அரசாங்க உத்தியோகத்தில், பொது மக்களுக்கு சேவை செய்யும் பணியில் இருக்கும் போலிஸ்காரர்கள், உயர் அதிகாரிகளின் காருகளுக்கு வாலாட்டுவது மட்டுமல்லாமல் பொதுமக்களை எத்தனை இடைஞ்சலுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்குகிறார்கள் என்பதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இவர்கள், அவர்களுக்கு வாலாட்டவில்லை என்றால் என்னவாகும் என்பது வேறு கதை. அதற்கு தனி பதிவு தான் போடவேண்டும்.
சென்னையில் VIP கள் வருகிறார்கள் என்றால் போதும், (ஆட்சியில் இருக்கும் போது அம்மா வருகிறார்கள் என்றால் 1 மணி நேரம், ஏன் சில சமயம் 2 , 3 மணி நேரம் கூட நிற்கவேண்டி இருந்திருக்கிறது) அரை மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்தை சீர் செய்கிறோம் என்று சிக்னலுக்கு சிக்னல் வாகனங்களை நிற்க வைத்து விடுகிறார்கள். VIP களின் கார்கள் சென்றவுடன், போக்குவரத்தை சரிசெய்து அனுப்பவும் மாட்டார்கள், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என நேடு நேரம் வேலை செய்த கலைப்பில் ?!! போக்குவரத்து காவலர்கள் ரோடோர மரம், இல்லை டீ கடை என்று ஓரம் கட்டி ஓய்வெடுக்க சென்றுவிடுகிறார்கள். அதாவது, அவர்கள் நிற்கும் இடத்தை VIP களின் கார்கள் கடந்த மறுவினாடியே இவர்களை காணாமல் போய்விடுவார்கள்.
இங்கே நமக்கு அவசரம், அடித்தவர்களை பற்றி கவலை படாமல், போக்கவரத்து விதிகளையும் மதிக்காமல் நான் முந்தி நீ முந்தி என்று நடுநடுவே புகுந்து, யாருமே சரியாக போகமுடியாமல் நெரிசல் அதிகமாகி அவதிபட்டு, வாகனத்துடன் வாகனங்கள் மோதி, ஒருவரை ஒருவர் திட்டி, வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு வண்டியை ஓரம் கட்டிவிட்டி, சில பேர் சண்டையில் மிக வேகமாக இறங்கிவிடுவதுண்டு. அடிதடிக்கூட சில சமயம் நடக்கும். இப்படி நடக்கும் பல சமயங்களில், போலிஸ்காரர் பக்கத்தில் இருக்கிறாரா, இதை சரிசெய்ய மாட்டாரா என நான் தேடுவதுண்டு. ஒவ்வொரு முறையும் அவர்கள் பக்கத்தில் எங்காவது மரநிழலில் நின்று கொண்டு இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து ரசித்தவாறு இருப்பார்களே அன்றி, வந்து தன் பணியை செய்ய மாட்டார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் இது போன்ற மேல் அதிகாரிகள், VIP கள், அமைச்சர்கள் கார்களுக்கு வாலாட்ட மட்டுமே என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு சமுதாய நல்லெண்ணம் உடைய சிலர், தானாக முன்வந்து போக்குவரத்தை சரிசெய்து அனுப்புவார்கள். ஆனால் நாம் இருக்கிறோமே, அவர்களையும் திட்டுவோம், இவர் யாராடா நடுவில் நம்மை நிறுத்தி நிறுத்தி அனுப்பிகிறார், வேலைசெய்யும் போலிஸ்காரரே நம் சவுகரியத்துக்கு போகட்டும் என விட்டுவிட்டார், இவர் தான் நாட்டை சரி செய்பவர் போல் முன்னுக்கு வந்துவிட்டார் என வசவுபாடுவோம். நாமும் திருந்தமாட்டோம், திருந்தியவர்களையும், திருத்துபவர்களையும் விடமாட்டோம்.
