா யாருமில்ல. சென்னையில் ஒரு வாரம் தொடர்ச்சியாத் தங்க வாய்ப்பு கெடச்சா, சென்னையில் இருக்கற பதிவர்கள் ஒரு சிலரை-யாவது சந்திக்க ஆசை. அடுத்த வாட்டி சென்னை போகும் போது தான் முயற்சி செய்யனும்.
5.நீங்க ஓவரா அடிவாங்கி அழுதது எப்ப?
ஒன்னா ரெண்டா...நெனைவு வச்சி சொல்றதுக்கு? பெரும்பாலும் சாப்புட மாட்டேன்னு அடம்புடிச்சி அடி வாங்குனது தான் அதிகமா இருக்கும். அடுத்ததா ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அழுது அடிவாங்கினதா இருக்கும்.
6. ஆமா, நீங்க எதுக்கு ப்ளாக் எழுத வந்தீங்க?
தமிழ்ல எழுதறதும், படிக்கறதும் மறக்காம இருக்கறனும்ங்கிறதுக்காக.
அப்படின்னெல்லாம் பாக்க ஆரம்பிச்சா மொத்தமாவே மூனு தான் தேரும். இருந்தாலும், படிக்கிறவங்க ரொம்ப ரசிச்சதுன்னு நான் நெனைக்கிற மூனு பதிவுகள். வச்சான்யா ஆப்பு, தடிப்பசங்க #3 ,வயசாயிடுச்சாங்க
8.ப்ளாக்ல உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்..
என்னோட ப்ளாக்ல தானே?...மூனென்ன மூவாயிரம் இருக்கு! வளவளன்னு எழுதுறது, சமீபகாலமா பின்னூட்டம் போடுறவங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லாம இருக்கறது, ஜாலியானப் பதிவா எல்லாரும் எதிர்பாத்துட்டு இருக்கும் போது பெரிய இவனாட்டம் செமத்தியா பிளேடு போடறது.
9.உங்களின் தம்பியிடம் பிடித்த விஷயம் என்ன?
பாசக்காரப் பய. ஆனா நேர்ல பாத்துக்கும் போது எலியும் பூனையும் தான்.
10.கைப்புள்ள /மோகன், ஒற்றுமை& வேற்றுமை.
ஒற்றுமை - நிறம், அப்பப்போ உதார் விடறது, நமக்குன்னே அங்கங்கே தயாரா இருக்குற ஆப்பு.
வேற்றுமை - ஒரு இளைஞனாயிருந்தும், இன்னும் ஒரு இளைஞி கையைக் கூடப் புடிச்சு இழுத்ததில்லை. அதுக்கான தில்லுமில்லை J
அனிதா :- நன்றி தல, சூப்பரா பதில் சொன்னீங்க.. இன்னைக்கு பீட்டர் தாத்ஸ் க்கு பதிலா நீங்க ஒரு தத்துவம் சொல்லி இந்த நேர்காணலை முடிச்சி வைங்க.
In Greek :-Έν οίδα ότι ουδέν οίδα - Hen oida hoti ouden oida
In English “I know one thing, that I know nothing”
வாய்ப்பளித்தமைக்கு நன்றி அனிதா, கவிதா. அடுத்த வாரம் வரப் போறவங்களுக்காவது கேப்பங்கஞ்சியை, இட்லி மாவுல செஞ்சு குடுக்காம இருக்க முயற்சி பண்ணுங்க. வர்ட்டா?
Labels: கேப்பங்கஞ்சி 62 Comments
பிச்சைஎடுக்கும் சோம்பேறிகளும்-செருப்பு தைக்கும் மூதாட்டியும்
எனக்கு அவரிடம் செருப்பை தைக்க கொடுக்கலாமா என்று தயங்கிய நேரத்தில், பாட்டி கையை நீட்டி செருப்பை கேட்டார்கள்..தயங்கியபடியே செருப்பை கொடுத்தேன். பாட்டிக்கு எப்படியும் 80 வயதுக்கு மேல் இருக்கும், கை, கால் தோல் சுருங்கி, வெளுத்து போன பரட்டை தலையுடன், இடுக்கிய கண்களோடு இருக்கும் அவர்கள் எப்படி இந்த வேலையை செய்ய முடியும் என்று நினைத்தேன்.... செருப்பை கழட்டி அவர்களிடம் கொடுத்து விட்டு எப்படி செய்ய போகிறார்களோ என்று பார்த்து கொண்டு இருந்தேன்.
பார்வை மங்கிபோன பாட்டி, பார்வையை முடியாமல் கூர்மையாக்கி, நடுங்கிய கையோடு நூலை எடுத்து, மெழுகு தடவி, குத்தூசி எடுத்து குத்துகிறார்கள் குத்துகிறார்கள்..ம்ம்ஹீம் எங்கே.... முடியவில்லை.. விடவில்லை அவர்களும்.. ஒருவழியாக குத்தி பின்புறம் நுலை மடக்கி உள்ளே இழுக்கும் சமயம் நூல் வராமல் சிக்கிவிட.. திரும்பவும் ஊசியை வெளியே எடுத்து விட்டு.. நூல் சிக்கலை எடுத்துவிட்டு குத்தூசியை முடியாமல் செருப்பினுள் நுழைத்தார்கள்..
எனக்கோ அவர்கள் ஒவ்வொரு முறை ஊசியை குத்தும் போதும் எங்கே கையில் குத்திக்கொள்ள போகிறார்ளோ என்று திக் திக் என்றது.... ஒருவழியாக முடித்துவிட்டு, குரல் எழும்பாமல் “அஞ்சு ரூபா குடு” என்றார்கள். ஆனால் எனக்கு இன்னும் சேர்த்து கொடுக்கலாம் என்று தோன்றிய மறுகணம், பணம் நிறைய கொடுக்கிறார்கள் என்று அந்த பையன் கவனித்து விட்டால் பாட்டியையே செருப்பு தைக்க நிரந்தரமாக உட்கார வைத்து விடுவானோ என்று தோன்ற,..கேட்ட பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினேன்..
ஆனால் மனதுக்குள் பாரம்...தினமும் டி.டிகே சாலையை கடக்கும் போது, அங்கிருக்கும் மேம்பாலத்திற்கு கீழே.. 35-45 வயதுக்குட்பட்ட திடகாத்திர தேகம் கொண்ட ஆண்கள் (3 பேர் இதுவரை தினமும் நான் பார்ப்பது), அந்த இடத்தை தங்களுது நிரந்தர வீடாக்கி, முழுநேர வேலையாக பிச்சை எடுத்து கொண்டிருப்பது நினைவுக்கு வர..
தள்ளாத வயதில் பாட்டியும் உழைப்பும் ..சோம்பேறிகளின் பிச்சை எரிச்சாலாகவும்............வாழ தகுதியில்லாத மனிதர்கள் என்று அவர்களை வெறுக்க தோன்றியது.......
அணில் குட்டி அனிதா :- ஏன் கவிதா.. எப்பவும் பெரிய தியாகி ரேஞ்சுக்கு காட்டிக்கறீங்க. . மனசு பாரமா இருக்குன்னு சொன்னீங்களே பாட்டிய உங்க வூட்டுல கொண்டுப்போய் வச்சி சோறு போட வேண்டியதுதானே. .கூட கொஞ்சம் காசு கொடுக்கவே உங்களுக்கு மனசு வரல.. ஆனா.. வாய் நிறைய நல்லா பேசிங்க....... சரி சரி.. முறைக்காதீங்க.. ம்ம்... புரியுது.. உனக்கு இங்க இடம் கொடுத்து வளர்க்கறதே பெரிய விஷயம்..ன்னு சொல்றீங்க.. ம்ம்.... எதுக்கும் நான் கொஞ்சம் இனிமே அடக்கி..வாசிக்கறேன்..... அம்மணி கோவத்துல என்னைய தொறத்திட போறாங்க...
பீட்டர் தாத்ஸ் :- When we have done our best, we should await the result in peace.
Labels: சமூகம் 7 Comments
காதலும் காமமும்.......
காதல் காமம் இரண்டுக்கும் என்ன அப்படி பெரிய வித்தியாசம் இருக்கிறது. காதல் தொடக்கம்..காமம் முடிவு என்று சொல்லலாமா..? இல்லை காமம் தான் முதல் அப்புறமே காதல் என்று சொல்லலாமா?.. நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் ஒரு படத்தில் சொல்லுவார் - ஒரு பெண்ணை பார்த்ததும், அவளை தொட்டுப்பார்க்க வேண்டும், அவளை நமக்கென்று சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் தோன்றும், அந்த தொட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் வருவதால் காமம் தான் முதல் அது பிறகு காதலாய் மாறுகிறது. பார்த்தவுடன் காதல் என்பது எல்லாம் பேத்தல் என்ற அவரின் மிக யதார்த்தமாக சொல்லப்பட்ட வார்த்தைகள்.
ஒரு பெண்ணை/ஆனண பார்த்தவுடன், இவள்/இவன் நமக்கு (தனக்கு மட்டும்) சொந்தம் ஆகவேண்டும் என்று நினைப்பதில் காதல் மட்டும் இருக்கிறாதா?.. நிச்சயம் இல்லை. காமம் கலக்காத காதல் இருக்கிறது என்பது எல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம். அப்படி நிச்சயமாக ஒன்றும் இல்லை. ஆனால் காதல் கலக்காத காமம் நிறையவே நிரம்பி கிடக்கிறது. பார்க்கும் பார்வையிலிருந்து, நடந்துக்கொள்வது, பேசுவது, தொடுவது எல்லாவற்றிலுமே மிதி மிஞ்சி பார்க்கலாம். கவியரசு வைரமுத்து அவர்களின் மிக அழகாக அற்புதமான வரிகள்-
ஆடைக்குள் நிர்வானத்தை தேடுவது காமம்
நிர்வானத்துக்குள் ஆடையை தேடுவது காதல்
காதலுடன் எழுதும், பேசும் வரிகளில் ஆபாசமும், வக்கிரமும் சேர்ந்து இருக்காது. அதற்கு நேர் எதிர் காமத்துடன் பேசும், எழுதும் வார்த்தைகளில் நிறைய ஆபாசமும், வக்கிரமும் இருக்கும். நம் தமிழ் சினிமா பாடல்களில் நிறைய உதாரணங்கள் இரண்டிற்குமே உண்டு. ஒரு ஆணோ பெண்ணோ பேசும் போதே அதில் காதல் மிஞ்சி இருக்கிறதா இல்லை காமம் மிஞ்சி இருக்கிறதா என கண்டுக்கொள்ளலாம். மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபளிப்பது காதல், வல்லிய ஆபாசமான உணர்வுகளை பிரதிபளிப்பது காமம்.
நண்பர் ஒருவர் ஒரு பெண்ணை விரும்பினார், திருமணமும் செய்துக்கொள்லும் அளவிற்கு விரும்பினார், அவரின் விருப்பம் என்ற வார்த்தைக்கு பொருள் காதல் இல்லை matching என்கிறார். இன்றுவரை புரியவில்லை, ஒரு பெண்ணை மனதிற்கு பிடித்து, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் ஒருவர் அது காதல் இல்லை என்று சொல்வது விளங்காத ஒன்று. அதாவது காதல் என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருவது, படிப்பு, பணம், அழகு, எதிர்காலம் எதையுமே பார்க்காமல் வருவது. ஒருவரை பார்த்தவுடன் வருவது. ஆனால் நண்பருக்கு வந்த விருப்பம், எதிர்பார்ப்புக்கு உட்பட்டது, இவள் நம் வாழ்க்கைக்கு சரியாக இருப்பாள், இவளின் குணம் நம் வாழ்க்கை துணையாக இருக்க பொருந்தும் என்ற எதிர்பார்ப்புடன் வந்ததால்..அதற்கு பெயர் matching என்றார்.
காதல் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தொடங்கினாலும், பிறகு நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்குகிறது என்பது தான் உண்மை. காமத்திற்கு அப்படி ஒன்றும் இல்லை ஒன்றே குறிக்கோள் “உடம்பு”. காதலை போன்ற மனம் சம்பந்தபடாத மிக எளிதான விஷயம். காதல் மிக மெல்லிய, அற்புதமான உணர்வு என்றாலும், அதுனுடைய வலியும் சுமையும் அதிகம். காமத்திற்கு அப்படி மனதளவில் வலி ஒன்றும் இல்லை. காமம் முயற்சிப்போம் கிடைத்தால் சரி இல்லையேல் ஒரு பிரச்சனை இல்லை. காதல் கிடைக்கவில்லை என்றால், அதன் விளைவு அனுபவித்தவர்களுக்கு தெரியும் வேதனையும், விரக்தியும், காதல் எளிதல்லவே.... உடம்புக்கும்,மனதிற்கும் உள்ள வித்தியாசமே காமமும் காதலும்..
