பொதுவாக நாம் மனிதர்களை எதை வைத்து மதிப்பிடுகிறோம். அவர்களின், படிப்பு, பணம், குணம், தோற்றம், பழக்க வழக்கங்கள் என சொல்லி கொண்டே போகலாம். சமீபத்தில் எனக்கு கிடைத்த அனுபவம், படிக்கும் பத்திரிக்கை, புத்தங்ககளை கொண்டு மனிதர்களை எடை போடுகிறோம் என்பதே. எனக்கு ஒன்று புரியவில்லை, The Hindu, Economic Times, Indian Express மற்றும் பல ஆங்கில தின பத்திரிக்கைகள் படிப்பவர்களை மிகுந்த தரம் உடையவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், தினமலர், வாரமலர், தினதந்தி மற்றும் பல தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்களை தரக்குறைவாகவும், தாழ்வாகவும் நினைக்கும் பண்பு நம்மில் உள்ளது.
கன்னிதீவு (சிந்துபாத்) என்ற ஒரு பட கதை தினப்பத்திரிக்கையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.. அதை தொடர்ந்து சிறுவயதிலிருந்து படித்து வந்த என்னுடைய கணவர், நடுவில் பல காரணங்களால் படிப்பதை விட்டுவிட்டார். இப்போது சிந்துபாத் என்ற தொடர் சன் டீவி யில் ஒளிபரப்பபடுகிறது. அதனை விடாமல் உட்கார்ந்து ரசித்து பார்க்கிறார். அவர் தமிழ் பத்திரிக்கை படித்ததற்காகவும், இத்தனை வயதுக்கு பிறகு தான் படித்த கதையின் தொடர்ச்சியை ஆர்வத்துடன், டிவியில் பார்க்கிறாரே என்று தாழ்வாக எடைபோடுவதா, இல்லை அவர் The Hindu, Business Line, Management weekly, monthly books படிக்கிறாரே அதனால் அவரை தரம் உடையவராகவும், உயர்ந்தவராகவும் நினைப்பதா.? படிப்பதை வைத்து ஒருவரின் தரத்தையும், குணத்தையும் எப்படி ஊகிப்பது. அது சரிதானா?
வாரமலர் ஒருவர் படிக்கிறார் என்பதால் மட்டுமே அவர் இப்படி பட்டவர் தான் என நாம் முடிவுக்கு வந்து விட முடியுமா?! இல்லை இவர் ஹிந்து பத்திரிக்கை படிக்கிறார் இவரின் தகுதி மிக உயர்ந்தது என முடிவுடன் இருக்கலாமா?. பள்ளியிலும், கல்லூரியிலும் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வது எல்லோரும் அறிவர். மெத்த படித்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களையே இவர் நல்லவர்/கெட்டவர் என்பதை அவரின் இயல்பான குணம் வெளிபடும் போது தான் தெரிந்து கொள்ளமுடிகிறது.
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, பெண்களை ஏமாற்றும் எத்தனை ஆண்கள் நம்மிடையே உண்டு அதே போல் ஆங்கிலத்தில் பேசி ஆண்களை இழிவு செய்யும் எத்தனை பெண்கள் நம்மிடையே உண்டு. என் நண்பர்கள் சிலர் ஒரே மாதிரி பட்ட படிப்பு படித்தவர்கள். அதில் ஒருவர் IIT யிலிருந்து வந்தவர், IIT என்றாலே அதனுடைய தரம் நமக்கு தெரியும். அந்த தரத்தை அந்த நண்பரிடம் பார்க்கலாம். மற்றவர் சாதாரண கல்லூரியிலிருந்து வந்தவர். இவர்கள் இருவரும் ஒருமுறை ஏதற்கோ விவாதம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது, இந்த IIT-நண்பர் என்னிடம்”பாரு, ரிக்க்ஷாகாரன் மாதிரி பேசுகிறான் அவன், ஒரு என்ஜினியர் மாதிரியா பேசுகிறான்” என்றார். அவரோ “இவர் IIT பந்தாவெல்லாம் நம்ம கிட்ட காட்டறார்..நாங்க ரிக்க்ஷாகாராங்களாவே இருக்கிறோம், ஆனா இவனாட்டம் திருட்டுதனமா பண்றோம்” என்றார்.
மெத்தபடித்தவர்களும், ஆங்கலத்தில் அளப்பவர்களும், ஆங்கில பத்திரிக்கைகள் படிப்பவர்களும் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என சொல்லிவிட முடியாது, தமிழில் பேசி, தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்கள் தாழ்ந்தவர்கள், தகுதியில்லாதவர்கள் என சொல்லிவிட முடியாது.
மனிதர்களின் நற்குணம் ஒன்றே அவர்களை யாரென்று சொல்லும். அதை அறிந்து மனிதர்களின் தரத்தை உணர நாம் முயற்சிக்க வேண்டும்.
அணில் குட்டி அனிதா: அம்மனி நீங்க நல்லவங்களா.. கெட்டவங்களா? உயர்ந்தவங்களா, தாழ்ந்தவங்களா.. எப்ப பார்த்தாலும் தப்பு தப்பா பீட்டர் English ல பேசறீங்களே.. அதான் சரியா என்னால உங்கள judge பண்ணமுடியல... தமிழ் மட்டும் என்னா?.. ஆற்றலரசி அக்கா பொன்ஸ்’ ஐ கேட்டா தெரியும் நீங்க தமிழ்ல எவ்ளோ..தப்பு பண்றீங்கன்னு... இப்படி 2 மே உங்களுக்கு சரியா வரலியே..உங்கள எதுல சேக்கறது..... இதுல என்ன மேட்டர் னா அம்மனி தமிழும் தெரியாம.. English ம் தெரியாமா.. எல்லாம் தெரிஞ்சமாதிரி உங்ககிட்ட எல்லாம் சீன் போடறாங்க பாருங்க அதுதாங்க.... அதுதாங்க என்னால தாங்கவே முடியல.....
