வாங்க.....வாங்க... 19ந்தேதி பதிவர் மீட்டிங் நடந்தாலும் நடந்தது.. தாங்கலடா சாமி.. ஆளுக்கு ஆளு பதிவு ப்போட்டு தாக்கறாங்க.. கவிதா மீட்டிங்ல கலந்துக்கலன்னு எல்லார்க்கும் தெரியும்.. ஆனா.. நான் கலந்துக்கிட்டேன்..அது யாருக்குமே தெரியாது.. யாரோட கேமராவிலும் சிக்காம நாங்க அங்கன இல்ல இருந்தோம்.... இட்லி வடை கிட்ட இருந்து க்கூட எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல..
சரி ..மேட்டருக்கு வரேன்..... இந்த கூட்டத்துல.. 2 பேருங்க.. ஒருத்தர் எல்லாருக்கும் அருள வழங்குவாரு....... இன்னொருத்தர்.. இந்த டீ.. காப்பியில எல்லாம் கலக்குவாங்களே.. அந்த சீனி..சக்கர...ங்க.. இந்த 2 பேரும் மீட்டிங்குக்கு போறோம்.. கான்டிரிபியூட் வேற பண்றோம்னு ப்ளான் போட்டு.. மதியம் சாப்பிடாம வெறும் வயத்தோட வந்திருந்தாங்க..... சின்ன புள்ள தனமா ஏன்னு மட்டும் யாரும் கேட்கப்படாது.....ஆமா சொல்லிட்டேன்..!! அவங்களுக்கு என்னான்னா.. ஒரு போண்டா..ஒரு வடை..இப்படி ஏதாவது கெடைக்கும் ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தாங்க.. ஆனா கெடச்சது என்னவோ........ டீ..யும்.. மேரி ‘யும்..சாரி.......சாரி.......மாரி பிஸ்கட்டும் தான்..
எல்லாரும் டீ 2 ரவுண்டு குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருக்கற சமயமா ப்பார்த்து, யாருக்கும் தெரியாம இவங்க 2 பேரும் உள்ள போய் 15-20 பேர் குடிக்க இருந்த மிச்சமான டீ ய (முன்ன பின்ன டீ யே பார்க்காத ரேஞ்சுக்கு) மொடக்கு மொடக்கு ன்னு குடுச்சி காலி பண்ணிட்டாங்க.. உஸ்... அப்பாடா............ மதியம் சாப்பாடு கட், அண்ட் நைட் டின்னரும் சாப்பிட முடியாத ரேஞ்சுக்கும் 2 பேரும் ஒரு கட்டு கட்டிட்டு போய்ட்டாங்கப்பா.. ஹி ஹி,,
ஹி ஹி,,..இது எப்படி எனக்கு தெரியும்னு பார்க்கறீங்களா?.. ஹி...ஹி.. இப்படியெல்லாம் நீங்க கேட்டா எனக்கு வெக்கமா இருக்கு இல்ல.... இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் அப்படி தூக்கி ஓரமா கெடாசிட்டு..சொல்றேன்.. “நானும் அவங்களுக்கு கம்பனி கொடுத்தேன் இல்ல....”
Well, I can show those nice snaps to you all.. but.. you know they will catch me and odachify my hand again.. so.. better..escapeeeeeeee............
குறிப்பு:- அண்ணன் பாலா..அவர்களே...... நற நற வென பல்லை கடிக்காதீங்க.. நீங்க மைலாப்பூர் ல கடிக்கறது மாம்பலத்துல கேட்குது.. அக்கா பொன்'ஸ் அவர்களே.. கோவப்பட்டு பொங்காதீங்க.. பொங்கி யானைய என் மேல உருட்டிடாதீங்க.... நான் ரொம்ப பாவமுங்க........ உங்களுக்கு தெரியாம நடந்த ஒரு விஷயங்கோ இது.. .. தெரிஞ்சிக்கிட்டும்னு சொல்லிடேங்க..சின்ன ஜீவன் என்னை எதுவும் செஞ்சிடாதீங்க.. நான்னா உங்க எல்லாருக்கும் செல்லம் தானே.. :) :) ஹிஹி.... ரொம்ப பிடிக்கும் தானே.. அதுவும் பொன்ஸ் அக்கா' க்கு நான்னா.. உசுரு எனக்கு அப்பவே தெரியும்..........!! :)
(அணித்து போதும் பிள்டப்பு அடங்கு)....
