தியானம்? நமக்கு இது ஒன்று தான் விட்டுபோயாச்சி சரி அதையும் கற்றுக்கொள்ளலாம் என்று வேளைச்சேரி' யில் தியானம் சொல்லி கொடுக்கும் இடங்களை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது என் கணவர் விஜயநகர் பக்கத்தில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், அங்கு தியானம் சொல்லி தருவதாக நினைக்கிறேன் சென்று பார், பணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை என்றார்.அட இந்த காலத்தில் இலவசமாகவா?
அந்த இடத்தை தேடி பிடித்து சென்றுவிட்டேன். ஒரு அம்மா வெள்ளை ஆடையுடன், ஒரு உயரமான இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சை கவனித்தவாறு பலர் உட்கார்ந்து இருந்தனர்.
"என்னை பார்த்ததும், கிளாஸ்'ஸாமா? " என்றார்.
"ஆமாம், தியானம் படிக்கனும்" என்றேன்
உள்ளே இருக்கும் யாரையோ அழைத்து எனக்கு அறிமுக வகுப்பு எடுக்க சொன்னார். நான் காத்திருந்தேன். சற்று நேரம் கழித்து ஒரு 22-25 வயதுக்குள் இருக்கும் ஒரு இளைஞர் வந்தார். தலைகலைந்து, மிக சாதாரணமாக இருந்தார். அதாவது தன் தோற்றத்திற்கோ, தன் உடைக்கோ அவர் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. அவரை பார்த்தவுடன் எனக்கு சட்டென்று மனதில் தோன்றியது. எதற்கு இந்த வயதில் இவருக்கு இந்த வேலை? சாமியாரா இருக்க வேண்டிய வயதா இது? அதுவும் எனக்கு இவர் தியானம் சொல்லி கொடுப்பதா? விளங்குமா? நம் குணத்திற்கு இவரை அமைதியாக தியானம் சொல்லி கொடுக்க விடுமா? சீண்டி பார்க்காமல் இருப்போமா? என் மனத்தில் இது போன்ற கேள்விகள் எழுந்தவாரே இருக்க.. அவர் என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை பற்றி விசாரித்தார். அப்படி ஒரு சாந்தமான முகத்தை நான் பார்த்ததில்லை.
அவர் என் கண்ணை ஆழ்ந்து கவனித்தார். சுத்தம்!! விதி வலியது அந்த பிள்ளையிடம் என் ரூபத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டது என்று உள்ளே மனது சத்தம் போட்டது.
"தியானம் கற்றுக்கொள்ள வந்தேன். அதைப்பற்றி சொல்ல முடியுமா?
புன்முறவல் .. ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே சற்றே இடைவெளி, அமைதி.. எனக்கு இது எரிச்சலை தந்தது. எதற்கு இத்தனை நேரம் பதில் சொல்ல எடுத்துக்கொள்கிறார் இவர்?
"ம்ம்.அதற்கு முன் சில பாடங்கள் படிக்கவேண்டும்"
"என்ன பாடம் ..தியானத்தை பற்றியா? ஏன் படிக்க வேண்டும்?, எனக்கு நேரம் குறைவு நேராக தியானம் சொல்லித்தாருங்களேன்"
திரும்பவும் ஒரு புன்முறுவல், ஒரு ஆழ்ந்த அமைதி, இது எல்லாமே என் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறு.... , நானும் அப்படி இப்படி பார்க்காமல் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
"தியானம் பழக சில விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் அது சம்பந்தப்பட்ட பாடம்.. 7 நாட்கள் தான்.. முடித்துவிடலாம்".. ஒரு புன்முறுவல்..
எனக்கு சிரிக்க தோன்றவில்லை.. "சரி இன்றைக்கு ஆரம்பித்துவிடுங்கள்"
"நேராக உட்கார்ந்து என்னையே கவனியுங்கள்.... "
"ம்ம்.."
"உடம்பு, ஆத்மா என்றால் என்ன"
கடவுளே ஆரம்பிச்சிட்டாங்கய்யா!! இதுக்கு தான் முன்னமே யோசிச்சேன்.. இவருக்கு நேரம் சரியில்லை. .சரி.. புலி வாயில தலைய கொடுத்துட்டார் இனி எடுப்பது அவரின் செயல்.
"உடம்பு சரீரம் என் உயிரை தாங்கி இருக்கும் இடம், ஆத்மா.. ஐ திங்க் உயிர்"
"உங்கள் உயிர் இந்த உடலுக்கு சொந்தமானதா"
"எஸ் ஐ கெஸ்"
"இல்லை உடம்பு என்பது நிரந்தரமில்லாதது, உயிர் மட்டுமே நிரந்தரம், இன்று இது கவிதா என்ற பெயருடைய இந்த உடலில் இருக்கிறது, நாளை வேறு உடலை சென்று அடையும், அது போல் நேற்று இது வேறு உடலில் இருந்து உங்கள் உடலுக்கு வந்தது.., உடல் என்பது ஆசை,அழியக்கூடியது, அது நிரந்தரம் இல்லை உயிர் என்பது தான் நிரந்தரம், இது உடல் விட்டு உடல் மாறி மாறி சென்று கொண்டே இருக்கும், அதனால் அழியக்கூடிய எதிலும் நம் கவனத்தை செலுத்தாமல், அழியாத உயிர் என்கிற ஆத்மாவின் மீது மட்டும் நம் கவனம் இருக்க வேண்டும், அதற்காக நான் தியானம் பழகவேண்டும்..."
ஓ..அதான் நீங்க இப்படி தலை விரி கோலமாக உடலுக்கு (தோற்றத்திற்கு)முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறீர்களா? என்னால் அதற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை. அவரை இன்னமும் கூர்ந்து கவனித்தேன்,நிஜமாக அவர் வாழ்க்கையின் ஆசைகளாக துறந்தவரா என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசை வந்தது. கண்களை இப்படி அப்படி எடுக்கவில்லை. என் பார்வையை அவரால் சந்திக்க முடியவில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் நான் விடுவதாக இல்லை, உடலையும், உயிரையும், தோற்றத்தையும் பேசுகிற வயது உனக்கு இல்லை. எதற்கு இந்த வெளி நடிப்பு என்று என் உள் மனது சத்தம் போட்டது. அதனால் என் பார்வையின் ஆழம் அதிகமானது.
"அப்படி என்றால் இது எனக்கு சொந்தமான உயிர் இல்லை.. யாருடையதோ எனக்கு வந்துள்ளது, பின் யாரிடமோ சென்றுவிடும்."
புன்னகையுடன்..."ஆமாம்....ரொம்ப சரி......உயிர் என்பது எங்கிருக்கிறது...?
"ஹார்ட் ஆர் ஹார்ட் பீட் ஆக இருக்கும் என்று சொல்ல நினைத்தேன் என்றாலும் இவர் உயிர் நம்முடையது இல்லை என்கிறாரே, அப்போது எப்படி இதை சொல்லுவது என்று யோசித்து, பின் பட்டென்று இரு புருவங்களுக்கும் நடுவே ஒரு விரலால் சுட்டி காட்டி "புருவ மத்தி" என்றேன்...
என் மன ஓட்டம் அவருக்கு புரிந்ததா என்று தெரியவில்லை.."ம்ம் ரொம்ப சரி புருவ மத்தித்தான்... " என்று சொல்லிவிட்டு ஒரு புன்முறவல், ஒரு இடைவெளி..."உயிர் எப்படி இருக்கும்? "
"................"
"நிங்கள் கவிதா உங்களுக்கு இந்த உருவம் அடையாளம்.. எனக்கு இந்த உருவம் ஒரு அடையாளம் இல்லையா அது போல் உயிர் என்பது எப்படி இருக்கும் அதன் அடையாளம் என்ன?"
கொஞ்சம் யோசித்தேன்.. என்னவாக இருக்கும்.. எனக்கு என் தாத்தா நினைவுக்கு வர, ராமலிங்கசுவாமி நினைவுக்கு வர, "ப்ராப்பளி ஜோதி வடிவமாக.. ஆரன்ஞ் இன் கலர்?"
என்னுடைய பதில்கள் அவருக்கு திருப்தியாக இருப்பதாக உணர்ந்தேன். என் கண்களை அவரிடமிருந்து எங்கும் செல்லாமல் முழு கவனுத்துடன் பார்த்துக்கொண்டேன்.
திரும்பவும் விடுவதாக தெரியவில்லை அடுத்து லேசான புன்னகையுடன்..."கடவுள் என்பது யார்"
"கடவுள் என்பது எனக்கு மேல் ஒரு சக்தி, எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. (நான் நேரில் பார்த்ததில்லை), பல விஷயங்களில் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்கிறேன். அதை கடவுள் என்று சொல்லிக்கொள்ளலாம்..ஐம் சாரி..ஐ டோட் ஹாவ் க்ளூ"
கொஞ்சம் சிரிப்பு அவருக்கு அதிகமானது. "கடவுள் என்று யாரை சொல்லுவீர்கள்"..
"ப்ராப்பளி "சிவன்" அவர் தான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறார்..ஆனால் அது சரியா என்பது எனக்கு தெரியாது, காரணம் நம் கவனம் சிதறிவிடாமல் இருக்க உருவ வழிப்பாட்டு முறை இருக்கிறது என்பதாக என் புரிதல். எனக்கு சிவன், மற்ற மதத்தினரும் கடவுள் என்று ஒருவரை வழிபடுகிறார்கள். அதனால் என்னால் கடவுள் என்பவர் சிவன் மட்டுமே என்று அழுத்தமாக சொல்லமுடியாது, அப்படி சொல்லுவது சரியும் இல்லை. அதற்கு தான் மனிதனை தாண்டிய உணரக்கூடிய அல்லது உணராத ஒரு சக்தி என்று முன்னமே சொன்னேன்" என்றேன்.
அவர் சில வினாடிகள் பேசவில்லை..சிரிக்கவில்லை.. என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார். பின் லேசாக சிரித்தார். "சரி அந்த சிவன் எங்கிருக்கிறார் தெரியுமா"
திரும்பவும் வேகமாக "ஐ கெஸ் ஹி மஸ்ட் பீ இன் "புருவ மத்தி" .!!
மீண்டும் புன்முறுவல் "ம்ம்...கடவுள் என்பவர் நம் உடலில் உயிராக புருவ மத்தியில் இருக்கிறார். அவரை உணர வேண்டும் என்றால் நம் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக துரந்து அவரை தியானத்தின் மூலம் பார்க்க நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். எப்போது நாம் ஆசைகளை நம் கட்டுப்பாட்டில் வைக்கிறோமோ..அப்போது நாம் கடவுளை காணமுடியும்.. "
என் பொறுமை பறந்தது. "தியானம் எப்போது சொல்லி தருவீர்கள்"
ஒரு புன்முறுவல் "இன்னும் 6 நாட்கள் வகுப்புக்கு வாருங்கள்"
"இப்படி த்தான் வகுப்பு இருக்குமா? அதான் நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டேனே நேராக தியானம் போலாமே?"
என்னை நிதானமாக பார்த்தார்....."நாளை வாருங்கள் இதே நேரம் அடுத்த வகுப்பு, இப்போது அந்த ரூமில் சென்று அமைதியாக 10 நிமிடம் அமர்ந்து தியானம் செய்யுங்கள்"
"நீங்கள் எனக்கு தியானம் சொல்லி தரவில்லை எப்படி செய்வது?"
"பரவாயில்லை பேசாமால் வேற்று சிந்தனை இல்லாமல் கண்ணை மூடி 10 நிமிடம் உட்கார்ந்து விட்டு போங்கள்"
"அது என்னால் முடிந்தால் வீட்டிலேயே செய்வேனே.. இங்கு ஏன் வரவேண்டும்? "
"..................இப்படித்தான் ஆரம்பித்தில் இருக்கும் பிறகு எங்களை போல நீங்களும் நன்றாக பழகி விடுவீர்கள்"
"சரி.... " நானும் சென்று அந்த ரூமில் உட்கார்ந்து கண்ணை மூடினேன். .கொசுக்கடி ஆரம்பமானது.. ம்ம் அப்புறம் என் கவனம் முழுதும் கொசுவை அடிக்கவே சரியாக இருந்தது.
* * * * * * * * * * * * *
அடுத்த நாள்....
நான் சென்று அமர்ந்தேன்..
அவர் என்னை பார்த்தவுடன் எழுந்து வேக வேகமாக பின்புறம் சென்றார். ஏன் இப்படி ஓடுகிறார் என்று நினைத்து காத்திருந்தேன்..திரும்பி வந்தார்...
:)
முகம் கழுவி, பவுடர் போட்டு, தலைவாரி....... புது பொலிவுடன், அழகாக வந்து அமர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார். ....:)
நேற்று அவர் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது...
"கடவுள் என்பவர் நம் உடலில் உயிராக புருவ மத்தியில் இருக்கிறார். அவரை உணர வேண்டும் என்றால் நம் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக துரந்து அவரை தியானத்தின் மூலம் பார்க்க நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். எப்போது நாம் ஆசைகளை நம் கட்டுப்பாட்டில் வைக்கிறோமோ..அப்போது நாம் கடவுளை காணமுடியும்.. "
இவ்வளவு தெளிவாக நேற்று வரை இருந்தவர் அழிய கூடிய உடலுக்கும் தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாரே....
