ஒவ்வொரு வெள்ளியும்(முடிந்தவரை), இனி புதிய பகுதி கேப்பகஞ்சி with கவிதா & அனிதா வரவிருக்கிறது. இதில் நம்முடைய பிளாக் நண்பர்கள் மற்றும் வெளியிலிருந்தும் நேர்காணல் செய்து அதன் உரையாடல் தொகுப்பு பதிவாக்கப்படும். நேர்காணலின் போது நண்பருக்கு கேப்பங்கஞ்சி ஒரு லோட்டா பால் விட்டு சர்க்கரை போட்டோ இல்லை தயிர் விட்டு உப்பு போட்டோ அவரவர் விருப்பபடி கொடுக்கப்படும்.. எங்களிடம் முதலில் மாட்டியவர் - நம்ம ஒன்லி ஒன் கைப்புள்ள
வாயைப்புடுங்கற ரவுண்டு :-
கவிதா :-வாங்க கைப்ஸ்! எப்படி இருக்கீங்க ?!!
வணக்கம் கவிதா, ஹாய் அனிதா! இது வரைக்கும் நல்லா தான் இருக்கேன். இனிமே எப்படி இருக்கப் போறேங்கிறது உங்க கேள்வி முடிஞ்சப்பிறகு தான் தெரியும்.
கவிதா - வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லு-ங்களேன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜாலியாக சிரித்து மகிழ நகைச்சுவையான பதிவுகளை இட்டு, படித்தவர்கள் மகிழ்ச்சியான நினைவுகளுடன் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒத்த கருத்துடைய நண்பர்களினால், தொடங்கப் பட்ட ஒரு ‘Cool Hangout Place’ போன்ற ஒரு கூட்டு வலைப்பூ முயற்சி. அனைவரது உழைப்பினாலும், ஒத்துழைப்பினாலும் சங்கத்துக்கு நல்ல ஆதரவு கெடைச்சு நல்லபடியா நடந்துட்டிருக்கு.
கவிதா :- உங்க படிப்பு, வேலை, உங்க குடும்பம் பற்றி, நீங்க விருப்பப்பட்டா சொல்லுங்க..
அது என்ன விருப்பப்பட்டா...? அதுக்குத் தானே வந்துருக்கோம். நீங்க ஊத்தப் போற கேப்பங்கஞ்சிக்காகவாச்சும் ஒரு ரெண்டு கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லித் தானே ஆவனும்? எம்பி எம்பி ஒரு எம்பிஏ டிகிரி வாங்குனதாலே ஊர் ஊராச் சுத்தி ப்ளாக் படிக்கிறதுக்கு ஒரு கன்சல்டண்ட் வேலை கெடச்சிருக்கு. எதோ எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாராம்னு ‘நான் கன்சல்டண்ட், நான் கன்சல்டண்ட்’னு ஊரை ஏமாத்திட்டிருக்கேன். என்னோட குடும்பத்தைப் பத்தி சொல்லனும்னா, எங்க தோப்பனார் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், தாயார் தடிப்பசங்களுக்காகவே உழைச்சு ஓடாத் தேய்ஞ்ச ஒரு இல்லத்தரசி, இளவல் ஒருத்தரு இருக்காரு...சமீபத்துல அவரும் விரிவுரையாளரா சென்னையில் ஒரு கல்லூரியில் பணியில் சேர்ந்திருக்காரு. நாலு பேரைக் கொண்ட மகிழ்ச்சியான குடும்பம் எங்க குடும்பம். என்னைத் தவிர எல்லாரும் சென்னையில தான் இருக்காங்க.
கவிதா:- இவ்வளவு படிச்சி இருக்கீங்க..ஆனா தெரியவே இல்ல.. ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு.. உங்களின் வேலை சம்பந்தமா உங்களின் வருங்கால திட்டம் என்ன?
என்னது...தெரியவே இல்லியா? ஏன் நம்ம மூஞ்சைப் பாத்தா மாங்கா மடையனாட்டம் இருக்கா? தன்னடக்கம் எல்லாம் ஒன்னுமில்லீங்க. சான்ஸ் கெடச்சா சந்துல சிந்து பாடிடுவோம்ல? வருங்கால திட்டம்னு பாத்தா... இன்னும் நெறைய காசைச் சேர்க்கனும். வாங்கி அதை கல்லால போட்டுக்கணும். அம்புட்டுத் தான்.
கவிதா:- பெண் – Define
ஆஹா! கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாங்கையா! எங்கடா ஆப்புன்னு எதுவும் இன்னும் வரலியேன்னு பாத்தேன். அப்படியே தலைல துண்டைப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தா கேப்பங்கஞ்சின்னு ஒன்னு குடுத்தீங்களே அதை வேற குடிச்சிட்டேன்?
ஒன்னு பண்ணறேன். காலேஜ் படிக்கும் போது ‘வாட்டாக்குடி இரணியன்’னு படம் ஒன்னு வந்துச்சு. அந்தப் படத்துல கோழி குஞ்சுகளை மீனா கொஞ்சற மாதிரி ஒரு ஸ்டில் ஒன்னு செய்தித் தாள்ல வந்துச்சு. அதை அப்படியே(!) காப்பியடிச்சிட்டு, எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு நாலு வரி ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸா கிறுக்கி வச்சிருக்கேன். அதை கீழே இருக்கற சுட்டியில போய் படிச்சிப் பாருங்க. அதுலேயே நாங்க டிஃபைனி வச்சிருக்கோம். http://beta.blogger.com/
கவிதா :- உங்களின் interest எழுதுவது, படிப்பது தவிர..
எழுதுவதும் படிப்பதும் என் interestனு யாரு சொன்னா? நெறைய விஷயத்துல மூக்கை நுழைச்சி ஒன்னையும் உருப்படியாத் தெரிஞ்சிக்காம இருக்கறது தான் நம்ம ஒரே interest. அதுலேயே ரொம்ப நாளா இருக்கறதுன்னு பாத்தா கேலிகிராஃபியும்(Calligraphy) தபால் தலை சேகரித்தலும், இப்போ புதுசா போட்டா புடிக்கிறதும்
அனிதா:- தல, பெண்ணியம் பற்றி உங்களின் கருத்து...
