இங்கே பெருசுகள் என்று சொல்லுபவர்களின் வயது வரம்பு 40-55 என்று வைத்துக்கொள்ளலாம். MBA வகுப்புகளுக்கு இந்த வயதுக்காரர்கள் அதிகம் வருகிறார்கள். நிச்சயமாக அவர்கள் வயதிற்கு அலுவலகத்தில் மேனேஜர் அல்லது உதவி மேனேஜர் பதவியில் இருப்பார்கள், அதற்கான அனுபவம் இருக்கும் என்றும் நம்பலாம். இவர்கள் அனைவருமே தங்களின் வேலை அனுபவங்களை கொண்டே தேர்வுகள் எழுதமுடியும், அப்படி ஒன்றும் மிக சிரமமான படிப்பும் அல்ல. அப்படி அனுபவ படிப்பு உதவவில்லை என்றால், சரியான அனுபவம் அவர்களுக்கு இல்லை மேலும், அலுவலகத்தில் “ஈ” ஓட்டுகிறார்கள் அல்லது அடுத்தவரின் உழைப்பில் சம்பாதித்து உடம்பையும் வளர்க்கிறார்கள் என்று தெளிவாக முடிவு செய்யலாம்..
பார்த்தவரை, அவர்கள் தேர்வுகளில் பக்கம் பக்கமாக பிட் எழுதிவந்து (இப்படி எழுதும் நேரம், படித்து விடலாம்) காப்பி அடிப்பதை பார்த்தால் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது. அவர்கள் வயதுக்கும் வகிக்கும் பதவிக்கும் மிக கேவலமான விஷயம் மட்டும் அல்ல அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள், வளர்த்து இருப்பார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அப்படியே அவர்கள் நல்ல பிள்ளைகளை வளர்த்து இருந்தாலும், பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எத்தனை அசிங்கம். மதிப்பார்களா?
பிட் அடித்து அப்படி பாசாகி என்ன பயன்?? “பிரமோஷன்’ அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். அப்படி கிடைக்கும் பதவி உயர்வால் ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதாவது Finance, HR, Systems, Marketing மேனேஜராக ஆகிறார் என வைத்து கொள்வோம். அவருடைய வேலை தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேலை தரத்தினால் அந்த அலுவலகமும், அவர் சார்ந்த வேலை மற்றும் அவரின் கீழ் வேலை செய்பவர்களுன் தரமும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதில் இளைஞர்களையும் இந்த பெருசுகள் முன்னுக்கு வர விடுவதில்லல. அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
பிட் அடிப்பது மட்டும் இல்லை, assignment , project போன்றவைகளும் காசு கொடுத்து முடித்து விடுகிறார்கள். இதனை பார்த்து சிறுசுகளும், நாமும் காசு கொடுத்து முடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நல்ல வழிக்காட்டிகள் இவர்கள். இந்த வயதில் இவர்கள் படிக்கவில்லை என்று யார் அழுதார்கள், இப்படிப்பட்டவர்களால், அந்த படிப்பிற்கே தரமில்லாமல் போகிறது. விழுந்து விழுந்து படித்து சென்று எழுதியவர்களை விட, பிட் அடித்து அதிக மதிப்பெண் எடுக்கும் இப்படி பட்டவர்கள் அதிகமே. உழைப்பை விட குறுக்கு வழிதான் சிறந்தது என உழைப்பவர்களும் நினைத்துவிட்டால்.....?? படிப்பிற்கும், திறமைக்கும், உழைப்புக்கும் மதிப்பில்லாமால் போகிறது என்பது மட்டும் உண்மை.
அணில் குட்டி அனிதா:- அம்மணி பொறாமை பட வேண்டியது தான் அதுக்குன்னு இப்படியா.. ஒன்னும் இல்லீங்க.. அம்மணி கூட exam எழுதினவரு நிறைய மார்க் எடுத்துடாருங்க.. அதான் இந்த புலம்பல்ஸ்..அம்மணிக்கு எப்பவுமே அவங்க தான் அறிவாளி மத்தவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லைன்னு ஒரு நெனப்பு அதுல எழுதறது தான் எல்லாம்.. exam க்கு போனோமா.. நம்ம பேப்பர பாத்து எழுதினோமான்னு இல்லாம எதுக்கு இப்படி அடுத்தவங்கல பாத்து காதுல போக விடனும்.. நாட்டுல ஏதோ நாலு பேரு நல்லா இருக்கட்டும், நாலு காசு சம்பாதிக்கட்டும் ன்னு ஒரு நல்ல மனசு இருக்கா பாருங்க...... பொறாமை ..விடுங்க.. அம்மணி..நீதி, நேர்மை, நியாயம் ன்னு பேசி நம்ம பொழப்புல மண்ண தூவுவாங்க........... நாட்டுல இப்படி சிலதுங்க இருக்கறதனால தான் நாடு உருப்பட மாட்டேங்குது.. என்னத்த சொல்ல.. தாத்ஸ் நீங்க சொல்லுங்க..... கவிதா புலம்பல்ஸ்க்கு உங்க பீட்டர் எவ்ளோ தேவலாம்............