அடுத்த நாளிலிருந்து அங்கு நான் செல்லவில்லை... :)
அணில்குட்டி அனிதா:- எங்க போனாலும் ஏதாவது செய்துட்டு வந்துட வேண்டியது.. இதை படிச்ச பிறகாச்சும் அம்மணிக்கிட்ட ஜாக்கறதையா இருங்க மக்கா... எத்தனையோ வாட்டி நானும் சொல்லிக்கிட்டே தான் இருக்கேன்.. ஆனா எங்க.....?!! :(
பீட்டர் தாத்ஸ் :-“Empty your mind, be formless, shapeless - like water. Now you put water into a cup, it becomes the cup, you put water into a bottle, it becomes the bottle, you put it in a teapot, it becomes the teapot. Now water can flow or it can crash. Be water, my friend.”
உடம்பு, ஆத்மா, உயிர், ஜோதி, கடவுள்
Labels: பழம்-நீ 28 Comments
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.....
இரண்டாவதாக பாட்டு பாடி பதிவிட்டவுடன், எல்லோரும் குரல் ரொம்பவும் குழந்தை போன்று இருக்கு என்று சொன்னது மட்டும் இல்லாமல், அபிஅப்பா இந்த "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாட்டு" உங்கள் குரலுக்கு சரியாக இருக்கும், முயற்சி செய்யுங்கள் என்றார். நானும் ஏதோ முயற்சி செய்தேன்.
இந்த பாட்டை யாராலும் மறக்கமுடியாது, களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில், குட்டி கமல்'ஹாசன்' காக பாடகி ராஜேஸ்வரி பாடிய பாடல்.
|
அணில் குட்டி அனிதா:- ச்சும்மா இருந்தாவே வேணும்னு பண்றவங்க அம்மணி.. இப்படி எல்ல்லாரும் அவங்கள உசுப்பேத்தி விட்டா..?!! :( உங்க காதுமாச்ச்ச்ச்சி அவங்க பாட்டுமாச்சி.. என்னைய விடுங்க சாமி.. நான் ஜீட்டூஊஊஊஉ!!
பீட்டர் தாத்ஸ் :- Music washes away from the soul the dust of everyday life. ~Berthold Auerbach
Labels: அப்பாவிற்காக 48 Comments
கார்டூன் களிப்பு!! :)
நான் குழந்தையா இருக்கச்சே!! சே!! சே!! ... குழந்தை எல்லாம் இல்லைங்க.. இப்பவும் நான் ரசித்து பார்க்கும் கார்டூன்.. பாட்டு சேனல் இல்லை என்றால் கார்டூன் தான் அதிகம் பார்ப்பது. சீரியல் எல்லாம் பார்த்தால் நான் டென்ஷன் ஆகறது அதிகம்.. எதுக்கு நம்மை பற்றி தெரிந்தே அதை வேறு பார்ப்பது.
எனக்கு பிடித்த சில கார்டூன் கதாபாத்திரங்கள் :-
1. HEIDI :- என்னை இந்த குழந்தையாக நான் கற்பனை செய்து கொண்டே பார்ப்பேன்.. என்னுடைய விளையாட்டையும், ஆசையையும் நிறையநிறைய இடங்களில் இந்த குழந்தையின் ஆசையோடும் விளையாட்டு களுடனும் ஒத்துப்போகும். அதனாலேயே இது ரொம்ப பிடிக்கும்.
2. DONALD DUCK :- இவரை சொல்லவே வேண்டாம் ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். குறிப்பாக இவரோட "கர கர"குரல் ரொம்ப பிடிக்கும்.. அவரோட நடை.. டான்ஸ்.. சொல்லிக்கிட்டே.. போகலாம்..
3. PINGU :- இதை சொல்லும் போதெ சந்தோஷமா இருக்கு :) சூப்பரா இருக்கும்.. இந்த பிங்கு செய்யற லூட்டியும் அது பனியில சருக்கறது, தூங்கறது, அதோட வீடு... அது பனிக்கட்டிய உருட்டி அடிச்சி விளையாடறது..
4. ROAD RUNNER :- இதை பார்த்து எனக்கு இன்னும் கொஞ்சம் வேகமாக இதை போலவே வண்டி ஓட்ட ஆசை வரும். இதுல வர உல்ஃப் சூப்பரா பல்பூ வாங்கும்..... எப்படின்ன்னே... தெரியாது ஒரு தரமாவது ஜெயிக்காதுன்னு நான் எதிர்
பார்த்துக்கிட்டே இருப்பேன்.. ம்ஹீம் எங்க இன்னைய வரைக்கும் இல்ல..
Kind Attn to All Kutty's Amma's: நீங்க உங்க பாப்பா'க்கு சிடி வாங்கும் போது HEIDI சிடி கண்ணில் பட்டால் எனக்கு வாங்கி த்தரவும். ப்ளீஸ்
அணில் குட்டி அனிதா:- ம்ம்..ஆமா.. பீப்பா ஆவா ஆனா பிறகும் பாப்பா'ங்க பாக்கற சிடி ய கேக்குறாங்க பாரு... ஹய்யோ..ஹய்யோ..!! கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடுமை ச்சிங்கு ச்சிங்குன்னு ஆடுச்சாம்... ஆடறது யாரு.. அந்த கொடுமை யாருன்னு...நான் வேற சொல்லனும்மா... :(
பீட்டர் தாத்ஸ் : All cartoon characters and fables must be exaggeration, caricatures. It is the very nature of fantasy and fable.
Labels: அப்பாவிற்காக 13 Comments
மனதும் அறிவும் அசைபோடும் நேரங்கள்-
நான் எழுதிய பதிவுகளில் என்னை ஆட்கொண்ட பதிவு இது. மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக… அப்போது மட்டும் இல்லை இப்போதும் இன்றும் என்றும் அறிவா மனதா என்ற என் கேள்விக்கு அர்த்தம் தேட முனையும் போது எல்லாம் இந்த பதிவை நான் எடுத்துப்படிப்பது உண்டு.
குறிப்பாக அதில் உள்ள பின்னூட்டங்கள் எனக்கு கொஞ்சம் தெளிவை தந்தாலும் அதிலிருந்தும் ஆயிரமாயிரம் கேள்விகள் ஏழாமல் இருப்பதில்லை. எதையுமே யோசிக்காமல் எப்படி ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக இவர்கள் செய்கிறார்கள்/பேசுகிறார்கள்/நடந்துக்கொள்கிறார்கள் என்பது எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி. நானுமே அப்படி சில சமயங்களில் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது வேண்டாத மனதுயரம் கவ்வுகிறது. அது வேண்டாதது என்றாலுமே ஏன்? என்ற கேள்வி எழுந்துவிடாமல் இருப்பது இல்லை. அதற்கான விடையை ஆராய்ந்து பிடிக்கும் முன் என்னை நானே பிடிக்கமுடியாமல் போய் விடுமோ என்று தோன்றும்.
அந்த பின்னூட்டங்களில் நாகை சிவா, மற்றும் எஸ்.கே சார் அவர்களின் பின்னூட்டங்களில் மிகவும் அழுத்தமாக உள்ளம் சொல்லுவதை கொண்டு நடந்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அறிவு சரியாக செய்கிறதா? இல்லை உள்ளம் சரியாக செய்கிறதா? உள்ளம் கேட்பதை மட்டும் கேட்டு நடந்து க்கொண்டால் பல விஷயங்களில் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று தோன்றும். ஆனால் எல்லாவற்றிற்கும் அறிவுடன் உட்கார்ந்து பேசும் போது, மிஞ்சுவது சந்தோஷம் இல்லை, ஒரு மயான அமைதி அல்லது எல்லாமே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற தள்ளிவைப்பு அல்லது என்னை விட பிறரின் செய்கைகளுக்கு முதலிடம் என்று அறிவால் நான் படும் பிரச்சனை அதிகம்.
உள்ளம் பல நேரங்களில், பல இடங்களில் என்னை ஆட்டிப்படைத்தாலும், அறிவு என்னை ஆக்கரமிப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. எங்கே சென்று முடியுமோ இந்த அசைபோடல்...
அணில்குட்டி அனிதா:- ம்க்க்கும்..!! இதுல வேற சந்தேகமா?.. பைத்தியக்கார ஆஸ்பித்திரியில தான் போயி முடிய போகுது... நான் அப்படி கொஞ்சம் தள்ளியே நிக்கறன் தாயி...எங்கனாலும் தனியா போயிக்கோங்க....
மக்க யாரும் இன்னைக்கு இந்த பக்கம் வராம இருந்தா அவங்களுக்கு நல்லது... :(
பீட்டர் தாத்ஸ் :-
1. “My mind tells me to give up, but my heart won't let me.”
2. Whatever you hold in your mind will tend to occur in your life. If you continue to believe as you have always believed, you will continue to act as you have always acted. If you continue to act as you have always acted, you will continue to get what you have always gotten. If you want different results in your life or your work, all you have to do is change your mind.”
3. “Great minds discuss ideas; Average minds discuss events; Small minds discuss people”
Labels: பழம்-நீ 15 Comments
டாக்டர் தரண் !! நான் கொண்டாடும் தருணங்கள் !!
நம் ப்ளாகர் நண்பர்களில் ஒருவர், * தரண் (Dharan) என்னுடைய நண்பர் என்று எப்போதும் இல்லாத பெருமை இப்போது எனக்கு தொற்றி கொண்டது. எப்போது இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லுவார் என்று காத்துக்கொண்டு இருந்தேன்..
அந்த நாளும் வந்துவிட்டது.......! :) தன் சொந்த முயற்சியால் இதையே தன் ஒரே குறிக்கோளாக கொண்டு, இப்போது வெற்றிகரமாக டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார்.
அவர் பெற்ற டாக்டர் பட்டம்... - Electrical Engineering இல் Ph D. His Research Area is " Efficient fast algorithms in inter/intra prediction for H.264/AVC encoders"
தரணு'க்கு என் /நம் எல்லாருடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் இந்த பதிவின் மூலமாக தெரிவித்து க்கொள்ள ஆசைப்படுகிறேன்.
மென்மேலும் எல்லா வளங்களையும், சிறப்புகளையும், பரிசுகளையும், பட்டங்கள் பெற்று வாழ்க வளமுடன் என்று மனம் உவந்து வாழ்த்திக் கொள்கிறேன்/றோம்.
உள்ளம்
உவகையில்
தத்தளிக்க-
வார்த்தைகள்
தடுமாற-
உன்
தோழியாக
பெருமையில்
என்
கண்கள் பனிக்க-
இந்த நொடி
பொழுதுகளில்
உன்னை
பாராட்டி
சீராட்ட
உன் தாயாக
எனக்கு
ஒரு வரம் கொடுத்துவிடு....
அன்புடன்..
கவிதா !!
* அவருடைய பதிவுகள் LOCK செய்யப்பட்டுள்ளதால் இங்கு அவருடைய கேப்பங்கஞ்சி பதிவை இணைத்திருக்கிறேன்.
Labels: கதம்பம் 18 Comments
மனிதனின் மறுபக்கம்..
இந்த பதிவை தொடங்கும் முன் "பதிவர்களின் இரு முகங்கள்" என்று தான் தலைப்பு இட்டு இருந்தேன்.. ஆனால் முன்னரே இப்படி வைத்த தலைப்புகளினால், உள் எழுதப்பட்டிருக்கும் கருத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் தலைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்வினை பதிவுகள் வந்துவிட்டன. அதனால் தலைப்பை மாற்றி/திருத்தி பொதுவாக மனிதனின் மறுபக்கம் என்று வைத்து இருக்கிறேன்..
மனோபாலா' என்று ஒரு இயக்குனர், இப்போது காமெடி கதாபாத்திரங்களில் நிறைய நடிக்கிறார். அவருடைய குடும்பத்தினர் அவரை பற்றி சொல்லும் போது "வீட்டில் மிகவும் கெடுபிடியான ஆள், எளிதில் பேசவைக்க முடியாது சிரிக்க வைக்கமுடியாது, எப்போதும் சீரியஸாக இருப்பார்." என்றனர். மதுபாலா வீட்டில் இப்படி இருப்பார் என்பது யூகிக்கமுடியாதது உண்மையல்லவா?. அது அவரின் மற்றொரு முகம்..
என்னுடைய 8-10 வகுப்பு வரை தமிழ் பாடம் எடுத்த ஆசிரியை மிகவும் கடுமையாக எங்களை நடத்துவார். அவரிடம் அடிவாங்கி நொந்து போனவர்கள் ஏராளம். அடிவாங்க பயந்தே பலர் அவர் வரும் வகுப்பு நாட்களில் விடுப்பு எடுப்பார்கள். அவருக்கு அப்போது ஒரு 40-45 வயது இருக்கும் ஆனால் குழந்தை இல்லை. இந்த மாணவிகள் அவருக்கு இருந்த இந்த குறையை சொல்லி திட்டுவார்கள். இப்படி நம்மை எல்லாம் கொடுமை படுத்துவதால் தான் கடவுள் அவருக்கு குழந்தை கொடுக்கவில்லை என்பார்கள். நான் மட்டுமே "யேய் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் டீச்சர் ரொம்ப நல்லவங்க.. அவங்க வீட்டுக்கு போய் பாருங்க.. அவங்க எவ்வளவு நல்லா அன்பா பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாது.. அவங்களை சரியா புரிந்து க்கொள்ளாமல் இப்படி பேசாதீர்கள்" என்பேன். ஆமாண்டீ நீ எல்லா டீச்சருக்கும் செல்லப்பிள்ள நீ அப்படித்தான் சொல்லுவ.. நீ அடி வாங்கிப்பாரு அப்ப த்தெரியும் என்பார்கள். நாம ஒழங்கா இருந்தா ஏன் அடிக்கிடைக்கும்? அதை யாரும் யோசித்து பேசவதில்லை. கண்டிப்பாக தமிழ் ஆசிரியை தேவையில்லாமல் யாரையும் அடிப்பதில்லை. எங்களின் வீட்டுக்கு அருகில் தான் அவர்கள் வீடு, பள்ளி விட்டு செல்லும் போது அவருடன் செல்லுவேன், வழியில் பேசவே மாட்டார், வேகமான நடை, நானும் பின்னால் ஓடுவேன். ஒரு முறை எதற்கோ வீட்டுக்கு அழைத்து இருந்தார், சென்று தயக்கத்தோடு வெளியில் நின்றிருந்தேன், அட.. ஏன் புள்ள வெளியில நிக்கற வா வா... என்றவர், நான் உள்ளே சென்றதும் என்னை அனைத்து உச்சி முகர்ந்தார். என்னால் நம்பவே முடியவில்லை.. அதுவும் அவர் பள்ளியில் சிரித்து பார்த்ததே இல்லை ஆனால் திறந்த வாயை மூடாமல் சிரித்தபடியே இருந்தார். இப்படியும் இரண்டு இடத்தில் வேறு வேறாக ஒரு மனிதனால் இருக்கமுடியுமா என்று யோசிக்க வைத்த முதல் ஆசிரியை அவர்கள்தான்.