(ஒரு ரகசியம்-அம்மனி அவங்க friend அ நக்கலா “ஓ வாரமலர் படிக்கறீங்களா?..ன்னு கேட்டாங்க..அவரு ..டென்ஷன் ஆகி வுட்ட சவுண்டுல தான்..இப்படி பதிவு போட்டு இருக்காங்க...அம்மனி காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு அவரு சவுண்டு வுட்டாருன்னா பார்த்துகோங்க..)
வாரமலர் படிப்பவரின் தரம் எப்படி இருக்கும் ?
Posted by : கவிதா | Kavitha
on 16:05
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
54 - பார்வையிட்டவர்கள்:
எனக்கு வாரமலர் பற்றி தெரியாது, பொன்னையா ஜூனியர், எலிசா, கறுப்பு பூனை, துனுக்கு மூட்டை இதெல்லாம் என்னானே தெரியாது :)))
//The Hindu, Economic Times, Indian Express //
//Business Line, Management weekly//
இம்புட்டு ஆங்கில பத்திர்க்கை பெயரு உங்களுக்கு தெரியுமாங்க. மெய்யாலுமே ஆச்சரியமா இருங்க. பெரிய ஆள் தான் போங்க
//"வாரமலர் படிப்பவரின் தரம் எப்படி இருக்கும் ?"//
இதுக்கு நீங்க மாயவரத்தான நேரடியா திட்டிருக்கலாமே ?
(மாயவரத்தான் ..சும்மா தமாசுக்கு!தவறாக எடுக்க வேண்டாம்)
அணிலு, கை குடுமா.... சாரி.... கால் குடுமா.... இவ்வளவு வாங்கியும் சலிக்காம போட்டு தாக்கற பாரு... நி ரொம்ப நல்ல பொண்ணா இருப்பியோ!
:-)
இதோ பாருங்க, நீங்க வாரமலரை மட்டும் சொல்லிட்டு தினத்தந்தி 'குடும்ப மலரை' சொல்லாம விட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் :-))
****
ஜோக்கை விடுங்க.. படிக்கும் புத்தகங்களை வைத்து ஒருவரை எடை போட முடியாது என்பது சரியே.. அதனால்தானே 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்'ன்னு சொல்லியிருக்காங்க !!!
****
இந்த அணில்குட்டி அனிதாங்கறது யாருங்க ?? ஒரே குழப்பமா இருக்கு !!!!
//எனக்கு வாரமலர் பற்றி தெரியாது, பொன்னையா ஜூனியர், எலிசா, கறுப்பு பூனை, துனுக்கு மூட்டை இதெல்லாம் என்னானே தெரியாது :)))//
கண்ணன்!
அந்துமணி, லென்ஸ் மாமா, திண்ணை- நடுதெரு நாராயணன், பெரியசாமி அண்ணாச்சி, எல்லாம் விட்டுடீங்க பாருங்க. கவனமா இருக்க வேண்டாமா, இல்லாட்டி நீங்க வாரமலர் படிப்பவர்னு முத்திரை குத்திடு வாங்க.
//புத்தகங்களை வைத்து ஒருவரை எடை போட முடியாது //
ஆனால் இந்த மாதிரி புத்தகங்களை படித்துவிட்டு எடைக்குப் போடலாம் :)
////புத்தகங்களை வைத்து ஒருவரை எடை போட முடியாது //
ஆனால் இந்த மாதிரி புத்தகங்களை படித்துவிட்டு எடைக்குப் போடலாம் :) //
ஹி...ஹி... நாங்களும் இது மாதிரி பல தடவை எடைப் போட்டு இருக்கோமுல....
செய்தி :- பொன்ஸ் உதவியோடு.. அணில்குட்டியோட போட்டோ போட்டு இருக்கு..பார்த்துகோங்க..
பொன்ஸ்'க்கு என் நன்றி.. :)
கண்ணன் , சிவா ஆரம்பிச்சிடீங்களா.. நான் என்னவோ உணர்ச்சி பொங்க ஒரு பதிவு போட்டா.. அணில் குட்டியோட சேர்ந்து நீங்களும் கலாய்கறதையே வேலையா வச்சிருக்கீங்க.. ம்ம். என்ன செய்ய !!
ஆகா, அணில் குட்டிக்கு கை வீசி நடக்குது அப்ப கை இருக்கா.... சரி சரி கையே குடு அணில் குட்டி.:-)
கோவி.கண்ணனும், சிவா வும் இன்னிக்கி டார்கட் உங்க பதிவு தான் போல இருக்கு...:-)
//இதுக்கு நீங்க மாயவரத்தான நேரடியா திட்டிருக்கலாமே ?
(மாயவரத்தான் ..சும்மா தமாசுக்கு!தவறாக எடுக்க வேண்டாம்) //
ஜோ, அப்படியா..என் நண்பரை கேட்ட மாதிரி நக்கலா கேட்டுட்டா போகுது..
//அணிலு, கை குடுமா.... சாரி.... கால் குடுமா.... இவ்வளவு வாங்கியும் சலிக்காம போட்டு தாக்கற பாரு... நி ரொம்ப நல்ல பொண்ணா இருப்பியோ!//
நன்மனம், நீங்க வேற..அணில்குட்டிய எத்தி விடாதீங்க.. அது ஓவர் நல்ல பெண்ணா ஆயிடும் என்னால சமாளிக்க முடியாது...
//இந்த அணில்குட்டி அனிதாங்கறது யாருங்க ?? ஒரே குழப்பமா இருக்கு !!!! //
கருத்துக்கு நன்றி சோம்பேறி பையன் (என்னங்க பேரு இது, எனக்காக மாத்திகோங்க..கூப்பிட கஷ்டமா இருக்கு) அணில்குட்டி கவிதாவோட PA.
பொன்ஸ் அக்கா, கவிதா எங்க நம்மல உங்க கண்ணுல எல்லாம் காட்டாம வுட்டுவாங்கன்னு பார்த்தேன்.. சரியான மக்கு மாடசாமி அவங்க.. ஒன்னியம் தெரியாது.. என்னவோ நீங்க மட்டும் உதவி பண்ணாம இருந்தா என் அழகை நீங்க எல்லாம் பாத்து ரசிக்காமா போயிருக்கலாம்.. டாக்ஸ்க்கா !!
பொன்ஸ் வாழ்க..!! அவர்களின் சேவை உயர்க..!!
