வாங்க அக்காங்களா, தம்பிகளா.. வாங்க அண்ணன்களா தங்கச்சிங்களா.. கேளுங்க என் சோக கதைய.. இந்த அம்மணி கவிதா அவங்க முதல் பதிவுல என்ன சொல்லியிருக்காங்கன்னு கொஞ்சம் பார்த்துட்டு வாங்க.. அணில் குட்டிய ஏன் பிடிக்கும்ன்னு ஒரு சோக கதை இருக்குதுன்னு சொன்னாங்க.. நானும் ஏதாவது இண்டரிஸ்டிங்கா இருக்கும்னு நெனைச்சி அவங்கள என்ன ஏதுன்னு ஒரு கேள்வி க்கூட கேக்காம இந்த வேலையில சேர்ந்தேன்.. நேத்திக்கு அம்மணிக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த கதைய கேட்டேன்ங்க.. கேட்ட பிறகு எடுத்த முடிவுதான்..இந்த புது வேலை தேடும் படலம்.. தாங்க முடியலங்க..
என்ன கதைன்னு கேக்கறீங்களா.. அம்மணிக்கு 8 வயசு இருக்கும்போது, என்னமாதிரி ஒரு அணில் குட்டி (பிறந்த குட்டி) இவங்களும் இவங்க அண்ணனும் சேர்ந்து எங்கேர்ந்தோ பிடிச்சிட்டு வந்து இருக்காங்க.. அம்மணி ரொம்ப அடம் பிடிச்சி இந்த அணில் குட்டிய நான் தான் வளர்பேன்னு அவங்க கிட்டேயே வச்சிக்கிட்டாங்க.. சரி ஆசைப்பட்டு கூட்டிட்டு வந்தாங்களே.. ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களான்னு பார்த்தா..அதான் இல்லை.. அந்த அணில் குட்டிய இம்ச பண்ணி இருக்காங்க..எப்படின்னு கேக்கறீங்களா.. சொல்லும் போதே எனக்கு அழுகை அழுகையா வருதுங்க.. ம்ம்ஹ்ம்ம்ம்ச்ச்ச்ச்ச்ச் (ஒன்னும் இல்ல மூக்கை சிந்திக்கிட்டேன்.. anybody..please give a kerchief ...!) அதுக்கு அனிதா ன்னு பேர் வச்சி, ஈர துணியால அது மூஞ்சிய தொடச்சி, பவுடர் போட்டு.. பொட்டு வச்சி.. அய்யோ..என்னா அக்கரமம் பாருங்க... நெசமாவே அந்த அணில் குட்டி பாவம்டா சாமீ..... அடுத்தது.. ஒரு பெரிய கப் நிறையா பால் கொண்டாந்து.. இங்க் பில்லரை வச்சி அது வாயா தொரந்து சகட்டு மேனிக்கு பால ஊத்தியிருக்காங்க... சாப்பாடு ஊட்டறாங்களாமா.. என்னடா அக்கரமம் இது...! அது மூச்சு முட்ட குடிச்ச பிறகாவது விட்டாங்களா.. அதுக்கு தனியா ஒரு குட்டி பெட் எல்லாம் தச்சி படுத்து தூங்க வச்சி இருக்காங்க.. பாவம் அது குட்டியினால இவங்க பண்ண கொடுமையெல்லாம் தாங்கி கிட்டு ஓட தெரியமா பொறுமையா இருந்து இருக்கு..
அதோட விட்டாங்களா.. தனியா டப்பாகுள்ள 2 நாள் வச்சி பாத்திருக்காங்க.. ஓவரா பாசம் பொங்கி 3 வது நாள், அம்மணி மதியம் தூங்க போகும் போது அணில கொஞ்சரேன் பேர் விழின்னு அதை பெட்’டோட இவங்க பக்கத்துல, பெட் ல படுக்க வச்சிட்டு, அத கொஞ்சரேன் ன்னு இம்சை பண்ணிட்டு தூங்கி போய்ட்டாங்க.. அம்மணி தூங்கறத சொல்லறதுன்னா தனி பதிவுதான் போடனும்.. ரூமையே ஒரு ரவுண்ட் அடிப்பாங்க.. அப்படி ஒரு அடக்கம்.. பெட்ல தூங்கனவங்க.. தூக்கதுல ரவுண்டு அடிக்கறேன்னு அந்த குட்டி பாப்பா அணில் குட்டி மேலயே..போய் உருண்டு படுத்தாட்டாங்க.. ஆஆஆஅங்க்க்.... ஆஆஅங்க்க்க்…. ஆஅயேஆஆ..ஒன்னும் இல்லலங்க திருப்பியும் அழறேன்.....இப்படி ஒரு கொடுமைய நீங்க எங்கையாவது கேட்டு இருக்கீங்களா?..