அந்த வயதிலேயே ஆரம்பித்துவிட்டது மனிதர்களை பற்றிய என்னுடைய அலசல். யாரையும் இவர் இப்படித்தான் என்று எதைவைத்தும் முடிவுக்கட்ட கூடாது. அவரவருக்கு அப்படி இருக்க ஒரு சொந்த காரணம் இருக்கிறது.. இருக்கிறார்கள்.
பதிவர்கள் பக்கம் வருகிறேன், அதிகம் பார்ப்பது ஒருவர் எழுத்தை க்கொண்டு அவரை கணிப்பது. இது நான் பார்த்தவரையில் எல்லோரும் செய்கிறார்கள். என்னை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம், என் எழுத்தை வைத்து நான் கருப்பாக குண்டாக குள்ளமாக இருப்பேன். .என்று நினைத்து நான் அப்படி இல்லாமல் இருப்பதை பார்த்து என்னை கேட்டவர்கள் உண்டு. எப்படி என் தோற்றத்தை என் எழுத்தை கொண்டு நிர்ண்யிக்கிறார்கள்? ஒருவர் மட்டும் ஏன் நீங்கள் அப்படி யாரையும் யூகிக்க மாட்டீர்களா? என்றார். சத்தியமாக இல்லை. ஏன் அவரின் குணத்தை க்கூட யூகிப்பதில்லை, பதிவரை தனிப்பட்ட முறையில் தெரிந்தால் ஒழிய அவரை பற்றிய சொந்த அலசல் கண்டிப்பாக நான் செய்வதில்லை.
எழுதுவதை வைத்து இவர் இப்படித்தான் என்று ஊகிப்பது எப்படி சரியாகும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பதிவர் போலி. அவரை நமக்கு தெரிந்த அளவு அவரின் குடும்பத்தினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் ஒருவர் இருக்கிறார், அவர் வீட்டில் ஒரு முகம், வெளியில் வந்தால் நண்பர்களிடம் ஒரு முகம், தோழிகளிடம் ஒரு முகம், காதலியிடம் ஒரு முகம், பெண் தோழிகளிடம் ஒரு முகம், இதை தவிர்த்து இரவில் ரகசியமாக பேசும் பெண்களிடம் தனி முகம், இவை எல்லாவற்றையும் விட சூப்பர் அவர் எழுத்தின் அசத்தலான பொதுநல முகம். அந்த சுயநலவாதியின் ஒவ்வொரு எழுத்திலும் பொது நலம் கும்மி அடிக்கும், ஆனால் உண்மையில்...????????? கேள்விகுறிகள் மட்டுமே பதில். இந்த அத்தனை முகங்களும் தெரிந்த பிறகு அந்த சுயநலவாதி'யின் எழுத்தை கூட்டி பெருக்கி குப்பைக்குள் போட வேண்டியதாக இருக்கிறது. ஆக, எழுதுவதை வைத்து பெண்ணியவாதி, ஆணாதிக்கவாதி, இந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர், பார்ப்பனர்'களுக்கு எதிரானவர் அல்லது ஜால்ரா அடிப்பவர் இப்படி போய் கொண்டே இருக்கும்.
இப்படி எழுதுவது ஒன்றாகவும், நடந்து கொள்வது ஒன்றாகவும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், மாறாக எழுதுவது இல்லாவிட்டாலும் நன்றாக நடந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். இல்லை இரண்டும் இருக்கலாம். சில பதிவர்களை நேரில் பார்ப்பதற்கு முன் அவரை பற்றிய ஒரு நல்ல மதிப்பு இருக்கும், பதிவரை பார்த்த பிறகு அவர் பேச்சு நடத்தை இவற்றை பார்த்தபின் அவரை பற்றிய நம் மதிப்பு பூச்சியமாக மாறக்கூடும். மாறாக இன்னும் அதிகமாகவும் கூடும்.
ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை. அவர்களின் உள்ளிருப்பது தான் எழுத்தாக வருகிறது என்றால் நான் மேல சொன்ன ஒரு சுயநல பதிவரை எந்த விதத்தில் சேர்த்துக்கொள்வது. தயவு செய்து எழுத்தைக்கொண்டு ஒருவரின் குணத்தையும், செயலையும், உணர்வையும், அவரின் தோற்றத்தையும் முடிவு செய்யாமல் இருப்போமே...
அணில்குட்டி அனிதா :- ஆமா கவி இப்படி எல்லாம் சொன்னத வச்சி அவங்க ரொம்ப அழகா இருப்பாங்கன்னு மட்டும் நீங்க நெனச்சிடாதீங்க...
பீட்டர் தாத்ஸ் :- “The being without an opinion is so painful to human nature that most people will leap to a hasty opinion rather than undergo it.”
Labels: சமூகம் 51 Comments
ரவுண்டு குட்டிக்கு என் பதில்கள் பத்து..!
குழந்தை என்னவோ நியாயமான கேள்வி கேட்டு இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள், குட்டீஸ் (சிபி தாத்தா நீங்க இதுல இல்ல) எல்லோரும் என் பதிலையும் எதிர்பார்க்கிறார்கள். அதனால் என் ரவுண்டுக்குட்டிக்கு என் பதில்கள் இதோ...
1. y do u boring me with ur usual sambar, poriyal, karakozhambu..dont u know to prepare chicken role, chicken puff, etc?
அம்மா உனக்கு எத்தனையோ தரம் சொல்லிவிட்டேன்.. வேலைக்கு போறேன்..என்னால் முடிந்த அளவு செய்து தரேன்னு. அதுவும் இல்லாமல் சிக்கன் ரோல் எல்லாம் நீ நினைக்கும் அளவு இண்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட்' க்கு எனக்கு வரவில்லை.. நான் ஏதோ ஒன்று ரோல் ன்னு செய்து கொடுத்தா நீ பேசாமயா சாப்பிடற.. ..ஏன்டா செய்து தந்தோம்னு நினைக்கற அளவுக்கு என்னை ஓட்டற.....அவ்வ்வ்வ்வ்வ்வ்!!
2. y do u shout for silly reasons?
ம்ம்....முன் அளவுக்கு இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன். .ஆனா இப்பவும் நீ இப்படி நினைச்சா.. இன்னும் குறைச்சிக்க ட்ரை பண்றேன்..! :)
3. y do u hate ur son playing games?
நான் ஆபிஸ் விட்டு வந்தவுடனே நீ எங்க இருக்கேன்னு தான் பார்ப்பேன். உன்னுடன் உட்கார்ந்து பேசவேண்டும்னு ஆசையா இருக்கும். ஆனா நீ அந்த கேம்ஸ்'ஐ விட்டு வெளிய வரவே மாட்டே..அம்மா வந்தேனே இருக்கேனா இல்லையான்னு நீ பார்க்கறது கூட இல்ல. உன்னோட அட்டன்ஷனை என் பக்கம் திருப்ப என்ன என்னவோ வில்லித்தனம் செய்ய வேண்டியதாக இருக்கு.. என்னுடன் பேச ஒரு அரை மணி நேரம் நீ ஒதுக்கக்கூடாதா?
4. y do u wake up at 12 in the night and bug ur son?
மேலே சொன்ன அதே காரணம். 10.30 மணி வரை உனக்கு டைம் சொல்லி இருக்கு. .அதுக்கு மேல தினமும் உட்கார்ந்து இருக்க, உன்னை தூங்க வைக்க நான் அர்த்த ராத்திரியில் நடமாட மட்டும் இல்ல கத்த வேண்டி இருக்கு..என்ன செய்ய நீதான் என்னை அப்படி ஆக்கிட்ட.... :(
5. why dont u give enough pocket money to ur kid?
இப்போது கொடுப்பதே அதிகம் என்று நான் நினைக்கிறேன்.. இதையே சேர்த்து வைத்து உனக்கு தேவையானதை வாங்க பழகிக்கொண்டால் இன்னும் சந்தோஷப்படுவேன் :)
6. y do u insist that ur son should like the heroin that u like?
எனக்கு பிடிக்கும் உனக்கு பிடிக்குமான்னு தான் கேட்டு இருக்கேன். .சில சமயம் நீ பிடிக்கலைன்னு சொன்னா ஏன் பிடிக்காதுன்னு கேட்டு இருக்கேன்..ஆனா இன்ஸிஸ்ட் பண்ணமாதிரி தெரியல... ..
7. would u let ur son have a girlfriend in college?
உன்னிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கல, பரவாயில்லை. ஒன்று இல்லை நிறைய தோழிகள் வைத்துக்கொள்..ஆனால் உன் பர்ஸ் காலியாகாமல் அவர்கள் பர்ஸை காலி செய்ய பழகிக்கொள். உனக்கு பாக்கெட் மணி கொடுக்கறதே வேஸ்ட், இதுல அதுங்க எல்லாத்துக்கும் சேர்த்து என்னால் கொடுக்கமுடியாது. பெண்களுக்காக உன் பொன்னான நேரத்தை அதிகம் செலவழிக்காதே. .உன் அறிவுக்கும் ?!! அழகுக்கும் ?!! தானாக பெண்கள் உன் பின் வருவார்கள் (....ஸ்ஸ் இப்பத்திக்கு இது போதும்)
8. y u become so cunning villi when u complaint me to appa?
அம்மாவை எளிதாக ஏமாற்றுகிறாய், அப்பா என்ற வார்த்தை வந்தால் தான் கொஞ்சம் பயம் இருக்கிறது.. என்ன செய்வது என்னால் முடியாததை அப்பாவை கொண்டு சாதிக்கிறேன்.
9. y dont u let ur son eat fast food daily?
இல்லை.. அதன் விளைவுகள் என்னைவிட உனக்கு நன்றாக தெரியும். எப்போதாவது பரவாயில்லை என்றும் கண்டிப்பாக இல்லை.. நீ இப்பவும் பிடிவாதம் பிடித்தால் நானும் தினமும் சாப்பிடுகிறேன்... உனக்கு சரி என்றால் இருவரும் சேர்ந்தே சாப்பிடுவோம். எப்படி வசதி !! :)
10. y dont u stop treating me like a new born baby?
ம்ம்.... நீ இப்ப இல்ல எப்பவும் எனக்கு குழந்தைதான்.. என்ன உனக்காக வெளியிடங்களில் எல்லோர் எதிரிலும் வேண்டுமானால் கொஞ்சாமல் இருக்கிறேன்.. போதுமா ?!! :)
அணில்குட்டி அனிதா:- ரெண்டும் வீட்டுகுள்ள பேசறத விட்டுட்டு இப்படி பதிவு போட்டு பேசுக்குதுங்க. .என்னத்த சொல்றது.. காலம் கெட்டு போச்சி....!
பீட்டர்தாத்ஸ் : A mother understands what a child does not say.
Labels: அப்பாவிற்காக 54 Comments
என் குழந்தை என்னை கேட்ட பத்து கேள்விகள்...
எத்தனை வயது ஆனாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான், அவனிடம் நேற்று எல்லாரும் 10 கேள்வி கேட்டு பதிவு போடறாங்க..நீ என்னை கேளுடான்னு சொன்னவுடனே.. எனக்கு டைம் வேணும், நான் நிறைய யோசிக்கனும் என்று பில்டப் கொடுத்து இப்போது ஆன்லைனில் திரும்பவும் கேட்டு ஒரு வழியாக அனுப்பிவிட்டான்.. :))
அவன் ஆங்கிலத்தில் கேட்டதை தமிழாக்கலாம் செய்யலாம் என்று தான் நினைத்தேன்.. இருந்தாலும் அவன் அனுப்பியவாறே மாற்றாமல் போட விரும்பி அப்படியே போடுகிறேன்... :)
1. y do u boring me with ur usual sambar, poriyal, karakozhambu..dont u know to prepare chicken role, chicken puff, etc?
2. y do u shout for silly reasons?
3. y do u hate ur son playing games?
4. y do u wake up at 12 in the night and bug ur son?
5. why dont u give enough pocket money to ur kid?
6. y do u insist that ur son should like the heroin that u like?
7. would u let ur son have a girlfriend in college?
8. y u become so cunning villi when u complaint me to appa?
9. y dont u let ur son eat fast food daily?
10. y dont u stop treating me like a new born baby?
அணில் குட்டி அனிதா:- காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.. ...விடுங்க விடுங்க.... அம்மணி எல்லாத்துக்கும் ஆடுவாங்க.. ! இதுக்கு கேக்கவேணுமா?
பீட்டர் தாத்ஸ் :Mothers all want their sons to grow up to be President, but they don't want them to become politicians in the process.”
Labels: அப்பாவிற்காக 28 Comments
நாங்க போலிஸ் இல்ல..........!!
பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய தலையாய கடமை நம் காவல்துறையினருக்கு இருக்கு. அதை மறந்து, தன்னை மறந்து ஒருவர் விடாமல் என்னவோ பாக்கிஸ்த்தானோடு போர் செய்ய போவது போல் நம் வழக்கறிஞர்களை கூட்டம் கூட்டமாக ஓடி அடித்து நொறுக்கும் காட்சிகளை பார்க்க மனம் கொதிக்கிறது...
அடித்து நொறுக்குகிறார்கள் சரி, அது என்னங்க வளாகத்தில் நிற்கும் கார், இரண்டு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்குகிறார்கள் ? கார், காராக சென்று கண்ணாடியை லத்தியால், கல்லால், காலால் அடித்து நொறுக்குகிறார்கள், ஒரு வழக்கறிஞரை பத்து காவல்துறையினர் ஒன்றாக சேர்ந்து அடித்து நொறுக்குகிறார்கள், இதை எல்லாவற்றையும் விட ஒரு நல்ல காவலர், உயர்நீதிமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஒரு ஜன்னல் கண்ணாடியை வேகமாக ஓடி சென்று உடைத்துவிட்டு வெறியுடன் கத்துகிறார். ? புரியலைங்க.. !! அப்படி என்ன காழ்புணர்ச்சி.. தன்னையும் தான் செய்யும் காவல் வேலையையும் மறந்து இப்படி பொது சொத்தை காப்பாற்ற வேண்டிய இவர்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்களின் கட்டுப்பாட்டை இழந்து....
எங்க போயிக்கிட்டு இருக்கோம் நாம..... ?!! புரியலைங்க... தினம் தினம் ஒரு பிரச்சனை.... அதை தீர்க்க முனைவதற்குள் வேறு ஒன்று.. இதில் எதையுமே.. சகித்துக்கொள்ள கூடியதாக இல்லை..
எதையுமே எளிதிலோ, யாராலுமே விரைவிலோ தீர்க்கக்கூடியதாக தெரியவில்லை.. ... இந்த நிகழ்வு இதுவரை வரலாற்றில் காணாத காவல் துறையின் உச்சக்கட்ட அராஜக செயலாகவே படுகிறது.. :((((((((((((((((((
அணில்குட்டி அனிதா :- போலிசு மாமாங்க.. அடிக்கறத பாத்தே ஏன் ஒடம்ம்பு நடுக்கம் கொறையல.. ..இதுல இப்ப அம்மணிவேற சாமியாடுது. . நான் ஓரங்கட்றேன்ன்..!! :(
பீட்டர் தாத்ஸ் :- Policemen so cherish their status as keepers of the peace and protectors of the public that they have occasionally been known to beat to death those citizens or groups who question that status.”
Labels: சமூகம் 12 Comments
இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண் தெய்வங்களுக்கு..
பெண் எந்த விஷயத்தை செய்தாலும் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவோடு நிறைய கேலி சித்திரங்கள் நமக்கு ஈமெயிலில் வரும். அதை பார்க்கும் போது பல தடவை கோபம் வரும்..அப்படியா நாம் இருக்கிறோம், ஏன் இப்படி கிண்டல் செய்கிறார்கள்?? கார் பார்க்கிங், டூ வீலர் பார்க்கிங் இடங்களில் பெண்கள் மட்டும் தனிவிதமாக பார்க்கிங் செய்வது போன்ற படங்கள் நிஜமாக கோபத்தை தாண்டி சிரிப்பையும் வர வைக்கும் படங்கள்.
பெண் இப்படித்தான் செய்வாள் என்பதை தாண்டி நாம் சிந்திக்கிறோமா? அதைவிட்டு வெளியில் வர முயற்சி செய்து இருக்கிறோமா.? தனிப்பட்ட முறையில் சுய மதிப்பீடு செய்து பார்த்து நம்மை நாம் நம் வேலைகளில் சரி செய்துக் கொள்கிறோமா? இரு சக்கர வண்டி ஓட்டும் பெண்கள், மிகுந்த போக்குவரத்துக்கு இடையே அடிக்கும் கூத்து இருக்கிறதே.. எத்தனை பொறுமையானவர்களையும் கோபத்துக்கு உள்ளாக்கி திட்ட செய்யும். அத்தனை மோசமாக வண்டி ஓட்டுகிறார்கள். பெண்கள் பக்கத்தில் வண்டி ஓட்டி வந்தாலே, "ஓரங்கட்டு சனியன் போட்டும், இல்லன்னா நம்மளை சில்லறை பொறுக்க வைப்பாளுங்க" என்ற சொல்லும் அளவிற்கு பெண்கள் வாகனங்களை ஓட்டுகிறார்கள். சாலைகள் அவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணமா என்று தெரியவில்லை. பொதுவாக எனக்கு நண்பர்களுடன் / தோழிகளுடன் பின்னால் அமர்ந்து வண்டியில் செல்லும் வழக்கமில்லை. என்னுடன் பின்னால் (உயிரின் மீது அக்கறை இல்லாதவர்கள் மட்டும்) அமர செய்து போவேன். அல்லது தனித்தனியே அவரவர் வண்டியில் செல்வோம். அப்படி செல்லும் போதே அவர்களை ஓட்டுவதை கவனித்து அலுவலகம் வந்த பிறகு இப்படி ஓட்டுங்கள் என்று சொல்லுவேன். சிலர் எடுத்துக் கொள்வார்கள், சிலர் திருப்பி வேலையை பார் என்பார்கள்.
தெரியாத்தனமாக என் வீட்டு பக்கத்தில் இருப்பவர்களுடன் வெளியில் சென்று விட்டேன். சோம்பேரித்தனம் தான் காரணம். போன பிறகுதான் தெரிந்தது, கடவுளே எவ்வளவு மோசமாக வண்டியை யாரை பற்றியும் கவலை படாமல் ஓட்டுகிறார்கள்? கவனித்த வரை
* நடு ரோட்டில் வண்டியை ஓட்டுகிறார்கள்
* யாராவது ஹாரன் கொடுத்தால் கேவலமாக அவர்களை திட்டுகிறார்கள்
* ஹாரன் கொடுப்பவர்களை திட்டினாலும், அவர்களுக்கு வழி விடவில்லை.
* சைட் மிரரா? அப்படின்னா என்று பெருமையாக கேட்கிறார்கள்
* எந்த பக்கத்தில் திருப்பினாலும் சிக்னல் கொடுக்கவில்லை, அல்லது கொடுத்தாலும் அடுத்தவர் தனக்கு இடம் கொடுக்கிறார்களா என்று பார்க்கவில்லை
* இடது வலது பக்கம் என்ற சென்ஸ் இல்லாமல் ஓட்டினார்கள். அதாவது இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் அதற்காக முன்னமே தன்னை தயார் படுத்தாமல் போக்குவரத்துக்கு நடுவில் அலங்க மலங்க எல்லோரையும் பயமுறுத்தி நடுவில் புகுந்து... (ஸ்ஸ் ..இதுக்கு மேல முடியல நான் குதித்து ஓடிவிடலாமா நமக்கும் சேர்த்து அடிக்கிடைக்குமா என்று யோசித்தேன்.)
இத்தனைக்கும் இந்த பெண் தினமும் கிட்டத்தட்ட சென்னை நகரத்து போக்குவரத்து மிகுந்த சாலைகளில் 30 கிமி பயணிக்கிறார். அதில் அவர் குழந்தை வேறு அவருடன் செல்கிறது. :( அவர் செய்வது தவறு என்றே அவருக்கு புரியவில்லை, அடுத்தவர்கள் தான் சரியாக ஓட்டவில்லை என்று திட்டிக்கொண்டே வந்தார். :) நான் பொறுமையாகத்தான் இருந்தேன். பல சமயங்களில் இப்படி பேசவிட்டு பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் என்பது இதற்கு நிச்சயமான காரணம். திரும்பி வீட்டுக்கு வந்த பிறகு தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளட்டும் என்று அந்த தெய்வத்தை பார்த்து சொன்னது..இன்னும் இப்படிப்பட்ட தெய்வங்களுக்கு தேவைப்படுமே என்று பதிவானது.
1. சைட் மிரர் பார்க்காமல் வலது இடதுபுரம் திரும்பத்திட்டம் இடாதீர்கள். சட்டென்று திரும்பினால் பின் வரும் வண்டிகள் சுதாரிக்கமுடியாமல் விபத்து ஏற்படலாம்
2. ஹாரன் அடித்தால் தயவு செய்து வழிவிட்டு விடுங்கள்
3. நடு ரோட்டில் வண்டி ஓட்டாதீர்கள், பெரிய வாகனங்கள் செல்வது கடினம்.
4. சிக்னல் வர ஒரு கிமி முன்னரே இரண்டு கால்களையும் தொங்கவிட்டு கொள்தீர்கள்.
5. எவ்வளவு வேகமாக போகிறோமோ அதை போலவே அவ்வளவு குறைந்த வேகத்திலும் கால்களை கீழே ஊனாமல் பேலன்ஸ் செய்ய பழகுங்கள். இப்படி செய்வதால் இரண்டு கால்களையும் நிற்க போவதற்கு ஒரு கிமி முன்னறே தொங்க வைக்க வேண்டாம்.
6. தேவையில்லாமல் நீங்கள் ஹாரன் கொடுக்காதீர்கள்
7. வேகமாக சென்று சிக்னல் விழுந்தால் சடன் ப்ரேக் போடாதீர்கள், பின்னால் வரும் வாகனங்கள் வந்து மோதும்.
8. முன்னே செல்லும் 2, 3 வாகனங்களில் கவனம் வைத்து ஓட்டுங்கள், விபத்தை கூடிய மட்டும் தடுக்க முடியும்.
9. செல் போன்னை காதில் மாட்டி க்கொண்டு தயவு செய்து சீன் போடாதீர்கள்
10. பகலில் ஹெட் லைட் நிறுத்தப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்
பெண்கள் இப்போது ரோட் ரேஸ் ரோஜாக்களாக இருந்தாலும், மிக சிலரே மற்றவர் வியக்கும் அளவிற்கு வண்டி ஓட்டுகிறார்கள், பலர் பின்னால் நம்மை கேவலமாக திட்டும் அளவிற்கு தான் வண்டியை ஓட்டுகிறார்கள். தயவுசெய்து இப்படித்தான் என்று இல்லாமல் இப்படியும் என்பதை உணர்ந்துவிட்டால், பெண்கள் இப்படித்தான் என்று யாரும் நம்மை முத்திரை குத்த முடியாது.
அணில் குட்டி அனிதா:- ஹா ஹா ஹா...:) 2009 வருடத்தின் பெரிய காமெடியன் கவி'தான் ..அண்ணாசாலையில் அம்மணி அப்போலோ ஆப்லுன்ஸ்' க்கு நடுவில் வண்டிய விட்டு, அப்போல்லோ ஆஸ்பித்திரியல அட்மிட் ஆகி, எப்படிம்மா ஆக்ஸிடன்ட் ஆச்சின்னு டாக்டர் கேட்டதுக்கு... "டாக்டர் முடியல..உங்களால "First aid " கொடுக்க முடியுமா? ப்ளீஸ்...!! நீங்க கேட்கற கேள்விக்கு எல்லாம் பொறுமையா 2 நாள் உங்க ஆஸ்பித்திரியில பீஸ் கட்டி உட்கார்ந்து பதில் சொல்றேன்னு " (இதுக்கு எப்படி ஆச்சின்னே சொல்லியிருக்கலாம்) சொல்லி..( ஹ ஹா ஹாஆ :)))) என்னால சிரிப்ப அடக்க்க்க்க்க்க்க முடியலியே............... ) ஒன்னு இல்லீங்கோ ஒன்னு ..இந்த பக்கம் ஒன்னு அந்த பக்கம் ஒன்னுன்னு இடுப்புல 2 ஊசி... கையில வேற ஒன்னு, அதுக்கு அப்புறமும் நடக்க முடியாம 2 பேரு இந்த பக்கம் ஒருத்தர் அந்த பக்கம் ஒருத்தர்...........ஹா ஹா.ஹா :)))))) எல்லாமே உள்காயம் அம்மணியால வெளியில சொல்ல முடியல போங்க.....
இந்த விஷயம் இங்க யாருக்கும் தெரியாது இல்ல.. அடடா?!! இவிங்க கொடுக்கறாங்க ப்பா அட்வைஸ்'ஸு எப்படி வண்டி ஓட்டனும்னு.. முடியலடாசாமி.. இவிங்க. சமுதாய அக்கறை... ஹய்யோ ஹய்யோஒ!!.. போங்க போங்க பதிவு படிச்சது போதும்.. ...........பொழப்ப பாருங்க எல்லாரும் !!
பீட்டர் தாத்ஸ் :- Have you ever noticed that anybody driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac?”
Labels: சமூகம் 31 Comments
மத்திய மாநில அமைச்சர்களே டீ குடிக்க வாங்களேன் !!
தரமணியில் ஐடி கம்பெனிகள் அதிகமாக இருக்கும் கட்டிடம் ஒன்று இருக்கிறது. அதற்கு ஒரு வாரம் முன்பு நம் மத்திய அமைச்சர் டி.ர்.பாலு வந்திருப்பார் போல் இருக்கிறது. போஸ்டரில் அவர் பெயரை பார்க்கமுடிந்தது. வேறு யார் யார் வந்தார்கள் போனார்கள் என்பது தெரியவில்லை.