என்ன கவிதா, சந்தோஷைத் திட்டணுமனா நேரடியா திட்ட வேண்டியது தானே? நம்ம சந்தோஷைத் திட்ட இப்படி ஒரு பதிவெல்லாம் போடணுமா?!!
ஓவர் டு சந்தோஷ்..
படம் போட்டதுக்கெல்லாம் நன்றியா?!!! என்னங்க இது.. மிருகத்துக்கு மிருகம் இது கூட செய்யலைன்னா எப்படின்னு, என்னோட யானை கேட்குது :) [செய்யாம இருக்க நம்ம என்ன மனுஷங்களான்னு வேற தனியாக் கேட்குது... ;)]
//பொன்ஸ் உதவியோடு.. அணில்குட்டியோட போட்டோ போட்டு இருக்கு..பார்த்துகோங்க..//
போட்டவ பாத்தவுடன் தெரிந்தது, அவங்க உதவியுடன் போட்டு இருக்கின்றீர்கள் என்று. எப்படினு கேட்காதீங்க... மீறி கேட்டா நான் சொல்லிடுவேன்.
யாருப்பா அது இங்கன அணில் குட்டி படத்த கேட்டது, வாய வச்சுகிட்டு சும்மா இருங்கப்பா. நான் இப்படி தான் ஒருத்தர கேட்க போயி, அவர் என்னா பண்ணினார்
இங்க போயி பாருங்க. இருந்தாலும் எங்க ஊருக்காரு பின்னூட்ட நாயகர் கோவி. கண்ணன் மற்றம் சங்கத்தின் பிற நண்பர்கள் உதவியுடன் அதை ஒரு வழியா சமாளிச்சோம். அது மாதிரி ஒரு பஞ்சாயத்த இங்கேயும் ஆரம்பிக்காதீங்க.
//கோவி.கண்ணனும், சிவா வும் இன்னிக்கி டார்கட் உங்க பதிவு தான் போல இருக்கு...:-) //
நன்மனம் இப்படியெல்லாம் உண்மைய சபைல சொல்ல கூடாது
:))))
//கண்ணன் , சிவா ஆரம்பிச்சிடீங்களா.. நான் என்னவோ உணர்ச்சி பொங்க ஒரு பதிவு போட்டா.. //
எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமா சொன்ன நாங்களும் சேர்ந்து பொங்குவோமுல.
//என்ன கவிதா, சந்தோஷைத் திட்டணுமனா நேரடியா திட்ட வேண்டியது தானே? நம்ம சந்தோஷைத் திட்ட இப்படி ஒரு பதிவெல்லாம் போடணுமா?!!
ஓவர் டு சந்தோஷ்.. //
பொன்ஸ், சந்தோஷ்கிட்ட வாங்கிகட்டனது போதாதா..?!! இன்னமும் ஓவர் டு சந்தோஷ் வேறயா?.. காதுல ரத்தம் வந்தது போறாதா.. கண்ணு, மூக்கெல்லாம் வரணுமா?!! ஏன் இப்படி சிண்டு முடிஞ்சி விடறீங்க..
சந்தோஷ்.. ஏதாவது திட்டனும்னா தனியா மெயில் அனுப்புங்க.. எல்லாரும் சேர்ந்து திட்டறமாதிரி எதுவும் செய்துடாதீங்க..ப்ளீஸ்
//கண்ணன் , சிவா ஆரம்பிச்சிடீங்களா.. நான் என்னவோ உணர்ச்சி பொங்க ஒரு பதிவு போட்டா.. //
எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமா சொன்ன நாங்களும் சேர்ந்து பொங்குவோமுல. //
அப்ப புரியலையா..புரியாதப்பவே இந்த கூத்தா.. ?!! வீட்டுக்கு வாங்க அடுப்புல பால் பொங்கவிடும் போது உங்களையும் சேர்த்து பொங்கவிடலாம்..
//போட்டவ பாத்தவுடன் தெரிந்தது, அவங்க உதவியுடன் போட்டு இருக்கின்றீர்கள் என்று. எப்படினு கேட்காதீங்க... மீறி கேட்டா நான் சொல்லிடுவேன்.//
சொல்லுங்க சிவா..அதை தான் பொன்ஸ்ஸும் எதிர்பார்க்கறாங்க..
//கண்ணன் , சிவா ஆரம்பிச்சிடீங்களா.. நான் என்னவோ உணர்ச்சி பொங்க ஒரு பதிவு போட்டா.. //
எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமா சொன்ன நாங்களும் சேர்ந்து பொங்குவோமுல. //
நான் கேட்டது இந்த பதிவுல எங்கன உணர்ச்சி பொங்குதுனு....
//சொல்லுங்க சிவா..அதை தான் பொன்ஸ்ஸும் எதிர்பார்க்கறாங்க..//
அப்படிங்களா பொன்ஸ்.
//நான் கேட்டது இந்த பதிவுல எங்கன உணர்ச்சி பொங்குதுனு....//
விளங்காதப்பவே..உங்க ஆட்டம் அணில விட ஜாஸ்தியா இருக்கு.. விளங்கிட்டா...தேவையா..எனக்கு..! ஓவரா இல்ல பொங்கிடுவீங்க.. (ஆமா..எனக்குதான் முன்னமே இததான் சொல்றீங்கன்னு தெரியுமே.. ஏன் திருப்பி சொன்னீங்க ?!! )
கருத்து சுதந்திரக் கொள்கைக்கு எதிரியா தனிமடலில் பேச நினைக்கும் கவிதாவுக்கும், சந்தோஷுக்கும் என் கண்டனங்கள்..
சிவா, இல்லீங்க.. எனக்குப் புரிஞ்சிடுச்சுங்கோ!! ஒரே ஏரியாக்காரங்களுக்குப் புரியலைன்னாதான் ஆச்சரியமே...;)
நான் கூடத்தான் தினமணி, கதிர்,கல்கண்டு, எல்லாம் படிக்கிறேன்.தமிழ்லே படிக்கிற இன்பம் தெரியணும்னா தமிழ்ப் பத்திரிகை கிடைக்காத நாட்டுக்குப் போய் வரணும். காய்ஞ்சு போய் திரும்புவாங்க,.