தூங்கி ஏன்ச்சி.. அனிது அனிது ன்னு தேடறாங்க.. எங்க அனிது.. பரலோகம் அனுப்பிட்டு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டா வருமா அனிது...... அது கால கெளப்பிக்கிட்டு பல்ல துருத்திக்கிட்டு செத்து போய் கிடந்தது..... அம்மணிக்கு பாத்தவுடனே ஒரே அதிர்ச்சி.. அவங்க சவுண்டு தான் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்குமே... என் அணில் அணில் வேணும்னு ன்னு ஓவரா சவுண்டு போட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க.. யார் வந்தும் நிக்கல..3 - 4 நாள் அழுதுட்டு விட்டு இருக்கலாம் இல்ல.. இப்ப பாருங்க.. விடாம..என்னைய புடிச்சிட்டு வந்து இப்போ கொடும பண்றாங்க..
நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு.... வாழ்க்கையில சம்பாதிக்கனும் தான் அதுக்காக..இப்படி என் உயிர இந்த அம்மணி க்கிட்ட பனையம் வச்சி எல்லாம் வேல செய்ய முடியாதுப்பா.. அப்பவாவது குட்டி பாப்பா வா இருந்தாங்க.. இப்போ இருக்கறதோ பீப்பா.....ஒன்னுகெடக்க ஒன்னு ஆகி....என்னால முடியாதுப்பா.. எப்ப இந்த கதைய கேட்டேனோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்..வேற வேல தேடி என்னோட life ஐ safe ஆ செட்டில் ஆக்கிகனும்னு....
யாராச்சும் பெரிய மனசு பண்ணி என்னோட கீழ்க்கண்ட புரொபைல பார்த்து வேல குடுங்கோ.. .
பெயர் :- அணில் குட்டி அனிதா
அனுபவம்: 4 மாதம் (கவிதா’வுடன் பிளாக் எழுதிய அனுபவம்)
பேச்சு திறன் : ஓவர் ஆ இருக்கு
(அருளையும், சந்தோஷயையும் கேளுங்க சொல்லுவாங்க)
எழுதும் திறன் :- அதுவும் ஓவர் ஆ இருக்கு
(ஸ்பெஷல் கவிதை எழுதறது..)
கண்டிஷன் :-
1. நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..
2. அடிக்க கூடாது
3. ஓவரா கொஞ்சவும் கூடாது
4. கொய்யா பழம் மட்டும் குடுத்து எஸ்கேப் ஆகக்கூடாது.. ஒரு முந்திரி பழம், பாதாம் பருப்பு, ஆப்பில், பேரீச்சம் பழம், பால்னு குடுத்து என் உடம்ப தேத்தனும்..(அம்மணி நம்மல அந்த மோசாமான ரேஞ்ல வச்சிருக்காங்க)
இந்த பதிப்புல No kavitha ..only peter தாத்தா..
பீட்டர் தாத்தா:- You may be disappointed if you FAIL, you are doomed, if your don’t TRY.
அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...
Posted by : கவிதா | Kavitha
on 14:23
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
31 - பார்வையிட்டவர்கள்:
அணில் குட்டி அனிதா,
உன்னை யாரு வேணும்னாலும் வேலைக்கு சேர்த்துக்கலாம். ஆனா கவிதா அக்கா மாதிரி பேச்சு சுதந்திரம் குடுத்து கண்ணு மாதிரி பாத்துப்பாங்களா...?
அதனால ஒரு 2 வருஷம் அவங்க கிட்டயே வேல பாரு. அப்புறம் அவங்களுக்கெதிராவே ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுடலாம். என்ன நாஞ்சொல்றது?
விழிப்பு அண்ணாச்சி, நல்லா விழிச்சித்தான் இந்த பதிவ படிச்சீங்களா.. இந்த அம்மணி அணில்குட்டிக்கு செய்த கொடுமைய படிச்ச பிறகுமா..என்னைய இன்னும் 2 வருஷம் வேல பாக்கா சொல்றீங்க.. உங்களுக்கு இது ஞாயமா இருக்கா?!!