ஒரு 7, 8 மாதங்களாக அலுவலகத்திற்கு தரமணி வழியாக சென்று வருகிறேன். நீக்கப்படாத தெரு முழுக்க பரவிக்கிடக்கும் குப்பை, சாக்கடை தண்ணீர் நிரம்பி வழிந்து தெருவில் குட்டையாக தினமும் பார்க்க முடிந்தது, பெரிய பெரிய ஒயர்கள் அறுந்து விழுந்து நடுரோடிலேயே அகற்றப்படாமல் கிடந்தது, நானுமே அதன் மேல் வண்டியை ஓட்டி சென்றுக்கொண்டு தான் இருந்தேன். வேறு வழியும் இல்லை, நின்று தனிஆளாக அதை எடுத்து போடும் அளவிற்கு அந்த ஒயர்கள் இல்லை, தெரு ஓர கம்பத்திலிருந்து அறுந்து விழுந்து சுருள் சுருளாக மிக நீளமான, தடிமனான ஒயர்கள்.
மத்திய அமைச்சர் வருகிறார் என்றவுடனே, ஒரே நாளில், ஒரு நாள் என்று கூட சொல்ல முடியாது சில மணி நேரங்களில் அந்த தெரு படு சுத்தமாக மாற்றப்பட்டது மட்டுமல்ல. நடுவே அலங்காரத்திற்காக திடீரென்று நிஜமான செடிகள் நடப்பட்டு இருந்தன. அட!! சில மணி நேரங்களில் இவர்களால் செய்ய முடிந்த வேலையை மாதக்கணக்காக (நான் மாதக்கணக்காக தான் பார்க்கிறேன்), செய்யாமல் இருக்கிறார்களே?!. அதில் ஆச்சரியமான விஷயம் ரோடுகளில் நடுபகுதியில் திடீரென்று முளைத்த செடிகள் !! ?!!
இதை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது எல்லாம், ஏன் நம் அமைச்சர்கள் எல்லாம் காலை, மாலை இரண்டு வேலையும் சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் ஏதோ ஒரு டீ கடையில் டீ குடிக்க சென்று வரக்கூடாது.? வீட்டில் குடிக்கும் டீ' ஐ கடையில் சென்று குடிக்கலாமே. அமைச்சர் டீ குடிக்க வருகிறார், என்று அந்த ஏரியா முழுதும் அன்றே சுத்தம் செய்து விடுவார்கள். அமைச்சர்களும் பொதுமக்களை சந்தித்த மாதிரி இருக்கும், டீ'யும் குடித்த மாதிரி இருக்கும்.
தமிழக அரசாங்கம் கூட பள்ளியில் ஆசிரியர்களுக்கு டைம் டேபிள் போட்டு கொடுப்பது போன்று இந்த அமைச்சர் காலையில் இந்த ஏரியா டீ கடை, மாலையில் இந்த ஏரியா டீ கடைக்கு டீ குடிக்க போக வேண்டும் என்று திட்டம் போட்டு கொடுத்துவிட்டால் நன்றாக இருக்கும்.
இப்படி எல்லாம் திட்டம் போட்டு தான் நாம் நம்மை சுற்றி இருக்கும் இடத்தையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க இயலும் என்ற நிலைமைக்கு வந்து விட்டதாக தோன்றுகிறது.
மாதக்கணக்காக அகற்றப்படாத குப்பை மேடுகள், ஆண்டுகளாக சுத்தம் செய்யாத பொது கழிப்பிடங்கள், அல்லது பொது கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட இடங்கள், பொங்கி பொங்கி வழியும் கழிவுநீர் கால்வாய்கள் என்று சென்னை நகரம் மிகவும் மோசமாகி வருகிறது. ஊருக்கு சென்றுவிட்டு திரும்பும் போது தாம்பரம் பேருந்து நிலையத்தை பார்க்க நேர்ந்தது. கிழக்கு தாம்பரத்தில் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 10-15 கடைகள் நெடுக ஒன்றும் பாதியுமாக உடைக்கப்பட்ட நிலையில், பொது கழிப்பிடமாக ஆக்கப்பட்டு இருக்கிறது. அத்தனை பேருந்துகளும் இந்த துர்நாற்றம் வீசும் கடைகளின் மிகஅருகாமையில் தான் வரிசையாக நிற்கின்றன. இந்த கடைகள் ஏன் இடிக்கப்பட்ட நிலையில் உள்ளது, ஏன் பொது கழிப்பிடமாக மாறியது, இது எப்போது சுத்தம் செய்யப்படும் என்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. குழந்தைகள், வயதானவர்கள் என்று எல்லோரும் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு அவலம்.
இப்படி இருக்கும் இடத்தில் நடு நடுவே சந்தில் சிறிய பெட்டி கடையில் வியாபாரம் நடந்தவாறு இருக்கிறது. அந்த பெட்டிக்கடைகள் ஏதாவது ஒன்றுக்கு நம் அமைச்சர் யாராவது டீ குடிக்கவோ, பேப்பர் படிக்கவோ வந்தால், இந்த இடம் கூட சில மணி நேரத்தில் சுத்தமாகி விடும் அல்லவா?
ஆனால் இப்படிப்பட்ட இடங்களை நாசப்படுத்தும் பொதுமக்களை என்ன செய்வது? தன் அன்றாட வேலையை சரிவர இல்லை சுத்தமாகவே செய்யாமல் இருக்கும் துப்புறவு தொழிலாளியை என்ன செய்வது?
அணில் குட்டி அனிதா: கவி.. வேகமாக போயி நீங்களே க்ளீன் பண்ணிட்டு வந்து இருக்கலாமே... ? செய்தீங்களா... ?? அம்மணிக்கு இப்படி பக்கம் பக்கமாக எழுத தெரியும்.....நல்லா வாய் கிழிய பேச தெரியும்....வேற ?!! மக்கா உங்க எல்லாருக்கும் அம்மணிய நல்லாவே கும்ம தெரியும்..... எப்பவும் போல கும்மாம நல்லா நாலு சாத்து சாத்திட்டு போங்க..!! ஒகே !!
பீட்டர் தாத்ஸ் : Keep your own house and its surroundings pure and clean. This hygiene will keep you healthy and benefit your worldly life.”
Labels: சமூகம் 25 Comments
மேனேஜர் vs டேமேஜர்
மேலாளர் - இவர் எப்படி இருக்கவேண்டும், எப்படி தன்னை ஒரு நல்ல மேலாளராக உருவாக்கிக்கொள்வது, தன்னுடன் பணி புரியும் ஆட்களை எப்படி வேலைவாங்குவது, நடத்துவது, தன்னை மேலும் எப்படி ஒரு நல்ல மேலாளராக மெருகேற்றிக்கொள்வது என்பதை ப்பற்றி நிறைய புத்தங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்த்திருக்கிறேன்.. இதை எல்லாம் படித்தா ஒரு மேலாளர் உருவாகிறார் அல்லது தன் பதவிக்கான தகுதியை மேம்படுத்திக் கொள்கிறார் அல்லது கொள்ளமுடியும். புத்தகங்கள் படித்து அதை நடை முறையில் செயற்படுத்துபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். குறிப்பாக நம் பதிவியில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை படித்து நடந்து க்கொள்வது என்பது ப்ராக்டிகலாக சாத்தியமா என்று தெரியவில்லை. என் மேலாளர்களையும், உயர் அதிகாரிகளையும் கவனித்ததன் மூலம் சில நல்ல விஷயங்களை கற்று க்கொண்டு இருக்கிறேன். அதில் ஏதாவது உங்களுக்கும் உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ப்ளாகரில் நிறைய பதிவர்கள் மேனேஜரை டேமேஜர் என்றே சொல்லி பார்க்கிறேன். அத்தனை எரிச்சலும் கோபமும் தன்னுடைய மேலாளர்கள் மீது இருக்கிறது என்பதை உணர முடிகிறது. விளையாட்டாக சொன்னாலும் நிஜத்தில் மேனேஜர்கள் எப்போதும் அதிகாரத்தோடும், தன்னுடன் வேலை செய்பவரகளை அடிமைகள் போலவும், தன் சொந்த வேலையை செய்ய வைப்பவர்களாகவும், தனக்கு சாதகமாக பேசுவர்களுக்கு மட்டும் அவர்கள் சாதகமாகவும் இருக்கிறார்களா? நிறைய ஆம்’ என்றே பதில்கள் வரும்.
குறைந்த காலத்திலும், எல்லோராலும் சிறந்த மேல் அதிகாரி என பெயர் பெற்றவர்களிடமும் உள்ள பொதுவான சில குணாதிசியங்களை கொண்டு வர முயற்சி செய்து இருக்கிறேன்:-
1. நேரம் தவறாமை
2. முன்கூட்டியே தன் வேலையையும், பிறரின் வேலையும் திட்டமிடுதல்
3. திட்டமிட்ட படி செயற்படுத்துதல்
4. செயற்படுத்தியதை சரியா தவறா என்று பகுத்து பார்த்தல், தவறிருப்பின் அதை அடுத்தமுறை சரியாக செய்ய முனைதல்.
5. நேரத்திற்கும், சமயத்திற்கும் தகுந்தார் போன்று முடிவெடுக்கும் திறன்
6. வேகம், நல்லதானாலும் கெட்டதானலும் சீக்கிரம் முடிவெடுக்கும் திறன்
7. வேலையில் எப்போதும் ஒரு வேகம் (Aggressiveness) ஆனால் அதே சமயம் அமைதி(Peace) யுடன் பழகுதல் – (Aggressive and Peace )
8. தன்னுடன் வேலை செய்பவரகளையும், அவர்களின் குடும்பத்தை பற்றியும் சிரத்தையாக விசாரித்தல்.
9. அலுவலக நேரத்திற்கு அப்பால், அவர்களோ, அவர்களுடன் வேலை பார்ப்பவர்களோ வேலை செய்யாமல் பார்த்துக்கொள்ளுதல்
10. தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு தரமான தேர்ச்சி கொடுத்தல்
11. தன்னுடன் வேலை செய்பவர்களை சமமாக நடத்துதல்
12. தானும் அவர்களில் ஒருவராக எந்த வித இடைவெளியும் இல்லாமல் பழகுதல்.
13. தன்னுடன் வேலை செய்பவர்கள் பிரச்சனைகள் என்று வரும் போது பொறுமையுடனும் அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிதல்
14. நேரத்திற்கும், சமயத்திற்கும் தகுந்தார் போன்று அவர்களுக்கு அறிவுரை செய்தல்
15. எல்லாவற்றிருக்கும் மேல் உழைப்பு உழைப்பு உழைப்பு
16. தன் வேலையை தவிர (department) மற்ற இடங்களில் மூக்கை நுழைக்காமல் இருத்தல்.
மேற்கூறிய எதுவுமே ஒருவரிடம் மட்டும் நான் பார்க்கவில்லை. என் மேல் அதிகாரிகளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கவனித்து என் வேலை தரத்தை உயர்த்த கற்றுக்கொண்ட, இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கின்ற பாடங்கள் என கொள்ளலாம். போல்ட் செய்யப்பட்டவை பொதுவாக எல்லோரிடமும் பார்த்த விஷயங்கள்
என்னுடைய மேல் அதிகாரிகள் சிலர் :
திரு.ஷபீர் பாய் (bhai) : நான் முதல் முதலில் வேலைக்கு போன லெதர் கம்பெனியுன் மேனேஜர். 4000 ஆட்களை மட்டும் அல்ல அனனத்து அலுவலக வேலையும் ஒருவராக கவனித்துவந்தவர். இவரிடம் உள்ள அசாத்திய வேகம், துணிவு, முடிவெடிக்கும் திறன் பார்த்து நான் அசந்து போன மனிதர்களில் ஒருவர். இவருக்கு ஆங்கிலமும், கம்பியூட்டரும் தெரியாது என்பது குறிப்பிட தக்கது. எங்களை தான் இந்த இரண்டுக்கும் நம்பு இருப்பார்.
திரு.கார்த்திக் பட்டேல் & திரு.சஞ்சய் பாரிக் :- அகமதாபாத்’ நகரில் என்னுடைய Directors. கார்த்திக் – மிக வேகம், துரு துருவென்று இருப்பார், சரி/தவறு எதுவானாலும் தடாலென முடிவெடுக்கும் வேகம் இவருடையது. ஆனால் சஞ்சய் அதற்கு நேர்மாறாக இருப்பார் அமைதிக்கு மறு பெயர். சஞ்சயிடம் என்னுடைய வேலையில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். ஹை ப்ரஷரில் கூட எப்படி பொறுமையாக, தவறில்லாமல் ஒரு வேலையை செய்ய முடியும் என்பதை சொல்லிக்கொடுத்தவர்.
திரு.கனேஷ் : சென்னையில் தனியார் கம்பெனியின் director. டைம் பக்சுவல் என்றால் இவர் தான்.. 9 மணிக்கு அலுவலகம் திறந்தாலும் திறக்காவிட்டாலும் வந்து நிற்பார், சில நேரங்களில் திறப்பவர் வருவதற்கு நேரம் ஆகிறது என்று என்பதால் தானே ஒரு சாவியும் வைத்து இருப்பார், தானே திறந்து வந்துவிடுவார். இவர் தான் இந்த வேலையை செய்யவேண்டும் என்ற பார்வை இவரிடம் இருந்தது இல்லை.
என் கணவர் :- நேரத்திற்கு அலுவலகம் செல்வது, அவரின் டீம்’யாரையும் அலுவலக நேரத்திற்கு மேல் அதிக நேரம் வேலை செய்யவிடாமால் பார்த்துக்கொள்வது. விடுமுறை நாட்களில் அவர்களை அதிக வேலை இருந்தாலும் வர சொல்லாமல் இருப்பது. (ஆனால் இவர் தனியே போய் செய்துவிட்டு வருவார். :))
திரு.நாதன் (கனடா) : எப்படி தன்னுடன் இருக்கும் சக ஊழியர்களை மரியாதையுடன் நடத்துவது, அடுத்தவருக்கு தொந்தரவு இல்லாமல் சத்தமே இல்லாமல் ஊழியர்களிடம் எப்படி பேசுவது, எந்த வேலை யார் செய்து முடித்தாலும் உடனே சிரித்த முகத்துடன் நன்றி சொல்லுவது, முக்கியமாக உடல் மொழியை கொண்டே ஊழியர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும் புரிந்து க்கொள்வது.