சிவா இங்கே வாரமலர பத்தி ஏதும் கலகம் இழுத்து விடலயா.....?
என்னா திருத்தியாச்சா... :-?
கவிதா,
Its MY LIFE AND MY OWN LIFE I know how to live, what to read. I live for myself and my family and my friends. I DONT CARE WHAT THE WORLD THINKS. மக்கள் ஏதாவது சொல்லிட்டு தான் இருப்பாங்க அதுக்கு ஏத்த மாதிரி எல்லாம் வாழ்ந்தா அப்புறம் விவசாயி, குதிரை கதை மாதிரி தான் ஆகும் வாழ்க்கை.நாங்க வாரமலரும் படிப்போம் salvage garden கேட்போம் எதை எப்ப எப்படி செய்யணும் அப்படின்னு எங்களுக்கு தெரியும்.sorry for being harsh but its me. நம்மளை பத்தி எல்லாம் பிளாக் எழுதுற அளவுக்கு பெரிய ஆளு ஆயிட்டோம் போல(இல்ல ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி trickஓ..) ஒருத்தரு என்னடான்னா நமக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குறாரு இங்க இந்த அம்மணி இப்படி என்னமோ போடா..
பின்னூட்ட நாயகர் சொன்னமாதிரி எனக்கும் வாரமலர் பத்தி தெரியாதுங்க...ரமேஷ் என்கிற ராமசுப்பு கல்யாணம் ஆனவரா - இல்லையா, அவருக்கு ஆங்கிலம் படிக்க தெரியுமா இல்லையா, அவர் உ.பா அருந்துவாரா இல்லையா எதுவுமே தெரியாது...
யார் - குழப்பமாக இருக்கா? அட அந்துமணி தாங்க...(எப்படியோ தலைப்புக்கு சம்மந்தமா எழுதிட்டேன்)
நாங்களும் எங்க வீட்டுல தினமலர்தான் வாங்கிட்டு இருந்தோம்....
வாஜ்பாய் தாத்தா ஆட்சியில் இருந்த 5 வருஷமும் அவர் மூஞ்சு எப்படியாவது முதல் பக்கத்தில் வந்திடும்...
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ததை மூணு வருஷம் எழுதினாங்க..
அதனால் தினத்தந்திக்கு மாறினேன்...
தினத்தந்தி படிக்கறது கேவலம் என்கிறமாதிரி தினமலர் விளம்பரம் டிவியில் வரும் பார்த்திருக்கீங்களா ? என்ன கேவலமான சிந்தனை பாருங்க...
//Its MY LIFE AND MY OWN LIFE I know how to live, what to read. I live for myself and my family and my friends. I DONT CARE WHAT THE WORLD THINKS.//
பங்காளி உன்ன என்னால புரிஞ்சக்கவே முடியல, மத்த எல்லாத்தையும் தமிழ் சொல்லிட்டு இத மட்டும் ப்ராண்ஸ் மொழில சொல்லி இருக்கு. என்ன சொன்னனு வந்து தமிழ சொல்லிட்டு போ....இத நான் எனக்காக கேட்கல, கவிதாவுக்காக தான் கேட்குறேன். எனக்கு தான் ப்ரஞ்ச் தெரியுமே....
"கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான்"னு சொல்றாங்களே அது தப்பா?
//(ஆமா..எனக்குதான் முன்னமே இததான் சொல்றீங்கன்னு தெரியுமே.. ஏன் திருப்பி சொன்னீங்க ?!! ) //
கவிதா நான் மறுபடியும் கேட்குறேன், இந்த பதிவுல எந்த இடத்துல உணர்ச்சி பொங்குற மாதிரி எழுதி இருக்கீங்க கொஞ்சம் சொல்லுங்க, ப்ளிஸ்
//சிவா இங்கே வாரமலர பத்தி ஏதும் கலகம் இழுத்து விடலயா.....?//
கலகம் என்றாலே காத தூரம் ஒடும் ஆளுங்க நான், என்ன பார்த்து இப்படி ஒரு கேள்விய கேட்டீங்களே ராம்.
//என்னா திருத்தியாச்சா... :-? //
நாம என்னைக்கு தப்பு பண்ணி இருக்கோம், திருந்துவதற்கு.
//சிவா, இல்லீங்க.. எனக்குப் புரிஞ்சிடுச்சுங்கோ!! ஒரே ஏரியாக்காரங்களுக்குப் புரியலைன்னாதான் ஆச்சரியமே...;) //
பாத்தீங்களா கவிதா, நாங்க எல்லாம் ஒரே ஏரியாவாக்கும், அதான் சட்டுனு அவங்களுக்கு புரிஞ்சிடுச்சு.
அதுக்கு எல்லாம் கொஞ்சம் ஞானம் வேணும். இப்ப தான எங்க கூட சேர ஆரம்பித்து உள்ளீர்கள். போக போக உங்களுக்கும் ஞானம் வரும், பூவுடன் சேர்ந்த நார் போல......
அப்பாடா! "ஆ.நி." கவிதா. கை கொடுங்க. நான் ஒரு தினமலர் வாசகன்.
நான் பெரும்பாலும் 'தமிழ்' தினசரிகளும், வார பத்திரிக்கைகளும் மட்டுமே படிப்பேன் (ஆங்கிலம் படிக்கவேண்டுமானல் இரண்டு மூன்று முறை படித்தால் தான் சரியாக புரியும் என்பதால் படிப்பதில்லை). மற்றவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், என்னவோ ஆங்கில பத்திரிக்கைப் படிப்பவர்கள தாம் அதை வெளிக்காட்டிக் கொண்டு, பந்தாவாக வெளியில் தெரியும்படி கக்கத்தில் வைத்திருப்பார்கள்.
//இப்படி 2 மே உங்களுக்கு சரியா வரலியே..உங்கள எதுல சேக்கறது..... // அணிலு... நானும் இந்த கேஸூதான்! ஏதோ பெரியவங்கல்லாம் சீரியஸா பேசிட்டு இருக்காங்க. நாம பேசாம உக்காந்து வேடிக்கை பாக்கறதுதான் நல்லது!