அணில் இந்த மேட்டர தெரிந்த பிறகும் அவங்க கிட்ட இருப்பதும், சென்னை மின்சார ரயில் முன்னாடி விழுவதும் ஒன்னு தான். அப்புறம் உன் இஷ்டம்.
மேனகா காந்தி இ-மெயில் ஐ.டி உனக்கு அனுப்புறேன். இங்க எங்கிட்ட சொன்ன மேட்டர, அதான் அணில் குட்டிய கொடுமை படுத்தி கொன்ற மேட்டர அவங்க கிட்ட சொல்லு, மிச்சத்த அவங்க பாத்துப்பாங்க. நாம் வேணுமுனா இங்கள வேலூர்ல, இல்ல பாளையம்கோட்டையில் போயி பாத்துக்கலாம். என்ன சொல்லுற
//இங்க எங்கிட்ட சொன்ன மேட்டர, அதான் அணில் குட்டிய கொடுமை படுத்தி கொன்ற மேட்டர அவங்க கிட்ட சொல்லு, மிச்சத்த அவங்க பாத்துப்பாங்க. நாம் வேணுமுனா இங்கள வேலூர்ல, இல்ல பாளையம்கோட்டையில் போயி பாத்துக்கலாம். என்ன சொல்லுற //
சிவா, நான் ரொம்ப சின்ன பொண்ணு, நிஜமாவே தெரியாம செய்தது.. நான் தூங்கி என் அணில்மேல படுபேன்னு எனக்கு தெரியாது.. நான் எவ்ளோ கஷ்டபட்டிருந்தா இன்னமும் என் மனசுல அது ஞாபகம் இருக்கும்..அதுக்காக தான் இந்த அணில்குட்டி என்னை என்ன சொன்னாலும் பொறுமையா கேட்டுக்கறேன் தெரியுமா.. நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்..ன்னு..
அக்கா ஒரு வாட்டி தப்பு செஞ்சிட்டாங்கல்ல... திரும்பவும் அதே தப்பை செய்யமாட்டாங்க.
அதனால பயப்படாம இரு. நாங்க எல்லாம் இருக்கமில்ல
அது சரி...
நீ இந்த பதிவு எழுதுனது அக்காவுக்கு தெரிஞ்சா பெண்டு நிமித்திட மாட்டாங்க?
எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இரு. சரியா?
//அணில் இந்த மேட்டர தெரிந்த பிறகும் அவங்க கிட்ட இருப்பதும், சென்னை மின்சார ரயில் முன்னாடி விழுவதும் ஒன்னு தான். அப்புறம் உன் இஷ்டம்.
மேனகா காந்தி இ-மெயில் ஐ.டி உனக்கு அனுப்புறேன். இங்க எங்கிட்ட சொன்ன மேட்டர, அதான் அணில் குட்டிய கொடுமை படுத்தி கொன்ற மேட்டர அவங்க கிட்ட சொல்லு,//
சிவா அண்ணாச்சி வாங்க, நீங்களாவது என் பிரச்சனைய புரிஞ்சிக்கிட்டீங்களே! நான் தான் வேற வேல தேடறேனே.. நீங்களும் சொல்லுங்க ஏதாவது இருந்தா.. அப்புறம் மேனகா காந்தி இமெயில அனுப்புங்க அம்மணிய கவனிக்கலாம்..
விழிப்பு அண்ணாச்சி, இனிமே அக்கா நம்ம மேல கை வைக்க விட்டுடுவேனா.. அதான் பழைய மேட்டர் நம்ம கைல இருக்கு இல்ல.. கைய கிய்ய ஓங்கினாங்க.. பாளையங்கோட்டைதான்..
//நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்..ன்னு..//
கவிதா, இந்த பதிவில் நீங்க வர மாட்டீங்கனு அணில் சொன்னிச்சு. நீங்க என்னடா வந்து டக்னு வந்து பதில் சொல்லுறீங்க.
எனக்கு புரிதுங்க, உங்க பீலிங்க்ஸ், ஏதோ தெரியாம ஒரு தடவை தவறு பண்ணி வீட்டீர்கள். அதை இன்று வரை நினைத்து பீல் பண்ணுறீங்க பாருங்க. நீங்க உண்மையிலே கிரேட்ங்க.
