“மிக அதிகமாகி வரும் திருமண முறிவுகள்”, இந்த பதிப்புக்கு காரணம். ஆண்களின் நிழலில் பெண்கள் இருப்பது தான் என்றும் பாதுகாப்பானது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண், தந்தையாக, கணவனாக, மகனாக, தம்பியாக, அண்ணனாக, நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு உறவு முறையை பெண் விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். ஆனால் கணவன் என்ற உறவு மட்டும் தான் கடைசி வரை நிலைக்கிறது. ஏன் மற்ற உறவு முறைகளுடன் வராத மன வேறுபாடு கணவருடன் மட்டும் வருகிறது என்று புரியவில்லை.?. அப்படி மன வேறுபாடு வரும் போது அதை நம் அறிவைக் கொண்டு கடந்து வர வேண்டுமே தவிர பெண்ணுரிமை பேசி நம் வாழ்க்கையை நமே கெடுத்துக்கொள்ள கூடாது.
கணவர் என்ற ஒரு ஆணிடமே, ஒரு பெண்ணால் சேர்ந்து வாழ முடியாத போது எப்படி விலகி, தனியே வெளி உலகத்தில் உள்ள ஆயிரம் ஆயிரம் ஆண்களை சமாளிக்க முடியும். பெண்ணுரிமை பேசும் பல பெண்களுக்கு இந்த விஷயம் புரிவது இல்லை. பிரச்சனை என்பது ஆண், பெண் இருவருக்கும் உண்டு. எத்தனை வீடுகளில் பெண்களால் ஆண்கள் அவதிக்குள்ளாகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. என் கணவர் அடிக்கடி சொல்லும் வசனம், “பெண்னுக்கு பெண் தான் எதிரி ஆண்கள் இல்லை” என்பது. பெண்கள் பிரச்சனைக்கு மாமியார், நாத்தனார், அண்ணி, அக்கா..என்று பெண்களையே பட்டியல் போடலாம்.
பெண்கள் தேவை இல்லாமல் ஆண்களை சாடுகிறார்கள் என்பது என் கருத்து.. ஒரு உலக மகளிர் தினத்தன்று, தொலைகாட்சியில் சில பெண் பிரபலங்களை மகளிர் தினம் பற்றிய அவர்களின் கருத்து கூற பேட்டி எடுத்தார்கள். அதில் நடிகை பானுமதி சொன்ன கருத்து, “ அன்றிலிருந்து இன்று வரை பெண் தானே குழந்தை பெற்றுக் கொள்கிறாள்?. அதில் எந்த மாற்றமும் இல்லையே?. அப்புறம் என்னங்க? பெண் எப்பவும் பெண்ணா இருக்கணும்” இது என்னை வெகுவாக கவர்ந்தது. உண்மையும் அது தானே.
ஆண், பெண் என்ற வித்தியாசம் வேண்டாம். யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். ஒருவரை ஒருவர் புரிந்து, அன்பு சேர்த்து வாழ்வது தானே வாழ்க்கை. ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா துறைகளிலும் கால் பதிக்கிறார்கள், பொருள் ஈட்டுகிறார்கள். அதனால் பெண்கள் தனியாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள் நல்ல சம்பாத்தியம் மட்டுமே சந்தோஷமான வாழ்க்கையை கொடுத்துவிடுமா? அதிகமான படிப்பும், அதற்கான வேலையும் தான் ஒரு பெண் துணிந்து தன் திருமண வாழ்க்கையை முறித்து கொள்ள காரணமா?.
பெற்றோர்களும் தன் பெண்களுக்கு பரிந்து பேசி அவர்கள் வாழ்க்கையை கொடுக்காமல், அவளின் பாதுகாப்பு என்பது கடைசி வரையில் கணவன் தான் என்று புரிய வைக்க வேண்டும். நிறைய பெண்களின் வாழ்க்கையில் பெற்றவர்களின் ஊக்கமும் இப்படி பட்ட முறிவுகளுக்கு காரணம் ஆகிறது.
நான் பிரச்னை இன்றி இருப்பதால் மிக தெளிவாக கருத்து கூறுகிறேன் என்று புரிந்து கொள்ளாதீர்கள். பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை, அதில் நானும் ஒருத்தி.. ஆண்களும், பெண்கள் தங்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவர்கள் என்பதை உணர்ந்த்து நடந்து கொள்ளலாம்..