சிவா,
நீ வேற தமிழில் அந்த கருத்துக்களை இதே மாதிரி வேகமாகவும் strongகாகவும் சொல்ல முடியலை அதனால் பக்கதுல ஒக்காந்து இருந்த இங்கலீஸ்காரன் கிட்ட கொஞ்சி கூத்தாடி எழுதியது இது. இதே மாதிரி நிறைய பேர் என்கிட்ட நான் வாரமலர் மற்றும் தமிழ் வார இதழ்கள் படிப்பதை பயங்கர நக்கல் அடிப்பாங்க ஏதோ அவங்க பெரிய படிப்பாளிங்க மாதிரியும் இந்த புத்தகங்களை பார்த்ததே இல்லை அப்படின்னு ஊருல சொந்தமா இந்த புத்தகங்களை வாங்க வக்கில்லாம டீக்கடையில் எட்டி நின்னு தினத்தந்தியை படிச்சிட்டு இருந்து இருப்பாங்க. இங்க வந்த உடனே ஏதாவது ஒரு நாலு இங்கலீஸ் புக்கை எடுத்துக்க வேண்டியது முக்கியமா அந்த நேரத்தில் பரபரப்பா ஓடிகிட்டி இருக்கும் இல்ல அந்த புக்கை வாங்க வேண்டியது யாராவது கேட்டால் மச்சி நான் அந்த புத்தகத்தை படிச்சிட்டு இருகேன்(அதும் முக்கியமா நாலு பொண்ணுங்க இருக்கும் பொழுது. அப்புறம் இந்த பொண்ணுங்க இதுல விடுற பிலிம் இருக்கே யப்பா தாங்காதுடா சாமி..(எல்லா பொண்ணுங்களும் இல்லை சில பேர்)) சூப்பரு அப்படின்னு சொல்றது சரிடா அப்படி என்ன தான் சொல்லி இருக்காங்க அந்த புத்தகத்தில் அப்படின்னு கேட்ட டேய் அதை சொல்ல முடியாது மச்சி விஷயம் கொஞ்ம் complicated நீ படிச்சாதான் உனக்கு புரியும் அப்படின்னு பிலிம் விடுவது எத்தனை பேரை பாத்து இருக்கோம் இதுமாதிரி.
இதுக்கு முன்னாடி போட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி.. :))
இந்த மாதிரி இங்லிபீஸ் புக்கை படிச்சிட்டு சீன் விடுற கும்பல் (இதுல பெரும்பாலும் ஒரிஜினல் புக்கை யாரும் காசு குடுத்து வாங்க மாட்டாங்க பாத்தா அந்த மூர் மார்கெட் பின்னாடி இந்த மாதிரி ஏரியாக்களில் திருட்டு புத்தகங்களை 50,100 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கிட்டு இருப்பாங்க.. என்ன ஆறிவு பசி யப்பா...) முக்கியமா யாரு hmm sidney shelton இவரோட புக்கை படிக்காட்டி உங்களை ஆங்கல வாசகர்கள் லிஸ்டில் சேத்துகவே மாட்டாங்க..யாரை கேளு உங்களுக்கு புடிச்ச எழுத்தாளர் யாருன்னு உடனே இவர் பேரை சொல்லுவாங்க. அடுத்த கும்பல் வந்து யாருக்குமே தெரியாத/படிக்காத ஒரு தமிழ் புத்தகங்களை படிச்சிட்டு ஆகா இலக்கியம் பிரமாதம் அப்படின்னு திருவள்ளுவர் ரேஞ்சுக்கு சீன் போட்டுட்டு இருப்பாங்க..விடு சிவா கண்டுகாதே இந்த மாதிரி ஆளுங்களை..
//கருத்து சுதந்திரக் கொள்கைக்கு எதிரியா தனிமடலில் பேச நினைக்கும் கவிதாவுக்கும், சந்தோஷுக்கும் என் கண்டனங்கள்..
//
தனி மடல் எல்லாம் ஒண்ணும் இல்லிங்க..
கவைதாக்கா என்னவோ சொல்ல வாறீங்கன்னு தெரியுது ஆனா தெரியலை. ஆனா அணிகுட்டி உங்களை போட்டு பின்னி பெடலெடுக்குதே ! அதுதான் என் ரேஞ்சுக்கு பேசுது :))
கலக்கு அணிகுட்டி !! :))
//இதுக்கு நீங்க மாயவரத்தான நேரடியா திட்டிருக்கலாமே?//
இதுக்குமேல நான் என்னத்த சொல்ல போறேன்?
//நாங்க வாரமலரும் படிப்போம் salvage garden கேட்போம் எதை எப்ப எப்படி செய்யணும் அப்படின்னு எங்களுக்கு தெரியும்.//
(பொன்ஸ் சந்தோஷ் வந்துட்டாரு...போதுமா நினைச்சது நடந்துவிட்டதா? சந்தோஷமா), வாங்க சந்தோஷ், ஏன் நீங்க இவ்வளவு இமோஷனலா பேசி இருக்கீங்கன்னு புரியல..... இந்த பதிவிலோ, உங்களிடமோ வாரமலர் படிப்பது தவறு என்றோ, அதனால் நீங்கள் தரக்குறைவானவர் என்றோ சொல்லியிருக்கிறேனா.?.
ஏதோ தெரியாதனமாக, உங்களின் “அந்துமணி ஜோக்” பார்த்து, யார் அந்த அந்துமணி என்று கேட்டவிட்டேன்..அதற்கு நீங்கள் டென்ஷன் ஆகி, கொடுத்த லெக்சரில், காது புண்ணாகி இன்னமும் சரியாகவில்லை. உங்களின் ஆவேச உரையின் தாக்கத்தில் நீங்கள் யாராலோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, உங்களை போன்று தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்களுக்காக (என்னையும் சேர்த்து) இந்த பதிவை போடும் படி ஆனது.
சந்தோஷ், அவர்கள் ஆற்றிய அவேச உரையின் சிறு சுருக்கும்:- ஏங்க அந்துமணி யாருன்னு கேட்கறீங்க, தெரியாதா..ஓ.........! நீங்க எல்லாம் இங்கிலீஷ் பத்திரிக்கை படிக்கறவங்க, இங்கிலீஷ் படம் பாக்கறவங்க, எப்போதும் இங்கிலீஷ்ல பீட்டர் விடறவங்க.. நாங்க அப்படியில்ல......(என்..காதுல ரத்தம் வர அளவுக்கு உரை தொடர்ந்தது........)
