எங்களுடைய அலுவலக செக்யூரிட்டி சில நேரங்களில் பொழுது போகாமல் இருக்கும் போது பேப்பர் பேணா வைத்துக்கொண்டு கோலம் போடுவதை பார்த்திருக்கிறேன். அவரின் திறமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மிக நேர்த்தியாக, தெளிவாக, அழகாக போடுகிறார். அவரை பாராட்டி, அவரிடம் எங்களது வீட்டில் வாங்கும் பெண்கள் பத்திரிக்கையை கொண்டுவந்து கோல ப்போட்டி இருக்கு முயற்சி செய்து பாருங்கள் என்று கொடுத்தேன். இது பழக்கமாகி, 2 புத்தகங்கள் நான் கொடுப்பேன், படித்துவிட்டு அவர் திரும்ப கொடுத்தவுடன் திரும்பவும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன்.
நேற்று அவரிடம் உங்கள் மனைவி க்கூட இதை படிக்கிறார்களா? என்று கேட்டதற்கு.. தயக்கத்தோடு “இல்லைங்க” என்று சிரித்து சென்றவர், திரும்பி வந்து, மேடம், என் மனைவிக்கு இந்த புத்தங்களை நான் படிக்க கொடுக்கவில்லை என்பதே உண்மை, ஏன்னா இந்த மாதிரி புத்தகங்கள் படித்தால் என்னை அவர் மதிக்காமல் போய் விடுவார், பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பிப்பார் அதனால் படிக்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன் என்றார்.
ஒரு பெண் புத்தகங்கள் படிப்பதின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வது மட்டும் இல்லை, அதையும் தாண்டி, தன்னால் தனியாக இருக்க முடியும், ஆணை விட தான் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை, இருவரும் சமம் போன்ற சிந்தனையும் கூடவே வளர்ந்துவிடுகிறது. அதில் என்ன தவறு என்று விதண்டாவாதம் செய்ய தயாராக இல்லை, மேலும் ஆணும் பெண்ணும் எந்த சமயத்திலும் சரிசமமாக இருக்க வாய்பில்லை. இது அறிவியல் சார்ந்த உண்மை. :)
அவருடைய சொந்த வாழ்க்கை, தன் மனைவி எப்படி இருந்தால் தன் வாழ்க்கைக்கும் தன் குழந்தைகள் வாழ்க்கைக்கும் நல்லது என்பதில் தெளிவாக இருக்கிறார், இது ஆணாதிக்கம் என நினைப்பவர்கள் நினைத்துக்கொண்டு போகட்டுமே, அதனால் அவருக்கும் என்ன நஷ்டம் அல்லது லாபம் இருந்துவிட போகிறது. எனக்கு அவர் சொல்லியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆணும் தன் குடும்பம் அமைதியாக இருப்பது தன் மனைவியின் கையில் இருக்கிறது என்று நினைக்கிறார்காள், தன் மேல் இல்லாத ஒரு நம்பிக்கை தன் மனைவி மேல் வைத்திருக்கிறார்கள் என்பது பெண்களுக்கு பெருமை தானே.. நம்முடைய சென்னை விவாகரத்து நீதிமன்றத்தில் ஒரு வருடத்தில் திருமணமுறிவுக்காக 2000 வழக்குகள் வந்துள்ளன. அதிலும் எல்லாமே காதல் திருமணம் மட்டுமன்றி, அவை திருமணம் ஆன 6 மாதங்களுக்குள் கொடுக்கப்பட்ட வழக்ககுகள் என்பது ஆச்சரியமான அதிர்ச்சியான விஷயம். பெண்கள் இழந்தும், மறந்தும் வருவன
- ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளதல்
- விட்டுகொடுத்தலை மறந்துபோனது
- பொறுமையின்மை
- அதிகமான படிப்பும் அதனால் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் விதமும்
- ஆணுக்கு நிகரான வருமானம் அதனால் ஏற்படும் கர்வம்
- ஆணுக்கு நிகர் பெண் என்ற தேவையில்லாத சிந்தனை
- தங்களுது வாழ்க்கையை படிப்போடும், பணத்தோடும் ஒப்பிடும் சிந்தனை.
- தனது சம்பாத்தியம் தனக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கை.
- வளர்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம்
- கலாச்சார மாற்றங்களினால் தங்களின் நிலை மறந்த சிந்தனை.