ஓளியின் திசைக்கேற்ப நிழலின் நீளம் அவ்வப்போது குறையும், கூடும். ஆண்களின் நிழலில் பெண்கள் இருப்பது தான் இயற்கை அமைத்து கொடுத்தது.. அதை நாம் தான் கவனித்து சரியான திசையில் திருப்பி நாம் நிற்க வசதியாக்கி கொள்ள வேண்டும்.
அணில் குட்டி அனிதா:- அய்யய்யோ.....போதும் கவிதா...... உங்க உபதேசம். நிறுத்துங்க.. அநியாயத்துக்கு நல்லவங்களா காட்டிக்காதீங்க. என்னவோ உங்க hubby கிட்ட நீங்க ரொம்ப adjust செய்து கிட்டு இருக்கற மாதிரி படம் போடறீங்க..!. படம் போட ஒரு அளவு வேணாம். இது உங்களுக்கே கொஞ்சம் over ஆ தெரியல.. வீட்டுல நீங்க பண்ற ராவுடி தாங்க முடியாம..பாவம்..அந்த மனுஷன் என்ன கஷ்ட படறார்னு அந்த எரியாவுக்கே தெரியும். ஊருக்கு தான் உபதேசமா உங்களுக்கு இல்லையா?... .. . .
என்னங்க..கைக்கட்டி கவிதா விட்ட கதையெல்லாம் serious ஆ கேட்டது போதும். கதைய பத்தி கொஞ்சம் நிறையவே திட்டி லெட்டெர் போடுங்க. அப்பதான் இந்த அம்மணி இப்படி எல்லாம் உபதேசம் பண்ணி நம்ம உயிர வாங்க மாட்டாங்க.... அப்புறம் இந்த அம்மணி கிட்டே இருந்து உங்களை எல்லாம் இப்படி காப்பாத்தரதனால உணர்ச்சி வசப்பட்டு என்னை புகழ்ந்து லெட்டர் போட்டு என் seat யை கிழிச்சிடாதீங்க.... அம்மணி இப்பவே ரொம்ப உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ன்னு இருக்காங்க.....
.
ஆண்களின் நிழலில்... .. ..
Posted by : கவிதா | Kavitha
on 13:26
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
26 - பார்வையிட்டவர்கள்:
வணக்கம் கவிதா.. அண்ட் அ.அ,
எனக்கு உங்கள் கருத்தில் முற்றிலும் உடன் பாடு கிடையாது. நான் அ.அ.கட்சி!
“பெண்னுக்கு பெண் தான் எதிரி ஆண்கள் இல்லை” இது ஆனாதிக்க வாதிகளால் கட்டவில்த்து விடப்பட்டுள்ள பொய்களில் ஒன்று. "ஆணாதிக்க சிந்தனை" என்பது உருவமற்ற ஒரு கருத்து வடிவம். அதற்கு எவரும் வக்காளத்து வாங்களாம்.. அது ஆனாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. அவர்கள் ஆணாதிக்க வாதிகள் தான்.
இது பற்றி பிறகு விரிவாய் பதிவே போடுகிறேன்..
இப்போதைக்கு..ஒன்றுதான்..
கவிதா நீங்களுமா? :(
Bala, Thanks, I will reply once I read your article reg. to this subject.
Thanks again...
கவிதா பெண்ணுரிமை பேசுபவர்களை விடுங்கள். ஒரு ஆணான திரு பால பாரதியே உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லை."You too Brute" மாதிரி "You too Kavitha?" என்று கேட்கிறார். எத்தனையோ அலுவலகங்களில் தன்னைத் திறமையாக மாற்றிக் கொள்ளும் பெண்ணிற்குத் தன் கணவனுக்காக கொஞ்சம் அனுசரித்துப் போகமுடியாதா என்ன? கட்டாயம் முடியும். ஆனால் இந்த ego ஒன்று குறிக்கிடுகிறது. எல்லாம் தன் வீடு என்ற எண்ணம் வந்தால் தான். இல்லாவிட்டால் தன் வீட்டு வேலை தான் செய்வதே மட்டம் என்ற எண்ணம் ஏற்படுமா? இத்தனைக்கும் இன்றைய ஆண்கள் உதவி செய்யாமல் இல்லை.