கவியரசு ஒரு படத்தில் சொன்னது - உன் காதல் மட்டுமே வேண்டும் என்பதால் உன்னையே சுற்றி வருகிறேன்.. யாரை வேண்டுமானல் காதலிக்கலாம் என்றால் ஒரு நாயை கூட காதலிக்கலாம். நீ மட்டுமே வேண்டும் என்பதால் உன் பின்னாலேயே இருக்கிறேன்.. இல்லையேல் ஒரு விபச்சாரியிடம் போய் இருக்கலாம்.. (வார்த்தைகள் மாறியிருக்கலாம் - எப்போதோ கேட்டது).
நிறைய குழப்பம் காமத்திற்கும் காதலுக்கும், நிறைய மக்கள் இரண்டையும் சரியாக புரிந்துக்கொள்ளாமல், சிலர் காதலை காமமாக நினைத்துக்கொள்வதும், மேலே சொல்லியது போன்று காதல் என்றாலும் அது காமத்தில் முடிவதால் காமமே கண்களுக்கு பெரிதாக தெரிவதால், காதலை காமமாக நினைத்து எழுதும் கவிதைகளையும், கதைகளையும் படிக்க நேர்ந்ததால்.. இதை எழுத நேர்ந்தது.....
அணில் குட்டி அனிதா:- ஐயோ....ஐயோ......ஐயோஓஓஓஓ......................... கவிதா..ஆஆ......... நீங்க லூசா.. டைட்டா..?!! அந்த குழப்பத்தை முதல்ல தீர்த்து வைங்க..!! தாங்க முடியலைங்க.. உங்க லக்ச்சர். ஏங்க இப்படி..?!! வர வர உங்க இம்ச தாங்க முடியலைங்க..சரி இப்ப என்னத்தான் சொல்லவரீங்க..?!! மக்களா! அம்மணிக்கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க.. .. எந்த நேரத்துல என்ன செய்வாங்களோ..?!! ஏன்னா.. அவங்க..இன்னும்.. லூசா ..டைட்டா?!! confirm பண்ணல...............
பீட்டர் தாத்ஸ் :- The joy that you give to others is the joy that comes back to you.
Labels: சமூகம் 19 Comments
சென்னை மாநகரிலே.....நல்ல பழக்கங்கள் சில..
1. பூட்டிய கதவை உயிரே போனாலும் திறந்து வைப்பது இல்லை
2. வீட்டில் உயிருடன் யாராவது இருக்கிறார்களா இல்லையா என்று அடுத்த வீட்டுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுதல்.
3. பக்கத்து வீட்டுக்காரர்களை வழியில் பார்த்தால் ஒரே ஒரு “புன்னகை” மட்டுமே அதற்கு மேல் பேசுவது நாகரீகம் இல்லை என்பதைவிட..அவர்கள் நம்மிடம் உதவி கேட்டுவிட போகிறார்களோ என்று ஒருவித உஷாருடன் எப்போதும் இருக்கவேண்டும்.
4. அந்நியர் யாரையாவது பார்த்தால்..-அவர் யார்?, எந்த வீட்டுக்கு சொந்தக்காரர், விற்பனையாளரா? கொரியர்க்காரா? இல்லை திருட வந்தவரா? எதற்கு வீண் பிரச்சனை? என்று கண்டும் காணாமல் சென்றுவிடுவது
5. தெருவில் குப்பை எடுத்து செல்ல ஒருவர் வந்தாலும், அதை அவரிடம் சரியாக கொடுக்காமல், தெருவில் தூக்கிப்போட்டு அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்க வைக்க வேண்டும்..
6. பக்கத்துவீட்டில் போட்ட பால் பாக்கெட் உடைந்து பால் வெளியில் கொட்டி கிடந்தாலும், நமக்கென்ன என்று நம் வீட்டு பால் பாக்கெட்டை மட்டும் எடுத்து வந்து விடுவது.
7. பக்கத்து வீட்டில் இடியே விழுகின்ற சத்தம் கேட்டாலும் என்னவென்று கேட்க்காமல் காதை மூடிக்கொண்டு பேசாமல் நம் வீட்டு டிவியை பார்த்து கொண்டு இருப்பது. ஆனால் 2 மாதம் கழித்து கண்டிப்பாக, அவர்களை வழியில் பார்க்கும் போதும், “அன்றைக்கு உங்களது வீட்டில் இடி விழுகின்ற சத்தம் கேட்டதே..அது எனக்கும் கேட்டது, நான் தான் எதற்கு உங்கள் வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்று சொல்லவேண்டும்.
8. அடுத்த வீட்டு குழந்தைகளை நம் வீட்டினுள் சேர்த்து வைத்து விளையாடாமல் இருக்க நம் குழந்தைக்கு உபதேசம் செய்து, வெளியில் போய் விளையாட சொல்லவேண்டும், அதே போல் வேற்று குழந்தைகள் எதிரில் நம் குழந்தை fridge ல் நம் குழந்தைக்காக வைத்துள்ள சாக்லெட், பிஸ்கட் எடுத்து சாப்பிடாமல் இருக்க கற்றுக்கொடுக்கவேண்டும். (காசு கொடுத்து நம் குழந்தைக்கு வாங்கி வைத்தது அல்லவா)
9. அப்படியே நம் குழந்தையோடு மற்ற வீட்டு குழந்தைகள் விளையாடினாலும், நம் வீட்டு சோபா, கட்டில், விளையாட்டு பொருட்களை தொடாமல் பார்த்துக்கொள்ள நம் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டும். (பொருட்கள் வீணாகி விடுமல்லவா)
10. எந்தவித பிரச்சனை வந்தாலும், நமக்கு மட்டும் பிரச்சனை வராதவாறு எப்போதும் பார்த்துகொள்ளவேண்டும். அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன?
அணில் குட்டி அனிதா:- ம்ம்.. ஆமா..கவிதா இதுல கொழந்த கொழந்த ன்னு சொல்றீங்களே அது யாரை?? நீங்க ஒன்னு பெத்து போட்டு வச்சி இருக்கீங்களே அதையா?.. அது கொழந்தையே இல்லையே?!! ம்ம்..சரி சரி.. கண்ணை உருட்டாதீங்க….காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. என்ன செய்றது.. என் தல எழுத்து இதை எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு.....
பீட்டர் தாத்ஸ் :- Faith makes all things possible. Hope makes all things bright.
Labels: சமூகம் 7 Comments
இனிமையான சில நேரங்கள்...........
இரவின் இருட்டில்
நிலவின் ஒளியில்
பனியின் சாரலில்
நெஞ்சோடு இருக்கக்
கட்டிய என்
கைகளின் நடுவில்
நீயும்
உன்
நினைவுகளில்
உலவிய நேரங்களும்...
பேருந்தில்-
பயணிக்கும்
சில மணி நேரங்களில்
இறுக்க மூடிய
கண்களுக்குள்
உனை அடக்கி
உலகம் மறந்து
மெளனமாய்
பேசிய நேரங்கள்.....
கோயிலில்
தரிசன வரிசையில்
பல மணிநேரம்
நிற்கும் நேரங்களின்
கடவுளின் பெயருக்கு
பதிலாய்
உன் பெயரை
உச்சரித்த நேரங்கள்..........
கடற்கரையில்-
அலையின்
ஆவேசமும்
மனிதர்களின்
இரைச்சல்களுக்கும்
நடுவே
எனக்கு மட்டும்
எல்லாமே
நிசப்தமாய்
என்
நினைவுகளை நீ மட்டுமே
நிரப்பிய நேரங்களில்..
காதலனும் காதலியும்
காதல் பாட்டு பாட
திரை அரங்கினுள்
கண்கள் மட்டும்
திரையை
பார்க்க
மனம் என்னவோ
உன் நினைவுகளில்..
களித்திருக்கும்
நேரங்களில்......
என்னின்
எத்தனை நேரங்களை
இனிமை ஆக்குகிறாய்
நீ.....
என்னுடன் எப்போதும்
நீ
இருந்தால்
எத்தனையும் அத்தனை
ஆகுமே
என்னவனே.....!!!
அணில் குட்டி அனிதா: அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க...!! கவித எழுதிட்டாங்கலாம் கவிதா.. என்னவோ போங்க நாட்டுல இந்த கொடுமைய எல்லாம் நாங்க பார்க்க வேண்டியதா இருக்கு... !!! பீட்டர் தாஸ் நீங்க உங்க பீட்டர் கவிதைய எடுத்து விடுங்க..
பீட்ட்ர் தாஸ் : In the moment that you carry this conviction, in that moment your dream will become a reality.
Labels: கவிதை 16 Comments
வலைபதிவர் மீட்டிங்- இதுவரை வெளிவராத தகவல்
வாங்க.....வாங்க... 19ந்தேதி பதிவர் மீட்டிங் நடந்தாலும் நடந்தது.. தாங்கலடா சாமி.. ஆளுக்கு ஆளு பதிவு ப்போட்டு தாக்கறாங்க.. கவிதா மீட்டிங்ல கலந்துக்கலன்னு எல்லார்க்கும் தெரியும்.. ஆனா.. நான் கலந்துக்கிட்டேன்..அது யாருக்குமே தெரியாது.. யாரோட கேமராவிலும் சிக்காம நாங்க அங்கன இல்ல இருந்தோம்.... இட்லி வடை கிட்ட இருந்து க்கூட எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல..
சரி ..மேட்டருக்கு வரேன்..... இந்த கூட்டத்துல.. 2 பேருங்க.. ஒருத்தர் எல்லாருக்கும் அருள வழங்குவாரு....... இன்னொருத்தர்.. இந்த டீ.. காப்பியில எல்லாம் கலக்குவாங்களே.. அந்த சீனி..சக்கர...ங்க.. இந்த 2 பேரும் மீட்டிங்குக்கு போறோம்.. கான்டிரிபியூட் வேற பண்றோம்னு ப்ளான் போட்டு.. மதியம் சாப்பிடாம வெறும் வயத்தோட வந்திருந்தாங்க..... சின்ன புள்ள தனமா ஏன்னு மட்டும் யாரும் கேட்கப்படாது.....ஆமா சொல்லிட்டேன்..!! அவங்களுக்கு என்னான்னா.. ஒரு போண்டா..ஒரு வடை..இப்படி ஏதாவது கெடைக்கும் ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தாங்க.. ஆனா கெடச்சது என்னவோ........ டீ..யும்.. மேரி ‘யும்..சாரி.......சாரி.......மாரி பிஸ்கட்டும் தான்..
எல்லாரும் டீ 2 ரவுண்டு குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருக்கற சமயமா ப்பார்த்து, யாருக்கும் தெரியாம இவங்க 2 பேரும் உள்ள போய் 15-20 பேர் குடிக்க இருந்த மிச்சமான டீ ய (முன்ன பின்ன டீ யே பார்க்காத ரேஞ்சுக்கு) மொடக்கு மொடக்கு ன்னு குடுச்சி காலி பண்ணிட்டாங்க.. உஸ்... அப்பாடா............ மதியம் சாப்பாடு கட், அண்ட் நைட் டின்னரும் சாப்பிட முடியாத ரேஞ்சுக்கும் 2 பேரும் ஒரு கட்டு கட்டிட்டு போய்ட்டாங்கப்பா.. ஹி ஹி,,
ஹி ஹி,,..இது எப்படி எனக்கு தெரியும்னு பார்க்கறீங்களா?.. ஹி...ஹி.. இப்படியெல்லாம் நீங்க கேட்டா எனக்கு வெக்கமா இருக்கு இல்ல.... இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் அப்படி தூக்கி ஓரமா கெடாசிட்டு..சொல்றேன்.. “நானும் அவங்களுக்கு கம்பனி கொடுத்தேன் இல்ல....”
Well, I can show those nice snaps to you all.. but.. you know they will catch me and odachify my hand again.. so.. better..escapeeeeeeee............
குறிப்பு:- அண்ணன் பாலா..அவர்களே...... நற நற வென பல்லை கடிக்காதீங்க.. நீங்க மைலாப்பூர் ல கடிக்கறது மாம்பலத்துல கேட்குது.. அக்கா பொன்'ஸ் அவர்களே.. கோவப்பட்டு பொங்காதீங்க.. பொங்கி யானைய என் மேல உருட்டிடாதீங்க.... நான் ரொம்ப பாவமுங்க........ உங்களுக்கு தெரியாம நடந்த ஒரு விஷயங்கோ இது.. .. தெரிஞ்சிக்கிட்டும்னு சொல்லிடேங்க..சின்ன ஜீவன் என்னை எதுவும் செஞ்சிடாதீங்க.. நான்னா உங்க எல்லாருக்கும் செல்லம் தானே.. :) :) ஹிஹி.... ரொம்ப பிடிக்கும் தானே.. அதுவும் பொன்ஸ் அக்கா' க்கு நான்னா.. உசுரு எனக்கு அப்பவே தெரியும்..........!! :)
(அணித்து போதும் பிள்டப்பு அடங்கு)....
டீ எத்தனை என்ற தகவல் சொன்ன டீ சப்பளையர் வாழ்க....!! வாழ்க..!! வாழ்க !!
Labels: அணில் குட்டி 12 Comments
கணிதமேதாவியுன் நிலைமை உங்களுக்கும் வரவேண்டுமா?