அவர் ஆவேச உரையின் போது தெரிந்து கொண்ட விஷயம், அவர் வாரமலர் மட்டும் படிக்கவில்லை , கிடைக்கும் எல்லா தமிழ் பத்திரிக்கைகள்(may be thro net), ஆங்கில செய்திகள் (NDTV,CNN) படித்தும் நிறைய பதிவுகள் போட்டிருக்கிறார் என்பதே.
//ஒருத்தரு என்னடான்னா நமக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குறாரு//
அந்த சின்னம் வேண்டான்னா சொல்லுங்க , உங்களுக்கு “நீச்சல் குளம் “ சின்னத்தை ஒதுக்கறோம்..இதுக்கெல்லாமா டென்ஷன் ஆகறது...
//Its MY LIFE AND MY OWN LIFE I know how to live, what to read. //
சரிதான்..உங்களுக்காக உங்க வாழ்க்கைய நாங்களா வாழமுடியும், இல்லை உங்களுக்காக வாரமலர் நாங்க படிக்கமுடியுமா...... என்ன சிவா..அர்த்தம் சரியா புரிஞ்சிகிட்டு பதில் சொல்லி இருக்கேனா?!!
//கருத்து சுதந்திரக் கொள்கைக்கு எதிரியா தனிமடலில் பேச நினைக்கும் கவிதாவுக்கும், சந்தோஷுக்கும் என் கண்டனங்கள்.. //
//தனி மடல் எல்லாம் ஒண்ணும் இல்லிங்க.. //
பொன்ஸ், தனியா திட்டுங்கன்னு சொன்னதால இப்போ நேரவே திட்டி தீக்கறாரு.. இன்னமும் நீங்க கண்டனங்களை தெரிவிப்பீங்களா..
//கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான்"னு சொல்றாங்களே அது தப்பா?//
நன்றி, சிவஞானம்ஜி, தப்பில்லை..
//சிவா இங்கே வாரமலர பத்தி ஏதும் கலகம் இழுத்து விடலயா.....?
என்னா திருத்தியாச்சா... :-? //
ராம், சிவா பற்றி தெரிந்துமா? இந்தமாதிரி எல்லாம் கேட்பீங்க.. அவர கேட்கவே வேண்டாம்..எல்லாம் தானா நடக்கும்..
//நான் கூடத்தான் தினமணி, கதிர்,கல்கண்டு, எல்லாம் படிக்கிறேன்.தமிழ்லே படிக்கிற இன்பம் தெரியணும்னா தமிழ்ப் பத்திரிகை கிடைக்காத நாட்டுக்குப் போய் வரணும். காய்ஞ்சு போய் திரும்புவாங்க,. //
ஓ..மனு, இப்படி வேற ஒரு காரணம் இருக்கா..
//(ஆங்கிலம் படிக்கவேண்டுமானல் இரண்டு மூன்று முறை படித்தால் தான் சரியாக புரியும் என்பதால் படிப்பதில்லை). //
சீனு, இப்படி உண்மையெல்லாம் சொல்லாதீங்க.. அப்புறம் உங்களையும் தரம் பார்க்க போறாங்க..
//யார் - குழப்பமாக இருக்கா? அட அந்துமணி தாங்க...(எப்படியோ தலைப்புக்கு சம்மந்தமா எழுதிட்டேன்)//
ரவி, அந்துமணி ய பற்றி மட்டும் பேசாதீங்க.. சந்தோஷ்கிட்ட வாங்கிகட்டனது போதும்மா சாமி...
//இதுக்கு நீங்க மாயவரத்தான நேரடியா திட்டிருக்கலாமே?//
இதுக்குமேல நான் என்னத்த சொல்ல போறேன்?//
சொல்லவேண்டாம் ராபின், புரிஞ்சிபோச்சு..
//வெளிபடும் : வெளிப்படும்
அம்மனி : அம்மணி //
நன்றிங்க எழுத்துபிழை?!! ("எழுத்து திருத்தம்" என்ற பெயர் உங்களுக்கு பொருத்தமா இருக்கும் சரியா?!!)
கவிதா.. இப்ப புரியுது..ஏன் உங்க காதுல ரத்தம் வந்ததுன்னு.. சந்தோஷ் இந்த பதிவுலே சூப்பரா லெக்சர் விட்டு இருக்காறே.. இனிமே அவர் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க.. என்னையே பேச விடாம பண்ண புண்ணியவான் ஆச்சே.. மறக்கமுடியுமா?!!
//ஆனா அணிகுட்டி உங்களை போட்டு பின்னி பெடலெடுக்குதே ! அதுதான் என் ரேஞ்சுக்கு பேசுது :))
கலக்கு அணிகுட்டி !! :)) //
ஜொள்ளு அண்ணே டாக்ஸ், டாக்ஸ், ஆமா தலயோட படம் பிளாக்ல கூட டிக்கெட் கெடக்காம போகமாயே இருக்கேன்..எனக்கும் கவிக்கும் 2 டிக்கட் அர்ரேஞ் பண்ண முடியுமா?!!
//அணிலு... நானும் இந்த கேஸூதான்! ஏதோ பெரியவங்கல்லாம் சீரியஸா பேசிட்டு இருக்காங்க. நாம பேசாம உக்காந்து வேடிக்கை பாக்கறதுதான் நல்லது! //
அருளு அண்ணாச்சி, ஆமா இங்க யார நீங்க பெரியவங்கன்னு சொல்றீங்க.. எல்லாமே நண்டு சிண்டு தான் போல இருக்கு..
//At 12:27 PM, எழுத்துப் பிழை பார்வையில்...