Thanks Geetha. I am really very happy to read your comment that "We can". Yes !.."We Can'
Thanks again.. Kavitha
கீதா,
தங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே! நான் நினைத்த அதே கருத்துக்கள். ஆனால், நான் பதியாததற்கு காரணம், இதை ஒரு பெண்ணின் மூலமாக எழுதப்படுவது தான் உண்மையான தாக்கம் என்பதால் (இதை நான் எழுதியிருந்தால், ஆணாதிக்கம் என நினைக்கக்கூடும்).
ஆண் நாடாளுவதற்கு காரணம், அவன் உடலளவில் பெண்ணை விட பலசாலி என்பதால். (எல்லா நாடுகளிலும் பெண்ணே ஆளுவது என்று இருந்தால், இது மாறக்கூடும்). ஆனால், பெண் என்பவள் மனதளவில் ஆண்களை விட பலசாலிகள். அந்த பலத்திற்கு நாம் நிச்சயம் மதிப்பளிக்க வேண்டும்.
ஆண்களை எதிர்ப்பதல்ல பெண்ணுரிமை. பெற்றோரை விட, நன்பர்களை விட, மற்ற அனைவரையும் விட, ஒவ்வொருவர் வழக்கையிலும் கடைசி வரை கூட வருவது வாழ்க்கைத் துணை மட்டுமே.அது ஆணாக இருந்தாலும் சரி, அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி. இதை புரிந்து கொண்டாலே போதும்.
சீனு.
Seenu, Thanks, you understand very perfectly the meaning of this article.
Thanks.. again..
dear kavitha,
I do agree with you. The thought from you really made me to think very much. According to me there is no such thing called male chavunism.. people really expressed this as an issue. Every human whether male or female both are dependent with each other and "sivasakthi" as united can rule the world and not seperately.
நல்ல பதிவு கவிதா,
ஆனா பல விசயங்களில் நான் உங்கள் கருத்துக்களில் வேறு படுகிறேன்.
ஏன் மற்ற உறவு முறைகளுடன் வராத மன வேறுபாடு கணவருடன் மட்டும் வருகிறது என்று புரியவில்லை.?.
>> ஏன்னா பல நேரங்களில் நாம சில பேர் மீது எதிர்ப்பார்ப்பு வச்சிடறோம் அப்படி நம்ம எதிர்ப்பார்த்த
மாதிரி நடக்காத பொழுது கருத்து பேதங்கள், மனக்கசப்புக்கள் எழுகின்றன. எந்தவித எதிர்ப்பார்ப்புமே இல்லாத உறவுகளில் தான் பெரும்பாலும் பிரச்சனை வருவதில்லை.
கணவர் என்ற ஒரு ஆணிடமே, ஒரு பெண்ணால் சேர்ந்து வாழ முடியாத போது எப்படி விலகி, தனியே வெளி உலகத்தில் உள்ள ஆயிரம் ஆயிரம் ஆண்களை சமாளிக்க முடியும்.
>> நீங்க செல்வது மிகவும் தவறு, அது எப்படிங்க ஒருத்தருடன் சேர்ந்து வாழ முடியவில்லை எனில் யாரிடமும் ஒத்து போக முடியாதா என்ன? எனக்கு தெரிந்த வரையில் பெண்கள் மிகச் சுலபமாக விவகரத்து போன்ற விசயங்களில் முடிவு எடுத்து விடுவதில்லை தங்களால் பொறுக்க முடியாத நிலை வரும் பொழுது தான் அவர்கள் அது போன்ற முடிவிற்கு வருகிறார்கள். எனவே இது சரியான கருத்தாக எனக்கு படவில்லை. அப்புறம் "குழந்தை பெறுவது" போன்ற விசியங்களில் எல்லாரும் சொன்ன கருத்தை தான் நானும் செல்கிறேன் உங்களுக்கு இயற்கை அந்த அற்புதமான பாக்கியத்தை கொடுத்து இருக்கிறது நீங்க செய்கிறீர்கள் இதையே ஆண்களிடம் இயற்கை கொடுத்து இருந்தால் அதை நாங்க செஞ்சி இருக்க போகிறோம். இதில் யாரையும் குற்றம்/பெருமை கொள்வதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.
தொடர்ந்து எழுதுங்க. ஆனா ஒரு சின்ன வேண்டுகோள் பின்னுட்டத்தையும் தமிழில் எழுதலாம் இல்லையா?