இதுக்கு அம்மணியே பரவால்ல போலிருக்கு. இன்னிக்கு எனக்கு டின்னு கட்டி விடாம அனுப்பப் போறதில்லைனு நெனக்கிறேன். இருந்தாலும் நீ கேக்கறியேங்கிறதுனால சொல்றேன். உண்மையில சொல்லப் போனா எனக்கும் பெண்ணியத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது. சரி, என்னான்னு தெரிஞ்சிக்கலாம்னு விகிபீடியாவுக்குப் போய் ‘Feminism’னு தேடுனேன். எக்கச்சக்கமா மேட்டர் வந்துச்சு. யார் யாரோ ஃபிரெஞ்சு, பிரிட்டிஷ் மேடம் பேரெல்லாம் போட்டுருந்துச்சு. பெண்கள் கல்விக்காகவும், ஓட்டுரிமைக்காகவும், சம உரிமைக்காகவும் போராடறது தான் பெண்ணியம் அப்படீங்கற மாதிரி போட்டிருக்கு. அப்படியே மேல படிச்சா வர்ஜினியா உல்ப்(Virginia Woolf) அப்படீங்கற எழுத்தாளர் ‘Feminism’ அப்படிங்கற சொல்லையே வெறுக்கறதா போட்டுருந்துச்சு. அவங்களைப் பொறுத்தவரை ‘Feminism’னு தனியா எதுவுமில்லையாம். எல்லாமே ‘Humanity’ தானாம். அவங்களோட பர்சனல் வாழ்க்கை பத்தி எல்லாம் படிச்சும், அதைப் பத்தி எல்லாம் ஆராயாம அவங்களோட கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்தா ‘பெண்ணியம்’னு சொல்றது மனிதத் தன்மைக்குள்ள அடங்குனதுன்னு தான் எனக்கும் படுது. ஆண் பால், பெண் பால்ங்கிறதை மறந்து இரு பாலரும் அந்த மனிதத் தன்மையை மட்டும் மதிக்கக் கத்துக்கிட்டா ‘பெண்ணியம்’ அப்படின்னு தனியா எதுக்கும் தேவையிருக்காதுன்னு நெனக்கிறேன். அந்த மனிதத் தன்மைக்குள்ள பல பல மைக்ரோ சமாசாரங்கள் அடங்கியிருக்குன்னும் நெனைக்கிறேன். அது என்னென்னன்னு வெளக்கமாச் சொல்லவும் பேசவும் நெறைய அனுபவமும் அறிவும் தேவைன்னும் நெனக்கிறேன்.
இது இப்படியிருக்க... கருத்தம்மா படத்துல பார்த்த ஒரு காட்சி. டைரக்டரோட ‘டச்’ வெளிப்படற ஒரு காட்சி. கைகால் முடமானத் தன் தந்தையான பேராசிரியர் பெரியார்தாசனைக் கருத்தம்மா ராஜஸ்ரீ குளிப்பாட்டுவது போல அமைந்த ஒரு காட்சி. தென்னங்கீற்று இடுக்குகளின் வழியாக முதியவர் குளிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் “டேய்! தாத்தா அம்மணமா குளிக்கிறாருடா”ன்னு சொல்லுவதாக வரும். “டேய்! போங்கடா” என அந்தச் சிறுவர்களை ராஜஸ்ரீ விரட்டுவார். அதன் மூலம் கருத்தம்மா எனும் கதாபாத்திரத்தை உயர்வாகச் சித்தரிக்கும் நோக்கிலும் இயக்குனர் வெற்றி பெறுவார். குழந்தையாக இருக்கும் போது தன்னையே கொல்ல முனைந்த, தன் தந்தையின் நிர்வாணத்தையும் பொருட்படுத்தாமல், அவரைத் தன் குழந்தை போல பாவிக்கும் ஒரு பென்ணின் தாய்மை உணர்வு பெண்ணியத்துள் வருமா? இல்லை படிப்பறிவில்லாததால் தான் என்னைக் கொல்ல முனைந்தவனுக்கும் சேவை புரியும், அடிமைத் தனத்துக்கும் அவல நிலைக்கும் நான் உட்படுத்தப் படுகிறேன், இதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று போராடுவது பெண்ணியத்துள் வருமா? நக்கலுக்காகக் கேக்கவில்லை. ஏனெனில் விகிபீடியாவில் liberation, suppression, equality இவைகளைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் மேலே சொன்னது போன்ற எண்ணற்றப் பெண்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. அப்பெண்களின் பார்வையில் பெண்ணியம் என்பது எது? பதில் தெரியாததாலும், பெண்ணியத்தைப் பற்றி பேச கவிதா வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாலும் உண்மையாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்கிறேன். யாருக்கிட்டயாச்சும் விளக்கம் இருந்தாச் சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கிறேன்.
ஒன்னை பதிலு சொல்லச் சொன்னா கேள்வியாடா கேக்குறேன்னுட்டு, பேட்டியை முடிச்சிட்டு கெளம்பற நேரத்துல கேப்பங்கஞ்சிக்கு பில்லை நீட்டிடாதே தாயீ. ஜோபியில துட்டு வேற இல்ல!
அனிதா:- தல உங்களின் அழகின் ரகசியம் என்ன?
இப்போ கேட்டியே இது கேள்வி. இப்பச் சொல்றதை, நல்லா கொட்டை எழுத்துல ஃபாண்ட் சைஸ் அம்பதுல போட்டுக்க. நம்ம மேனி எழிலோட ரகசியம் என்னான்னு கேட்டீன்னா சமீப காலம் வரைக்கும் ‘மஞ்சளும் சந்தனமும் சேர்ந்த விக்கோ டர்மெரிக் இல்லை காஸ்மெடிக் தான்’. ஆனா பொண்ணுங்க போடற ஃபேர்னஸ் க்ரீம் எதுக்குன்னு சூர்யா கேள்வி கேக்கச் சொல்லிக் குடுத்ததுக்கப்புறமா இப்பல்லாம் ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம்’ தான். இதெல்லாமும் பூசிக்கலைன்னாலும் நாம அழகோ அழகு தான். ஆனா நாம க்ரீமைப் பூசிக்கிட்டா ஒரு நாலு பேரு வீட்டுல அடுப்பெரியுமில்ல? அதுனால இதை ஒரு பொது சேவையா செய்றேன். வேற ஒன்னுமில்லை. இந்தப் பதிலை மட்டும் போல்ட் இட்டாலிக் அண்டர்லைன்ல கட்டம் கட்டிப் போட்டுடு சரியா?
கவிதா :- நீங்க சாதிக்கனும்னு நினைக்கற ஒரு விஷயம்...
ஒரு விஷயமாவது முழுசா உருப்படியாத் தெரிஞ்சு வச்சிக்கணும். இத சாதிக்க முடிஞ்சாலே அது எனக்குப் பெரிய விஷயம் தான்.
அனிதா :- ஏன் தல... எல்லார் கிட்டயும் ஒத வாங்கறத ஒரு தொழிலாவே ஆக்கிட்டீங்க?
என்ன அனிதா பண்ணறது? ஒத வாங்குனதுக்கப்புறம் ‘எவ்வளோ அடி வாங்குனாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா’னு ஒரு சர்டிஃபிகேட் குடுத்துடறாங்களே? அது அடுத்ததா ஒத வாங்குறதுக்கு ஒரு ஊக்க மருந்தா அமைஞ்சுப் போயிடுது. என்ன பண்ணறது?
கவிதா:- நீங்க சிவகுமார் சார் பதிவில் ஒருமுறை பொருளாதாரம் பற்றிய உங்களின் கருத்து சொன்னதற்கு புத்தகம் பரிசா வாங்கனீங்க.. அது போன்ற விஷயங்களை, அதாவது பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றை உங்கள் பதிவிலும் எழுதுலாம் இல்லையா? நீங்க எழுதாம இருக்க என்ன காரணம்.?