மிஸ்.ராஜலட்சுமி : STPI, Director,Chennai. இவர்களிடம் கற்றுக்கொண்டது perfection, cleanliness, அன்பு, பெண்களிடம் தனிகவனம் (ofcourse as a female she supported us more), எல்லாவற்றிலும் தனிகவனம் எடுத்து வேலையை முடிப்பது, இவருக்கும் சத்தம் போட்டு பேசுதல் பிடிக்காது, எங்கள் அனைவரையும் “my colleagues” என்றே அறிமுகப்படுத்துவார். என் கவிதைக்காக என் பிறந்தநாளைக்கு எனக்காக ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதிக்கொடுத்தார். :) என்பது என்னால் மறக்கமுடியாதது. :)
Negative ஆக எதையும் சொல்லவேண்டாம் என டேமேஜர்'கள் பற்றி எழுதவில்லை.
அணில் குட்டி அனிதா:- அம்மணி.. .. சொல்லிட்டாங்கப்பா .எல்லாரும் கடைபிடிங்க.. பகல்'லியே தூக்கம் வருதே…!! கவிக்கு மட்டும் ஏன் இது புரியலவே மாட்டேங்குது.....!! சே !! :(
பீட்டர் தாத்ஸ் :- A good manager is a man who isn't worried about his own career but rather the careers of those who work for him.”
Labels: கார்த்தி ஆபிஸ் 33 Comments
காதலர் தின ஸ்பெஷல் - கேப்பங்கஞ்சி with அணில்குட்டி'யுடன் சிம்புவின் சகலை
சிம்புவின் சகலைன்னு சொன்னவுடனே மக்கா உங்க எல்லாருக்கும் யாருன்னு தெரிஞ்சி போயிருக்கும்..ஆனா கொஞ்ச நாளா அதுல கொஞ்சம் டவுட் வந்து இருக்கு... சிம்புவின் சகலையா.. .இல்ல சிம்புவின் மச்சனா'ன்னு தான் டவுட் அதிகமாயிடுத்து.. அதை கிளையர் பண்ணிக்கத்தான் இங்க கூப்பிட்டு அண்ணன் சிபிக்கு கஞ்சி ஊத்தறோம்
இதுல கவிதாக்கு நோ வேலை.. அதனால் வூட்டுக்கு அனுப்பியாச்சி.. ஒன்லி அண்ணன் சிபி வித் அழகி அணிலு' தான்.!!
அணிலு : சிபி அண்ணே... நயந்தாரா எப்படி இருக்காங்க.. ? ஹி ஹி..அவங்க நல்லா இருந்தா நீங்க நல்லா இருப்பீங்கனு ஒரு குருட்டு நம்பிக்கை :)
சிபி: இதில் குருட்டு நம்பிக்கை என்ன வேண்டிக்கிடக்கு! நல்லாவே (என்னை மாதிரி) கண்ணாடி போட்டுகிட்டு நம்பலாம்! நயன்நல்லா இருந்தா நான் நல்லா இருப்பேன்! நான் நல்லா இருந்தா அவங்களும் நல்லா இருப்பாங்க! வைஸ் வெர்ஸா! இதில் எந்த சந்தேகமும் இல்லை! (துடைப்பம் நல்லா இருக்குற வரை நான் நல்லா இருக்க மாட்டேன்னு எங்க வீட்டு அம்மணி சவுண்ட் விடுறாங்க. ஜஸ்ட் இக்னோர் இட்)
அணிலு:- சமீபத்தில் சந்தோஷு நீங்க நயனோட சகோதரன் என்று சொல்லி இருக்காரு.. அதனால இப்ப நீங்க சிம்புவுக்கு என்ன உறவு?
சிபி:- சந்தோஷ்க்கு கடந்த சில வருடங்களா மனநிலை சரியில்லை! கொஞ்சம் பாதி(முழு!?)க்கப் பட்டிருக்கிறார்! இல்லாட்டி பஸ்லே முன் சீட்டுப் பெண்மணியின் தலைலே பேன் பார்த்திருப்பாரா?அதுலேர்ந்து அவரோட தங்கச்சி நயனௌ மத்த எல்லாருகும் தங்கச்சின்னு உளறிகிட்டிருக்காரு! இது அடுத்தவர் பிரச்சினைகளை தன் பிரச்சினையா நினைக்க ஆரம்பிச்சதோட பின் (பேன்1?) விளைவு. பாவம்! நல்ல மனுஷன் சந்தோஷ்! பின் குறிப்பு, முன் குறிப்பு ன்னு மாத்தி மாத்தி போட்டு இப்போ எந்த குறிப்புன்னு தெரியாம தடுமாறிகிட்டு இருக்காரு! மே(பிபரவரி!?) காட் ப்ளஸ் ஹிம்!
அணிலு: கேள்விய சரியா புரிஞ்சிக்கோங்க.. சிம்புவுக்கும் உங்களுக்கும் என்ன உறவுன்னு கேக்கல... என்ன உறவு முறை ன்ன்னு கேக்கறேன்.
சிபி :- சிம்பு யாரு நடுவுலே! அவருக்கும் எனக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் கிடையாது! அவரு படத்தை நான் கலாய்ப்பேன்! நான் கலாய்க்க அவரு படம் எடுப்பாரு அம்புட்டுதேன்!
அணிலு:- வீட்டிலு கட்ட(அ)வுட் நயன்'னோட நீங்க நிக்கற போட்டோ வச்சி இருக்கீங்களாமெ..அதுல கூட நிறைய சானியும், முட்டையும் அதுவும் குறிப்பா உங்க மூஞ்சியில அடிச்சி இருக்காங்களாமே.. இதை பத்தி.... ? அணிலு:- தனியா ஒரு நயன் சைட் ஆரம்பிச்சி ஜொள்ளு வுடறீங்களே... இது உங்களுக்கு தேவையா? அணிலு :- அந்த கட்ட(அ)வுட் போட்டோவில உங்க தங்கச்சி மாதிரியே நயன் அழகா இருக்கீங்காளே அதை பத்தி நாலு வார்த்தை... :) சிபி:- 1. நயன் 2.ஈஸ் 3.ஆல்வேஸ் 4.அழகு. (ஹிஹி என்னைப் போலவே!) அணிலு:- எப்படி உங்க தங்கமணி உங்களை வீட்டுக்குள்ள சேர்க்கிறாங்க...?
சிபி:- சாணி முட்டை அளவுக்கெல்லாம் இன்னும் நான் அரசியல் செல்வாக்கு அடைந்துவிடவில்லை! கொஞ்சம் கவுரவமா வீட்டுக்கார அம்மணி வைக்குற சூடு, கரண்டித் தாக்குதல்கள் இந்த மாதிரி செல்லமா அஹிம்சைக் கண்டிப்புகள் மட்டுமே!சாம்பிளுக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பி அனுப்பறேன் பாரு
சிபி:- தேவைதான்! ரஜினி ரசிகர்கள் ரஜினிக்காக வெப் சைட் வெச்சிருக்காங்க. டாக்டர் விஜய் ரசிகர்கள் அவருக்காக வெச்சிருக்காங்க! உன் ஃபேவரைட் குஷ்பு மேடத்துக்காக கோயிலே கட்டினாங்க! நான் ஏன் நயனுக்காக தனியா சைட் வெச்சிருக்கக் கூடாது!
சிபி:- வாசல் வழியாத்தான்! நான் வீட்டுக் போயி காலிங்க் பெல் அடிப்பேன்! அவங்க வந்து கேட்டைத் திறந்து விடுவாங்க!நாய் வெளியே வந்து துரத்துற மாதிரி பாவ்லா காட்டும்! நான் அப்போ வீட்டுக்குள்ளே எண்ட்ரி ஆகிடுவேன்!
தங்க்ஸ் ஊருக்குப் போற நேரம் பிரியாணியெல்லாம் வாங்கி கொடுத்து நாயை நம்ம சைட் பழக்கப் படுத்தி வெச்சிருக்கேன்!
சிபி:- அரசியலெல்லாம் நமக்கு அலர்ஜி! அப்படியெ அவங்களை வெச்சி ஓட்டுக்கேக்க போனாலும் நம்ம இளைய தளபதி வந்து டேன்ஸ் ஆடி மாத்தி பிரச்சாரம் செய்ய வெச்சிடுவாரு!
அணிலு :- நீங்க சிம்புக்கூட நடுத்தெருவில கட்டி புரண்டு சண்டை போட்டீங்களே அதை பத்தி விவரமா சொல்லுங்க.. இது இந்த காதலர் தினத்தில் எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. சிபி :அது பார்லே நடந்த ஊறுகாய்த் தகராறு! யார் போதைக்கு யார் ஊறுகாய் என்ற விஷயத்துலே ரெண்டு பேர்க்கும் கருத்து மாறுபாடு ஏற்பட்டு 'குடி'மக்கள் நாகரீகம் கருதி நடுத் தெருவுக்கு வந்து சண்டை போட்டுகிட்டோம்! அவ்வளவுதான். (ஊருக்குள்ளே மானம் போயி வெளியில தலை காட்ட முடியலைன்னு எங்க விட்டுலே முனகுவாங்க.. லீவ் இட்)
அணிலு:- நயனுக்கு சரியான ஹீரோ யாருன்னு சொல்லுங்க.. (நீங்கன்னு சொல்லி கல்லடி வாங்கப்பிடாது)
சிபி:-நீங்கன்னு எப்படிங்க சொல்ல முடியும்! அணில் குட்டியைப்போயி ஹீரோன்னு சொல்லுவேனா! நாமக்கல் சிபி' தான் எப்பவுமே பர்ஃபெக்ட் மேட்ச்! (ஹிஹி.. எங்க வீட்டுலேர்ந்து கால் வருது.. ஜஸ்ட் இக்னோர் இட்)
அணிலு:- நயனுக்கு என்ன டிரஸ் சூப்பரா இருக்கும்...?
சிபி:- சேலை/தாவணி தான் எப்பவுமே அழகு! ஜீன்ஸ் டிஷர்ட், அப்புறம் யாரடி நீ மோகினி படத்துல வர மாதிரி சுரிதார்ஸ்…இப்படி எந்த டிரஸ்ஸுமே அவங்க போடுறதால அழகா மாறிடும்! எக்ஸெப்ஷனு பார்த்தீன்னா பில்லா படத்துலே போட்டுகிட்டிருந்த டிரஸ் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை!
அணிலு :- நயன் உங்களை பாத்து அண்ணா' ன்னு கூப்பிட்டா அந்த நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிமிடங்களா இருக்கும் ?!
சிபி:- புதுசா ஒண்னும் இருக்காது! நானும் அவா மாதிரியே பேசப் பழகிக்குவேன்! அத்தான்னு சொன்னாலும் ஓகே, ஏண்ணான்னு கூப்பிட்டாலும் ஓக்கே!
அணிலு :- சிம்புவும் நயனும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக்கிட்ட ஒரு புகைப்படம் தெரு தெருவா ஒட்டி இருந்தாங்களே? அதை பத்தி உங்களின் தாழ்மையான கருத்து என்ன?
சிபி:- பழையன மறப்போம்! புதியன நினைப்போம்! ரோட்டுல போறப்போ காக்கா எச்சம் போட்டா என்ன பண்ணுவோம்! ஜஸ்ட் காயிதத்தை எடுத்து துடைச்சி போட்டுட்டு போயிட்டே இருப்போம் அல்லவா! அந்த மாதிரிதான்!
அணிலு:- சிம்புவுக்கு போட்டியா நீங்களும் ஒரு படத்தை டிரேக்ட் செய்து, பாடி, டான்ஸ் ஆடினா ..நயன் உங்க பின்னாடி வருவாங்க இல்லையா? எனி ஐடியா யூ ஹாவ் ஆன் திஸ்?
சிபி:- நாட் எ பெஸ்ட் ஐடியா! இந்த மாதிரியெல்லாம் செஞ்ச்சா நயன் என் பின்னாடி வராங்களொ இல்லையோ ஒட்டு மொத்த தமிழகமும் என் பின்னாடி வரக் கூடும்! இனிமே இந்த கொலைவெறித் தாக்குதல் செய்வியா செய்வியான்னு என்னை விரட்டிகிட்டு!
அணிலு :- நயன் உங்க கனவுல வந்தா என்ன பாட்டு பாடுவாங்க..?
சிபி:- "கொஞ்ச நேரம் கொஞ்ச நேர, கொஞ்சிப் பேசக் கூடாதா…""ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்… , கண்ணுக்குள்ளே காந்தம் வைத்தகட்டழகுக் காதலனே!" , நல்ல நேரம் நீ வந்தது இந்த நேரம் இனிதானது, அதென்ன அடுத்தவங்க எழுதுன பாட்டெல்லாம் பாடுறது! எங்க டூயட்டை நானே எழுதுவேன்!
அணிலு :- நீங்க சிம்புவுக்கு மச்சான்னா சகலையா கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே?
சிபி:- எனக்கும் சிம்ம்புவுக்கும் எதுவும் இல்லைன்னு முதலிலேயே சொல்லிட்டேன் பாரு..