பீட்டர் தாத்ஸ் : Courage is a special kind of knowledge; the knowledge of how to fear what ought to be feared, and how not to fear what ought not to be feared..
பிரமோஷனுக்காக பெருசுகள் செய்யும் அநியாயங்கள்
Posted by : கவிதா | Kavitha
on 15:51
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
17 - பார்வையிட்டவர்கள்:
"பீட்டர் தாத்ஸ் : Courage is a special kind of knowledge; the knowledge of how to fear what ought to be feared, and how not to fear what ought not to be feared.."
அஞ்சுவதற்கஞ்சாமை பேதைமை என்று வள்ளுவர் கூறியுள்ளாரே.
பிட் அடிப்பது என்பதற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்றுதான் நினைக்கிறேன். மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்த போது ஹிந்தி தேர்வு எழுதினேன். சீனியர் ஆர்கிடெக்டே பிட் அடித்தார். வாழ்க்கையிலே இதெல்லாம் ஜகஜம்.
"இங்கே பெருசுகள் என்று சொல்லுபவர்களின் வயது வரம்பு 40-55 என்று வைத்துக்கொள்ளலாம்."
:))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
(அறுபது வயது இளைஞன்)
ராகவன் ஐயா நன்றி, சிறுசுகள் பிட் அடிப்பதால் அதனுடைய impact ம், பெருசுகள் பிட் அடிப்பதால் அதனுடைய impact ம் ஒன்றல்ல.. பெருசுகள் எப்பவும் பொறுப்பாக இருக்க வேண்டும், சின்னவர்கள் போல நடந்து கொள்ள கூடாது. பெரியவர்கள் நல் வழிக்காட்டினால் தான் சிறியவர்கள் அதை தொடரமுடியும். பெரியவர்களே தவறு செய்கிறார்கள் அதனால் நாமும் செய்யலாம் என சிறியவர்கள் நினைத்து நடந்து விட கூடாது. உதாரணம்: அப்பா, தாத்தா சிகிரேட் பிடிப்பதை பார்த்து நிறைய குழந்தைகள் பிடிக்க கற்றுக்கொள்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
நீங்க சொல்றத பார்த்தா நீங்களும்..பிட்..கிட்...(நான் சொல்லல இதை..காதுல வந்து அணில் சொல்லிட்டு போது... :)
அணில் நீ ஒரு மேட்டரை மறுந்துட்ட பாரு.....
பிட் அடிக்குற திறமை அவங்களுக்கு இல்ல அப்படிங்குறது ஒத்துக்காம அடுத்துவங்களை குறை சொல்லிட்டு திரியுறாங்க.... என்னமோ போ.... தெரியாத விசயத்தை நம்மளாண்ட கேட்டா நாம சொல்லி குடுக்க போறாம். அதுக்கு ஏன் இந்த புலம்பு புலம்பிக்கிட்டு இருக்காங்க
"நீங்க சொல்றத பார்த்தா நீங்களும்..பிட்..கிட்...(நான் சொல்லல இதை..காதுல வந்து அணில் சொல்லிட்டு போது... :)"
:)))
பொல்லாத அணில்தான், பட் ஐ லைக் இட். பிட் அடித்தது சரி என்று நான் கூறியதாக உங்களுக்கு தோன்றினால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களது கருத்துத்தான் எனக்கும்.
நான் பிட் அடித்தேனா என்று கேட்கிறீர்கள். ஹிந்தி பரீட்சை, எனக்கு பிடித்த மொழி பரீட்சை. அதில் எப்போதுமே முதல் மூன்று ரேங்குக்குள் வந்த எனக்கு பிட் தேவைப்படவில்லை என்பதே உண்மை. இஞ்ஜினியரிங் பரீட்சைகள்? அங்கும் தேவைப்படவில்லையே, மேலும் அதெல்லாம் செய்ய எனக்கு தில் இருந்ததில்லை.