கவிதாவோட பதிவுகளை தொடர்ந்து படிக்கறவங்களோட கதி இப்படி தான் ஆகப்போகுது.. ஹி..ஹி... இத எத்தனை பேர் மனசுல நெனச்சீங்களோ.. சொல்லமுடியாம கஷ்ட பட்டீங்களோ..?! ம்ம்..உங்க எல்லார்க்காகவும் சேர்ந்து இதோ..நான் சொல்லிட்டேன்.. சோ.. எல்லாரும்..ஜோரா என்கூட சேர்ந்து விசில் அடிங்க பார்க்காலாம்..... உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... உய்ய்ய்............ உய்ய்ய்ய்ய்............... !!!!
அதுவும் வர வர என்னை அதிகமா எல்லாரும் விசாரிக்க ஆரம்பிச்சவுடனே.. அவங்களுக்கு பொறாம தாங்கமுடியல.. என்ன செய்ய?!! வீட்டுல எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க. என் காதுல ஒரே ரத்தமா வழியுது.. முடியல.. சொல்லிட்டேன்..
என்னால அவங்க எழுதற மேட்டர் பெரிசா வெளிவர மாட்டேங்குதாம். நான் எப்பவும் அவங்கள் மட்டந்தட்டி பேசறதால அவங்க இமேஜ் (அப்படின்னு ஒன்னு இருக்கறதே அவங்க சொல்லிதான் எனக்கு தெரியும்) பாதிக்க படுதாம். அதனால நானும் அவங்களும் சேர்ந்து உக்காந்து பேசி ஒரு முடிவு பண்ணி இருக்கோம். என்னன்னா.. பதிவுக்கு நான் வேணுமா வேண்டாமான்னு என் ரசிக பெருமக்கள் முடிவு பண்ணட்டும் என்று, கீழ இருக்கும் 3 நம்பர்ல எது உங்களுக்கு சரின்னு படுதோ அதை அம்மணிக்கு சொல்லுங்க.. அவங்க அதையே செய்வாங்க.. கடைசியில என் கால வாரிடாதீங்க.. எனக்கு ஓட்டு போடறவங்கள தனியா கவனிப்பேன்.
உங்களின் பொண்ணான வாக்கு எதற்கு..
1. கவிதாவும், அணில் குட்டியும்’ மா?
2. அணில் குட்டி மட்டும்’ மா?
3. கவிதா மட்டும்’ மா?
உங்கள் ஆதரவை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் உங்களின் அன்பு அனித்து குட்டி..
Labels: அணில் குட்டி 8 Comments
பிரமோஷனுக்காக பெருசுகள் செய்யும் அநியாயங்கள்
இங்கே பெருசுகள் என்று சொல்லுபவர்களின் வயது வரம்பு 40-55 என்று வைத்துக்கொள்ளலாம். MBA வகுப்புகளுக்கு இந்த வயதுக்காரர்கள் அதிகம் வருகிறார்கள். நிச்சயமாக அவர்கள் வயதிற்கு அலுவலகத்தில் மேனேஜர் அல்லது உதவி மேனேஜர் பதவியில் இருப்பார்கள், அதற்கான அனுபவம் இருக்கும் என்றும் நம்பலாம். இவர்கள் அனைவருமே தங்களின் வேலை அனுபவங்களை கொண்டே தேர்வுகள் எழுதமுடியும், அப்படி ஒன்றும் மிக சிரமமான படிப்பும் அல்ல. அப்படி அனுபவ படிப்பு உதவவில்லை என்றால், சரியான அனுபவம் அவர்களுக்கு இல்லை மேலும், அலுவலகத்தில் “ஈ” ஓட்டுகிறார்கள் அல்லது அடுத்தவரின் உழைப்பில் சம்பாதித்து உடம்பையும் வளர்க்கிறார்கள் என்று தெளிவாக முடிவு செய்யலாம்..
பார்த்தவரை, அவர்கள் தேர்வுகளில் பக்கம் பக்கமாக பிட் எழுதிவந்து (இப்படி எழுதும் நேரம், படித்து விடலாம்) காப்பி அடிப்பதை பார்த்தால் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது. அவர்கள் வயதுக்கும் வகிக்கும் பதவிக்கும் மிக கேவலமான விஷயம் மட்டும் அல்ல அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள், வளர்த்து இருப்பார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அப்படியே அவர்கள் நல்ல பிள்ளைகளை வளர்த்து இருந்தாலும், பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எத்தனை அசிங்கம். மதிப்பார்களா?
பிட் அடித்து அப்படி பாசாகி என்ன பயன்?? “பிரமோஷன்’ அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். அப்படி கிடைக்கும் பதவி உயர்வால் ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதாவது Finance, HR, Systems, Marketing மேனேஜராக ஆகிறார் என வைத்து கொள்வோம். அவருடைய வேலை தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேலை தரத்தினால் அந்த அலுவலகமும், அவர் சார்ந்த வேலை மற்றும் அவரின் கீழ் வேலை செய்பவர்களுன் தரமும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதில் இளைஞர்களையும் இந்த பெருசுகள் முன்னுக்கு வர விடுவதில்லல. அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
பிட் அடிப்பது மட்டும் இல்லை, assignment , project போன்றவைகளும் காசு கொடுத்து முடித்து விடுகிறார்கள். இதனை பார்த்து சிறுசுகளும், நாமும் காசு கொடுத்து முடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நல்ல வழிக்காட்டிகள் இவர்கள். இந்த வயதில் இவர்கள் படிக்கவில்லை என்று யார் அழுதார்கள், இப்படிப்பட்டவர்களால், அந்த படிப்பிற்கே தரமில்லாமல் போகிறது. விழுந்து விழுந்து படித்து சென்று எழுதியவர்களை விட, பிட் அடித்து அதிக மதிப்பெண் எடுக்கும் இப்படி பட்டவர்கள் அதிகமே. உழைப்பை விட குறுக்கு வழிதான் சிறந்தது என உழைப்பவர்களும் நினைத்துவிட்டால்.....?? படிப்பிற்கும், திறமைக்கும், உழைப்புக்கும் மதிப்பில்லாமால் போகிறது என்பது மட்டும் உண்மை.
அணில் குட்டி அனிதா:- அம்மணி பொறாமை பட வேண்டியது தான் அதுக்குன்னு இப்படியா.. ஒன்னும் இல்லீங்க.. அம்மணி கூட exam எழுதினவரு நிறைய மார்க் எடுத்துடாருங்க.. அதான் இந்த புலம்பல்ஸ்..அம்மணிக்கு எப்பவுமே அவங்க தான் அறிவாளி மத்தவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லைன்னு ஒரு நெனப்பு அதுல எழுதறது தான் எல்லாம்.. exam க்கு போனோமா.. நம்ம பேப்பர பாத்து எழுதினோமான்னு இல்லாம எதுக்கு இப்படி அடுத்தவங்கல பாத்து காதுல போக விடனும்.. நாட்டுல ஏதோ நாலு பேரு நல்லா இருக்கட்டும், நாலு காசு சம்பாதிக்கட்டும் ன்னு ஒரு நல்ல மனசு இருக்கா பாருங்க...... பொறாமை ..விடுங்க.. அம்மணி..நீதி, நேர்மை, நியாயம் ன்னு பேசி நம்ம பொழப்புல மண்ண தூவுவாங்க........... நாட்டுல இப்படி சிலதுங்க இருக்கறதனால தான் நாடு உருப்பட மாட்டேங்குது.. என்னத்த சொல்ல.. தாத்ஸ் நீங்க சொல்லுங்க..... கவிதா புலம்பல்ஸ்க்கு உங்க பீட்டர் எவ்ளோ தேவலாம்............
பீட்டர் தாத்ஸ் : Courage is a special kind of knowledge; the knowledge of how to fear what ought to be feared, and how not to fear what ought not to be feared..
Labels: சமூகம் 17 Comments
கோடான கோடி ரசிகர்களுக்கு - அணில் குட்டியின் அறிவுப்பு
(பாருங்க..தலைப்ப பார்த்து யாரும் உணர்ச்சி வச படவோ.. பொறாமை படவோ க்கூடாது.. ஒரு அணில் குட்டிக்கு இவ்வளவு ரசிகர்களான்னு.. அதுக்கு எல்லாம் ஒரு இது வேணும் அந்த இது உங்களுக்கு இல்லைன்னு.. அமைதியா அழுகைய நிறுத்திட்டு.. மேட்டர மட்டும் படிங்க.... சரியா.)
ஹாய்ய்ய்ய்ய்ய்ய் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..?!! நான் நல்லா இருக்கேன்.. அம்மணி கவிதா எப்பவும் போல நான் சொல்ற பேச்ச கேட்காம ஓவர் சீன் போட்டு கிட்டு இருக்காங்க.....அவங்கள திருத்த முடியாதுங்க.. எப்படியாவது போகட்டும்னு.. உங்க அன்புக்காக நானே கவிதாவின் எல்லா தடைகளையும் தாண்டி குதிச்சி பெரிய ரிஸ்க் எடுத்து மெஸேஜ் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்...
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மூச் அம்மணிக்கிட்ட யாரும் போட்டு குடுத்துடாதீங்கப்பா.. அம்மணி ஆட்டம் தாங்காது.. சந்தரமுகி கெட்டாங்க... அப்புறம் லக லக லக ன்னு சொல்ல தலைவர என்னால கூப்பிட முடியாது..
சரி மேட்டருக்கு வரேன்.... என்னோட கோடான கோடி ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்க முடியலைங்கோ..... எப்ப திரும்பு வர அனிதா ன்னு போட்டு நச்சரிக்கறாங்க.. தபாலுக்கு பதில் போட்டு கை ஒடஞ்சி போச்சுங்க...... எவிடன்ஸ் க்கூட இருக்கு ப்ளீஸ் படத்தை பாருங்க.. (சரி....சரி...அடங்கு அனித்தூதூஊ..யாரவது இன்னொரு கையையும் ஒடச்சிட போறாங்க..) ..
(ச்சீனு அண்ணே கை ஒடஞ்ச என்னை ஓடியாந்து படம் புடிச்சீங்களே.. உங்க பாசம் யாருக்கும் வராதுங்க..நன்றிங்கோ........சரி..தனியா ஒரு 5 star வாங்கி தந்து உங்கல கவனிக்கறேன்..)
அம்மணி க்கிட்ட எழுத வர சொல்லி..கேட்டு கேட்டு பார்த்தேன்... ம்ம்ம்..எங்க.. அழுத்தமுங்க.. இதைவிட வேற வேல நிறைய இருக்குன்னு ஓவர் சீன்.. அம்மணி சீன் பத்தி புதுசா உங்க யாருக்கும் நான் சொல்ல வேணாம்.. சரி.....
பிளாக்ல எல்லாரும் எப்படி இருக்கீங்க.. ஒரு அப்டேடும் இல்ல... யாருக்கு கல்யாணம் நடந்தது.. யாரு..மூச்சு விட மறந்துட்டாங்க.. எதுவா இருந்தாலும் நமக்கு யாராவது வந்து அப்டேட் பண்ணிட்டு போங்க...
நம்ம தல(கைப்பூ) எப்ப பார்த்தாலும் என்னைய போன் போட்டு விசாரிக்காரு.. அவருக்கு ரொம்ப டாக்ஸ் ங்க.. பாசமுள்ள மனுஷங்க...ம்ம்ம் நாட்டுல இருக்கத்தான் இருக்காங்க.. அம்மணிக்கு எங்க புரியுது..
அப்புறம் அண்ணன் ச்சீ’ ’னு கவிதா அம்மணி எழுத திருப்பி வந்தா கல்லால அடிப்பேன்னு சபதம் போட்டு இருக்காருங்க.....,அண்ணே..என்னையும் உங்க க்கூட சேர்த்துக்கோங்க.. நான் நல்லா பெரிய கல்லா பொறுக்கி தரேன்.. 2 பேருமா சேர்ந்து அம்மணிய அடிப்போம்..... நான் எப்பவுமே கவிதா’ க்கு எதிர்கட்சி தானுங்கோ.. !! நம்புங்கோ...
ஆமா நம்ம பாலா அண்ணனுக்கு சிக்குன் “(கு)கன்னி ’ ஜீரம் வந்து ஒரே அடியா படுத்துட்டாருன்னு கேள்விப்பட்டு மாலையெல்லாம் வாங்கி ரெடியா வச்சா..... என்னத்த சொல்ல.. மாலைக்கு வாங்கின பணம் தான் வேஸ்ட் ஆச்சி.. அம்மணிவேற ஒரு ஆட்டம் போட்டாங்க... என்ன பாலாண்ணே இப்படி.. கால வாரீட்டீங்க..
அப்புறம் ஜொள்ஸ் அண்ணன்.. அணிலு நீ இல்லாம விடியோ கேமரா க்கு வேல இல்லாம இருக்குன்னு... ஒரே புலம்பலுங்கோ........