டீ எத்தனை என்ற தகவல் சொன்ன டீ சப்பளையர் வாழ்க....!! வாழ்க..!! வாழ்க !!
வலைபதிவர் மீட்டிங்- இதுவரை வெளிவராத தகவல்
Posted by : கவிதா | Kavitha
on 14:54
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
12 - பார்வையிட்டவர்கள்:
கவிதா நீங்களுமா ????? சமையல் குறிப்பெதுவும் கைவசம் இல்லையா ?
ரவி..நல்லா பாருங்க.. பதிவை எழுதினது கவிதா இல்லை - அணிலு... வம்புக்கு போகாதேன்னு சொன்னா கேட்குதா அது...
கவிதா,
அணில் சூப் செய்வது எப்படி? ன்னு
படத்தொட எழுதுங்களேன்.
வாங்க ஆவி அண்ணாச்சி, நிச்சயம் போடத்தான் போறேன்..ஆனா சூப்பாவே போட்டு கொடுத்தடறேன்..நீங்க குடிங்க. .எதுக்கு..நான் எழுதி...அதை நீங்க செயது குடிக்கணும்.. ரெடிமேட்'டா கூடிய சீக்கிரம் கிடைக்கும்..ஏன்னா அணிலு சொன்ன பேச்சு கேட்கவே மாட்டேங்குது.......
:-)
அணீல் நீ ஒன்னும் கவலப்படாதே! கவிதாவில் காதைக்கடிப்பது எப்படி?னு நாம அடுத்த ஒரு பதிவு போட்டுடலாம்!
கவிதாவிடம் சொல்லிடு" இது பனங்காட்டு அணீல் உங்களின் சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாதுனு"
(கவனிக்க: ஸ்மைலி எதுவும் போடவில்லை)
அன்புடன்...
சரவணன்.
இப்படி வேற நடந்துச்சா.. அடப் பாவி.. நட்சத்திரப் பதிவர்ங்கிறதுனால போனாப் போகுதுன்னு அருளை மன்னிச்சி விட்ருவோம்..
இப்படி இருக்கிற டீயக் குடிச்சிட்டு, வர லேட்டாகுதுன்னு வெளிய போய் சீன் போட்ட சீனுவைத்தான்.. என்ன பண்ணலாம்னு முடிவு செய்ய மக்கள்ஸ், இன்னுமொரு வலைபதிவர் சந்திப்பு போட்ருவோமா? ;)
//அணீல் நீ ஒன்னும் கவலப்படாதே! //
வாங்க சரவணன் அண்ணாச்சி, இப்படி நீங்க எல்லாரும் சப்போர்ட் பண்றதாலத்தான் நம்ம பொழப்பு கவிதாக்கிட்ட பிரச்சன இல்லாம ஓடுது..!!
//கவிதாவின் காதைக்கடிப்பது எப்படி?னு நாம அடுத்த ஒரு பதிவு போட்டுடலாம்!//
ச்ச்சொல்லித்த்தர வேணாம்..நாம்..அப்படியே..க்கடிச்சிப்பேன்.. ஹாஅ..... :)
//நட்சத்திரப் பதிவர்ங்கிறதுனால போனாப் போகுதுன்னு அருளை மன்னிச்சி விட்ருவோம்.. //
அடாடா..பத்தவச்சப்பிறகும்.. எஸ்கேப்ப் ஆயிட்டாறா.... யக்கா..வேணுன்னா..நட்சத்திரம் கீழ வந்தவுடனே..கவனிக்கறீங்களா?!!