ஒரே ஒரு தடவை ஐந்தாம் வகுப்பில் காப்பி அடித்திருக்கிறேன். தவறான பரீட்சைக்கு படித்து விட்டுப் போனதால் வந்த வினை. அந்த திக் திக் அனுபவம் வேண்டவே வேண்டாம் தாயே. மாட்டிக் கொண்டிருந்தால் எவ்வளவு அவமானம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பார்த்தவரை, அவர்கள் தேர்வுகளில் பக்கம் பக்கமாக பிட் எழுதிவந்து (இப்படி எழுதும் நேரம், படித்து விடலாம்) காப்பி //
சரியா பாத்தீங்களா, எழுதி தான் எடுத்து வந்து இருந்தாரா, இல்ல மினி(மைக்ரோ) ஜெராக்ஸ் எடுத்து வந்து இருந்தாரா, ஏன் கேட்கிறேன் என்றால் நான் கல்லூரியில் படிக்கும்போதே இந்த விஞ்ஞானம் எல்லாம் வந்து விட்டது. அதை உபயோகப்படுத்தாமல் இன்னுமா எழுதி எடுத்து வந்துக்கிட்டு இருக்காங்க நம் மக்கள் .....
வாங்க சிவா.. அனில் கூட சேர்ந்துட்டீங்களா.?
//பிட் அடிக்குற திறமை அவங்களுக்கு இல்ல அப்படிங்குறது ஒத்துக்காம அடுத்துவங்களை குறை சொல்லிட்டு திரியுறாங்க.... என்னமோ போ.... தெரியாத விசயத்தை நம்மளாண்ட கேட்டா நாம சொல்லி குடுக்க போறாம்.//
இது எல்லாம் ஒரு பிழைப்பு அதை எனக்கு வேற சொல்லி தர போறீங்களா?..
தன்னிலை விளக்கத்திற்கு நன்றி ராகவன் ஐயா... !! :)
//பொல்லாத அணில்தான், பட் ஐ லைக் இட்.// அணில்குட்டி
உங்களுக்கு Thanks சொல்லிச்சி :)
//சரியா பாத்தீங்களா, எழுதி தான் எடுத்து வந்து இருந்தாரா, இல்ல மினி(மைக்ரோ) ஜெராக்ஸ் எடுத்து வந்து இருந்தாரா//
சிவா இதை வேற பார்க்கணுமா?.. நான் எழுதுவனா இல்ல இந்த ஆராய்ச்சி பண்ணுவேனா..?.. பார்த்து சொன்னதுக்கே பொறாமை ன்னு அணில் ஓவரா நக்கல் பண்ணுது.. நீங்க வேற...
//சிவா இதை வேற பார்க்கணுமா?.. நான் எழுதுவனா இல்ல இந்த ஆராய்ச்சி பண்ணுவேனா..?.. //
அப்ப நீங்க சரியா பாக்காமலே அந்த ஆளுங்க மேல் குறை சொல்லி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க... இது நியாயமா, ஒரு வேளை அவங்க தேர்வு நல்லா எழுத வேண்டும் என்பதற்காக கந்த சஷ்டி கவசத்தை அப்ப அப்ப தேர்வு அறையில் படிச்சு பார்த்து இருந்து இருக்கலாம்.... நீங்க ஏதோ ஒரு அவசரத்தில் சரியா கவனிக்காம இருந்து இருக்கலாம்.... அணில் இதை எல்லாம் நீ கேட்க மாட்டியா நீ......
//இது எல்லாம் ஒரு பிழைப்பு அதை எனக்கு வேற சொல்லி தர போறீங்களா?.. //
ஹலோ உங்களுக்கு திறமை இல்லனு சொல்லுங்க ஒத்துக்குறேன். கத்துக்க விருப்பம் இல்லனு சொல்லுங்க ஒத்துக்குறேன். அது எல்லாம் ஒரு பிழைப்பா நீங்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. அது எல்லாம் நீங்க கேட்க கூடாது... தப்பு தப்பு.....
இது நம்பிய பெரிய ஆள் ஆனவங்க எத்தனை பேர் தெரியுமா?