பெண்கள் புரிதலில் தவறு செய்கிறார்கள், ஒரு பெண் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நம் பாட்டி, அம்மா எதை சாதிக்கவில்லை நாம் சாதிக்காமல் போக.?. நல்ல குடும்பத்தை அவர்களால் கொடுக்க முடிந்தது, நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க முடிந்தது.அவர்கள் வேலைக்கு செல்லவில்லை பொருள் ஈட்டவில்லை தவிர, ஏதாவது குறை வைத்தார்களா?. வெளி உலகமே தெரியாதவர்கள், ஆனால் வீட்டின் நிம்மதி கெட்டுபோனதா? இல்லையே..! இப்போது நம்மால் நம் பிள்ளைகளை சரியாக வளர்க்க முடிகிறதா?. வேலைக்கு செல்கிறோம் என்பதால் என்ன தலையில் 2 கொம்பு முளைத்து விடுகிறதா ?. பொருள் ஈட்டுகிறோம் என்பதால் என்ன நமக்கு வால் முளைத்து விடுகிறதா? இல்லையே.. வீடு மற்றும் வேலையை சரிவர செய்யமுடியாமையை இயலாமை என்று எடுத்து கொள்ளவேண்டுமே தவிர ஆண்களின் மேல் குறை சொல்லுவதும், பெண் உரிமை பேசி நம் வாழ்க்கையை நாமே கெடுத்து கொள்வதும் தான் நடக்கிறது.
பெண்கள் வளர்ப்பு முறையில் பெரும் பங்கு எடுப்பது பெற்றோர். சிறு குழந்தையிலிருந்தே நம் குடும்ப அமைப்பையும் அதன் பலத்தையும் சொல்லி சொல்லி ஆண், பெண் இருவரையுமே வளர்க்கவேண்டும். ஒரு பெண்ணால் மட்டுமே நல்ல குடும்பத்தை ஆக்கவும் முடியம் அழிக்கவும் முடியம். நம்முடை படிப்பும், வேலையும் நம்மின் பொறுமையையும் நிதானத்தையும் அதிக படுத்த வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. என்னுடைய ஆண்களின் நிழலில் பதிவில் சொன்னது போன்று ஒரு சிறிய குடும்பத்தை, கணவனை கட்டிக்காக்க முடியாத ஒரு பெண்ணால் எப்படி வெளி உலகத்தில் சாதிக்க முடியம். அப்படி அவர்கள் எதையாவது சாதித்தால் அது சாதனையாகாது. குடும்பம் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லவில்லை ஆனால் குடும்ப அமைப்பை முறிப்பது பெண்கள் கையில் அதிகமாகிவருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் படிப்பும் , சம்பாதியமும் என்றால் அதை சரியான முறையில் செயற்படுத்த பெண்கள் முயற்சிக்க வேண்டும்.
அதிக படிப்பினாலும், அதிக சம்பளத்தாலும் பெண்கள் அவர்களின் இயல்பையும் அவர்களின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருவது என்னவோ உண்மை, உணர்வார்களா?!!
அணில் குட்டி அனிதா:- அடடடடாடாடா டா?!! உபதேசம் ஆரம்பிச்சாச்சிடோய்..! நாட்டுல 2 மாசம் எல்லாரும் நிம்மதியா இருந்து இருப்பாங்க.. அம்மணி. “கஜினி “ சூர்யா ரேஞ்சுக்கு அவங்கல பத்தி மறந்து......ஸ்டார்ட் பண்ணிட்டாங்கடோய்... இவங்களே வூட்டல யாருக்கும் அடங்கறது இல்ல..வேலைக்கு போற திமுரு மட்டுமா... சம்பாதிக்கறோம்னு திமுறுல.. அவங்க ஆடற ஆட்டத்த நாங்க இல்ல தினமும் பாக்கறோம். பாவம்ப்பா அவங்க வூட்டுகாரரும், பையனும், இந்த அம்மணிக்கிட்ட ஒன்னும் முடியாம ......”why blood...! same blood..!, you start..... we close nnu” கம் போட்டு ஒட்ட வச்ச மாதிரி வாய தொறக்கறதே இல்ல. பாவம் ரொம்ப நல்லவங்க..... அம்மணி உண்மைக்கு எதிரா எழுதறத தாங்கமுடியாம புலம்பறேங்க.. நீங்களும் என்கூட join பண்ணிக்கறீங்களா?..
தாத்ஸ் நீங்க பீட்டர எடுத்து..சொல்லுங்க...........
பீட்டர் தாத்ஸ் :-
- Success doesn’t come to you, you go to it.
- In the middle of difficulty lies opportunity.