//சிவா அண்ணாச்சி வாங்க, நீங்களாவது என் பிரச்சனைய புரிஞ்சிக்கிட்டீங்களே!//
ஆமாம் அணில். ஐ.டி இங்கன சொல்ல மாட்டேன். அம்மணி பார்த்தியா உன்கிட்ட கேட்ட கேள்வி எல்லாம் திருட்டு தனமா படிச்சுட்டு அதுக்கு சாக்கு வேற சொல்லுறாங்க. பண்ணுவதையும் பண்ணி விட்டு ஏதோ தெரியாம பண்ணி விட்டேன்னு படம் காட்டுறாங்க. மன்னிப்பு கேட்டா செய்தது தப்பு இல்லனு ஆயிடுமா...
இப்படி எல்லாரையும் மன்னித்து கொண்டே இருந்தால் அணில் என்ற உயிரினமே இந்த உலகத்தில் இல்லாமல் போயி விடும். அணிலு இந்த மேட்டர விடாத.... எப்படியாச்சம் அவங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுற வழிய பாரு முதல.
ஐயகோ அணிகுட்டி இப்படி வரலாறைக் கேட்டு கதறலாமா? இதேமாதிரி நானும் சின்ன வயசிலே ஒரு அணிக்குட்டி வளர்த்தேன்.ஒரு நாளு ரெண்டு நாளு இல்லே ஒரு வருசம் வளர்த்தேன். ஆனா எங்க வீட்டு பூனைக்கிட்டே இருந்து அதைய காப்பாதிய என்னால பக்கதுவீட்டு பூனைகிட்டே இருந்து காப்பாத்த முடியலையே:((
ஆயிரம்தான் இருந்தாலும் கவிதாக்காகிட்டே கோச்சுக்காத ! நான் சொல்றேன் அக்கா உனக்கு திராச்சை, அரேபியாவுல இருந்து முந்திரி, பாதாம்னு வாங்க தந்து தேத்துவாங்க பாரு! கவிதாக்கா காதிலே விழுந்துச்சா !! :))
சிவா இது சரியில்ல.. ஒன்னு என் பக்கமா பேசுங்க..இல்ல அணில் பக்கமா பேசுங்க.. இப்படி 2 பேரையும் சப்போர்ட் செய்யறேன்னு, வம்புல நடுவுல மாட்டிக்க போறீங்க பாருங்க..
//கவிதாக்கா காதிலே விழுந்துச்சா !! :)) //
ஜொள்ஸ், விழுந்துது.. நீங்களும் அணில்குட்டி பெட்'டா..?!!
ஜொள்ளு அண்ணே வாங்க வாங்க கவிதா ஒருத்தர் தான் இப்படின்னு பார்த்த நாட்ல நிறைய பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க போல.. மேனகா மேடத்துக்கு போன் போட வேண்டியது தான்...
//அணிலு இந்த மேட்டர விடாத.... எப்படியாச்சம் அவங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுற வழிய பாரு முதல. //
சிவா அண்ணாச்சி, விட்டுடுவோமா..நாங்க.. யாரு..எங்க ரேன்ஜ் மேனகா காந்தி அளவுக்கு போகுமுன்னு அம்மணிக்கு தெரியவானாம்.. சும்மா இத வச்சியே அம்மணிய அடக்கி வெப்போமில்ல..!
ஏம்மா அனிதா!
எப்ப வேணா நம்ம பக்கம் வந்து சேந்துக்கன்னு நான் தான் ஒனக்கு ஒரு ஓபன் ஆஃப்ர் குடுத்து இருக்கேனே? அதை மறந்துட்டியா? இப்படி எல்லாம் நீ கொடுமை அனுபவிக்கிறதை நெனச்சா எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம பக்கம் வா...ஒன்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தூக்கி வுட்டுடறோம்.
அணில் குட்டி அனிதா,
குழந்தைகளாக செய்த தவறுகள் குழந்தையைச் சேராது என்று தெரியாதா உங்களுக்கு? அதுவும் தனது தவறை தானே ஒத்துக் கொண்டு அதற்காக மனம் வருந்தும் கவிதா உங்களை நன்கு பார்த்துக் கொள்வார். மனக் குழப்பங்களை விட்டு இங்கேயே இன்னும் ஒரு சில ஆண்டுகள் வேலை பார்த்து அனுபவத்தையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
அணிலு,
அன்-நோன் டெவிலுக்கு நோன் டெவில் பெட்டர் என்கிற பழமொழிய மறந்துடாத கண்ணு !
//நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..//
இருங்க போலி கிட்ட போட்டுக் குடுத்திடுறேன்.
ஆகா அனிதா, நாட்டுல உன் பரம்பரைக்கே பெரிய சோகம் நடந்து இருக்கேமா.. இது தெரியாம உன்னைய ஒரு ரெண்டு முறை திட்டிப்போட்டேன். எப்படியாச்சும் உயிரை கையில் புடிச்சிகிட்டு இரு சமயம் பாத்து ஓடிடு. இல்லாட்டி கவிதாக்கா பையன் கிட்ட சொல்லி வண்டலூர் கூட்டிட்டு போக அடம்பிடிக்கச்சொல்லு அப்படியே நீயும் கூட போயி உன்னோட இனத்தோட சேந்துடு அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்.
//நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்//
பாவம் கவிதா போனா போகட்டும் அனிதா பாவம் இல்ல விட்டுடுங்க.. தமிழ்மணத்துல பல பேர் இப்படி பல ஜீவன்களை நடத்தியும், ஓட வெச்சும்(அனிதா பாருங்க ஓடி ஓடி அத்தோட படமே தேஞ்சி போச்சி), ஒரு மாதிரி போஸ்ல நிக்க வெச்சும்(நம்ம சிவா மாதிரி) கொடுமை படுத்துறாங்க இதை கேட்பதற்கு யாரும் இல்லையா?
//அதனால பயப்படாம இரு. நாங்க எல்லாம் இருக்கமில்ல//
அனிதா சொல்லுது.. விழிப்பு அண்ணாச்சி நீங்க இருப்பிங்க நான் இருப்பேனா இல்லையான்னு தெரியலையே.
அனிதா!
இன்னொரு "கருத்தும்" இருக்கு. சொல்ல மறந்துட்டேன். நீ ஏன் இன்னொருத்தர் கிட்ட வேலை செய்யனும். ஒனக்கு இருக்குற தகுதிக்கும் தெறமைக்கும் நீயே ஒரு தொழில் அதிபராகி(entrepreneur) ஒரு நாலு பேருக்கு வேலை போட்டு குடுக்கலாம்ல?
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில்
அணில்குட்டிகள் நடத்த வந்தோம்"னு யார்னா உன்னை பத்தி நாளைக்குப் பாட்டெழுதுவாங்க இல்ல?
//..ஒன்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தூக்கி வுட்டுடறோம்.//
தல, சென்னையில மழ ஓவரா இருக்கு, நீங்க வேற இப்படி பாச மழ பொழிஞ்சி என்னைய நனைக்கறீங்க.. ரொம்ப டாக்ஸ், ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டுபோறேன்னு சொன்ன பிறகும் இங்க எனக்கு என்ன வேல... இதோ வருகிறேன்..
//கவிதா உங்களை நன்கு பார்த்துக் கொள்வார். மனக் குழப்பங்களை விட்டு இங்கேயே இன்னும் ஒரு சில ஆண்டுகள் வேலை பார்த்து அனுபவத்தையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்//
சிவகுமார் சார், நீங்க என்னவோ சொல்றீங்க, ஆனா எனக்கு இன்னும் நம்பிக்கை வரல, பாக்கலாம்..
//அன்-நோன் டெவிலுக்கு நோன் டெவில் பெட்டர் என்கிற பழமொழிய மறந்துடாத கண்ணு ! //
உஷா அக்கா, சரிதான் ஆனா பாருங்க தல எவ்ளோ அன்பா கூப்பிடறாரு.. அவருதான் எல்லாருக்கும் தெரிஞ்சவராச்சே.. போயிடவா..என்ன சொல்றீங்க..
//இருங்க போலி கிட்ட போட்டுக் குடுத்திடுறேன். //
வாங்க சீனு அண்ணே, ஞாயமா இது உங்களுக்கு, கவிதா மாதிரி நான் என்ன ஓவராவா சவுண்டு விடறேன்.. என் வேல உண்டு நான் உண்டுன்னு இருக்கேன்.. போலி அண்ணனுக்கும் அது தெரியும், அவரு ஏதாவது சொன்னாலும் அன்பா அவரை பிராண்டிட மாட்டேன் பிராண்டி..என்னைய பத்தி அவருக்கு தெரியும், என் பிராண்டல பத்தியும் அவருக்கு தெரியும்..நீங்க நடுவுல வந்தா உங்களுக்கும் பிராண்டல் தான்..