//ஹலோ உங்களுக்கு திறமை இல்லனு சொல்லுங்க ஒத்துக்குறேன். கத்துக்க விருப்பம் இல்லனு சொல்லுங்க ஒத்துக்குறேன்.//
ஆமாங்கசிவா, எனக்கு இல்லைன்னு ஒத்துக்கறேன்.. போதுமா?!
//அது எல்லாம் ஒரு பிழைப்பா நீங்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. அது எல்லாம் நீங்க கேட்க கூடாது... தப்பு தப்பு.....//
சரிங்க ..செல்லம்.. நாங்க கேட்கல..!! :)
கவிதா, ஒரு உண்மையைச் சொல்லாவிட்டால் மனசாட்சி திட்டுதுங்க, உங்க புலம்பலை மன்னிச்சிக்குங்க, உங்க ஆற்றாமையைச்
சொல்லிக்கிட்டு இருக்கும்பொழுது பாதியிலேயே அனி என்ன நக்கல் அடிக்குதுன்னு பார்க்க போயிட்டேன். பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையா உங்க பிளாக்கு போகுது, பார்த்து ;-)
என்னங்க open book examஐ எல்லாம் பிட்டுன்னு சொல்லிகிட்டு :))
பெருசோ சிறுசோ, மாணவர்கள் மாணவர்கள் தான் !
//பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எத்தனை அசிங்கம். மதிப்பார்களா?//
நீங்க வேற, பிட்டு அடிக்கத் தெரியவில்லை யென்றால் தான் " ஒரு பிட் அடிச்சு பாஸ் பண்ணக்கூட தெரியலை, நீ எல்லாம்... " என்கிறார்கள். காலம் மாறிப் போச்சு அம்மணி!
//உங்க ஆற்றாமையைச்
சொல்லிக்கிட்டு இருக்கும்பொழுது பாதியிலேயே அனி என்ன நக்கல் அடிக்குதுன்னு பார்க்க போயிட்டேன். //
உஷாஜி..ஓ....இப்படியெல்லாம் வேற செய்யறீங்களா? ம்ம்...
//பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையா உங்க பிளாக்கு போகுது, பார்த்து ;-) //
நம்ம மடியில இருக்கற பூனை எவ்வளவோ பரவாயில்லைங்க.. வெளியில இருக்கற பூனைங்க ஏதாவது சொன்னத்தான் நமக்கு கஷ்டமா இருக்கும், அதனால அணில் பூந்து விளையாடட்டும் விட்டுடறது.. வேற ஒன்னும் இல்லைங்க..
//காலம் மாறிப் போச்சு அம்மணி! //
வாங்க மணியன்ஜி, அப்ப நான் தான் மாறலையா?.. நான் தான் மாறி பிட் எல்லாம் அடிக்க கற்றுக்கொள்ளனுமோ??? ம்ம்.. என்னவோ போங்க வரவங்க எல்லாம் சொல்லறத பார்த்தா..நான் தான் தப்பா பதிவு போட்டுடோன்னு தோனுது..
அப்பாடி !!!என்னைச் சொல்லலை கவிதாக்கா.
அவுங்க சொன்ன வயசு எனக்கு இன்னும் வரலை
வாங்க மதுரா, நன்றி, எப்படியோ உங்களுக்கு அணிலை பற்றி சரியா புரிஞ்சிப்போச்சா.?!! :)
பெருசு, அப்ப என்ன சொல்லவறீங்க இந்த வயசு உங்களுக்கு ஆகலைன்னு பிட் அடிக்கலாங்கறீங்களா??
//Courage is a special kind of knowledge; the knowledge of how to fear what ought to be feared, and how not to fear what ought not to be feared..//
கவிதாம்மா,
பீட்டர் தாத்தாவுக்குத் தமிழறிவும் அதிகம் போல. அச்சம், மடம், நாணம்னு சொல்றாங்க இல்ல...அதுல அச்சம்ங்கிற மேட்டர் மேல சொல்லிருக்கறது தான்னு எங்க தமிழ் மிஸ் சொல்லிக் குடுத்தது ஞாபகத்துக்கு வந்துட்டுது. ஆனா அது எல்லாருக்கும் பொதுன்னும் சொல்லிக் குடுத்தாங்க.
வாங்க தல, உலக தொலைக்காட்சியில் முதன் முதலாங்கற மாதிரி, எனக்கு முதன் முதலா அட்ரஸ் செய்து இருக்கீங்க.. நன்றி தல.. அணிலு கவனிச்சியா... தல இப்ப எனக்கு கமண்ட் போட்டு இருக்காரு
Post a Comment