37 - பார்வையிட்டவர்கள்:
///தன் மேல் இல்லாத ஒரு நம்பிக்கை தன் மனைவி மேல் வைத்திருக்கிறான் என்பது பெண்களுக்கு பெருமை தானே. //
//ஏன்னா இந்த மாதிரி புத்தகங்கள் படித்தால் என்னை அவர் மதிக்காமல் போய் விடுவார், பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பிப்பார் அதனால் படிக்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்//
சான்ஸே இல்லை.. மனைவி மீது எத்தனை நம்பிக்கை!.. எவ்வளவு பாசம்! ரொம்ப கஷ்டம்.. நான் அவருடைய மதிப்பு கொடுக்கும் சிந்தனைக்கு வாழ்த்துச் சொன்னேன்னு சொல்லிடுங்க...
அத்தனையும் நிஜம் கவிதா.....
நன்றி, பொன்'ஸ், நிச்சயம் சொல்கிறேன். அவரின் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லவும், செயற்படுத்தவும் நிச்சயம் அவருக்கு உரிமையுள்ளது :)
நன்றி பங்காளி :)
வாங்க கவிதாக்கா,
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க!
அனிக்குட்டியோட லொள்ளு பார்தீங்களா?
வாங்க விழிப்பு, அணில் அடங்காது..என்ன செய்யறது... !! :(
நல்லா சொல்லி இருக்கீங்க..புரிந்துகொள்ளவேண்டாம் என்று நினைத்து உங்கள் பதிவை படிப்பவர்களுக்கு ஒன்றும் ஏறாது..பின்னூட்டத்தில் இருந்தே தெரியவில்லையா...
இந்த பதிவை கண்டிப்பாக என் தோழிகளுக்கு சிபாரிசு செய்யவேண்டும்..
//இந்த பதிவை கண்டிப்பாக என் தோழிகளுக்கு சிபாரிசு செய்யவேண்டும்//
நன்றி ரவி
உங்கள் பதிவு இன்றைய இளைஞர்களின் dilemmaஆவை பிரதிபலிக்கிறது. மனமாற்றங்கள் முழுதும் ஏற்படாதவரை இந்த தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும். அடக்கப்பட்டிருந்த சமூக அங்கம் விடுதலை பெறும்போது சற்று தலைகால் புரியாமல் இருப்பது இயல்பே. இயற்பியலில் Simple harmonic motion போல சில ஏற்றத்தாழ்வுகளுக்குப் பிறகே சமநிலை அடையும். அதனால் பெண்ணடிமைத்தனம் தான் சிறந்தது என்பது பிற்போக்கு வாதம்.
குடும்ப வாழ்வின் சிறப்புகளைப் பற்றியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிதலுடன் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் இருபாலாருக்கும் எடுத்துச் சொல்வது பெற்றோரின் கடமையாகும். சக்தி பெரிதா சிவன் பெரிதா என சண்டை போட்டுக் கொண்டிராமல் இணைந்து வாழவேண்டும் என்று எடுத்துச் சொல்ல புராணக்கதைகள் பயன்படும்.
கவிதா, ஒரு சின்ன டெஸ்ட், அந்த ஆளுக்கு பெண் இருக்கா என்றுக் கேட்டு, என்ன படிக்குது என்று ஆரம்பியுங்களேன்.
முகமெல்லாம் பல்ப் எரிய, ரொம்ப நல்லா படிக்குது, அவங்க அம்மா மாதிரி இல்லே நல்ல தைரியசாலி, டாக்ட்ர்/ கம்ப்யூட்டர்
இன்ஜினியர் ஆக்குவது என் வாழ்வின் லட்சியம் என்பார் பாருங்க.
படிச்ச பசங்களே இப்படிதான் பேசுங்க என்ன சொல்ல, பயம் தாங்க காரணம்.
அனி, வாய் ரொம்ப நீளுது பார்த்து, கவிதாவ பத்தி தெரியுமில்லே, ஜாக்கிரதை :-)
//உங்கள் பதிவு இன்றைய இளைஞர்களின் dilemmaஆவை பிரதிபலிக்கிறது. //
நன்றி மணியன், எடுத்து சொன்னது dilemma பற்றி இல்லை, பெண்களின் படிப்பும், வேலையும் அவர்களின் மனதை எப்படி கொண்டு செல்கிறது என்பதை தான்.. வேலைக்கு செல்லும் பெண்களின் சிந்தனை எப்படியுள்ளது என்பதை சொல்லியிருக்கிறேன். உங்கள் கருத்துக்கும் நன்றி
வாங்க உஷா மேடம், எப்படி இருக்கீங்க?. நீங்க சொன்னது சரியே..அப்பாக்கள் மனைவியிடம் எதிர்ப்பார்ப்பது தன் மகளிடம் இல்லை. மகளுக்கு அதிக சலுகைகள் கொடுப்பார்கள்.