இன்று காலை அடையார் பார்க்’ கிலிருந்து வெளியில் வரும் ஏதோ ஒரு அதிகாரியின் காருக்கு வாலாட்ட மட்டும், அங்கே 3 காவலர்கள், 2 போக்குவரத்து காவலர்கள். அடையார் பார்க் வெளி கதவு டி.டி.கே சாலையில், ரோடு வளையும் இடத்தில் உள்ளது. வளைவு திரும்பும் போது இவர்கள் தடாலென்று நடுவில் புகுந்து வாகனங்களை நிறுத்தினார்கள். அடையார் பார்க்'குக்கு சற்று அருகில், எதிர் புறமாக டி.டி.கே சாலையில் ஒரு பள்ளி உள்ளது. பள்ளிக்கு போகும் குழந்தைகள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் நிறுத்தியவுடன், அதிகாரிகளின் கார்கள் சென்றிருந்தால் பரவாயில்லை. நிற்கிறோம் நிற்கிறோம் யாரும் வரவில்லை, என்ன ஹோட்டலை விட்டு கார்கள் வெளிவர அத்தனை நேரமா.. ?! இந்த ஆட்டோவில் இருந்த குழந்தைகள், பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என கத்த, அந்த பொறுப்பில்லாத ஆட்டோ டிரைவர், பக்கத்தில் தானே பள்ளி, "இறங்கி போங்கடா" என்றாரே பார்க்கலாம், சின்ன குழந்தைகள் ஆளுக்கொரு பக்கமாக வேக வேகமாக போக்குவரத்துக்கு நடுவில் இறங்கி குதித்து ஓட ஆரம்பிக்க, VIP களின் கார்கள் வாராததால் ஞானோதயம் அடைந்த போக்குவரத்து காவலர்கள், தீடீரென்று கைகாட்டி போக்குவரத்தை விட, இந்த நடுவில் இறங்கிய குழந்தைகள் நடு நடுவே சிக்கி தவிக்க ஆரம்பித்தன.. ஒரு 10 வாகனம் விட்டிருப்பார்கள், திரும்பவும், கை காட்டி நிறுத்தி விட்டார்கள். குழந்தைகள் பாவம் அங்கும் இங்கும் அல்லாடி, வாகனங்களையும் கடக்க முடியாமல், சாலையையும் கடக்க முடியாமல் கஷ்டப்பட்டன.
யார் எப்படி போனால் என அவர்கள் எதிரில் நடக்கும் குழப்பங்களை, அதுவும் ஒரு மனிதனின் உயிருடன் சம்பந்தப்பட்ட குழப்பங்களை கண்டும் காணாமல் இருக்கும் இவர்கள் எப்போது தான் சக மனிதர்களை மனிதர்களாக மதித்து திரும்பி பார்த்து தன் கடமைகளை செய்வார்களோ தெரியவில்லை.
அணில் குட்டி அணிதா:- முடிச்சிடீங்களா அம்மணி, ஏன் நீங்க வண்டிய ஓரங்கட்டிட்டு குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வரவேண்டியது தானே..செய்தீங்களா.. செய்யல இல்ல.. அப்படிதான் அவரும்.. அவரவருக்கு அவரவர் வேல முக்கியம்..உங்களுக்கு உங்க வேல முக்கியம்.. சும்மா எல்லாத்துக்கும் சவுண்டு விடறதுல மட்டும் குறைச்சல் இல்ல. ஒன்னுத்துக்கு பிரயோசனம் இல்லாமா..... சவுண்ட குறைக்கற வழிய பாருங்க.... அப்புறம் நான் குறைக்க வைக்க வேண்டியாதா இருக்கும்..சொல்லிட்டேன்.. என்ன இன்னைக்கு முந்திரி பழம் வாங்கி வச்சிருக்கீங்களா?.. இனிமே கேக்கறது எல்லாம் கேக்கற டயத்துல இருக்கனும் சொல்லிட்டேன்..
பீட்டர் தாத்தா : A great pleasure in life is doing, what people say you cannot do.
VIP யின் கார்களுக்கு வாலாட்டும் போலிஸ்காரர்கள்...
Posted by : கவிதா | Kavitha
on 12:41
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
10 - பார்வையிட்டவர்கள்:
உண்மையான ஆதங்கம், ஆனால் விடிவுக்கு வழி யாராலும் தர முடியாது. ஆட்சி மாற்றம், அதிகாரி மாற்றம் எல்லாம் நாளை நன்றாகி விடும் என்ற ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நகர்வதற்க்கான ஆறுதல் மட்டுமே.
