(பாருங்க..தலைப்ப பார்த்து யாரும் உணர்ச்சி வச படவோ.. பொறாமை படவோ க்கூடாது.. ஒரு அணில் குட்டிக்கு இவ்வளவு ரசிகர்களான்னு.. அதுக்கு எல்லாம் ஒரு இது வேணும் அந்த இது உங்களுக்கு இல்லைன்னு.. அமைதியா அழுகைய நிறுத்திட்டு.. மேட்டர மட்டும் படிங்க.... சரியா.)
ஹாய்ய்ய்ய்ய்ய்ய் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..?!! நான் நல்லா இருக்கேன்.. அம்மணி கவிதா எப்பவும் போல நான் சொல்ற பேச்ச கேட்காம ஓவர் சீன் போட்டு கிட்டு இருக்காங்க.....அவங்கள திருத்த முடியாதுங்க.. எப்படியாவது போகட்டும்னு.. உங்க அன்புக்காக நானே கவிதாவின் எல்லா தடைகளையும் தாண்டி குதிச்சி பெரிய ரிஸ்க் எடுத்து மெஸேஜ் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்...
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மூச் அம்மணிக்கிட்ட யாரும் போட்டு குடுத்துடாதீங்கப்பா.. அம்மணி ஆட்டம் தாங்காது.. சந்தரமுகி கெட்டாங்க... அப்புறம் லக லக லக ன்னு சொல்ல தலைவர என்னால கூப்பிட முடியாது..
சரி மேட்டருக்கு வரேன்.... என்னோட கோடான கோடி ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்க முடியலைங்கோ..... எப்ப திரும்பு வர அனிதா ன்னு போட்டு நச்சரிக்கறாங்க.. தபாலுக்கு பதில் போட்டு கை ஒடஞ்சி போச்சுங்க...... எவிடன்ஸ் க்கூட இருக்கு ப்ளீஸ் படத்தை பாருங்க.. (சரி....சரி...அடங்கு அனித்தூதூஊ..யாரவது இன்னொரு கையையும் ஒடச்சிட போறாங்க..) ..
(ச்சீனு அண்ணே கை ஒடஞ்ச என்னை ஓடியாந்து படம் புடிச்சீங்களே.. உங்க பாசம் யாருக்கும் வராதுங்க..நன்றிங்கோ........சரி..தனியா ஒரு 5 star வாங்கி தந்து உங்கல கவனிக்கறேன்..)
அம்மணி க்கிட்ட எழுத வர சொல்லி..கேட்டு கேட்டு பார்த்தேன்... ம்ம்ம்..எங்க.. அழுத்தமுங்க.. இதைவிட வேற வேல நிறைய இருக்குன்னு ஓவர் சீன்.. அம்மணி சீன் பத்தி புதுசா உங்க யாருக்கும் நான் சொல்ல வேணாம்.. சரி.....
பிளாக்ல எல்லாரும் எப்படி இருக்கீங்க.. ஒரு அப்டேடும் இல்ல... யாருக்கு கல்யாணம் நடந்தது.. யாரு..மூச்சு விட மறந்துட்டாங்க.. எதுவா இருந்தாலும் நமக்கு யாராவது வந்து அப்டேட் பண்ணிட்டு போங்க...
நம்ம தல(கைப்பூ) எப்ப பார்த்தாலும் என்னைய போன் போட்டு விசாரிக்காரு.. அவருக்கு ரொம்ப டாக்ஸ் ங்க.. பாசமுள்ள மனுஷங்க...ம்ம்ம் நாட்டுல இருக்கத்தான் இருக்காங்க.. அம்மணிக்கு எங்க புரியுது..
அப்புறம் அண்ணன் ச்சீ’ ’னு கவிதா அம்மணி எழுத திருப்பி வந்தா கல்லால அடிப்பேன்னு சபதம் போட்டு இருக்காருங்க.....,அண்ணே..என்னையும் உங்க க்கூட சேர்த்துக்கோங்க.. நான் நல்லா பெரிய கல்லா பொறுக்கி தரேன்.. 2 பேருமா சேர்ந்து அம்மணிய அடிப்போம்..... நான் எப்பவுமே கவிதா’ க்கு எதிர்கட்சி தானுங்கோ.. !! நம்புங்கோ...