நயன் நாயகன், சிம்புவின் சகலை சிபி'யின் தத்துவம் :- தப் வே மே ரோட்டி பக்கீத்தோ கச்சினா சம்ஜோபாஜி லடுக்கி கடீத்தோ அப்னீ பீவி ன சம்ஜோ
Labels: அணில் குட்டி 28 Comments
பாப்பாவிற்கு இனி தங்க கம்மல் இல்லை..
வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் இந்த இரண்டு கல் சந்து இருக்கிறது. பெரிய வாகனங்கள் செல்லமுடியாதவாறு சந்து ஆரம்பத்தில் 4 அடி நீளமுள்ள கருங்கற்கள் இரண்டை நடுவில் 2 ஆட்கள் போகும் அளவு இடம் விட்டு நட்டு வைத்துஇருப்பார்கள். அது ஒரு குட்டி சந்து மொத்தமாக 6 அடி அகலம் இருக்கும், அதில் 1.5 அடிக்கு கால்வாய் இருக்கும், அந்த கால்வாய் கோலியனூர் வாய்க்காலில் சென்று விழும். (நம் சென்னை கூவம் போல இந்த கோலியனூர் வாய்க்கால் விழுப்புரம் பூராவும் சுற்றி சுற்றி வரும், எங்கு தொடக்கம் எங்கு முடிவு என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை)
சமீபத்தில் விழுப்புரம் சென்ற போது என் பிள்ளைக்கு என் தோழிகள் வீடு, சின்ன கடைத்தெரு, போஸ்ட் ஆபிஸ் இருந்த வீடு, பெரிய அண்ணாவுடைய ஜிம், நான் காசு சேர்த்து sketch pen வாங்கும் விஜய புக் ஹவுஸ், தனித்தனியாக வாங்குவதால் ஒரு பேணாவிற்கு 25 பைசா அதிகமாக வைக்கும் அந்த விஜயா புக் ஹவுஸ் விற்பனையாளர், நடராஜ முதலித்தெரு, பாத்திரங்கள் ஓட்டை அடைக்கும் குட்டி சந்து கடை, 1-3 வகுப்பு வரை நான் படித்த பிரெம்ஜி பள்ளி, என் பெரிய அண்ணன் அலுக்காமல் சென்று அரட்டை அடிக்கும் அவருடைய பெண் தோழிகளின் வீடுகள், இந்த இரண்டு கல் சந்து என்று சொல்லிக்கொண்டே வரும் போது பார்த்தால் அங்கே அந்த இரண்டு கற்கலையும் காணவில்லை. வெறும் சந்து தான் இருக்கிறது.
இப்போது ஆட்டோ கூட செல்லலாம் போல் இருந்தது. சிமெண்டு ரோடு போடப்பட்டு அழகாக இருந்தது.
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இந்த இரண்டு கல் சந்துவழியாக தான் செல்லுவேன், பிரேம்ஜி பள்ளிக்கு போக வேறு வழியும் இல்லை, அப்படி போவதானால் வேறு வழியாக சுற்றிக்கொண்டு போகவேண்டும். ஆயா எனக்கு நீலக் கல் நடுவில் வைத்த குட்டி கம்மல் தங்கத்தில் போட்டு இருந்தார்கள். கால் பவுன் இருக்கும். அந்த சந்தின் வழியாக ஒரு நாள் மதியம் நான் வந்துக்கொண்டு இருந்த போது சைக்கிலில் வந்த ஒரு அண்ணன் என்னை பார்த்தவுடன் இறங்கி என்னிடம் பேச்சுக்கொடுத்தவாறு நடந்து வந்தார்கள். நானும் அவருடன் பேசியவாறே வந்தேன். அப்போது அந்த அண்ணன் "பாப்பா, உன் நீலக் கல் கம்மல் அழகாக இருக்கு, கழட்டி தரியா நான் பார்த்துட்டு திருப்பி தருகிறேன் " என்றார்கள். நானும் "சரி அண்ணா ஆனா எனக்கு கழட்ட தெரியாதே, நீங்களே கழட்டிக்கோங்க..." என்று காதைக்காட்ட, அண்ணன் பொறுமையாக கழட்டி, அவருடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, வேகமாக சைக்கிலில் ஏறி சென்றுவிட்டார்கள். :(
"..........??????!! என்ன அண்ணன் இவ்வளவு வேகமாக போறாங்க..? திருப்பி வந்து கம்மலை தருவாங்களா? மாட்டாங்களா? சரி கண்டிப்பாக வீட்டில் கொண்டுவந்து கொடுப்பார்கள்" இப்படி நானே எனக்குள் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
வீட்டில் - ஆயா காதை பார்த்துவிட்டு -
"பாப்பா' காது ஏன் மொட்டையா இருக்கு, கம்மல் எங்க?"
"ஆயா, அந்த அண்ணன் அழகா இருக்குன்னு கழட்டி எடுத்துட்டு போயிட்டாங்க.. .. "
"எந்த அண்ணன்?"
"....................??????...............எந்த அண்ணன்..?? அதான் அந்த இரண்டு கல் சந்தில் நின்னு பேசினாங்களே, அவங்க"
"சரி யாருன்னு தெரியுமா, நம்ம வீட்டுக்கு தெரிஞ்சவங்களா?"
"இல்லையே நான் அவங்களை பார்த்ததே இல்லையே.. ஆனா நல்ல அண்ணன் ஆயா.. :)))))))))) , வீட்டுக்கு வந்து கம்மலை கொடுப்பாங்க..."
"அட பேக்கு பெண்ணே...!! எவனோ காதுல இருக்கறதை லவுட்டிக்கிட்டு போயிட்டான்...நீயும் நின்னு பொறுமையா கழட்டி கொடுத்துட்டு வந்து இருக்க... சரி இனிமே தெரியாதவங்க கிட்ட பேசக்கூடாது, சந்துல யாரும் இல்லன்னா ஓடி வந்துடனும், அப்பா அம்மா அங்க நிக்கறாங்க வா' னு கூப்பிடுவாங்க போகக்கூடாது, கூட்டிட்டு போயி கண்ணை நோண்டி பிச்சை எடுக்க விட்டுடுவாங்க..., ஜாக்கறதையா இருக்கனும்.."
"ஆயா அம்மா தான் இங்க இல்லையே அம்மா கூப்பிட்டாங்கன்னு சொன்னா நான் எப்படி போவேன்..?! போகமாட்டேன்.. நீ பயப்படாதே... கண்ணை எப்படி நோண்டுவாங்க? வலிக்குமே?
"ஆமா ரொம்ப வலிக்கும், கம்பி வச்சி நோண்டுவாங்க... அதனாலத்தான் தெரியாதவங்க கிட்ட பேசக்கூடாது..."
" நீ கூப்பிட்டேன்னு சொன்னாலும் போகக்கூடாதா? நீ என்னை கூப்பிடமாட்டியா? "
"ஆமா நான் உன்னை கூப்பிடவே மாட்டேன்...நானே வருவேன் இல்லன்னா வீட்டுல இருந்து யாராவது வருவாங்க.. என்ன ஆனாலும் புது மனஷங்க கிட்ட நின்னு எல்லாம் பேசிக்கிட்டு இருக்க கூடாது........... ..கெஜா.. இங்க பாத்தியா......?!! உன் பொண்ணு எவ்வளவு சமத்துன்னு...வா வா.....!! வந்து பாரு..கம்மலை ஒழிச்சிட்டு வந்து நிக்குது...... :) "
===================
நீலக்கல் போயி இப்போது சிகப்பு கல் கம்மல் போட்டு விட்டார்கள். ஒரு ஞாயிற்று கிழமை தலையில் எண்ணெய் தேய்த்து விட்டு, குளிக்க தயாராகிக்கொண்டு இருந்தேன்...
ஆயா "பாப்பா கம்மலை கழட்டிடு..."
"போ ஆயா..அது வலிக்குது ..."
"சரி வா.. திருகு சரியா இருக்கு..பாரு.."
ஆயா சமையல் அறையிலிருந்து சொன்னதால் நான் திருகை சரி செய்கிறேனா என்று பார்க்கவில்லை, நானும் சரி செய்யாமலேயே விளையாட்டு தனமாக " சரி பண்ணிட்டேன்..சீக்கிரம் குளிக்க ஊத்து வா..கண்ணு எரியுது.." என்றேன்.
குளித்து முடித்து வந்து பார்த்தால் ஒரு பக்கம் கம்மல் மிஸ்ஸிங்.. திருகு சரி இல்லாமல் கழண்டு தண்ணீரோடு அடித்து கொண்டு சென்று விட்டது போல. அன்றைக்கு பெரிய அண்ணன், சின்ன அண்ணன், அப்பா, தாத்தா என்று எல்லோரும் சாக்கடையை நோண்டி பார்த்துவிட்டார்கள், நாற்றம் கிளம்பியதே அன்றி சிகப்புகல் கம்மல் கிடைக்கவே இல்லை.
அன்றைக்கு குடும்பமே உட்கார்ந்து பேசி "பாப்பாவிற்கு இனி தங்க கம்மல் இல்லை" என்று முடிவு செய்தது. எனக்கு தெரிந்து 10ஆம் வகுப்பு படிக்கும் போது சின்ன அண்ணன் ஒரு அரைபவுன் தொங்கும் கம்மல் வாங்கி தந்தார்கள், அதையும் ஆயா உள்ளே வைத்தார்களே அன்றி எனக்கு போட்டுக்கொள்ள கொடுக்கவில்லை.
திருமணம் நிச்சயம் ஆன பிறகு தான் தங்ககம்மல் போட எனக்கு அனுமதி கிடைத்தது. அதுவும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து திடீரென்று யாராவது விசிட் அடிப்பார்கள், பெண் ஒரு தங்க கம்மல் கூட போட்டு இல்லை என்று நினைப்பார்கள் என்று போட்டு விட்டார்கள்.
அணில் குட்டி அனிதா:- இப்ப ஏதாச்சும் தொலச்சி இருக்கீங்களா? ஏன் கேக்கறேன்னா வூட்டுகாரரும் இப்படி ஒரு முடிவு செய்வாரு இல்லையா? ஆனா என்ன "பாப்பா'க்கு பதிலா இப்ப "பீப்பாவிற்கு இனி தங்க கம்மல் இல்லை" ன்னு சொல்லுவாரு.. நீங்கலும் தலைப்பை பீப்பாவிற்குன்னு மாத்தி ஒரு பதிவு போடலாம்...ஹி ஹி..அதான் வித்தியாசம்....
கவி வேணாம்....முறைக்காதீங்க... பீப்பாவை பீப்பான்னுத்தான் சொல்ல முடியும், பாப்பான்னா சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்க பாக்கலாம்...... ஹி ஹி...!! :)
பீட்டர் தாத்ஸ் :- “ “A baby will make love stronger, days shorter, nights longer, bankroll smaller, home happier, clothes shabbier, the past forgotten, and the future worth living for”
Labels: பழம்-நீ 15 Comments
ஆயற்பாடி மாளிகையில் தாய்மடியில் ..
சில பாடல்கள் சின்ன வயது தாக்கங்கள்.. கோயில்களிலும் வீடுகளிலும் அடிக்கடி கேட்கும் பாடலாக இருந்த பாடல்களில் ஒன்று இது..
பாலு சார் ரொம்ப நல்லா பாடியிருப்பாங்க.. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்...
என்னால் முடிந்த அளவு பாடியிருக்கேன்..
|
அணில் குட்டி அனிதா:- கவி ப்ளீஸ் கரக்ட் தெ சென்டென்ஸ்ஸு.. //என்னால் முடிந்த அளவு பாடியிருக்கேன்..// என்னால் முடிந்த அளவு கொலை செய்து இருக்கேன் னு சொல்லுங்க..
காலம் போன காலத்துல அம்மணிக்கு ரொம்பவே ஆசைவருது.. என்ன செய்ய.. :) நீங்களும் யாரும் கண்டுக்க மாட்டேங்கறீங்க.. கல்லை எடுத்தோமா அடிச்சோம்மா அம்மணிய பீஸிய ஒடச்சோம்மான்னு இருந்து இருந்தீங்கன்னா.. நமக்கு எல்லாம் இப்படி ஒரு பிரச்சனை வந்து இருக்கும்மா? :( ...
இதோடா!! இங்கபாருங்க...!! தாத்ஸ்' ஓட தத்துவத்தை.. முடியலப்பா...!! முடியல..!! அம்மணி தனியா கவனிச்சிட்டாங்களோ... ????
பீட்டர் தாத்ஸ் :- “You don't love someone for their looks, or their clothes, or for their fancy car, but because they sing a song only you can hear.”
Labels: அப்பாவிற்காக 59 Comments
பப்பு'குட்டியின் அம்மாவிற்கு -
சந்தன'முல்லை
கிள்ளிவைத்த உன்
ஒரு கன்னத்து குழி அழகு
விடாது சிரிக்கின்ற
முல்லை பூ பற்கள் அழகு
தோளினை தொடாத
உன் கார்கூந்தல் அழகு
உன் பப்புவின் பதிவுகள் அழகு
அது தினமும் வருவது அழகு
உன் அமைதி அழகு ஆனால்
என்னிடமும் உன் பொறுமை அளவற்ற அழகு
இணையத்தில் நீ எனக்கு
இன்னுமொரு "டார்லிங்"
எல்லாவற்றையும் விட..
பப்புவின் அம்மாவாக
எப்போதும் நீ அழகு
எல்லோரையும் விட நீ அழகு
இதயத்திலிருந்து ..
இந்த அழகை இன்னமும் எப்படி
வருணிப்பது என்று அறியாமல்
கவிதா......