பேரன்புமிக்க பெருந்தகை, என் பேச்சாற்றல் மேல் பொறாமை கொண்டு என்னை பேசவிடாமல் கவிதாவின் மூலம் நிறைவேற்றி கொண்ட பேராற்றல் பொருந்திய சவுண்டு செம்மல் சந்தோஷ் ஐயா அவர்களே...
(போதுமா மரியாத..இதுக்காகவது நான் இங்க இருந்து முதல்ல ஓடனும்ப்பா.. ஒவ்வொரு வாட்டியும் உங்களுக்கு மரியாத குடுக்கவே என்னால முடியலப்பா ஏதோ...கச்மாலம், சோம்பேறி ன்னு ஈசியா ஆரம்பிச்சோமான்னு இல்லாம..)
//இது தெரியாம உன்னைய ஒரு ரெண்டு முறை திட்டிப்போட்டேன்.//
இப்பவாவது என்னைய பத்தி தெரிஞ்சிக்கிட்டீங்களே..அதுபோதும்..சரிஅப்படியே அம்மணிக்கிட்ட சொல்லி கொஞ்சம் பேச்சு தடைய ரிலாக்ஸ் பண்ண சொல்லுங்க..
//கவிதாக்கா பையன் கிட்ட சொல்லி வண்டலூர் கூட்டிட்டு போக அடம்பிடிக்கச்சொல்லு அப்படியே நீயும் கூட போயி உன்னோட இனத்தோட சேந்துடு அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்.//
இவங்க வீடே வண்டலூர் தான், தனியா வேற போகனுமா.. பெத்து வச்சது கொரங்கு, கட்டிக்கிட்டது டைனோசர், இவங்க...................... உங்க எல்லாருக்கும் என்ன வேணுமோ fill பண்ணிக்கோங்க..
//தா சொல்லுது.. விழிப்பு அண்ணாச்சி நீங்க இருப்பிங்க நான் இருப்பேனா இல்லையான்னு தெரியலையே. //
ஆமா, எப்போ நீங்க டப்பிங் எல்லாம் பண்ண ஆரம்பிச்சீங்க.. உங்க ப்ளாக்ல கூட பாத்தமாதிரி இருக்கு.. அடிக்கடி வந்து எனக்காக பேசிட்டு போங்க. எனக்கு வேல மிச்சம்... (அணில் மனசு.:- அனிது அடங்கு....போதும்..சந்தோஷ் பத்தி தெரிஞ்ச பிறகும்..வாய வுடாத.. நிறுத்திக்கோ..) ஹி..ஹி..ஹி.. ..எல்லாம் சும்மா தமாசு.. சும்மா.. லுலுலாயி..
அணில்குட்டி அனிதா, இப்ப புதிசா என்ன சண்டை கவிதா கிட்ட.?
உங்க யூனிஅனில் எழுதிப்போடக் கூடாதா/
என்ன இருந்தாலும் கவிதா மாதிரி வருமா? எவ்வளோ பெரிசு உடம்போ அவ்வளோ பெரிசு மனசும்.
அப்போ போன அணில் தான் இப்பொ மறுஜன்மம் எடுத்து என்மேல் பாசத்தைக் கொட்டுர்துனு என்கிட்ட கூட சொன்னாங்க.
உடன்பிறப்பை எல்லாம் மாத்த முடியாதும்ம. நல்ல படியா இருக்கற இடத்திலேயே இருந்துக்கோ.மா.வா.ச.(மாமியார்கள் வளர்ப்பு சங்கம்). தலைவி
//அப்புறம் அவங்களுக்கெதிராவே ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுடலாம். என்ன நாஞ்சொல்றது?//
அப்போ கவிதா இப்போ சொந்த செலவிலையே சூன்யம் வெச்சிக்கிடிருக்காங்கன்னு சொல்றீங்க. (அப்பாடி! 'சொ.சூ.வெ'-ஐ use பன்னிட்டேன்)
//
போலி அண்ணனுக்கும் அது தெரியும், அவரு ஏதாவது சொன்னாலும் அன்பா அவரை பிராண்டிட மாட்டேன் பிராண்டி..என்னைய பத்தி அவருக்கு தெரியும், என் பிராண்டல பத்தியும் அவருக்கு தெரியும்.