//இப்படி இருக்கிற டீயக் குடிச்சிட்டு, வர லேட்டாகுதுன்னு வெளிய போய் சீன் போட்ட சீனுவைத்தான்.//
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா.. பதிவுப்போட்ட வேல முடிஞ்சிதடா சாமி.. ச்சீனு..அண்ணாச்சிக்கு.. அப்ப.. டின்னு ரெடியா இருக்கா.. wow! it is a great news to Anil... !! Thx akka...
ஹூம்...ராஜ காரியங்களை ஒட்டுக் கேட்பதே தவறு. இதில் தமிழ்மணம் முன் டமாரம் வேறையா? யாரங்கே! யாரடா அங்கே!! அணில் குட்டியை பிடித்து வாலை ஒட்ட நறுக்கி சுண்டெலியாக்குங்கள்...
ஒரு பகல் இணையத்தில் இல்லைன்னா இப்படியா???
//இப்படி வேற நடந்துச்சா.. அடப் பாவி.. நட்சத்திரப் பதிவர்ங்கிறதுனால போனாப் போகுதுன்னு அருளை மன்னிச்சி விட்ருவோம்..//
பார்றா...
//இன்னுமொரு வலைபதிவர் சந்திப்பு போட்ருவோமா? ;)//
மறுபடியும் பார்றா...
//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா.. பதிவுப்போட்ட வேல முடிஞ்சிதடா சாமி.. ச்சீனு..அண்ணாச்சிக்கு.. அப்ப.. டின்னு ரெடியா இருக்கா..//
ஹலோ...சண்ட முன்ன பின்ன இருந்தாலும், சவுண்டு ஜாஸ்தியா இருக்கும்.
//ஆனா.. நான் கலந்துக்கிட்டேன்..அது யாருக்குமே தெரியாது.. யாரோட கேமராவிலும் சிக்காம நாங்க அங்கன இல்ல இருந்தோம்.... இட்லி வடை கிட்ட இருந்து க்கூட எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல..//
அந்த திருட்டு அணில் குட்டி இட்லி வடைக்கு வேண்டுமானால் எஸ்கேப் ஆயிருக்கலாம், ஆனா எங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆக முடியாது...
கொஞ்சம் பொற்காசுகளை கொடுத்தவுடன் அதை லஞ்சமாக வாங்கும் பொழுது, அணில்குட்டி கையும் களவுமாக பிடிபட்டது...எங்கள் விஷேட CCTV காமெராவில் இந்த காட்சி தெள்ளத் தெளிவாக தெரிகிறது. காமெராவைப் பார்த்தவுடன் "இஞ்சி தின்ற குரங்கு" போல முழிக்கும் முழியைப் இங்கே பாருங்கள்...
http://www.geocities.com/haiseenu2000/Blogspot/military-squirrel.jpg
//டீ எத்தனை என்ற தகவல் சொன்ன டீ சப்பளையர் வாழ்க....!! வாழ்க..!! வாழ்க !!//
(பாரதிராஜா ஸ்டைலில் படிக்கவும்) "ஹூ இஸ் தட் ஃபிளாக் ஷீப்???"
//எங்கள் விஷேட CCTV காமெராவில் இந்த காட்சி தெள்ளத் தெளிவாக தெரிகிறது. காமெராவைப் பார்த்தவுடன் "இஞ்சி தின்ற குரங்கு" போல முழிக்கும் முழியைப் இங்கே பாருங்கள்...//
ச்சீனு அண்ணே வேல வெட்டியெல்லாம் வுட்டுபுட்டு என் பின்னாடியே சுத்துவீங்களோ... ஆனா ரொம்ப டாக்ஸ் அண்ணே இந்த படத்துல நான் ரொம்ப அழேகா இருக்கேன்.... ! :)
//"ஹூ இஸ் தட் ஃபிளாக் ஷீப்???" //
அவசியம் நீங்க தெரிஞ்சிக்கனும்னு ஆச பட்டீங்கன்னா.. ஒரு Red wine bottle ஓட நேரல ஒரு தபா வந்தீங்கன்னா.... சொல்றேன்.
Post a Comment