வெளிபடும் : வெளிப்படும்
அம்மனி : அம்மணி
//
நல்ல மற்றும் தேவையான பணி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ஆனா நம்ம பதிவு பக்கம் மட்டும் வந்துடாதீங்க... அப்புறம் இந்த வேலையை விட்டு ஓடிடுவீங்க :)
//அப்பாடா! "ஆ.நி." கவிதா. கை கொடுங்க. //
சீனு, என்ன புதுசா இனிஷியல் எல்லாம்.. (ஆண்களின் நிழலிலா- நான் விட்டாலும் நீங்க விடமாட்டீங்க போல இருக்கு)
//அதனால் பக்கதுல ஒக்காந்து இருந்த இங்கலீஸ்காரன் கிட்ட கொஞ்சி கூத்தாடி எழுதியது இது.//
சந்தோஷ், இங்கிலீஸ்காரி 'கிட்ட கொஞ்சி கூத்தாடி ன்னு வரணுமா?!!
இல்லை,
இங்கலீஸ்காரன் கிட்ட கெஞ்சி கூத்தாடி ன்னு வரணுமா- எது சரி.. உண்மைய சொல்லுங்க..
//முக்கியமா யாரு hmm sidney shelton //
// salvage garden கேட்போம் //
சந்தோஷ் , ஆமா இவங்க எல்லாம் யாரு..? பாருங்க..அந்துமணி யாருன்னு கேட்டப்ப பதில் சொன்ன மாதிரி இப்ப சொல்லக்கூடாது ஆமா..!! ஒரு காது தான் இருக்கு..அதுவும் போச்சுன்னா ..ரொம்ப கஷ்டம் சொல்லிட்டேன்..
வயத்தெரிச்சலா இருக்கு...ஏதாவது மாத்திரை இருக்கா..??
// இந்த பதிவிலோ, உங்களிடமோ வாரமலர் படிப்பது தவறு என்றோ, அதனால் நீங்கள் தரக்குறைவானவர் என்றோ சொல்லியிருக்கிறேனா.?. //
உங்களை யாருங்க சொன்னா ஊருல இதுமாதிரி நிறைய கோஷ்டி சுத்திட்டு இருக்கு. நீங்க தான் ரொம்ப நல்லவங்களாச்சே.
//யார் அந்த அந்துமணி என்று கேட்டவிட்டேன்//
நல்லா யோசிச்சி சொல்லுங்க இதுமட்டுமா கேட்டிங்க. இல்லையே வேற ஏதோ சொன்னா மாதிரி தெரியுதே.
//அந்த சின்னம் வேண்டான்னா சொல்லுங்க , உங்களுக்கு “நீச்சல் குளம் “ சின்னத்தை//
ஆகா எலெக்ஷன் கமிஷனே நடக்குதுபோல.. கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.
//சரிதான்..உங்களுக்காக உங்க வாழ்க்கைய நாங்களா வாழமுடியும், இல்லை உங்களுக்காக வாரமலர் நாங்க படிக்கமுடியுமா...... என்ன சிவா..அர்த்தம் சரியா புரிஞ்சிகிட்டு பதில் சொல்லி இருக்கேனா?!! //
தோடா தத்துவம் நோட் பண்ணுங்கப்பா நோட்பண்ணுங்க...
//என்னையே பேச விடாம பண்ண புண்ணியவான் ஆச்சே.. மறக்கமுடியுமா?!!//
அணிலு அடங்கமாட்டே போல ;)) சும்மாவே நீ போடுற ஆட்டம் தாங்காது இதுல அத்தோட படம் வேற போட்டாங்களா என்ன ஆட்டம் ஆட போறீயோ தெரியலை....
//சந்தோஷ், இங்கிலீஸ்காரி 'கிட்ட கொஞ்சி கூத்தாடி ன்னு வரணுமா?!! //
ஆகா.. அடுத்த ஆளு கிளம்பிட்டாங்கப்பா.. சிபியை எங்க காணோம்...
//சந்தோஷ் , ஆமா இவங்க எல்லாம் யாரு..?//
யாருக்கு தெரியும் அதே இங்கலீஸ்காரன் தான் இதையும் சொன்னான்.
உங்களுக்கு, பொன்ஸ¤க்கெல்லாம் எங்கதான் கிடைக்குதோ இந்தமாதிரிப் படங்கள். உண்மையிலெயே பாக்கறதுக்கு நல்லாருக்கு அங்க ஓடுற யானையும் இங்க ஆடுற அணிலுமாக:)) துளசிதளம் யானைகளும், பூனைகளும் அப்படித்தான், எனக்குப் பிடித்தவை.
அப்பாடா சந்தோஷ் கூல் ஆயிட்டாரு..
//உங்களுக்கு, பொன்ஸ¤க்கெல்லாம் எங்கதான் கிடைக்குதோ இந்தமாதிரிப் படங்கள்//
செல்வநாயகி, கூகுல் லிருந்து எடுத்தது தான்.. உங்களுக்கு என்ன படம் வேணும்னு சொல்லுங்க எடுத்து தருகிறேன்.
//ராம், சிவா பற்றி தெரிந்துமா? இந்தமாதிரி எல்லாம் கேட்பீங்க.. அவர கேட்கவே வேண்டாம்..//
உங்களா பார்த்தா பாவாமா இருக்கு கவிதா... :-)))
சிவா ரொம்ப நல்ல ஆளுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கிங்க போல அய்யோ பாவம் ....!
//எல்லாம் தானா நடக்கும்..//
இதுக்கும் அய்யோ பாவம்.
//வயத்தெரிச்சலா இருக்கு...ஏதாவது மாத்திரை இருக்கா..?? //
ரவி என்னாச்சு என்னா காரணம்.வாங்க பிரிகேட் ரோட்டுக்கு கூலாக்கி விடுவோம்.... ;-)
அம்மனி,
மொதல்ல ஒரு சின்ன பிட் அப்புறமா எதுக்கு இந்த பிட்டுன்னு சொல்றேன்..
பிட் ஆரம்பம்..
நான் கடவுள் என்கிற ஒரு விஷயத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காதவன் ஆனால் திருப்பதிக்கு சென்று இருக்கிறேன்..