சந்தோஷ்த்துடன்
சந்தோஷ்
அன்புடன் கவிதா
வணக்கம்
முன் பதிவில் பின்னூட்டம் அன்று இட முடியவில்லை.
உங்களது விசாலமான பார்வைக்கு சந்தோஷம்!
யாரும் யாருக்கும் அடிமை இல்லையே! பெண்ணுக்கு பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் சில விவாதங்கள் வேண்டாத ஒன்று.
எனக்கு மனதில் ஒட்டாத விஷயம் பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று பேசி பெண்கள் தங்களையே முடக்கி கொள்ளுவது .
பெண்கள் ஏன் தங்களை தாழ்த்தி கொள்ள வெண்டும்
குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி பகிர்ந்து வாழும் வழ்க்கை.இதில் எற்றம் இறக்கம் பார்த்தால் ஏற்படுவது இழப்பே!
எனது நண்பர் ஒருவர் மனைவியும் வேலை செய்கின்றார்.மனைவி வர இரவு எட்டு மணியாகும்.இவர் 5 மணிக்கே வீடு வந்து விடுவார். பெரும்பாலும் சமையலில் பாதி வேலை முடித்து விடுவார். இரண்டு பேரும் மனிதர்கள்தான் . இதிலே இன்னார்தான் சமைக்கனும் என்று கணக்கு போட்டு வாழ்ந்தால் எல்லா இடங்களிலும் ஒத்து வராதே!
நல்லா எழுதுரீங்க கலக்குங்க!
நன்றி செயகுமார்.
நன்றி நாகா.
நன்றி சந்தோஷ், உங்களின் பின்னூட்ட க்கருத்துக்களுக்கான விளக்கம்,
1. ஏன்னா பல நேரங்களில் நாம சில பேர் மீது எதிர்ப்பார்ப்பு வச்சிடறோம் அப்படி நம்ம எதிர்ப்பார்த்த மாதிரி நடக்காத பொழுது கருத்து பேதங்கள், மனக்கசப்புக்கள் எழுகின்றன. எந்தவித எதிர்ப்பார்ப்புமே இல்லாத உறவுகளில் தான் பெரும்பாலும் பிரச்சனை வருவதில்லை.
விளக்கம் :- சிறு சிறு கருத்து பேதங்கள், மனக்கசப்புக்கள் தான் பெரிய பிரச்னைகளின் தொடக்கம். அதை தான் நானும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தும், அன்பை பரிமாரியும், அறிவை கொண்டும் சரிசெய்ய சொல்லியிருக்கிறேன்
2. கணவர் என்ற ஒரு ஆணிடமே, ஒரு பெண்ணால் சேர்ந்து வாழ முடியாத போது எப்படி விலகி, தனியே வெளி உலகத்தில் உள்ள ஆயிரம் ஆயிரம் ஆண்களை சமாளிக்க முடியும் நீங்க செல்வது மிகவும் தவறு, அது எப்படிங்க ஒருத்தருடன் சேர்ந்து வாழ முடியவில்லை எனில் யாரிடமும் ஒத்து போக முடியாதா என்ன? எனக்கு தெரிந்த வரையில் பெண்கள் மிகச் சுலபமாக விவகரத்து போன்ற விசயங்களில் முடிவு எடுத்து விடுவதில்லை தங்களால் பொறுக்க முடியாத நிலை வரும் பொழுது தான் அவர்கள் அது போன்ற முடிவிற்கு வருகிறார்கள். எனவே இது சரியான கருத்தாக எனக்கு படவில்லை.
விளக்கம் :- இந்த வரிகளை நன்றாக படியுங்கள். வாழ முடியாது என நான் சொல்லவில்லை. எப்படி முடியும் என வினா எழுப்பி இருக்கிறேன். குடும்பம், கணவர் என்பது சிறிய வட்டம். அதில் ஏற்படும் பிரச்சனை என்பது எளிதில் தீர்த்துக் கொள்ளமுடியும். ஆனால், விவாகரத்து ஆன ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வெளி உலக பிரச்சனை என்பது வேறு. Practical difficulties நிறைய உண்டு என்பதை வரும் நாட்களில் என்னுடைய பதிப்புகளில் உங்களுக்கு எளிதில் புரிய வைக்க முயற்சி செய்கிறேன்.