ஆமா நம்ம பாலா அண்ணனுக்கு சிக்குன் “(கு)கன்னி ’ ஜீரம் வந்து ஒரே அடியா படுத்துட்டாருன்னு கேள்விப்பட்டு மாலையெல்லாம் வாங்கி ரெடியா வச்சா..... என்னத்த சொல்ல.. மாலைக்கு வாங்கின பணம் தான் வேஸ்ட் ஆச்சி.. அம்மணிவேற ஒரு ஆட்டம் போட்டாங்க... என்ன பாலாண்ணே இப்படி.. கால வாரீட்டீங்க..
அப்புறம் ஜொள்ஸ் அண்ணன்.. அணிலு நீ இல்லாம விடியோ கேமரா க்கு வேல இல்லாம இருக்குன்னு... ஒரே புலம்பலுங்கோ........
சரிங்கோ நம்ம புலம்பல்ஸ் ஒரு பாச புலம்பல்ஸ்ங்கோ........... கவிதா எழத வரவரைக்கும்.. இப்படி அப்ப அப்ப வந்து லுக்கு விட்டுட்டு போறேனுங்க.. உங்க எல்லார் லவுஸ்’ க்கும் டாங்ஸ்ங்கோ.. ...நான் இப்ப ஜீட்’ங்கோ..
ஓய்..தாத்தா.. பீட்டர அவத்துவுடு..
பீட்டர் தாத்தா :- Goals must be under our control. We need targets and directions upon which to focus our efforts.
கோடான கோடி ரசிகர்களுக்கு - அணில் குட்டியின் அறிவுப்பு
Posted by : கவிதா | Kavitha
on 16:01
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
38 - பார்வையிட்டவர்கள்:
மீண்டு(ம்) வந்த அனில் குட்டிக்கு ஒரு ஓ போட்டுக்கறேன்..
ரவி அண்ணே..நானும் கூட சேர்ந்து ஓ' போட்டுக்கறேன்..
ச்சீ'னு அண்ணே ஏன் இந்த ரத்தவெறி.. இருந்தாலும் பரவாயில்ல.. ரொம்ப உணர்ச்சிவச படாம.. ஓரமா உட்கார்ந்து.. ரெஸ்ட் எடுங்க.. இது எல்லாம் வாழ்க்கையில சகசம்ப்பா.....
பீட்டர் தாத்தாவும் திரும்பி வந்தமைக்கு மகிழ்ச்சி!
சிபி அண்ணே..கை ஒடஞ்சி வந்து இருக்கேன்.. என்னைய கண்டுக்கவே இல்லையே?!!
//என்னைய கண்டுக்கவே இல்லையே?!!//
சரி! கண்டுக்கறேன்.
கையை வெச்சிகிட்டு சும்மா இருக்காம என்ன பண்ணினே அணில் குட்டி?
ஐ! அணில் கறி ரொம்ப நல்லா இருக்குமே!
//கையை வெச்சிகிட்டு சும்மா இருக்காம என்ன பண்ணினே அணில் குட்டி? //
சிபி அண்ணே நீங்க ரொம்ப மோசம்..பதிவ சரியா படிக்கலையா.. என்னோட கோடான கோடி ரசிகர்களுக்கு பதில் போட்டு போட்டு கை உடஞ்சி போச்சுங்கோ.. நம்புங்கோ..!!
சீனு,
ஏன் இந்த கலவரம்? ஏன் இந்த கொலைவெறி? அவங்க பாட்டுக்கு ஒரு பக்கம் பதிவு போடட்டும்.விட்ருங்க:)))
எத்தனையோ பேர் போடுற குப்பைல நாசமாகாத நாடா அணில்குட்டியால நாசமாகுது?
வாங்க அணில்&கவிதா
//ஐ! அணில் கறி ரொம்ப நல்லா இருக்குமே! //
ஐயோ......!! திருப்பி வந்தது தப்பா போச்சே...!!
அம்மணிக்கிட்ட தான் அடைக்கலமா.?!! என் ரசிகர்களின் அன்பு மழையில் நனையலாம் என்று ஓட்டோடி வந்த என்னை இப்படி ஒழித்து கட்ட துணியும் இந்த ஆவி யாரோ?!!
என் வளர்ச்சியில் பொறாமை கொண்ட..யாரோ செய்ற சதியோ?!! (கவிதாவோட தோஸ்த் தோ?!! )
ஐ! கோவி 65 சாப்பிட்டு போரடிக்குதேன்னு பார்த்தேன்.
இன்னிக்கு அணில் 65 கிடைச்சிருக்கு! நான் அப்படியே சாப்பிடுவேன்!