சரிங்கோ நம்ம புலம்பல்ஸ் ஒரு பாச புலம்பல்ஸ்ங்கோ........... கவிதா எழத வரவரைக்கும்.. இப்படி அப்ப அப்ப வந்து லுக்கு விட்டுட்டு போறேனுங்க.. உங்க எல்லார் லவுஸ்’ க்கும் டாங்ஸ்ங்கோ.. ...நான் இப்ப ஜீட்’ங்கோ..
ஓய்..தாத்தா.. பீட்டர அவத்துவுடு..
பீட்டர் தாத்தா :- Goals must be under our control. We need targets and directions upon which to focus our efforts.
Labels: அணில் குட்டி 38 Comments
Blog & தமிழ்மணம் விட்டு போகிறோம் - கவிதா & அணில்குட்டி
சொந்த காரணமாக நானும் அணில் குட்டியும் எழுதுவதை நிறுத்திவிட முடிவெடுத்துள்ளோம்.
இது வரை எங்களின் எழுத்தை மிக பொருமையுடன் பார்வையிட்டவர்கள் அனைவருக்கும் எங்களுது இதயபூர்வமான நன்றி.யை தெரிவித்துகொள்கிறோம்.
எங்களின் எழுத்து மூலமாக யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மறந்தும் மன்னித்து விடுமாறும் கேட்டு கொள்கிறோம்.
நன்றி..
அணில் குட்டி அனிதா :- இங்க பாருடா.. இந்த அம்மணி பண்ற அநியாயத்த......... இவங்க யார் கூடையோ சண்ட போட்டது வேணுமான சொந்த பிரச்சனையா இருக்கலாம்.. இவங்க எழுதறத நிறுத்தறத விட்டுப்புட்டு என்னைய ஒரு வார்த்தக்கூட கேட்காம..என்னையும் கூட சேர்த்துக்கிட்டாங்க..இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?.. ஆரம்பத்திலிருந்தே..என் மேல ஒரு பொறாம இவங்களுக்கு, எங்க இவங்கள விட பெரிய எழுத்தாளரா ஆயிடுவேன்னு பயந்து.. என்னையும் எழுத விடாம பண்றாங்க.. ம்ம்.. நம்ம தல வேற என்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டு போறேன்னு சொன்னாங்களே.. அப்பவே அவங்க கிட்ட போய் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம்.. இப்ப பாருங்க சோத்துக்கு சிங்கி அடிக்கற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க.. ம்ம்..இப்படி நம்மல புலம்ப விட்டுடாங்களே..சே..சே.. நிறுத்தறவங்க பேசாம நிறுத்த வேண்டியது தானே.. பெருசா மெஸேஜ் வேற.. என்னத்த சொல்ல.. ம்ம்.. இந்த அம்மணி எல்லாத்திலேயும் கொஞ்சம் ஓவர் தான்...
என்னவோங்க.. அம்மணி எப்படியிருந்தாலும் ரொம்ப பாசமா அவங்க சாக அடிச்ச அணிலா நினைச்சு நம்மல பார்த்துக்கிட்டாங்க...அதனால கொஞ்சநாள் சோத்துக்கு சிங்கி அடிச்சாலும், அவங்கள கொஞ்சம் கூல் பண்ணி திருப்பி வேற வேல ஏதாவது குடுப்பாங்களான்னு பார்க்கலாம்.....
இது வரைக்கும், நீங்களும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்துட்டோம்..பிரியத்தான் கஷ்டமா இருக்கு... என்ன செய்ய ம்ம்..ஒரு ஓரமா உக்காந்து கொஞ்சம் அழுதுக்கறேங்க..................சரி.. வரேங்க.. எனக்கு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்கோ.............அழுதுக்கிட்டே நம்ம பீட்டர் தாத்தா கடைசியா என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..
பீட்டர் தாத்தா :- Be so strong that nothing can disturb your peace of mind.
Labels: கதம்பம் 25 Comments
2. Blog நண்பர்கள் நட்பு பற்றி..
Blog நண்பர்கள் - பீட்டர் தாத்தா இனிமே தத்துவத்துக்கு எங்கேயும் போகவேண்டாம் போலிருக்கிறது.. பாருங்க..நம்ம நண்பர்கள் அத்தனை பேரும் எப்படி அற்புதமா நட்பை பற்றி சொல்லியிருக்காங்க......நண்பர்கள் அத்தனை பேரின் எழுதும் திறமையை பார்த்து பெருமை அடைகிறேன்.. என் வார்த்தைக்கு மதிப்பளித்து எழுதி கொடுத்த கார்த்திக், சந்தோஷ், ரவி, பிரியன், சிவகுமார்ஜி, கைப்புள்ள மற்றும் சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றி.......
கார்த்திக்ஜெயந்த்:-
"A friend is a beautiful gift you give your self"
It is by chance we met, by choice we became friends... Friendship is a strange thing....we find ourselves telling each other the deepest details of our lives....But what is a friend?
A confidant?
A lover?
A fellow email junkie?
A shoulder to cry on?
an ear to listen?
a heart to feel?...
A friend is all these things...and more. No matter where we met, I call you friend. A word so small...yet so large in feeling...a word filled with deep emotion.
சந்தோஷ்
விதை இல்லை
செடி இல்லை
காய் இல்லை
பழம் இல்லை
ஆனாலும் பூக்குது
இந்தப்பூ! அட அதுதாங்க நட்பு
செந்தழல் ரவி
எனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...
ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று..
பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்..
பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்...
ஆனால்..
எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...
பிரியன்
பாய்மரக்கப்பல் வாழ்க்கையில் நம்மை அன்பால் செலுத்தும் துடுப்பு தாய் , சரியான திசையினில் செலுத்துவது தந்தை உறவு.நம்மை தாங்கி நிற்கும் மரம் இறைவன்.இவர்கள் கூட கைவிட்டுவிடும் ஒரு நிலையில் , கடலில் தத்தளிக்கும் நிலையில் கையில் கிடைக்குமே ஒரு மரக்கட்டை அது நட்பு.
பெண் நட்பை பொறுத்தவரை: எந்த நண்பி கடைசி வரை காதலியாகாமல் இருக்கிறாளோ அவள் நண்பி.
என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
வந்து நீயே
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
பறித்து நான்
தரும் வரை காத்திருந்தால்
நீ காதலி!
மா.சிவகுமார்
நட்பு என்பது என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், உண்மையான நட்பு ஒன்றை பல கட்டங்களில் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன.
பள்ளியில் கிடைத்த நண்பன், அவன் வேறு பள்ளிக்குப் போய் விட்ட பிறகு ஏற்பட்ட வெறுமை, பல ஆண்டுகளாக நட்புகள் தவிர்த்து வாழ்ந்த பாலைவன நாட்கள், கல்லூரியில் கிடைத்த ஒரு நட்பு, அப்புறம் வேலையில் சேர்ந்த பிறகு மீண்டும் வெறுமை. பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சிறந்த நண்பனைக் கண்டு கொண்டு இன்று வரை, தொலைவாகப் போய் விட்டாலும், இளைப்பாறும் நிழலாக இருக்கும் சுகம்.
ஆமாம், என்னைப் பொறுத்த வரை நட்பு என்பது இளைப்பாறும் இடம். பாசாங்குகளை எல்லாம் துடைத்துப் போட்டு விட்டு முகமூடிகளை எல்லாம் கழற்றி விட்டு நாம் நாமாக இருக்கும் இடம் நட்பு. எந்த விதக் கேள்விகளும் இல்லாமல் நிபந்தனையற்ற அன்பு நட்பில் ஒன்றுதான் கிடைக்கிறது. இன்றைக்கும் என்னுடைய நண்பனுக்குத் தொலை பேசி என்ன வேண்டுமானாலும் பேசி மனதைக் கொட்டி விடும் சுவாதீனம் இருக்கிறது. அதுதான் நட்பின் கொடை. பல மாதங்கள் கழிந்து சந்தித்த பிறகு பிரியவே இல்லாதது போல பேச்சு தொடர்வது இந்த உறவில் மட்டும் நடக்கும் அற்புதம்.
இதை(நட்பை) விரிவு படுத்தி உலகெங்கும் இத்தகைய உறவாக மாற்றுவது சாத்தியம் என்று தோன்றுகிறது.
பெயர் வெளியிட விரும்பாத நண்பர்
எல்லா எல்லைகளையும் கடந்தது நட்பு என்கிற காலம் போய்..
நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்கிற காலத்தில் வாழ்கிறோம...கடன் நட்பை முறிக்கும் என்கிற வாசகம் சொல்லும் நட்பின் எல்லையை...நட்பு என்பது முள் செடியில் இருக்கும் ரோஜா, கண்னில் இருக்கும் கருவிழி என்பதெல்லாம--நம்முள் இருக்கும் யாதர்த்தத்திற்கு நாம் போட்டுக்கொள்ளும் முகமூடிகளே...
Friendship = Friendship
சந்தோஷத்தை தரும் பொய்யை விட உண்மை தரும் வலி மிகவும் இன்பமானது யாதர்த்தமானது....எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்குமான பதில்கள்தான் வெற்றிகளும் தோல்விகளும்........இதுதான் வாழ்க்கை என்று எடுத்துக்கொள்வதை விட இதுவும் வாழ்க்கை என்பது யாதர்த்தம்...
இங்கு காதலியின் தோல்வியை காதலின் தோல்வியாக சொல்லும் இளைஞர்கள் ஏராளம்....
தன் இயலாமையை சமுதாயத்தின் இயலாமையாக பார்க்கும் மக்கள் ஏராளம்..
ஏன் இந்த முரண்பாடு??? யதார்த்த வாழ்க்கைக்கு முரணாக வளர்க்கப்பட்டதன்
விளைவு....நடப்பதை யார் அறிவார் என்று உளறிக்கொண்டிருப்பதை விட நடந்ததையாவது அறியும் குணம் வளரவேண்டும். குடித்தால் மட்டும்தான் போதையா... படித்தாலும் போதைதான் கவிதைகளை..
கைப்புள்ள
நட்பைப் பற்றி எனை எழுதத் தூண்டினீர்! நான் கவிஞனும் அல்லன் எழுத்தாளனும் அல்லன். ஆயின் இரு கைகள் இல்லாத ஒருவன் தான் இடுப்பில் அணிந்துள்ள உடை விலகி கீழே விழ இருக்கும் அக்கண நேரம், அவனுடைய மானத்தினைக் காக்க தக்க நேரத்தில் (கவனத்தில் கொள்க: தக்க நேரத்தில்) உதவ ஓடோடி வரும் அவ்வுறவே நட்பு என்பதனை குறள் வழி நானறிந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
நாகை சிவா
தலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது. நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை) நேற்றயே பொழுது நல்ல நினைவுகளோடு நாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு இன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு
நட்பு: நம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.
"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
படித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
தெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
அலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
உறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
NIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
நண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
வெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்"
இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள். ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம். ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.
நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை இருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள். ஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி..... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்..... இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை... காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன். என்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.
அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
குறிப்பு:- அணில் குட்டிக்கு மனசி சரியில்லையாம், அதனால பேச வராம் "உம்னு" இருக்கு..சமாதானம் செய்து நாளைக்கு கூட்டிட்டு வரேன், இன்னைக்கு பீட்டர் தாத்தா வரலை..நம்ம நண்பர்களே தத்துவத்தை உதிர்த்துவிட்டார்களே....
Labels: கதம்பம் 9 Comments
Blog நண்பர்கள் நட்பு பற்றி..
Blog நண்பர்கள் - இவர்களை பற்றியும், இவர்களின் பேச்சு திறமை, எழுத்து திறமை என சொல்லி மாளாது.. எனக்கு இவ்வளவு திறமையானவர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக கூட இருக்கும். அதிர்ஷ்டம் என்று சொல்லுவவர்களே, அது இருப்பதால் தான் இப்படி ப்பட்ட திறமை வாய்ந்த நண்பர்கள் எனக்கு தினந்தோரும் கிடைத்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். நட்பு பற்றி அவர்களிடம் கேட்டறியும் ஆர்வத்தில், அவர்களை நச்சரித்து எழுதி கொடுக்க சொல்லியிருந்தேன். என் நச்சரிப்பு தாங்க முடியாமல், இதோ நட்பை பற்றி நம் நண்பர்கள் சொல்லியதாவது.....
எஸ்.பாலபாரதி
அம்மா- தொப்புள்கொடி கொடுக்கும் உறவு.
அப்பா- உயிர் கொடுத்த உறவு.
உடன் பிறப்புகள்- ஒரே ரத்தம் என்பதால் வரும் உறவு.
மனைவி- காமத்தின் அடித்தளம் அமைந்த உறவு.
நட்பு--- எங்கோ பிறந்து, எங்கோவளர்ந்து, எந்த ரத்த உறவுமில்லாமல்.. அன்பு செலுத்துகிற உறவு.
சுருக்கமாகச் சொன்னால்....
எங்கொல்லாம் ஒரு மனம் காயப்படும் போது..
அதற்கு ஆதரவாய் இன்னொரு மனம் குரலெழுப்புகிறதோ..
அங்கே இருக்கிறது நட்பு.