3. அப்புறம் "குழந்தை பெறுவது" போன்ற விசியங்களில் எல்லாரும் சொன்ன கருத்தை தான் நானும் செல்கிறேன் உங்களுக்கு இயற்கை அந்த அற்புதமான பாக்கியத்தை கொடுத்து இருக்கிறது நீங்க செய்கிறீர்கள் இதையே ஆண்களிடம் இயற்கை கொடுத்து இருந்தால் அதை நாங்க செஞ்சி இருக்க போகிறோம். இதில் யாரையும் குற்றம்/பெருமை கொள்வதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.
விளக்கம் :- இங்கேயும், உங்களால் முடியாததை பெண்கள் செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. பெண் பெண்ணாக இருந்து எதையும் சாதிக்கலாம் என்கிறேன். தேவையில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களுடன் போட்டி போட தேவையில்லை என்பது என் கருத்து. ஆணுக்கு பெண் சரி சமம் என்ற பேச்செல்லாம் நடை முறை வாழ்க்கைக்கும், எல்லா இடங்களிலும் ஒத்து வராது. இங்கேயும் Practical difficulties நிறைய உண்டு. பேசுவது, எழுதுவது அன்றி நடை முறை சாத்தியங்களை ஆராய்ந்த்து பாருங்கள். எது முடியும், எது முடியாது என்பது புரியும்.
ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவதே புத்திசாலி தனம். அவரவருக்கு என்று உடல் அமைப்பும், குணங்களும் இயற்கை கொடுத்தது. அதற்கேற்ப நாம் நடந்து கொண்டு வாழ்க்கையை வளமானதாக ஆக்கிகொள்ள வேண்டும்.
நல்லா எழுதறீங்க கவிதா.
உங்களுக்கு நான் என்ன உதவி பண்ண முடியும்னு தெரியலை. என்ன வேணும்னாலும் கேளுங்க. என் மெயில் ஐடி: prajaramin@aim.com
நன்றி பொன்ஸ்
கவிதா,
//ஆண், பெண் என்ற வித்தியாசம் வேண்டாம். யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். ஒருவரை ஒருவர் புரிந்து, அன்பு சேர்த்து வாழ்வது தானே வாழ்க்கை
// பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை
உங்களது விசாலமான பார்வைக்கு சந்தோஷம்.
ஆனால் உங்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை.அழகான கவிதை எல்லாம் எழுதுற பெரிய எழுத்தாளர் கவிதா நீங்களுமா :-(
நன்றி கார்த்திக், எதில் உடன்பாடு இல்லை என்பதை சொன்னால்..நான் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். நான் பெரிய எழுத்தாளர் இல்லை..தயவுசெய்து ..இனி அப்படி விமர்சிக்காதீர்கள்.
I am sorry பொன்ஸ், from your name I thought you are a male. Really I am sorry , I do send mail to you to clear my doubts. Thanks
இத படிங்க
நல்ல அருமையான பதிவு.. இதுதான் நிதர்சனமான உண்மை..
இவற்றை எடுத்துக் கூறினால் பெண்ணுரிமை என்ன ஆயிற்று தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்..
பெண்கள் தனிமைப்படுத்தப்படும்பொழுது அவளின் மீது சமுதாயத்தின் அத்தனை தீய பார்வைகளும் விழ ஆரம்பிக்கின்றது..
Ungal Padaipil irunthae En Karuthu.
1.ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண், தந்தையாக, கணவனாக, மகனாக, தம்பியாக, அண்ணனாக, நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு உறவு முறையை பெண் விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்
2.ஏன் மற்ற உறவு முறைகளுடன் வராத மன வேறுபாடு கணவருடன் மட்டும் வருகிறது என்று புரியவில்லை.?.
2.a)உங்க hubby கிட்ட நீங்க ரொம்ப adjust செய்து கிட்டு இருக்கற மாதிரி படம் போடறீங்க..!.
2.b)பெண்கள் பிரச்சனைக்கு மாமியார், நாத்தனார், அண்ணி, அக்கா..என்று பெண்களையே பட்டியல் போடலாம்.
3.அதிகமான படிப்பும், அதற்கான வேலையும் தான் ஒரு பெண் துணிந்து தன் திருமண வாழ்க்கையை முறித்து கொள்ள காரணமா?.