இன்னிக்கு அணில் 65 கிடைச்சிருக்கு! நான் அப்படியே சாப்பிடுவேன்! //
இதுக்கு தான் கவிதா பிளாக் பக்கம் போவாதன்னு சொன்னாங்களோ.. எல்லாரும் கொலை வெறியோட இல்ல திரியறாங்க.. திருப்பி ஓடவேண்டியது தானா?!!
ஆவி அம்மணி,
நான்தான் முதலில் பார்த்தேன்!
எனக்குத்தான் லெக் பீஸ்!
//நான்தான் முதலில் பார்த்தேன்!
எனக்குத்தான் லெக் பீஸ்! //
அட பாவிகளா.. என்னைய ஒரு வார்த்த க்கூட கேட்கல..நீங்களா முடிவு பண்ணிக்குவீங்களா..
என்ன சின்னபுள்ள தனமா இருக்கு.. ம்ம்..
//அட பாவிகளா.. என்னைய ஒரு வார்த்த க்கூட கேட்கல..//
சிக்கன் 65 சாப்பிடறப்போ சிக்கன் கிட்ட கேட்டுட்டா சாப்பிடறோம்?
இதுதான் சின்ன அணில்தனமா இருக்கு!
//சிக்கன் 65 சாப்பிடறப்போ சிக்கன் கிட்ட கேட்டுட்டா சாப்பிடறோம்?
இதுதான் சின்ன அணில்தனமா இருக்கு! //
அப்ப ஒரு முடிவோட தெளிவாத்தான் இருக்கீங்களோ...அவ்வ்வ்வ்வ்... நானே தான் வந்து மாட்டிகிட்டேனோ..?!!
//அட பாவிகளா.. என்னைய ஒரு வார்த்த க்கூட கேட்கல..//
அட பாவிகளா அல்ல! அட ஆவிகளா என்றுதானே இருக்க வேண்டும்!
படை பல வென்று
தடை பல கடந்து
வடை பல தின்று
நடை பயில வரும்
அனில்குட்டிக்கு
அல்லாரும்
ஒரு ஓ போடுங்க
வா அனிதா.. வா வா..
பாலாவுக்காக மாலை வாங்கி வச்சியா.. அட, நான் மட்டும் தான் கெட் வெல் சூன் கார்டெல்லாம் வாங்கி வீணாப் போனேன்னு நினைச்சேன்.. நீயுமா.. அப்பாடா..!! என்னத்தச் சொல்ல..
சீனு, ஆவி, சிபிக்கெல்லாம் பயப்படாதம்மா.. நான் இருக்கேன் உனக்கு.. உனக்கொண்ணுன்னா விட்டுடுவேனா?!!
//ஏன் இந்த கலவரம்? ஏன் இந்த கொலைவெறி? அவங்க பாட்டுக்கு ஒரு பக்கம் பதிவு போடட்டும்.விட்ருங்க:)))//
"ஆடிய ஆட்டமென்ன. பேசிய வார்த்தை என்ன." (சே! சபையில நம்ம பேச்சு எடுபடாது போல இருக்கே).
//அட பாவிகளா.. என்னைய ஒரு வார்த்த க்கூட கேட்கல..நீங்களா முடிவு பண்ணிக்குவீங்களா..//
ஆட்ட கேட்டுகிட்டா வெட்டுறாங்க. சும்மா குனிய வெச்சு கப்புன்னு வெட்ட வேண்டுயது தான்.
:-((((((((((((
வாம்மா அணிலு,
பாத்து இருந்துக்கோ கவிதா கொஞ்சம் டேஞ்சரான பார்ட்டி ஏற்கனவே சின்ன வயசுல எந்த ஆயுதமும் இல்லாம ஒரு அணிலை கொன்னு இருக்காங்க பாத்துக்கோ.
//கவுண்டமணி படத்துல ஓமகுச்சி சொன்னது தான் நியாபகத்துக்கு வருது. "இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்".//
ரிபீட்டூ..
I like ur writings Anilkuddy.Im new here.
anilkuddy..Im new here. I like ur writings.
//நம்ம தல(கைப்பூ) எப்ப பார்த்தாலும் என்னைய போன் போட்டு விசாரிக்காரு.. அவருக்கு ரொம்ப டாக்ஸ் ங்க.. பாசமுள்ள மனுஷங்க...//
என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டியேம்மா...நல்லாரும்மா. அனிதா பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழனும்மா நீயு.