ஹி...ஹி...எழுதலாம் தான். ஆனா அடுத்தவங்க கிட்டேருந்து கத்துக்கறதுல இருக்கற ஆர்வம், நாம நாலு பேருக்கு நல்லது செய்யனும்னு வரும் போது இல்லாத போயிடுதுன்னு நெனக்கிறேன். சுயநலமும் சோம்பேறித் தனமும் தான் உருப்படியா எதுவும் எழுதாததுக்குக் காரணம். வேற என்ன?
கவிதா :- சரிங்க தல, நிறைய வெளியிடங்களுக்கு போயிருக்கீங்க.. அப்படி நீங்க போகும் போது கற்றுக்கொண்ட சில விஷயங்கள்?
எந்த ஒரு புது இடத்துக்குப் போனாலும் புதுசா கத்துக்க எதாவது இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதே ஒரு பாடம் தான்.

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-
1. உங்களுக்கு இருக்கற நிக்நேம்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?
மோசி, மோகா, மோகு, மாமா, கைப்பு, கைப்ஸ்...அம்புட்டுத் தான்னு நெனக்கிறேன்.
2. உங்க பள்ளிபடிப்புல உங்களுக்கு மறக்க முடியாத டீச்சர் ?
படிப்போட சேர்த்து, நல்லது கெட்டதுகளையும் சொல்லிக் குடுத்த எங்கத் தமிழ் மிஸ்.
3.உங்கக்கிட்ட உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்
சோம்பேறித்தனம், அவநம்பிக்கை, சுயநலம்
4.ப்ளாக்ல சந்திக்க விரும்பற 3 பேர்..
அப்படின்னு குறிப்பா யாருமில்ல. சென்னையில் ஒரு வாரம் தொடர்ச்சியாத் தங்க வாய்ப்பு கெடச்சா, சென்னையில் இருக்கற பதிவர்கள் ஒரு சிலரை-யாவது சந்திக்க ஆசை. அடுத்த வாட்டி சென்னை போகும் போது தான் முயற்சி செய்யனும்.
5.நீங்க ஓவரா அடிவாங்கி அழுதது எப்ப?
ஒன்னா ரெண்டா...நெனைவு வச்சி சொல்றதுக்கு? பெரும்பாலும் சாப்புட மாட்டேன்னு அடம்புடிச்சி அடி வாங்குனது தான் அதிகமா இருக்கும். அடுத்ததா ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அழுது அடிவாங்கினதா இருக்கும்.
6. ஆமா, நீங்க எதுக்கு ப்ளாக் எழுத வந்தீங்க?
தமிழ்ல எழுதறதும், படிக்கறதும் மறக்காம இருக்கறனும்ங்கிறதுக்காக.
7. இதுவரைக்கும் நல்லா இருக்குன்னு நினைக்கற உங்க 3 பதிவுகள்?
அப்படின்னெல்லாம் பாக்க ஆரம்பிச்சா மொத்தமாவே மூனு தான் தேரும். இருந்தாலும், படிக்கிறவங்க ரொம்ப ரசிச்சதுன்னு நான் நெனைக்கிற மூனு பதிவுகள். வச்சான்யா ஆப்பு, தடிப்பசங்க #3 ,வயசாயிடுச்சாங்க
8.ப்ளாக்ல உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்..
என்னோட ப்ளாக்ல தானே?...மூனென்ன மூவாயிரம் இருக்கு! வளவளன்னு எழுதுறது, சமீபகாலமா பின்னூட்டம் போடுறவங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லாம இருக்கறது, ஜாலியானப் பதிவா எல்லாரும் எதிர்பாத்துட்டு இருக்கும் போது பெரிய இவனாட்டம் செமத்தியா பிளேடு போடறது.
9.உங்களின் தம்பியிடம் பிடித்த விஷயம் என்ன?
பாசக்காரப் பய. ஆனா நேர்ல பாத்துக்கும் போது எலியும் பூனையும் தான்.
10.கைப்புள்ள /மோகன், ஒற்றுமை& வேற்றுமை.
ஒற்றுமை - நிறம், அப்பப்போ உதார் விடறது, நமக்குன்னே அங்கங்கே தயாரா இருக்குற ஆப்பு.
வேற்றுமை - ஒரு இளைஞனாயிருந்தும், இன்னும் ஒரு இளைஞி கையைக் கூடப் புடிச்சு இழுத்ததில்லை. அதுக்கான தில்லுமில்லை J
அனிதா :- நன்றி தல, சூப்பரா பதில் சொன்னீங்க.. இன்னைக்கு பீட்டர் தாத்ஸ் க்கு பதிலா நீங்க ஒரு தத்துவம் சொல்லி இந்த நேர்காணலை முடிச்சி வைங்க.

கைப்புள்ள :- ஓகே. சாக்ரடீசோட ஒரு கிரேக்கத் தத்துவத்தைச் சொல்லி முடிச்சுக்கிறேன்.
In Greek :-Έν οίδα ότι ουδέν οίδα - Hen oida hoti ouden oida
In English “I know one thing, that I know nothing”
In Greek :-Έν οίδα ότι ουδέν οίδα - Hen oida hoti ouden oida
In English “I know one thing, that I know nothing”
வாய்ப்பளித்தமைக்கு நன்றி அனிதா, கவிதா. அடுத்த வாரம் வரப் போறவங்களுக்காவது கேப்பங்கஞ்சியை, இட்லி மாவுல செஞ்சு குடுக்காம இருக்க முயற்சி பண்ணுங்க. வர்ட்டா?
62 - பார்வையிட்டவர்கள்:
ஆமா! இது நம்ம அணில்குட்டி அனிதாவா! ரொம்ப சமர்த்தா இருக்கே!
நல்ல கலக்கல் ஐடியா! கவிதா!
ஆமா! ஒரு புது மாதிரியான ஆப்பு இல்லையே இது!
:))
இன்னும் சுருக்கிய பதில்களாக இருந்திருந்தால், இன்னும் இனித்திருக்கும். (அது சரி கைப்புள்ள
ரொம்ப பேசிட்டாரோ!?)
வாழ்த்துகள்..
நன்றி தமிழி, கைப்புள்ள எப்பவுமே ஓவராத்தான் பேசுவாரு உங்களுக்கு தெரியாதா.. பாவம் net எல்லாம் check செய்து பதில் சொல்லியிருக்காரு அதனால நீளமா இருந்தாலும் இருக்கட்டும் ன்னு விட்டுடோம்.. !! :)
கவிதா & அணில்,
நல்லாயிருக்கு உங்களோட தல'கிட்டே நடத்துன பேட்டி.... ஆனா இன்னும் கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டுருக்கலாம்
ராம்
ராம் நன்றி, இதுக்கே அவரு என்ன பிரச்சனைய யாரு எழுப்புவாங்களோன்ன்னு பயந்து.. வம்புல மாட்டாத கேள்வியா கேளுங்கன்னு அணில்க்கு லஞ்சம் குடுத்துட்டாரு.. அணிலுக்கும் அவருக்கும் எப்பவும் ஒரு டீல் இருக்கும்.. நான் என்ன செய்ய நடுவுல..
அருமையான நேர்காணல்.
ரொம்ப எதார்தமா இருந்தது.