ஏனென்றால் திருப்பதிக்கு போனா வாழ்வில் திருப்பம் என்கிற மூட நம்பிக்கைக்கு அடிபணிந்து அல்ல சில விஷயங்களை என் நண்பர்களூக்கு தெளிவுபடுத்த. பெருமாளின் தரிசனம் ஒரு நிமிடம்தான் அந்த ஒரு நிமிட தரிசனம் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது என் நண்பர்களின் நம்பிக்கை அங்கே கீயுவில் வருபவர்களை ஒழுங்குபடுத்த ஒருவர் எப்போதும் நின்று கொண்டு இருப்பார், என் நண்பர்களிடம் அவரைக்காட்டி ,ஏண்டா எப்ப பார்த்தாலும் அந்த ஆள் பெருமாளை பாத்துகிட்டே இருக்கான் ஆனா ஏண்டா அவன் இன்னும் வேலைக்காரானாவே இருக்காம் திருப்பம் ஏண்டா அவனுக்கு வரல என்றேன்....உடனே நண்பர்கள் ..தெரியும்டா உன்னைப்பத்தி நீ திருப்பதிக்கு வரன்னு சொன்னப்பவே நாங்க doubt ஆனாம்டா என்றார்கள்..உடனே நான் அடப்பாவிகளா .. கீதை ன்னு ஒரு புத்தகம் அடிமைகளை அடிமைகளாகவே வைத்திருப்பது எப்டின்னு சில யோசனைகளை சொல்லி இருக்குடா அதன்படி.. அவர் கடமையை செய்கிறார் பலனை எதிர்பார்க்காமல் ..அப்டின்னு நானே அதுக்கு பதிலும் சொன்னேன்..
திருப்பதிக்கு போனதாலே நான் மூடநம்பிக்கைகளை ஆதரிப்பவன் என்கிற முத்திரை குத்த முடியாது ஆனால் திருப்பதியை ஆதரிப்பவர்களை அப்படி முத்திரை குத்தலாம்.
வாரமலர் படிப்பவர்களை தரம் தாழ்த்தி பேசக்கூடாது ஆனால் ஆதரிப்பவர்களை??????
(ஆகா எப்டியோ ஒரு அனானி அர்ச்சனைக்கு டிக்கட் வாங்கியாச்சு ..வாங்கியும் கொடுத்தாச்சு ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
//வாரமலர் படிப்பவர்களை தரம் தாழ்த்தி பேசக்கூடாது ஆனால் ஆதரிப்பவர்களை??????//
என்ன சொல்லறீங்க தரண், எனக்கு இப்படி எல்லாம் சொன்னா புரியல... நேரடியா சொன்னாவே நம்ம மூளைக்கு லேட்டா போய் சேரும்..இப்படி சொன்னா..
(ஆகா எப்டியோ ஒரு அனானி அர்ச்சனைக்கு டிக்கட் வாங்கியாச்சு ..வாங்கியும் கொடுத்தாச்சு ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
உங்க டிக்கட் ட நீங்களே வெச்சிகோங்க.. எனக்கு அனானி யாரும் கருத்து சொல்ல வரது இல்லை. என் பதிவை படிக்க வருபவர்கள் எல்லாம் உங்கள மாதிரி, சிவா, அருள், சீனு,சந்தோஷ், பொன்ஸ், சிங்-செயகுமார் மாதிரி நேரடியா திட்டி தீத்துட்டு போவாங்க.. நம்ம கவிதா தானேனு ஒரு கரிசணம் தான். பேர் சொல்லாமா யாரும் வரது இல்லை.. டிக்கட் வாங்கறேன், விக்கறேன்னு வேலை எல்லாம் வேண்டாம்..
///(ஆகா எப்டியோ ஒரு அனானி அர்ச்சனைக்கு டிக்கட் வாங்கியாச்சு ..வாங்கியும் கொடுத்தாச்சு ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
உங்க டிக்கட் ட நீங்களே வெச்சிகோங்க.. /////
உங்க பதிவுல நான் பின்னுட்டம் போட்டா உடனே எனக்கு ஒரு அர்ச்சனை பின்னூட்டம் அனானியிடமிருந்து வரும் அதைத்தான் சொன்னேன் டிக்கட்வாங்கியாச்சுன்னு..
//வாரமலர் படிப்பவர்களை தரம் தாழ்த்தி பேசக்கூடாது ஆனால் ஆதரிப்பவர்களை??????//
என்ன சொல்லறீங்க தரண், எனக்கு இப்படி எல்லாம் சொன்னா புரியல... நேரடியா சொன்னாவே நம்ம மூளைக்கு லேட்டா போய் சேரும்..இப்படி சொன்னா.. .////
தோடா வந்டாங்க....கவிதா நீங்க ரொம்ப நல்லவங்கககககககக......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
//உங்க பதிவுல நான் பின்னுட்டம் போட்டா உடனே எனக்கு ஒரு அர்ச்சனை பின்னூட்டம் அனானியிடமிருந்து வரும் அதைத்தான் சொன்னேன் டிக்கட்வாங்கியாச்சுன்னு..//
இது வேற நடக்குதா.. நன்பர்களே அன்பர்களே வேறு யாருக்காவது இப்படி வந்திருக்கிறதா.. சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்...
//முக்கியமா யாரு hmm sidney shelton இவரோட புக்கை படிக்காட்டி உங்களை ஆங்கல வாசகர்கள் லிஸ்டில் சேத்துகவே மாட்டாங்க..//
அட! ஆமாங்க!! நான் கூட பாத்திருக்கென். (ஆஹா! அவளா நீயி!!)
//ஏனென்றால் திருப்பதிக்கு போனா வாழ்வில் திருப்பம் என்கிற மூட நம்பிக்கைக்கு//
தரண்,
என்னங்க! பேரரசுவால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல.
(உங்க பேர பாத்தா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-ல், "என்னய்யா நீ தான் தரேன் தரேன்னு தாராம இருக்கியா? அப்புறம் என்னா பேரு கங்காதரண், காவேரிதரேன்னு").
//செல்வநாயகி, கூகுல் லிருந்து எடுத்தது தான்.. உங்களுக்கு என்ன படம் வேணும்னு சொல்லுங்க எடுத்து தருகிறேன்.//
கவிதா, இதை இப்போத் தான் பார்த்தேன்.. அவ்வளவு பெரிய ஆள் ஆய்ட்டீங்களா?!!!
கலக்குங்க ;)
Post a Comment