சொல்லியுள்ள விஷயம், நம் படிப்பும், நாம் பார்க்கும் வேலையும் நன் குடும்ப முறையை கலைக்கக்கூடாது. அந்த திறமையை ஒவ்வொரு பெண்ணும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கிட்டத் தட்ட இதே மாதிரியான ஒரு சிந்தனைதான் எனக்கும் வந்தது. சொல்லப் பட்ட முறைதான் வேறே. மத்தபடி உங்க கருத்துக்களோட நான் ஒத்துப் போறேன். ஆனால் புத்தகம் படிக்கிறதுக்குக் கூடக் கணவன் அனுமதிக்கணும்கிறதும், அதனால் மனைவி மாறிடுவாள்னு அவர் நினைக்கறதும் சரியில்லை. இது ஒரு அடக்கி ஆளும் தன்மைனு நினைக்கிறேன். மற்றபடி மகள் என்றால் வளர்ப்பு விதம் மாறத் தான் செய்யும். மனைவி வேறே, மகள் வேறேதான். இந்த வித்தியாசம் நிறையப் பேருக்குத் தெரியவும் மாட்டேங்குது. அவர் அவராய் இருந்தாலே அவர் மனைவி அவளாய் இருப்பாள். அதை முதலில் அவர் கிட்டே சொல்லுங்க. . என் சிந்தனையும், உங்க சிந்தனையும் ஒத்திருக்குன்னு கைப்புள்ள சொன்னார். அதான் வந்து பார்த்தேன். உங்க நோக்கம் தெளிவாய் இருக்கு. வாழ்த்துக்கள்.
கீதாஜி, நன்றி, நானும் உங்க பதிவை படித்தேன். நீங்கள் சொல்லிய கருத்தும் உண்மை மற்றும் நாம் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டியவை. மேலும்
//ஆனால் புத்தகம் படிக்கிறதுக்குக் கூடக் கணவன் அனுமதிக்கணும்கிறதும், அதனால் மனைவி மாறிடுவாள்னு அவர் நினைக்கறதும் சரியில்லை. இது ஒரு அடக்கி ஆளும் தன்மைனு நினைக்கிறேன். //
இந்த கருத்துக்கு அவருடன் நான் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. காரணம், அவருடைய படிப்புக்கும், அறிவுக்கும் அவர் பேசுவது சரி, அவரின் கோணத்தில அது சரி, அவரை என் பேச்சாலோ எழுத்தாலோ சரி செய்ய முடியும் என்று தோன்றவில்லை. காரணம் படித்தநாமே சரியாக பலவற்றை சிந்திப்பதில்லை, அவரின் பேச்சு மிக சுயநலமானது, அதுவும் அவரின் குடும்ப நன்மை கருதி அவர் அதை செய்வதாக நினைக்கிறார். மேலும் அவர் மனைவியும் அதற்கு ஒத்து போகலாம்..நாம் யார் நடுவில்.. இப்படி ப்பட்ட கருத்துக்களுக்கு எப்போதுமே.. என் பதில் "என் புன்னகை" மட்டுமே..
புத்தகம் படித்தால் நம்மை மதிக்க மாட்டாள்-என்பதால்;கைநாட்டுப் போடுபவரையா?? மணந்தார். வாய்பேசினால் நம்மை எதிர்ப்பாள் என ஊமையைக் கட்டுவாரா??? கையிருந்தால் நம்மை அடித்துவிடலாம் என வலது குறைந்தவரையா?? வாழ்க்கைத்துணையாய்த் தேடியுள்ளார். புரிந்துணர்வை வளர்க்க வேண்டும். இருபக்கமும் விட்டுக்கொடுப்பு இருந்தால் ;எதையும் படிக்கலாம்;எந்தச் சங்கத்திலும் சேரலாம்.எவருடனும் பழகலாம்.
யோகன் பாரிஸ்
ஆணும் பெண்ணும் சமம் என்றால் 'ஆண் செய்வதை எல்லாம் பெண்ணும் செய்ய வேண்டும் என்றோ பெண்ணின் வேலைகள் எல்லாவற்றையும் ஆணும் செய்ய முடிய வேண்டும் என்று இருந்தால் குழப்பம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பொருந்தும், ஒன்று உசத்தி, மற்றது தாழ்ந்தது என்று கருதாமல் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தால் போதும்' என்று தோன்றுகிறது.
இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் விவாதம் போல, திடமான நிலையை அடைந்து விட்ட மகளிர் தம்மளவில் பொறுப்பாக நடக்க வேண்டும் என்பது தோன்றுவது அவர்களின் உண்மையான தளையறுத்தலைக் காட்டும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
//பாவம் ரொம்ப நல்லவங்க..... அம்மணி உண்மைக்கு எதிரா எழுதறத தாங்கமுடியாம புலம்பறேங்க.. நீங்களும் என்கூட join பண்ணிக்கறீங்களா?.. //
நீ கூப்பிட்டு நான் மாட்டேன்னு சொல்லுவேனா அனிதா? நான் எப்பவுமே உன் செட் தான்.
:)
பதிவைப் பத்தி சொல்லனும்னா அம்மணி பெர்சனல் வாழ்க்கையையும் ப்ரொஃபெஷனல் வாழ்க்கையையும் பேலன்ஸ் பண்ணனும்னு சொல்லிருக்காங்கன்னு நெனக்கிறேன்.
//ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பொருந்தும், ஒன்று உசத்தி, மற்றது தாழ்ந்தது என்று கருதாமல் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தால் போதும்' என்று தோன்றுகிறது. //
மத்தபடி சிவகுமார் சார் அழகாச் சொல்லிருக்காரு...என்னோட கருத்தும் இது தான்.
புரிந்துணர்வை வளர்க்க வேண்டும். //
நன்றி யோகன்.
//எதையும் படிக்கலாம்;எந்தச் சங்கத்திலும் சேரலாம்.எவருடனும் பழகலாம்.//
இதன் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு, பாரதியார் சொன்னது போல், தன் மனைவி, மகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிற எந்த ஆணும், வேற்று பெண்களிடம் நினைப்பது இல்லை. :(
//திடமான நிலையை அடைந்து விட்ட மகளிர் தம்மளவில் பொறுப்பாக நடக்க வேண்டும் என்பது தோன்றுவது அவர்களின் உண்மையான தளையறுத்தலைக் காட்டும் //
நன்றி சிவகுமார்ஜி, உங்களை போன்றே நானும் நினைக்கிறேன் :)
கைப்பூ அனித்துக்கு ஓவர் சப்போர்ட்டா இருக்கு நல்லாயில்ல சொல்லிட்டேன்..அப்புறம் நான் அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்.... :(
//பதிவைப் பத்தி சொல்லனும்னா அம்மணி பெர்சனல் வாழ்க்கையையும் ப்ரொஃபெஷனல் வாழ்க்கையையும் பேலன்ஸ் பண்ணனும்னு சொல்லிருக்காங்கன்னு நெனக்கிறேன்//
அதேதான் தல..சரியா பாயிண்ட்ட சொல்லிட்டீங்க.. :)
இதையே நாங்க சொன்னா அது "ஆணாதிக்கம்". நீங்க சொன்னதுனால இது "கடைந்தெடுத்த பெண்ணடிமைத்தனம்". அவ்வளவுதான் வித்தியாசம்.
ரவி சொல்லுறதும் சரி தான்.
//இதையே நாங்க சொன்னா அது "ஆணாதிக்கம்".//
சரியாத்தான் சொன்னீங்க.. ஆணாதிக்கம் என்னவென்று புரியாதவர்களுக்கு, எல்லாமே ஆணாதிக்கம் தான்..என்ன செய்யறது.. அதை தான் பெண்கள் புரிதலில் தவறு செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
//நீங்க சொன்னதுனால இது "கடைந்தெடுத்த பெண்ணடிமைத்தனம்". //
நான் நிச்சயமாக பெண் அடிமைத்தனம் என்று நினைக்கவில்லை.. சொல்லவும் இல்லை. பெண்கள் எதை செய்யவேண்டுமோ அதை சரியாக செய்ய வேண்டும் அடிமைத்தனத்திற்கும் நம் கடமையை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
குடும்பத்தில் அனுசரித்து போவது அடிமைத்தனம் இல்லை. பெண்களுக்குறிய மிகப்பெரிய பலம் அது.
பெண்ணுரிமை அப்படிங்கறதை நிறைய பேர் சரியா புரிந்து கொள்ளாத தினால் வந்த பிரச்சனை தான் //இது. ......”why blood...! same blood..!, you start..... we close nnu”//
ஆமாம் அனிதா தாங்க முடியலை ரத்த ரத்தமா கொட்டுது. :))
//பெண்ணுரிமை அப்படிங்கறதை நிறைய பேர் சரியா புரிந்து கொள்ளாத தினால் வந்த பிரச்சனை தான் //
நன்றி சந்தோஷ், சரியாத்தான் நீங்க புரிஞ்சிக்கறீங்க.. புரியவேண்டியவங்க எல்லாம்..கல்லால கவிதாவ அடிக்கனும். பெண்களுக்கு எதிரா ஒரு பெண்ணா ன்னு காத்துகிட்டு இருக்காங்க..!!