3.b)ஒருவரை ஒருவர் புரிந்து, அன்பு சேர்த்து வாழ்வது தானே வாழ்க்கை.
3.b)பெண் எப்பவும் பெண்ணா இருக்கணும்”
4.எத்தனை வீடுகளில் பெண்களால் ஆண்கள் அவதிக்குள்ளாகிறார்கள்?
4.b)பெற்றோர்களும் தன் பெண்களுக்கு பரிந்து பேசி அவர்கள் வாழ்க்கையை கொடுக்காமல், அவளின் பாதுகாப்பு என்பது கடைசி வரையில் கணவன் தான் என்று புரிய வைக்க வேண்டும். நிறைய பெண்களின் வாழ்க்கையில் பெற்றவர்களின் ஊக்கமும் இப்படி பட்ட முறிவுகளுக்கு காரணம் ஆகிறது.
4.c)ஓளியின் திசைக்கேற்ப நிழலின் நீளம் அவ்வப்போது குறையும், கூடும். ஆண்களின் நிழலில் பெண்கள் இருப்பது தான் இயற்கை அமைத்து கொடுத்தது.. அதை நாம் தான் கவனித்து சரியான திசையில் திருப்பி நாம் நிற்க வசதியாக்கி கொள்ள வேண்டும்.
regards.
Dubai Raja.
பெண்கள் பிரச்னைகளை உண்டு பண்ண காரணமே அவங்களுக்கு இருக்குற இன்செக்யூரிட்டிதான் காரணம்னு நான் நினைக்கறேன்!
அவங்களுக்கு உள்ள பிரச்னை என்னன்னு ஆண்கள் (அதாவது கணவன்) பொறுமையா அனுசரனையா காது குடுத்துக் கேட்டாலே பாதி பிராப்ளம் ஓவர்.
இதை ஆண்கள்தான் புரிஞ்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.
//பெண்கள் தனிமைப்படுத்தப்படும்பொழுது அவளின் மீது சமுதாயத்தின் அத்தனை தீய பார்வைகளும் விழ ஆரம்பிக்கின்றது.. //
நன்றி நிலவு நன்பன், நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே..
உங்கள் கருத்துக்கு நன்றி துபாய் ராஜா.
//இதை ஆண்கள்தான் புரிஞ்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.//
நன்றி சிபி, ஆண்கள் பெண்களின் பலவீனத்தை புரிந்து நடந்து கொண்டால் பிரச்சனை இருக்காது, பெண்களும் ஆண்களின் பேச்சை காது கொடுத்து கேட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது..
நன்றி பாரதி..
பெண் என்பவள் எப்பொழுதும் பணிந்து போ கவேண்டிய அவசியம் இல்லை. பெண்களிடம் உள்ள பி ளஸ் பாயிண்ட்டே, சொல்லவேண்டிய கருத்தைக் கண்டநேரத்தில் கூறாமல், அதற்கான நேரம் வரும் போது மட்டும் கூறுவதே. ஆக எதிர் தர்க்கம் செய்யாமல் இருந்தாலே போதும். சி லவேளைகளில், மனைவி கோபமாக திட்டும் போதும், பேச்சில் எரிந்து விழும்போதும், தனி ந்துபோகும் எத்தனையோ கணவன்மார்கள் இருக்கி ன்றார்கள்.
வீட்டுக்கு வீடு வாசப்படிதான், யார் வீட்டில் இல்லை பிரச்சனை. கணவன் மனையிடமும், மனைவி கணவனிடமும் ஒத்துபோக ஒன்று செய்தால் போ தும். குத்திக்காட்டி பேசாதீர்கள். சந்தேகம் கொள்ளலாம், அதனைவெளிக்காட்டிக்கொள்ளாதீர்கள். அதிக அன்பு வைத்தால், பொசஸிவ்னெஸ் காரணமாக நி ச்சயம் சந்தேகம் வரத்தான் செய்யும். சந்தேகங்கிறது சாப்பாட்ல இருக்கற உப்புமாதி ரி, உப்பு இல்லாமக்கூட சாப்பிட்டுடடலா ம். ஆனால் அதிகமானால்.......குப்பைக்கூடைதான்.
வாழ்க்கையும் அப்படித்தான்!
ம்ம்...சந்தேகம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.. நன்றி நாகு..
Post a Comment