நன்மனம்
(பிளாக்கர் என்னோட பேர ஏத்துக்க மாட்டேங்குது.... அணிலு என்னனு கேட்டு சொல்லேன்)
வாங்க நன்மனம், நன்றி எல்லாருமே சொல்லிட்டாங்க.. கமண்ட் போட விடமாட்டேங்குதாம்.. என்ன செய்யறது.. தொல்லை உபயம் beta-blogger தான்...
அதுக்காக தான் அனானி option open ல இருக்கு.. பார்க்கலாம் என்ன பிரச்சனைன்னு பார்க்கனும்.. :)
அணில் அனிதா,
username எடத்துல username@gmail.com அப்படீனு டைப் பண்ணினா ஒன்னும் பிரச்சினை இல்ல.
அதாவது பிளாகர் உபயோகிக்க ஜிமெயில் கணக்கு இருந்தா தான் முடியும் போல இருக்கு....
mikaum nanraha irukkirathu
by
puthiya vasakan
கவிதா நல்ல பேட்டி வாங்கியிருக்கீங்க.
பின்னூட்டங்கள் புயல் எழுப்ப வாழ்த்துக்கள்.
அனிதா நல்ல குட்டி.
எப்படி கேக்குது பாருங்க தன்மையா.;-)
கவிதா வித்தியாசமாக இருக்கிறது உங்கள் பதிவு.நல்ல யுக்தி.
இப்படி, ஒவ்வொருத்தருக்கும் ஆப்பு வைப்பீங்கள்ல?
ஆஹா! ஜாலி! இந்த மாதிரி நேர்காணல் இருக்குற வரைக்கும்.
அருமையான முயற்சி கவிதா!! வாழ்த்துக்கள்!! பேட்டியும் கலக்கல்!
கைப்பு தனக்குள்ள இருக்கும் 'restless gemini'யை அழகாக வெளிக்காட்டியிருக்கிறார்!! :)
குறிப்பாக பெண்ணியம் குறித்த பார்வையும், நடுநடுவே அக்மார்க் கைப்புள்ள கமெண்டுகளும் சுவாரசியம்!
//எந்த ஒரு புது இடத்துக்குப் போனாலும் புதுசா கத்துக்க எதாவது இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதே ஒரு பாடம் தான்.
//
அருமை!!
பேட்டிக்கு மிக்க நன்றி கவிதா :)
சில தொடுப்புகள் ஒழுங்கா வேலை செய்யல கவிதா..கொஞ்சம் பாருங்களேன்...
ரெம்ப நல்ல முயற்சி. உஷா சொல்லித்தான் இந்தப்பாக்கம் வந்தேன். கலக்குறீங்க.
:)
//ஒத்த கருத்துடைய நண்பர்களினால்//
என்னாது இது எங்க சங்கத்த இதுக்கு மேல அசிங்க படுத்த முடியாது...இத நான் வன்மயா கண்டிக்கிறேன்.. :-)
//கவிதா வித்தியாசமாக இருக்கிறது உங்கள் பதிவு.நல்ல யுக்தி. //
வாங்க லட்சுமிஜி, வாழ்த்துக்களுக்கு நன்றி
//இப்படி, ஒவ்வொருத்தருக்கும் ஆப்பு வைப்பீங்கள்ல?//
ஆமாம் ஜி-ஜி, கண்டிப்பா.. தல இதுல ஒரு கேள்விய நைசா கட் பண்ணிட்டாரு.. அது என்னானா? அவரு சைட் அடிக்கற மேட்டர்.. அணிலுக்கு லஞ்சம் கொடுத்து கட் பண்ணிட்டாரு.. !
//ஆஹா! ஜாலி! இந்த மாதிரி நேர்காணல் இருக்குற வரைக்கும். //
ம்ம் உங்கள் சந்தோஷமே எங்கள் சந்தோஷம்..!!
//அருமையான முயற்சி கவிதா!! வாழ்த்துக்கள்!! பேட்டியும் கலக்கல்! //
வாங்க கப்பிபாய்ஜி! வாழ்த்துகளுக்கு நன்றி !
//கைப்பு தனக்குள்ள இருக்கும் 'restless gemini'யை அழகாக வெளிக்காட்டியிருக்கிறார்!! :)
குறிப்பாக பெண்ணியம் குறித்த பார்வையும், நடுநடுவே அக்மார்க் கைப்புள்ள கமெண்டுகளும் சுவாரசியம்!//
ம்ம்..ரொம்ப பயந்து பயந்து தான் இந்த கேள்விய அவரு accept பண்ணாரு..எங்க பெண் இயக்கங்கள் ஒன்றாக சேர்ந்து தலைய கும்மிடுவாங்களோன்னு பயந்து.. பதில் சொன்னாரு.. ம்ம்.. ஆனாலும் தல இவ்வளவு பயந்து இருக்க வேண்டாம்.. !!!
//ரெம்ப நல்ல முயற்சி. உஷா சொல்லித்தான் இந்தப்பாக்கம் வந்தேன். கலக்குறீங்க.//
வாங்க அலெக்ஸ்ஜி, வந்து பார்வையிட்டதற்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி...!!
//அதாவது பிளாகர் உபயோகிக்க ஜிமெயில் கணக்கு இருந்தா தான் முடியும் போல இருக்கு.... //
நன்றி நன்மனம் !! பார்க்கலாம்..
தாண்டவன்ஜி (பெயர் சரியா?) வருகைக்கு நன்றி.. !!
// அனிதா நல்ல குட்டி.
எப்படி கேக்குது பாருங்க தன்மையா.;-) //
வாங்க ரேவதிநரசிம்ஹன்! வாழ்த்துகளுக்கு நன்றி ! :0 அணில் குட்டியும், கைப்புவும் ரொம்ப understanding அதனால சமத்தா கேள்வி கேட்டுது..!!
அடுத்த பலி யாரு?
முரளி மனோஹர்
முழு பதிவும் படிக்கல. பின்னூட்டங்கள் படிக்கல. படிச்சவரைக்கும்,
//அதன் மூலம் கருத்தம்மா எனும் கதாபாத்திரத்தை உயர்வாகச் சித்தரிக்கும் நோக்கிலும் இயக்குனர் வெற்றி பெறுவார். குழந்தையாக இருக்கும் போது தன்னையே கொல்ல முனைந்த, தன் தந்தையின் நிர்வாணத்தையும் பொருட்படுத்தாமல், அவரைத் தன் குழந்தை போல பாவிக்கும் ஒரு பென்ணின் தாய்மை உணர்வு//
"தாய்மை"-னு added value கொடுக்கிறதால வர்ற fundamental mistake.
// பெண்ணியத்துள் வருமா? இல்லை படிப்பறிவில்லாததால் தான் என்னைக் கொல்ல முனைந்தவனுக்கும்//
Educate them. ignorance is not excuse.
// சேவை புரியும், அடிமைத் தனத்துக்கும் அவல நிலைக்கும் நான் உட்படுத்தப் படுகிறேன், //
தாய்மை, உயர்வு, புண்ணியம், தியாகம், "நல்லவ" எல்லாராலயும் போற்றப்படப்போறேன் - இந்தமாதிரி bullshitலாம் இல்லாட்டி மனுசி மனுசியா இருக்கலாம். மனுசனும் மனுசனா இருக்கலாம்.
//இதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று போராடுவது//
ஒப்புதல் இல்லாதவள leave them alone. doesn't your sentence imply "it is wrong"? ஒப்புதல் இல்லாட்டி தப்பா?
// பெண்ணியத்துள் வருமா?//
people really piss me off sometime. :(
சூப்பர் கவிதா.. கலக்கிட்டீங்க போங்க.. ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். கேள்வி கேக்குறது சுலபம், ஆனா பதில் சொல்றதுதான் கஷ்டம். பாவம் அடுத்து யாரு மாட்ட போறாங்களோ?
-- ஸ்ரிதர்
யுத்தியும் நடையும் வித்தியாசமாக இருக்கிறது.வாழ்த்துக்கள்..
அனி, எங்க தல படத்துல( வரலாறு) ஆறு வயசு பையன் அம்மாவை குளிப்பாட்டி உடையுடுத்தி சோறு எல்லாம் ஊட்டி விடுவார்.
இது ஆணியம் கேட்டகிரியில் வருமான்னு உன் தல கிட்ட கேட்டு சொல்லு :-))))
கவி, ஆனாலும் அனிதா என்ன பவ்யமா கேள்வி கேக்குது? உங்க கிட்டதான் அதோட வீரம் போல :-)
-usha
அணிலு,
உன்னோட ஓனரு ரொம்ப நல்ல யோசிக்க ஆரம்பிச்சிடாங்க நல்லா வந்து இருக்கு.
கவிதா,
நல்லா வந்து இருக்குங்க, கைப்புள்ளையை இன்னும் கொஞ்சம் கலாச்சி இருக்கலாம். நல்ல துவக்கம் வித்தியாசமான ஜடியாவா இருக்கு.. அணிலு என்னிக்கி அத்தோட ownerக்கு கஞ்சி ஊத்தப்போகுது.
சந்தோஷத்துடன்
சந்தோஷ்.
//அடுத்த பலி யாரு?//
முரளி மனோகர்ஜி, வருகைக்கு நன்றி, பலி இடரவங்ககிட்டா சொல்லிட்டா நடக்குது... கூப்பிட்டோமா, பலி இட்டோமா ன்னு இருக்கனும் இல்லையா? அடுத்த அடுத்த பலிகளின் பெயர்கள் எப்பவுமே சஸ்பென்ஸ்......!!
பிரெம்லதாஜி, வருகைக்கு நன்றி, உங்களுக்கு பதிலை கைப்பூவே சொல்லுவாருன்னு நம்பறேன்..
//கேள்வி கேக்குறது சுலபம், ஆனா பதில் சொல்றதுதான் கஷ்டம்.//
ஸ்ரீதர்ஜி, அப்படி சொல்லாதீங்க.. ஒருத்தரக்கிட்ட மாட்டிவிடனும்னா.. எவ்வளவு கஷ்டப்பட்டு கேள்வி கேட்கனும்னா தெரியுமா?
சரி உங்களுக்கு சேதுக்கரசிஜி சொல்லி குடுத்தாங்க இல்ல.. ஸ்ரீ = SR ன்னு.. பழகிக்கலையா நீங்க..?!! பாருங்க நான் பழகிக்கிட்டேன்..
வாங்க ஆழியூரான்ஜி..உங்க வாழ்த்துக்கு நன்றி..
வாங்க உஷாஜி, நீங்க சொல்றது சரியே.. அணிலு எப்பவும் என்கிட்ட கொஞ்சம் ஓவர் சவுண்டு..தான்.. நேர்காணல் அப்படிங்கறதால.. அது ஆட்டத்தை குறைச்சிக்க சொல்லி ரொம்ப கேட்டுக்கிட்டதால.. இந்த பவ்யம்..
உங்க மற்ற கேள்விக்கு - கைப்பு பதில் சொல்லுவார்னு நம்பறேன்.
//கைப்புள்ளையை இன்னும் கொஞ்சம் கலாச்சி இருக்கலாம்//
வாங்க சந்தோஷ், வாழ்த்துக்கு நன்றி..கைப்புவ கலாய்க்கறத்துக்கு தான் ஒரு பெரிய சங்கமே இருக்கே..இது அவருடைய இன்னொரு முகத்தை காட்டக்கூடிய விதமா இருக்கனும்னு தோனிச்சி.. ஆனா அதுவும்க்கூட இன்னும் சீரியஸான கேள்விகளுக்கு பதில் சொல்லுவாரா? என்ற தயக்கத்தோடு.. லேசா கேட்டுட்டு விட்டாச்சு.. !
//ஒத்த கருத்துடைய நண்பர்களினால்//
என்னாது இது எங்க சங்கத்த இதுக்கு மேல அசிங்க படுத்த முடியாது...இத நான் வன்மயா கண்டிக்கிறேன்.. :-) //
ஷியாம்ஜி, நன்றி ! அதானே நாங்களும் இதை வன்மயா கண்டிக்கறோம்.. சங்கத்தை எப்படி அசிங்க படுத்தலாம் கைப்பூ...??? over to Kaippuuuuuuuuu !!
பிரேம்லதாஜி, இந்த link ஐ போய் பாருங்க.. பதிவர் ஜி நல்லா புரியறமாதிரி எப்படி beta blogger பிரச்சனை சரி பண்ணனும்னு எழுதி இருக்காரு உங்களுக்கு மற்றும் பிரச்சனையில் சிரமப்படும் அத்தனை பேருக்கும் உதவும்.
http://veyililmazai.blogspot.com/
//அனி, எங்க தல படத்துல( வரலாறு) ஆறு வயசு பையன் அம்மாவை குளிப்பாட்டி உடையுடுத்தி சோறு எல்லாம் ஊட்டி விடுவார்.
இது ஆணியம் கேட்டகிரியில் வருமான்னு உன் தல கிட்ட கேட்டு சொல்லு :-))))//
உஷா மேடம்,
போற போக்குல இப்படி கொளுத்திப் போட்டுட்டுப் போறீங்களே? அணிலு வேற இப்ப என்னை ஆணியம்னா என்ன என்னன்னு கேட்டு நச்சரிக்குது. விகிபீடியாலக் கூட அதப் பத்தி ஒன்னுமில்லியே? நான் எங்கே போய் தேடுவேன்? யாரைக் கேப்பேன்?
:(
kavitha,
coincidentally, I commented in another blog about பெண்ணியம். You may find this interesting.
நேரம் ஒதுக்கி என் கேள்விக்காகப் பதில் பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி பிரேமலதா மேடம். பெண்ணியத்தைப் பத்தி எந்த ஆண் எது எழுதினாலும் அது ஆணாதிக்கத்தில் ஊறிய கருத்தாகத் தான் இருக்கும் என நினைத்துள்ளதால் தான் "people really piss me off sometime" - இது வந்திருக்கிறது.