பொன்ஸ்
நண்பர்கள் என்பவர்கள் ஆற்றின் கரை மாதிரி. நம் கருத்துகளில், செயல்களில், அதிகம் ஊடுறுவக் கூடாது. அந்தக் கருத்துகளைச் செதுக்குவதற்கு உதவலாம் ஆனால், கட்டாயப் படுத்தும் அன்போ, நட்போ நிச்சயம் போகப் போகக் கசப்பைத் தரும்.
ஜொள்ஸ்
நட்பு
எனக்கு மிகவும் பிடித்த பூ !
---------------------------------------
உன்னை என்
நண்பர்களுக்கும்
என்னை உன்
நண்பர்களுக்கும்
பிடிக்காவிட்டாலும்
நம்மை பிடித்துவிட்டது
நட்புக்கு!
------------------------------------------
உன்னைக் கொடுத்தால்தான்
என்னைக் கொடுப்பேன்
என்ற பேராசையெல்லாம்
காதலைப்போல்
நட்பிற்கு இல்லை !
சீனு
இந்த உலகில் உள்ள எந்த ஒரு உறவும், ஏதோ ஒரு எதிர்ப்பார்புடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ உண்டாவது.
கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருப்பது திருமணம்
தாய் பிள்ளையை நேசிப்பது, தன் பிள்ளை என்பதால்
தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் இருப்பது கட்சி என்னும் பந்தம்.
ஆனால், எதையும் எதிர்ப்பார்க்காமல் வெறும் நேசத்தை மட்டுமே கொண்டுள்ளது நட்பு மட்டுமே. காரணம், நண்பர்கள் பெரும்பாலும் ஒரே வயது உள்ளவர்கள். அதனால் ஒரே wavelength இருக்கும். இதுவே,மிக முக்கியமான காரணம், அங்கே எதிர்காலத்தினைப் பற்றின பயம் சுத்தமாக இருக்காது. அதனால், கவலைகள் இல்லை. Hostel Life வாழ்ந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
தேவ்
Friendship is something which nurtures no expectations...It allows you to be yourself... Its the most comfortable feeling mankind has been ever blessed with. Friends are reflections of oneself...Friendship is nothing but just taking a look at yourself in a mirror
தேவ் பதிவிலிருந்து எடுத்த அவரின் சில வரிகள்:-
மேடைப்போட்டு அறிவிக்கத் தேவையில்லை
கடமையென்னும் கயிற்றில் கட்டிவைக்க அவசியம் இல்லை
இதயத்தின் ஒரு ஒரம் போதும் நினைத்தவுடன் பூப்பதற்குஅதற்கு நட்பு என்று பெயர்..
அணில் குட்டி அனிதா :-
பாலா அண்ணே சும்மா கலக்கிட்டீங்க போங்க.., எப்படீண்ணே உங்களுக்கு இப்படியெல்லாம் எழுத வருது..அம்மணிய பாருங்க..எதுக்கும் லாயிக்கில்ல..
பொன்ஸ் அக்கா, என்னக்கா இவ்வளவு அற்புதமா friends நொய் நொய் பண்ணக்கூடாதுன்னு சொல்லீட்டீங்க.. முதல்ல இந்த அம்மணி’க்கு சொல்லுங்க.. எப்படி எல்லாரையும் டார்ச்சர் பண்ணி எழுதி வாங்கி இருக்காங்க பாருங்க.. திருத்தமுடியாது இவங்கள.. ,ம்ம்..
ஜொள்ஸ் அண்ணே, ஜொள்ளுமட்டுந்தேன் தெரியும்னு நெனச்சேன்..கவிதையில நட்பை ஸ்பூன் போட்டு கலக்கியிருக்கீங்க... சூப்பரண்ணே..
சீனு அண்ணே வாங்க..ஏதோ கத/லெக்சர் சொல்ல ஆரம்பிச்சி, ஒருவழியா.. எதிர்பார்ப்பு இல்லாதது நட்பு’ ஒரு மேட்டர ஸ்டாராங்கா சொல்லிடீங்க.. உங்களுக்கு எதிர்பார்க்காம ஒரு நாள் கவிதா ஒரு நல்ல அதிர்ச்சிய குடுக்கப்போறதா சொன்னாங்க..(பெரிசா ஒன்னுமில்ல, அவங்க உங்கள பாக்க போறாங்களாம்.. அவங்கள பாத்துட்டு ஜன்னி, கின்னி வந்துர போது பாத்து..உஷாரா இருங்க)
தேவ் அண்ணாச்சி நீங்க எப்பவும் நம்ம கட்சி, அம்மணிய அலக்கழிச்சி எழுதி குடுத்தீங்க போல இருக்கு, உங்கள மாதிரி 2 பேரு இருந்தா போதுமே..கவிதா ஆட்டம் எல்லாம் தானா அடங்கிபோய்டும் அடங்கி.. ம்ம்..அலய விட்டு சொன்னாலும் ‘நட்பு உன்னின் reflection” சொல்லி அசத்திட்டீங்க..
சரி மத்தவங்க எல்லாம் அடுத்த பதிவுல... so......you are in queue...please wait ..(இத எல்லாரும் தேஞ்சிப்போன ரெக்கார்டர் மாதிரி திருப்பி திருப்பி சொல்லுங்க பார்ப்போம் .. அதுக்குள்ள அம்மணி அடுத்த பதிவு போட்டுருவாங்க)
பீட்டர் தாத்ஸ்:
A friend is one who knows who you are, understands where you have been, accepts what you become, and still gently invites you to grow.
A friend is someone who thinks you're a good egg even though you're slightly cracked.
A friend is someone who knows the song in your heart, and can sing it back to you when you have forgotten the words.
Labels: கதம்பம் 33 Comments
மாமியாருக்கு மொட்டையடித்த மருமகள்
திருமணம் நிச்சயம் செய்வதற்கு முன் மாப்பிள்ளை வீட்டாரின் பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று நன்றாக தெரிந்து கொண்டு திருமண ஏற்பாடுகளை செய்வது நல்லது. பொதுவாக குல தெய்வம் என்று ஒன்று இருக்கும். இது ஒவ்வொரு வீட்டுக்கும் மாறுபடும். அதனால் ஏற்படும் பழக்கவழக்கங்களும் மாறுபடும். பெண்கள் (என்னையும் சேர்த்துதான்) இயல்பாகவே புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை தன்னுடையதாக்கி கொண்டு தன் வீடு, தன் மக்கள், தன் கடவுள் என்று மாறிவிடுகிறார்கள். கடவுள் என்று வரும்போது, சைவம்-சிவன்(பட்டை), வைணவம்-விஷ்னு(நாமம்) என்று இரண்டும் எப்போதும் திருமணங்களில் கலந்து விடுவதுண்டு. எங்களுது வீட்டில் இப்படி நிறைய திருமணங்கள் நடந்திருக்கிறது. என்னுடைய அத்தை-சைவம் மாமா-வைணவம் இதனால் பழக்கவழக்கங்களில் நிறைய பிரச்சனைகள். அத்தை, மாமா வீட்டிலுள்ளவாறு தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் மாமா சிவன் கோயிலுக்கு போகக்கூடாது என்பார். அவருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் பெயர் உட்பட எதிலும் சிவன் (கடவுள்) வந்துவிடக்கூடாது.
சரி, மாமியாரை மொட்டை அடித்த மருமகள் கதைக்கு வருவோம். திருமணம் முடிந்து, குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது, குழந்தையின் அம்மாவும் மொட்டை அடித்து கொள்ளவேண்டும் என்பது தான் அந்த மாப்பிள்ளை வீட்டு வழக்கம். இதை திருமணத்திற்கு முன்பு அவர்கள் பெண் வீட்டாரிடம் சொல்லவில்லை. குழந்தை வயிற்றில் இருக்கும் போது தான் இந்த மொட்டை விஷயம் அந்த பென்ணிற்கு தெரிய வந்தது. இந்த பெண்ணிற்கோ மிகவும் சிறிய வயது.. யாருமே தலை வாரிவிட பயப்படும் (இறுக்கி பிடித்து சீவி விட முடியாது) அளவிற்கு கருகருவென்று மிகவும் அடர்த்தியான கூந்தல்.. இந்த பெண்ணிற்கோ அந்த வயதில் தன் தலை முடியை இழக்க மனமில்லை, மொட்டை அடித்து கொள்ள மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது..
என்ன செய்வது, மாமியார் வீட்டில் இதற்கு முன் திருமணம் ஆன அத்தனை பெண்களும் மொட்டை அடித்து இருந்தனர், தப்பிக்க வழியில்லை. தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பழக்கவழக்கத்தை எப்படி இந்த சின்ன பெண்ணால் தடுத்து மாற்றமுடியும் பெண்ணின் கணவரும், தன் வீட்டு வழக்கப்படிதான் எல்லாம் செய்ய நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மாமியாரை எதிர்த்து கொள்ளவும் இஷ்டமில்லை. என்னசெய்வது என்ற ரொம்ப நாள் யோசித்த அந்த பெண், குழந்தைக்கு மொட்டை அடிப்பதற்கு முன், அதே குல தெய்வத்திடம், எனக்கு பதிலாக, என் மாமியார் மொட்டை அடித்து கொள்வார், நான் உனக்கு பூ முடி கொடுக்கிறேன் என வேண்டிக்கொண்டு, அதை நாசுக்காக மாமியாரிடமும் சொல்லிவிட்டாள். மாமியாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தெய்வகுத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து மொட்டை அடித்து கொண்டார்கள். இந்த பெண் பூ முடி மட்டும் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டாள். வீட்டில் உள்ள அனைவருமே என்ன செய்வது என்று தெரியாமல், பிரச்சனையும் வளர்த்த முடியாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.
அந்த பெண் வேறு யாரும் இல்லைங்க..நான் தான்...என் மாமியாருக்கு, நான் நல்லபடியாக மொட்டையடித்து வைத்தேன். எனக்கு நம்பிக்கை இல்லாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று, வேற வழியே தெரியாமல் மாமியாருக்கு மொட்டை அடிக்க வேண்டியாதாயிற்று..
அணில் குட்டி அணிதா:- கேளுங்கம்மா..கேளுங்கய்யா இந்த அக்கறமத்த.. அம்மணி எவ்வளோ மோசமான ஆள்ன்னு இப்பவாவது புரிஞ்சிகோங்க.. .மாமியாருக்கே மொட்டை போட்டுட்டாங்களே.. அப்ப நாம எல்லாம் என்ன கதி..? அம்மணிக்கு போன பதிவுல சப்போர்ட் பண்ண அத்தன பேரும் தயவுசெய்து அத வாபஸ் வாங்குங்க.. இல்லைனா..மாமியார் மொட்டை உங்களுக்குதான்..... சொல்லிட்டேன்.. ம்ம் இனிமே நானுமே உஷாரா வாலை சுருட்டி வச்சிக்கணும், ராமருக்கு வேண்டிக்கிட்டேன்னு, என் வாலை கட்பண்ணி பிரஷ் பண்ணாலும் பண்ணிடுவாங்க......... (குட்டி குட்டி பெயிண்டிங் பிரஷ் எல்லாம் நம்ம வால்ல பண்றதாதான் கேள்வி, உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?)
பீட்டர் தாத்தா :- Many receive advice, only the wise profit from it.
Labels: பழம்-நீ 22 Comments
VIP யின் கார்களுக்கு வாலாட்டும் போலிஸ்காரர்கள்...
அரசாங்க உத்தியோகத்தில், பொது மக்களுக்கு சேவை செய்யும் பணியில் இருக்கும் போலிஸ்காரர்கள், உயர் அதிகாரிகளின் காருகளுக்கு வாலாட்டுவது மட்டுமல்லாமல் பொதுமக்களை எத்தனை இடைஞ்சலுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்குகிறார்கள் என்பதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இவர்கள், அவர்களுக்கு வாலாட்டவில்லை என்றால் என்னவாகும் என்பது வேறு கதை. அதற்கு தனி பதிவு தான் போடவேண்டும்.
சென்னையில் VIP கள் வருகிறார்கள் என்றால் போதும், (ஆட்சியில் இருக்கும் போது அம்மா வருகிறார்கள் என்றால் 1 மணி நேரம், ஏன் சில சமயம் 2 , 3 மணி நேரம் கூட நிற்கவேண்டி இருந்திருக்கிறது) அரை மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்தை சீர் செய்கிறோம் என்று சிக்னலுக்கு சிக்னல் வாகனங்களை நிற்க வைத்து விடுகிறார்கள். VIP களின் கார்கள் சென்றவுடன், போக்குவரத்தை சரிசெய்து அனுப்பவும் மாட்டார்கள், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என நேடு நேரம் வேலை செய்த கலைப்பில் ?!! போக்குவரத்து காவலர்கள் ரோடோர மரம், இல்லை டீ கடை என்று ஓரம் கட்டி ஓய்வெடுக்க சென்றுவிடுகிறார்கள். அதாவது, அவர்கள் நிற்கும் இடத்தை VIP களின் கார்கள் கடந்த மறுவினாடியே இவர்களை காணாமல் போய்விடுவார்கள்.