ஆமாம் அனிதா தாங்க முடியலை ரத்த ரத்தமா கொட்டுது. :)) //
தப்பு செய்யறவங்கள காதுல என்ன மூக்குல, கண்ணுல ரத்தம் வர அளவுக்கு கூட பேசலாம்.. ஆமா அது என்ன எல்லாரும் அணிலுக்கு ஓவராத்தான் சப்போர்டு பண்றீங்க... நல்லா இல்ல இது.. !!
///பெண்கள் வளர்ப்பு முறையில் பெரும் பங்கு எடுப்பது பெற்றோர். சிறு குழந்தையிலிருந்தே நம் குடும்ப அமைப்பையும் அதன் பலத்தையும் சொல்லி சொல்லி ஆண், பெண் இருவரையுமே வளர்க்கவேண்டும். ஒரு பெண்ணால் மட்டுமே நல்ல குடும்பத்தை ஆக்கவும் முடியம் அழிக்கவும் முடியம்///
இது மேட்டரு. நல்ல விஷயம் கவிதா
/////
//நீங்க சொன்னதுனால இது "கடைந்தெடுத்த பெண்ணடிமைத்தனம்". //
நான் நிச்சயமாக பெண் அடிமைத்தனம் என்று நினைக்கவில்லை.. சொல்லவும் இல்லை. பெண்கள் எதை செய்யவேண்டுமோ அதை சரியாக செய்ய வேண்டும் அடிமைத்தனத்திற்கும் நம் கடமையை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
குடும்பத்தில் அனுசரித்து போவது அடிமைத்தனம் இல்லை. பெண்களுக்குறிய மிகப்பெரிய பலம் அது.
///
ம்ஹூம்..."கடைந்தெடுத்த பெண்ணடிமைத்தனம்", அப்படின்னு சொல்வாங்கன்னு சொன்னேன்...
//இது மேட்டரு. நல்ல விஷயம் கவிதா//
நன்றி மதுஜி
//ம்ஹூம்..."கடைந்தெடுத்த பெண்ணடிமைத்தனம்", அப்படின்னு சொல்வாங்கன்னு சொன்னேன்... //
அண்ணன் ச்சீனு அவர்களே ! ..மிக தெளிவாக நீங்கள் சொன்னதை இப்போது புரிந்துகொண்டேன்.
கவிதா,
//ஒரு சிறிய குடும்பத்தை, கணவனை கட்டிக்காக்க முடியாத ஒரு பெண்ணால் எப்படி வெளி உலகத்தில் சாதிக்க முடியம். அப்படி அவர்கள் எதையாவது சாதித்தால் அது சாதனையாகாது.//
இது ஆண்களுக்கும் பொருந்தும் தானே?
//குடும்பம் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லவில்லை ஆனால் குடும்ப அமைப்பை முறிப்பது பெண்கள் கையில் அதிகமாகிவருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் படிப்பும் , சம்பாதியமும் என்றால் அதை சரியான முறையில் செயற்படுத்த பெண்கள் முயற்சிக்க வேண்டும்.//
பெண்ணின் கல்வியும், வேலையும் காரணமா? இல்லை வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் பெண்ணின் மீது சுமத்தும் ஆணும் காரணமா? குடும்பம் என்கிற அமைப்பு மாறி வருகிறது. காலங்காலமாக மாறியும் இருக்கிறது. கூட்டமாக வாழ்ந்த நம் முன்னோர், கூட்டுக்குடும்பமாக மாறியதும், கூட்டுக்குடும்பங்கள் தனிக் குடும்பங்களாக மாறியதும், இன்று தனி நபர் வாழ்க்கை என்ற பாதையில் செல்வதும் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி/வீழ்ச்சி. இதில் ஆண்கள் பங்கும் அதிகமாகவே இருக்கிறது. வேலைக்கு செல்கிற மனைவியிடம் பணமும் வேண்டும் வீட்டு வேலைகள் முதல் அனைத்து கடமையும் எதிர்பார்ப்பதும், இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத சூழலில் காயப்படுத்துவதும் ஆண்களே... இதற்காக பெண்ணை படிக்கவோ, வேலைக்கு செல்லவோ விடாமல் தடுப்பவர்கள் உரிமைகளை தடுப்பதாக தான் பொருள். ஆணினமும் இதை உணர்ந்து தங்களது பொறுப்புகளை, கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஒரு கை அசைவதால் ஒலி வருமா?
நன்றி திருஜி, நீங்க சொல்றது சரிப்போல தெரிகிறது, பெண்களை அடிமை ப்பட்டு கிடக்க சொல்லவில்லை, அவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்பதால் பெண் என்பதை மறந்து விடக்கூடாது, அப்படி மறப்பவர்கள் அவர்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் இழக்கிறார்கள் எனலாம்.