//
சரி! சரி!! சரண்டர் ஆயிட்டீங்க. அதனால் விட்டுடறேன். (இல்லேன்னு சொல்லுங்க பாப்போம்).
//போதுமா மரியாத..இதுக்காகவது நான் இங்க இருந்து முதல்ல ஓடனும்ப்பா.. //
கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் பரவாயில்லை ஏற்கனவே உனக்கு கொடுமை நடக்குது இதுல நான் வேற எதுக்கு பொழைச்சிப்போ..
//இவங்க வீடே வண்டலூர் தான், தனியா வேற போகனுமா.. பெத்து வச்சது கொரங்கு, கட்டிக்கிட்டது டைனோசர்//
இப்பத்தான் தெரியுது உன்னைய ஏன் எல்லாரும் கொல்ல நினைக்கிறாங்க இப்ப வரைக்கும் கவிதா மட்டும் தான் இதுக்கு மேல் வீட்டுல இருக்குற மத்தவங்களும் கொலை வெறியோட தாக்க போறாங்க...
//ஹி..ஹி..ஹி.. ..எல்லாம் சும்மா தமாசு.. சும்மா.. லுலுலாயி.. //
அந்த பயம் இருக்கட்டும்.
இங்க பதிவு பண்ணினவுங்க யாரும் இதுல இருக்கற உ.கு. வை புரிஞ்சுக்கல!
நா வாழ்த்தறேம்மா!
பயோடேட்டா அல்லாம் குடுத்துருக்கே!
சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாத்து அனுப்பி வெக்கிறேன்!
நல்லா இரும்மா!
அதான் நல்ல வேலை!!
//சரி! சரி!! சரண்டர் ஆயிட்டீங்க. அதனால் விட்டுடறேன். (இல்லேன்னு சொல்லுங்க பாப்போம்). //
சீனு அண்ணே வேணாம், அணிலுக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கற புலிய (சிவா அண்ணே கொஞ்சம் உங்க புலிய ரெண்டுக்கு அனுப்புங்க) தட்டி எழுப்பாதீங்க.. நாங்க பாக்க தான் அணில், ஆவேசமா எழுந்தா புலி, சிறுத்தை, சிங்கம்..ஆங்..
நாங்க யார்க்கிட்டயும் சரண்டர் ஆனாதா சரித்திரம், பூலோகம், விஞ்ஞானம், கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் எதுவும் இதுவரை இல்லை என்பதை மிகுந்த வீரத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
நாங்கள் யாரிடமும் வம்புக்கு போவதில்லை, போகாமல் இருக்கும் போதே யாராவது எங்களை சீண்டினால் பிராண்டலை நாங்கள் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்பதையும் இங்கு சபையோருக்கு தெரிவித்து கொள்கிறோம்..
சீனு அண்ணே இந்த speech போதுமா?! ஆனா மைக் தான் இல்ல..கொஞ்சம் என் கீச் குரல் எல்லாரையும் ரீச் பண்ணியிருக்குமான்னு தெரியல..
//என்ன இருந்தாலும் கவிதா மாதிரி வருமா? எவ்வளோ பெரிசு உடம்போ அவ்வளோ பெரிசு மனசும்.//
மனு அம்மா, கவிதா தனியா எங்கயாவது கூட்டிட்டு போய் டீரீட் வச்சாங்களா.. ஓவரா சப்போர்ட் பண்றீங்க..?!! சரியில்ல ஆமா..
//யாரும் இதுல இருக்கற உ.கு. வை புரிஞ்சுக்கல!
நா வாழ்த்தறேம்மா!
பயோடேட்டா அல்லாம் குடுத்துருக்கே!
சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாத்து அனுப்பி வெக்கிறேன்!
நல்லா இரும்மா!
அதான் நல்ல வேலை!! //
ஐய்யா!..s.k சார் நீங்க தான் சரியான ரூட் க்கு வந்து இருக்கீங்க.. ஆனாலும்.. போங்க சார் எனக்கு வெக்கமா இருக்கு.. :) சொல்லறதுக்கு..நல்ல மாப்பிள்ளையா அனுப்பி வைங்க :)..
அப்பாடா! இன்னைக்கு இது போதும்!!
Post a Comment