சிவகுமார் சார் கவிதை என்னமோ நல்லாத்தான் இருக்கு, ஆனா..பாருங்க நம்ம உடம்ப 2 பா(ஆ)விங்க தனி தனியா கழட்டி “படை” யல் போட ரெடியா இருக்கும் போது.. எங்க “படை பல வென்று.... “..ம்ம் பார்க்கலாம் உயிரோட இருந்தா..
பொன்’ஸ்க்கா வந்துட்டீங்களாக்கா?!! நீங்க இல்லாம தான் இங்க எல்லாரும் என்னைய அக்கு வேறா கழிட்டிக்கிட்டு இருக்காங்க.. ஆவிங்க முகத்த பார்த்தாவே அல்லுவிடுது..... நீங்க பக்கதுல இருக்கும் போது ஒரு 10 “யானை” பலம் வந்த மாதிரி இருக்குக்கா... ரெம்ப டாங்ஸ்க்கா.. இனிமே பயப்பட மாட்டேன்க்கா..
என்ன புலி அண்ணே..smile face போட்டுட்டு போய்டீங்க.. நக்கலா சந்தோஷமான்னு ஒன்னியும் புரியல.. சரி..ஆனா கவிதாவுக்கு..புரியும்…….
முத்து & வைசா அவர்களுக்கு நம்மோட நன்றி.ங்கோ...!
அப்புறம் புதுசா வந்து இருக்கற சூர்யகுமார் அண்ணாச்சிக்கு ஒரு பெரிய வணக்கமுங்க.. நம்ம அருமை பெருமை எல்லாம் தெரிஞ்சி வந்து இருக்கீங்க.. ஒரு விஷயம் காத குடுங்க.... நீங்க போகும் போது, பீட்டர் தாத்தா க்கிட்ட கொஞ்சம் என்னோட பேருக்கு English spelling . கேட்டிக்கிட்டு போங்க.. ம்ம்.. இதோடா.. தாத்தா.. ஒடனே.. வாயதிறக்க மாட்டேன்னு.. சைகை காட்டாறாரு.. சரி நானே சொல்றேன்.. நானு..Anil Kuddy இல்லைங்கோ.. Anil Kutty - கரெக்ட் பண்ணிங்கோங்க.. next time any doubt plz check with me.. ok..
(அனித்து...அடங்கு....அவரு பெரிய நாவலை கொண்டாந்து அர்த்தம் கேக்க போறாரு.. அப்புறம்..நீ துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடனும்.. அடக்கி வாசி.....) ஹி..ஹி.ஹி...... எனக்கு டயம் இருந்தா.. சொல்றேன்.. (escapeeeee!!!!! )......
ஊர்காரங்க ஒன்னா சேர்ந்துட்டாங்கப்பா.. சரி 2 பேரும் சேர்ந்து கவிதாவ பிச்ச எடுக்கலாம் பிச்ச எடுக்கலாம்னு சொல்றீங்களே.. கவிதா இதுவரைக்கும் எடுத்த பிச்சையில எத்தனை % உங்களுக்கு கமிஷன் கொடுத்து இருக்காங்கன்னு.. வெளியில சொல்ல மாட்டேங்கறீங்க.. ஒருத்தர் டாலர் ல சம்பளம் வாங்கறாரு.. ஆனா.. கேவலம்........ சென்னையில ஒரு அம்மணிய பிச்ச எடுக்க சொல்லி அதுல வர கமிஷனல்ல கார் வாங்கனும்னு.. இருக்காருன்னா பாருங்க..
உள்ளுக்குள்ள இவ்வளவு விஷயம் நடக்குதுன்னு உங்க யாருக்காவது தெரியுமா..ம்ம் கவிதா நேத்து ராத்திரி அதுங்க 2 பேர பத்தியும் கத கதயா சொன்னாங்கப்பா..
Latest news - கவிதாவை பிச்சை எடுக்க வைத்த பிச்சைக்கார நண்பர்கள் ச்சீனு & சந்தோஷ் ஷை தனி மெயில் மூலம் தனியாக கவனிப்பதாக..-- கவிதா ஆவேசம்
//என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டியேம்மா...நல்லாரும்மா. அனிதா பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழனும்மா நீயு.//
ரெம்ப நன்றி தல.. (ஆன.. கவிதா காதுல...பொக.... )
அனி(ல்)க்குட்டி,
திரும்ப வந்ததுக்கு வாழ்துக்கள்.
அந்த லொள்ளு இன்னும் குறையலை போல.