கூட்டு குடும்பம் இருந்த வரையில் கணவன் மனைவிக்குள் இத்தனை பிரச்சனைகள் வளராது, வளர வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள், குழந்தைகள் நன்றாக வளர்ந்தார்கள், அப்போதும் பிரச்சனைகள் இருக்கும், ஆனால் அது விவாகரத்து வரை நம்மை இழுத்து செல்லாது. நாம் இப்போது இந்த கூட்டு குடும்ப முறையே விட்டு விட்டு தவிக்கிறோம், முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. சென்று பாருங்கள், தாங்கமுடியாத துயரம் நெஞ்சை அடைக்கும் அந்த முதியவர்களை பார்க்கும் போது. இதற்கு காரணம் மிக எளிதாக நம் பரிமாண வளர்ச்சி காரணம் சொல்லி தப்பிக்க முடியுமா..?
ஆணிடமும் பிரச்சனை உள்ளது ஆனால் ஆண்கள் பிரச்சனையை வளர்ப்பவர்கள் இல்லை, மேலும், ஒரு ஆணை விட ஒரு பெண்ணால் நினைத்ததை சாதிக்க முடியும். அந்த பொறுமையும், நிதானமும் பெண்களிடம் அதிகம் உள்ளது. அதனால் அவர்கள் அவர்களின் பலத்தை உணர்ந்து நடந்து கொள்ளலாம்.
ஏதோ புத்தி சொல்லுறீங்கனு தெரியுது... ஆனா எங்களுக்கு இல்லனும் புரியுது.....அதுனால நான் ஒதுங்கிக்குறேன்.
அணில் என் சப்போட் என்னிக்கும் உனக்கு உண்டு. நாம் எல்லாம் இருக்கும் போதே அம்மணி இம்புட்டு சவுண்டு உடுறாங்கனா, நாம் எல்லாம் அமைதி ஆகிட்டா என்ன ஆகும். இந்த சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துக்கு ஆச்சும் நாம் நம் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்....
சீனு... உங்களுக்கு ஒரு பெரிய ஓ.....
சிவா, புரியலையா? ரொம்ப நல்லது... சரி அது என்ன சீனுக்கு ஒரு "ஓ"..
ம்ம் இப்படி அணில உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் அது ஓவரா என்னை டீஸ் பண்ண ஆரம்பிச்சிடுத்து... :)
அதென்ன நீங்க பதிவிட்டா மட்டும் விவாதம் அது இது என்று தூள் கிளப்புது...
அம்மணி,
மிகச்சரியான பதிவு. இதற்காக நான் சொல்லவேண்டியது பலப்பல. ஆனால், நேரமில்லை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
எனக்கு மணமாகி 12 வருடங்கள் ஓடிவிட்டன. என் மனைவியும் நானும் புரிந்துகொண்டு குடும்பத்திற்காக பல ஒற்றுமை காரியங்களை செய்துகொண்டிருக்கிறோம். இதில் நான் மேல், நீ மேல் என்று எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், பெண்களின் இப்போதய விகாரமான மனங்களின் பிரதிபலிப்புகள் அங்கிங்கெணாதபடி எங்கும் மண்டிப்பரவியிருக்கின்றன. என் மனைவியையே நீ வேலைக்குப்போ, புருஷனை நம்பாதே என்று "நல்லவிதமாக" சொல்லும் பல தோழிகளை அவர்கள் பின்பு என் மனைவி சிரித்து மறப்பாள். நாங்கள் துபாயில் இருந்த 7 வருடங்களில், அவள் என்னைவிட பெரிய அரசு பதவியில் சந்தோஷமாக வேலை செய்து பின் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு நிலை எடுப்பதே சமூகத்துடன் போராட வேண்டியிருந்தது. குழந்தையை நான் பார்த்துக்கொள்ள பல நாட்கள் அவளுக்காக நான் விடுப்பில் இருந்துள்ளேன். இன்று பல விஷயங்களில் விட்டுக்கொடுக்கும் பெண்களை பெற்றவர்களும், சமுதாயமும் கெடுக்கின்றன என்பது வாஸ்தவம். முதிரந்த மனநிலையில் பெண்கள் ஒருவித "பேர" மனப்பான்மையோடுதான் பெரும்பாலும் மணவாழ்க்கையில் புகுகிறார்கள். தனது தனித்தன்மை என்று ஒன்று இருப்பதாகவும் அதுவே பிரதானம் என்று தன்னையும், தன் சார்ந்தவர்களையும், தன் சமுதாயத்தையும், குடும்பத்தையும் நம்பிக்கை துரோகம் செய்து வாழ்க்கையில் "வெற்றி" பெற்றோம் என்று நினைத்து கடைசியில் வெறுமையில் வாழ்ந்து அதற்காக இன்னும் பிசகிப்போகும் இவர்கள் நவீனயுகத்தின் அலங்கோலங்கள்.