அணில் குட்டி எண்ணம் தான் இன்றைய பெரும்பான்மையினர். அதனால் தான் தவறிழைக்கும் சிறு மக்களுக்கு பெரும்பான்மை மக்கள் பயப்பட வேண்டியுள்ளது.
:-(
romba correct.
Many of us would have experienced such things
but all we would have done is just feeling bad
Becoz anda timela namakku ayirattettu avasara velai
அருமையா சொன்னீங்க...ஒரு படத்தில் விமானத்தில் போகும் தலைவருக்கு - தரையில் இருந்து சல்யூட் அடிப்பதாக கலாய்த்திருப்பார் விவேக்...
:)))
ஹூம்...நாங்கள்ளாம் அந்த காலத்துல...
சும்மா என்னாத்துக்கு புலம்பிட்டு..பேசாம எலக்சன்ல நின்னு நீங்களும் ஒரு விஐபி ஆகிடுங்க.. :-)
//ஹூம்...நாங்கள்ளாம் அந்த காலத்துல... //
சீனு, அந்த காலத்துல... இந்த மாதிரி..வாலாட்டினீங்களா
//சும்மா என்னாத்துக்கு புலம்பிட்டு..பேசாம எலக்சன்ல நின்னு நீங்களும் ஒரு விஐபி ஆகிடுங்க.. :-) //
சியாம், நன்றி, விஐபி ஆனாலுமே நிச்சயமா இப்படி இருப்பேன்னு தோனல.. நாம நம்மல திருத்திக்கறது இப்படி இருக்கிற சில பேர பார்த்து தானே..
நல்ல பதிவுங்க.
போலிஸ்காரர்களை கண்டால் பல சமயத்தில் எரிச்சல் அடைவது உண்டு.
ஆனால் அவர்களுடன் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை மூன்று வருடங்கள் நன்கு பழகியதை வைத்து கூறுகின்றேன். ரொம்ப பாவப்பட்ட ஜன்மங்கள் அவர்கள்(பெரும்பாலும்)
நம் மக்களின் எண்ணங்களிலும் மாற்றம் வேண்டும். ஒழுங்கு வேண்டும்.
//but all we would have done is just feeling bad
Becoz anda timela namakku ayirattettu avasara velai //
நன்றி அனிதா..நமக்கு நம் அவரச வேலை தான்..ஆனால் அவர்களுக்கு அதுதானே வேலையே ?!!
//அருமையா சொன்னீங்க...ஒரு படத்தில் விமானத்தில் போகும் தலைவருக்கு - தரையில் இருந்து சல்யூட் அடிப்பதாக கலாய்த்திருப்பார் விவேக்...//
நன்றி ரவி, விவேக் இப்படியெல்லாம் காமெடி பண்ணியாவது மேட்டர உரியவங்களுக்கு புரிய வைக்க பார்க்கறாரு..
//ரொம்ப பாவப்பட்ட ஜன்மங்கள் அவர்கள்(பெரும்பாலும்)
நம் மக்களின் எண்ணங்களிலும் மாற்றம் வேண்டும். ஒழுங்கு வேண்டும். //
சிவா, நீங்க சொல்றது சரிதான்..பாவப்பட்டவங்க தான்.. ம்ம்.. நாமும் மாறனும் அவங்களும் மாறனும்..
one day in velacherry, at 6.30 pm peak hour. two traffic constables trying to control the traffic, in between one guy with mobile phone (have his id showing he is a techie ina IT firm) crossing the road without knowing the oncoming traffic.
the cop sudenly notice this and ask him to wait but he didnt listen and crossed the road,making the vehicle a surprise, result an minot accident with a car and bike.
the police cop told us that these guys makes our life miserable. when asked the techie replied, i just crossed when vehicle is not on the road.
the cop told its our duty to make pedestriants cross the road but they have to wait.
problem is with us. just try to walk throug the roads in evening then u know all the guys wont treat the walkers on the road as humanbeings. that too rainy days
Post a Comment