//தாய்மை உணர்வு பெண்ணியத்துள் வருமா? இல்லை படிப்பறிவில்லாததால் தான் என்னைக் கொல்ல முனைந்தவனுக்கும் சேவை புரியும், அடிமைத் தனத்துக்கும் அவல நிலைக்கும் நான் உட்படுத்தப் படுகிறேன், இதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று போராடுவது பெண்ணியத்துள் வருமா? நக்கலுக்காகக் கேக்கவில்லை.//
உண்மையிலேயே இவ்விரண்டு கூற்றுகளில் எது பெண்ணியத்துள் வரும் என தெரிந்து கொள்ளவே இக்கேள்வியை இப்பதிவில் கேட்டேன். அதாவது பெண்ணியம் என்ற பதத்தின் பொருளும் அதன் வரையறையும் என்ன என்று அறிந்து கொள்வதற்காகவே. நான் கேட்டதை யாரும் தப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்ற காரணத்தினாலேயே "நக்கலுக்காகக் கேக்கவில்லை" - இதையும் எழுதினேன்.
எழுதியவன் ஒரு 'male chauvinist' என்ற பார்வையை விடுத்து விட்டுப் படித்திருந்தால் நான் என்ன கேட்க வருகிறேன் எனப் புரிந்திருக்கும். பரவாயில்லை.
Again at the risk of being labelled a 'Male Chauvinist', நான் என்ன கேட்க விரும்பினேன் என்பதை இப்போது தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
//"தாய்மை"-னு added value கொடுக்கிறதால வர்ற fundamental mistake//
Mistake ஆகவே வைத்துக் கொண்டாலும், அத்தகைய பெண்கள் இன்னும் பல்லாயிரக் கணக்கோர் இருக்கிறார்கள் என்பதே உண்மை. தாய்மை, அல்லது ஒரு சக மனித உயிரைப் பேணுதல்(if you so prefer) இயற்கையிலேயே அமைந்த ஒரு inherent உணர்வு (to some extent in Men also) என்பது என் வாதம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எல்லாம் கட்டுக்கதை என்று ஒரு பதிவராவது பின்னூட்டமிடட்டும், நான் எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்.
//தாய்மை, உயர்வு, புண்ணியம், தியாகம், "நல்லவ" எல்லாராலயும் போற்றப்படப்போறேன் - இந்தமாதிரி bullshitலாம் இல்லாட்டி மனுசி மனுசியா இருக்கலாம்.//
அப்படி கருதுபவர்களைப் பார்த்து, "நீங்கள் அவ்வாறு கருதுவது தவறு என்றும் bullshit என்றும்" தரம் பிரிக்க நாம் யார்? At the end of the day, the person who is thinking that way is responsible for her/his own life.
//ஒப்புதல் இல்லாதவள leave them alone. doesn't your sentence imply "it is wrong"? ஒப்புதல் இல்லாட்டி தப்பா?//
நீங்கள் சற்று அதிகமாகவே, reading between the lines செய்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தப்பு என்று நான் நினைக்கவும் இல்லை, அந்த எண்ணத்தில் நான் எழுதவும் இல்லை. தப்பு என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன் சொல்லுங்கள். Infact தப்பு என்றும் சரி என்றும் எதுவும் கிடையாது. அந்த சூழ்நிலையில், எனக்கு நல்லது எது கெட்டது எது என்று தான் ஒரு மனுஷன்/மனுஷி யோசித்து, தனக்கு உகந்த வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
கடைசியாகத் தங்கள் பதிலில் இருந்து பிறந்த சில கேள்விகள். இதற்கு கோபப்படாமல் பதிலளித்தீர்கள் ஆனால் மகிழ்வேன்.
// பெண்ணியத்துள் வருமா? இல்லை படிப்பறிவில்லாததால் தான் என்னைக் கொல்ல முனைந்தவனுக்கும்//
Educate them. ignorance is not excuse.//
Well said. மிக மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அதிலிருந்து ஒரு கேள்வி பிறந்தது - WHO should educate them??? படிப்பறிவில்லாதப் பெண்கள் தானாகவே இத்தகைய decisionகளை எடுக்க முடியும் எனத் தோன்றவில்லை. Logicஉம் reasoningஉம், படித்தவர்களுக்குத் தான். வெளியுலகத்தையே பார்க்காதவர்களால், தானாகவே இந்த ignoranceஐக் களைந்து கொள்ள முடியுமா? அந்த அறியாமையை அகற்றிக் கொள்ள முடியாததனாலேயே தான் பலரும், இன்னும் அதே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படித்தப் பல பெண்களே, பாலியல் கொடுமைகளையும், domestic violenceஐயும், workplace harassmentஐயும் எதிர்க்கத் தயங்கும் போது, கிராமத்தில் வாழும் சொந்தக் காலில் நிற்க முடியாத self-sustenanceஐப் பற்றி அறிந்திலாதப் பெண்களுக்கு எவ்வாறு அந்த தைரியம் வரும்? சற்று யோசித்துப் பாருங்கள். கல்வி என்பது இன்றியமையாதது. அது இருந்தால் நல்லது எது கெட்டது எது என ஆய்ந்து பார்த்து, முடிவெடுக்கும் திறன் வளரும். அப்படியே கல்வியறிவு இருந்தாலும் 'NO' சொல்லும் assertiveness எவ்வாறு வரும்? WHO is going to provide Education and Assertiveness Training to the economically under privileged women? அதெல்லாம் தானாகவே நடந்து விடும்... பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தாலே போதும் என நினைத்தால், மன்னிக்க வேண்டும் 'we are living in a fool's paradise'.
பெண்ணியத்தைப் பற்றிய பதிவுகளும், விவாதங்களும் பெரும்பாலும் ஆண்கள் Vs பெண்கள் என்ற நிலைபாட்டை எடுப்பதாலும், அதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை ஆகையாலும், நான் இது வரை அவற்றில் பங்கு பெற்றதில்லை. அதன் காரணமாகவே கவிதாவின் முந்தைய சில பதிவுகளை நான் படித்த போதிலும், விவாதங்கள் எவற்றிலும் கலந்து கொண்டதில்லை. இதை கவிதா அவர்களும் அறிவார்கள். கவிதா இப்பதிவில் இத்தகைய ஒரு கேள்வியைக் கேட்ட போது மேற்கூறிய காரணங்களால் தான், பதிலளிக்க நான் மிகவும் தயங்கினேன். இப்பதிவில் இனி வரப் போகும் பின்னூட்டங்களிலும், அது போன்ற விவாதம் நிகழாமல் இருக்கவே விரும்புகிறேன்.
கைப்பூ...பேசவிட்டா..நிறைய விஷயம் வெளியில வரும் போல இருக்கே... என் சக ப்ளாக் நண்பர்களுக்கு வேண்டுகோள்..கைப்புவை நிறைய கேள்வி கேட்டு இன்னும் நிறைய பேசவையுங்கள் wait ஆ பதில் வருது..!!
//கைப்பூ...பேசவிட்டா..நிறைய விஷயம் வெளியில வரும் போல இருக்கே... என் சக ப்ளாக் நண்பர்களுக்கு வேண்டுகோள்..கைப்புவை நிறைய கேள்வி கேட்டு இன்னும் நிறைய பேசவையுங்கள் wait ஆ பதில் வருது..!! //
பதிவெழுத வேண்டிய இடத்தில் ஒரு ஒட்டுமொத்த வலைப்பூவையும், பின்னூட்டம் இட வேண்டிய இடத்தில் சில/பல பதிவுகளையும் எழுதி வரும் கைப்புள்ளை அவர்களின் விஷமத்தை பார்த்திபன் & கட்டதுரை & கோ சார்பாக வன்மையாக கண்ணடிக்கிறேன்!