இங்கே நமக்கு அவசரம், அடித்தவர்களை பற்றி கவலை படாமல், போக்கவரத்து விதிகளையும் மதிக்காமல் நான் முந்தி நீ முந்தி என்று நடுநடுவே புகுந்து, யாருமே சரியாக போகமுடியாமல் நெரிசல் அதிகமாகி அவதிபட்டு, வாகனத்துடன் வாகனங்கள் மோதி, ஒருவரை ஒருவர் திட்டி, வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு வண்டியை ஓரம் கட்டிவிட்டி, சில பேர் சண்டையில் மிக வேகமாக இறங்கிவிடுவதுண்டு. அடிதடிக்கூட சில சமயம் நடக்கும். இப்படி நடக்கும் பல சமயங்களில், போலிஸ்காரர் பக்கத்தில் இருக்கிறாரா, இதை சரிசெய்ய மாட்டாரா என நான் தேடுவதுண்டு. ஒவ்வொரு முறையும் அவர்கள் பக்கத்தில் எங்காவது மரநிழலில் நின்று கொண்டு இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து ரசித்தவாறு இருப்பார்களே அன்றி, வந்து தன் பணியை செய்ய மாட்டார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் இது போன்ற மேல் அதிகாரிகள், VIP கள், அமைச்சர்கள் கார்களுக்கு வாலாட்ட மட்டுமே என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு சமுதாய நல்லெண்ணம் உடைய சிலர், தானாக முன்வந்து போக்குவரத்தை சரிசெய்து அனுப்புவார்கள். ஆனால் நாம் இருக்கிறோமே, அவர்களையும் திட்டுவோம், இவர் யாராடா நடுவில் நம்மை நிறுத்தி நிறுத்தி அனுப்பிகிறார், வேலைசெய்யும் போலிஸ்காரரே நம் சவுகரியத்துக்கு போகட்டும் என விட்டுவிட்டார், இவர் தான் நாட்டை சரி செய்பவர் போல் முன்னுக்கு வந்துவிட்டார் என வசவுபாடுவோம். நாமும் திருந்தமாட்டோம், திருந்தியவர்களையும், திருத்துபவர்களையும் விடமாட்டோம்.
இன்று காலை அடையார் பார்க்’ கிலிருந்து வெளியில் வரும் ஏதோ ஒரு அதிகாரியின் காருக்கு வாலாட்ட மட்டும், அங்கே 3 காவலர்கள், 2 போக்குவரத்து காவலர்கள். அடையார் பார்க் வெளி கதவு டி.டி.கே சாலையில், ரோடு வளையும் இடத்தில் உள்ளது. வளைவு திரும்பும் போது இவர்கள் தடாலென்று நடுவில் புகுந்து வாகனங்களை நிறுத்தினார்கள். அடையார் பார்க்'குக்கு சற்று அருகில், எதிர் புறமாக டி.டி.கே சாலையில் ஒரு பள்ளி உள்ளது. பள்ளிக்கு போகும் குழந்தைகள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் நிறுத்தியவுடன், அதிகாரிகளின் கார்கள் சென்றிருந்தால் பரவாயில்லை. நிற்கிறோம் நிற்கிறோம் யாரும் வரவில்லை, என்ன ஹோட்டலை விட்டு கார்கள் வெளிவர அத்தனை நேரமா.. ?! இந்த ஆட்டோவில் இருந்த குழந்தைகள், பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என கத்த, அந்த பொறுப்பில்லாத ஆட்டோ டிரைவர், பக்கத்தில் தானே பள்ளி, "இறங்கி போங்கடா" என்றாரே பார்க்கலாம், சின்ன குழந்தைகள் ஆளுக்கொரு பக்கமாக வேக வேகமாக போக்குவரத்துக்கு நடுவில் இறங்கி குதித்து ஓட ஆரம்பிக்க, VIP களின் கார்கள் வாராததால் ஞானோதயம் அடைந்த போக்குவரத்து காவலர்கள், தீடீரென்று கைகாட்டி போக்குவரத்தை விட, இந்த நடுவில் இறங்கிய குழந்தைகள் நடு நடுவே சிக்கி தவிக்க ஆரம்பித்தன.. ஒரு 10 வாகனம் விட்டிருப்பார்கள், திரும்பவும், கை காட்டி நிறுத்தி விட்டார்கள். குழந்தைகள் பாவம் அங்கும் இங்கும் அல்லாடி, வாகனங்களையும் கடக்க முடியாமல், சாலையையும் கடக்க முடியாமல் கஷ்டப்பட்டன.
யார் எப்படி போனால் என அவர்கள் எதிரில் நடக்கும் குழப்பங்களை, அதுவும் ஒரு மனிதனின் உயிருடன் சம்பந்தப்பட்ட குழப்பங்களை கண்டும் காணாமல் இருக்கும் இவர்கள் எப்போது தான் சக மனிதர்களை மனிதர்களாக மதித்து திரும்பி பார்த்து தன் கடமைகளை செய்வார்களோ தெரியவில்லை.
அணில் குட்டி அணிதா:- முடிச்சிடீங்களா அம்மணி, ஏன் நீங்க வண்டிய ஓரங்கட்டிட்டு குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வரவேண்டியது தானே..செய்தீங்களா.. செய்யல இல்ல.. அப்படிதான் அவரும்.. அவரவருக்கு அவரவர் வேல முக்கியம்..உங்களுக்கு உங்க வேல முக்கியம்.. சும்மா எல்லாத்துக்கும் சவுண்டு விடறதுல மட்டும் குறைச்சல் இல்ல. ஒன்னுத்துக்கு பிரயோசனம் இல்லாமா..... சவுண்ட குறைக்கற வழிய பாருங்க.... அப்புறம் நான் குறைக்க வைக்க வேண்டியாதா இருக்கும்..சொல்லிட்டேன்.. என்ன இன்னைக்கு முந்திரி பழம் வாங்கி வச்சிருக்கீங்களா?.. இனிமே கேக்கறது எல்லாம் கேக்கற டயத்துல இருக்கனும் சொல்லிட்டேன்..
பீட்டர் தாத்தா : A great pleasure in life is doing, what people say you cannot do.
Labels: சமூகம் 10 Comments
அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...
வாங்க அக்காங்களா, தம்பிகளா.. வாங்க அண்ணன்களா தங்கச்சிங்களா.. கேளுங்க என் சோக கதைய.. இந்த அம்மணி கவிதா அவங்க முதல் பதிவுல என்ன சொல்லியிருக்காங்கன்னு கொஞ்சம் பார்த்துட்டு வாங்க.. அணில் குட்டிய ஏன் பிடிக்கும்ன்னு ஒரு சோக கதை இருக்குதுன்னு சொன்னாங்க.. நானும் ஏதாவது இண்டரிஸ்டிங்கா இருக்கும்னு நெனைச்சி அவங்கள என்ன ஏதுன்னு ஒரு கேள்வி க்கூட கேக்காம இந்த வேலையில சேர்ந்தேன்.. நேத்திக்கு அம்மணிக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த கதைய கேட்டேன்ங்க.. கேட்ட பிறகு எடுத்த முடிவுதான்..இந்த புது வேலை தேடும் படலம்.. தாங்க முடியலங்க..
என்ன கதைன்னு கேக்கறீங்களா.. அம்மணிக்கு 8 வயசு இருக்கும்போது, என்னமாதிரி ஒரு அணில் குட்டி (பிறந்த குட்டி) இவங்களும் இவங்க அண்ணனும் சேர்ந்து எங்கேர்ந்தோ பிடிச்சிட்டு வந்து இருக்காங்க.. அம்மணி ரொம்ப அடம் பிடிச்சி இந்த அணில் குட்டிய நான் தான் வளர்பேன்னு அவங்க கிட்டேயே வச்சிக்கிட்டாங்க.. சரி ஆசைப்பட்டு கூட்டிட்டு வந்தாங்களே.. ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களான்னு பார்த்தா..அதான் இல்லை.. அந்த அணில் குட்டிய இம்ச பண்ணி இருக்காங்க..எப்படின்னு கேக்கறீங்களா.. சொல்லும் போதே எனக்கு அழுகை அழுகையா வருதுங்க.. ம்ம்ஹ்ம்ம்ம்ச்ச்ச்ச்ச்ச் (ஒன்னும் இல்ல மூக்கை சிந்திக்கிட்டேன்.. anybody..please give a kerchief ...!) அதுக்கு அனிதா ன்னு பேர் வச்சி, ஈர துணியால அது மூஞ்சிய தொடச்சி, பவுடர் போட்டு.. பொட்டு வச்சி.. அய்யோ..என்னா அக்கரமம் பாருங்க... நெசமாவே அந்த அணில் குட்டி பாவம்டா சாமீ..... அடுத்தது.. ஒரு பெரிய கப் நிறையா பால் கொண்டாந்து.. இங்க் பில்லரை வச்சி அது வாயா தொரந்து சகட்டு மேனிக்கு பால ஊத்தியிருக்காங்க... சாப்பாடு ஊட்டறாங்களாமா.. என்னடா அக்கரமம் இது...! அது மூச்சு முட்ட குடிச்ச பிறகாவது விட்டாங்களா.. அதுக்கு தனியா ஒரு குட்டி பெட் எல்லாம் தச்சி படுத்து தூங்க வச்சி இருக்காங்க.. பாவம் அது குட்டியினால இவங்க பண்ண கொடுமையெல்லாம் தாங்கி கிட்டு ஓட தெரியமா பொறுமையா இருந்து இருக்கு..
அதோட விட்டாங்களா.. தனியா டப்பாகுள்ள 2 நாள் வச்சி பாத்திருக்காங்க.. ஓவரா பாசம் பொங்கி 3 வது நாள், அம்மணி மதியம் தூங்க போகும் போது அணில கொஞ்சரேன் பேர் விழின்னு அதை பெட்’டோட இவங்க பக்கத்துல, பெட் ல படுக்க வச்சிட்டு, அத கொஞ்சரேன் ன்னு இம்சை பண்ணிட்டு தூங்கி போய்ட்டாங்க.. அம்மணி தூங்கறத சொல்லறதுன்னா தனி பதிவுதான் போடனும்.. ரூமையே ஒரு ரவுண்ட் அடிப்பாங்க.. அப்படி ஒரு அடக்கம்.. பெட்ல தூங்கனவங்க.. தூக்கதுல ரவுண்டு அடிக்கறேன்னு அந்த குட்டி பாப்பா அணில் குட்டி மேலயே..போய் உருண்டு படுத்தாட்டாங்க.. ஆஆஆஅங்க்க்.... ஆஆஅங்க்க்க்…. ஆஅயேஆஆ..ஒன்னும் இல்லலங்க திருப்பியும் அழறேன்.....இப்படி ஒரு கொடுமைய நீங்க எங்கையாவது கேட்டு இருக்கீங்களா?..
தூங்கி ஏன்ச்சி.. அனிது அனிது ன்னு தேடறாங்க.. எங்க அனிது.. பரலோகம் அனுப்பிட்டு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டா வருமா அனிது...... அது கால கெளப்பிக்கிட்டு பல்ல துருத்திக்கிட்டு செத்து போய் கிடந்தது..... அம்மணிக்கு பாத்தவுடனே ஒரே அதிர்ச்சி.. அவங்க சவுண்டு தான் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்குமே... என் அணில் அணில் வேணும்னு ன்னு ஓவரா சவுண்டு போட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க.. யார் வந்தும் நிக்கல..3 - 4 நாள் அழுதுட்டு விட்டு இருக்கலாம் இல்ல.. இப்ப பாருங்க.. விடாம..என்னைய புடிச்சிட்டு வந்து இப்போ கொடும பண்றாங்க..
நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு.... வாழ்க்கையில சம்பாதிக்கனும் தான் அதுக்காக..இப்படி என் உயிர இந்த அம்மணி க்கிட்ட பனையம் வச்சி எல்லாம் வேல செய்ய முடியாதுப்பா.. அப்பவாவது குட்டி பாப்பா வா இருந்தாங்க.. இப்போ இருக்கறதோ பீப்பா.....ஒன்னுகெடக்க ஒன்னு ஆகி....என்னால முடியாதுப்பா.. எப்ப இந்த கதைய கேட்டேனோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்..வேற வேல தேடி என்னோட life ஐ safe ஆ செட்டில் ஆக்கிகனும்னு....
யாராச்சும் பெரிய மனசு பண்ணி என்னோட கீழ்க்கண்ட புரொபைல பார்த்து வேல குடுங்கோ.. .
பெயர் :- அணில் குட்டி அனிதா
அனுபவம்: 4 மாதம் (கவிதா’வுடன் பிளாக் எழுதிய அனுபவம்)
பேச்சு திறன் : ஓவர் ஆ இருக்கு
(அருளையும், சந்தோஷயையும் கேளுங்க சொல்லுவாங்க)
எழுதும் திறன் :- அதுவும் ஓவர் ஆ இருக்கு
(ஸ்பெஷல் கவிதை எழுதறது..)
கண்டிஷன் :-
1. நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..