சுயபுராணத்தை மன்னிக்கவும். கருத்தை வெளிப்படுத்தவே இதை குறிக்கவேண்டியதாகிப்போச்சு.
நன்றி
எங்கே இன்னும் அருள்குமாரைக் காணலை?
//அதென்ன நீங்க பதிவிட்டா மட்டும் விவாதம் அது இது என்று தூள் கிளப்புது... //
ரவி, அதை பதிவுகளை படிக்கிற நீங்க தான் சொல்லனும்...
தனது தனித்தன்மை என்று ஒன்று இருப்பதாகவும் அதுவே பிரதானம் என்று தன்னையும், தன் சார்ந்தவர்களையும், தன் சமுதாயத்தையும், குடும்பத்தையும் நம்பிக்கை துரோகம் செய்து வாழ்க்கையில் "வெற்றி" பெற்றோம் என்று நினைத்து கடைசியில் வெறுமையில் வாழ்ந்து அதற்காக இன்னும் பிசகிப்போகும் இவர்கள் நவீனயுகத்தின் அலங்கோலங்கள்.
மிக தெளிவா, அழுத்தமா உண்மைய சொல்லியிருக்கீங்க ஜயராமஜி, நன்றி
//எங்கே இன்னும் அருள்குமாரைக் காணலை?//
பித்(தூ)தானந்தா சார், இதை நீங்க அவரை கேட்கணும். ..
அரை சதமோ, சதமோ போடப்போகும் பதிவில் என் கணக்கிலும் ஒன்று!
//அரை சதமோ, சதமோ போடப்போகும் பதிவில் என் கணக்கிலும் ஒன்று! //
என்ன பாலா இது? இந்த பதிவை பற்றி உங்க கருத்தை சொன்னா சந்தோஷப்பட்டு இருப்பேன்.. என்னவோ மறுமொழி எண்ணிக்கைக்காக எழுதமாதிரி செய்துட்டீங்களே.. என்னவோ போங்க.. நீங்க எல்லாம் இங்க பெரிய தலைங்க..எங்கள மாதிரி இல்லை.. ஏதாவது செய்தா சரியாத்தான் செய்றீங்கன்னு நினைச்சிக்க வேண்டியது தான்.
அருமையானப் பதிவு கவிதா...
எல்லாரும் சொன்ன அதே குரல்தான். புத்தகத்தப் படிச்சு தன்னை மதிக்க மாட்டாள்னு நெனக்கிறதெல்லாம் முட்டாள்த்தனமாத்தான் தெரியுது...
பெண்ணியத்தைப் பற்றி நல்ல விதமாகச் சொன்னாலே, சண்டைக்கு வற்ர பெண்கள் இருக்காங்களேன்னு நெனக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது.. (உங்களோட கைப்புள்ளப் பேட்டியத்தான் சொல்றேன்);)
கவிதா அருமையாகச் சொல்லி இருக்கீங்க.
பெண்களுக்கு புக்ககமோ,புருஷனோ ஏதும் தீங்கே நினைக்க வேண்டாம்.
தானாகவே போட்டுக் கொண்ட டிஃபென்ஸ்மெக்கனிசம் நிறையவே இருக்கு.
இவர்கள் அதைச் சொன்னார்கள், அவர்கள் இதைச் சொன்னார்கள் என்ற வேண்டாத கற்பனைகள்.
பேச்சு பேச்சு பேச்சு.
என் சினேகிதி ஒருத்தியின் வீட்டு விஷயம் பூராவும் அவர்கள் அலுவகத்தில் அத்தனை பேருக்கும் தெரியும்.
'அய்யோ பாவம்பா'என்று அவர்கள் சொல்லி சொல்லி
சொல்லியே ,
அமைதியாக இருந்த மாமனார்,மாமியாரை எதிரியாக நினைத்து அவர்கள் வீடு மாறிப் போகும்படி ஆச்சு.
இப்போது வயதுக்கு வந்த மகளைத் தனியே வீட்டில் விட முடியாமல் திண்டாடுகிறாள்.
நிதானமாக யோசிக்கும் திறன்,வந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
சிந்தித்து எழுதிய பதிவு ,நிறைவாக இருக்கிறது படிக்க.
Post a Comment