Kaippulla,
stop assuming and see your wordings first.!!
you are building on and on and on and on .... on thebasis of your assumptions.
I am not wasting time with you anymore. you have no ability to learn/see things straight. you have no ability to see your mistakes.
I am not wasting time with you anymore. your problem is not mine.
//தாய்மை, அல்லது ஒரு சக மனித உயிரைப் பேணுதல்(if you so prefer) //
தாய்மை பெண்களுக்கு மட்டுமே உரிய உணர்வு என்று நினைக்கும் கைப்புள்ளயின் female chauvanis-ஸத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
//நிறைய பேசவையுங்கள் wait ஆ பதில் வருது..!!//
பதில்களுக்கு ரொம்ப நாள் காக்க வெச்சுட்டாரோ?
என்ன! எங்க தலைக்கு கேப்பங்கஞ்சியா?
(அது சரி! அவரே அதைத்தான் விரும்பிக் கேட்பார்)
பிரேம்லதாஜி, முதலில் உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை.. உங்களுக்கு நேரம் இல்லாத பட்சத்தில் நீங்கள் பின்னூட்டமே இட்டு இருக்க க்கூடாது.. மேலும் உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவருக்கு பொறுமையாக, நிதானமாக புரியவைக்க வேண்டுமே தவிர.. இப்படி பதில் சொல்லி அவர் மனதை நீங்கள் புண்படுத்த க்கூடாது.
எனக்கு தெரிந்து நான் மிகவும் அடம்பிடித்தே.அவரிடம் பெண்ணியம் பற்றி பேசவைத்தேன்.. அவர் சொல்ல வருவது ஒரு ஆணாக அவரின் கருத்தை பார்க்காதீர்கள் என்பதே.. பொறுமையாக புரியவைக்க முயலுங்கள் இல்லையேல் பேசாமல் இருந்துவிடுங்கள் -
//you have no ability to learn/see things straight. you have no ability to see your mistakes. //
இப்படிப்பட்ட பதில் நீங்கK கொடுத்தற்கு நான் மிகவும் வேதனையும் வெட்கமும் படுகிறேன். அடுத்தவர்களை எடுத்து எரிந்து பேசுவதில் அப்படி என்ன சந்தோஷம் உங்களுக்கு.
அவருக்கு abillity இல்லை என்றும், அவருக்கு புரிதல் இல்லை என்றும் ஒட்டு மொத்தமாக சொல்ல அவரின் பெற்ற தாயால் க்கூட முடியாது. ஒருவரின் பலம்/பலவீனம் தெரியாமல் பேசுவதை தயவுசெய்தூ நிறுத்துங்கள்.
அவருடைய கருத்தை ஆட்சேபிக்க வேண்டுமே தவிர..அவருக்கு ஒட்டுமொத்தமாக abillity இல்லை என்று சொல்லுவது எல்லாம் அதிகபடியான வார்த்தைகள்.
பிரேம்லதாஜி, முதலில் உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை.. உங்களுக்கு நேரம் இல்லாத பட்சத்தில் நீங்கள் பின்னூட்டமே இட்டு இருக்க க்கூடாது.. மேலும் உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவருக்கு பொறுமையாக, நிதானமாக புரியவைக்க வேண்டுமே தவிர.. இப்படி பதில் சொல்லி அவர் மனதை நீங்கள் புண்படுத்த க்கூடாது.
எனக்கு தெரிந்து நான் மிகவும் அடம்பிடித்தே.அவரிடம் பெண்ணியம் பற்றி பேசவைத்தேன்.. அவர் சொல்ல வருவது ஒரு ஆணாக அவரின் கருத்தை பார்க்காதீர்கள் என்பதே.. பொறுமையாக புரியவைக்க முயலுங்கள் இல்லையேல் பேசாமல் இருந்துவிடுங்கள்//
ரிபீட்டே..
//அவருக்கு ஒட்டுமொத்தமாக abillity இல்லை என்று சொல்லுவது எல்லாம் அதிகபடியான வார்த்தைகள். //
இதுவும் கூட..
அரை சதம் அடிக்கப்போகும் பதிவில் என்னோடதும் ஒன்னு! ;-)))
வாங்க சிபி, என்னடா...சங்கத்து சிங்கங்கல் எல்லாம் தலைக்கு ஆப்பு வைக்க இன்னமும் வரலைன்னு பார்த்தேன். .வந்துடீங்க.. ம்ம்.. ஷோ'வே கேப்பங்கஞ்சி- இதுக்கு ஜியார்ஜ் புஷ் வந்தாலும் கேப்பங்கஞ்சி தான் கொடுக்கப்படும்.. !! :)
வாங்க கொத்ஸ் !
//பதில்களுக்கு ரொம்ப நாள் காக்க வெச்சுட்டாரோ? //
நீங்களே பாருங்க..பதிலை மட்டும் தல 2 நாள் உட்கார்ந்து எழுதி எவ்வளவு பெருசா போட்டு இருக்காருன்னு ம்ம்.. அதுக்கூட ஒரு ability வேணும் இல்ல.. !!
//அரை சதம் அடிக்கப்போகும் பதிவில் என்னோடதும் ஒன்னு! ;-)))//
வாங்க பாலா... உங்களுக்கு முன்னமே ஒரு வாட்டி சொன்னேன்..இல்ல.. சும்மா பதிவ படிக்காம..பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு போகாதீங்க.. வந்தோமா..படிச்சோமா.. யாரையாவது திட்டினோம்மான்னு போங்க..!!
வாங்க உண்மை விரும்பி,
ரீப்பீட்டு சொன்னதுக்கு நன்றிங்கோ.!!
ஆணுரிமைவாதி - உங்களுக்கு கைப்பு திரும்பவும் ஒரு பெரிய லக்சர் கொடுப்பார் என்று நம்புகிறேன்..
கைப்பு..ஆனாலும் கைப்பு நீங்க toomuch ஆக உங்க ability ய use பண்ணி பதில் போடறீங்க.. நன்றீங்க..!!
//உங்களுக்கு கைப்பு திரும்பவும் ஒரு பெரிய லக்சர் கொடுப்பார் என்று நம்புகிறேன்.. //
அவரே கண்டுக்காம விட்டாலும் நீங்க ஒரு வழி செய்யாம வுட மாட்டீங்க போலிருக்கே!
வாழ்க கவிதா அம்மணி!!
இந்த வாரம் கெளம்பப் போவது நீங்களா?
இத்தனை பிரச்சினையாயிடுச்சே!
//அவரே கண்டுக்காம விட்டாலும் நீங்க ஒரு வழி செய்யாம வுட மாட்டீங்க போலிருக்கே!
//
ஆஹா! வாங்க உண்மைத் தொண்டன்!
கேக்க ஆளில்லைன்னு நினைச்சேன்!
//இந்த வாரம் கெளம்பப் போவது நீங்களா?//
கைப்புவைத் தானே கேட்கிறீங்க?!