2. அடிக்க கூடாது
3. ஓவரா கொஞ்சவும் கூடாது
4. கொய்யா பழம் மட்டும் குடுத்து எஸ்கேப் ஆகக்கூடாது.. ஒரு முந்திரி பழம், பாதாம் பருப்பு, ஆப்பில், பேரீச்சம் பழம், பால்னு குடுத்து என் உடம்ப தேத்தனும்..(அம்மணி நம்மல அந்த மோசாமான ரேஞ்ல வச்சிருக்காங்க)
இந்த பதிப்புல No kavitha ..only peter தாத்தா..
பீட்டர் தாத்தா:- You may be disappointed if you FAIL, you are doomed, if your don’t TRY.
Labels: அணில் குட்டி 31 Comments
பார்வையற்றவர்களின் - பார்வையில்..
பார்வை என்பது எத்தனை அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நாள், சில மணி நேரம், இரவில் மின்சாரம் இல்லாவிட்டால், திண்டாடி போகிறோம். நிறைய வீடுகளில் மின்சாரம் போனவுடன் (எமர்ஜன்ஸி லைட் இல்லை என்றால்) வேறு விளக்கு ஏற்றுவதற்குள் பெரும்பாடாகிவிடும். குழந்தைகள் இருட்டில் பயந்து கத்த ஆரம்பித்துவிடுவார்கள், பல நாள் பழகிய வீட்டில் முட்டி மோதி நடப்போம்.. சிறிய விளக்கில் நம் வேலைகளை செய்ய சிரமப்படுவோம். எளிதாக மொட்டை மாடிக்கு சென்று நிலா வெளிச்சத்தில் நேரத்தை கழிக்கத்தான் நாம் விரும்புவோம்..
ஆனால், பார்வையற்றவர்கள்? அவர்களுக்கு தெரிந்த ஒன்று இருட்டுமட்டுமே..இந்த உலகமே அவர்களுக்கு ஒரே இருட்டுதான். இருட்டை தவிர வேறொன்றும் அறியாதவர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன நிறத்தில் உடை அணிந்திருக்கிறார்கள்.. பூக்கள், வானம், மழை, நிலவு, ஈ, எறும்பு, பாம்பு, பல்லி, ரஜனி, கமல், கைப்புள்ள,அணில் குட்டி என்று எதுவுமே தெரியாது.
என் அப்பாவின் சித்தி மகனுக்கு (எனக்கு சித்தப்பா’வாக வேண்டும்), எனக்கு தெரிந்து கண் தெரியாது. ஆனால் அவருக்கு கண் தெரிந்து கொண்டுதான் இருந்ததாம், கொஞ்சம் கொஞ்சமாக பார்வை குறைந்து தெரியாமலே போய்விட்டது. என் அப்பாவிடம் ஏன் அவரை டாக்டரிடம் காட்டி குணப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு, அவருடைய பார்வை நரம்புகளே செயலிழந்து போய்விட்டன அதனால் ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டதாக சொன்னார். இவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். இவருடன் சிறு வயதில் நிறைய நாள் நான் கழித்திருக்கிறேன். உச்சிக்கு வந்த சூரியனை நேராக பார்த்து காட்டுங்கள் என்று அடம்பிடித்து அவரை பார்க்க வைப்பேன். அவருக்கு கண்கள் கூசாது, நேராக சூரியனை பார்ப்பார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும், நான் பார்க்க முயற்சி செய்வேன்..முடியாது..
அவரால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்வார். எனக்கு மறக்கமுடியாதது, அவர் எப்போது கழிவரை சென்றாலும் (இந்தியன் மாடல்) தண்ணீர் ஊற்றிவிட்டு என்னை அழைத்து சரியாக பேசீனில் தண்ணீர் ஊற்றியிருக்கிறாரா என்று பார்க்க சொல்வார், சில சமையங்களில் சரியாக இல்லையென்றால், சித்தப்பா நான் ஊற்றுகிறேன் என்று சொன்னால் விடமாட்டார், இல்லை, நீ இங்கேயே இரு, என்று தண்ணீர் பிடித்து பிடித்து ஊற்றுவார், நான் சரியாக இருக்கிறது என்று சொல்லும் வரை விடமாட்டார். இப்படிப்பட்ட சமயங்களில் கண் தெரியாமால் அவர் சிரமபடுவதை பார்க்க மிகவும் வேதனையாக நான் உணர்ந்து இருக்கிறேன்.
இறந்த பின் மண்ணுக்கு போகும்/எரிந்து போகும் உடலுடன் நம் கண்களும் வீணாகத்தான் போகப்போகிறது.. ஒவ்வொருவரும் அதை வீணாக்காமல் கண்தானம் செய்தால் எத்தனை பேர் இந்த உலகத்தை நம் கண்களால் பார்ப்பார்கள். இறந்தபின் கண்ணை எடுத்துவிட்டால் முகம் அசிங்கமாகி போகும் என உறவினர்கள் அதை செய்ய விடுவதில்லை. ஆனால் கண் எடுத்தவுடன், அதை எடுத்தது தெரியாமல் தான் தைத்து அனுப்புகிறார்கள். இதில் இன்னுமொரு விஷயம், நாம் கண் தானம் செய்து இருந்தாலும், நாம் இறந்தவுடன் நம் உறவினர்கள் அதை சில மணி நேரங்களுக்குள் சொல்லி, கண்களை தானம் செய்ய வேண்டும். இங்கு கவனிக்க வேண்டியது, நம் துக்கத்தை அடுத்து வைத்து தான் இதை செய்ய வேண்டும் என்பதே.
தயவுசெய்து கண்தானம் செய்யுங்கள்..நம் கண்களால் யாரோ ஒருவர் இவ்வுலகை பார்க்கட்டுமே...
அணில் குட்டி அணிதா :- ஆங்..இதோடா.. கிளம்பிட்டாங்கய்யா... ஒரு வாரத்துக்கு முன்னாடி.. வூட்டாண்டா உள்ள பைபாஸ் ரோட்ல.. இராத்திரி ஒரு 8 மணி இருக்கும் போய்கிட்டு இருந்தாங்க.. பகல்லையே அம்மணிக்கு பசுமாடு தெரியாது (சோடா புட்டி) இராத்திரியில கேக்கவா வேணும், நிஜமாவே ஒரு பசுமாடு எதுதாப்பல வந்து நிக்குது..அம்மணி அது கிட்ட போற வரைக்கும் கவனிக்கல.. அத டச் பண்ற நேரத்துல..பின்னாடி உட்கார்ந்திருந்த இவங்க பையன்..அம்மா......!. மாடுமா....! வண்டிய நிறுத்து ..என சவுண்டு விட்டுட்டு, கிரேட் ஜம்ப் பண்ணிட்டான்.. அம்மணி தட்டு தடுமாறி வண்டிய சைடு வாங்கி மாட்டு மேல மோதாம எஸ்கேப் ஆய்ட்டாங்க.. பையன் வுடலியே..”அம்மா சாவறது நீ சாவு என்னையும் ஏன் சேத்து சாவடிக்க பாக்கறன்னு..” அம்மணிய டோஸ் விட்டுகிட்டு இருந்தான்.. இதுக்கு அப்புறமா தான் அம்மணிக்கு இந்த ஐடியா வந்திருக்கனும்..
அம்மணி.. சூப்பர் ஐடியா..!!. உங்களுக்கு இப்பவே சரியா கண்ணு தெரியலயே..உங்க ஒன்னு விட்ட 2 விட்ட சித்தப்பா மாதிரி ஏதாவது ஆயிடுத்துன்னா என்னா பண்றதுன்னு இப்பவே அடிப்போட்டு வைக்கறீங்களா?! பாத்துக்கோங்க பா.. கண் தானம் செய்ய சொன்னது..ஊருக்கு இல்ல.. வருங்காலத்துல தேவைபடுமோன்னு இப்பவே சொல்லிவைக்கறாங்க.. நேரக் கொடுமைடா இது எல்லாம்
குறிப்பு :- நம்ம கவிதா பிளாக்’க்கு புதுசா ஒருத்தர் அறிமுகம் ஆகிறார்.. அவரு பேரு பீட்டர் தாத்தா - பீட்டர் இங்கிலீஷ்ல தத்துவம் எல்லாம் உங்களுக்கு சொல்லுவார். இன்னையிலிருந்து பீட்டர் தாத்தாவின் தத்துவம் ஆரம்பம்...என்னை மாதிரி , கவிதா மாதிரி யார் கூடேயும் பேச மாட்டார். No interactions. இவர் only for தத்துவம்..தாத்தா ரெடி..ஸ்டார்ட்...
தாத்தாவின் தத்துவம்:- “Don’t sit back and take what comes.. go after what you want”
Labels: சமூகம் 13 Comments
இறந்தால் தான் மரணமா?
இறந்தபின் தான் மரணம்..
இருக்கும் போதே இறந்தால்...
இதயத்தை குத்தி கிழிக்கும் பேச்சில்
செவிடாய் போன காதுகளும்
எடுத்தெறியும் பார்வையில்
குருடாய் போன கண்களும்
எச்சில் துப்பும் வார்த்தையில்
ஊமையாய் போன வாயும்,
வேற்கூரின் வாசங்களும் மறந்து
தொண்டைக்குழிக்குள் இறங்கும் சோறும்
சொரணையற்ற உடம்பை மூட
பிச்சை(என) போட்ட துணியும்
மனமென்னும் பட்டறையில்
பூட்டிவைத்த துயரங்களுடன்
விழிகளை மட்டுமே அசைத்து
மெளனத்தை மட்டுமே சுவாசித்து
மனிதர்களுடன் மனிதர்களாய்
உலவிதான் வருகிறார்கள்..
இந்த...............
மரத்துப்போன இதயங்கொண்ட ....
மரணத்தைவென்ற மனிதரகளும்...
அணில் குட்டி அனிதா:- அம்மணி நல்ல வேள..நான் என்னவோ நீங்க “மரணம்” பற்றி எழுத போறேன்னு சொன்னவுடனே.. வீட்டுல யாரையாவது போட்டு தள்ளிட்டு (அதான் இப்ப சர்வ சாதாரணமா நடுக்குதே, பொம்பளைங்க கிட்ட ஆம்பளைங்க எல்லாம் உஷாரா இருங்கப்பா....அம்மணிங்க எல்லாம் இப்ப சூப்பரா போட்டு தள்ள ஆரம்பிச்சிட்டாங்க..! அவ்ளோதான் நான் சொல்லுவேன்...............அப்புறம் ரிஸ்க் எடுக்கறது உங்க இஷ்டம்) அதை கருவா வச்சி, எழுதபோறீங்கன்னு.. ம்ம்.. என்னவோ.. ..உங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு ஆயுள் கெட்டிதான்..
Labels: கவிதை 7 Comments
வாரமலர் படிப்பவரின் தரம் எப்படி இருக்கும் ?
பொதுவாக நாம் மனிதர்களை எதை வைத்து மதிப்பிடுகிறோம். அவர்களின், படிப்பு, பணம், குணம், தோற்றம், பழக்க வழக்கங்கள் என சொல்லி கொண்டே போகலாம். சமீபத்தில் எனக்கு கிடைத்த அனுபவம், படிக்கும் பத்திரிக்கை, புத்தங்ககளை கொண்டு மனிதர்களை எடை போடுகிறோம் என்பதே. எனக்கு ஒன்று புரியவில்லை, The Hindu, Economic Times, Indian Express மற்றும் பல ஆங்கில தின பத்திரிக்கைகள் படிப்பவர்களை மிகுந்த தரம் உடையவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், தினமலர், வாரமலர், தினதந்தி மற்றும் பல தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்களை தரக்குறைவாகவும், தாழ்வாகவும் நினைக்கும் பண்பு நம்மில் உள்ளது.
கன்னிதீவு (சிந்துபாத்) என்ற ஒரு பட கதை தினப்பத்திரிக்கையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.. அதை தொடர்ந்து சிறுவயதிலிருந்து படித்து வந்த என்னுடைய கணவர், நடுவில் பல காரணங்களால் படிப்பதை விட்டுவிட்டார். இப்போது சிந்துபாத் என்ற தொடர் சன் டீவி யில் ஒளிபரப்பபடுகிறது. அதனை விடாமல் உட்கார்ந்து ரசித்து பார்க்கிறார். அவர் தமிழ் பத்திரிக்கை படித்ததற்காகவும், இத்தனை வயதுக்கு பிறகு தான் படித்த கதையின் தொடர்ச்சியை ஆர்வத்துடன், டிவியில் பார்க்கிறாரே என்று தாழ்வாக எடைபோடுவதா, இல்லை அவர் The Hindu, Business Line, Management weekly, monthly books படிக்கிறாரே அதனால் அவரை தரம் உடையவராகவும், உயர்ந்தவராகவும் நினைப்பதா.? படிப்பதை வைத்து ஒருவரின் தரத்தையும், குணத்தையும் எப்படி ஊகிப்பது. அது சரிதானா?