கவிதாக்கா, அனிலை கொஞ்சம் கவனிங்க.
விழிப்பு
//அந்த லொள்ளு இன்னும்
குறையலை போல. //
விழிப்பண்ணே கூட பொறந்தது எப்படிங்க குறையும், அதுவுமில்லாம கவிதா மாதிரி ஆளுங்க கிட்ட வேல செய்யும் போது.. கொஞ்சம் இப்படி இருந்தாத்தேன் பொழப்பு நடக்கும்..!
//சீனு, ஆவி, சிபிக்கெல்லாம் பயப்படாதம்மா.. நான் இருக்கேன் உனக்கு.. //
யாரது?
HREF="http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/08/blog_12.
html">Blog & தமிழ்மணம் விட்டு போகிறோம் - கவிதா &
அணில்குட்டி-ல் "கவிதா,
உங்களை நம்பி ஒரு போஸ்ட் போட்டுட்டேன்.. மறுபரிசீலனை எல்லாம் வேண்டாம் :)
" அப்படீன்னும் "மீண்டும் எழுத வந்தால் உங்களுக்கு
நல்லது. வராவிட்டால் எங்களுக்கு நல்லது. :)" அப்படீன்னும் வழிமொழிஞ்சு கமென்ட் போட்ட பொன்ஸ்-ஆ? நான் யாரோன்னு நினைச்சுட்டேன்.
//உனக்கொண்ணுன்னா விட்டுடுவேனா?!!//
ஏதோ உள்குத்து போல தெரியுது. கவிதா ஜாக்கிரதை.
//கவிதா இதுவரைக்கும் எடுத்த பிச்சையில எத்தனை % உங்களுக்கு கமிஷன் கொடுத்து இருக்காங்கன்னு.. வெளியில சொல்ல மாட்டேங்கறீங்க..//
நாங்க கேவலமா இருந்தாலும் இருப்போம் (பிச்சையில கமிஷன்), ஆனா படு கேவலமா இருக்கமாட்டோம் (கவிதாகிட்ட பிச்சையில கமிஷன்).
//நாங்க கேவலமா இருந்தாலும் இருப்போம் (பிச்சையில கமிஷன்), ஆனா படு கேவலமா இருக்கமாட்டோம் (கவிதாகிட்ட பிச்சையில கமிஷன்). //
என்ன ச்சீனுண்ணே, அப்ப பிச்சை எடுக்கறோம்னு நீங்களே ஒத்துக்கறீங்க.., மத்தவங்க இனிமே சரியா புரிஞ்சிக்குவாங்க.. கேவலமா படு கேவலமான்னு... நீங்க க்கூட பரவாயில்ல, ஒருத்தர் டாலர் ல சம்பளம் வாங்கிட்டு படு கேவலமான வேல செய்யறார் பாருங்க.. அது.... வேணா.. சொன்னா நல்லா இருக்காது.. படூஊஊஊஊஊஊ கேவலமா இருக்கும்
ஆனாலும்.. கவிதையாவை பிச்சை எடுக்க வைத்த திருப்பதூர் சிங்கங்கள் வாழ்க.. அதில் அசிங்கமாக கமிஷன் அடிக்கும் அசிங்கங்களும் வாழ்க..
அது சரி.... பொன்ஸ் அக்காக்கூட ஏதாவது பிரச்சனையா ச்சீனு அண்ணே..ஏதோ வம்புக்கு அவங்கள எங்களோட (அமைதிக்கு பெயர் வாங்கின) பதிவுல இழுக்கற மாதிரி இருக்குது..
over to Pons Akkaa........
எப்போ வந்தீங்க? இப்போ தான் கைப்புள்ள பதிவிலே உங்க பின்னூட்டத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். நல்வரவு.
welcome
இங்க கோகோ - ந்ன்னு ஒரு ஜீவன் வந்துச்சுங்களா... அணில்குட்டி வந்த சந்தோஷத்துல ஆளயே கானோமுங்க...
வாங்க கவிதாக்கா வாங்க செகன்ட் இன்னிங்க்ஸ்-ல அடிச்சு ஆடுங்க
வாங்க கோகோ அண்ணே, கவிதா அதுக்கு அப்புறம் 2 பதிவு போட்டுடாங்களே..பார்க்கலயா..நீங்க..
வாங்க ராசுக்குட்டி அண்ணே.. கவிதாவ மட்டும் கலக்க சொல்றது நல்லது இல்ல..சொல்லிப்புட்டேன்..
Post a Comment