Labels: கவிதை 41 Comments
முதல் பெயர் (First Name) கடைசி பெயர்(Last Name)
நாம் எல்லோருமே முதல் பெயர் என்றால் நம் இனிஷியல் என்னவோ அது தான் முதல் பெயர் என்று சொல்லுவோம். நம்மை பொறுத்தவரை அப்படித்தான் காலம் காலமாக பழகி வருகிறோம். அப்பா பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக வைத்து, பின்பு நம் பெயரை எழுதுகிறோம். குறிப்பாக இது பாஸ்போர்ட் எடுக்கும் போது ஏகத்துக்கு சொதப்பிவிடும்.
நம் பிள்ளைகளின் பெயராவது உலகத் தரத்திற்கு (international Standard) எழுதப்பழகிக்கொண்டால் பிரச்சனை இருக்காது. என் பெயரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
G. Kavitha - Gajananan Kavitha
இதில்
(First Name) முதல் பெயர் விரிவாக்கம் என்றால் நாம் உடனே "G-Gajananan" எழுதிவிடுவோம்.
(Last Name) கடைசி பெயர் என்றால் - அதில் என்னுடைய பெயர் வரும் - Kavitha
ஆனால் உலகத்தரப்படி இது தவறு.
முதல் பெயர் என்பது என்னுடைய பெயர் - Kavitha
கடைசி பெயர் தான் என்னுடைய அப்பாவின் பெயர் - Gajananan
மேலும் சில உதாரணங்கள் :-
Karthik Patel
Sanjay Parikh
Raj kumar Singh
Srinu Mallesh Rao
Ramakrishna Reddu
Narayana Pagadala
Unni Menon
Narayanaswamy Iyar
jennifer Kooper
Karthikeyan Ramasamy
Meenakshi Selvakumar
kavitha Gajananan
இதில் போல்ட் செய்து இருக்கும் பெயர்கள் எல்லாமே கடைசி பெயர்கள் தான் அப்பா பெயராக இருந்தாலும் சரி, குடும்பம், வீடு , சாதி பெயராக இருந்தாலும் சரி நம் பெயர் எப்பவும் முன்னால் இருக்கும்படி கொடுப்பது நல்லது. பள்ளியில் பெயர் கொடுக்கும் போது கூட நம்முடைய பெயரை முதல் பெயராகவும், அப்பாவின் பெயரை, அல்லது குடும்பம் , சாதியின் பெயரை கடைசி பெயராகவும் கொடுத்து விடுவது நல்லது.
தமிழ்நாட்டில் அப்பாவின் பெயரையும், ஆந்திரா'வில் சாதி பெயரையும், கேரளாவில் குடும்பத்து அல்லது வீட்டின் பெயரையும் , வட இந்தியாவில் பெரும் பாலும் குடும்பத்து/சாதி பெயரையும் கடைசி பெயராக கொடுக்கிறார்கள்.
பாஸ்போர்டு'க்கு எழுதி கொடுக்கும் போதும் இப்படி கொடுப்பது நல்லது. இல்லை என்றால் வெளிநாடு செல்லும் போது பாஸ்போர்ட்'ன் பெயரை வைத்து நம்மை அழைத்தால் அது பெரும் பாலும் நம் அப்பாவின் பெயராகவே இருக்கும். :). அதுவும் பெண்களாக இருந்தால் தரும சங்கடமாக இருக்கும்.
இங்கேயுமே இன்சியூரண்ஸ், வங்கி என்று நாம் எங்கு இப்படி பெயர் கொடுத்து இருந்தாலும், அவரக்ள் அனுப்பும் கடிதம் நம் அப்பா பெயரை கொண்டுத்தான் வரும்.
அலுவலகத்திலும் முதல் பெயரை கொண்டுத்தான் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் முதல்பெயரை நம் பெயராக நினைத்து ஈமெயில் முகவரி கிரியேட் செய்து விடுவார்கள். gajananank@xxxxxxxx.com என்ற ஈமெயில் முகவரிக்கும் kavithag@xxxxxxx.com இதற்கு வித்தியாசம் உள்ளது அல்லவா.?
என்னுடைய பெயரை முதல் பெய்ராக கொடுக்கும் போது தான் எனக்கு kavithag@xxxxxxx.com என்ற முகவரி கிடைக்கும்.
பெயர் கொடுக்கும் போதே உலகத்தரத்தை யோசித்து நம் பெயரை முதல் பெயராக கொடுங்கள். உங்களை அப்பாவின் பெயர் கொண்டு யாரும் அழைக்க மாட்டார்கள்.
அணில்குட்டி அனிதா :- கவி எனக்கு முதல் பெயர் என்ன கடைசி பெயர் என்ன? மக்கா நீங்க யாரும் கவிக்கு ஐடியா தரப்பிடாது.. ஓவரா ஒரு போஸ்ட் போட்டு விளக்கி இருக்காங்க இல்ல.. என் பெயரை இவிங்க தான் வச்சாங்க. .எப்படி வச்சாங்க.. லோக்கலாவா? இண்ட்ர் நேஷ்னலா வான்னு இப்ப...இப்ப..எனக்கு தெரிஞ்சாகனும்.. சொல்லிட்டேன்.. ..!!
பீட்டர் தாத்ஸ் :- Name pronounced is the recognition of the individual to whom it belongs. He who can pronounce my name aright.
Labels: கார்த்தி ஆபிஸ் 39 Comments
மறந்துபோன தமிழ் சொற்கள்
சந்தன முல்லை வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் என்ற தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள். இப்படி ஒரு தொடர் மிகவும் அவசியமானதாக தோன்றுகிறது. இதில் பதிவர்கள் நினைவில் வைத்து சொல்லும் எல்லா சொற்களையும் சேகரித்து சேமித்து வைக்கலாம்.
எனக்கு நினைவில் தெரிந்து என்னுடைய தாத்தா நல்ல தமிழ் பேசுவார்கள், ஆயா, அப்பா எல்லாம் அவ்வளவு சுத்த தமிழ் சொற்கள் உபயோகிக்க' வில்லை என்றே நினைக்கிறேன். உபயோகம் என்ற வார்த்தை அதிகமாக யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை.
இந்த பதிவில் குறிப்பாக எங்களது வீட்டில் என்னுடைய ஆயா, தாத்தா வழக்கில் வைத்து இருந்த சொற்களை நினைவு படுத்தி சொல்ல முயற்சி செய்கிறேன்.. இந்த சொற்கள் எதுவுமே என் மகனுக்கு சுத்தமாக தெரியாது.
வழக்கில் பயன்படுத்த மறந்த வார்த்தைகள் :-
அன்ன(ம்)வெட்டி - சாதம் எடுக்கும் கரண்டி, என் பையன் சாதம் எடுக்கும் கரண்டின்னு தான் சொல்றான்.. நானுமே..!
அன்ன(ம்)கூடை - சாதம் வைக்கும் பாத்திரம், இது ஆயாவீட்டில் இருந்தது என்னிடம் இல்லை.
கூஜா - தண்ணீர் வைக்கும் பாத்திரம் , இப்போது இந்த பாத்திரமும் இல்லை
களி - கேழ்வரகில் செய்யும் உணவு, செய்வதே இல்லை, யாரும் சொல்லுவதும் இல்லை.
கூழ் - கேழ்வரகில் செய்யும் உணவு, செய்வதே இல்லை, சொல்லுவதும் இல்லை.
நீராகாரம் - பழையசாதத்திலிருந்து எடுக்கும் தண்ணீர்.. காலையில் குடிக்க கொடுப்பார்கள், உடம்புக்கு ரொம்ப குளிர்ச்சி, சத்து என்று சொல்லுவார்கள்.
சொரபிஞ்சி :- இது உளுந்தை கொண்டு செய்யும் ஒரு உணவு, வடையை போன்று இருக்கும், ஆனால் காரம் இல்லை, வெறும் உளந்து ஊரவைத்து, அரைத்து (சின்ன அளவு) போண்டாவை போன்று உருட்டி எண்ணெயில் பொரித்து, தேங்காய் பால் எடுத்து அதில் போட்டு பரிமாறுவார்கள்.
உணவு பண்டம்:- பண்டங்கள்'ன்ன உணவை சார்ந்த பொருட்கள் ன்னு நினைக்கிறேன்.. என்ன அர்த்தம் என்றே மறந்து விட்டது
பதார்த்தம் :- சாப்பாட்டோடு தொட்டுக்கொள்ள வைக்கும் காய்கறிகள் பதார்த்தம். ஆனால் சொல்லுவதே இல்லை ..தொட்டக்க என்ன? என்று மாறியே போயிவிட்டது
நெப்பம் :- ரொம்ப சென்சிடிவ், soft, மெல்லிய, என்று பொருள்படும், என்னுடைய ஆயா அடிக்கடி சொல்லுவார்கள், நான் இப்போதும் சொல்லி என் கணவர் என்னை கிண்டல் அடிப்பார். "கண்ணாடிய ரொம்ப நெப்பமாக உபயோகிக்கனும், இல்லயென்றால் உடைந்துவிடும்"
புல்லாக்கு :- திருமணங்களில் மணப்பெண்ணுக்கு போடுவார்கள், மூக்கின் நடுவில் வைத்து இந்த புல்லாக்கை அழுத்திவிடுவார்கள், உதடுகளில் வந்து இடிக்கும். எனக்கு ரொம்ப பிடித்த ஒரு நகை :) என் கல்யாணத்தில் கேட்டு வாங்கிப்போட்டேன். இப்போது கிடைப்பதில்லை.
ஆபரணம் :- உடைகள், நகைகள்
பரிசம் : நிச்சயத்தார்தம்
துடுப்பு: பெரிய அண்டாக்களில் சமைக்கும் போது, இதை உபயோகிப்பார்கள், மரத்தினால் செய்யப்பட்ட நீளமான கரண்டி ஆனால் தோசை திருப்பி போல் நேராக இருக்கும், கரண்டி போன்று குழியாக இருக்காது.
கொட்டும்: தேள், பாம்பு எல்லாம் கொட்டும், ஆனால் இந்த வார்த்தையை சொல்லுவதே இல்லை, எதுவாக இருந்தாலும் கடிக்கும் என்றே சொல்லுகிறோம்.
காக்கை கரையும் : காக்கா கத்துகிறது என்று தான் சொல்லுகிறோம்.
உரு: படிக்கும் போது எல்லாம் தாத்தா சொல்லுவார்கள், நன்றாக பாடத்தை உரு அடி (மனப்பாடம்) செய் என்பார்கள். இதில் 'ரு' சரியா தெரியவில்லை.
பானம் : வெல்லத்தை கொண்டு செய்யும் ஜீஸ்.. ஆயாவிற்கு பிறகு யாருமே இதை செய்வது இல்லை.. மறந்தும் போய்விட்டேன்..
அறிவுகால் : வாசற்படியில் இருபுறமும் கதவுடன் இணைக்க பயன்படும் மரம்வேலைபாடு. வெள்ளிக்கிழமை ஆனால் மஞ்சல் பூசி பொட்டு வைத்து.. உம் எங்க.. செய்வதே இல்லை.. அறிவுகாலா அபபடின்ன்னா? கேட்கும் நிலைமை வந்துவிட்டது.
மாடம் : இது சின்ன ஷெல்ப் போன்று ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்கும் அளவிற்கு இருக்கும் விளக்கு அங்கு இருக்கிறதோ என்னவோ வீட்டின் எல்லா சாவிகளும் அங்கே தான் இருக்கும்.. அடிக்கடி வீட்டில் உபயோகிக்கும் வார்த்தை "மாடத்தில் பாரு இருக்கும்"
புறாக்கூண்டு : மர பீரோவில் உள்ளே பணம் நகைகள் வைக்கும் அறை.. இப்போது ஆசாரிகளுக்கு இதை சொன்னால் என்னவென்று கேட்கிறார்கள்.
கோவணம் : தாத்தா எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கோவணத்துடன் தான் குளிப்பார்.. ஹா ஹா.. இப்ப இதை எல்லாம் சொன்னால் வீட்டில் எனக்கு அடி விழும்.. !! :)
கைலி/லுங்கி : மறந்தே போன ஆண்கள் உடுத்தும் உடைகள்.என் பிள்ளைக்கு என்னவென்றே தெரியாது.. :(
அத்தான்: அம்மாவீட்டில் மாமா முறையை அத்தான் என்று தான் சொல்லுவார்கள், ஆனால் நானே பயன்படுத்தியதில்லை.. மறந்தே போனது..
தொட்டால் சிணுங்கி : எதற்கு எடுத்தாலும் கோபம், சாப்பிடாமல் இருப்பது, முகம் துவண்டு போவதால் எனக்கு ஆயா வைத்த பெயர்..
சாக்கு : காரணம் என்ற பொருள் படும் "இதான் சாக்குன்னு ஓடிடாது நில்லு"
புகைக்கூண்டு : சமையில் அறையின் புகை போக கட்டப்படும் கூண்டு சமையல் அறையில் இருந்து மெத்தை (மாடி்) வரை இருக்கும்.. ஒரு சின்ன அறை போன்றே கட்டுவார்கள்.
இன்னும் நிறைய இருக்கு யோசித்து சேர்த்து விடுகிறேன்... பதிவை தொடர அழைப்பது -
1. மங்கைஜி
2. சந்தோஷ்
3. நாகைசிவா
4. ராயல் ராம்
5. தெகாஜி
6. பூரணி சரன்
7. இனியவள் புனிதா
8. செந்தில்
அணில் குட்டி அனிதா:- ம்..ம்.. எனக்கு தூக்கம் வரூது.. என்னைய விடுங்க..!!
பீட்டர் தாத்ஸ் :- A winner is someone who sets his goal, commits himself to those goals, and then pursues them with all the ability he has.
Labels: பழம்-நீ 29 Comments