அவர் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவருங்க..
//வாங்க பாலா... உங்களுக்கு முன்னமே ஒரு வாட்டி சொன்னேன்..இல்ல.. சும்மா பதிவ படிக்காம..பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு போகாதீங்க.. //
யக்கோவ்.. படிக்காட்டி படிக்கலைன்னு சொல்லீடுவேனாக்கும். படிச்சுட்டுதான் அறிவாளிங்க பேசுறத வேடிக்கை பார்க்கிறேன். அவ்வளவே!
// வந்தோமா..படிச்சோமா.. யாரையாவது திட்டினோம்மான்னு போங்க..!! //
அவ்வளவுதானே... இந்த பதிவை எழுதின எங்கள் ஜான்ஸிராணி அக்கா கவிதா ஒழிக! ஒழிக!!
(கண்டவங்களையும் திட்டினா ஒதை விழும். அதனால கேட்டு வாங்கின ஒங்களுக்கே திட்டு..) ;-)))
அடப்பாவிகளா... ஐம்பதாவதா வரலாம்னு நெனைச்சா.. வேற யாரோ முந்தி கிட்டானுங்களே! :-((((((
//அவ்வளவுதானே... இந்த பதிவை எழுதின எங்கள் ஜான்ஸிராணி அக்கா கவிதா ஒழிக! ஒழிக!!//
பாலா டைம் பார்த்துகிட்டு இருந்தீங்க போல.. ம்ம்.. கவனிச்சிக்கிறேன் :):)
காத்திருப்பவன் - வாங்க !!
//இந்த வாரம் கெளம்பப் போவது நீங்களா? இத்தனை பிரச்சினையாயிடுச்சே! //
இது எல்லாம் ஒரு மேட்டரே இல்லைங்க.. கிளம்பறத்துக்கு.. ! இதைவிட பெரிய மேட்டர் எல்லாம் உலகத்துல எவ்வளவோ இருக்குங்க..
//அவரே கண்டுக்காம விட்டாலும் நீங்க ஒரு வழி செய்யாம வுட மாட்டீங்க போலிருக்கே! //
அவரு எப்படிங்க விடுவாரு.. விட நாங்க விடமாட்டோம் இல்ல.. அதுக்கு தானே நாங்க இப்படி எல்லாம் கேள்வியே அவர கேட்கறது !!
//தாய்மை பெண்களுக்கு மட்டுமே உரிய உணர்வு என்று நினைக்கும் கைப்புள்ளயின் female chauvanis-ஸத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
//
வேணாங்ணா...விட்டுருங்க. வலிக்குது. அளுதுருவேன்!
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கவிதா, அணில்குட்டி, பீட்டர்தாத்தா ஆகியோரை தளபதி என்கிற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன் :-x
//சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கவிதா, அணில்குட்டி, பீட்டர்தாத்தா ஆகியோரை தளபதி என்கிற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன் :-x //
சிபிஜி, ஆமா சங்கா? அப்படீன்னா என்னாங்க? நாங்க பார்த்தது க்கூட கிடையாது.. இதுல எங்க ஊதறது..
நீங்க தளபதி ன்னு கூட எங்களுக்கு தெரியாது -சரி..இருந்துட்டு போங்க எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல...
//வாங்க பாலா... உங்களுக்கு முன்னமே ஒரு வாட்டி சொன்னேன்..இல்ல.. சும்மா பதிவ படிக்காம..பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு போகாதீங்க.. வந்தோமா..படிச்சோமா.. யாரையாவது திட்டினோம்மான்னு போங்க..!! //
அவன் அவன் பின்னூட்டம் வாங்கறதுக்கு என்ன என்னமோ செஞ்சிகிட்டு இருக்கான். அனிதா உங்க ஓனர் பண்றது கொஞ்சம் 200 much. அதும் தலையோட பின்னூட்டத்தை வேண்டாமுன்னு சொல்றாங்க. ஹிம்ம்ம்ம்ம்... யார் மேல என்ன கோவமோ. இப்ப எல்லாம் மக்களுக்கு ஆபிஸ்ல இருக்குற கோவத்தை எல்லாம் பின்னூட்டம் போடுறவங்க மேல காட்டுறாங்க(ஒரு வேளை மத்த இடத்துல காட்டினா டின்னு கட்டிடுவாங்களோ? இங்கன்னா திட்டுபுட்டு மன்னிசிகோங்க ஏதோ கோவத்துல திட்டிபுட்டேன்னு ஜல்லி அடிச்சிகலாம், மீறி போனா I am the escapeபுன்னு அழுதுகிட்டே Blogஜ விட்டு பொட்டியை கட்டிட வேண்டியது தான்.). இப்ப Iam the escapeங்கோ....
சந்தோஷத்துடன்,
சந்தோஷ்.
//அவன் அவன் பின்னூட்டம் வாங்கறதுக்கு என்ன என்னமோ செஞ்சிகிட்டு இருக்கான். அனிதா உங்க ஓனர் பண்றது கொஞ்சம் 200 much. அதும் தலையோட பின்னூட்டத்தை வேண்டாமுன்னு சொல்றாங்க. ஹிம்ம்ம்ம்ம்... //
வாங்க சந்தோஷ், உங்க தல பின்னூட்டத்தை வேண்டாம்னு சொல்லல, பின்னூட்டம் எனக்கு அதிகமாக ஆகனும்னு பதிவபற்றி ஒன்றுமே சொல்லாம பின்னூட்டம் வேண்டாம்னு சொன்னேன்..
//யார் மேல என்ன கோவமோ. இப்ப எல்லாம் மக்களுக்கு ஆபிஸ்ல இருக்குற கோவத்தை எல்லாம் பின்னூட்டம் போடுறவங்க மேல காட்டுறாங்க(ஒரு வேளை மத்த இடத்துல காட்டினா டின்னு கட்டிடுவாங்களோ? இங்கன்னா திட்டுபுட்டு மன்னிசிகோங்க ஏதோ கோவத்துல திட்டிபுட்டேன்னு ஜல்லி அடிச்சிகலாம்//
இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போல.. உங்கள யாராவது கோபமா திட்டிட்டாங்களோ.. ?!! :(
என்னை ஒருத்தர் திட்டி இருக்காங்க.. ம்ம்..அதை எல்லாம் அப்ப அப்ப மறந்துடனும் சந்தோஷ் !! :)
//மீறி போனா I am the escapeபுன்னு அழுதுகிட்டே Blogஜ விட்டு பொட்டியை கட்டிட வேண்டியது தான்.)//
ஹலோ என்னங்க இது...இது என்னை Direct ஆ சொல்றமாதிரி இருக்கு.. உங்களுக்கு அவசியம் நான் ப்ளாகை விட்டு ஏன் போனேன்னு சொல்லனும்னா சொல்றேன் .. அதுக்காக இப்படி எல்லாம் அடிக்கடி எல்லாரும் சொல்லிக்காட்டாதீங்க..!! :( அழுகாச்சியா வருது..........
பேட்டி கான்செப்ட் நன்றாக இருக்கிறது. அவசியம் தொடரவும்.
Post a Comment