வாரமலர் ஒருவர் படிக்கிறார் என்பதால் மட்டுமே அவர் இப்படி பட்டவர் தான் என நாம் முடிவுக்கு வந்து விட முடியுமா?! இல்லை இவர் ஹிந்து பத்திரிக்கை படிக்கிறார் இவரின் தகுதி மிக உயர்ந்தது என முடிவுடன் இருக்கலாமா?. பள்ளியிலும், கல்லூரியிலும் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வது எல்லோரும் அறிவர். மெத்த படித்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களையே இவர் நல்லவர்/கெட்டவர் என்பதை அவரின் இயல்பான குணம் வெளிபடும் போது தான் தெரிந்து கொள்ளமுடிகிறது.
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, பெண்களை ஏமாற்றும் எத்தனை ஆண்கள் நம்மிடையே உண்டு அதே போல் ஆங்கிலத்தில் பேசி ஆண்களை இழிவு செய்யும் எத்தனை பெண்கள் நம்மிடையே உண்டு. என் நண்பர்கள் சிலர் ஒரே மாதிரி பட்ட படிப்பு படித்தவர்கள். அதில் ஒருவர் IIT யிலிருந்து வந்தவர், IIT என்றாலே அதனுடைய தரம் நமக்கு தெரியும். அந்த தரத்தை அந்த நண்பரிடம் பார்க்கலாம். மற்றவர் சாதாரண கல்லூரியிலிருந்து வந்தவர். இவர்கள் இருவரும் ஒருமுறை ஏதற்கோ விவாதம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது, இந்த IIT-நண்பர் என்னிடம்”பாரு, ரிக்க்ஷாகாரன் மாதிரி பேசுகிறான் அவன், ஒரு என்ஜினியர் மாதிரியா பேசுகிறான்” என்றார். அவரோ “இவர் IIT பந்தாவெல்லாம் நம்ம கிட்ட காட்டறார்..நாங்க ரிக்க்ஷாகாராங்களாவே இருக்கிறோம், ஆனா இவனாட்டம் திருட்டுதனமா பண்றோம்” என்றார்.
மெத்தபடித்தவர்களும், ஆங்கலத்தில் அளப்பவர்களும், ஆங்கில பத்திரிக்கைகள் படிப்பவர்களும் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என சொல்லிவிட முடியாது, தமிழில் பேசி, தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்கள் தாழ்ந்தவர்கள், தகுதியில்லாதவர்கள் என சொல்லிவிட முடியாது.
மனிதர்களின் நற்குணம் ஒன்றே அவர்களை யாரென்று சொல்லும். அதை அறிந்து மனிதர்களின் தரத்தை உணர நாம் முயற்சிக்க வேண்டும்.
அணில் குட்டி அனிதா: அம்மனி நீங்க நல்லவங்களா.. கெட்டவங்களா? உயர்ந்தவங்களா, தாழ்ந்தவங்களா.. எப்ப பார்த்தாலும் தப்பு தப்பா பீட்டர் English ல பேசறீங்களே.. அதான் சரியா என்னால உங்கள judge பண்ணமுடியல... தமிழ் மட்டும் என்னா?.. ஆற்றலரசி அக்கா பொன்ஸ்’ ஐ கேட்டா தெரியும் நீங்க தமிழ்ல எவ்ளோ..தப்பு பண்றீங்கன்னு... இப்படி 2 மே உங்களுக்கு சரியா வரலியே..உங்கள எதுல சேக்கறது..... இதுல என்ன மேட்டர் னா அம்மனி தமிழும் தெரியாம.. English ம் தெரியாமா.. எல்லாம் தெரிஞ்சமாதிரி உங்ககிட்ட எல்லாம் சீன் போடறாங்க பாருங்க அதுதாங்க.... அதுதாங்க என்னால தாங்கவே முடியல.....
(ஒரு ரகசியம்-அம்மனி அவங்க friend அ நக்கலா “ஓ வாரமலர் படிக்கறீங்களா?..ன்னு கேட்டாங்க..அவரு ..டென்ஷன் ஆகி வுட்ட சவுண்டுல தான்..இப்படி பதிவு போட்டு இருக்காங்க...அம்மனி காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு அவரு சவுண்டு வுட்டாருன்னா பார்த்துகோங்க..)
Labels: சமூகம் 54 Comments
வாழ்க்கையை இழந்து வரும் - இன்றைய மங்கைகள்
எங்களுடைய அலுவலக செக்யூரிட்டி சில நேரங்களில் பொழுது போகாமல் இருக்கும் போது பேப்பர் பேணா வைத்துக்கொண்டு கோலம் போடுவதை பார்த்திருக்கிறேன். அவரின் திறமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மிக நேர்த்தியாக, தெளிவாக, அழகாக போடுகிறார். அவரை பாராட்டி, அவரிடம் எங்களது வீட்டில் வாங்கும் பெண்கள் பத்திரிக்கையை கொண்டுவந்து கோல ப்போட்டி இருக்கு முயற்சி செய்து பாருங்கள் என்று கொடுத்தேன். இது பழக்கமாகி, 2 புத்தகங்கள் நான் கொடுப்பேன், படித்துவிட்டு அவர் திரும்ப கொடுத்தவுடன் திரும்பவும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன்.
நேற்று அவரிடம் உங்கள் மனைவி க்கூட இதை படிக்கிறார்களா? என்று கேட்டதற்கு.. தயக்கத்தோடு “இல்லைங்க” என்று சிரித்து சென்றவர், திரும்பி வந்து, மேடம், என் மனைவிக்கு இந்த புத்தங்களை நான் படிக்க கொடுக்கவில்லை என்பதே உண்மை, ஏன்னா இந்த மாதிரி புத்தகங்கள் படித்தால் என்னை அவர் மதிக்காமல் போய் விடுவார், பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பிப்பார் அதனால் படிக்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன் என்றார்.
ஒரு பெண் புத்தகங்கள் படிப்பதின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வது மட்டும் இல்லை, அதையும் தாண்டி, தன்னால் தனியாக இருக்க முடியும், ஆணை விட தான் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை, இருவரும் சமம் போன்ற சிந்தனையும் கூடவே வளர்ந்துவிடுகிறது. அதில் என்ன தவறு என்று விதண்டாவாதம் செய்ய தயாராக இல்லை, மேலும் ஆணும் பெண்ணும் எந்த சமயத்திலும் சரிசமமாக இருக்க வாய்பில்லை. இது அறிவியல் சார்ந்த உண்மை. :)
அவருடைய சொந்த வாழ்க்கை, தன் மனைவி எப்படி இருந்தால் தன் வாழ்க்கைக்கும் தன் குழந்தைகள் வாழ்க்கைக்கும் நல்லது என்பதில் தெளிவாக இருக்கிறார், இது ஆணாதிக்கம் என நினைப்பவர்கள் நினைத்துக்கொண்டு போகட்டுமே, அதனால் அவருக்கும் என்ன நஷ்டம் அல்லது லாபம் இருந்துவிட போகிறது. எனக்கு அவர் சொல்லியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆணும் தன் குடும்பம் அமைதியாக இருப்பது தன் மனைவியின் கையில் இருக்கிறது என்று நினைக்கிறார்காள், தன் மேல் இல்லாத ஒரு நம்பிக்கை தன் மனைவி மேல் வைத்திருக்கிறார்கள் என்பது பெண்களுக்கு பெருமை தானே.. நம்முடைய சென்னை விவாகரத்து நீதிமன்றத்தில் ஒரு வருடத்தில் திருமணமுறிவுக்காக 2000 வழக்குகள் வந்துள்ளன. அதிலும் எல்லாமே காதல் திருமணம் மட்டுமன்றி, அவை திருமணம் ஆன 6 மாதங்களுக்குள் கொடுக்கப்பட்ட வழக்ககுகள் என்பது ஆச்சரியமான அதிர்ச்சியான விஷயம். பெண்கள் இழந்தும், மறந்தும் வருவன
- ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளதல்
- விட்டுகொடுத்தலை மறந்துபோனது
- பொறுமையின்மை
- அதிகமான படிப்பும் அதனால் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் விதமும்
- ஆணுக்கு நிகரான வருமானம் அதனால் ஏற்படும் கர்வம்
- ஆணுக்கு நிகர் பெண் என்ற தேவையில்லாத சிந்தனை
- தங்களுது வாழ்க்கையை படிப்போடும், பணத்தோடும் ஒப்பிடும் சிந்தனை.
- தனது சம்பாத்தியம் தனக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கை.
- வளர்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம்
- கலாச்சார மாற்றங்களினால் தங்களின் நிலை மறந்த சிந்தனை.
பெண்கள் புரிதலில் தவறு செய்கிறார்கள், ஒரு பெண் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நம் பாட்டி, அம்மா எதை சாதிக்கவில்லை நாம் சாதிக்காமல் போக.?. நல்ல குடும்பத்தை அவர்களால் கொடுக்க முடிந்தது, நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க முடிந்தது.அவர்கள் வேலைக்கு செல்லவில்லை பொருள் ஈட்டவில்லை தவிர, ஏதாவது குறை வைத்தார்களா?. வெளி உலகமே தெரியாதவர்கள், ஆனால் வீட்டின் நிம்மதி கெட்டுபோனதா? இல்லையே..! இப்போது நம்மால் நம் பிள்ளைகளை சரியாக வளர்க்க முடிகிறதா?. வேலைக்கு செல்கிறோம் என்பதால் என்ன தலையில் 2 கொம்பு முளைத்து விடுகிறதா ?. பொருள் ஈட்டுகிறோம் என்பதால் என்ன நமக்கு வால் முளைத்து விடுகிறதா? இல்லையே.. வீடு மற்றும் வேலையை சரிவர செய்யமுடியாமையை இயலாமை என்று எடுத்து கொள்ளவேண்டுமே தவிர ஆண்களின் மேல் குறை சொல்லுவதும், பெண் உரிமை பேசி நம் வாழ்க்கையை நாமே கெடுத்து கொள்வதும் தான் நடக்கிறது.
பெண்கள் வளர்ப்பு முறையில் பெரும் பங்கு எடுப்பது பெற்றோர். சிறு குழந்தையிலிருந்தே நம் குடும்ப அமைப்பையும் அதன் பலத்தையும் சொல்லி சொல்லி ஆண், பெண் இருவரையுமே வளர்க்கவேண்டும். ஒரு பெண்ணால் மட்டுமே நல்ல குடும்பத்தை ஆக்கவும் முடியம் அழிக்கவும் முடியம். நம்முடை படிப்பும், வேலையும் நம்மின் பொறுமையையும் நிதானத்தையும் அதிக படுத்த வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. என்னுடைய ஆண்களின் நிழலில் பதிவில் சொன்னது போன்று ஒரு சிறிய குடும்பத்தை, கணவனை கட்டிக்காக்க முடியாத ஒரு பெண்ணால் எப்படி வெளி உலகத்தில் சாதிக்க முடியம். அப்படி அவர்கள் எதையாவது சாதித்தால் அது சாதனையாகாது. குடும்பம் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லவில்லை ஆனால் குடும்ப அமைப்பை முறிப்பது பெண்கள் கையில் அதிகமாகிவருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் படிப்பும் , சம்பாதியமும் என்றால் அதை சரியான முறையில் செயற்படுத்த பெண்கள் முயற்சிக்க வேண்டும்.
அதிக படிப்பினாலும், அதிக சம்பளத்தாலும் பெண்கள் அவர்களின் இயல்பையும் அவர்களின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருவது என்னவோ உண்மை, உணர்வார்களா?!!
அணில் குட்டி அனிதா:- அடடடடாடாடா டா?!! உபதேசம் ஆரம்பிச்சாச்சிடோய்..! நாட்டுல 2 மாசம் எல்லாரும் நிம்மதியா இருந்து இருப்பாங்க.. அம்மணி. “கஜினி “ சூர்யா ரேஞ்சுக்கு அவங்கல பத்தி மறந்து......ஸ்டார்ட் பண்ணிட்டாங்கடோய்... இவங்களே வூட்டல யாருக்கும் அடங்கறது இல்ல..வேலைக்கு போற திமுரு மட்டுமா... சம்பாதிக்கறோம்னு திமுறுல.. அவங்க ஆடற ஆட்டத்த நாங்க இல்ல தினமும் பாக்கறோம். பாவம்ப்பா அவங்க வூட்டுகாரரும், பையனும், இந்த அம்மணிக்கிட்ட ஒன்னும் முடியாம ......”why blood...! same blood..!, you start..... we close nnu” கம் போட்டு ஒட்ட வச்ச மாதிரி வாய தொறக்கறதே இல்ல. பாவம் ரொம்ப நல்லவங்க..... அம்மணி உண்மைக்கு எதிரா எழுதறத தாங்கமுடியாம புலம்பறேங்க.. நீங்களும் என்கூட join பண்ணிக்கறீங்களா?..
தாத்ஸ் நீங்க பீட்டர எடுத்து..சொல்லுங்க...........
பீட்டர் தாத்ஸ் :-
- Success doesn’t come to you, you go to it.
- In the middle of difficulty lies opportunity.
Labels: சமூகம் 37 Comments